Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Monday, July 22, 2013

தலைவா.... எனது பார்வையில்...!




எச்சரிக்கை: இது ஒரு முன் விமர்சனம்

ஓப்பனிங் சீன். சந்தானம், மனோபாலா மற்றும் பிற அல்லக்கைகள் எல்லாரும் எதற்கோ காத்திருகிறார்கள். அங்கே ஒரு புதியவர் வந்து பார்த்து எல்லாரும் காத்திருப்பதைப் பார்த்து திகைக்கிறார். ஏன் இப்படி காத்திருக்கீங்க ஏன்று திட்டுகிறார். அதற்கு சந்தானம் படத்துக்கு படம் பலவருசமா இப்படித்தான் பண்ணிட்டு இருக்கோம் உங்களுக்கு தெரியாதா. ஏன்யா சினிமா எதுவும் பாத்தது இல்லையா...? ஸ்ட்ரெயிட்டா சென்ட்ரல் ஜெயில்ல இருந்து வர்ரியான்னு எகிற,  மனோபாலா எல்லாத்தையும் மூடிட்டு உக்காந்து வேடிக்கை பாரு தெரியும்னு சொல்ல, எல்லாருக்கும் பல்ஸ் பதறுது. தங்கச்சி கேரக்டர்ஸ் ரெண்டு பேரு எங்கண்ணன் இப்ப வந்துடும், இப்ப வந்துடும்னு சொல்லி சொல்லி தாய்க்குலங்களை தவியா தவிக்க வெக்கிறாங்க.  திடீர்னு ஒரு சத்தம், நாலஞ்சு பேர் தலைவா வந்துட்டார் தலைவா வந்துட்டார்னு கத்திக்கிட்டே தலைதெறிக்க ஓடிவாராங்க. அந்த இடம் முழுதும் ஒரே பதட்டமும்  பரபரப்பும் தொற்றிக் கொள்கிறது.




அப்போ க்ளோசப்ல ஒரு வலது பக்க ஷூவ மட்டும் (காலோடுதான்யா) காட்டுறாங்க. அதுல நாலாபக்கமும் நெருப்பு பொறி சிதறிட்டு இருக்கு. இடது பக்க ஷூவையும் காட்டுறாங்க அதுலயும் நெருப்பு பொறி சிதறிட்டு இருக்கு. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா கேமராவ மேல தூக்குறாங்க. டாகுடர் எதுக்குன்னே தெரியாம ஆக்ரோஷத்தோட வர்ராரு. முகத்துல இருந்தும் நெருப்பு பொறி அங்கங்க தெரிச்சு விழுது. பக்கத்துல வந்ததும் முகம் டக்குன்னு சாந்த்தமா மாறுது, உடனே க்ளோசப்ல காட்டுறாங்க. அப்படியே கைய மேல தூக்கி வணக்கம் வைக்கிறார் பாருங்க, சான்சே இல்ல, பட்டாசு கிளப்பும் சீன். பின்னால தலிவா... ச்சே தலைவா தலைவான்னு கோசம் வேற விண்ணை முட்டுது. பார்க்கும் போதே உடம்பெல்லாம் சிலிர்க்குது. இதுவரை எந்த படத்துலயும் வந்திராத ஓப்பனிங்  சீன்ன்னு கண்ணு, வாயி, மூக்குன்னு எல்லாத்தையும் மூடிட்டு சொல்லலாம். இப்படி ஒரு வழியா ஓப்பனிங் சீன்  முடிஞ்சு ஓப்பனிங் சாங் ஆரம்பிக்குது. சாங்னா சாங் அப்படி ஒரு சாங். விஜய் யார், என்ன செய்றாரு, என்ன செய்ய போறாரு, எப்படி செய்ய போறாரு, அவருடைய திறமை, புகழ், பெருமைன்னு எதையும் விட்டு வைக்காம நம்மளை திக்குமுக்காட வெக்கிறாங்க, ஒரே பாட்டுல இவ்ளோ விஷயத்தையும் எப்படி கொண்டுவந்தாங்கன்னு திகைப்பா இருக்கு. ஒண்டர்புல் ஜாப்.




குட்டிசுவத்து மேல டாக்டர் விஜய் தன் நண்பர்களோட உக்காந்து ஜாலியா அரட்டை அடிச்சிட்டு இருக்கார். அப்போ சைடு வில்லன் & கோ குவாலிஸ், ஸ்கார்ப்பியோ சகிதமா கத்திக்கிட்டே தாறூமாறா வர்ராங்க. கைல அருவாள வேற வெச்சி சுத்திக்கிட்டே இருக்கானுங்க (அப்பதானே அவங்க அருவா வெச்சிருக்கறது நமக்கு தெரியும்?) நம்ம ஹீரோ & கோ அதை கண்டுக்காம அலட்சியமா அரட்டைல பிசியா இருக்காங்க. வில்லன் குரூப்ல இருந்து ஒரு வண்டி அவங்க பக்கத்துல நிக்குது, அதுல இருந்து கரடுமுரடா ஒருத்தன் இறங்கி நேரா இவங்கள நோக்கி வந்து பக்கத்துல வந்த உடனே விலகி  அருகிலேயே ஒண்ணுக்குப் போறான். அவன் இறங்கி வர்ரதும், ஒதுங்கி ஒண்ணுக்குப் போறதும் பரபரப்பின் உலகத்தரம். அதைப் பார்த்து நமக்கே கோவம் கோவமா வருது.

ஆனா டாக்டர் விஜய், அதையும் கண்டுக்காம அலட்சியமா ஒரு லுக் விட்டுட்டு அரட்டையை கண்டினியூ பண்ணுவது செம கெத்து சீன். அந்த கரடுமுரடு பார்ட்டி ஒண்ணுக்கடிக்கும் போது வேணும்னே ஹீரோ கோஷ்டியோட அல்லக்கை கால் மேல தெரிக்கிற மாதிரி அடிக்கிறான். அதை பார்த்ததும் விஜய் அவன் சட்டைய புடிச்சு இழுத்து ஏண்டா இப்படி பண்றே என்று கேக்கிறார். அதுக்கு அவன் ஒண்ணுக்கடிக்கிற இடத்துல உக்காந்திருந்தா மேல படத்தாண்டா செய்யும்னு சொல்றான். அதைக் கேட்டதும் விஜய் சூறாவளியா கெளம்பி வேட்டையாடுறாரு பாருங்க, சான்சே இல்ல. தமிழ் சினிமாவுல இப்படி ஒரு சண்டைய பாத்து எத்தன வருசமாச்சுய்யா. 

