Wednesday, November 28, 2012

ஒலகம் அழியாமல் தடுக்கனுமா.....?




ஒரு அடுக்கு மாடில தீப்பிடிச்சிருச்சு, உடனே தீயணைப்பு வீரர்கள் உடனே வந்து மாடில இருக்கிறவங்கள குதிக்க சொல்லி கீழ வலையோட நின்னாங்க. 

முதல்ல டெரர் குதிச்சார், வலைய சரியா பிடிக்காததால கீழ விழுந்துட்டார்,லேசான அடி. 

ரெண்டாவது மாலுமி குதிச்சார். சரியான டைரக்ஷன் இல்லாம வலையை அங்கயும் இங்கயும் ஆட்டி இவரும் மிஸ்ஸாகி கீழே விழுந்துட்டார்.

அடுத்தது பாபு வந்து நின்னார், கீழ தீயணைப்பு வீரர்கள் “குதிங்க, குதிங்க”ன்னாங்க, ஒரு நிமிஷம் யோசிச்சுட்டு சத்தமா சொன்னார்,
”நான் உங்கள நம்ப மாட்டேன், வலையை கீழே வச்சுட்டு விலகி நில்லுங்க”


*******

+Terror Pandian: இன்னும் கொஞ்ச நாள்ல ஒலகம் அழிய போகுதாமே, அழியாம தடுக்கனும்னா என்ன பண்ணனும்...?

+Ramesh Subburaj: சிம்பிள்...... ஒலகத்துல உள்ள எல்லா அழி ரப்பர்களையும் எடுத்து தீய வெச்சி கொளுத்திடனும்....... அப்புறம் எப்படி அழியும்னு பார்க்கிறேன்......



*********


இரவு ஒரு  பெரிய ஹோட்டலின்  பத்தாவது  மாடில விருந்து நடந்தது, எல்லாரும் செம தண்ணி.....

மறுநாள் காலை மாலுமி,தான் உடல் முழுவதும் கட்டுக்களுடனும் மிகுத்த வலியுடனும் ஒரு மருத்துவ மனையில்  இருந்ததை  உணர்ந்தார்.அவருக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.அப்போது அவரது நண்பர் வைகை அவரைப் பார்க்க வந்தார்.

அவரிடம் விபரம் கேட்க,அவர் சொன்னார்,''நீ அளவுக்கு மீறிய போதையில் பத்தாவது மாடியிலிருந்து கீழே  பறக்கப் போவதாகச் சொல்லி குதிச்சிட்டே...”

உடனே அவர் மிகுந்த வருத்தத்துடன்,''அடப் பாவி,நான் போதையில் குதிக்கப் போகிறேன் என்று சொன்னால்,நீ என்னை தடுத்து நிறுத்தியிருக்கக் கூடாதா?''என்று நண்பரைக்  கேட்டார்.

நண்பரும் அமைதியாகப் பதில் சொன்னார்,'நானும் போதையில் இருந்தேனா?அதனால் நீ பறந்து விடுவாய் என்று நம்பி விட்டேன்.''

********




திரை அரங்கிற்கு தன் நண்பர்களுடன் சென்ற டெரர் தன் இருக்கையைக் கண்டுபிடித்து உள்ளே நுழையும்போது முன்னாள் அமர்ந்திருந்த ஒருவரின் காலை மிதித்து விட்டார்.

மிதிபட்டவர் அவர் மன்னிப்பு கேட்பார் என்று எதிர் பார்த்தார்.அவரோ தன் நண்பர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

இடை வேளையின்போது வெளியே சென்று நண்பர்களுடன் திரும்பிய டெரருக்கு தன் வரிசை எது என்று சரியாகத் தெரியவில்லை.முன்னால் அமர்ந்திருந்தவரிடம்,'சார்,படம் ஆரம்பிக்குமுன் நான் உள்ளே போகும்போது உங்கள் காலை மிதித்துவிட்டேனா?'என்று கேட்டார். இப்போதாவது அவனுக்கு வருத்தம் தெரிவிக்கத் தோன்றியதே என்று எண்ணி அவர்,'ஆமாம்,'என்றார்.

