Monday, March 28, 2011

உலகிலேயே காஸ்ட்லியான காபி எது தெரியுமா?

உலக்த்துலேயே காஸ்ட்லியான காபி எது?  ஸ்டார் ஹோட்டல்ல கிடைக்கிற காபிதான்னு சிம்பிளா சொல்லிடாதீங்க சார்! நெஜமாவே வேற காஸ்ட்லியான காபி ஒண்ணு இருக்கு, அது என்னன்னு தெரியுமா? தெரியும்னு சொல்றவங்க அப்படியே அப்பீட் ஆகிடலாம். இன்னும் என்னைய மாதிரி வெள்ளந்தியா தெரியலியேன்னு சொல்றவங்க மேல படிங்க!

அந்த காஸ்ட்லியான காபி பேரு லூவா காபி (Kopi Luwak), இந்தோனேசியாவுல தயாரிக்கப்படுது. எப்படி தயாரிக்கறாங்கன்னு தெரிஞ்சா அசந்து போய்டுவீங்க.

நம்மூர்ல கொஞ்சநாள் முன்னாடி மரநாய்னு பூனை சைஸ்ல, நாய் மாதிரி தோற்றத்துல ஒரு மிருகம் இருந்துச்சு, தென்னை மரத்துல எல்லாம் ஏறும்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனா பாத்ததில்ல. இப்போ நம்மூர்ல கிட்டத்தட்ட இது அழிஞ்சுடுச்சுன்னே நெனைக்கிறேன். இந்த மரநாய் தெற்காசிய நாடுகள் எல்லாத்துலேயும் பரவலாக காணப்படுது. இவை வாசனைத்திரவியம் எடுக்கப்படும் புனுகுப் பூனை ஜாதியை (Civet cats)சேர்ந்தவை. 2003-ல் சார்ஸ் நோய் பரவிய போது இந்தப் பூனை வகைகளில் இருந்தும் தொற்றியதாம். அதெல்லாம் இருக்கட்டும், இந்த மரநாய்க்கும் காபிக்கும் என்ன சம்பந்தம்னு கேக்குறீங்களா? ஹி..ஹி.... "மேட்டரே” அங்கதானே இருக்கு....!

அது என்ன சம்பந்தம்னு படமாவே பாத்துடுங்களேன்...!

இதுதாங்க அந்த மரநாய்

மரநாய் காபி பீன்சை சாப்புடுது

நிறைய மரநாய்களை புடிச்சி வெச்சு காபி பீன்ச சாப்புட வைக்கிறாங்க

காபி பீன்ச சாப்புடுற மரநாய், கொட்டைகளை மட்டும் அப்பிடியே கக்கா போய்டும்

கக்காவுல இருந்து காபி கொட்டைகளை எடுத்து சுத்தம் பண்ணினா...


காஸ்ட்லி காபி ரெடி....!

என்ன நம்பலையா.....? நான் சும்மா எப்பவும் போல (?) கக்கா மேட்டர மிக்ஸ் பண்ணிட்டேன்னுதானே நினைக்கறீங்க...? கூகிள்ல போயி தேடிப்பாருங்கோ.... அத்தனையும் 100% உண்மைங்கங்கோ....!

மரநாயின் வயிற்றில் உள்ள செரிமான என்சைம்களால் மாற்றங்களுக்கு உள்ளாவதால் காபிக் கொட்டைகளின் கசப்பு குறைந்து சுவை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. கிடைச்சா ஒருதடவ குடிச்சுப்பாருங்க சார். இதிலும் டூப்ளிக்கேட் வருதாம்.  அதுனால பாத்து கவனமா ட்ரை பண்ணுங்க. ஏற்கனவே குடிச்சவங்க யாரும் இருந்தீங்கன்னா வெக்கப்படாம அதைப் பத்தி இங்கே பகிர்ந்துக்கலாமே...?

மேலதிகத் தகவல்களுக்கு விக்கிப்பீடியாவைப் பார்க்கலாம்.
நன்றி விக்கிப்பீடியா, கூகிள்

Tuesday, March 22, 2011

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று தெரியுமா...?

அடுத்த முதல்வர் யார் என்று பதிவுலகம் முழுதும் தேர்தல் ஜன்னி கண்டு இழுத்துக் கொண்டிருக்கும் நிலையில், நாம் அடுத்த சூப்பர் ஸ்டார்  யார் என்ற முக்கியமான தேடுதல் வேட்டையில் இறங்கினோம். தேர்தல் நேரத்தில் இது அவசியமா என்று எதிரிகள் சிலர் கேட்கலாம். நமது சூப்பர் ஸ்டார்களுக்கே முதல்வர்களாகும் தகுதி இருப்பதனாலும், நாம் காலம் காலமாய் எதிர்பார்த்துக் காத்திருந்த சூப்பர் ஸ்டார் ஒருவர் தமிழ்த்திரை வானில் இப்போது அவதரித்து இருப்பதாலும், தேர்தல் பரபரப்பில் அவர் யார் என்று நம் பதிவர்களுக்குத் தெரியாமலே போய் விடக் கூடிய அபாயம் இருப்பதாலும்தான் அவசர அவசரமாக இப்படி ஒரு பதிவு. 

தமிழ்நாட்டில் எப்போதும் ஒரு சூப்பர் ஸ்டார் இருந்து கொண்டே இருப்பார். தியாகராஜ பாகவதர், எம்ஜிஆர், ரஜினி என்று ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு சூப்பர் ஸ்டார் இருப்பது தமிழகத்தின் எழுதப்படாத விதிகளில் ஒன்று. அடுத்த தலைமுறை நடிகர்கள் தமிழ்சினிமாவில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கி பல வருடங்கள் ஆகியும் இன்னும் அவர்களில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று தீர்மானிக்க முடியாத நிலை தொடர்வது சினிமா ரசிகர்களுக்கு தீராத கவலையாக இருந்து வருகிறது. 

இன்னிலை தொடர்வது சினிமாவுக்கும் நல்லதல்ல, ரசிகர்களுக்கும் நல்லதல்ல. மேலும் சிபி போன்ற சினிமா விமர்சகர்களுக்கும் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று அடையாளம் காட்டுவது நமது தார்மீகக் கடமை என எண்ணுகிறோம். கடமை என்று வந்துவிட்டால் நாம் புலியாக மாறி விடுவோம்  என்பதும் உங்களுக்கு தெரியுமல்லவா...?

சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை அடைய இன்றும் போராடிக் கொண்டிருக்கும் அண்ணன் டீ...ராஜேந்தர் அவர்களுக்கு ஒரு சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொண்டவனாக அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என உங்களுக்கு அடையாளம் காட்டும் எனது நீண்ட நெடிய பயணத்தை தொடங்குகிறேன். 

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற உடன், நடிகர்கள் அஜீத்-விஜய் ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்க முடியாது. ஆனால் இருவரும், விடாது தொடரும் தொடர்தோல்விகளால் பொறிகலங்கி இருப்பது சற்றே யோசிக்க வைகிறது. சிம்பு, தனுஷ், சூர்யா, விக்ரம், ஜீவா, பரத்  அனைவரும் அஜீத்-விஜய்க்கு கிழேதான் என்பதால் அவர்கள் அனைவரும் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டியலில் இடம் பெறும் தகுதியை இழக்கிறார்கள். அப்படியானால் யார்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்? தமிழ்நாட்டு மானத்தை காப்பாற்ற யாருமே இல்லையா?

இப்படி அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று தெரியாமலே போய் விடுமோ என்று ரசிகர்கள் எல்லாம் அல்லும் பகலும் துயரத்தில் தோய்ந்து, தோய்ந்து வருந்திக் கொண்டிருந்த காலத்தில்தான் வானில் விடிவெள்ளி உதிப்பது போல தென்னிந்திய மைக்கேல் ஜாக்சன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சாம் ஆண்டர்சன் அவர்கள் தமிழ்த் திரைவானில் உதயமாகி அனைவரையும் சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட வைத்தார். தமிழகத்திற்கு நோபல், ஆஸ்கார் என்று பரிசுகளை அள்ளித்தரக் கூடிய அனைத்து தகுதிகளும் இவருக்கு உண்டு என்றாலும் அவர் அதை விரும்புவதில்லை என்பதால் இன்னும் கொடுக்கப்படவில்லை என்று விபரம் அறிந்தவர்கள் பலரும் அறிவார்கள்.

டாஸ்மாக்கில் இந்த வருடம் வருமானம் பலமடங்கு அதிகரித்திருப்பதற்கு சாம் ஆன்டர்சனின் சூறாவளி நடனமே காரணம் என்று புள்ளி விபரங்களைப் பார்த்தவ்ர்களுக்குத் தெரிந்திருக்கலாம். மேலும் இந்த வருட கலைமாமணி லிஸ்ட்டில் ஆன்டர்சனின் பெயர் இருந்ததாகவும், ஆனால் அவர் அதை ஏற்றுக் கொள்வாரோ மாட்டோரோ என்ற அச்சத்தில் கடைசி நேரத்தில் அவர் பெயர் அந்த லிஸ்ட்டில் இருந்து எடுக்கப்பட்டதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறன.

தமிழக மக்கள் அனைவரும் எப்பேர்ப்பட்ட நடிகர் நமக்கு கிடைத்திருக்கிறார், இனி அவர்தான் நம் சூப்பர் ஸ்டார் என இறுமாந்திருந்த நேரத்தில் புயலென கிளம்பி தமிழகத்தின் அத்தனை தியேட்டர்களையும் துவம்சம் செய்து அதிரடியாய் நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லாமல் சொல்லி பலரின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறார் ஒரு நடிகர்...

அவரும் ஒரு டாகுடர் என்பதுதான் பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தி தூக்கத்தைக் கெடுத்திருக்கிறதாம்.

அவரது மயிர்க்கூச்செறியும் புகைப்படங்கள் சிலவற்றை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.....
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

தென்னகத்தின் அடுத்த ஸ்டைல் மன்னன்..
பவர் ஸ்டார் (எ) யூத் ஸ்டார், டாகுடர். சீனிவாசன்....!


தமிழகத்தின் சல்மான்கான் ஒரு பாடல்காட்சியில்...


தமிழகத்தின் அடுத்த சூப்பர் ஸ்டார் அவர்களின் எழுச்சியை வெள்ளித்திரையில் கண்டு மகிழ்க...!


பிரபலபதிவர் சிபி இந்தப் படத்தை ஏற்கனவே பார்த்துவிட்டார் என்று தகவல்கள் வருகின்றன. ஆனால் அவர் ஏன் இன்னும் மௌனம் சாதிக்கிறார் என்றுதான் தெரியவில்லை!

ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன், வெறும் கைகளைக் கொண்டு ஆதவனை மறைத்துவிட முடியாது...!

Tuesday, March 15, 2011

எங்க ஊரு கிரிக்கெட்டுக்காரன்...



நம்ம பதிவர்கள்/நடிகர்கள் சிலர் உலகக் கோப்பை கிரிக்கெட் டீம்ல எதிர்பாராத விதமா இடம் புடிச்சு ஒரு மேட்ச்ல கலந்துக்கிட்டாங்க. டீம் கேப்டன் வழக்கம் போல நம்ம பெரிய டாகுடரு புர்ச்சி களிங்கர்தான். 

பர்ஸ்ட் மேட்ச் ஏதோ ஒரு சொத்த டீமோட வெள்ளாடுறாங்க. டாஸ் வின் பண்ணி பேட்டிங் எடுத்தாச்சு, கேப்டனுக்கே கேப்டன் பட்டாபட்டி, சிங்கையின் சிறுத்தை சிரிப்பு போலீஸுடன் களம் இறங்குகிறார்.

பட்டா நேராக அம்பையரிடம் வருகிறார்.

உங்க பேரு டோமரா...?

இல்லை..

உங்களுக்கு ஜெர்மன் தெரியுமா?

தெரியாது..

அட்லீஸ்ட் எங்க தானைத்தலைவன் ராகுல்ஜீயவாவது தெரியுமா?

தெரியாது தெரியாது தெரியாது.......

யோவ் யார்யா இந்தாள அம்பையர் ஆக்குனது, இவரு இருந்தா நாங்க வெள்ளாட முடியாதுய்யா...

(எதிர் கேப்டன் ஓடிவந்து)... சார் சார் சும்மா வெள்ளாடுங்க சார், மேட்ச் முடியறதுக்குள்ள அவருக்கு நாங்க எப்படியும் ஜெர்மன் கத்துக் கொடுத்துடுறோம்.

அப்போ அது வரைக்கும் எனக்கு அவுட் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லி வை...!

கொஞ்ச நேரம் மேட்ச் நடக்கிறது. சிரிப்பு போலீஸ் பேட்டிங் செய்கிறார். தூக்கி அடிக்கிறார், எளிதாக கேட்ச் பிடித்து விடுகிறார்கள்.

யோவ் வெண்ணை ஒழுங்கா பாத்து அடிக்க வேணாமா?