சண்டை போட்டு முடிஞ்சதும்தான் தெரியுது அந்த வில்லன் & கோ ஏதோ வில்லங்கமான வேலைக்காகத்தான் போய்ட்டு இருக்காங்கன்னு. அவங்களோட எல்லா கார்களையும்  நிறுத்தி பரபரன்னு செக் பண்றார். நமக்கும் திக் திக்னு இருக்கு. அதுல ஒரு கார்ல அமலா பால் கட்டி வைக்கப்பட்டிருக்கார். விஜய் உடனே அவரை விடுவிக்கிறார். ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கிறாங்க. உடனே நம்ம டாக்டர் வழக்கம் போல ஸ்டைலா வாய்க்குள்ள கோலிக்குண்டை குதப்புறார். அப்படியே செமத்தியா ஒரு டூயட் சாங்க். செம பீல் குட் எபக்ட்.




பாட்டு முடிஞ்சதும் டாக்டர் விஜயோட தேடுதல் வேட்டை ஆரம்பிக்குது. வில்லன் கும்பல்ல எல்லாரும், அடிக்கடி தேவையில்லாம அழுகுறாங்க. அதை நோட் பண்ணி, அவங்க கடத்துறது சாம்பார் வெங்காயம்தான்னு கண்டுபிடிப்பது சபாஷ் போட வைக்கிறது. அந்த வில்லன் கும்பல் சென்னைல இருந்துதான் சாம்பார் வெங்காயத்தை கடத்திட்டு வர்ராங்கன்னும் கண்டுபுடிக்கிறார். நண்பர்கள்லாம் இது ரொம்ப பெரிய இடம் வேணாம்னு சொல்லும் போது பதிலுக்கு அவர் பேசும் பஞ்ச் டயலாக்குகள் இனி பட்டிதொட்டியெங்கும் பேசப்படும். வெளிநாட்டு விஞ்ஞானிகள் உதவியுடன் சாம்பார் வெங்காயத்தை வைத்து வில்லன்  சாராயம் தயாரிக்க முயற்சிப்பதும், அதை டாக்டர் விஜய் அந்த விஞ்ஞானிகள் மூலமாகவே தடுப்பதும் செம ஹைடெக். இந்த நவீன கம்ப்யூட்டர் யுகத்திற்கேற்ப எல்லாமே பேஸ்புக்கிலேயே நடப்பதாக காட்டி இருப்பது மிகவும் சுவராசியமாக இருக்கிறது.

சென்னைல உள்ள அவங்க நெட் ஒர்க்கை கண்டுபுடிச்சி மெயின் வில்லனை அழித்து ஒழிக்கறதுக்காக சென்னை கிளம்புறார். அவர் சென்னை செல்லும் அந்த பாட்டு சீன்கள் ஜோரா வந்திருக்கு. அமலா பாலும் சென்னைக்கு வருவது, அவரை வில்லன்கள் கடத்த முயற்சிப்பது எல்லாம் கிளாஸ்.  சென்னைல அவர் ஒவ்வொரு தாதாவா தனித்தனியா ஸ்கெட்ச் போட்டு, பஞ்ச் டயலாக் பேசி(யே)  போட்டுத்தள்ளும் சீன்கள் ஏ ஒன் ரகம். செம விருவிருப்பு. கடைசில அவர் மெயின் வில்லனை நேருக்கு நேரா சந்திச்சு கேள்விகள் கேக்குறது செம பஞ்ச். அவற்றை உலகில் உள்ள தாதாக்கள் அனைவரையும் கேக்க வைத்தால் அவர்கள் அனைவரும் அந்த நிமிடமே திருந்திவிடுவார்கள்.  அவ்வளவு கருத்துக்களும், தத்துவங்களும் அவற்றில் பொதிந்திருக்கின்றன.  சமூக ஆர்வலர்கள் முயற்சிக்கலாம்.

மொத்தத்தில் தலைவா பட்டாசு கிளப்புகிறான்.

நன்றி: கூகிள் இமேஜஸ்!

Monday, March 4, 2013

அப்ரைசலும் அடங்காத டேமேஜர்களும்........




நம்ம டெரர்பாண்டியன் ஆபீஸ்ல அப்ரைசல் டைம், அந்த வருசம் ரொம்ப நல்லா பர்ஃபார்ம் பண்ணி இருந்ததால, ரொம்ப எதிர்பார்ப்போட பாஸ்கிட்ட அது விஷயமா பேச போறாரு........



பாஸ்: இந்த வருசம் ரொம்ப நல்லா பர்ஃபார்ம் பண்ணி இருக்கீங்க, அதுனால உங்களுக்கு ரொம்ப முயற்சி பண்ணி ஆவரேஜ் ரேட்டிங் கொடுத்திருக்கோம்...

டெரர்: என்னது.......... ஆவரேஜா..............!!!!!!.... சார், அதான் நல்லா ஒர்க் பண்ணியிருக்கேனே, அப்புறம் எப்படி சார் ஆவரேஜ்?

பாஸ்: ம்ம்.... நீங்க... உங்களுக்கு பிசினஸ் ஸ்கில் குறைவு அதான்..

டெரர்: பட் போன வருசம் நீங்கதானே நான் பிசினஸ் எக்ஸ்பர்ட்னு சொல்லி என்னை இந்த குரூப்புக்கு பிசினஸ் ஸ்பெசலிஸ்ட்  ஆக்குனீங்க.......?

பாஸ்: ஓ... ஆமால்ல...... ஆங்...  உங்களுக்கு ஃபங்சனல் நாலெட்ஜ் இல்லேன்னு சொல்ல வந்தேன்....

டெரர்: என்னது?

