Thursday, September 29, 2011

எனது முதல் காப்பி பேஸ்ட் பதிவு...

முன்னாடி எல்லாம் பிரபல பதிவர்கள்தான் பெரிய பெரிய பத்திரிக்கைல இருந்து காப்பி பேஸ்ட் பண்ணுவாங்க. இப்போத்தான் எல்லாம் மாறிப்போச்சே. நேற்று வந்த பதிவரில் இருந்து பழம் தின்று கொட்டை போட்ட பதிவர்கள் வரை காப்பி பேஸ்ட் போடுகிறார்கள். பெரிய பத்திரிக்கைல இருந்து காப்பி பண்ணதெல்லாம் போயி எங்கே என்ன கிடைக்குதோ சத்தமில்லாம அள்ளிட்டு வந்து போட்டுடுறாங்க. அதுக்கு வர்ர கமெண்ட்டுகள பார்க்கனுமே, அதுக்கே தனிக்கட்டுரை எழுதனும். ஆஹா அருமையான பகிர்வு, நல்ல பகிர்வு, உபயோகமான பகிர்வு நண்பா, சூப்பர் பகிர்வு பாஸ்... கேட்கவே அருமையா இருக்கில்ல? (அடிக்க வராதீங்கண்ணே, நானும் கூட அந்த மாதிரி அப்பாவியா கமெண்ட் போட்டிருக்கேன்....)

சரி அபடியே இந்த ட்ரெண்டை பிக்கப் பண்ணி நாமலும் எதையாவது காப்பி பேஸ்ட் பண்ணலாம்னா எதுவுமே சிக்க மாட்டேங்கிது. ஏது ஏது இப்படியே போனா அப்புறம் காப்பி பேஸ்ட் பண்ணலைன்னு திரட்டிகள்ல இருந்து கூட ஒதுக்கி வெச்சிடுவாங்களோன்னு எல்லாரும் பயமுறுத்துறாங்க. அதுனால விடிய விடிய நின்னுக்கிட்டே யோசிச்சு யோசிச்சு ஒருவழியா முடிவு பண்ணிட்டேன். மனசை திடப்படுத்திக்குங்க. இனி நானும் காப்பி பேஸ்ட் பதிவு போடப்போறேன். எப்படியும் ஒரு காப்பி பேஸ்ட் பதிவு போட்டே ஆகறதுன்னு களத்துல இறங்கி உங்களுக்காக ஒரு அருமையான காப்பி பேஸ்ட்டை இங்கே போட்டிருக்கேன்.

பாருங்க, புடிக்கலேன்னா சொல்லுங்க, நாளைக்கு வேற காப்பி பேஸ்ட் போடுறேன்.....
.
.
.

.
.
..



காப்பி





பேஸ்ட்



என்ன சார் இந்த காப்பி, பேஸ்ட் ஓகேதானே? இத வெச்சிக்கிட்டு எப்படியாவது எனக்கும் ஒரு ரேங் வாங்கிக் கொடுத்துடுங்க சார். அத வெச்சி அண்ணா நகர்ல இல்லேன்னாலும் அமிஞ்சிக்கரைலயாவது ஒரு ஃப்ளாட் வாங்கிடனும்.

நன்றி:  காப்பி பேஸ்ட் பதிவர்கள், கூகிள் இமேஜஸ்...

!

Monday, September 26, 2011

சூடான தலைப்புகளும் ஐடியாக்களும் விற்பனைக்கு....

அன்பார்ந்த வாலிப வயோதிக புதிய பதிவர்களே... நீங்க உடனே பிரபல பதிவர்கள் ஆகனுமா? நீங்க ஏற்கனவே பிரபல பதிவரா? உங்க பதிவுகள் சீக்கிரம் பிரபலமாகனுமா....  எங்க கிட்ட வாங்க...... 

பிரபல திரட்டிகள்ல எப்படி பதிவுகள் உடனே பிரபலமாகுதுன்னு பல மாசங்களா உக்காந்து ஆராய்ச்சி பண்ணி அதுக்கேத்த மாதிரி தலைப்புகள் செலக்ட் பண்ணி வெச்சிருக்கோம். தலைப்பை நியாயப்படுத்துற மாதிரி மேட்டரும் ரெடி பண்ணியாச்சு, அதுனால திரட்டிகள் கூட பதிவை நீக்க யோசிப்பாங்க. நீங்க தைரியமா எங்ககிட்ட தலைப்புகளை வாங்கி களத்துல இறங்கி அடிச்சு ஆடுங்க..!


இன்னிக்காவது அது நடக்குமா?



பிரபல பதிவராகவேண்டுமா? எங்களிடம் வாங்க.......!

தலைப்புகளை வாங்குங்க....  ஹிட்சை அள்ளுங்க.......


கீழ்காணும் பதிவுத் தலைப்புகள் (வித் ஃப்ரீ ஐடியா) விற்பனைக்கு:

1. தினமும் அது முக்கியமா? 
இந்த தலைப்பைப் போட்டுட்டு சாப்பாடு, தண்ணி, டீ, காபின்னு எத பத்தி வேணா எழுதலாம். அவ்ளோ ஈசியான தலைப்பு. ஆனா பதிவு சூப்பர் ஹிட்டாகிடும் அது மட்டும் கன்பர்ம்.

2. அதை பிடிக்கவில்லையா?
கேரட் ரொம்ப சத்தான காய், ஆனா அதைப் பிடிக்கலேன்னா பீட் ரூட்டை பயன்படுத்துங்கன்னு நேக்கா பதிவை போட்டுட்டு சட்டுப்புட்டுன்னு பிரபலமாகிடலாம்.

3. பெண்களும் அதுக்காக காத்திருப்பார்களா?
இப்போ பெண்கள் துணிவாங்க போனா நாம காத்திருக்கிறோம், ஆனா நாம வாங்கப் போனா அவங்க காத்திருப்பாங்களா? எப்படி தலைப்புக்கு மேட்சா மேட்டர் ரெடியா? இத மட்டும் போட்டுப் பாருங்க, அப்புறம் நீங்க எங்கேயோ போய்டுவீங்க....