இல்ல பட்டா... அந்த பாலை மட்டும் மிட்விக்கெட் பக்கமா அடிச்சிருந்தேன்னா சிக்சர் போயிருக்கும்..

அப்போ அடிச்சிருக்க வேண்டியதுதானே?

மிட்விக்கெட் எந்தப் பக்கம்னே தெரியலியே?

த்தூ.... போடா... போயி மங்குனிய அனுப்பி வைய்யி... அப்பிடியே அவன் கிட்ட கொஞ்சம் பொறிகடலை கொடுத்து விடு, போரடிக்குது....

மங்குனி வந்து பேட்டிங் செய்கிறார். முதல் பாலிலேயே கிளீன் போல்ட்...

யோவ் மங்குனி என்னய்யா அவனுக கிட்ட காசு வாங்கிட்டியா?

அட போய்யா நம்மளை நம்பி எவனாவது கொடுப்பானா...? ரொம்ப நாளா பதிவே எழுதலியே, இந்த மேட்ச வெச்சு ஒரு பதிவு தேத்திடலாம்னு நெனச்சுக்கிட்ருந்தேன்.. தக்காளி அதுக்குள்ள பால்போட்டுட்டான்...

அடுத்து டெர்ரர் பாண்டியன் வர்ரார்.  பால் காலில் படுகிறது, LBW கொடுக்கப்படுகிறது. உடனே கோபமாக அம்பையரிடம் செல்கிறார்.

ஒரு தொழிலாளிங்கறதாலதானே இப்படியெல்லாம் பண்றீங்க? உன்னயச் சொல்லி குத்தமில்லய்யா, இது ஒலகத்துல உள்ள எல்லா டேமேஜர்களும் சேந்து செய்யற சதி...  மொதல்ல உங்களைத் திருத்திக்குங்கடா அப்புறம் எங்களுக்கு வந்து அவுட் கொடுங்க. சரி சரி, எப்படியும் வெளிய வருவேல்ல... அப்போ கவனிச்சுக்கிறேன்...

அடுத்து சின்ன டாகுடர் பேட்டை சுழற்றியபடி வருகிறார். பின்னணியில் கைத்தட்டல், கரகோஷம், விசில் சத்தம் வருகிறது. 

யோவ் என்னய்யா இது ஸ்டேடியத்துல ஒரு பய கூட இல்ல, உனக்கு மட்டும் எப்படிய்யா இவ்வளவு சவுண்டு வருது?

ங்ணா... அது ஒரு டெக்குனிக்குங்ணா.... அதோ பாருங்க தெரியுதா, அங்க சவுண்டு சர்வீசு செட் பண்ணி வெச்சிருக்கேன்....

இதெல்லாம் கரெக்டா பண்ணுங்கடா... ங்கொய்யால மொதல்ல போயி ஒழுங்கா வெளையாடுற வழிய பாருய்யா...

பவுலர் பால் போடுகிறார். பால் மிஸ்சாகி கீப்பரிடம் போகிறது.

அம்பையருங்ணா என்னங்ணா பால் ரொம்ப சிறுசா இருக்கு.. போயி நம்ம ரேஞ்சுக்கு ஏத்த மாதிரி பெருசா எடுத்துட்டு வாங்ணா....

மிஸ்டர் இது ஃபுட்பால் இல்ல, கிரிக்கெட்...

ஓ அப்படியா... இப்போ என்ன பண்ணனும்...?

கிழிஞ்சது.... அந்த பேட்டை வெச்சு பாலை அடி... போதும்

இருக்கி சுத்தி திருப்பி அடிக்கனுமா?

அதுக்கு வேற ஒருத்தரு இருக்காரு, நீ பேசாம ஆடு....

சொல்லிட்டீங்கள்ல... இப்போ பாருங்ணா வேட்டைய...... டேய்ய்ய் வேட்டை ஆரம்பமாகிடுச்சுடா....

யோவ்...  இப்போ எதுக்கு தம் கட்டுறே? .... சவுண்ட கம்மி பண்ணு!

ங்ணா.... அப்பிடியே ஒன் டூ த்ரீ சொல்லுங்ணா...

யோவ்... இது சினிமா ஷூட்டிங் இல்ல... மேட்சுய்யா.... மேட்சு....!

அடுத்த பாலில் கிளீன் போல்ட்... சோகமாக சின்ன டாகுடர் வெளிய வருகிறார்.

இதுக்கெல்லாம் யார் காரணம்னு எனக்குத் தெரியும். அதுக்காகத்தான் நைனா மேடத்தை பாக்க போயிருக்கார். நாளைக்கு மெரினா பீச்சில் இதை கண்டித்து பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் மற்றும் கூட்டம் நடக்கும்... அதில் நைனா வேலாயுதம் படத்தில் உள்ள ஒரு சூப்பர் குத்துப் பாட்டு பத்தி பேசுவார்..!

அடுத்து தொங்க பாலு இறங்குகிறார். 

அய்யய்யோ கிரவுண்ட்ல பத்து தடியனுங்க சும்மா வெட்டியா நிக்கிறானுகளே, வந்தானுகன்னா எலக்சனுக்காவது ஆகுமே? மேட்சு முடிஞ்ச உடனே கட்சி ஆபீசுக்கு கூட்டிட்டுப் போயி பேர் வாங்கிட வேண்டியதுதான்.

மறுபடியும் ஒரு LBW... அடுத்து கண்கள் துடிக்க ஆக்ரோஷமாக கேப்டனே களத்தில் இறங்குகிறார். 

ஊழல் இல்லாத மேட்ச் நடத்தனும் அதுக்கு ஒரு டெக்னிக் வெச்சிருக்கேன், ஆனா சொல்ல மாட்டேன்.

அதெல்லாம் நாங்க பாத்துகிறோம், நீங்க மொதல்ல வெள்ளாடுங்க கேப்டன்!

கேப்டனுக்கும் LBW கொடுக்கப்படுகிறது. கேப்டன் நேராக அம்பையரிடம் செல்கிறார்.