பாஸ்: அதான்..... அதாவது நீங்க டெக்னிகல் நாலெஜை டீம் மெம்பர்ஸ் கூட ஷேர் பண்ணிக்க மாட்டேன்றீங்க.....

டெரர்: டெக்னிகல் நாலெஜ்ஜா? சார் மொதல்ல நான் டெக்னிகல் பர்சனே கிடையாது, நான் மேனேஜ்மெண்ட் ஆளு...... டெக்னிகல் மேட்டரை நான் எப்படி ஷேர் பண்ண முடியும்?

பாஸ்: இதான் இதுதான் உங்ககிட்ட எனக்கு பிடிக்கல, என்ன சொன்னாலும் பதில் பேசுறீங்க, காரணம் சொல்றீங்க..... 

டெரர்: ???!!!




பாஸ்: ஓக்கே அடுத்து நீங்க உங்க கம்யூனிகேசன் ஸ்கில்லை நிறையவே இம்ப்ரூவ் பண்ணிக்கனும்......

டெரர்: சார் போனவருசம் கம்யூனிக்கேசன் ஸ்கில்ல நம்ம டீமையே நாந்தான் ட்ரைன் பண்ணேன்.... அப்போ நீங்க கூட உக்காந்து டவுட் கேட்டுட்டு இருந்தீங்க....

பாஸ்: ஓ....ம்ம்ம்......... அது நான் என்ன சொல்ல வர்ரேன்னா உங்க சோசியல் அஃபர்மேட்டிவ் ப்ராக்மாட்டிக் கம்யூனிக்கேசன் ஸ்கில்சை டெவலப் பண்ணனும்....

டெரர்: ???!!!*** என்ன அது..........?




பாஸ்: தெரியல பாத்தீங்களா, அதுக்குத்தான் உங்களை அதை பத்தி தெரிஞ்சுக்க சொல்லலாம்னு சொன்னா நீங்க சொல்லவே விடாமே எதிர்கேள்வி கேட்கிறீங்க.....!

டெரர்: ..........(<>)(<>)............

பாஸ்: அப்புறம் உங்க ரெக்ரூட்மெண்ட் ஸ்கில்சையும் நீங்க இம்ப்ரூவ் பண்ணிக்கனும்... நீங்க ரெக்ரூட் பண்ண ஆளுக எல்லாரும் ஒரே மாசத்துல ஓடிட்டானுங்க.....

டெரர்: சார்.... அது நீங்க அவனுங்க சீட்பக்கத்துலயே உக்காந்து எல்லா ஒர்க்கையும் டெய்லி செக் பண்ணுவேன்னு சொன்னதால வந்தது. அதுல 2-3 பேரு சூசைட் அட்டம்ப்ட் வேற பண்ணதா கேள்வி......

பாஸ்: ஓ.....அது.... வந்து.........  எப்படியோ எல்லாத்துக்கு மேலேயும் உங்களுக்கு பெட்டர் ரேட்டிங் கொடுக்க ரொம்ப முயற்சி பண்ணியிருக்கேன், பட் நம்ம ரேட்டிங் சிஸ்டம்  ஆவரேஜ்தான் கொடுத்திருக்கு......

டெரர்: அது எப்படி சார், போன வருசத்தவிட இந்த வருசம் நல்லாவே பர்ஃபார்ம் பண்ணியிருக்கேன், போன வருசம் எக்சலண்ட் ரேட்டிங்கும், இந்த வருசம் ஆவரேஜ் ரேட்டிங்கும் வந்திருக்கு? அப்படி என்ன ரேட்டிங் சிஸ்டம் சார் அது?

பாஸ்: அது ரொம்ப காம்ப்ளிகேட்டட் ப்ராசஸ்....... உங்களுக்கு புரியாது, நீங்க கேட்கவும் விரும்ப மாட்டீங்க....

டெரர்: பரவால்ல சொல்லுங்க சார், நான் கேட்கிறேன்...

பாஸ்: அது...... அதாவது மேனேஜர்கள்லாம் ஏதாவது மீட்டிங் ரூம்ல உக்காந்து அவங்கவங்க குரூப் ஆளுக பேரை பேப்பர்ல எழுதி தூக்கி மேல போடுவோம்...... எது தரைல விழுகுதோ அவங்க ஆவரேஜ், டேபிள்ல விழுந்தா குட், எங்களால கேட்ச் பண்ண முடிஞ்சது எல்லாம் எக்சலண்ட், ஏதாவது மேல சீலிங்லயே ஒட்டிக்கிட்டா அவுட்ஸ்டேண்டிங் இப்படி ரேட்டிங் கொடுப்போம்....

டெரர்: அப்போ பூவர் ரேட்டிங் யாருக்கு கொடுப்பீங்க?

பாஸ்: அது நாங்க எழுத மறந்த ஆளுகளுக்கு.......!




டெரர்: (அட அயோக்கியப்பயலுகளா........!) இது என்ன சார் முட்டாள்தனமான சிஸ்டமா இருக்கு?

பாஸ்: என்னதிது, நம்ம கம்பெனியோட 25 வருச அப்ரைசல் சிஸ்டத்த கேள்வி கேக்கிறீங்க, இதெல்லாம் ரொம்ப தப்பு..... போய் உங்க வேலைய பாருங்க............

டெரர் மயங்கி விழுகிறார்.............

பாஸ்: (என்ன இதுக்கே மயங்கிட்டான்...... அடுத்த வருசம் இவனையும் மேனேஜர் ஆக்கி விட்ரவேண்டியதுதான், இவன் தான் இதுக்கு சரியான ஆளு.............)



(ஈமெயில்ல வந்ததுதான், முடிஞ்சளவு தமிழ்ப்படுத்தி இருக்கேன்.....)

நன்றி: கூகிள் இமேஜஸ்....

Monday, January 7, 2013

கடல் படத்தின் கதை....?




மணியண்ணன் கடல் படத்த வழக்கம் போல படுசீக்ரட்டா (?) எடுத்திட்டிருக்காராம். அதுக்காக சும்மா விட்ர முடியுங்களா.....? உக்காந்து தோண்டி துருவி கதைய கிண்டி எடுத்துட்டோம்ல.......