4. ஹன்சிக்காவை காதலிக்க மறுத்த பதிவர்
அந்த பிரபல பதிவர் ஹன்சிக்காவ காதலிக்க முடியாதுன்னுட்டார் ஏன்னா அவருக்கு அஞ்சலி மட்டும்தான் புடிக்குமாம்னு எழுதிடலாம். அப்புறம் ஹிட்ஸ் கொட்டோ கொட்டுன்னு கொட்டிடாது?

5. தமிழர்கள் செய்வது சரியா?
தமிழர்கள் எத்தனையோ அக்கிரமம் செய்றோம் கொஞ்சம் நஞ்சமா ஈசியா எதையாவது ஒண்ணை எடுத்துப் போட்டு ஒப்பேத்திடலாம், ரோட்ல எச்சி துப்புறது, ஒண்ணுக்கு போறது, பிட்டுப்பட போஸ்டர் பாத்துக்கிட்டே வண்டி ஓட்டறதுன்னு எதையாவது போட்டு சமாளிச்சிக்கலாம். இல்லேன்னா கொஞ்சம் காரமா அரசியலை தூவி விட்டு வெள்ளாடலாம். அப்படியே சீரியசா நாலு கமெண்ட் வரும், அதுக்கு பதில் சொல்லி இமேஜை டெவலப் பண்ணிக்கலாம்.

6. அணைப்பதற்கு அது வேண்டுமா?
இந்த தலைப்புக்கு லைட்டை அணைப்பதற்கு சுவிட்ச் வேணுமான்னு எழுதி ஜமாய்ச்சிடலாம்.

7. நடு இரவில் கதற கதற...
செம தலைப்புல்ல? நடு இரவுல கதற கதற மூட்டைப் பூச்சிய நசுக்குனேன்னு வெலாவாரியா நாலு பாராவுக்கு எழுதிட்டீங்கன்னா அப்புறம் பாருங்க ஹிட்சை.... சர்வரே பிச்சுக்கும்...........!


இதுல ஏதாவது ஒண்ணை செலக்ட் பண்ணி பதிவா போட்டீங்கன்னா நீங்களும் உங்க பதிவும் பிரபலமாகுவது கன்பர்ம். அப்படி பிரபலம் ஆகலேன்னா உடனடி பணம் வாபஸ்......!

உடனே உங்கள் தலைப்புகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.... இன்னும் சில தலைப்புகளே மீதம் உள்ளது. அனைத்து தலைப்புகளையும் புக் செய்பவர்களுக்கு ஒரு ப்ளாக் இலவசம். 

அணுக வேண்டிய முகவரி:
சிர்ப்பு போலீஸ் ரமேஷ் - ரொம்ப நல்லவன் (சத்தியமா) வேறெங்கும் கிளைகள் கிடையாது....!


எச்சரிக்கை: பின் விளைவுகள் மோசமாக இருக்கலாம், இருந்தாலும் நிர்வாகம் பொறுப்பேற்காது...!


!


Friday, September 23, 2011

அய்யா விளம்பரதாரர்களே.....




இப்பல்லாம் டீவின்ன உடனே சீரியல்கள் ஞாபகத்துக்கு வருதோ இல்லியோ, விளம்பரங்கள் தான் ஞாபகத்துக்கு வருது. முன்னாடியெல்லாம் அரைமணிநேரத்துக்கு ஒரு தடவை நிகழ்ச்சி மாறும் போதுதான் விளம்பரம் போடுவாங்க. இப்போ கால்மணி நேரத்துக்கு ஒருவாட்டி வந்துடுது. அதுவும் விளம்பரத்துக்கு மட்டும் டபுள் சவுண்டு வேற வச்சு. இவனுங்க ஓவரா பண்றதால நல்ல வெளம்பரங்கள் கூட பாக்கறதுக்கு எரிச்சலா இருக்கு. அதுலயும் சில விளம்பரங்கள் பண்ற அக்கிரமம் இருக்கே, தாங்க முடிலப்பா. ஒரு முட்டாய சாப்புட்டா அடுத்தவன் பொண்டாட்டி ஓடிவருவான்னு ஒரு வெளம்பரம், ஒரு கிரீம் போட்டுட்டு போனா வேலை கெடைக்கும்னு ஒரு வெளம்பரம், அவங்க பானத்தை குடிச்சா புள்ளைங்க ஒசரமா வளர்ந்துடும்னு ஒரு வெளம்பரம்..... என்ன கருமாந்திரம் சார் இது?

அப்புறம் இந்த சன் பிக்சர்ஸ் போடுறது எல்லாம் வெளம்பரம்னு சொல்ற லிமிட்டை தாண்டிட்டதால அதை பத்தி எதுவும் சொல்றதுக்கில்லீங்கோ....

TMT கம்பிகள்
டீவி பார்க்கிற எல்லாருக்குமே கொஞ்சநாளாவே இந்த கம்பிக் கம்பேனிகள் பண்ற டார்ச்சர் பத்தி தெரிஞ்சிருக்கும். டிஎம்டி கம்பின்னா அது என்ன சோப்பா... இல்ல முட்டாயா... வெளம்பரத்த பாத்த உடனே கடைல போய் வாங்கிட்டு வர? ஒருவேள மக்கள் வெளம்பரத்த பாத்துட்டு அவங்க காண்ட்ராக்டர், எஞ்சினியர்கிட்ட எங்களுக்கு இந்த கம்பிதான் வேணும்னு அடம்பிடிக்கனும்னு எதிர்பார்க்கிறாய்ங்களா?  ங்கொய்யால இந்த வெளம்பரத்துக்கு நமீதா வேற. சின்னப்பசங்க யாராவது எனக்கு அந்த டிஎம்டி கம்பி வாங்கித்தான்னு வீட்ல அடம்புடிக்காம இருந்தா சரி.