சார், இதுவே அந்த டீம்ம்மா இருந்தா கொடுத்திருப்பீங்களா சார்....? இன்னிக்கு மட்டும் எங்களுக்கு மூணு LBW கொடுத்திருக்கீங்க, இது தப்பு, ஏன்னா இதுவரை ஆயிரத்து ஐநூத்தி நாற்பத்தாறு மேட்ச் விளையாடி இருக்காங்க, அதுல ரெண்டாயிரத்து நூத்தி இருபத்து மூணு LBW கொடுத்திருக்காங்க, கணக்குப் பாத்தா ஒரு மேட்சுக்கு 1. 37 LBW தான் வருது, ஆனா நீங்க மூணு கொடுத்திருக்கீங்க, இதுக்காக நான் கலங்கிட மாட்டேன். மேட்ச் முடிஞ்ச உடனே உங்களை விருதகிரி பாக்க வெப்பேன்.... அப்போ எனக்கு ஊத்திக் கொடுக்க தயாரா இருங்க அம்பையர் சார்...!

பெரிய டாகுடரு வெளியேற, தோனி உள்ளே வருகிறார். ரொம்ப நேரமாக ஒவ்வொரு பாலா அடிக்க முயற்சி பண்ணுகிறார். ஆனா முடியல. பால் பேட்டில் படவே கூச்சப்படுகிறது. ட்ரிங்ஸ் சிகுனல் காட்டுகிறார். பிரபல பதிவர் வெங்கட் ட்ரிங்ஸ் பாட்டிலோடு ஓடிவருகிறார்.

வெங்கட் என்னய்யா இது நானும் எவ்வளவோ ட்ரை பண்றேன் பால் பேட்டிலேயே பட மாட்டேங்கிதே?

ஏன் தோனி உங்க ஸ்பெசல் ஹெலிக்காப்டர் ஷாட்ட அடிச்சுத் தொலைய வேண்டியதுதானே?

முடிஞ்சா அடிக்க மாட்டேனா? அது எப்படின்னு திடீர்னு மறந்துடுச்சுய்யா... இப்போ என்ன பண்றதுன்னு கேக்கத்தான்யா உன்ன கூப்புட்டேன்... ஏதாவது ஒரு வழி சொல்லுப்பா....!

சரி எங்கிட்ட ஒரு ஐடியா இருக்கு, அம்பையர்கிட்ட பெரிய ஸ்க்ரீன்ல உங்க விளம்பரத்த திருப்பி திருப்பி போட சொல்லுங்க, அதை பாத்து அப்படியே அடிச்சிடுங்க....

த்தூ... ஐடியாவாம் ஐடியா.... சே... இந்தக் கருமத்துக்கு நான் இப்பவே அவுட்டாகி போய்டுவேன்.....

சொன்ன சொல் தவறாமல் தோனி அவுட்டாகிச் செல்ல, அடுத்தாக,

பெரிய கரடி இடுப்பை ஆட்டியபடி....டண்டனக்கா ஏ டனக்கு நக்கா....

இன்னிக்கு மேட்சு, புடிப்பேண்டா கேட்சு.... வந்துட்டேன்டா பேட்ஸ்மேன்... இனி உனக்கு பேட்மேன்... டீவில பாரு ஸ்பைடர் மேன்...!

பவுலர் அம்பையரிடம்: சார் ஸ்டம்பு, கீப்பரு எதுவுமே தெரியல சார், எப்படி பால் போடுறது....?

அம்பையர்: ஹலோ பேட்ஸ்மேன், கொஞ்சம் தள்ளி நில்லுங்க...!

தள்ளியும் நிப்பேன், தள்ளியும் வெப்பேன்... ஏன்னா நான் ஒரு கில்லி, அடிப்பேன் பாரு பல்லி, பூ வாங்குனா மல்லி, ரோடு போட ஜல்லி...ஜல்லி.... கில்லி கில்லி......

அதற்குள் பவுலர் பந்து வீசி விடுகிறார்.

கரடியின் ஊத்த வாய்க்குள் பந்து சிக்கிக்கொள்கிறது...

உடனே ரன் ஓடுகிறார்கள், வாயில் இருந்து பாலை எடுக்க பீல்டர்கள் துரத்துகிறார்கள்... ஆனால்.... ரன் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்...2..4....6... 8... 10...12.. நின்ற பாடில்லை

மெயின் அம்பையர் மயங்கி விழுகிறார், 

லெக் அம்பையர்:...  மேட்ச் கேன்சல்... கால் ஆம்புலன்ஸ்...!

 




ஒரே ஒரு கேள்வி... பதிவின் டைட்டில் யாருக்கு கச்சிதமாக பொருந்துகிறது....சொல்லுங்க பார்ப்போம்...?


Friday, March 11, 2011

உங்களுக்காக ஒரு அதிரடி அரசியல் சர்வே....!

அன்பார்ந்த பெரியோர்களே தாய்மார்களே...வாக்காளப் பெருங்குடி மக்களே உங்கள் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி மகிழ்ந்திடுவதற்காக மீண்டும் ஒரு சர்வே...! வழக்கம் போல கிழிச்சு தொவச்சி காயப்போட்டுடுங்க.

சர்வே கேள்விகளுக்கு பதில் அளிக்க 5 நிமிடம் மட்டுமே நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் படித்துப் பார்க்க 10 நிமிடம் எடுத்துக் கொள்ளலாம். கொடுக்கப்பட்ட விடைகளில் இருந்து மட்டுமே பதில் அளிக்க வேண்டும். அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதில் அளிப்பவர்களுக்கு சிறப்புப் பரிசு காத்திருக்கிறது.


கேள்விகள்:

1. ஒரு ஓட்டிற்கு எவ்வளவு பணம் எதிர்பார்க்கிறீர்கள்?
அ) 2000
ஆ) 5000
இ) 1000


2. பணத்திற்குப் பதிலாக பொருளாகக் கொடுத்தால் என்ன வேண்டும்?
அ) ஒரு வெளிநாட்டு பானம் + பிரியாணி பொட்டலம்
ஆ) தியேட்டர்களில் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய டோக்கன் மதிப்பு 5000
இ) டாஸ்மாக்கில் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய டோக்கன் மதிப்பு 10000


3. உங்கள் தொகுதிக்கு சினிமா நடிகைகள் பிரச்சாரம் வருகின்றார்கள் என்றால், உங்கள் சாய்ஸ்
அ) குஷ்பு
ஆ) நமீதா
இ) சங்கவி


4. உங்கள் தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கும் நடிகர்கள்
அ) டாகுடர்.விஜய்
ஆ) டாகுடர் விஜயகாந்த்
இ) ஜேகே ரித்தீஷ்
ஈ) சாம் ஆண்டர்சன்


5. கீழ்கண்ட அரசியல் புள்ளிகள் உங்கள் தொகுதியில் போட்டியிட்டால் உங்கள் சாய்ஸ்
அ) கனிமொழி
ஆ) சசிகலா


6. தேர்தலில் போட்டியிட வேண்டும் என நீங்கள் விரும்பும் சினிமா விஐபிக்கள்
அ) எஸ். ஏ. சந்திரசேகர்
ஆ) இயக்குனர் பேரரசு
இ) டி ராஜேந்தர்


7. நீங்கள் சேரவிரும்பும் கட்சி
அ) லதிமுக
ஆ) மக்கள் இயக்கம்
இ) அ.இ.நா.ம.க (மொதல்ல இது யாரு கட்சின்னு கண்டுபுடிங்க...)