கதைப்படி ஹீரோ ஒரு மீனவர். பார்ட் டைம் ரவுடியாவும் இருக்கார். ஓப்பனிங் சீன்... விடிஞ்சும் விடியாமயும் இருட்டா இருக்கு, கடல்ல ஹீரோ கட்டுமரத்துல அன்னிக்கு கெடச்ச மீனை வெச்சிட்டு வந்துட்டு இருக்கார். அங்கங்க சக மீனவர்களும் வந்துட்டு இருக்காங்க. ஹீரோவுடைய நண்பனும் அருகில் தன் கட்டுமரத்தில வந்துட்டு இருக்கான். அப்போ அவனை ரெண்டு பேர் தாக்குறாங்க. ஹீரோ உதவிக்கு போறார். ஹீரோ ஏற்கனவே ரவுடின்றதால (?) எல்லாரையும் அடிச்சி துவம்சம் பண்றார். கடல் தண்ணிலயே ஃபைட்டு தண்ணி சிதற சிதற நடக்குது. ஒருவழியா நண்பனை காப்பாத்தி கரைக்கு கூட்டிட்டு வர்ரார். கரைல மெயின் வில்லன்...... நேரா நின்னுட்டு இருக்கான். ஹீரோவ பாத்து கேட்கிறான்.

வில்லன்: வந்துடு.. என்கூட வந்துடு

ஹீரோ: ஏன்?

வில்லன்: உனக்கு தெரியல..

ஹீரோ: அதான் ஏன்?

வில்லன்: எனக்கும் தெரியல....

ஹீரோ: வரலேன்னா....?

வில்லன்: அடிப்பேன்....

ஹீரோ: யாரை.....?

வில்லன்: அவனை...

ஹீரோ பதில் சொல்லாமல் திரும்பி போறார். ஒருநாள் கடற்கரையில் சண்டை நடக்கிறது. ஹீரோ யாரையோ போட்டு அடித்துக் கொண்டிருக்கிறார். ஹீரோயின் குடைபிடித்தபடி அந்த வழியாக வந்தவர் சண்டையை பார்த்து திகைத்துப் போய் நிற்கிறார். சண்டையின் நடுவே ஹீரோ, ஹீரோயினை பார்க்கிறார். கண்ணும் கண்ணும் நோக்குகின்றன. நோக்கு வர்மம் வேலை செய்கிறது. சண்டை நிற்கிறது. ஹீரோ திகைத்துப் போய் நின்று கொண்டிருக்கும் போதே ஹீரோயின் தலையை குனிந்தபடி சென்று விடுகிறார். ஹீரோவும் பின்னாடியே சென்று ஹீரோயின் அந்த ஊரில் உள்ள ஸ்கூலில் வந்திருக்கும் புது டீச்சர் என்பதை கண்டுபிடிக்கிறார். 

மாலை நேரம், இருட்டியும் இருட்டாமலும் இருக்கிறது. டீச்சரை பார்த்ததில் இருந்து அவர் ஞாபகமாவே இருக்கும் ஹீரோ எப்படியாவது டீச்சரை பார்த்துவிட வேண்டும் என்று இருட்டு சந்தில் இருக்கும் டீச்சர் வீட்டுப் பக்கமாக செல்கிறார். வீட்டுக்குள் இருந்து குடைபிடித்தபடி டீச்சர் வெளியே வருகிறார். வெளியில் நின்று கொண்டிருக்கும் ஹீரோவைப் பார்த்த டீச்சர் ஹீரோவை அருகில் அழைக்கிறார். 

டீச்சர்: எனக்கு வேணும்...

ஹீரோ: என்ன வேணும்..?

டீச்சர்: மீன்...

ஹீரோ: என்ன மீன்?

டீச்சர்: வஞ்சிரம்...

ஹீரோ: எடுத்துக்கோ... எல்லாம் உனக்குத்தான் எடுத்துக்கோ.....

டீச்சர்: எதை?

ஹீரோ: நான் புடிக்கிற மீன் எல்லாமே உனக்குத்தான்.... அது ஏன் உனக்கு புரியமாட்டேங்குது?

டீச்சர் கண்கலங்கி நிற்க பாடல் ஆரம்பமாகிறது. பாடல் முடிந்ததும் பார்த்தால் கடற்கரை மணலில் மறுபடியும் சண்டை. உக்கிரமாக நடக்கிறது. ஹீரோ சுற்றிச் சுற்றி எல்லோரையும் போட்டு அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறார்.  ஹீரோயின் குடைபிடித்தபடி கடற்கரை மணலில் அலைகள் ஓரத்தில் நடந்து வந்து கொண்டிருக்கிறார். அலைகள் வந்து வந்து போய்க் கொண்டிருக்கிறன. சண்டையை பார்க்கிறார். மௌனமாக நிற்கிறார். க்ளோசப் ஷாட். டீச்சர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடுகிறது. உதடுகள் விம்முகின்றன. ஹீரோ இதைக் கவனித்து விட்டு மறுபடியும் ஃப்ரீஸ் ஆகி நிற்கிறார். டீச்சர் அருகில் வருகிறார்.

டீச்சர்: நிறுத்தனும்... எல்லாத்தையும் நிறுத்தனும்....

ஹீரோ: மொதல்ல அவங்கள நிறுத்த சொல்லுங்க....

டீச்சர்: நீங்கதான் மொதல்ல நிறுத்தனும்....

ஹீரோ: ஏன்?

டீச்சர்: ஏன்னா நீங்கதான் அடிக்கிறீங்க, அவங்க அடிவாங்குறாங்க....

ஹீரோ: முடியாது....

டீச்சர்: ஏன்?

ஹீரோ: எனக்கு என்னோட பங்கு வேணும்...

டீச்சர்: எதுல...?

ஹீரோ: அவங்க பண்ண சுண்டக்கஞ்சில....

டீச்சர்: அது வேணாம்....

ஹீரோ: ஏன்?

டீச்சர்: நான் காய்ச்சி தாரேன்.....