உடனே டெரர் தன் நண்பர்களிடம் சொன்னார்,''டேய்.... நாம உட்கார்ந்திருந்தது இந்த வரிசை தான்.... வாங்கடா!''

*********

+Ramesh Subburaj: டேய் டுப்பாக்கி லிங் கொடுத்தேனே பாத்துட்டியா?

+இம்சைஅரசன் பாபு: இல்லடா.. இன்னிக்கு நெட் ஸ்பீடு ஓவரா இருக்கு, அதுனால கொஞ்சம் ஸ்லோவானதுக்கப்புறம் பாக்கலாம்னு இருக்கேன்...

+Ramesh Subburaj:அட நாதாரி ஏண்டா?

+இம்சைஅரசன் பாபு: நெட் ஸ்பீடா இருக்கும் போது படம் பாத்தா படமும் ஸ்பீடா ஓடிருச்சின்னா அப்புறம் ஒண்ணுமே புரியாம போய்டுமே.. அதான்...

+Ramesh Subburaj: ^&^&(^&%%$%#@!!!!


*********




டெரர்: நேத்து உன்கிட்ட பேசிட்டு இருந்தாரே அவர் யாரு?

மாலுமி: 'அவரா, அவர் பீச்ல கடலை விற்பவர்.'

டெரர்: அட, பார்க்க ரொம்ப சிம்பிளா இருக்காரே, இவ்வளவு பெரிய கடலுக்கு அவர்தான் ஓனரா? 

மாலுமி:????



*********

ரமேஷ்: எனக்கு இருக்கறதுலயே பெரிய பீசாவா ஒரு பீசா வேணும்.....

சர்வர்:  எத்தன பீசா சார்?

ரமேஷ்: ஒண்ணு போதும்யா.....

சர்வர்: அத எத்தன பீசா வெட்டனும் சார், எட்டு பீசாவா?

ரமேஷ்: என்னது எட்டா... நோ நோ.... என்னால அவ்ளோ சாப்புட முடியாது, நாலு பீசாவே வெட்டுங்க......!

சர்வர்: ????!!!


*********

பாபு டீக்கடை வெச்சிருந்தார். அங்கே ரமேஷ் ரொம்ப கோபமா வந்து பாபுகூட சண்ட போட்டுட்டு இருந்தாரு.......

பாபு: ரொம்ப கோபமா இருக்கே, மொதல்ல ஒரு டீ சாப்புடு..... அப்புறம் பேசுவோம்.... டேய் ஒரு ஸ்ட்ராங்கா ஒரு டீ போட்ரா.....

ரமேஷ்: அதெல்லாம் முடியாது, மொதல்ல நீ நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.......

பாபு: சரி ரொம்ப சூடா இருக்கே, கூலாவாவது ஏதாச்சும் சாப்புடு......

ரமேஷ்: ம்ம்ம்.... சரி கொடு...........

பாபு: டேய் அந்த டீய அப்படியே நல்லா ஆத்தி கொடு.........

ரமேஷ்:!!???%$%






நன்றி: எஸ்கே, ஜோக்குக நெட்டில் சுட்டவையே & நன்றி கூகிள் இமேஜஸ்

Monday, November 26, 2012

குஜய் டீவி வழங்கும் டோபிநாத்தின் அவனா இவனா... சீசன் 2


குஜய் டீவியின் டோபிநாத்அவனா இவனா நிகழ்ச்சிக்கு நம்ம பதிவர்கள்  கோஷ்டியை அழைத்து வந்திருந்தனர். ஸ்டூடியோவில் அனைவரும் நிகழ்ச்சிக்காக தயாராகிக் கொண்டிருந்தனர். அதன் பார்ட்-2 (பார்ட்-1)




டைரக்டர்: ஆமா உங்க டீம்ல நரின்னு ஒருத்தர் இன்னும் வர வேண்டி இருக்குன்னுசொன்னாங்களே…. வந்துட்டாரா?

