Saturday, January 29, 2011

இதயச்சாரலில்...


வலைப்பூக்களில் எழுதி பப்ளிஷ் செய்வது இலவசமாகவும், சுலபமாகவும் இருப்பதினாலேயே என்னைப் போன்றவர்கள் ஜாலியா எதையாவது எழுதி, கலாய்த்து விளையாடிக் கொண்டு இருக்கிறோம். நான் சீரியசாக ஒன்றும் எழுதவில்லையென்றாலும், தொடர்ந்து நல்ல தரமான பதிவுகளைப் படிக்க முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறேன். அப்பிடித்தான் ஒருநாள் இதயச்சாரல் என்ற வலைப்பூவைப் படிக்க நேர்ந்தது. முழுக்க முழுக்க கவிதை மழை. சுத்தமான தமிழ் வார்த்தைப் பிரயோகம். படிப்பதற்கே ஒரு சுகானுபவம்.

தொடர்ந்து தரம் குறையாமல் எழுதுவது ரொம்ப சிரமம். வெகு சிலராலேயே அதை செய்ய முடிகிறது. அந்த வெகு சிலரில் நானும் இருக்கவே விரும்புகிறேன். ஆனால் அது முடியுமா என்று தெரியவில்லை. இதயச்சாரல் எழுதிவரும் தமிழ்க்காதலன் அனாயசமாக அதைச் செய்துவருகிறார். தரமான எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர். அவருடைய இன்பத்தமிழ் இதயச்சாரல், பெருமழையாக மாறி உங்கள் இதயங்களைத் தமிழ்த்துளிகளால் நனைக்க ஏதோ எண்ணாலான ஒரு சிறிய முயற்சியாக அவரது வலைப்பூவை எனது பதிவில் அறிமுகம் செய்கிறேன். தமிழைக் காதலிப்பவர்களுக்கு அவரது தளம் அடுத்த தளமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

மனச்சிதறல் என்ற கவிதையிலிருந்து,

கண்ணாடியில் தெரியும் உன் கண்களில்...

கசியும் என் காதல்...!

உன் எழில் கூட்டும்...!!

காற்றில் அலையும் கற்றைக் குழலை

ஒற்றைத் தலை அசைப்பில்...

சரி செய்யும் அழகில்..

சரிந்துப் போகிறேன்...!

செல்லமே...!!


இதயத்திற்கு அருகில் என்ற கவிதையில் இருந்து,

சோர்ந்துப் போகும் விழிகளில்

சொக்கி நிற்கும் உறக்கம்.

ஆயினும்,...

காத்திருக்கிறேன்.

கைப்பேசிக்கருகில்....

காதலுடன்...!

நீளும் இரவில்.....

 
இப்படி சுவராசியமான ரசனையோடு கவிதைகள் நிறைந்திருக்கின்றன, இதயச்சாரல் வலைப்பூவில். காதல் மட்டுமல்லாது பல்வேறு வகைகளில் கவிதைகள் கொட்டிக்கிடக்கின்றன. விரும்பும் நண்பர்கள் நேரம் கிடைக்கும் போது சென்று வாசிக்கலாம். இதைப் பார்த்துவிட்டு யாராவது ஒருவர் சென்று வாசித்தாலும் சந்தோசப்படுவேன்.

நன்றி (கலியுகம்) தினேஷ், நல்ல ஒரு ப்ளாக்கை அறிமுகம் செய்து வைத்ததற்கு.முக்கிய அறிவிப்பு
ட்விட்டரில் தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் #tnfisherman என்பதை ட்வீட்களில் பேஸ்ட் செய்துகொள்ளவும்.

பெட்டிசன் ஆன்லைனில உங்களை கையொப்பங்களைப் பதிவு செய்யுங்கள் http://www.petitiononline.com/TNfisher/
 
!

Friday, January 28, 2011

சிரிப்பு போலீசும் சி(ரி)க்காத பன்னியும்...!


சிரிப்பு போலீஸ்: டேய் எந்திரிடா.. டேய் நாதாரி..... பன்னிக்குட்டி எந்திரிடா டேய்....  எந்திரி....

பன்னிக்குட்டி:  டேய்ய்.....  டால்டா டின்னு மண்டையா கொஞ்சம் நேரம் கூட நிம்மதியா தூங்க விட மாட்டியாடா.. போடா போயி நேத்து  எவனோ ஒரு ஸ்பானர் தலையன் உனக்கு ஓசி்ல பன்னு வாங்கி தந்தானே, அதைப் பத்தி ஒரு பதிவைப் போட்டு, எலக்கியத்த புழிஞ்சு சேவை பண்ணு...!இப்போ என்னை தூங்க விடு..


சிரிப்பு போலீஸ்:  ஏன்டா பரதேசி ஆபீஸ்ல எப்பவும் தூங்கிட்டுத்தானே இருக்கே.. அப்புறம் என்னடா இங்கேயும் தூக்கம்...?பன்னிக்குட்டி: அட போடா பல்பு வாயா.... ஆபீஸ்ல தூங்கினா பக்கத்து கேபின்ல இருக்கிற கொத்தவரங்கா பிலிப்பைனி பிகரும், அந்த டயர் வாயன் டேமேஜரும் தான் கனவுல வரானுங்க.. கனவுல கூட அந்த டயர்வாயன் திட்டிக்கிட்டே தான்டா இருக்கான்.... பிகரு பக்கத்துல போகவிட மாட்டேங்கிறான் படுவா.  ஒரு நாளு அவன் வாயில நம்ம கரடிய விட்டு கடிக்க வைக்கப் போறேன் பாரு....!

சிரிப்பு போலீஸ்:  பேச்ச குறைடா பொறம்போக்கு.. மரியாதையா எந்திரிச்சு என் கூட வந்திடு இல்லன்னா நான் எழுதி வச்சிருக்கிற கவிதைய உனக்கு படிச்சு காட்டிருவேன்..


பன்னிக்குட்டி: நீ அதுக்கு பேசாம நான் தூங்கும் போது தலைல கல்லைத் தூக்கிப் போட்டுடலாம்... இப்ப என்னடா உன்கூட கடைக்கு வரணும் அவ்வளவு தானே...?


சிரிப்பு போலீஸ்:  அதைத்தான்டா முதல்லேருந்தே சொல்லிட்டிருக்கேன் வெளக்கெண்ண...


பன்னிக்குட்டி: என் செல்லம் இல்ல, அதோ மூலையில கிழிஞ்ச அப்பளம் மாதிரி சுருண்டு படுத்திருக்கானே டெரர் பாண்டி, அவனைக் கூட்டிட்டு போமா ராஜா... !


சிரிப்பு போலீஸ்:  அவனை இப்போ தொந்தரவு பண்ணாதே மச்சி...  நேத்தைக்கு ராத்திரி வெறும்பயகிட்டே வாயக் கொடுத்து செமத்தியா விடிய விடிய அடி வாங்கிட்டு வந்து படுத்திருக்கான்..


பன்னிக்குட்டி: த்தூ....இந்தப் பன்னாட பரதேசிக்கு இதே வேலையா போச்சு.. எப்ப பாரு எவன்கிட்டேயாவது வம்பிழுக்க வேண்டியது.. அப்புறம் அடி வாங்கிட்டு இங்கே வந்து படுத்துக்க வேண்டியது..... இருக்கட்டும், படுவா இவனுக்கு ஒரு நா இருக்குடா...! ஆமா அது என்னடா அவன் வாய் முன்னாடி கக்கூசுல இருந்த பக்கெட்டைத் தூக்கிட்டு வந்து வெச்சிருக்கே. .?சிரிப்பு போலீஸ்:  அதுவா நேத்தைக்கு கொஞ்சம் அடி ஓவரா வாங்கியிருப்பான் போல.. இது வரைக்கும் நானும் எவ்வளவோ இடத்துல அடி வாங்கியிருக்கேன், ஆனா இந்த மாதிரி ஆனதில்லப்பா.. அந்த வெறும்பய டெரரை அடிச்ச அடில மூக்கிலேருந்தும் வாயிலேருந்தும் ரத்தம் நிக்காம கொட்டிக்கிட்டு இருக்கு...  அதான் பக்கெட் வச்சிருக்கேன்... ரொம்புனதும் பிளட் பேங்குக்கு போன் பண்ணனும். அது இருக்கட்டும்... மொதல்ல நீ கெளம்பு.....!


பன்னிக்குட்டி: அடநாயே.... இன்னைக்கு பொழுது உன்கூடதானாடா? நீ என்னை விட்டுட்டுப் போறதா இல்ல.. ? சரி எங்கேதான்டா போகனும் அதையாவது சொல்லித்தொலை.....!