இதைக் கேட்டு ஹீரோ சிரிக்கிறார். ஹீரோயினும் சிரிக்கிறார். மாறி மாறி சிரிக்கிறார்கள். மறுபடியும் பாடல் தொடங்குகிறது........ பாடல் முடிந்த உடன் பார்த்தால் ஹீரோவும் ஹீரோயினும் அதே இடத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். பின்னால் ஏற்கனவே அடிவாங்கி ஓடியவன் கத்தியோடு ஓடி வந்து ஹீரோவை குத்தி விடுகிறான். ஹீரோ மயங்கிச் சரிகிறார். டீச்சரின் கதறலோடு ஷாட் முடிகிறது.

ஹீரோயின் வீடு. டீச்சருக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். மாப்பிள்ளை வீட்டார் வந்து அமர்ந்து காப்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். டீச்சர் உள்ளே அறையில் சோகம் அப்பிய முகத்துடன் மௌனமாக நின்று கொண்டிருக்கிறார். அப்போது திடீரென சர்ச்சில் இருந்து மணி அடிக்கும் சத்தம் வருகிறது. டீச்சர் அதிர்ந்து போய் நிற்கிறார்...... டீச்சரின் குடும்பத்தினரும் திகைத்துப் போய் ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர். 

ஹீரோவும் ஹீரோயினும் சேர்ந்தார்களா இல்லையா என்று வெண் திரையில் கண்டு மகிழ்க......



நன்றி: கூகிள் இமேஜஸ்

Wednesday, November 7, 2012

சிட்டிக்காட்டான் (எ) பட்டிக்காட்டான்... ஒரு பய(ங்கர) டேட்டா....




பெயர்                                                            : சிட்டிக்காட்டான்


புனைப்பெயர்                                             :  பட்டிக்காட்டான்


தொழில்                                                       : லைக் போடுதல் (ஃபேஸ்புக், கூகிள் ப்ளஸ்)


உபதொழில்                                               : கருத்து சொல்வது


தலைவர்(கள்)                                            : இணைய போராளிகள்


துணைத்தலைவர்(கள்)                          : பதிவர்கள், ப்ளஸ்ஸர்கள், ஃபேஸ்புக்கர்கள், ட்விட்டர்கள் அனைவரும்


பொழுதுபோக்கு                                     : சண்டை நடக்கும் இடங்களை தேடிப் பிடித்து கருத்து சொல்லுதல்


துணைப்பொழுதுபோக்கு                   : புது சண்டைகளை ஆரம்பித்து வைத்தல்


மேலும் பொழுதுபோக்கு                     : சண்டையில் கிழியாத சட்டை வைத்திருப்பவர்களை கண்டுபிடித்து சண்டைக்கு அழைத்து செல்வது


வயது                                                           : பிரபல பதிவருக்கு தகுதியான வயது


பலம்                                                            : மகளிர் அணி


பலவீனம்:                                                   : பலம்


சமீபத்திய சாதனை                                : ட்விட்டரில் நுழைந்திருப்பது


நீண்டகால சாதனை                             : பதிவராக இருப்பது




சமீபத்திய எரிச்சல்:                               : சைபர்கிரைம்


நீண்டகால எரிச்சல்:                             : புரியாத பதிவுலக அரசியல்


நண்பர்கள்:                                               : பதிவர் சந்திப்புக்கு வந்தவர்கள்


எதிரிகள்                                                   : சொல்ல மாட்டோமே....! (யாருன்னு சொல்லி அப்புறம் போய் கால்ல விழுந்து நண்பராக்கிட்டா...?)


ஆசை                                                        : என்றும் பதிவர்


நிராசை                                                    : குறைந்து வரும் பதிவுலகம்


நம்பிக்கை                                               : பதிவர் சங்கம்


பயம்                                                          : ஜெயில்



லட்சியம்:                                                 : நெ.1 ஆல் இன் ஆல் கருத்து கந்தசாமி


இதுவரை மறந்தது:                               : பழைய பிரபல பதிவர்களை


இனி மறக்க வேண்டியது:                   : புதிய பிரபல பதிவர்களை


விரும்புவது:                                           : அனைத்து ப்ளஸ்கள், ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்கள், கமெண்ட்டுகள் (அட லைக் போடுறத சொன்னோம்......!)


விரும்பாதது:                                          : எதுவுமே இல்லை



நன்றி: கூகிள் இமேஜஸ்....!

Friday, September 14, 2012

சம்பந்தமே இல்லாமல் ஒரு பதிவு...!




ஒரு ஊர்ல 4 விஞ்சாணிகள் இருந்தாங்க. அவங்க வேல மிருகங்களை பத்தி ஆராய்ச்சி பண்றது. குரங்குகளை பத்தி ஆராய்ச்சி பண்ணலாம்னு 10 குரங்குகளை புடிச்சிட்டு வந்து பெரிய கூண்டுல அடைச்சாங்க. கூண்டுக்குள்ள பெரிய வாழைத்தார தொங்க விட்டு, பக்கத்துல ஒரு ஏணியவும் வெச்சாங்க. வாழைப்பழத்த பார்த்த உடனே ஒரு குரங்கு உடனே ஏணில ஏற ஆரம்பிச்சது. ஏணில ஏறுன உடனே சுத்தி பயங்கர குளிர்ச்சியான தண்ணிய எல்லா குரங்குகள் மேலயும் பீச்சி அடிச்சாங்க. மேல ஏறுன குரங்கு தண்ணி வேகம் தாங்காம கீழே வந்துடுச்சு. அது ஏணில இருந்து இறங்கின உடனே தண்ணிய அடிக்கிறத நிப்பாட்டிட்டாங்க. 




கொஞ்ச நேரத்துல இன்னொரு குரங்கு அதே மாதிரி வாழைப்பழத்த சாப்பிடலாம்னு ஏணில ஏற தொடங்குச்சி. அது ஏணிய தொட்ட உடனே மறுபடியும் அதே மாதிரி குளிர் நீர் பீச்சுனாங்க. தாங்க முடியாம ஏறுன குரங்கும் உடனே இறங்கிடுச்சு. இப்படியே தொடர்ந்து 3 வாட்டி நடந்துச்சு. குரங்குகள் எல்லாத்துக்கும், அந்த ஏணிய டச் பண்ணா எல்லார் மேலேயும் குளிர்நீர் பீச்சியடிக்கும்னு புரிஞ்சிடுச்சு. அதுனால எல்லாம் அமைதியா உக்காந்திருச்சுங்க.