பனியன்ஸ்
அப்புறம் இந்த பனியன் போட்ட சனியன்கள் இருக்கானுகளே, அதாங்க பனியன் வெளம்பரங்களைத்தான் சொல்றேன். இவனுங்க பனியனை போட்டுக்கிட்டு ஒருத்தரு குதிப்பாராம், பிகரு அதை பாத்து செட் ஆகுமாம். ங்கொய்யால அந்தாளு ஜிம்மு போய் பாடிய கன்னாபின்னான்னு டெவலப் பண்ணி வெச்சிருப்பான், பிகரு அதை பாத்துட்டு செட்டாகுனா, இவனுக என்னமோ அந்த பனியனை பார்த்துட்டு பிகர் வந்த மாதிரியே பில்டப் கொடுப்பானுக.... அதவிடுங்க நல்ல வேள வெளம்பரத்த பாத்துட்டு இதுவரை எவனும் அந்த கம்பேனி பனியனை மட்டும் போட்டுக்கிட்டு பஸ்ஸ்டாப்ல போய் நிக்கல.....!

சோப்பு
ஒரு சோப்பு அதுவும் மூலிகை சோப்பாம், அது 10 ஸ்கின் ப்ராப்ளத்தை தடுக்குதாம். அதுனால புள்ளைங்க இஷ்டம் போல எங்க வேணா எதுல வேணா வெள்ளாடலாமாம். நானும் டெய்லி பார்க்கிறேன் ஒருநாள் கூட அந்த 10 ப்ராப்ளமும் என்னன்னு சொன்னதே இல்ல. அந்த சோப்பு யூஸ் பண்ணாதவங்களுக்கு அந்த 10 ஸ்கின் ப்ராப்ளம் வருமான்னு தெரியல. யாருக்காவது வந்துச்சுன்னா சொல்லுங்க சார், அப்பவாவது அது என்னென்னன்னு தெரிஞ்சுக்கிறேன்.

டூத்பேஸ்ட்
அந்த டூத்பேஸ்ட்ல பல்லுவெளக்கிட்டு போய் ”ப்பூ” னு ஊதுனா பிகர் செட்டாகிடுமாம். ஒருவேள அதுல வயாகரா மாதிரி சமாச்சாரம் எதுவும் கலக்குறானான்னு தெரியல. பின்ன எப்படி சார், பல்லுவெளக்கிட்டு போய் ஊதுனா பிகர் செட்டாகும்னா என்னத்த சொல்றது? நம்ம பசங்க பல பேரு பல்லே வெளக்காம ஏகப்பட்ட பிகரு வெச்சு மெயிண்டெயின் பண்றானுங்களே அது எப்பூடி?

சோப்பு, சேம்பு, க்ரீம், டூத்பேஸ்ட், பனியன், ஜட்டி, சாக்லேட்டு, மிட்டாய், ஷேவிங் ரேசர்.... இது எல்லாத்துக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா? இதுல எதை நீங்க யூஸ் பண்ணாலும் உங்களுக்கு உடனே பிகர் செட்டாகிடும். அதுனால கல்யாணமானவங்க எல்லாரும் ரொம்ப ஜாக்கிரதையா இந்த பொருள்களை யூஸ் பண்ணுங்க சார்!

பல்பொடி
இப்பல்லாம் பல்பொடி வெளம்பரங்கள் அதிகம் வர்ரதில்ல. பல்பொடி வெளம்பரம்னாலே பெரிய பயில்வான் தான் வருவாரு. பயில்வான்களுக்கும் பல்பொடிக்கும் அப்படி என்னய்யா சம்பந்தம்? நானும் எப்படியெல்லாமோ ரோசன பண்ணி பார்த்தும் ஒரு எழவும் புரியல. யாராவது வெளங்குனவங்க சொல்லுங்க சார்.

நகைக்கடைகள்
என்ன மாயம்னே தெரியல 2-3 வருசத்துல தமிழ்நாட்டுல மூலை முடுக்குலாம் பெரிய பெரிய நகைக்கடைகள் வந்துடுச்சு. அதுவும் எல்லாம் ஒரே மாதிரி பேர் வெச்சுக்கிட்டு (பங்காளிங்க போல....) தமிழ்நாட்டை குறிவெச்சு களத்துல இறங்கி இருக்காங்க போல. இப்படியே போனா இன்னும் கொஞ்ச நாள்ல தமிழ்நாட்ல டீக்கடைகளைவிட நகைக்கடைகள்தான் அதிகமா இருக்க போவுது. என்னமோ போங்க சார், தங்கம் விலைதான் கூடுதுதே தவிர வாங்குறது கொஞ்சங்கூட குறைஞ்ச மாதிரி தெரியல.

ஊர்ல யாரைக்கேட்டாலும் விலைவாசி கூடுது விலைவாசி கூடுதுன்னு பொலம்புறாங்க, கடைத்தெரு பக்கமா போய் பாத்தா அப்படி எதுவும் தெரியல. சூப்பர் மார்க்கெட்டுகள், எலக்ட்ரானிக் ஷோரூம்கள், ஜவுளிக்கடைகள் எங்கேயும் உள்ள நுழையவே முடியாத அளவுக்கு கூட்டமா இருக்கு. இது என்ன பொருளாதார சூழல்னு ஒரு எழவும் புரியல. ஒருவேள எல்லாரும் ரேசன் அரிசில கஞ்சி காய்ச்சி குடிச்சு வருமானத்த மிச்சம் புடிச்சி எஞ்சாய் பண்றாய்ங்களா..... என்னப்பா நடக்குது?

சரி ஒரு நல்ல வெளம்பரத்த பார்த்துட்டு ரிலாக்ஸ் ஆகுங்க.... (இது பாடகி ஷ்ரேயா கோசலோட முதல் வெளம்பரமாம்....)




நன்றி: கூகிள் இமேஜஸ் மற்றும் யூடியூப்!


!

Wednesday, September 21, 2011

ஒலக மகா அறிவாளிகள் ரமேசும் டெரர் பாண்டியனும்....



இன்னிக்கு நம்ம வாசிப்ப கேட்டுட்டுத்தான் போகனும்ம்ம்.......




வழக்கம் போல சிங்கப்பூர் போரேன்னு பீலா விட்டுட்டு சிரிப்பு போலீஸ் ரமேஷ் ஏர்போர்ட்ல நின்னு பதட்டமா லேப்டாப்ப குடஞ்சுக்கிட்டு இருக்கார். வழியனுப்ப வந்த டெரர் பாண்டியன் அதை பாத்துட்டு...