சிரிப்பு போலீஸ்:  அதுவா.. ஒரு ஆசாரிய பாக்கணும்டா


பன்னிக்குட்டி: என்னடா சொல்லவே இல்ல.. ஏதாவது பொண்ணு பாத்திட்டியா.. தாலி செய்யத் தானே...? (ங்கொக்கமக்கா... இதை மட்டும் எப்படியோ கமுக்கமா முடிச்சிடுறானுங்கடா....!)


சிரிப்பு போலீஸ்:  ங்கொய்யால..... காலைலயே வீணா என் வாய கிளறாதே.. நானே கடுப்பில இருக்கேன்..


பன்னிக்குட்டி: அப்போ சாயந்தரமா கிளரலாமா? படுவா.. உன் வாயி என்ன அல்வா கிண்டுற அண்டாவாடா கெளர்ரதுக்கு....?  கடுப்பாகாம மேட்டரை சொல்றா எரும வாயா......!


சிரிப்பு போலீஸ்:  பின்ன என்னடா, போன செவ்வாக்கிழமை நம்ம பாபு உனக்கொரு பொண்ணு பாத்திருக்கேன், நல்ல குடும்ப பொண்ணுடா பாக்கனுமின்னா சீக்கிரம் கிளம்பி லி மெரிடியன் ஹோட்டலுக்கு வாடான்னு சொன்னான்.. நானும் நல்லா குளிச்சிட்டு...


பன்னிக்குட்டி: டேய்  அதென்ன பேச்சுவாக்குல குளிசிட்டுன்னு பொய் சொல்ற....?


சிரிப்பு போலீஸ்:  சரி விடு. ஸ்பிரே அடிச்சிட்டு...அடிச்சு புடிச்சு போய் சேர்ந்தேன்.. பாபு கூட அந்த பொண்ணும் இருந்திச்சு. பார்க்க நல்லா அழகாத் தான் இருந்திச்சு.. ஆனா டிரஸ் தான் போட்டிருந்தாளா இல்லையான்னு கேக்குற அளவுக்கு ரொம்ப சின்னதா போட்டிருந்துச்சு, சரி மாடர்ன் பொண்ணுங்க இப்படி தான் இருப்பாங்கன்னு நினச்சு நம்பி உக்காந்தேன்.


ஒரு வார்த்தை கூட பேசலடா, கொஞ்சம் நேரம் மௌனமா இருந்தவ ஏதாவது குடிக்கலாமேன்னு சொன்னா, நானும் பேரரை கூப்பிட்டு என்ன தான் நம்ம முழு நேர குடி காரனா இருந்தாலும் இங்கே காட்டிக்க கூடாதுன்னு ரொம்ப டீசெண்டா ஒரு ஆப்பிள் ஜூஸ் சொன்னேன், உங்களுக்கு என்ன வேணுமோ நீங்களே சொல்லுங்கன்னு சொன்னதும் சட்டுன்னு ஒரு கிங் பிஷர் பீர் சொன்னா.. நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலடா மச்சான். அப்படியே பொறி கலங்கிப் போயிட்டேன்.அந்த பாபு பன்னாட அவ பீர் சொன்னதும் என்னை பார்த்திட்டு அப்படியே நைசா எஸ் ஆகிட்டான் மச்சி. பரதேசி கையில மாட்டாமலா போவான். அது மட்டுமா, எதோ லிப்ஸ்டிக்கை எடுக்கிற மாதிரி பேக்க தொறந்து தம்ம எடுத்து பத்த வச்சா பாரு..  நம்ம சூப்பர் ஸ்டார் கூட அவ முன்னாடி நிக்க முடியாது... மறந்துட்டு நானே விசிலடிக்கப் பார்த்தேன்னா பாரேன்?


படுபாவி பாபு குடும்ப பொண்ணுன்னு சொன்னானே தவிர குடிமகள்னு சொல்லாம போயிட்டான். எது எப்படியோ நான் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவையே விட்டுட்டேன். பேசாம சாமியாரா போலாமுன்னு இருக்கேம்பா...


பன்னிக்குட்டி: அட மானங்கெட்டவனே இன்னுமாடா நீ உயிரோட இருக்கே...?இதுக்கு நீ நாண்டுகிட்டு செத்திருக்கலாம்.... ஆனாலும் உனக்கு ரொம்பப் பேராசைடா, பின்னே இங்க ஒரு பொண்ணுக்கே வழியக் காணோம், அதுக்குள்ள எப்பிடிரா கொஞ்சம் கூசாம உடனே சாமியாரா போறேன்னு சொல்ற?


சிரிப்பு போலீஸ்:  சரி அத விடு.... இப்போ நீ என்கூட வரப்போறியா இல்லையா...?


பன்னிக்குட்டி: சரி வந்து தொலையுறேன்.. எந்த ஆசாரிகிட்டே போற.. எதுக்கு போறேன்னு சொல்லு...?


சிரிப்பு போலீஸ்:  அது ஒன்னுமில்லடா ஏழு ஜன்னல் செய்யணும் அதுக்கு தான் ஆசாரிய பார்த்து நல்லதா செய்ய சொல்லணும்...


பன்னிக்குட்டி: ஏன்டா வீடு ஏதாவது கட்ட போறியா..  நீதான் ஏற்கனவே ரெண்டு மூணு சின்ன வீடு வெச்சிருக்கியே...?


சிரிப்பு போலீஸ்:  நமக்கெதுக்குடா இனி வீடெல்லாம்.. நான் தான் சாமியாராக போறனே...?


பன்னிக்குட்டி: என்ன நக்கலா...? அப்புறம் என்ன எழவுக்குடா இந்த ஜன்னல்...? நம்ம குஷ்பக்கா மாதிரி நீயும் உன் சட்டைல ஜன்னல் வெச்சுக்கப் போறியா? ஒழுங்கு மரியாதையா சொல்லிடு இல்லன்னா மவனே, மூஞ்சில முள்ளுக் கரண்டிய வெச்சி கொத்தி விட்ருவேன்....!


சிரிப்பு போலீஸ்:  பறக்காதடா பரதேசி.. சொல்றேன் சொல்றேன்... கொஞ்ச நாளாவே என்னோட கம்ப்யூட்டர் சொல்ற பேச்சு கேக்க மாட்டேங்குது... அதனாலதான் போன வாரம் ஒழுங்கா பதிவு கூட போட முடியல.. நமக்கு தான் இந்த கருமாந்திரத்த பற்றி ஒண்ணுமே தெரியாதே. அதனால மொரிசியஸ்ல இருக்கிற அருண்கிட்டே ஏதாவது உதவி கேக்கலாமுன்னு கேட்டேன் . அப்போ தான் அருண் சொன்னாரு windows 7 போட்டா எந்த பிரச்சனையும் வராது, அதுக்குள்ள வழியப் பாருன்னு.. அதாண்டா ஏழு ஜன்னல் செய்றதுக்கு ஆசாரிய பார்க்க போலாமுன்னு கிளம்புறேன்... நீ வரியா இல்லையா..? உன் ப்ளாக்குக்கும் சேர்த்தே ஜன்னல் ஆர்டர் பண்ணிடுவோம்... சீப்பா பேசி முடிச்சிடலாம்!

பன்னிக்குட்டி: $%%$%^ @#@*&* &*^% #$^&&(^ @%&*(( (*%$$#@@!@! @!%^&*^%% $#*&&$*$

சிரிப்பு போலீஸ்:  இப்போ எதுக்குடா இவ்வளவு அசிங்கமா திட்டுற...? என் கூட வர விருப்பமில்லன்னா இல்லைன்னு சொல்ல வேண்டியதுதானே... ! சரி நீயும் உன் ப்ளாக்கும் எக்கேடாவது கேட்டு நாசமா போங்க. எனக்கு என் ப்ளாக் முக்கியம். நான் ஆசாரிய பார்க்க போறேன்...!ஆசாரியைப் பார்க்கப் போன சிரிப்பு போலீஸ் இன்னும் திரும்பவில்லை. பிடித்துக் கொடுப்பவர்களுக்கு, சிரிப்பு போலீசுக்கு இன்று கிடைக்கும் ஓசி பன்னில் பாதி பிய்த்துக் கொடுக்கப்படும்!


இது நண்பர்களும் நானும் சேர்ந்து எழுதியது!

படங்களுக்கு நன்றி கூகிள் இமேஜஸ்!

!

