எச்சரிக்கை: கதையில் பின்நவீனத்துவ குறீயீடுகள் கையாளப்பட்டுள்ளன.
ஒரு அடர்ந்த காடு, எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேல்னு மரங்கள். துள்ளித் திரியும் வனவிலங்குகள்னு காடே அமர்க்களமா இருந்துச்சு. காட்டுல சுதந்திரமா சுற்றித் திரிந்த மிருகங்கள் இஷ்டம் போல சாப்பிட்டு விளையாடி, சந்தோசமா வாழ்ந்துட்டு இருந்துச்சுங்க.
அந்தக் காட்டுல ஒரு கெழட்டு காண்டாமிருகம், அது பெயர் ரெமோ (காண்டாமிருகம்னு டைப் பண்ண கடுப்பா இருக்கு). அதுக்கு ரொம்ப நாளா பேபி சோப்பு போட்டு குளிக்கனும்னு ஆசையாம். ஆனா காட்டுல கடையே இல்லையாம். அப்போ அங்க ஒரு கொரங்கு வந்துச்சாம். ரெமோ அந்த கொரங்குகிட்ட தன் ஆசைய சொல்லுச்சாம். அத கேட்ட குரங்கு இவ்வளோதானா உன் ஆசை சொல்லி ரெமோ காதுல ஏதோ சொல்லுச்சாம். அதை கேட்ட ரெமோ ரொம்ப சந்தோசம் ஆகிடுத்து.
அடுத்த நாள் ரெமோ சந்தோசமா பேபி சோப்பு போட்டு குளிச்சிட்டு இருந்ததாம். அங்க வந்தயானை உனக்கு எப்படி பேபி சோப்பு கிடச்சுது சொல்லி கேட்டுதாம். அதுக்கு யானை காதுல ரெமோ அந்த ரகசியத்த சொல்லுச்சாம்.
குரங்கு ரெமோ கிட்ட என்ன ரகசியம் சொல்லுச்சி? ரெமோ யானை கிட்ட என்ன சொல்லுச்சி?அட.... உங்கள மாதிரிதான் நானும் ஒட்டு கேக்க முயற்சி பண்ணேன். அதுங்க ரொம்ப மெதுவா பேசினதுல ஒன்னும் கேக்கல. இதையெல்லாத்தையும் ஒரு காட்டெருமை (காட்டுல பின்ன வீட்டெருமையா இருக்கும்?) பாத்துட்டு இருந்துச்சாம். பாவம் அதுக்கும் எதுவும் கேக்கல. ஆனா பாருங்க ஹைய்யா பதிவு போட மேட்டர் கெடச்சிருச்சின்னு சொல்லி சந்தோசமா ஓடுச்சாம், ஏன்னா அந்த காட்டெருமை ஒரு பிரபல பதிவராம்.
இப்பதான் ஒருநாள் கக்கா போகாட்டி கூட பதிவுல போட்டுடனும்னு விதிமுறை அமல்ல இருக்காமே, அதுனால அந்த காட்டெருமை அதுக்கு எதுவுமே கேக்கலேன்னாலும் சும்மா இருக்காம, அதை அப்படியே ப்ளாக்ல போட்டுச்சாம். அந்த பதிவை படித்து சோப்பு கிடைத்த ரகசியத்தை தெரிந்துகொள்ளவும். இப்போ நீங்க உங்க வீட்டுக்கு (ப்ளாக்) போலாம்...
டிஸ்கி: இந்த கண்றாவி கதை எங்க ஆரம்பிச்சதுன்னு தெரிஞ்சுக்க, மறுபடியும் படித்து தொலைய எமலோகத்துக்கு ச்சீ இந்த லின்கிற்க்கு போகவும்.
எழுதுறதுக்கு வேற ஒண்ணுமே இல்லாததால.............. ஹி.... ஹி... வேற வழியே இல்ல......... படிச்சுத்தான் ஆகனும்.......
நன்றி: கூகிள் இமேஜஸ்