டெரர் பாண்டியன்: டேய் இன்னேரத்துல என்னடா லேப்டாப்பு...? சீக்கிரம் உள்ள போடா கவுண்ட்டர் க்ளோஸ் பண்ணிட போறான்...

ரமேஷ் : உள்ள போய்ட்டுத்தான் வாரேன், லக்கேஜ் 1 கிலோ அதிகமா இருக்காம், உள்ள விட மாட்டரான்...

டெரர் பாண்டியன் : அதுக்கு லேப்டாப்ல என்னடா பண்றே?

ரமேஷ் : வெயிட் கம்மி பண்ணத்தாண்டா லேப்டாப்ல இருந்து எல்லாத்தையும் டெலிட் பண்ணிட்டு இருக்கேன்.....

டெரர் பாண்டியன் : %^*&%$%$#!!!!!!..................


******************************************************************************************************

டேமேஜர்: மிஸ்டர் பாண்டி, உடனே a + b = a க்கு ஒரு ப்ரோகிராம் எழுதனும், எவ்ளோ நேரத்துல ரெடி பண்ணுவீங்க?

டெரர் பாண்டியன் : எப்படியும் ஒரு வாரம் ஆகும் சார்....

டேமேஜர்: நோ நோ.... ஒருநாள்தான் டைம், உடனே முடிச்சு குடுங்க....
.

.
.


SweetQueen : Hi

டெரர் பாண்டியன் : Hi, ASL Pls......

SweetQueen : 21, F, France


டெரர் பாண்டியன் : Vow.. I like u......

SweetQueen : me too.......mmmmaaa........soooo sweeeet.......


டெரர் பாண்டியன் : tx..... pls send ur photo

SweetQueen : Hey I have a problem......


டெரர் பாண்டியன் Oh.... tell me ya......

SweetQueen : I want a program for a + b = a urgently....


டெரர் பாண்டியன் : dont worry...... I will give u in 10 min
.

.
.
.

டேமேஜர் :
 மிஸ்டர் பாண்டி....கொடுங்க அந்த ப்ரோகிராமை......


டெரர் பாண்டியன் சார் அது வந்து........

டேமேஜர்: யோவ் சும்மா கொடுய்யா... நான் தான் அந்த ஸ்வீட்குயீன்..


டெரர் பாண்டியன் : ????!!!????


******************************************************************************************************


இது டெரர் படிக்கிற காலத்துல நடந்தது

ரமேஷ் :  ஏன்டா நேத்து டெஸ்ட்டுக்கு வரல?

டெரர் பாண்டியன் : டேய்ய்..... நீங்கதான்டா எவனுமே வரல............ காலைலேயே, பேட்டு, கிளவுசு எல்லாம் எடுத்துட்டு போய் எவ்ளோ நேரம் கிரவுண்ட்லேயே வெயிட் பண்ணேன் தெரியுமா? அம்பையர் வாத்தி கூட வரல....

டெரர் பாண்டியன் : அட நாதாரி. அது கிரிக்கெட் டெஸ்ட்டு இல்ல.. எக்சாம்டா...... ராஸ்கல்....


******************************************************************************************************


டெரர் பாண்டியன் : என்னடா நேத்து இண்டர்வியூ போனியே என்னாச்சு?

ரமேஷ் : ப்ச்.... ஊத்திடுச்சுடா...... விரட்டிவிட்டுட்டாங்க...

டெரர் பாண்டியன் : ஏன்டா........ இண்டர்வியூ நல்லதானே பண்ணே?

ரமேஷ் : இண்டெர்வியூலாம் சூப்பரா பண்ணேன் மச்சி..

டெரர் பாண்டியன் அப்புறம் ஏன்..? சரி விடு... இண்டர்வியூல என்ன கேட்டாங்க?

ரமேஷ் : ஒரே ஒரு கேள்விதான்... கோழி ஃபர்ஸ்ட் வருமா முட்டை ஃபர்ஸ்ட் வருமான்னு கேட்டாங்க.....

டெரர் பாண்டியன் : நீ என்ன சொன்னே?

ரமேஷ் : எது ஃபர்ஸ்ட் ஆர்டர் பண்ணீங்களோ அதுதான் ஃபர்ஸ்ட் வரும்னு சொன்னேன்

டெரர் பாண்டியன் : ??!!??!!......


******************************************************************************************************


டெரர் பாண்டியனும் ரமேசும் ஆளுக்கொரு டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வாங்குனாங்க. வண்டில வெக்கிறதுக்காக தூக்கிட்டு போனாங்க


டெரர் பாண்டியன் : என்னடா இத தூக்க இவ்ளோ கஷ்டப்படுற? பாரு நான் எவ்ளோ ஈசியா தூக்கிட்டு வாரேன்னு.....

ரமேஷ் : டேய்.... உன்து 250 GB, என்து 500 GB, அதான் எனக்கு தூக்க முடில...

டெரர் பாண்டியன் : போடாங்...................................


******************************************************************************************************


நம்ம ரமேஷ் புதுசாவாங்கிட்டு போன கம்ப்யூட்டர்ல ஒரு சின்ன ப்ராப்ளமாம்... உடனே கடைக்கு போய்ட்டார்.

ரமேஷ் : சார் இந்த கம்ப்யூட்டர்ல ஒரு முக்கியமான புரோகிராம் இல்ல.

சேல்ஸ்மேன்: உங்களுக்கு என்ன புரோகிராம் வேணும்?


ரமேஷ் : லெட்டர் டைப் பண்றதுக்கு ஒர் ப்ரோகிராம் வேணும்..

சேல்ஸ்மேன்: அதான் MS-WORD இருக்கே?


ரமேஷ் : அத வெச்சி எப்படி சார் லெட்டர் அடிக்க முடியும்? எனக்கு MS-Letter போட்டுக் கொடுங்க..

சேல்ஸ்மேன்: ??!!???





எனக்கு மட்டும் ஏன்யா இப்படி நடக்குது....?

நன்றி: கூகிள் இமேஜஸ்...!

Monday, September 19, 2011

டாகுடரின் நண்பன் படம்.... (இது விமர்சனமல்ல...!)