Tuesday, January 25, 2011

நெம்பர் கடைசி பதிவரின் ஒரு பெரிய பேட்டி

எச்சரிக்கை: இது எதிர்பதிவு அல்ல, நேர் பதிவு!

நம்பர் 1. பதிவர் நண்பர் சி.பி. செந்தில்குமாருடைய பேட்டியை நண்பர் பிரபாகரன் வெளியிட்டிருந்தார். சரி நாமலும் ஒரு பேட்டிய எடுத்துப் போடுவோமேன்னு முயற்சி பண்ணதுல  நம்பர் கடைசி பதிவர்தான் சிக்குனாரு. சரி ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டைன்னு சொல்லுவாங்களே, அது மாதிரி ஏதோ நமக்குக் கிடைச்சது நம்பர் கடைசி பதிவர்தான் மனசைத் தேத்திக்கிட்டு பேட்டி எடுத்திருக்கோம். பார்த்துப் படிச்சு வெளங்கி நடந்துக்குங்க மக்களே!

பதிவுலகின் கடைசி இடத்தை பல வருடங்களாக வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் பிரபலபதிவர் எருமக்குட்டி ஏரிச்சாமியின் அசுர வளர்ச்சி பிரமிக்க வைகிறது. போனமாதம்தான் வெற்றிகரமாக 150 கிலோவைக் கடந்தார். அதனால் அவரைப் பேட்டி எடுக்க விரும்பி தொடர்பு கொண்டோம். உடனே மறுத்துவிட்டார். சிலநாட்களுக்குப் பிறகு மறுபடியும் தொடர்பு கொண்டோம். முதலில் தயங்கியவர், பின்பு டீ வாங்கித் தருகிறேன் என்றவுடன் ஒப்புக் கொண்டார்.

(இது நேர்காணல் அல்ல, சைடு(வாங்கிய)காணல்)ஒழுங்கா தொடர்ந்து பதிவு எழுத மாட்டேங்கிறீங்களே ஏன்?
பொதுவாவே எனக்கு சாப்பாடு, தண்ணின்னா ரொம்ப இஷ்டம். அதுனால எல்லா வெரைட்டியவும் ஒரு கை.... இல்ல, இல்ல ரெண்டு கை பார்த்துடுவேன். ஓவரா தின்றது எப்போவாவது டைஜஸ்ட் ஆகாம புடிங்கிட்டுப் போகும், அப்போ தான் பதிவே எழுதுவேன். சோ, பதிவு எப்போ எழுதுவேன்கறது என் கையில இல்ல, இங்க (வயிற்றைக் காட்டி) இங்க தான் இருக்கு, சிகுனல் அங்கே இருந்து வரனும், புரிஞ்சதா?

Off the record:
வெளங்கிரும், தொடர்ந்து எழுதாததுக்கு இதான் காரணமா? அப்போ நல்ல டாகுடரை பாருங்க.

டாகுடரை பார்த்ததுல இருந்துதான் இப்படி இருக்கு!


பதிவு எழுத எப்படி உங்களுக்கு நேரம் கிடைக்கிறது?
அதான் சொன்னேனே, அப்பப்போ கக்கூஸ் போவேன்னு, அப்படிப் போகும் போது அங்கேயே உக்காந்து எழுதுவேன்.

Off the record:

அப்போ கக்கூஸ்ல கூட நெட் கனெக்சன் வெச்சிருக்கீங்களா?

இல்ல சார், சிலேட்டு கல்லு குச்சி வெச்சிருக்கேன். அப்போதான் அழிச்சி அழிச்சி எழுத வசதியா இருக்கும்!மொக்கைப் பதிவுகளை எப்படி உங்களால் எழுத முடிகிறது?
நாம எழுதுதறது எல்லாமே மொக்கைதானே? இதுக்கெல்லாம் ஆர்மில போயியா ட்ரெயினிங் எடுக்க முடியும்? வேணும்னா சிரிப்பு போலீசு ப்ளாக்க மூணு நாள் உக்காந்து படிங்க, அப்புறம் நீங்க சும்மா பேசுனா கூட அது ரொம்பக் கேவலமான மொக்கை ஆகிடும்.

Off the record:

நான் தான்  படிக்க சொன்னேன்னு சொல்லி, தயவு செஞ்சு நம்ம கோமாளி செல்வாவோட மொக்கைய தொடர்ந்து மூணு நாளு படிச்சிடாதீங்க சார், அப்புறம்  கோர்ட்டு, கேசுன்னு என்னால அலைய முடியாது!மொக்கைப் பதிவு எழுதும்போது எதிர்க்குரல்கள் கிளம்புமே?
ஆமா, நிறைய மொக்கைப் பதிவர்கள் இதுனால அவங்க பேரு கெட்டுப் போகுதுன்னு போன் பண்ணியும், ஈமெயிலிலும் திட்டுறாங்க. இதெல்லாம் ஒரு குத்தமாய்யா? பேரு கெட்டுப் போச்சுன்னா ஒண்ணு பேர ஃப்ரிட்ஜ்லேயே வெச்சுக்கனும் இல்ல தூக்கிப்போட்டுட்டு வேற பேரு வாங்கிடனும். அதவிட்டுப்புட்டு என்னைய குத்தம் சொன்னா எப்பிடி சார்?


சமீபத்தில் சிரிப்பு போலீசை சந்தித்த போது அவர் சொன்ன ஒரு சீரியசான விஷயம், நீங்கள் நீண்ட காலமாக எழுதிவருகின்றீர்களாமே?
அந்த ஆளுக்கு இதே வேலையா போச்சுய்யா! இப்படி சொன்னா நான் யூத்து இல்லேன்னு எல்லோரும் நம்பிடுவாங்கன்னு அவர் திட்டமிட்டே இந்த வதந்தியைப் பரப்பி வருகிறார். நான் மட்டுமா எழுதறேன் எல்லாரும்தான் எழுதறீங்க. எல்கேஜி சேர்ந்ததுல இருந்து எல்லோரும் எழுதிக்கிட்டுத்தான் இருக்கீங்க. ஏ, பி, சி, டி, ஆனா, ஆவன்னான்னு இதுவரை எம்புட்டோ எழுதியாச்சு.

நான் எல்கேஜில எழுத ஆரம்பிச்ச புதுசுல என்னைப் பெரிதும் ஊக்குவித்தவர் சிரிப்பு போலீஸ். ஏன்னா அவருதான் எங்க ஸ்கூலு வாத்தி!

Off the record:

வாத்தின்ன உடனே அவருக்கு ரொம்ப வயசாயிடுச்சோன்னு தப்பா நெனச்சுடாதீங்க சார். அவருக்கு இன்னும் ரெண்டு வருசம் இருக்கு ரிட்டையர்மெண்ட்டுக்கு!அப்படின்னா சிரிப்பு போலீசுகிட்ட நிறைய அடிவாங்கியிருப்பிங்களே?
அதுதான் இல்ல. எப்போதும் போல சிரிப்பு போலீசுதான் எங்ககிட்ட அடிவாங்குனாரு. மொதல்ல ரொம்ப வருத்தப்பட்டாரு, அப்புறம் நம்ம விதி அவ்வளவுதான்னு நேர்மையா ஏத்துக்கிட்டாரு.
சார், டீ ஆர்டர் பண்ணிட்டீங்களா? அப்பிடியே ரெண்டு பஜ்ஜியும் சொல்லிடுங்க. ஏன்னா, அது ’அது’க்கு நல்லதாம்.

Off the record:

அதுன்னா எதுங்க?

தறுதலை சொல்ற அது இல்ல இது, இது வேற அது!

அதுதான் எதுன்னு கேக்குறேன்?

சாப்பாடு வாங்கிக் கொடுத்தா சொல்றேன்

ஹி..ஹி.. அடுத்த மொக்கைக்கே..சே...  கேள்விக்கே போவோம்!

த்தூ........
நோ மென்சன்.......மொக்கை எழுதி சர்ச்சையானது போல வேற ஏதாவது சர்ச்சை ஏற்பட்டதுண்டா?
வேற ஏதாவது எழுதுனாத்தானே வேற சர்ச்சை வரும்? மொக்கையத் தவிர வேற ஏதாவது எழுதச் சொல்லி மிரட்டுறாங்க. வேற எதுவும் எழுதக்கூடாதுன்னும் சொல்லி மிரட்டுறாங்க. நான் என்னதான் பண்றது? நான் வேற அலுவலகத்துல இருந்து எழுதறதால, டேமேஜரு இல்லாத நேரமா பாத்து மிரட்டுனா நல்லாருக்கும். (ஒரே நேரத்துல எத்தனை பேருகிட்டதான் அடிவாங்கறது?)