டெரர்பாண்டியன்: உங்க ஸ்டூடியோவுக்குள்ள ட்ரைன் வருமா?

டைரக்டர்: ட்ரைன் எப்படிங்க இங் வரும்……?

டெரர்: அப்போ நரியும் வரமாட்டார்……. நீங்க ப்ரோகிராம ஆரம்பிங்…………!

டைரக்டர்: என்ன சார் இது, அவருக்காக எங்க ஸ்டூடியோவுக்கு தண்டாவளம் போட்டு தனி ட்ரைனா விட முடியும்?

டெரர்: அவர் ரயில்வேல இருக்கார், ட்ரைன் தவிர வேற எந்த வண்டிலயும் ஏற மாட்டார், ஏன் சைக்கிள்ல கூட ஏறமாட்டார்னா பாத்துக்குங்களேன்.....!

டைரக்டர்: நல்லா வந்து சேர்ந்தானுங்கய்யா.... ஏர்ல பூட்டுன எரும மாதிரி........!




அருண்பிரசாத்: டைரக்டர், இன்னிக்கு என்ன பேசனும்னு எனக்கு க்ளூ கொடுங்க அப்பதான் என்னால பேசமுடியும்….

டைரக்டர்: ஓ.... இவருதான் அந்த புதிர் போட்டி பார்ட்டியா.... யோவ் நீ சின்ன டாகுடர் டீம்தானே…… அந்த கருமத்துக்கு எதுக்குய்யா க்ளூ….. அவர சப்போர்ட் பண்ணி எதுனா பேசுய்யா…….

அருண்: நோ…. க்ளூ கொடுக்கலேன்னா நான் பேஸ் மாட்டேன்…..

டெரர்: டேய்… பேசாட்டி இந்த பபிள்கம்ம வாய்ல போட்டுக்கிட்டு போய் கம்முன்னு அங்கேயே உக்காரு….. டப்பிங்ல பாத்துக்கலாம்….

செல்வா: அண்ணே நான் என்ன பேசனும்ணே….

டெரர்: ப்ரோகிராம் முடிஞ்ச உடனே வந்து கேளு சொல்றேன்……

செல்வா: ப்ரோகிராம் முடிஞ்சதுக்கப்புறம் வந்து கேட்டுட்டு அப்புறம் அத வெச்சி நான் பேசுனா, ப்ரோகிராம் முடியலேன்னு ஆகிடுமே? அப்போ எப்படி நான் ப்ரோகிராம் முடிஞ்ச உடனே வந்து கேட்க முடியும்.....?




டெரர்: (ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்பா........ இப்பவே ரத்த காயம் ஆகிடும் போல இருக்கே....) அடேய்ய்ய்... அதுக்குத்தான் உன்ன ப்ரோகிராம் முடிஞ்ச உடனே வந்து கேட்க சொல்றேன்....

செல்வா: சரிண்ணே….

டெரர்: ?????ஒருவழியா போய்ட்டாண்டா.....

வைகை: இந்த ஃபேஸ்புக் ஓனர் மங்குவ எங்கடா காணோம்…. யோவ் மங்கினி.. அங்க என்னய்யா பண்ணிட்டு இருக்கே…. வந்து உக்காரு…..

மங்குனி அமைச்சர்: இரு இரு இன்னும் ஜஸ்ட் 350 லைக்ஸ்தான்…… போட்டு முடிச்சிட்டு வந்திடுறேன்…..

டெரர்: என்னது 350 லைக்கா? எதுக்குடா?

மங்கு: பேஸ்புக்ல இன்னிக்கு காலைல இருந்து வந்த எல்லா ஸ்டேட்டஸ்கும் லைக் போட்டுட்டு இருக்கேன்…….