நண்பன் படம் முடிவடையற கட்டத்த நெருங்கிடுச்சு. ஷங்கரும் நம்ம டாகுடரும் இணையற முதல் படம். ஒரு பெரிய டைரைக்டர் படத்துல டாகுடர் நடிக்கிறார்னு பயங்கர எதிர்பார்ப்பு. படம் எப்படி இருக்குமோ என்னவோன்னு எல்லாருக்கும் டென்சனோ டென்சன். நாம இருக்கும் போது உங்களுக்கு அந்த டென்சன் எதுக்குங்கறேன்? 

வழக்கமா ஷங்கர் படத்துல அவர் என்னதான் ஒரே கதைய வெச்சு படம் எடுத்தாலும் என்னமோ யாருமே எடுக்காத கதைய எடுக்க போற மாதிரியே படம் ரிலீஸ் ஆகுற வரைக்கும் எல்லாத்தையும் படு சீக்ரெட்டா வெச்சி டார்ச்சர் பண்ணுவாய்ங்க. ஆனா இந்த வாட்டி ரீமேக் படங்கறதால அந்த கொடுமைல இருந்து தப்பிச்சிட்டோம். கதை மேட்டர் ஓகே, அடுத்து, ஷங்கர் ஒரு படத்த எப்படி எடுப்பார்னு நமக்கு தெரியும். டாகுடர் படங்கள் எப்படி இருக்கும்னும் தெரியும். சோ இப்ப படத்த நாமளே ரிலீஸ் பண்றோம்... ஓகேவா...?



ஓப்பனிங் சீன்...

காலேஜ் மொத நாள் வகுப்புகள் ஸ்டார்ட் ஆகுது. ஓப்பனிங் சீன்ல காலேஜ் கேட் 50 அடி உயர கேட்.. லோ ஆங்கிள்ல..... டாகுடர் ஒரே ஒரு நோட்புக்கோட வந்திட்டிருக்கார். ஷூவுல இருந்து நெருப்பு வந்து விழுகுது... கேட் பக்கத்துல வந்த உடனே கேட் தன்னால திறக்குது. வாட்ச்மேன் அப்படியே வாய பொளந்து சல்யூட் அடிக்கிறான். டாகுடர் அப்படியே அவர் ஸ்டைல்ல அவனுக்கு வணக்கம் வெச்சிட்டு அப்படியே வலதுகாலை உயரமா தூக்கி உள்ள வெச்சு போறார். பறவைகள்லாம் சிதறி ஓடுது. உடனே ஓப்பனிங் சாங்.


புளி உறுமுது புளி உறுமுது.....ன்னு போட்டு பின்னிப் பெடலெடுக்கிறார் டாகுடர்.


காலேஜ் உள்ள போன உடனேயே நேரா கேண்டீன் தான் இருக்கு. கேண்டீன்ல பாத்தா 100 டேபிள், 400 சேர் போட்டிருக்கு. சுவர் பூரா எல்சிடி டீவி, தரையெல்லாம் கண்ணாடி (ஷங்கர் படத்துல இது கூட இல்லேன்னா எப்படிங்க?)

அங்க ரெண்டு பேரு உக்காந்து கஞ்சா அடிச்சிட்டு இருக்கானுக. டாகுடரை பார்த்ததும் கூப்பிட்டு ராகிங் பண்றானுங்க. பாக்கெட்டுல இருந்து காசை புடுங்குறானுங்க... டாகுடர் மூணாவது அடி வாங்குனதும் சீறிப்பாய்ஞ்சு சண்டைய தொடங்குறார். சண்டைன்னா சண்ட செம சண்ட. எல்லா ஸ்டூடன்சும் சுத்தி நின்னு வேடிக்கை பாக்கிறாங்க. எல்லா டீவிகளும் உடைஞ்சதும் டாகுடர் காலேஜ் ட்ரெய்னேஜ், செப்டிக் டேங்க் எல்லாம் புல்லா சுத்தி சுத்தி சண்ட போட்டு அவனுகளை விரட்டுறார்.

சண்டை முடிஞ்சு அப்படியே மடிப்புக் கலையாம அவர் க்ளாசுக்கு போறார். அங்க சத்தியராஜ்தான் ப்ரொபசர். ஏம்பா ஃபர்ஸ்ட் நாளே இப்படி லேட்டான்னு கேக்குறார். அப்பவே டாகுடருக்கு அவரை புடிக்காம போயிடுது. 

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவாரு சூப்பர் ஸ்டாரு.... லேட்டா வந்தாலும் வேஸ்ட்டா வருவான் இந்த கில்லி ஸ்டாருன்னு புரொபசருக்கே பஞ்ச் வெக்கிறார். புரொபசரும் வேற வழியில்லாம டாகுடரை கிளாசுக்குள்ள விடுறார். பாத்தா எல்லா பெஞ்சும் புல் (பின்ன கடைசியா வந்தா?). ஒரு பெஞ்ச்ல ஸ்ரீகாந்தும் ஜீவாவும் இருக்காங்க, அங்க ஒரு இடம் காலியா இருக்கு.

டாகுடர் அவங்க ரெண்டு பேர் கூடவும் ஹாய் சொல்லி கை கொடுக்கிறார். அப்படியே ஃப்ரீஷ் பண்ணி கேமரா சுத்தோ சுத்துன்னு சுத்தி பாட்டுக்கு போய்டுது. மூணு பேரும் ஜாலியா பாட்டுபாடுறாங்க. ஒண்ணா அருவில குளிக்கிறாங்க. டவுசரை புடிச்சி இழுத்து வெள்ளாடுறாங்க. ஆம்லேட் போட்டு சாப்புடுறாங்க, காப்பி குடிக்கிறாங்க. பீச்ல சோளம் வாங்கி திங்கிறாங்க., உலகத்துலே யாருமே போகாத சிட்டிக்கு போய் கலர் கலரா ஆட்டம் போடுறாங்க....