Off the record:

தொடர்ந்து ஒரே ஆளுதான் சார் மெரட்டுறாரு. அதுவும் அவருக்கு ஓட்டுப் போடச் சொல்லி மெரட்டுறாரு சார்! எனக்குத் தெரிஞ்சா நான் போட மாட்டேனா?சரி இது ஒரு ஜாலி பேட்டி என்பதால் அரசியல் பக்கம் போகவேண்டாம், நீங்கள் பார்த்த படங்களில் எது பெஸ்ட் என்பது பற்றி உங்கள் கருத்து?
கமர்சியலாகப் பார்த்தால் அஞ்சரைக்குள்ள வண்டிக்குத்தான் முதலிடம். அடுத்ததாக ஒரு ஆங்கிலப்படம் என்ற வகையில் சிராக்கோ படத்தைச் சொல்லலாம். தேவலீலை படம் அனைத்துத் தரப்பினருக்கும் பிடிக்காது என்பது எனது கருத்து.  மாயவலை டப்பா.

Off the record:

அலெக்சாண்ட்ரா படத்தோட டவுன்லோட் லிங் கிடைச்சா கொடுங்க சார். ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன். கஸ்டமர் ஒருத்தருக்கு அர்ஜென்ட்டா தேவைப்படுது!


தேவலீலைதான் டாப் படம்னு எல்லாரும் சொல்றாங்களே?
நல்ல படம்தான், புடிச்சிருந்தா போயிப் பாருங்க. ஆனா அந்த பிகரு மூஞ்சிக்கு இந்தப் படம் எடுபடாது என்பதே எனது கணிப்பு!

Off the record:

என்னங்க மூஞ்சி எடுபடாதுன்னு சொல்றீங்க?

அப்படித்தான் சொல்ல முடியும்!அப்படின்னா தேவலீலை?
அந்தப் படத்த பறங்கிமலை ஜோதிலகூட போடமாட்டாங்கன்னு நெனைக்கிறேன்.

Off the record:

நெட்ல கூட வராது!மில்லியன் டாலர் கேள்வி: ஒவ்வொரு பதிவிலும் இருபது முப்பது மொக்கை போடுறீங்களே எப்படி?
மொதல்ல அந்த மில்லியன் டாலரைக் கொடுங்க, பதில் சொல்றேன்.

Off the record:

அட என்ன சார் நீங்க, மொக்கையப் போயி எண்ணிக்கிட்டு,  எல்லாம் குத்துமதிப்பா எழுதறதுதான்.  எல்லாரும் நெனச்சுக்கிட்டு இருக்காங்க, நான் நோட்டு பேனா எடுத்துட்டுப் போயி எழுதுறேன்னு, அதுதான் இல்ல, நான் எப்பவுமே சிலேட்டு, கல்லுகுச்சிதான் யூஸ் பண்றேன். ஏன்னா எங்க இஸ்கோல்ல நோட்டு பென்சில்ல எழுத சொல்லிக் கொடுக்கவே இல்ல! 

சூப்பர்ப் எருமக்குட்டி ஏரிச்சாமி, உங்களோட பசி ஷெட்யூலில் எனக்காக நேரம் ஒதுக்கி இந்தப் பேட்டியைக் கொடுத்தமைக்கு நன்றி.

Off the record:

தம்பி டீ இன்னும் வரல....!
சே.....  ஒன் பை டூ டீக்கெல்லாம் பேட்டி கொடுக்க வேண்டியிருக்கு......அடுத்த தடவ பேட்டி எடுக்கும் போது சாப்பாடா வாங்கிக் கொடுக்கப் பாருங்க தம்பி,

எதிர்பதிவுக்கு உடனே ஒத்துக்கொண்ட இரு நண்பர்களுக்கும் நன்றி!

படங்களுக்கு நன்றி கூகிள் இமேஜஸ்!
!
Wednesday, January 19, 2011

ஆட்டநாயகிகள்...

கனவுக்கன்னிகள் 2010 தொடர்பதிவு எழுதச் சொல்லி நண்பர் பிரபாகரன் கூப்பிட்டிருந்தாரு. ஆனா பாருங்க 2010ல எனக்குப் புடிச்ச ஹீரோயின்ஸ் நாலே பேருதான்... நாலு பேருக்காக ஒரு பதிவு எழுதுனா நல்லாவா இருக்கும், நீங்களே சொல்லுங்க? அதான் என்னோட டோட்டல் கனவுக்கன்னிகள் லிஸ்ட்டையும் கொண்டு வந்துட்டேன். நமக்கு புடிச்ச நடிகைகள் (ஹி..ஹி.. ஹீரோயின்ஸ்னு சொல்லிட்டா மத்தப் பேர கவர் பண்ணமுடியாதுல்ல?) நெறையப் பேரு இருக்காங்க. ஆனா சட்டுன்னு யாருமே ஞாபகத்துக்கு வரலை.....

நேத்துல இருந்து இங்க மழை..... மேகமூட்டம்.....மெல்லிய சாரல்...  குளிர் காத்துன்னு...கிளைமேட்டே ரம்மியமா இருக்கு...   அப்பிடியே அமைதியா உக்கார்ந்து, ஆழமா மூச்ச இழுத்து விட்டுட்டு, கண்ணையும் மூடிக்கிட்டு நிதானமா யோசிச்சா....  நினைவுகள் அப்படியே பின்னோக்கி சுழல ஆரம்பித்தன.  நடிகைகள்லாம்  அப்பிடியே ஸ்லோவா பவர் பாய்ண்ட் பிரசண்டேசன்ல வந்து விழுகுற மாதிரி மைண்ட்ல வரிசையா வர ஆரம்பிச்சாங்க. 
 1. சில்க் ஸ்மிதா
 2. அனுராதா
 3. குயிலி
 4. டிஸ்கோ சாந்தி
 5. சங்கவி
 6. பாபிலோனா
 7. ரகசியா
 8. முமைத்கான்

இவங்களை எல்லாம் கவனமா லிஸ்ட்டுல இருந்து எடுத்துட்டு (?), லைட்டா ஒரு கட்டிங்க போட்டுக்கிட்டு மறுபடியும் அதே எடத்துல உக்காந்து யோசிக்க ஆரம்பிச்சேன்.....  வந்துச்சு பாருங்க நிக்காம, அட நடிகைங்க பேருதானுங்க..... உடனே ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்து எழுதி வெச்சிட்டேன்.  மறந்துட்டா, அப்புறம் மேல உள்ள லிஸ்ட்டை வெச்சித்தான் எழுதனும், பாவம் அப்புறம் உங்க நெலம என்னாகுறது?

சரி லிஸ்ட்டுக்குப் போவோம்!

மெயின் லிஸ்ட்:
 1. அமலா (ஒரிஜினல்)
 2. ஹீரா
 3. கஸ்தூரி
 4. சிம்ரன்
 5. லைலா
 6. மாளவிகா
 7. ரீமா சென்
 8. பூஜா
 9. பாவ்னா
 10. ஜெனிலியா
 11. அனுஷ்கா
 12. பூனம் பஜ்வா
 13. சமீரா ரெட்டி
 14. வேகா (ஷோபிக்கண்ணு)
 15. காஜல் அகர்வால்
 16. சுனைனா
 17. பியா
 18. தன்ஷிகா
 19. அமலா
அடிசனல் லிஸ்ட்:
 1. சதா
 2. சனாகான்
 3. தமன்னா
 4. த்ரிஷா
 5. அஞ்சலி
 6. எமி
 7. ஸ்ருதி ஹாசன்
லிஸ்ட்டுல உள்ள நடிகைகள் எல்லோருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு, அது என்னன்னு யோசிச்சு வைங்க. பதில் கடைசியா சொல்றேன்! 

லிஸ்ட்டு ரொம்ப பெருசாயிடுச்சில்ல? என்ன பண்றது, ரொம்ப டீப்பா யோசிச்சுட்டேன் போல, ஆனா வேற வழி இல்ல, இங்க போட்டுத்தான் ஆகனும், ஏன்னா இவங்க எல்லாத்தையுமே எனக்குப் புடிச்சிருக்கே? (நம்மல்லாம்  வருசத்துக்கு 4 கனவுக்கன்னிக வெச்சிருக்க ஆளுங்கோ...!) இப்போ இதுல கூட இன்னும் எத்தனை பேர மறந்து இருக்கேன்னு தெரியல. அதுனால அடிசனல் லிஸ்ட் வேற போட்டுட்டேன்.