டெரர்: அடப்பாவி……. இங்கே வந்து உன் சீட்ல உக்காந்து என்ன கருமத்தையும் பண்ணித் தொலை…… லைக்குன்ன உடனேதான் ஞாபகம் வருது, நம்ம பிரபல லைக்கர் அண்ணன் பட்டிக்காட்டான் ஜெய் எங்கப்பா.. இங்கதானே நின்னுட்டு இருந்தாரு...?

வைகை: பக்கத்துல சமையல் ப்ரோகிராம் நடந்திட்டு இருக்கு, அதுக்கு லைக் போட்டுட்டு இருக்காரு... ச்சே அத வேடிக்க பாத்துட்டு இருக்காரு....!

டெரர்: என்னது சமையல் ப்ரோகிராமா....? நாசமா  போச்சி..... அவரு இப்போதைக்கு வரமாட்டாரு.... சரி அங்கேயே இருக்கட்டும், நம்ம ப்ரோகிராம் முடிஞ்ச உடனே ஞாபகப்படுத்துங்க, கையோட கூட்டிட்டு போய்டுவோம்....!




வெறும்பய ஜெயந்த்: அண்ணே…… இங்க கவிதை வாசிக்க விடுவாங்களா?

பன்னி: என்னது இங்க கவிதாவ சிக்க விட்டுட்டியா?

ஜெயந்த்: அய்யய்யயோ……….. சத்தமா பேசாதீங்கண்ணே, கவிதா கோச்சுக்க போறா......! அது இருக்கட்டும், நான் ஒரு கவிதை எழுதி இருக்கேன், அத இந்த ப்ரோகிராம்ல வாசிக்கனும்…….. அலோ பண்ணுவாங்களான்னு கேட்டேன்….

பன்னி: எங்கடா அவன் இந்த டைரக்டரு……. தீவட்டி தலையன்…. டேய் இங்க வாடா………. ப்ரோகிராம்ல இந்த தம்பி ஒரு கவிதை வாசிப்பாப்ல என்ன ஓக்கேவா…?

டைரக்டர்: தலைப்புக்கு சம்பந்தமான கவிதைன்னா ஓகேதான்….

பன்னி: (படுவா நீயும்தான் மூஞ்சிக்கும் தலைக்கும் சம்பந்தமே இல்லாம இருக்க……… நாங்க டைரக்டர்னு ஒத்துக்கலையா?) ஆங்…. அது எல்லாம் சம்பந்தப்படுத்திக்கலாம்... சரி ஓக்கே…… நம்ம எலக்கியவாதி நாகா எங்கப்பா…….?

பாபு: அவன் அதோ அந்த மூலை உக்காந்து பீரு ஆன்லைன்ல பின்நவீனத்துவ பலக்கியம் படிச்சிட்டு இருக்கான்...

பன்னி: அவனை இங்க வந்து உக்காந்து அந்த கருமத்த பண்ண சொல்லுங்க...

டெரர்: ஆமா, நம்ம மாணவன் எங்க, வந்ததுல இருந்து பாத்துட்டு இருக்கேன் ஆளையே காணோமே?

வைகை: மாணவன் வழக்கமா யாராவது லவ்வர்ஸ் இருந்தாங்கன்னா அவங்க பக்கத்துல நின்னு வேடிக்க பார்ப்பான்...... அந்த மாதிரி இங்கேயும் எங்கேயாவது நின்னுட்டு இருக்க போறான்.......

பன்னி: வெளங்கிரும்...... இதுக்காக இங்க எங்கெ எங்கே... யாரு யாரு லவ்வர்ஸ் இருக்காங்கன்னு போய் விசாரிக்க சொல்றியா? டேய் இதெல்லாம் உனக்கே நல்லாருக்கா? அந்த டைரக்டர்கிட்ட போயி இப்படி கேட்டேன்னா என்னைய பத்தி என்ன நெனப்பான்..........? சரி சரி, அந்த பக்கமா லாபில ஒரு லவ்வர்ஸ் போஸ்டர் இருந்துச்சு..நீ எதுக்கும் அங்க பாரு........




