இந்த ப்ளாக்க ஆரம்பிக்கும் போதே நெனச்சேன், இப்படி ஒரு நெலம வந்தா என்ன பண்றதுன்னு, அதாங்க எழுதுறதுக்கு ஒண்ணுமே வரலேன்னா என்ன பண்றதுன்னு! முன்னால எல்லாம் அடிக்கடி இப்படி ஆகி கமுக்கமா இருந்துடுவேன். இப்பவும் அப்படித்தான், என்ன எழுதுறதுன்னே தெரியாம நியூ போஸ்ட்ட ஓப்பன் பண்ணிட்டு உக்காந்திருக்கேன். ஆனா இந்தவாட்டி சும்மா விடுறதில்லன்னு களத்துல இறங்கிட்டேன்.
பிரபல பதிவர்கள்லாம் சினிமா பதிவுகளை வெச்சே ஓட்டிடுறாங்க, நாமலும் பிரபல பதிவர் (?) தானே, சரி இந்தக் கருமத்தையும் எதுக்கு விட்டு வைக்கனும்னு, சினிமாவை ட்ரை பண்ணி பார்க்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். (அப்போ இதுவரை டாகுடரை பத்தி எழுதுனதெல்லாம் என்னன்னு கேட்கப்படாது.....!)
இப்போ ட்ரெண்டு ஒரு கல் ஒரு கண்ணாடிக்கு விமர்சனம் எழுதுறதுதானாம். அதையும் ஒரு பிரபல பதிவர்தான் சொன்னார். விமர்சனம் எழுத முன்னாடி அந்தப் படத்த வேற பார்க்கனுமாமே? சரி கருமமேன்னு கூகிள் சேர்ச்ல தேடி பாடுபட்டு கண்டுபுடிச்சி பார்த்துத் தொலச்சேன். எல்லாம் உங்களுக்காக.
நம்மளையும் நம்பி இந்த நாலு ஜீவன் இருக்கறத நெனச்சா சந்தோசமாத்தான் இருக்கு, ஆனா இவனுங்க எடுக்குற படத்த நெனச்சாத்தான் பயமா இருக்கு...!
மொதல்ல படத்தோட பேரை பத்தி விரிவா பாத்துடலாம் (நமக்குன்னு ஒரு பாணிய டெவலப் பண்ண வேணாமா? அதுக்குத்தானுங்...........) ஒரு கல் ஒரு கண்ணாடி. பேரே ரொம்ப நல்லாருக்கு இல்லியா...? ஆனா இந்த கல்லுக்கும் கண்ணாடிக்கும் என்ன சம்பந்தம்? கண்ணாடில கல்ல போட்டா கண்ணாடி உடஞ்சிடும். கல்லுல கண்ணாடிய போட்டாலும் கண்ணாடிதான் உடையும். இது மூலமா என்ன சொல்ல வர்ராங்கன்னு தெரில, பட் இந்த மேட்டர் நல்லாருக்கு.
கண்ணாடின்னு சொல்றது பசங்களையா இருக்கும்னு நினைக்கிறேன். ஏன்னா நாமளா தேடிப் போய் லவ் பண்ணாலும் இல்ல நம்மளை ஒருத்தி லவ் பண்ணாலும் டேமேஜாக போறது பசங்கதானே? (எல்லாரும் ஆணாதிக்க வாதின்னு திட்ட போறீங்க, திட்டுங்க ஆனா என்னைய இல்ல, இந்தப் படத்தோட டைரக்டர......... எனக்கென்ன வந்துச்சி?)
நல்லவேள ஒருகால் ஒரு கண்ணாடின்னு பேர் வெக்கல. வெச்சிருந்தா அப்புறம் காலுக்கும் கண்ணாடிக்கும் என்ன எழவு சம்பந்தம்னு எப்படி கண்டுபுடிக்கிறது? ஆனா கல்லுனு பொத்தாம் பொதுவா சொல்லிட்டாங்களே தவிர அது என்ன கல்லுன்னு சொல்லவே இல்லை. பட் படத்தோட பட்ஜெட்ட வெச்சி, அது கருங்கல்லாத்தான் இருக்கும்னு நானே புரிஞ்சிக்கிட்டேன். கல்லு ஓகே, கண்ணாடி? முகம் பார்க்கிற கண்ணாடியா இல்ல வெறும் கண்ணாடியா இல்ல மூக்குக் கண்ணாடியா? எதுவும் புரியலேன்னாலும் ஒரு பிரபல பதிவர் அப்படிங்கற ஸ்தானத்துல (!) இருந்து யோசிச்சு அது முகம் பார்க்கும் கண்ணாடியாத்தான் இருக்கனும்னு நானே முடிவு பண்ணிட்டேன்.
கல், கண்ணாடி மேட்டர் ஓகே, ஆனா அது என்ன ஒரு கல் ஒரு கண்ணாடி? படத்துல ஒரு ஹீரோ, ஒரு ஹீரோயின்தான் வேற ஹீரோ, ஹீரோயின் கிடையாதுன்னு டைரக்டர் பின்நவீனத்துவ பாணில சொல்ல முயற்சி பண்ணி இருக்காரு போல...! அடடடா... என்ன ஒரு கற்பனை, என்ன ஒரு சிந்தனை. இப்படியே டைட்டிலை பத்தி ரொம்ப நேரம் தாறுமாறா யோசிச்சுக்கிட்டு இருந்துட்டு, சரி போனா போகுதுன்னு படத்த போட்டு விடிய விடிய உக்காந்து நல்லா உத்து உத்து பார்த்தேன்... ஒரு எழவும் தோனல........ விடிஞ்சப்புறம் மறுக்கா ஒருவாட்டி பார்த்தேன், அப்பக்கூட எதுவும் தோனலை.
நீங்களாவது அந்த படத்த பார்த்துப்புட்டு ஏதாவது தோனுச்சின்னா சொல்லுங்க சார்.... ஒரு நல்ல விமர்சனத்த தேத்திப்புடலாம்.... வேற என்ன பண்றது?
இதுதான் சார் நான் கூகிள்ல தேடி நைட்டு பூரா கண்ணு முழிச்சி உக்காந்து பார்த்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம்.... இத பார்த்ததும் உங்களுக்கு விமர்சனம் அருவியா கொட்டுமே?
நன்றி வணக்கம்!