எல்லாரும் ஒண்ண ஞாபகம் வெச்சுக்குங்க. இவங்களையெல்லாம் அவங்க நல்லா நடிக்கறதாலேயோ இல்ல கவர்ச்சியா இருக்கறதாலேயோ எனக்கு பிடிச்சிருக்குன்னு நெனைச்சுடாதீங்க. பிடிச்சிருக்கு.... பட்.... அது ஏன்னுதான் தெரியல..... ! கண்டுபுடிச்சித் தர்ரவங்களுக்கு ஏதாவது பண்ணலாம்னு இருக்கேன்.
அந்த லிஸ்ட்ல இருந்து 2010க்கான நடிகை(கள்)ல செலக்ட் பண்ணுவோம்,
 1. சுனைனா
 2. தன்சிகா
 3. பியா
 4. அமலா
இவங்க நாலு பேருல இருந்து ஒண்ண 2010-ன் கனவுக்கன்னியா நீங்களே பார்த்து செலக்ட் பண்ணிக்கலாம்...... நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்.... அவங்களும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. ... ஹி...ஹி...ஹி....

இவ்வளவும் சொல்லிட்டு கனவுக்கன்னிகளுக்கு படம் போடலைன்னா எப்படி? அதுனால ஒரே ஒரு படம், அதுவும் எனக்கு ரொம்ப புடிச்ச சுனைனா படம் மட்டும் போட்டுக்கிறேன் (மத்தப் படங்கள்லாம் நீங்களே கொஞ்சம் சிரமம் பார்க்காம, கூகிள்ல போயி பார்த்துகுங்கப்பு, நெறைய எக்குத்தப்பா இருக்கு!).

 
ங்ணா அந்த ஒற்றுமை என்னன்னு கண்டுபுடிச்சிட்டீங்களாங்ணா? அட என்னங்கங்ணா இது, சினிமா மேட்டர்ல கூடவா இவ்வளவு அப்பாவியாவா இருப்பீங்க? சரி விடுங்ணா.. நானே சொல்லிடறேன்...

அந்த ஒற்றுமை: அவங்க எல்லோருமே ............................................... ............ பெண்கள்... 

(அப்படித்தான்னு நெனைக்கிறேன்.... யாரு கண்டது நம்ம கெட்ட நேரம், ஏதாவது விதிவிலக்கு இருந்து தொலைச்சிடப் போவுது........ அப்படி எதுவும் இருந்தா என்னை விட்ருங்கப்பா......! )

காவலன் படம் வேற நல்லா இருக்காம். அதுனால  என்ன எழுதுறதுன்னே தெரியல சாமி........  (ஒருவேள சரக்கு முடிஞ்சு போச்சுன்னு கண்டுபுடிச்சிடுவாய்ங்களோ.........? சரி விடு, விடு, இப்போ மட்டும் சரக்கு டிப்போன்னா நெனைச்சுக்கிட்டு இருக்காய்ங்க......!)

ஓக்கே... கடைசியா ஒரு சின்னக் கேள்வியோடு எனது உரையை முடித்துக் கொள்கிறேன்..... விக்கி லீக்ஸ்ல ஸ்விஸ் பேங்ல பணம் இந்தியர்கள் லிஸ்ட்ட லீக் பண்ணப் போறாங்களாமே, அதுல ’அவரு’ பேரு இல்லேன்னா என்ன பண்ணுவீங்க?

பின்குறிப்பு: ஷ்ரேயாவைக் குறிப்பிட மறந்துட்டேன்..... ஹி..ஹி... நீங்களும் மறந்துடுங்க......!

படத்திற்கு நன்றி southdreamz.com

!

Monday, January 17, 2011

கக்கூசில் கக்கா போவது எப்படி .......?

கக்கூஸ்ல கக்கா போறது எப்படின்னு யாருக்காவது சொல்லிக் கொடுக்கனும்னா இனி கவலையே இல்ல சார். சிம்பிளா இந்த வீடீயோக்களைப் போட்டுக் காட்டினாப் போதும்  பார்த்து தெளிவா வெளங்கி நடந்துக்குவாங்க..!

இந்தியன் டாய்லெட்......!வெஸ்டர்ன் டாய்லெட்.......!


என்னத்த சொல்ல...................... ?

முடியல.. சார்.. முடியல....  படுத்தறாய்ங்க............!


நன்றி சர்குணராஜ் மற்றும் யூ ட்யூப்!

!

Wednesday, January 12, 2011

திரும்பி பார்த்தால்..................?திரும்பிப்பார்த்தால்..... ? ஆமாங்க, திரும்பிப் பார்த்தா பின்னாடி என்ன இருக்குன்னு தெரியும் (உங்க பின்னாடி இல்ல சார், உங்களுக்குப் பின்னாடி). ஆனா நெறையப் பேருக்கு 2010 தெரியுதாம்ல....  ங்கொக்காமக்கா.. .! அதான்யா சினிமாவுல  வானத்த பாத்துக்கிட்டே சொல்லுவானுகளே என்னது அது, ஆங்..... ப்ளாஷ்பேக்கு.......  10 நாளா எல்லாப்பயலும், திரும்பிப் பார்க்குறேன், நிமிர்ந்து பார்க்குறேன், குனிஞ்சு பார்க்குறேன்னு, படுவா இத வெச்சே பொழுத போக்கிக்கிட்டு இருக்கானுங்க. படுபாவிங்க, அப்படியே போக வேண்டியதுதானே, போற போக்குல மத்தவனுங்களையும் கோர்த்து விட்டுடுறானுங்கப்பா.... படிக்கப் போறவங்களப்பத்தி கொஞ்சமாவது நெனச்சுப்பாக்க வேணாம்?  அட எழுதப்போறவங்களப் பத்தியாவது நெனச்சுப்பார்க்கலாம்ல? என்ன ஓலகம்யா இது............?  இந்தத் தொடர்பதிவுக்கு ஏதாவது பரிகாரம் இருந்தா யாராவது சொல்லுங்கய்யா....  உங்களுக்கு ஏதாவ்து பின்னாடி பண்றேன்.சரி மேட்டருக்குப் போவோம்...

ம்ம்..... என்ன தலைப்பு இன்னிக்கு.. ....ஆங்... திரும்பிப்பார்த்து என்னன்னு சொல்லனும்ல? திரும்பிப்பார்த்தே சொல்லிடுவோம்......!

2010ம் ஜனவரிலதான் ஸ்டார்ட் ஆச்சு, சோ நாமலும் அப்பிடியே ஸ்டார்ட் பண்ணுவோம்.....
(யார்ராவன்...........   சிரிப்பு போலீசு. ஏற்கனவே அந்த மாதிரி எழுதிட்டாரேன்னு கேக்கறது? ...... ங்கொய்யால.......  எல்லோரும் தமிழ்லதான் பதிவு எழுதுறாங்க, நாமளும் எழுதலியா? அதே மாதிரிதான் இதுவும்...... !)


ஜனவரி:
ஜனவரில என்ன பண்ணுனேன்னே ஞாபகம் இல்லீங்கோ... எப்பவாச்சும் ஞாபகம் வந்தா, உடனே ஒரு கல்வெட்டுல வெட்டி மெரீனா பீச்சுல நிக்க வெச்சிடறேன், வந்து பார்த்து, படிச்சு பயன் அடைஞ்சுக்குங்க... சரியா.....?


பிப்ரவரி:
ம்ம்ம்.. இந்த மாசத்துக்கும் ஒண்ணுமே ஞாபகம் வரலே.....  ஆங்... பிப்ரவரில ஓலக நாட்டுத்தலைவர்கள்லாம் சேர்ந்து ஐக்கிய நாட்டு சபை லீடராகச் சொல்லி என்னைக் கெஞ்சுனாங்க, ஆனா எனக்குத்தான் ஜெர்மன் தெரியாதே, அதான் முடியாதுன்னுட்டேன்... யாருக்காவது தெரியும்னா போங்கப்பா......!


மார்ச்:
மார்ச்லதாங்கோ ப்ளாக் பக்கமா மொத மொத தலைகாட்டுனேன். நெட்ல 'எதையோ' தேடிக்கிட்டு இருந்தப்போ சுறா சாங்ஸ் சூப்பர் ஹிட்டுன்னு வெளியூர்காரன் போட்ட பதிவு கண்ணுல சிக்குச்சு, ங்கொய்யால, இன்னுமா இப்பிடி ஆளுக இருக்காய்ங்கன்னு வந்துச்சு கோபம்....... துடித்தது புஜம்..... ஆனா..... எப்படி கமென்ட் போடுறதுன்னே தெரியல.....  கொஞ்ச நேரம் பொட்டிய தட்டிக்கிட்டி, ஐடி ரெடி பண்ணிட்டேன் (அப்பவே பன்னிக்குட்டி ராம்சாமின்னு பேர் வெச்சுட்டேன், திட்டறதுக்கு வசதியா இருக்கட்டுமேன்னுதான் அந்த பேர சூஸ் பண்ணேன்). அப்புறம் போட்டேம்பாருங்க கமென்ட்டு...... 400ஐ தாண்டிடுச்சு.....