வைகை: அங்கதான் இருக்கான்...... கூட்டிட்டு வரவா.....?

பன்னி: அந்த போஸ்டரை எடுத்துட்டு வந்து இங்க ஒட்டு........... போதும்....

டைரக்டர்: என்ன சார் இப்பவாவது ஆரம்பிக்கலாமா?

பன்னி: ஆர்டா நீய்யி.......... ஓ நீதான் டைரக்டரா.......... சரி சரி ஆரம்பிச்சி தொலை.........


நன்றி: கூகிள் இமேஜஸ்

Wednesday, November 7, 2012

சிட்டிக்காட்டான் (எ) பட்டிக்காட்டான்... ஒரு பய(ங்கர) டேட்டா....




பெயர்                                                            : சிட்டிக்காட்டான்


புனைப்பெயர்                                             :  பட்டிக்காட்டான்


தொழில்                                                       : லைக் போடுதல் (ஃபேஸ்புக், கூகிள் ப்ளஸ்)


உபதொழில்                                               : கருத்து சொல்வது


தலைவர்(கள்)                                            : இணைய போராளிகள்


துணைத்தலைவர்(கள்)                          : பதிவர்கள், ப்ளஸ்ஸர்கள், ஃபேஸ்புக்கர்கள், ட்விட்டர்கள் அனைவரும்


பொழுதுபோக்கு                                     : சண்டை நடக்கும் இடங்களை தேடிப் பிடித்து கருத்து சொல்லுதல்


துணைப்பொழுதுபோக்கு                   : புது சண்டைகளை ஆரம்பித்து வைத்தல்


மேலும் பொழுதுபோக்கு                     : சண்டையில் கிழியாத சட்டை வைத்திருப்பவர்களை கண்டுபிடித்து சண்டைக்கு அழைத்து செல்வது


வயது                                                           : பிரபல பதிவருக்கு தகுதியான வயது


பலம்                                                            : மகளிர் அணி


பலவீனம்:                                                   : பலம்


சமீபத்திய சாதனை                                : ட்விட்டரில் நுழைந்திருப்பது


நீண்டகால சாதனை                             : பதிவராக இருப்பது




சமீபத்திய எரிச்சல்:                               : சைபர்கிரைம்


நீண்டகால எரிச்சல்:                             : புரியாத பதிவுலக அரசியல்


நண்பர்கள்:                                               : பதிவர் சந்திப்புக்கு வந்தவர்கள்


எதிரிகள்                                                   : சொல்ல மாட்டோமே....! (யாருன்னு சொல்லி அப்புறம் போய் கால்ல விழுந்து நண்பராக்கிட்டா...?)


ஆசை                                                        : என்றும் பதிவர்


நிராசை                                                    : குறைந்து வரும் பதிவுலகம்


நம்பிக்கை                                               : பதிவர் சங்கம்


பயம்                                                          : ஜெயில்



லட்சியம்:                                                 : நெ.1 ஆல் இன் ஆல் கருத்து கந்தசாமி


இதுவரை மறந்தது:                               : பழைய பிரபல பதிவர்களை


இனி மறக்க வேண்டியது:                   : புதிய பிரபல பதிவர்களை


விரும்புவது:                                           : அனைத்து ப்ளஸ்கள், ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்கள், கமெண்ட்டுகள் (அட லைக் போடுறத சொன்னோம்......!)


விரும்பாதது:                                          : எதுவுமே இல்லை



நன்றி: கூகிள் இமேஜஸ்....!

Monday, November 5, 2012

குஜய் டீவி வழங்கும் டோபிநாத்தின் அவனா இவனா...