8. உங்களுக்குப் பிடித்த அரசியல்வாதி
அ) நீரா ராடியா
ஆ) மாயாவதி



9. 2016-ல் யார் முதல்வர்? உங்கள் கணிப்பு...?
(இதற்கு மட்டும் உங்கள் இஷ்டம் போல் பதில் சொல்லலாம்) 


10. நீங்கள் காலில் விழ விரும்பும் விஐபி
அ) ஜெயலலிதா
ஆ) கலைஞர்
இ) பன்னிக்குட்டி ராம்சாமி

அய்யோ.. நான் ஒண்ணும் சொல்லலீங்....!

என்ன மக்களே சர்வேய முடிச்சிட்டீங்களா? இப்போ அந்தப் பரிசு என்னன்னு தெரிஞ்சுக்கனும் அவ்வளவுதானே?

நமது மங்குனி அமைச்சரின் ப்ளாக் ஏலத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. அனைவரும் ஏலத்தில் கலந்து கொள்ளலாம். அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான விடை அளிப்பவர்களுக்கு, கடைசி ஏலத்தொகையில் 50% தள்ளுபடி அளிக்கப்படும்!

வழக்கம் போல் பிட் வசதி உண்டு, 1999 ரூபாய் செலுத்தினால், பிட் அனுப்பி வைக்கப்படும்!


Wednesday, March 9, 2011

அறுபத்து மூணு பேருக்கு என்ன பண்றது... ?

சாணக்கியனுக்கே சாணக்கியம் சொல்லிக்கொடுத்த அரசியல் சாணி.. சே... ஞானி, அரசியலின் அரிச்சுவடி, இந்தியாவின் விடிவெள்ளி, தமிழகத்தின் நிரந்தர முதல்வர், தமிழினத்தலைவர், களிங்கர்ஜீ அவர்களின் அனல் பறக்கும் அதிரடி அரசியல் ஆட்டத்தின் விளைவாக, காங்கிரஸ் கட்சி 63 சீட்களை பெருமையுடன் பெற்று களிங்கர்ஜீ அவர்கள் துணையுடன் மக்களுக்கு தொண்டாற்றி மகிழ்ந்திட துடியாய் துடித்துக் கொண்டு இருக்கிறது.

தானைத்தலைவர் ராகுல்ஜீ அவர்களின் வழிகாட்டுதலில் சீறு கொண்டு எழுந்துள்ள கட்சியினர், 63 சீட்டுகளை வாங்கிக் குவித்து வெற்றி நடை போடும் இன்னேரத்திலே நமக்குத் தேவையான அந்த 53 (மீதி 10 சீட்டு கோஷ்டித் தலைகளின் வாரிசுகளுக்குன்னு தெரியாதா உங்களுக்கு?)  சிங்கங்களைக் கண்டறியும் பணியில் அனைத்துக் கோஷ்டியினரும் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளனர் என்பதை இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்!


ரெண்டு நாளா நாங்க அடிச்ச அதிரடில எல்லாரும் இன்னேரம் ஸ்பெக்ட்ரத்த பத்தி மறந்திருப்பாங்கள்ல மேடம்...?


இப்படி சிரிக்கிறீங்களே.... ரெண்டு மூணு நாளா என்ன நடக்குதுன்னு உங்களுக்கு ஏதாவது வெளங்குதா மன்மோகன்ஜீ....?


என்ன சொல்றிங்க தங்கபாலு, 63 பேர்ல 53 பேரு எங்களுக்கு வேண்டப்பட்டவங்களா?



இப்பவாவது நாந்தான் அடுத்த முதல்வர்னு அறிவிச்சிருக்கலாம்...!


பாருங்க கஷ்டப்பட்டு சீட்டு வாங்கிக் கொடுத்துட்டேன்,  போயி எப்படியாவது 63 பேர புடிச்சிக்கிட்டு வாங்க...!



Tuesday, March 8, 2011

இனி நாங்கதான் தமிழ்நாடு....!


இனி நாங்கதான் தமிழ்நாடு....!


ஹலோ ஜோசியரா...?

பெரும்பாலான பதிவர்களின் கணிப்பின்(?) படி  தேர்தலில் அதிமுகவே வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது.  அம்மா தான் அடுத்த முதல்வர் என்று கிட்டத்தட்ட முடிவாகிருச்சு. அடுத்த ஆட்சியில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று தெரிந்து கொள்ள ரொம்ப ஆர்வமா இருப்பீங்க (ஆமா யாருக்குமே தெரியாதுல....?)  அதை வெச்சு ஒரு சின்ன கற்பனை...! 

இதைப் படித்து தொழிலதிபர்கள், அல்லக்கைகள், கைத்தடிகள், வலதுகைகள் எல்லோரும் பயனடைவார்களாக!


நூறு எண்ணுற வரைக்கும் அப்பிடியே கெடக்கனும்.....!


