Monday, March 4, 2013

அப்ரைசலும் அடங்காத டேமேஜர்களும்........




நம்ம டெரர்பாண்டியன் ஆபீஸ்ல அப்ரைசல் டைம், அந்த வருசம் ரொம்ப நல்லா பர்ஃபார்ம் பண்ணி இருந்ததால, ரொம்ப எதிர்பார்ப்போட பாஸ்கிட்ட அது விஷயமா பேச போறாரு........



பாஸ்: இந்த வருசம் ரொம்ப நல்லா பர்ஃபார்ம் பண்ணி இருக்கீங்க, அதுனால உங்களுக்கு ரொம்ப முயற்சி பண்ணி ஆவரேஜ் ரேட்டிங் கொடுத்திருக்கோம்...

டெரர்: என்னது.......... ஆவரேஜா..............!!!!!!.... சார், அதான் நல்லா ஒர்க் பண்ணியிருக்கேனே, அப்புறம் எப்படி சார் ஆவரேஜ்?

பாஸ்: ம்ம்.... நீங்க... உங்களுக்கு பிசினஸ் ஸ்கில் குறைவு அதான்..

டெரர்: பட் போன வருசம் நீங்கதானே நான் பிசினஸ் எக்ஸ்பர்ட்னு சொல்லி என்னை இந்த குரூப்புக்கு பிசினஸ் ஸ்பெசலிஸ்ட்  ஆக்குனீங்க.......?

பாஸ்: ஓ... ஆமால்ல...... ஆங்...  உங்களுக்கு ஃபங்சனல் நாலெட்ஜ் இல்லேன்னு சொல்ல வந்தேன்....

டெரர்: என்னது?

பாஸ்: அதான்..... அதாவது நீங்க டெக்னிகல் நாலெஜை டீம் மெம்பர்ஸ் கூட ஷேர் பண்ணிக்க மாட்டேன்றீங்க.....

டெரர்: டெக்னிகல் நாலெஜ்ஜா? சார் மொதல்ல நான் டெக்னிகல் பர்சனே கிடையாது, நான் மேனேஜ்மெண்ட் ஆளு...... டெக்னிகல் மேட்டரை நான் எப்படி ஷேர் பண்ண முடியும்?

பாஸ்: இதான் இதுதான் உங்ககிட்ட எனக்கு பிடிக்கல, என்ன சொன்னாலும் பதில் பேசுறீங்க, காரணம் சொல்றீங்க..... 

டெரர்: ???!!!




பாஸ்: ஓக்கே அடுத்து நீங்க உங்க கம்யூனிகேசன் ஸ்கில்லை நிறையவே இம்ப்ரூவ் பண்ணிக்கனும்......

டெரர்: சார் போனவருசம் கம்யூனிக்கேசன் ஸ்கில்ல நம்ம டீமையே நாந்தான் ட்ரைன் பண்ணேன்.... அப்போ நீங்க கூட உக்காந்து டவுட் கேட்டுட்டு இருந்தீங்க....

பாஸ்: ஓ....ம்ம்ம்......... அது நான் என்ன சொல்ல வர்ரேன்னா உங்க சோசியல் அஃபர்மேட்டிவ் ப்ராக்மாட்டிக் கம்யூனிக்கேசன் ஸ்கில்சை டெவலப் பண்ணனும்....

டெரர்: ???!!!*** என்ன அது..........?




பாஸ்: தெரியல பாத்தீங்களா, அதுக்குத்தான் உங்களை அதை பத்தி தெரிஞ்சுக்க சொல்லலாம்னு சொன்னா நீங்க சொல்லவே விடாமே எதிர்கேள்வி கேட்கிறீங்க.....!

டெரர்: ..........(<>)(<>)............

பாஸ்: அப்புறம் உங்க ரெக்ரூட்மெண்ட் ஸ்கில்சையும் நீங்க இம்ப்ரூவ் பண்ணிக்கனும்... நீங்க ரெக்ரூட் பண்ண ஆளுக எல்லாரும் ஒரே மாசத்துல ஓடிட்டானுங்க.....

டெரர்: சார்.... அது நீங்க அவனுங்க சீட்பக்கத்துலயே உக்காந்து எல்லா ஒர்க்கையும் டெய்லி செக் பண்ணுவேன்னு சொன்னதால வந்தது. அதுல 2-3 பேரு சூசைட் அட்டம்ப்ட் வேற பண்ணதா கேள்வி......

பாஸ்: ஓ.....அது.... வந்து.........  எப்படியோ எல்லாத்துக்கு மேலேயும் உங்களுக்கு பெட்டர் ரேட்டிங் கொடுக்க ரொம்ப முயற்சி பண்ணியிருக்கேன், பட் நம்ம ரேட்டிங் சிஸ்டம்  ஆவரேஜ்தான் கொடுத்திருக்கு......

டெரர்: அது எப்படி சார், போன வருசத்தவிட இந்த வருசம் நல்லாவே பர்ஃபார்ம் பண்ணியிருக்கேன், போன வருசம் எக்சலண்ட் ரேட்டிங்கும், இந்த வருசம் ஆவரேஜ் ரேட்டிங்கும் வந்திருக்கு? அப்படி என்ன ரேட்டிங் சிஸ்டம் சார் அது?

பாஸ்: அது ரொம்ப காம்ப்ளிகேட்டட் ப்ராசஸ்....... உங்களுக்கு புரியாது, நீங்க கேட்கவும் விரும்ப மாட்டீங்க....

டெரர்: பரவால்ல சொல்லுங்க சார், நான் கேட்கிறேன்...

பாஸ்: அது...... அதாவது மேனேஜர்கள்லாம் ஏதாவது மீட்டிங் ரூம்ல உக்காந்து அவங்கவங்க குரூப் ஆளுக பேரை பேப்பர்ல எழுதி தூக்கி மேல போடுவோம்...... எது தரைல விழுகுதோ அவங்க ஆவரேஜ், டேபிள்ல விழுந்தா குட், எங்களால கேட்ச் பண்ண முடிஞ்சது எல்லாம் எக்சலண்ட், ஏதாவது மேல சீலிங்லயே ஒட்டிக்கிட்டா அவுட்ஸ்டேண்டிங் இப்படி ரேட்டிங் கொடுப்போம்....

டெரர்: அப்போ பூவர் ரேட்டிங் யாருக்கு கொடுப்பீங்க?

பாஸ்: அது நாங்க எழுத மறந்த ஆளுகளுக்கு.......!




டெரர்: (அட அயோக்கியப்பயலுகளா........!) இது என்ன சார் முட்டாள்தனமான சிஸ்டமா இருக்கு?

பாஸ்: என்னதிது, நம்ம கம்பெனியோட 25 வருச அப்ரைசல் சிஸ்டத்த கேள்வி கேக்கிறீங்க, இதெல்லாம் ரொம்ப தப்பு..... போய் உங்க வேலைய பாருங்க............

டெரர் மயங்கி விழுகிறார்.............

பாஸ்: (என்ன இதுக்கே மயங்கிட்டான்...... அடுத்த வருசம் இவனையும் மேனேஜர் ஆக்கி விட்ரவேண்டியதுதான், இவன் தான் இதுக்கு சரியான ஆளு.............)



(ஈமெயில்ல வந்ததுதான், முடிஞ்சளவு தமிழ்ப்படுத்தி இருக்கேன்.....)

நன்றி: கூகிள் இமேஜஸ்....