குஜய் டீவியின் டோபிநாத்அவனா இவனா நிகழ்ச்சிக்கு நம்ம பதிவர்கள்  கோஷ்டியை அழைத்து வந்திருந்தனர்அன்றைய நிகழ்ச்சியின் தலைப்பு

அடுத்த முதல்வர் சின்ன டாகுடரா பெரிய டாகுடரா?”


நிகழ்ச்சி தொடங்க இன்னும் சிறிது நேரம் இருக்கிறதுஸ்டூடியோவில் அனைவருக்கும்  மேக்கப் போடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பாபு: டேய் என்னடா மேக்கப் போடுறீங்க…. ரொம்ப கருப்பா இருக்கு?

மேக்கப் மேன்: சார் உங்களுக்கு இன்னும் மேக்கப்பே போடல தண்ணிய தொட்டுதான் தொடச்சிருக்கோம்….

பாபு: நோ… அது தண்ணி இல்லதாரு……… யார்கிட்ட பொய் சொல்றே……? தண்ணிக்கு பதிலா தாரை தடவ சொன்னது யாருடெரர்தானேஎனக்கு அப்பவே தெரியும்அவன்  இந்த மாதிரி ஏதாச்சும் பண்ணுவான்னு….. எனக்கு இந்த மேக்கப்பும் வேணாம் ஒரு எழவும் வேணாம்…. நான் சும்மாவே அழகாத்தான் இருக்கேன்…….

டெரர் பாண்டியன்: அப்போ எனக்கும் மேக்கப் வேணாம்….

கேமராமேன்: ஐய்யய்யோ…… சார்… சார்... ரெண்டு பேரும் மேக்கப் போடாட்டி கூட பரவால்ல இந்த வெள்ள சட்டையையாவது போட்டுக்குங்கஇல்லேன்னா கேமரா  அடி வாங்கிரும்….

பாபு: யோவ் என்னய்யா பெரிய கேமரா... எங்க  பட்டிக்காட்டான் ஜெய் பாக்காத கேமராவா….. உனக்கு முதல்ல ஸ்டில் போட்டோ ஒழுங்கா எடுக்க தெரியுமாபோட்டோ வாக்னா  என்னான்னு தெரியுமா?

ஜெய்: (கிசுகிசுப்பாகடேய் பாபு அத ஏன்டா இங்க கோர்த்து விடுறே…. என்ன கேமரா வெச்சிருக்கீங்கன்னு கேட்டா நான் மாட்டிப்பேன்டா……!

பாபு: ஏண்ணே?

ஜெய்: ஏன்னா நான் நோக்கியா 1100 வெச்சிதான்டா அந்த போட்டோ எடுத்தேன்…….

பாபு: க்க்க்ர்ர்ர்ர் தூ………

கேமராமேன்: (என்னது போட்டோ வாக்கா…….. ஒருவேள பெரிய போட்டோகிராபர்களா இருக்குமோ…?) சரி விடுங்க சார்….. உங்க இஷ்டம்

மொக்கராசா: யோவ் பாபுப்ரோகிராம் ஆரம்பிக்க முன்னாடியே கேமராமேன்கிட்ட பேசி ஜெயிச்சிட்டியேஇன்னிக்கு நாமதான்யா ஜெயிக்கிறோம்…… ஆமா சார்... டைரக்டர்சார்… ஜெயிக்கிறவங்களுக்கு என்ன சார் கொடுப்பீங்க?

டைரக்டர்: யோவ் இது சமூக அக்கறைல(?) நடத்துற நிகழ்ச்சிஇத பாத்து நாலு பேரு திருந்துனாங்கன்னா போதும்அவ்ளோதான் பரிசெல்லாம் கிடையாது.