ஒரே நேரத்துல வெளியூரு, பட்டா, முத்து, கரிகலான், மங்கு எல்லாரையும் அடிச்சு ஆடுனேன், கும்மின்னா கும்மி மரணக் கும்மி........ இப்போ வரைக்கும் அப்படி ஒரு கும்மி அடிக்கவே இல்ல. 'பொதுநலன்' கருதி நெறைய கமென்ட்ச அதுக்கப்புறமா டெலிட் பண்ணிட்டோம். சும்மா ஆபீசுல உக்காந்து தினமலர் படிச்சுக்கிட்டு இருந்த எனக்கு இந்த கும்மி வெளாட்டு ரொம்ப புடிச்சுப் போச்சு, அப்பிடியே மத்த ஆளுக ப்ளாக் பக்கமும் போயி கமெண்ட் போட ஆரம்பிச்சேன். என்ன கொஞ்சம் ஓவரா போகுதோ, போனா என்னா, தொடர்பதிவுன்னா அப்படித்தான் இருக்கும். பேசாம படிக்கனும். சரி, இந்த மாசத்துக்கு இம்புட்டு போதும், மத்ததை அடுத்த மாசத்துல பார்ப்போம்.


ஏப்ரல்:
ஏப்ரல் மாசம் பூரா சும்மா கமென்ட்டுதான் போட்டுக்கிட்டு இருந்தேன், அதுவும் ஏடாகூடமா! ப்ளாக்கு வேற இல்லாததால, பதிலுக்கு என்ன திட்டமுடியாம எல்லோரும் கொஞ்சம் கடுப்பா இருந்தாங்கன்னு நெனைக்கிறேன். அப்புறம் வெளியூரு, பட்டா, மங்குனி ப்ளாக்குகள்ல பழைய பதிவுகள படிக்க ஆரம்பிச்சேன். அப்போலாம் திரட்டிகள்னா என்னன்னே தெரியாது. தெரிஞ்ச ப்ளாக்ஸ் அட்ரஸ்களை மெயில்ல போட்டு வெச்சு அப்பப்போ ஓப்பன் பண்ணிப் படிப்பேன்.

மே:
இப்படியே கமென்ட்டு போட்டுக்கிட்டு இருக்கும்போது மக்கள் எல்லோரும் ப்ளாக் ஆரம்பி, ப்ளாக் ஆரம்பின்னு கெஞ்ச ஆரம்பிச்சாங்க. நானும் ரொம்ப யோசிச்சுட்டு (பின்ன, ப்ளாக் ஆரம்பிச்சா ஏதாவது எழுதனுமே?) சரி போனா போகுதுன்னு படிக்கப் போறவங்க மேல பாரத்த போட்டுட்டு ப்ளாக் ஆரம்பிச்சேன். அதுவும் கரெக்டா மே மாசம் 31ம் தேதி. (எப்படி ஞாபகம் வெச்சிருக்கேன் பாத்தீங்களா?)


ஜூன்:
ப்ளாக்கு ஆரம்பிச்சதுமில்லாம, நானும் கொஞ்சம் எழுத ஆரம்பிச்சேன். அழகிகள், பிட்டுப்படம்னு ஏதோ எனக்குத் தெரிஞ்சத எழுதுனேன். அதுக்கே எல்லோரும் ஆஹா ஓஹோன்னு சொல்லவும், நமக்கும் நல்லாத்தான் எழுத வருது போலேன்னு நான் பாட்டுக்கு கண்டமேனிக்கு எழுதிகிட்டு இருக்கேன் இன்னைக்கு வரைக்கும். நமக்கென்ன வந்துச்சு, அது படிக்கறவங்க பாடு.


ஆனா என்னமோ தெரியல, எனக்கு பதிவு எழுதற விட கமென்ட் போடறதுதான் புடிக்குது. தெரியாத்தனமா ப்ளாக்க ஆரம்பிச்சு இப்போ என்னென்னத்தையோ எழுதித் தொலைக்க வேண்டியிருக்கு பாருங்க. கமென்ட்டுன்னா எதையும் கண்டுக்காம மனசுல தோண்றத பட்டுன்னு போட்டுட்டு போய்க்கிட்டே இருக்கலாம். அப்புறம் சிரிப்பு போலீஸ் ப்ளாக்க படிக்க ஆரம்பிச்சது இந்த மாசத்துலதான். செம்மொழி மாநாட்டுல, இணையத்தமிழ் அரங்கத்துல ஒரு ஸ்டால்ல நம்ம சிரிப்பு போலீஸ் ப்ளாக்க அறிமுகப்படுத்துனாங்கன்னு படிச்சுட்டு ஆடிப்போயிட்டேன். பெரிய பெரிய ஆளுக கூட பழகறோம்னு பெருமையா இருந்துச்சு... (பாருங்க எப்படி அப்பாவியா இருந்திருக்கேன்னு....!)


என்னை மாதிரியே வெறும் கமென்ட்டு கும்மின்னு வெளையாண்டுக்கிட்டு இருந்த ஜெய்யும் ப்ளாக்கு ஆரம்பிச்சார். கும்மிக்கு இன்னொரு எடம் கெடைச்சதுன்னு சந்தோசமா இருந்தேன். இப்போ தலைவரு எழுதுறதே இல்ல. ப்ளாக்கு பூரா கரையான் அரிச்சுக்கிடக்கு....!


ஜூலை:
இந்த மாசத்துலதான் ஊருக்குக் கெளம்புனேன், அதுனால ஒரே சந்தோசமா ஷாப்பிங் பண்ணிட்டு இருந்தேன். phantom பருப்பு மோகனும் நான் கெளம்புறதுக்கு ஒரு நாள் முன்னாடிதான் சென்னை போறதா சொல்லியிருந்தார், அதுனால் எப்படியும் மீட் பண்ண்லாம்னு நெனச்சேன். ஆனா முடியல. அதுக்கப்புறம் அவர் எழுதுறதையே நிறுத்திட்டார்.


ஆகஸ்ட்:
ஃபுல்லா ஊர்ல தான். அதுனால நோ பதிவு,  அப்பப்போ கமென்ட்ஸ் அவ்வளவுதான். இந்தமாசம்தான் பிரபல பதிவர்கள் மீட்டிங் சென்னைல ஒரு புகழ் பெற்ற ஓட்டல்ல நடந்துச்சு. அதான்யா மங்கு, ஜெய், நான் மூணு பேரும் மீட் பண்ணி சமுதாயத்த எப்படி சரி பண்ணலாம்னு 6 மணி நேரம் டிஸ்கஸ் பண்ணோம். மங்குனிதான் சீனியர் பதிவருங்கிறதால,  அவரே மீட்டிங்குக்கு ஆன முழு செலவையும் ஏத்துக்கிட்டாரு.


பேக் டூ ஊர்.... ஊர்ல பவர்கட் பிரச்சனையோட முழு தீவிரத்தையும் உணர்ந்தேன். ஆகஸ்ட்ல கிளைமேட் வேற வறுத்து எடுத்துடுச்சு, இனி இந்த டைம்ல ஊருக்குப் போறதில்லேன்னு முடிவு பண்ணியிருக்கேன், பார்ப்போம்! இந்த வருசம் எலக்சன் டைம்ல போகலாம்னு இருக்கேன், கரண்டு, ரோடு எல்லாம் நல்லா இருக்கும்,  டீவி, பேப்பரு, நீயூசுன்னு காமெடியா வேற பொழுது போகும்ல..... ?


செப்டம்பர்:
இந்த மாசம் ஏதோ கொஞ்சம் பதிவுகள் எழுதுனேன். ஊர்ல இருந்து  சென்னைக்கு ஒரு வேலையா வந்தப்போ, சிரிப்பு போலீச மீட் பண்ணேன். பாவம் எனக்காக எங்கேயோ கெடந்து வந்து வெயிட் பண்ணார். போனாப் போகுதுன்னு தோசை, அது இதுன்னு வாங்கிக் கொடுத்தேன். பரவால்ல, அவரும் பதிவுல அதப் பத்தி பெருமையா சொல்லி நண்பேண்டான்னு நிரூபிச்சிட்டாரு. (இனி அடுத்த பில்லு அவருதான் குடுக்கனும்னு எல்லாத்துக்கும் தெரிஞ்சு போச்சுல்ல?)