அதிமுக ஆட்சிக்கு வந்த உடன்,


  1. புதிய சட்டசபைக்கட்டிடம் காலி செய்யப்பட்டு சட்டசபையும் தலைமையகமும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றப்படும்
  2. புதிய சட்டசபைக் கட்டிடத்திற்கு முழுதும் பச்சைப் பெயிண்ட் அடித்து யாகம் நடத்தி கிளியர் செய்யப்படும் 
  3. சசிகலா பேரவை இனி புதிய சட்டசபைக் கட்டிடத்தில் செயல்படும்.
  4. உடன்பிறவா சகோதரிக்கு துணைமுதல்வர் பதவி. அறிஞர்கள், சான்றோர்கள் பாராட்டு.
  5. அஞ்சாநெஞ்சன் கைது செய்யப்படுவார் (காரணம்லாம் தேவையா சார்?). அமைதியான முறையிலேயே கைது செய்யப்பட்டதாக ஜெயா டீவியில் நேரடி ஒளிபரப்பு
  6. சத்துணவில் முட்டை நிறுத்தப்படும், அதற்குப் பதிலாக உடன்பிறவா சகோதரியின் ஒண்ணுவிட்ட அத்தையின் மாமனாருடைய தம்பியின் மருமகன் நடத்தும் பண்ணையில் செய்யப்பட்ட சத்துருண்டை வழங்கப்படும்
  7. கேப்டனின் புதிய கல்யாண மண்டபம் தலை நிமிர்ந்து எழுந்து நிற்கும்
  8. டாஸ்மாக்கிற்கு இனி ஒரு கம்பெனியில் இருந்து மட்டுமே சப்ளை (அது யார் கம்பெனின்னு தெரியும்ல?)
  9. எந்த மொழியில் பெயர் வைத்தாலும் படங்களுக்கு வரிவிலக்கு. அதைப் பாராட்டி சினிமாத்துறை முதல்வருக்கு பாராட்டு  விழா.ஜெயா டீவியில் நேரடி ஒளிபரப்பு, மறு ஒளிபரப்பு!
  10. சென்னைக்கு தொழில் தொடங்க வரும் கம்பெனிகள் பெங்களுருக்கு அனுப்பி வைக்கப்படும் (எல்லாம் ஒரு பாசம்தான், பின்னே பெங்களுரும் இந்தியாதானே?)
  11. 108 ஆம்புலன்ஸ் விளம்பரம் ஜெயாடிவியில் மட்டும் வரும் 

மானத்த வாங்குறானே.....!


ஓக்கே காமெடி போதும்,  இனி கொஞ்சம் சீரியசா பார்ப்போமா?

  1. காவிரிப் பிரச்சனையை மெரீனாவில் உண்ணாவிரதம் இருந்து தீர்ப்பார். 
  2. முல்லைப் பெரியார் அணைக்காக மதுரையில் ஒரு உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம்
  3.  ஈழப்பிரச்சனைக்காக ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் 
  4. தமிழக மீனவர் பிரச்சனையில் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுதும் பந்த், ஆர்ப்பாட்டம் 
  5. தமிழகத்திற்குப் போதுமான மின்சாரம் ஒதுக்க்கீடு செய்யாத மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 
  6. ஒகேனெக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டம் கேன்சல் 
  7. சென்னை மெட்ரோ திட்ட வேலைகள் நிறுத்தி வைப்பு, இதுவரை போடப்பட்ட தூண்கள் மற்றும் பாலத்தின் தரம் பற்றி ஆராய தொழில்நுட்பக் குழு!
  8. தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனததை ஜெயாடிவி வாங்கும். 
  9. திமுகவை கூட்டணியில் இருந்து காங்கிரஸ் நீக்கிவிடும். காங்கிரசுடன் அதிமுக  மறுபடி கூட்டணி சேர்ந்து  மத்திய அமைச்சரவையில் இடமும் பிடிக்கும்.
  10. அதைப் பார்த்து மருத்துவர் அய்யா அவர்கள் மீண்டும் சகோதரியுடன் இணைவார். அன்புமகன் ஒருவழியாக மீண்டும் மத்திய அமைச்சராகுவார் (அப்பாடா.........!).
  11. இறையாண்மைக்கு எதிராக பேசியதற்காக சீமான் மறுபடி கைது செய்யப்படுவார்.

எல்லாரும் இவர பாத்து கத்துக்குங்க...!

முக்கிய அறிவிப்பு: இங்கு சிறந்த முறையில் காலில் விழுந்து எழும் பயிற்சி கொடுக்கப்படும். அல்லக்கைகளுக்கு உணவு, தங்குமிடம் இலவசம். உடனே அணுகுவீர்... இன்றே கடைசி...!

போதும் போதும்...!

Monday, March 7, 2011

நாளைக்கு மகளிர் தினமாம்...!

மகளிர் தின ஸ்பெசலாக உங்க எல்லோருக்கும் ஒரு போட்டி வெச்சிருக்கேன். கீழே சில கணவன்-மனைவி படங்கள் கொடுத்திருக்கேன், அதுல சிறந்த கணவன் யார் என்று கண்டுபிடிப்பது உங்க பொறுப்பு....!














என்ன மக்களே சரியான விடையைத் தேர்ந்தெடுத்துட்டீங்களா?

சரி இந்த மகளிர் தினத்துக்கு வாழ்த்துச் சொல்லனுமாம் அதையும் சொல்லிக்கிறேன்....!

மங்கிசா மங்கிசா கிங்கிசா பாயாசா......


எல்லாம் மெயில்ல வந்த போட்டோக்கள், சம்பந்தப் பட்டவங்களுக்கு நன்றி!

Friday, March 4, 2011

அய்யய்யோ....இது நான் இல்லீங்க......!



அப்போ பள்ளிக்கொடம் படிச்சிக்கிட்டு இருந்தேன், அப்போதான் வந்துச்சு துள்ளுவதோ இளமை படம். பாத்துட்டு அசந்து போயிட்டேன் சார். அந்த வயசுல என்ன பண்றோம்னு புரியாம என் கூட படிச்சிக்கிட்டு இருந்த புள்ளைய கூட்டிட்டு ஓடிப்போயிட்டேன். ரெண்டு, மூணு நாளு ஜாலியா சுத்திட்டு திரும்பி வந்தா பிரின்சிப்பாலு சமாதானம் பண்ணி ஏத்துக்குவாருன்னு பாத்தா பிடிச்சி கட்டி வெச்சு அடி பின்னிட்டானுக சார். டீசிய வேற கிழிச்சு கொடுத்துட்டாரு எங்க பிரின்சிபாலு, பாவம் படம் பாக்கல போல... சரி விடுங்க அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம இருந்தப்போ வீட்ல இன்னொரு பள்ளில சேர்த்து விட்டாங்க. நல்லாத்தாங்க போய்க்கிட்டு இருந்துச்சு. இந்தக் காதல் கொண்டேன் படம் அப்போத்தாங்க வந்துச்சு, பாத்துட்டு வந்து நமக்கும் அந்த மாதிரி ஒரு கேர்ள் பிரண்டு இருந்து நம்மளைத் திருத்துனா ரொம்ப நல்லாருக்குமேன்னு எனக்கு ஒரே யோசனை...! 