டெரர்பாண்டியன்: இந்த ப்ரோகிராம பாத்து திருந்துறானுங்களோ இல்லியோஎங்கள பாத்து நிறைய பேர் திருந்திடுவானுங்க பாருங்க……

வைகை: அடிங்க….. உன்னைய பாத்து எவனும் திருந்த மாட்டான்பேதி புடிங்கி தான் ஓடுவான்……. ஹல்லோ டைரக்டர் சார்பாபு & டெரர் இவங்க ரெண்டு பேர்பக்கத்துலயும் என்னைய உக்கார வைங்க….

டைரக்டர்: ஏன்?

வைகை: இல்ல நான் கொஞ்சம் செகப்புஅவங்க பக்கத்துல இருந்தா இன்னும் செகப்பா அழகா தெரிவேன்ல……

பாபு: நோ நோ…. அவன் பக்கத்துல இருந்தா நான்தான் செகப்பா தெரிவேன்…….

டெரர்: நல்ல வேள என்னைய உக்கார வெச்சா டோட்டல் ஸ்டூடியோவும் டிம்மாகிடும்னு இன்னும் எவனுக்கும் தெரில போல…..





பன்னிக்குட்டி ராம்சாமி: டேய் இங்க இவ்வளவு அமளிதுமளி நடந்திட்டு இருக்கு, இந்த ரமேஷ்  நாதாரி  எங்கடா போனான்…….?

வைகை: அங்க பாரு………….

ரமேஷ்  ஸ்டூடியோவில் கொடுத்த மாரி பிஸ்கட்டில் கடைசி பாக்கெட்டை தின்று முடித்துக் கொண்டு இருக்கிறார்

பன்னி: அடேய்ய்….. இங்கேயுமாடா…? அடங்கொக்காமக்கா…. எல்லா பிஸ்கட்டையும் தின்னு முடிச்சிட்டியா?

ரமேஷ்: ஆமா மச்சி வீட்டுக்கு எதையும் எடுத்துட்டு போக கூடாதுன்னு சொல்லிட்டாங்கஅதான் எல்லாத்தையும் உக்காந்து தின்னு முடிச்சிட்டேன்…. சரிப்ரோகிராம்என்னாச்சுஆரம்பிச்சிடுச்சா?

பன்னி: இன்னும் இல்லபாபுவுக்கு மேக்கப் போடுறதுல பிரச்சனை ஆகிடுச்சு…..

ரமேஷ்: ஏன் மேக்கப் பத்தாம பெயிண்ட் ஃபேக்டரிக்கு கூட்டிட்டு போயிட்டாங்களாஅவனை பெயிண்ட் ட்ரம்முக்குள்ள பத்து நாளு ஊற வெச்சாலும் ஒண்ணியும்ஆவாதே…….. அவனுக்கு எதுக்கு மேக்கப் போடுறானுங்க…? சரி அதவிடு….. இந்த ப்ரோகிராம்ல கைய ஆட்டி ஆட்டி ஒரு புள்ள பேசுமே எங்கடா காணோம்?

மாலுமி (ப்ரொபசனல் குடிகாரன்): நானும் அதுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் மச்சிகண்ணுலயே காட்ட மாட்றானுங்க…… சே

ரமேஷ்: ப்ரோகிராம் ஆரம்பிச்சிட்டா வந்துதானே ஆகனும்… ஆனா மியூசிக் வாசிக்கிற ஆளுகளையும் காணோமே?

பாபு: ம்மூதேவி…. இது டூப்பர் சிங்கர் ப்ரோகிராம் இல்லஅவனா இவனா ப்ரோகிராம்இங்க பாடக்கூடாதுபேசனும்……….

ரமேஷ்: நான் பேசுனாவே பாடுற மாதிரிதானே இருக்கும்….. அதான் மியூசிக்கும் இருந்தா இன்னும் நல்லா ரீச் ஆகுமேன்னு பார்த்தேன்……

(ஆல் மெம்பர்ஸ்): க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் த்தூ..

ரமேஷ்: இதுக்கு மட்டும் எல்லாரும் ஒண்ணுகூடிடுறானுங்கய்யா……..