சாங் முடிஞ்சதும் பாத்தா புரொபசர் க்ளாஸ்ல இவங்க மூணு பேரையும் முறைச்சு பாத்துட்டிருக்கார். உடனே டாகுடரை எழுப்பி பாடத்துல இருந்து கேள்வி கேட்கிறார். டாகுடருக்கு கோவம் வந்துடுது. 

நாங்கள்லாம் நெனச்சா முடிப்போம்
முடிக்கிறதத்தான் நெனப்போம்....

டேய் இப்ப நீ எதுக்கு சம்பந்தமே இல்லாம உளறுரே?

மொத நாளாச்சேன்னு பாக்கிறேன்.. இல்லேன்னா...

இல்லேன்னா என்னடா பண்ணுவ?

எனக்குள்ள ஒரு போலீஸ்காரன் இருக்கான், அவன் உன்ன பாத்த உடனே முழிச்சிட்டான். இனி அவன்கிட்ட இருந்து நீ தப்பமுடியாது.....

கடுப்பான ப்ரொபசர் வெளிய விரட்டிவிடுறார். அதை பார்த்து ஒரு அம்மாஞ்சி பையன் (நம்ம சத்தியராஜ் சொந்தக்கார பையன் சத்தியன்தான்) கைத்தட்டுறான். வெளிய வந்தப்புறம் தான் தெரியுது அவர்தான் அந்த காலேஜ் பிரின்சிப்பால்னு. மூணு பேரும் காலேஜ் புல்தரைல படுத்துட்டு கவலையா யோசிக்கிறாங்க.

ஜீவா கேட்கிறார், மச்சி இப்ப என்னடா பண்றது, வந்த மொத நாளே பிரின்சிப்பாலை பகைச்சுக்கிட்டோமேன்னு, டாகுடருக்கு மறுக்கா கோபம் வந்துடுது, டேய் நான் ஒருதடவ சொல்லிட்டா அப்புறம் என் பேச்சை நானே கேட்கமாட்டேன்னு தெரியும்ல... அப்புறம் ஏன்டா அதையே பேசிட்டு இருக்கீங்கன்னு கொந்தளிக்கிறார். 

அப்போ அந்த வழியா பிரின்சிப்பால் பொண்ணு இலியானா (அது என்ன கருமாந்திர லாஜிக்கோ தெரியல, எல்லா படத்துலேயும் ஹிரோக்கள் வில்லனோட பொண்ணையோ தங்கச்சியவோதான் லவ் பண்ணி தொலைப்பானுங்க...) ஒய்யாரமா டாகுடரை பார்த்து சிரிச்சபடியே ஸ்டைலா நடந்து போகுது.டாகுடர் எந்திரிச்சு உக்காந்து ரசிக்கிறார். அப்போ ஜீவா ஓவரா பாக்காதே அது பிரின்சிப்பால் பொண்ணுன்னு எச்சரிக்கிறார். உடனே ஸ்ரீக்காந்து, டேய் நீ சும்மா இரு, மச்சி இந்த பொண்ணை நீ லவ் பண்றா, அத வெச்சே அந்த பிரின்சிப்பாலை பழிவாங்கிடலாம்னு சொல்றார். டாகுடருக்கு டவுட்டு, அது எப்படிடா நான் லவ் பண்றதுக்கும் பிரின்சிப்பாலை பழிவாங்கறதுக்கும் சம்பந்தம்னு கேட்கிறார். டேய் மச்சி உன்னையெல்லாம் லவ் பண்ணா அந்த பொண்ணு லைஃப் சீரழிஞ்சிடும்ல? அதுக்கு மேல என்ன வேணும்னு ஸ்ரீக்காந்த் கேட்கவும் டாகுடர் ரொமாண்ட்டிக் மூடுக்கு போறார்.

உடனே புளிச் பண்ண முடிய ஸ்டைலா கோதியபடி கெளம்பி போய் நேரா இலி முன்னாடி போய் நிக்கிறார். வாய்க்குள்ள கோலிக்குண்ட போட்டு கொதப்பிக்கிட்டு ஸ்டைலா ஒரு பார்வை பாக்கிறார். அதை பாத்த உடனேயே இலிக்கு பத்திக்கிது....... உடனே டூயட்டுக்கு ஓடிடுறாங்க. ஆப்புரிக்காவுல இருக்கும் தான்சானியா நாட்டுக்கு நடுவுல 5000 அடிக்கு கீழ இருக்கும்  யாருமே பார்க்காத சுரங்கத்துக்குள்ள வெச்சு டூயட். பளிச்னு சூப்பரா. டாகுடர் கார்கோ பேண்டும், ஒரு டீஷர்ட்டும் போட்டுட்டு வந்து எங்கே ட்ரெஸ்சுக்கு வலிச்சிடுமோன்னு பயந்து பயந்து மெல்லமா ஆடுறார்.




பாட்டு முடிஞ்சதும் படம் படுசீரியசாகிடுது. (பின்ன படத்த முடிக்க வேணாமுங்களா?) டாகுடரும் இலியும் லவ்வுறதை சத்தியன் பாத்துடுறார். அவருக்கு இலி அவரை அவமானப்படுத்தியது நினைவுக்கு வருது.  உடனே பிரின்சிப்பால் கிட்ட போட்டுக்கொடுக்கிறார். பெத்த பொண்ணு ஒரு உதவாக்கரை பயல லவ் பண்ணுதுன்னா எந்த அப்பன்தான்யா சும்மா இருப்பான்? பிரின்சிப்பால், நண்பர்கள் மூணுபேரையும் முடிச்சிக்கட்ட முடிவு பண்றார்.

அத தெரிஞ்சுக்கிட்ட டாகுடர் இலிய தூக்கிட்டு வந்துடுறார். பிரின்சிப்பால் பயங்கர கோபமாகி மூணு பேரையும் டிஸ்மிஸ் பண்ணிடுறார். காலேஜை விட்டு வெளிய வந்த ஸ்ரீக்காந்த் அப்படியே சைக்கிள் கம்பேனியில் நல்ல பொசிசனில் அமருகிறார். (அட உக்காருவதத்தான்யா சொல்றேன்...). ஜீவா அவருக்கு புடிச்ச ஹாபியான குட்டிச்சுவத்துல உக்காந்து அட்டு பிகர்களை சைட் அடிக்கும் வேலைக்கே போயிடுறார். நண்பர்கள் ஆசை, கனவு லட்சியம் எல்லாம் நிறைவேறுனதை பார்த்து டாகுடர் பெருமிதத்தோட கண்கலங்குறார். 