அடுத்தநாளு எங்க கிளாஸ்லேயே ஒரு அட்டு பிகரை செலக்ட் பண்ணி பிரண்டாக்கிக்கிட்டேன். அட்டுபிகரான்னு கேக்குறீங்களா? என்ன பண்றது அங்க அவ ஒருத்தி பேருதான் திவ்யான்னு இருந்துச்சு.. (பின்னே, சூப்பர் பிகர பிரண்டாக்கி என்னை சீரழிய சொல்றீங்களா? நானும் பெரியாளாக வேணாமா சார்?). என் கெரகம் அவ அந்த திவ்யா மாதிரி இல்லாம பிதாமகன் கோமதி மாதிரி கஞ்சா விக்கிற பார்ட்டியாக இருந்தாள். அன்னைக்கே அவளை கழட்டி விடலாம்னா போலீஸ்ல மாட்டிவிடுவேண்னு அவ மிரட்டுனதுனால கம்முன்னு படிச்ச்சேன். ரன் படம் பாத்துட்டு சென்னைலதான் காலேஜ் படிக்கனும்னு முடிவு பண்ணி ஓடி வந்தேன். எங்கேயும் சீட் கெடைக்கல. அப்போ மதுர படம் பாத்துட்டு கலக்டராவாவது ஆகிடனும் முடிவு பண்ணி காய்கறிக் கடை போட்டேன்.

நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு, ஜெமினி படம் பார்க்கற வரைக்கும்...! அப்புறம் என்ன, அதேதான், படத்துல வந்த மாதிரியே பலபேரு கைய கால பிடிச்சி ஒரு பார்ட் டைம் காலேஜ்ல சேர்ந்தேன், தங்கி இருந்த இடத்தையும் சௌகார்பேட்டைக்கு மாத்தினேன், ஆனா பாருங்க வழக்கம்போல எதுவுமே சிக்கல. குட்காவையும் பான் பராக்கையும் போட்டு கண்டமேனிக்கி துப்பி வீடும் வாயும் நாறுனதுதான் மிச்சம். இப்படியே போய்க்கிட்டு இருந்தப்போ நல்லவேளையா அன்னியன் படம் வந்து என்னக் காப்பாத்திடுச்சு. படத்த பாத்துட்டு எல்லா கெட்ட பழக்கத்தையும் விட்டுட்டு ரெமோ ஆகிடலாம்னு எவ்வளவோ முயற்சி பண்ணேன்.ஆனா ரெமோ வரவே இல்லை, ஹேர் ஸ்டைல் மாத்தி, எக்சர்சைஸ் பண்ணி எதுவுமே ஒர்க் அவுட் ஆகாம கடைசில அம்பியா மாறிட்டேன். நந்தினி இல்லேன்னா என்ன, ஒரு அபிநயா, ஒரு கவிதா கூட வராமேயா போயிடுவாங்க?

Photobucket

நிறைய பணம் இருந்தா எல்லா பிகரும் தேடி வரும்னு திவ்யா எப்பவோ சொன்னது திடீர்னு ஞாபகம் வந்துச்சு. உடனே அதுதான் இனின்னு முடிவு பண்ணி பணம் சீக்கிரமா நிறைய சம்பாரிக்க வழி என்னன்னு யோசிச்சேன். அப்போ எதேச்சையா பகவதி பாத்துட்டு, உடனே ஒரு டீக்கடை வெச்சேன். நாமதான் யாரையும் மெடிகல் காலேஜ்ல சேர்த்து படிக்க வைக்கப் போறதில்லையே, அப்போ அந்தப் பணம்லாம் மிச்சம்தானே? அத வெச்சே பெரியாளாயிடலாம்னு ஒரு சின்ன ப்ளான் அவ்வளவுதான். ஆனா பாருங்க பிரண்ட்சு தொந்தரவு தாங்க முடியல. ஓசி டீ குடிச்சே கடைய காலி பண்ணிட்டானுங்க. சரி நம்ம திருட்டுப்பயலே மாதிரி ஒரு பெரிய இடத்து  மேட்டர வீடியோவா எடுத்து அமௌண்ட் கரக்ட் பண்ணி செட்டில் ஆயிடலாம்னு பக்காவா ப்ளான் பண்ணி சூப்பரா வீடியோவும் எடுத்து வெச்சிட்டேன் சார். என் கெட்ட நேரம் அதை எப்படியோ சன் நியூஸ்ல போட்டு நாறடிச்சுட்டானுங்க, அந்த வாய்ப்பும் போயிடுச்சு. 

இதுக்கிடைல அப்படி இப்படின்னு ஒருவழியா காலேஜும் படிச்சு முடிச்சேன். என்ன வேலை பாக்கலாம்னு ஒண்ணும் புரியல. அப்போ கரக்ட் டைமிங்கா போக்கிரி படம் வந்துச்சு பாருங்க, பெரிய போலீஸ் ஆப்பீசர் ஆகிடனும்னு அப்பவே முடிவு பண்ணிட்டேன். உடனே ஒரு ரவுடிகிட்ட போய் சேர்ந்துட்டேன், அப்போ தானே முதல்ல ஒரு பெரிய ரவுடி ஆகி, கடைசில போலீஸ் ஆகலாம்? அது ஒரு கேவலமான வெத்து அல்லக்கை கும்பல் போல... என்னைய வெச்சி ஏதோ கோக்குமாக்கா படம் எடுக்க ட்ரை பண்ணானுங்க. எனக்கு உதறல் எடுத்து ஓடிவந்து அப்ரூவர் ஆகிட்டேன், மறுபடியும் கெட்ட நேரம் பாருங்க, அந்த போலீஸ்கார் அப்போத்தான் காக்க காக்க பாத்துட்டு வந்திருந்தாரு போல, இம்மீடியேட்டா எனக்கு என்கவுண்டர் தேதி குறிச்சிட்டார். அப்போ தப்பிச்சவந்தான், நேரா குருவி பாத்துட்டு அப்பிடியே மலேசியா போயிட்டேன், அங்கே கோச்சா எங்கே இருக்காருன்னு தேடித் தேடி வெறுத்துப் போயி சோத்துக்கே வழியில்லாம பிச்சை எடுத்துக்கிட்டு இருந்தேன். போலீஸ் பிடிச்சி திருப்பி அனுப்பி வெச்சிட்டாங்க.... அடுத்து என்ன பண்ணலாம்னு வழி கண்டுபுடிக்க வழக்கம் போல நம்ம தியேட்டருக்கு போனேன். 