மாலுமி: நான் டான்ஸ் ஆடனும்னு நினைச்சி ரெண்டு பாட்டு மனப்பாடம் பண்ணிட்டு வந்திட்டேனே.. இப்ப என்ன பண்றது?

பன்னி: பரவால்ல சும்மா ஆடு…. மப்பு தெளிஞ்சிடுச்சின்னு சொல்லி நாங்க சமாளிச்சிடுறோம்

மாலுமி: இல்ல மச்சிஇன்னிக்கு பலாமாஸ்டர் முன்னாடி நல்லா ஆடி அசத்தனும்னு இருக்கேன்…. அதான்

பன்னி: டேய் இது பானாட பயிலாட இல்லடா….. அவனா இவனா நிகழ்ச்சி…….. இங்க டோபிநாத் தான் வருவார்.

மாலுமி: என்னது பலாமாஸ்டர் வரமாட்டாங்களா…..? அப்புறம் என்னைய ஏன்டா இந்த ப்ரோகிராமுக்கு கூப்புட்டீங்கஇன்னேரம் ரெண்டு ஃபுல்ல முடிச்சிருப்பேனே……

மொக்கை: என்னது டோபிநாத்தா…….? நம்ம பவர்ஸ்டார அசிங்கப்படுத்துனாரே… அவரா?

வைகை: அவரேதான்……….

மொக்கை: இது தெரிஞ்சிருந்தா நானும் இந்த ப்ரோகிராமுக்கே வந்திருக்க மாட்டேனே………

டெரர்: டேய் என்னடா ஆளாளுக்கு இப்படி சொல்லிட்டு இருக்கீங்கஅதான் வந்தாச்சில்ல……… வந்த வேலைய பாருங்கடா…..

பன்னி: ஆமா……. இது பெரிய ஃபோர்டு பேக்டரி…… எல்லாரும் கைல ஸ்பானர் எடுத்துட்டு போய் வேலைய பாருங்க……

டெரர்: ஆமா இவரு பெரிய மெக்கானிக்கு... கைல ஸ்பானர் இல்லாம வேல பாக்க மாட்டாரு……….

டைரக்டர்: என்னங்கடா இது… ப்ரோகிராமே ஆரம்பிக்கல அதுக்குள்ள அடிச்சிக்கிறானுங்க……..?

கேமராமேன்: சார் அப்படியே சைலண்ட்டா கேமராவ ஆன் பண்ணி விட்ரவாப்ரோகிராம இப்படியே முடிச்சிடலாம்….

டைரக்டர்: யோவ் அப்புறம் டைட்டிலுக்கு சம்பந்தமில்லாம போயிடுமேய்யா…?

கேமராமேன்: அதான் டோபிநாத் இருக்கார்ல…….? அவர தனியா கொஞ்சம் பேச சொல்லி எடிட் பண்ணி நடு நடுவுல போட்டு விட்டா எல்லாம் சரியா வந்திடும் சார்…….

டைரக்டர்: இதுவும் நல்ல ஐடியாவாத்தான் இருக்கு………….

டெரர்: சார் சீக்கிரம் ஆரம்பிங்க……. இல்லேன்னா இவனுங்க ப்ரோகிராமையே மாத்திடுவானுங்க…….

டைரக்டர்: ஏன்யா…?

டெரர்: இப்பவே பலா மாஸ்டர் எங்கேன்னு கேக்க ஆரம்பிச்சிட்டானுங்க……. இனி பமீதா எங்கேபஷ்பு எங்கேன்னு ரகளை பண்ண ஆரம்பிச்சிடுவானுங்க சார்…. சட்டுன்னுப்ரோகிராம ஆரம்பிங்க……

டைரக்டர்: ஆமா உங்க டீம்ல நரின்னு ஒருத்தர் இன்னும் வர வேண்டி இருக்குன்னு சொன்னாங்களே…. வந்துட்டாரா?

தொடரும்.....