ஃப்ளாஷ் பேக் முடியுது. ஜீவாவும், ஸ்ரீக்காந்தும் கிருதாவுல சுண்ணாம்பு பூசிக்கிட்டு, ஆளுக்கொரு தடி கண்ணாடியும் போட்டுக்கிட்டு டாகுடரை தேடி வர்ராங்க. அவங்க கூட இப்போ தொழிலதிபர் ஆகிட்ட சத்தியனும் சேர்ந்துக்கிறார். உலகத்துலேயே ஒரு முக்கியமான தொழில் ஃபார்முலாவை கண்டுபுடிச்ச புளாசுளாக்கிங்கற சைன்டிஸ்ட்டை பாத்து ஒப்பந்தம் போடனும்னு அவருக்கு ப்ளான். அப்படியே டாகுடரையும் பார்த்து வாழ்க்கைல ஜெயிச்சிட்டேன்னு சொல்லிட்டு போய்டலாம்னு முடிவு பண்ணி போறாரு. 

அங்க போய் பார்த்தாதான் தெரியுது அது டாகுடர் இல்லன்னு, நம்ம டாகுடர் நெஜமா ஒரு கிராமத்துல எரும மேய்ச்சிட்டு இருக்கறவர்னு தெரிஞ்சுக்கிறாங்க. அவரை உடனடியா போய் அவர் குடிசைலயே மீட் பண்றாங்க. தொழிலதிபர் சத்தியன், டாகுடர் தோத்துட்டதா ஒத்துக்கிட்டு கையெழுத்து போடனும்கறார்.   கையெழுத்துப் போடும்போதுதான் தெரிய வருது நம்ம டாகுடர்தான் அந்த சைன்டிஸ்ட் புளாசுளாக்கின்னு. அவரு கண்டுபுடிச்சதுதான் அந்த கள்ள நோட்டு அடிக்கிற ஃபார்முலா. சத்தியன் அங்கேயே கால்ல விழுந்து அந்த ஃபார்முலாவ வாங்கிட்டு போறாரு. நண்பர்கள் கண்ணீரோட நெகிழ்ச்சியா இதை பார்த்துட்டு நிக்கிறாங்க. அப்போ பின்னால குடிசைக்குள்ள இருந்து இலி வந்து வெக்கத்தோட டாகுடர் பக்கத்துல நிக்கிறாங்க...... அப்படியே எல்லாரும் சிரிக்கிறாங்க........ படமும் முடியுது.....

எப்பூடி... நம்ம டாகுடர் படத்த உங்க எல்லாரையும் பார்க்க வெச்சிட்டம்ல.............?

நன்றி: கூகிள் இமேஜஸ்...


!

Wednesday, September 14, 2011

பூமியைத் தேடி... தொடர்கதை..




அறிவியல், குறிப்பா வானியல் சம்பந்தப்பட்ட விஷயங்களை படிப்பதிலும் விவாதிப்பதிலும் எனக்கு எப்பவுமே ஆர்வம் உண்டு. வானியலில் இன்னும் அவிழ்க்கப்படாத மர்மங்கள் ஏராளம். நம்மால் நினைத்துப் பார்க்கவே முடியாத பிரம்மாண்டங்களை வானவெளி தன்னில் கொண்டிருக்கிறது. இந்த அண்டவெளியில் பூமியும், மனிதனும் ஒரு தூசியின் அளவு கூட முக்கியத்துவம் இல்லாதவையாக தோன்றக் கூடிய மாபெரும் பிரம்மாண்டம் அது.  எத்தனையோ பில்லியன் நட்சத்திரங்களும், கேலக்சிகளும்,  கருந்துளைகளும்.... மனிதனின் தொலைநோக்கு சக்தி அதிகரிக்க அதிகரிக்க அண்டவெளியின் முடிவிலா எல்லையை நோக்கி நம் பார்வை விரிவடைந்து கொண்டே போகிறது. 

அதில் சில கற்பனைகளை சேர்த்து ஒரு கதையாக எழுத வேண்டும் என்ற ஆவல் ப்ளாக்கரில் நுழைந்த காலத்தில் இருந்தே இருந்து வந்தது. இப்போது அதை செயல்படுத்தி இருக்கிறேன். இந்தத் தொடரை டெரர் கும்மி ப்ளாக்கில் எழுதுகிறேன். இது Hunt for Hint என்ற புதிர் போட்டி நடத்தப்பட்டதே அந்த ப்ளாக்தான். லிங் கொடுத்திருக்கிறேன், ஆர்வமுள்ளவர்கள் சென்று படித்து, கருத்தும் கூறலாமே. இங்கே நம்ம கடையில் வழக்கம் போல் நகைச்சுவை, நக்கல் பதிவுகள் தொடரும். 

!

Saturday, September 10, 2011

இந்த பதிவர்கள் தொல்ல தாங்க முடிலடா சாமி......




வரவர தமிழ்மணம் பக்கம் போகவே பயமா இருக்கு சார். இப்போ வர்ர பதிவுகளோட தலைப்பெல்லாம் பாத்தா உடனே பதறிப்போய் ஓப்பன் பாக்கற மாதிரியே இருக்கு. உள்ள போய் பாத்தா சம்பந்தமே இல்லாம என்னென்னமோ மொக்கையா... என்னத்த சொல்ல? இப்படி எத்தன வாட்டிதான் பல்பு வாங்கறது? இதப் பாத்தா பஸ் ஸ்டாண்டு பொட்டிக்கடைகள்ல பேப்பர் தலைப்புகளை பாத்துட்டு பேப்பரை வாங்கி படிச்சு நொந்து போய் பேப்பர்ல பஜ்ஜிய கசக்கி தூக்கி போடுறதுதான் ஞாபகம் வருது. மொக்க போடவேண்டியதுதான், இங்க நிறைய பேரு அதான் பண்ணிட்டு இருக்கோம் அதுக்காக ஏன் சார் இப்படி தலைப்புலேயே கொல்றீங்க?