அப்போ கூண்டுக்குள்ள இருந்து ஒரு குரங்க வெளில எடுத்துட்டு, புதுசா ஒரு குரங்க உள்ள விட்டாங்க. அதுக்கு தண்ணி மேட்டர் எதுவுமே தெரியாதே. உள்ள போன உடனே வாழைப்பழத்த பார்த்துட்டு ஏணி பக்கத்துல போச்சு. அத பார்த்த உடனே மத்த குரங்குகள்லாம் ஓடிவந்து புதுக் குரங்க ஏணிய டச் பண்ண விடாம இழுத்துட்டு வந்து போட்டு அடிச்சதுங்க. புதுக்குரங்குக்கு ஒண்ணுமே புரியல. ஏணில ஏறுனா அடிப்பாங்கன்னு நெனச்சிட்டு சும்மா உக்காந்துச்சு. 



இப்ப,இன்னொரு பழைய குரங்க வெளில எடுத்துட்டு இன்னொரு புதுக்குரங்க உள்ள விட்டாங்க, அதுவும் வாழைப்பழத்த பார்த்துட்டு ஏணில ஏற முயற்சி பண்ணி மத்த குரங்குகள்கிட்ட அடிவாங்கிச்சு. ஏற்கனவே உள்ள போன புதுக்குரங்கும் அடிக்கிறதுல சேர்ந்துக்கிச்சி. உள்ள வந்த புதுக்குரங்குக்கும் எதுக்கு இப்படி போட்டு அடிக்கிறாங்கன்னு தெரில. 



இப்படியே ஒவ்வொரு குரங்கா வெளில எடுத்துட்டு ஒரு புதுக்குரங்க உள்ள விட்டாங்க. கொஞ்ச நேரத்துல எல்லா பழைய குரங்கும் வெளில வந்துடுச்சு.உள்ள புது குரங்குகள் மட்டும்தான். அப்பவும் எல்லாம் மத்த குரங்குகளை ஏணில ஏற விடாமே அடிச்சிட்டு இருந்துச்சுங்க. ஆனா அதுக எதுக்கும் வாழைப்பழத்த எடுக்க ஏணில ஏறுனா குளிர்ந்த நீர் பீச்சி அடிக்கும், அதுனாலதான் ஏறவிடாம அடிக்கிறோம்னு எதுவும் தெரியாது. முன்னாடி இருந்த குரங்குங்க, அடிச்சது, நாங்களும் அடிக்கிறோம்னு அடிச்சிட்டு இருந்துச்சுங்க. இப்படித்தாங்க உலகத்துல பல விஷயங்கள் நடக்குது......... பட் இதுக்கும் பதிவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதுங்கோ..... 




நன்றி: கூகிள் இமேஜஸ், இது கார்ப்பரேட் கம்பெனிகளில் இருக்கும் ஒர்க் கல்ச்சர் பற்றி கிண்டலடிக்கும் ஒரு பழைய கதை... அவ்வளவே!

!

Monday, April 16, 2012

வலிக்கல....







நானும் பொறுத்து பொறுத்து பார்த்தேன்....
அசிங்கபடுத்துனீங்க..
கேவலபடுத்துனீங்க...
அப்பறம் எங்கள பார்க்கற எடத்துல எல்லாம் வெரட்டி வெரட்டி கொம்மட்டுலையே குத்துனீங்க...அப்ப கூட எங்களுக்கு சூடு சொரணை அவ்ளவா இல்லாததனால அதையும் பொறுத்துகிட்டோம்...

ஆனா, எப்போ மெட்ராஸ்ல துணி கடை இருந்தாதான உன் தலைவன் தங்கச்சி கல்யாணத்துக்கு துணி எடுக்க வந்துட்டு வில்லனுகள அழிப்பான்னு, அஜித் பேன்ஸ் எல்லாம் சேர்ந்து அரசாங்கத்துகிட்ட சொல்லி இருக்கற துணி கடைய பூராத்தையும் மூடுனீங்களோ...இனிமே பொறுத்துக்க மாட்டேன்..வந்து ஸ்பாட்ல எறங்கிட்டான் இந்த வெளியூர்க்காரன்..

என் தங்க தளபதி விஜய்க்க்காகவும், மண்டைல மூளை இல்லன்னாலும் மனசு பூரா பாசத்தோட இருக்கற என் பங்காளிக விஜய் ரசிகர்களுக்காகவும் அடுக்கடுக்கான பாய்ன்ட்டுகளோட அற்புதமா களமிரங்கிட்டாண்டா இந்த முரட்டு காளை..! ( விடு விடு..எங்க கூட்டமே இப்டிதான்...முட்டுசந்துல ஒன்னுக்கடிக்கரதுக்கு கூட எதுனா பஞ்ச் டயலாக் அடிச்சிகினேதான் போவோம்..நீ கண்டுக்காம அடுத்த பேராவுக்கு போ...) 

உங்கள எங்களுக்கு புடிக்காதுதான்..இருந்தாலும் மங்காத்தா படத்துல உன் தல சொன்ன ஒரே வார்த்தைக்கு கண்டி, இதுநாள் வரை நான் அத பாலோ பண்ணிகினுகிறேன்...! (ரெண்டு சரக்க மிக்ஸ் பண்ணி குடிக்காதன்னு...) அந்த பெரிய மனுசத்தனம் உங்கள்ட்ட ஏண்டா இல்ல..அதென்னடா எங்க போனாலும் அடிக்கறீங்க...எத்தன பேர்ரா இருக்கீங்க நீங்க...? விஜய் ரசிகனா இருக்கறது அவ்ளோ பெரிய குத்தமாடா...? 