நம்ம பட்டிக்காட்டான் ஜெய், டெர்ரர் பாண்டியன், பனங்காட்டு நரின்னு (தில்லுமுல்லு) ரெண்டு பேர அறிமுகம் பண்ணி வெச்சாரு. நம்ம பசங்கதான் நல்லா கும்மியடிப்பானுங்க, பின்னாடி யூஸ் ஆகும்னாரு. நானும் நம்பி சேத்துக்கிட்டேன். இப்போ நாதாரிங்க ரெண்டு பேருமே கும்மியடிக்கிறத விட்டுட்டானுங்க. என்ன பண்றது? சரி பொழச்சி போறானுங்க பாவம்,  ஆப்பீசுல ஆணியாவது அடிக்கட்டும் (அதாவது, ஆப்பீசுல மத்தவங்க புடுங்கற ஆணிய இவனுங்க அடிப்பானுங்க சார்.... வேற ஒண்ணுமில்ல...!)


செப்டம்பர் மூணாவது வாரம்,. ரொம்ப வருத்தமா ஊர்ல இருந்து கெளம்பி வந்து சேர்ந்தேன். ஊர்ல இருந்து கெளம்புறதுன்னாலே வருத்தமாத்தான் இருக்கு, என்ன பண்றது?


அக்டோபர்:
அக்டோபர்ல நிறைய பதிவுகள், நிறைய அறிமுகங்கள்னு நல்லா போச்சு. வட்டத்தை விட்டு வெளிய வந்து நிறைய படிக்க ஆரம்பிச்சேன் (இப்போ எல்லாத்தையும் விட்டுட்டேன், முடியல). கும்மி நண்பர்கள் குழு செட் ஆக ஆரம்பிச்சது இந்த மாசம்தான். நல்ல நட்புகள், அலுவல டென்சனைக் குறைத்துக்கொள்ள அருமையான டைவர்சன். வலைதாண்டியும் நேசக்கரம் நீட்டி வளரும் நட்புகளில் பல ஆச்சர்யங்கள், பல படிப்பினைகள். ஒருவேளை இவர்கள் இல்லையென்றால் எழுதும் சுவராசியமே குறைந்து போகுமோ? (என்னைச் சொன்னேன்... ஏன்னா நானெல்லாம் இவ்வளவு நாளு எழுதுறேன்னு சொல்லி தாக்குப்பிடிக்கறதே அவங்களாலதானே...?)


நவம்பர்:
நவம்பர்ல கொஞ்சம் லீவு கெடச்சுச்சு, மத்த நாடா இருந்தா,  ஊருக்குப் போயிட்டு வரலாம், இங்கே அதெல்லாம் சாத்தியமில்லைங்கறதால, சும்மா அங்க இங்க சுத்துனேன். நல்லா ரெஸ்ட்டு எடுத்தேன். வலைச்சரத்துல நண்பர்கள்லாம் எழுதுனாங்க.  வழக்கம் போல அருமையான அறிமுகங்கள்னு பாராட்டினேன். என்னமோ தெரியல இதுவரைக்குமே வலைச்சரத்துல என்னை 2 தடவதான் அறிமுகப்படுத்தியிருக்காங்க. ஒரு வேளை நம்ம எழுதுறதப் பார்த்துட்டு பயந்திருப்பாங்கன்னு நெனைக்கிறேன்.  நம்ம என்ன சமுதாயப்பணி செய்யவா எழுத வந்திருக்கோம், இல்ல இலக்கியம் பலக்கியம்னு எழுதி மெடலு குத்திக்கிட்டு நிக்கப் போறோமா? ஏதோ படிக்க ஆளு கெடைக்கற வரைக்கும் முடிஞ்சத எழுதுவோம்... இல்லேன்னா சத்தமில்லாம நைசா பொட்டியக் கட்டிடுவோம்.... அம்புட்டுதான்!


டிசம்பர்:
இந்த மாசம், என்னையும் வலைச்சரத்துல எழுத கூப்புட்டாங்க. கொஞ்சம் பயமா இருந்தாலும், முடியாதுன்னு சொல்லிட்டா இனி மறுபடி கூப்பிட மாட்டாங்களோன்னு உடனே ஒத்துக்கிட்டேன். பயங்கரமா தேடித் தேடி பதிவுகளைக் கண்டுபுடிச்சு அறிமுகப்படுத்துனேன். ஆனா பாருங்க, எல்லோரும் நான் அந்தப் ப்ளாக்குகளை ரெகுலரா படிக்கிறேன்னு நெனச்சுட்டாங்க. அதுனால கொஞ்சம் இமேஜு வேற கூடிப்போச்சா, நானும் சரின்னு விட்டுட்டேன். என்ன சரிதானுங்களே?


தமிழ்மணத்துல வேற விருதுகளுக்காக ஏதாவது பதிவுகளை சப்மிட் பண்ணுங்கன்னு கெஞ்சுனாங்க. சரி என்ன ஃப்ரீதானே,  நாமலும் சப்மிட் பண்ணுவோமேன்னு, மூணு பதிவுகளை செலக்ட் பண்ணலாம்னு உக்கார்ந்தா, எதை செலக்ட் பண்றதுன்னு முடிவு பண்ணவே முடியல, அவ்வளவு அருமையா எழுதியிருக்கேன்.  அப்புறம் என்ன, வழக்கம்போல படிக்கப் போறவங்க மேல பாரத்தப் போட்டுட்டு சப்மிட் பண்ணேன்.


தொடர்பதிவுன்னு ஒரு மோசமான நோய் பரவ ஆரம்பிச்சது இந்த மாசத்துலதான்னு நெனக்கிறேன், இன்னும் முடியல. புதுசு புதுசு கெளப்பிக்கிட்டு இருக்கானுக. இதுக்கு ஏதாவது பண்ணனும்னு பார்க்குறேன், ஒண்ணும் சிக்க மாட்டேங்குது சார். இருக்கட்டும், இருக்கட்டும், பின்னாடி ஏதாவது பெருசா பண்ணுவோம்.
எச்சரிக்கை: டெம்ப்ளேட் கமென்ட்டுகள் வாபஸ் அளிக்கப்படும்.


இது தொடர்பதிவு என்றாலும், யாரையும் தொடர அழைக்கவில்லை. விருப்பம் உள்ளவர்கள், கமென்ட்டில் தெரிவித்துவிட்டு தொடரலாம். (கமென்ட்டுல சொல்லாமல் தொடர்ந்தால், பதினெட்டுப்பட்டிப் பஞ்சாயத்தில் பிராது கொடுக்கப்படும்)

புகைப்பட உதவிக்கு நன்றி கூகிள்!

!

Monday, January 10, 2011

பட்டாபட்டியுடன் கேப்டன்: நடந்தது என்ன....?
கேப்டன் தேர்தல் வந்திடுச்சு.....
அட இருய்யா....வர்ரேன்.........


அவனை புடிங்கய்யா....  கட்சிக் கூட்டத்துல வந்து ஷூட்டிங்கான்னு கேக்குறான்?


ஓட்டுப் போடலேன்னா ஒரே குத்து.....!
போன எலக்சன்ல எனக்கு ஓட்டுப் போட்டவனுகளத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்.....  ராஸ்கல்ஸ்......எல்லாம் செல்லாத ஓட்டு


தமிழக அரசியல் சூழல்கள் வெகுவேகமாக மாறிவரும் வேளையில், தானைத்தலைவர் ராகுல்ஜீ, டாகுடர்.கேப்டன் கட்சியுடன் கூட்டணி வைக்க இசைந்துள்ளார்கள். அது சம்பந்தமாக ரகசிய பேச்சுவார்த்தை நடத்த தனது நம்பிக்கைகு உரிய தூதராக பட்டாபட்டி அவர்களை நியமித்து தமிழகம் அனுப்பி வைத்துள்ளார். அதன் விளைவே நீங்கள் பார்த்த இந்தப் பதிவின் டைட்டில் (நீங்க கேப்டன் டவுசரோட வந்துட்டாருன்னுதானே நெனச்சீங்க? என்னது இல்லியா...? இல்ல நெனச்சீங்க....)

நம்ம பட்சிகள் சும்மா இருக்குமா...? சீக்ரெட் மீட்டிங்கை சீக்ரெட்டா அள்ளிக்கிட்டு வந்துடுச்சுங்க, நீங்களும் பாருங்கப்பு.........