அப்புறம் இன்னொரு குரூப்பு இருக்கானுக, இவனுங்க ஈ-மெயில்லேயே கொல்வானுங்க...... அதுவும் 100- 200 பேருக்கு ஒண்ணா அனுப்புவானுங்க. முன்னபின்ன தெரியாத ஆளுகளுக்கு வரிசையா சரமாரியா எப்படித்தான் மெயில்ல இப்படி அதுவும் ப்ளாக் லிங்க போட்டு அனுப்புறானுங்களோ? டூ அட்ரஸ்லேயே 50-100 பேர் அட்ரசை போட்டு bcc கூட போடாம அப்படியே வேற அனுப்புறாங்க........ இதாவது பரவால்ல... சிலபேரு அதை அப்படியே செயினா மாத்தி வரிசையா ரிப்ளை டூ ஆல் போட்டு ஆளாளுக்கு என் பதிவுக்கு வாங்க என் பதிவுக்கு வாங்கன்னு மாத்தி மாத்தி அடிச்சி இன்பாக்சை கொத்து பரோட்டா பண்ணி வெச்சிடுறாங்க...... 

எல்லாத்தையும் விட ஹைலைட்டு, அதிலேயும் ஒருத்தரு எனக்கு யாரும் மெயில் பண்ணாதீங்கன்னு ரிப்ளை டூ ஆல் போட்டாரு பாருங்க.......  ங்கொய்யால....... இதுல இன்னொருத்தரு நீ யார்ரா எனக்கு மெயில் பண்றதுக்கு, எப்படிரா என் மெயில் ஐடி உனக்கு கெடச்சதுன்னு ரிப்ளை டூ ஆல் போட்டு குமுறுறாரு........ எல்லா கன்றாவியையும் நானும் வேற படிச்சு....  என்ன கொடும சார் இது..............?   நான் கூட ஆரம்பத்துல 2-3 மெயில்கள் ப்ளாக் லிங் வெச்சு அனுப்பி இருக்கேன், எல்லாம் bcc போட்டு, அதுவும் தெரிஞ்சவங்களுக்கு மட்டும். அப்புறம் அதுவும் சரி இல்லைன்னு விட்டுட்டேன்.




அடுத்து ஒரு குரூப்பு இருக்கு.... அவனுங்க வேலையே கமெண்ட்ல வந்து வெளம்பரம் போடுறது......  ஏன்யா ப்ளாக்கர நமக்கு ஃப்ரீயா கொடுத்த  கூகிள்காரனே வெளம்பரத்துக்கு காசு கொடுக்கிறான், ஆனா நீங்க பாட்டுக்கு வந்து பதிவை படிக்கிறீங்களோ இல்லையோ ஒரு டெம்ப்ளேட் கமெண்ட்ட போட்டுட்டு ஓசில வெளம்பரம் வேற போட்டுக்கிறீங்க..... என்ன நியாயம் சார் இது? ஒரு சீரியஸ் பதிவு, பதிவர் ரொம்ப வருத்தமான ஒரு விஷயத்தை பத்தி எழுதி இருந்தார், அங்க ஒரு விளம்பரதாரர், பதிவு சூப்பர் அப்படியே என் பதிவுக்கு வாங்கன்னு கமெண்ட் போடுறார். இது எவ்வளவு அநாகரிகமா இருக்கு? வளரும் பதிவர்கள் வெளம்பரம் போடுங்க... வேணாம்னு சொல்லலை, ஆனா இடம் பொருள் பாத்து போடுங்க, பதிவை படிச்சு உங்க கருத்தை சொல்லிட்டு விளம்பரம் போடுங்க சார்.




இதெல்லாம் பரவால்ல சார், இன்னொன்னு இருக்கு சொல்ல வேணாம்னுதான் பாத்தேன் இருந்தாலும் சொல்லிடுறேன்....... கமெண்ட்ல கும்மியடிக்கிறோம்னு சொல்லிக்கிட்டு சில பேரு கமெண்ட் போடுறாங்க பாருங்க..... அத படிக்கறதுக்குள்ள கண்ணு, காது, மூக்கு, வாயி.... ஆல் ப்ளட் சார்.......... அப்படியே தலதெறிக்க ஓடவேண்டி இருக்கு......... நீங்க கும்மியடிங்க சார், அது உங்க கருத்துரிமை, சொத்துரிமை, மனித உரிமை... இன்னும் வேற என்னென்ன உரிமை இருக்கோ அதெல்லாம். ஆனா படிக்கறவங்கள பத்தியும் கொஞ்சம் நெனச்சுப்பாருங்க சார், சமயங்கள்ல கும்மி அடிக்கிறாங்களா, சீரியசா டிஸ்கஸ் பண்ணி இருக்காங்களான்னே தெரிய மாட்டேங்குது..... நீங்க பண்றது தப்புன்னு சொல்ல வரலை. ஆனா கமெண்ட்ஸ் எல்லாம் கொஞ்சம் சுவராசியமா, நகைச்சுவையா, கிண்டலா, நக்கலா..... ஜாலியா கலாய்ச்சு இருந்தா எப்படி இருக்கும்? ட்ரை பண்ணுங்க சார்.. ட்ரை பண்ணுங்க........!

என்னமோ போங்கப்பா, என்னால தாங்க முடியல.. அதான் சொல்லிட்டேன்.....

எச்சரிக்கை: இந்தப்பதிவு யாரையும் குறி வைத்து எழுதப்பட்டதல்ல (அப்படி குறிவெச்சு எழுத ஒருத்தர் ரெண்டு பேரா இருக்கீங்க...?). அதுனால படிச்சிட்டு அவன் என்ன கிள்ளி வெச்சிட்டான், இவன் கடிச்சி வெச்சிட்டான்னு யாராவது கெளம்புனீங்க... படுவா........ தொலச்சிபுடுவேன் தொலச்சி........!

இங்கே வாக்களிப்பது கட்டாயமல்ல...

நன்றி: கூகிள் இமேஜஸ், மற்றும் காப்பிரைட் ஓனர்கள்!


!