ஆ ஊன்னா ஒரே கதைல எத்தன படத்துலடா நடிப்பான் உன் தலைவன்னு எகத்தாளம் வேற பேசுறீங்க..நான் உங்கள்ட்ட ஒன்னு கேக்குறேன்..நீங்கல்லாம் ஒரே கம்பெனில பத்து வருஷம் வேலை பார்க்கறதில்ல..அதே மாதிரிதாண்டா இதுவும்...! கடந்த பத்தாண்டு காலமா ஊர்னாட்லேர்ந்து கெளம்பி வந்து மெட்ராஸ் வில்லனுகள அழிக்கரதுன்னா சும்மா இல்லடா தம்பி...பஸ் சீசன் டிக்கெட் எடுத்தே சொத்து அழிஞ்சிரும்...இருந்தும் என் தலைவன் அதையே காலகாலமா அலுத்துக்காம செஞ்சுக்கிட்டுருக்கான்...நீ அதுக்கே அவன கோவில் கட்டி கும்புடணும்...

இப்பல்லாம் என் தலைவன் எந்த ஊர்ல பஸ்ல ஏறுனாலும் கண்டக்டர் கேக்குறாராம்...என்ன சார் ஊருக்கு போறீங்க போலருக்கு...என்ன வில்லன அழிக்கவான்னு....அந்த அளவுக்கு உலகமெங்கும் பரவிருக்கற என் தலைவனோட புகழ் உனக்கு புரியலையேங்கரதுதாண்டா எனக்கு ரொம்ப சங்கட்டமா இருக்கு..! 

அப்பறம் கேக்கனும்னு நெனச்சேன்...அதென்னடா என் தலைவன இண்டர்நெட்ல பிச்சைகாரன் மாதிரி போட்டோஷாப்ள போட்டு கேவலபடுத்துறீங்க..உங்களுகெல்லாம் மனசாட்சியே இல்லையா...என் தலைவன சைட் போஸ்ல ஒருக்களிச்சு நிக்க சொல்லி உக்காந்துகிட்டு பாருங்கடா...சும்மாவே அப்டித்தாண்டா இருப்பாரு என் தங்க தளபதி...அவர போய் போட்டோஷாப்ள எல்லாம் போட்டு போட்டோஷாப்ப அசிங்கபடுத்துரீங்களே., நீங்கல்லாம் மனுசன்தானா...? என்னை விடு...இந்த போட்டோவ ஒரு பிச்சகாரனோ இல்ல சந்து அங்கிளோ பார்த்தா எவ்ளோ பீல் பண்ணுவாங்க...பிச்சகாரன்னா அவ்ளோ கேவலமா போச்சா உங்களுக்கு...? இத நிறுத்திக்கங்க மொதல்ல.. ! 


வெரைட்டி வெரைட்டிங்கறீங்க..பொறந்ததுலேர்ந்து இட்லிக்கு மொளகா பொடிதானடா தொட்டுகிட்டு திங்கறீங்க...வெரைட்டியா இருக்கட்டுமேன்னு எவனாச்சும் மூக்கு பொடிய தொட்டு தின்னு பாருங்களேன்...! முடியாதுள்ள...அந்த மாதிரிதாண்டா என் தலைவனுக்கும்...நீ நக்கல் அடிக்கலாம்...எல்லாரும் வெரைட்டியா நடிக்கறாங்க...ஆனா, உன் தளபதி மட்டும் என் ஹேர் ஸ்டைல கூட மாத்தாம நடிச்சு உசுர எடுக்கராருன்னு..உன்ன பார்த்து நான் ஒன்னு கேக்குறேன்..தெய்வ திருமகன்ல விக்ரம் பண்ண ரோல என் தளபதி பண்ணி அத வீட்ல உக்காந்து குடும்பத்தோட டிவில பார்த்தா எத்தன புள்ளைகளுக்கு மூளைக்காய்ச்சல் வரும்..எத்தன பேர் வீட்ல பிக்சர் டியுப் வெடிக்கும்..இதெல்லாம் யோசிச்சியா நீ..? பிரெண்ட்ஸ் பட க்ளைமாக்ஸ்ல விஜயோட ஆக்டிங் பார்த்துட்டு என் பிரெண்ட் மூணு நாள் ஆபிசுக்கு லீவ் போட்டுட்டு சிரிச்சிகிட்ருந்தாண்டா...அவ்ளோ பெரிய நடிப்பு சக்கரவர்த்தி ரிஸ்க் எடுக்காம இருக்கறது உங்கள காப்பாத்ததான்னு ஏண்டா புரிஞ்சுக்க மாட்றீங்க...! 

அடுத்தது கவ்தம் மேனன் படத்துல மட்டும் என்ன கதைன்னு நெனைக்கற...அமெரிக்கால நடக்கற ஒபாமா தங்கச்சியோட கல்யாணத்துக்கு துணி எடுக்கறதுக்காக நியூயார்க் போறாரு என் தளபதி...அப்போ நியூயார்க்ல இருக்கற வில்லன் ஒபாமா தங்கச்சிய கைய புடிச்சு இழுத்தர்றான்..!.ஒபாமா தங்கச்சிய எவனோ ஒருத்தன் கைய புடிச்சு இழுக்கரதுக்கும் உன் தளபதிக்கும் என்னாடா சம்பந்தம் நார பயலேன்னுதான கேக்க வர்ற...! போடா லூசு...இதுவரைக்கும் எந்த படத்துலடா நாங்க லாஜிக்கொட படம் எடுத்துருக்கோம்...கேக்றான் பாரு கேள்வி.கேனயாட்டம் ..கதைய மேல கேள்றா பன்னாட..கைய புடிச்சு இழுத்த அடுத்த செகேன்ட் வெக்கிறோம் ஒரு பஞ்ச் டயலாக...தங்கச்சி யாரோடதுங்கறது முக்கியம் இல்ல..கைய புடிச்சு இழுக்கரதுதான் முக்கியம்னு சொல்லிட்டு கலிபோர்னியால இருக்கற ஒரு டீ கடைல வெச்சு வில்லன வெளு வெளுன்னு வெளுத்து......டேய் டேய் டேய்..ஏண்டா இப்ப கொட்டாவி விட்ரா...இருடா படம் வரட்டும்..அப்பறம் விட்டுக்கலாம்....! 