அங்கே, நான் அவன் இல்லை படம் ஓடிக்கிட்டு இருந்துச்சு. பாத்துட்டு நாமளும் நாலஞ்சு பிகர்களை செட் பண்ணி செட்டிலாகிடனும்னு கச்சிதமா ஒரு திட்டம் போட்டேன்.  ரொம்பக் கஷ்டப்பட்டு நாலு பிகர்களைக் கண்டுபிடிச்சி பக்காவா பொறியும் வெச்சேன். ஆனா அவளுங்க பேராண்மை படத்துல வர்ர மாதிரி எடக்கு மடக்காவே இருந்தாளுங்க, பக்கத்துலேயே போக முடியலை.  என்னென்னமோ பண்ணிப்பார்த்தும் எல்லா முயற்சியும் வீணா போயிடுச்சு. அப்புறம் விண்ணைத்தாண்டி வருவாயா வந்த உடனே பார்த்துட்டு அப்பிடியே ரொம்ப டிசண்ட் ஆயிட்டேன் சார், ஒரு டைரக்டரா பாத்து அசிஸ்டண்ட்டா சேர்ந்துட்டேன், நல்ல பிகர் கெடச்சா அப்பிடியே உருகி உருகி லவ் பண்ணனும் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்... இன்னும் சிக்கல சார்..... என்ன பண்றதுன்னு மறுபடி யோசிச்சிக்கிட்டு இருக்கேன்

நாளைக்கு நடுநிசி நாய்கள் படம் பாக்கலாம்னு இருக்கேன்.....

அய்யய்யோ அது நான் இல்லீங்க.... நான் இல்லீங்க.........!

Photobucket


சாரி சார்... சாரி சார்... நைட்டு ரெண்டு ரவுண்டு அதிகமாயி இப்படி வாந்தி எடுத்துட்டேன் சார், இதைப் படிச்ச உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும் நீங்களும் எடுத்துடுங்க சார், உடம்புக்கு நல்லதுன்னு எங்க சின்ன டாகுடர் சொல்லி இருக்கார்...!




Wednesday, March 2, 2011

கிபி மூவாயிரத்தில்...

கிபி மூவாயிரத்துல உலகம் எப்படி இருக்கும்னு காமெடியா ஒரு மெயில் வந்துச்சு, நீங்களும் பாருங்களேன்... நல்ல கற்பனை....



Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket
Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

அப்போ நம்ம களிங்கர்ஜீயோட 32-வது பேரன் ஆட்சி பண்ணிக்கிட்டு இருப்பாரு, எதிர்கட்சில சின்ன மேடத்தோட அக்கா கொழுந்தனோட 31-வது பேரன் அறிக்கை விட்டுக்கிட்டு இருப்பாருன்னு நெனைக்கிறேன்....

ஓகே, இனி கொஞ்சம் சீரியசான கற்பனை:
1. வானத்தில் வர்ச்சுவல் ரோடுகள் பல அடுக்குகளாகப் போடப்படும், அனைத்துமே பறக்கும் வாகனங்களாக இருக்கும் (வாகனமே ஒரு ரோபோவாகவும் இருக்கும்). அனைத்து வேலைகளுக்கும் ரோபோக்கள் இருக்கும்.

2. அதிஉயர கட்டிடங்கள் கட்டப்படும், பறக்கும் வாகனங்கள் மேலேயே வர்சுவல் ரோடுகளில் உலா வரும், மனிதர்களும் கீழே தரைக்கே வராமல் மேலேயே வலம் வருவார்கள் (கீழே எங்கும் கடல் தண்ணீர் சூழுந்து இருக்கும்)

3. செக்ஸ் ரோபோக்கள் இருக்கும். ஆண்/பெண் இணைந்து வாழ்தல் இருக்காது.

4. ஸ்டெம் செல்/க்ளோனிங் மூலமே குழந்தை உருவாகும். அரசாங்கமே தேவையான குழந்தைகளை லேபுகள் மூலமாக உருவாக்கி வளர்த்துக் கொள்ளும், தனிமனிதர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளமாட்டார்கள்.

5. மல்டி மீடியா சாதனங்கள் மனித உடலோடு இணைந்து விட்டிருக்கும் (அல்லது மனித செல்களே எலக்ட்ரானிக் உபகரணமாக இயங்கும் தன்மை பெற்று இருக்கும்), ப்ரோகிரமாபிள் மூளை வந்துவிடும் (மேட்ரிக்ஸ் படம் போல நடப்பது சாத்தியமாகலாம்)

6. மனித உடலின் செல்கள் தானே நோய்களை சரி செய்து கொள்ளும் சக்தி பெற்றுவிடும்.

7. வேறு கிரகங்களில் இருந்து உலோகங்கள், மினரல்கள், தாதுக்கள் எடுக்கப்பட்டு பூமிக்கு வரலாம். ஏன் விவசாயம் கூட செய்யப்படலாம் (கண்ணாடி அறைகளில்), பூமி முழுதும் கடல் சூழ்ந்து இருக்கும் போது உபயோகமாக இருக்கும்.

8. செவ்வாய் மற்றும் வியாழனின் துணைக்கோள்களான யூரோப்பா, கலிலியோவில் பிரத்யேக சேம்பர்களில் மனிதன் தங்கி இருந்து ஆய்வு செய்வான். எல்லா கிரகங்களிலும் ஒரு ஸ்பேஸ் ஸ்டேசன் இருக்கும் (புதன், வெள்ளி தவிர)

9. சாதாரண வெப்பத்தில் இயங்கும் சூப்பர் கண்டக்டிங் பொருட்கள் வந்துவிடும். நாம் நினைப்பது போல் சுற்றுச்சூழல் மாசு கடுமையாக இருக்காது. சொல்லப் போனால், காற்று, நீர், பூமி அனைத்துமே தூய்மையாகிவிடும் (மாசுபடுத்தும் எரிபொருள், வெப்பம் எதுவும் இல்லாத தொழில் நுட்பங்கள் வந்துவிடும், அது போல் மாசுபட்ட சுற்றுப் புறத்தை முழுதும் சரிசெய்துவிடும் தொழில்நுட்பமும் வந்துவிடும், சோ பொல்யூசனே இருக்காது)

10. அதற்குள் ஒரு நட்சத்திர பெருவெடிப்பில் வெளியாகும் காமா கதிர்களால் உலகமே அழிந்து போயிருக்கலாம்...! (பூமிக்கு அருகில் சுமார் 150 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஒரு நட்சத்திரம் இறக்கும் தருவாயில் உள்ளது, இன்னும் 10 கோடி ஆண்டுகளுக்குள் அது வெடிக்கலாம்!)

இவை எனக்குத் தோன்றியவை, 1000 வருடங்கள் ரொம்பவே அதிகம்தான் இவை அனைத்தும் இன்னும் 200 வருடங்களுக்குள்ளேயே நடந்து விடலாம்.

உங்களுக்கும் ஏதாவது சொல்லத் தோனுமே.....? பயப்படாம தைரியமா சொல்லுங்க... கட்டணம் கிடையாது....!