இன்னுமா நான் என்ன பண்ணப்போறேன்னு உங்களுக்குப் புரியல?


பட்டாஜீ: நான் தான் பட்டாபட்டி, ராகுல்ஜீ அனுப்பி வெச்சார்.

கேப்டன்ஜீ: என்னது ராகுல்ஜீ எனக்கு பட்டாபட்டி அனுப்பி இருக்காரா? பரவால்லையே......? ஒரு மதுரக்காரன் பட்டாபட்டிதான் போடுவான்னு கரெக்டா அனுப்பி இருக்காரு உங்க தலைவரு... சரி, எங்கே பட்டாபட்டி, கொடுங்க......போட்டுப்பார்க்குறேன்....!

பட்டாஜீ: சார், எம்பேருதான் பட்டாபட்டி, ஆனா நான் உங்களுக்குக் கொண்டு வந்தது, வெள்ளவேட்டி....!

கேப்டன்ஜீ:  சரி கொடுங்க, ஆமா என்ன விஷயமா வந்திருக்கீங்க, உங்க ராகுல்ஜீக்கு விருதகிரி பெசல் ஷோ ஏற்பாடு பண்ணிடுவோமா? என்னைக்குன்னு மட்டும் சொல்லுங்க...... டெல்லிலேயே ஷோவ வெச்சுக்கலாம்..

பட்டாஜீ:  (என்னது விருதகிரியா, ஆரம்பத்துலேயே ஆப்பா?) அதெல்லாம் இல்ல, கேப்டன், எங்க தானைத்தலைவன் ராகுல்ஜீ கூட்டு விஷயமா உங்ககிட்ட பேச சொன்னாருங்க

கேப்டன்ஜீ:  சரி அப்போ போகும்போது, விருதகிரி டிவிடிய எடுத்துட்டுப் போய் அவர்கிட்ட கொடுத்துப் பார்க்க சொல்லுங்க., அது என்ன கூட்டு மட்டும் கேக்குறீங்க இருந்து ஃபுல்மீல்சும் சாப்பிட்டுப் போங்க......

பட்டாஜீ: (சரியாப்போச்சு, இனி டெல்லில போயி விருதகிரிக்கு வேற வெளம்பரம் பண்ணனுமா? ) கேப்டன்......  தேர்தல் கூட்டணியபத்தி சொன்னா பொடலங்கா கூட்டப் பத்தி பேசுறீங்களே? இன்னும் மூணு மாசத்துல தேர்தல் வரப்போகுது தெரியுமில்ல?

கேப்டன்ஜீ: ஓ... அப்படியா.....  இப்போ என்ன பண்றது, மச்சான் வேற ஊர்ல இல்லியே?

பட்டாஜீ:  மச்சான் இல்லேன்னா என்ன கேப்டன், நீங்க சொல்லுங்க, உங்களுக்கு எத்தனை சீட்டு வேணும்?

கேப்டன்ஜீ: சரி வீட்டுக்காரம்மாவையாவது வரச்சொல்லிக்கிறேனே?

பட்டாஜீ:  இல்ல கேப்டன், அதுக்கெல்லாம் டைம் இல்ல, உங்ககிட்ட பேசிமுடிச்சிட்டு அப்புறம் இன்னொரு டாக்டரையும் பார்க்கனும், அதுனால, சீக்கிரம் சொல்லுங்க

கேப்டன்ஜீ:  சரி, மொதல்ல பொட்டியப் பத்தி பேசுவோம், அப்புறம் தான் சீட்டு.....!

பட்டாஜீ: என்ன கேப்டன்...  எத்தனை சீட்டு வேணும்னா என்ன பொட்டி கிட்டிங்கிறீங்க?

கேப்டன்ஜீ:  அதான் அடிச்சீங்கள்ல ஸ்பெக்ட்ரம்மு, 2G ன்னு, அதுல இருந்து கொஞ்சம் கொடுத்தா என்ன? நீங்க கொடுக்கலேன்னா என்ன? எனக்கு அந்தப்பக்கத்துல இருந்து 2 பொட்டி ரெடியா இருக்கு, ஒரு வருசமா.... தெரியுமில்ல?

பட்டாஜீ: அது...... வந்து....... அது எல்லாம் பங்கு பிரிச்சு முடிஞ்சுடுச்சு கேப்டன்.... இப்போ போயி யாருகிட்ட கேக்குறது?

கேப்டன்ஜீ: இப்பிடி கேட்டா நீங்க சரிவரமாட்டீங்க, பங்கு எங்கெங்க போயிருக்குன்னு களிங்கர்ஜீக்கு கூடவா தெரியாது? நான் சொல்றேன் கேட்டுக்குங்க, அடிச்சது 30000 கோடி, அதுல டெல்லிக்கு 10000 கோடி, ராசாவுக்கு, 300 கோடி, பெரிய குடும்பத்துக்கு, 5000 கோடி, சின்னக்குடும்பத்துக்கு 5000 கோடி, பேரன்களுக்கு 3000 கோடி, அல்லக்கைளுக்கு 100 கோடி, இது போக மீதி 6400 கோடி, அது எங்க போச்சு? சொல்லுங்க.....? சரி, உங்க லைனுக்கே வர்ரேன், எனக்கும் ஒரு பொட்டி வாங்கிக்கொடுத்திங்கன்னா உங்களுக்கு ஒரு பெர்சன்டேஜ் தார்ரேன்... எப்பிடி வசதி?
இன்னும் ரெண்டு பொட்டி சேர்த்துக் கேட்டிருக்கலாமோ?பட்டாஜீ: (அடப்பாவி, இப்பிடி ஒரு வழி இருக்கா.....?) இதப் பத்தி நான் மேலிடத்துல பேசிட்டு சொல்றேன் கேப்டன்ஜீ.... கெளம்பரத்துக்கு முன்னாடி ஒரு சின்னக் கேள்வி......

கேப்டன்ஜீ: கேளுங்க பட்டாஜீ, இப்பத்தான் பார்ட்னராகப் போறோம்ல, தாராளமா கேளுங்க!

பட்டாஜீ: அஞ்சாநெஞ்சரு தனிக்கட்சி ஆரம்பிக்கப் போறாராமே, அவர் கூட நீங்க கூட்டு வெச்சுக்குவீங்களா?

கேப்டன்ஜீ: நானும் மதுரக்காரன், அவரும் மதுர, மதுரக்காரனுக்கு மதுரக்காரந்தன்யா உதவி செய்வான்..... புரியுதா?

பட்டாஜீ:  (நல்லவேள நான் மதுரக்காரன் இல்ல....... !) அப்போ டாகுடரு விஜய் கட்சி ஆரம்பிச்சா?

கேப்டன்ஜீ:  நிச்சயம் கூட்டணி வெப்பேன்.....

பட்டாஜீ: அவரு மதுரக்காரவரு இல்ல கேப்டன்....

கேப்டன்ஜீ: ஆனா மதுரேன்னு படம் பண்ணியிருக்காரே? பட்டாஜீ, நாங்கள்லாம் அரசியலை கரச்சி குடிச்சவிங்க, மதுரக்காரன் எங்கிட்டயேவா? மொதல்ல போயி பொட்டிய கொண்டுவாங்க, மேக்கொண்டு பேசுவோம்............!

பட்டாஜீ பொட்டிவாங்க நாளை டெல்லிக்கு செல்கிறார். பொட்டிதூக்க ஆள் தேவைப்படுகிறது, விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.... கமிசன் உண்டு...................!

ஒழுங்கா எனக்கு ஓட்டப் போட்டுட்டீங்கன்னா இத்தோட எல்லாத்தையும் விட்டுடுறேன்...


Wednesday, January 5, 2011

விசும்பல்.....!தூக்கம் தொலைந்த தனிமைகள்…
தனிமையில் நீளும் இரவுகள்…
இரவுகள் சொல்லாத கனவுகள்…
கனவுகள் மறக்காத காதல்... 
காதலை மறக்கப் பயணங்கள்…
பயணங்கள் என்றும் முடிவதில்லை…


தூங்காத விழிகள்
சொல்லாத வார்த்தைகளை
மௌனத்தின் ஒலிகளில்
கேட்டுக் கேட்டு
நீங்காத நினைவுகளால்
ஏங்கித் தவிக்கிறது மனது….தினமும் கேட்கும்
அவளுக்குப்
பிடித்த பாடலில்
இன்று ஒலித்தது
ஒரு விசும்பல்…
இன்று அவள்
பிறந்த நாள்…


புகைப்பட உதவிக்கு நன்றி கூகிள்

!