கடைசியா ஒரு விஷயம் உன்ட்ட வெக்கத்த விட்டுட்டு சொல்றேன்...எங்களுக்கு இதான் வரும்...வெச்சுக்கிட்டு வஞ்சகம் இல்ல...நடிக்க தெரிஞ்சா நடிச்சிருவோம்..வரல..அதனால வில்லனுகள அழிச்சு வியாபாரம் பண்ணிக்கிட்டுருக்கோம்..! 


வேணா என் தலைவன்ட்ட சொல்லி அடுத்த படத்துல மெட்ராஸ்லேர்ந்து கெளம்பி போய் கொட்டாம்பட்டில இருக்கற பண்ணையார் வில்லன அழிக்க சொல்றேன்..! 

ஆனா ஒரு கண்டிசன்...! 

"நீங்க மொதொள்ள மெட்ராஸ்ல மூட சொன்ன துணி கடை எல்லாத்தையும் தொறந்து விட சொல்லுங்க...!" 


இவன்
வெளியூர்க்காரன்

( ஒரே ஒருத்தர் தான் இதுவரைக்கும் புலனாய்ய்ய்ய்ய்ய்ய்ந்து...” வெளியூரும் நானும் ஒருத்தனு “ கண்டுபிடிச்சிருக்கார்... அவருக்காக இந்த பதிவு..ஆக்காங்...)

***

இந்தப்பதிவு வெளியூர்க்காரன் எழுதி பின் மறுபடியும் பட்டாபட்டி பதிவில் வெளியிடப்பட்டது. பட்டாபட்டியும் நானும் ஒருவரே என்று பலரும் சந்தேகப்படுவதால் நம்புவதால் இந்தப் பதிவு இப்போது இங்கேயும்......................

Monday, February 14, 2011

பன்னீஸ் டீவி: காதலர்தின சிறப்பு ஒளிபரப்பு...!

பதினஞ்சு நாளா எதுவுமே எழுதலேன்னாலும் யாரும் ஏன் என்னன்னு கேட்கற மாதிரி தெரியல. சரி, வேற என்ன பண்றதுன்னு வந்துட்டேன்...!

ஊர்ல காதலர் தினம்  கொண்டாடுறாங்களோ இல்லையோ, தமிழ்ப் பதிவுலகத்துல நல்லாவே களை கட்டிருச்சு போல, எந்தப் பக்கம் திரும்புனாலும் கவிதை, அனுபவம்னு போட்டுல் கொல்றாய்ங்க... சரி விடுங்க, நம்ம பங்குக்கும் ஏதாவது செஞ்சிடுவோம், என்ன நான் சொல்றது?

************

நம்ம டெர்ரரு ரொம்ப நாளா துரத்திக்கிட்டு இருந்த அந்த பிலிப்பினோக்காரிக்கு இந்தக் காதலர் தினத்துக்காவது ஏதாவது கிஃப்ட் வாங்கிக் கொடுத்து அசத்திடலாம்னு முடிவு பண்ணி, என்ன வேணும்னு அவகிட்டேயே கேட்டிருக்கார். அவ, எங்கிட்ட இருந்த டீவி ரிப்பேராயிடுச்சு, அதுனால எனக்கு ஒரு டீவி வாங்கிக் கொடுங்கன்னிருக்கா. இவரும் ஃபிகரு ஒர்க் அவுட் ஆயிடுச்சுன்னு, நெறைய ஷோரூம்களுக்கு அலைஞ்சி திரிஞ்சி கடைசில ஒரு டீவிய செலக்ட் பண்ணி வாங்கி கொடுத்திருக்கார். இப்போ அந்தப் பொண்ணு கோவிச்சுக்கிட்டு, நாட்டை விட்டே ஓடிப்போயிடுச்சாம், ஏன்னா அது டீவியே இல்ல, மைக்ரோவேவ் ஓவனாம்... என்னத்த சொல்ல?

************

நேத்து மங்குனி, சிரிப்பு போலீச பாக்கப் போயிருக்காரு, அப்போ

மங்குனி: டேய் நீ ஒரு கார் வங்கனும்னியே, என்ன பிராண்டு டிட்சைட் பண்ணி இருக்கே?

சிரிப்பு போலீஸ்: பிராண்ட் நேம் மறந்துடுச்சு மச்சி, ஆனா அது டீ-ல ஸ்டார்ட் ஆகும்...

மங்குனி: என்ன ஆச்சர்யம், எல்லாக் காரும் பெட்ரோல் இல்ல டீசல்ல தானே ஸ்டார்ட் ஆகும், அந்தக் காரு மட்டும் எப்படி டீல ஸ்டார்ட் ஆகுது? அப்போ காபில கூட ஸ்டார்ட் ஆகுமா?

சிரிப்பு போலீஸ்:  %&^(&*)(%^$^*&)(*

மங்குனி: ஏம்பா நீதான் டீல ஸ்டார்ட் ஆகும்னு சொன்னே, இப்போ இப்படி திட்டுறீயே? என்னமோ போங்கப்பா.....!

சிரிப்பு போலீஸ் இப்போ கார் வாங்கற ஐடியாவையே கைவிட்டுட்டார். இனி ஏதாவது டௌரியா வந்தாத்தான் உண்டாம்.

************

நம்ம செல்வா ரேடியோ ஜாக்கியா சேர்ந்து மொத நாளு, சிரிப்பு போலீஸ் போன் பண்ணி,

சிரிப்பு போலீஸ்: ஹலோ ரேடியோ டேசனா? நான் கீழ கெடந்து ஒரு பர்ஸ்ச எடுத்திருக்கேன், அதுல 5000 ரூவா, டெபிட் கார்ட், கிரெடிட் கார்டு எல்லாம் இருக்கு, அவர் டீடெயில்ஸ்,

பனங்காட்டு நரி என்ற தில்லுமுல்லு என்ற மணி
நம்பர் 24, 4-த் மெயின் ரோடு
ராசா காலனி,
கேகே நகர், சென்னை

செல்வா: அய்ய்ய்யயோ... கிரேட் சார் கிரேட்.. இந்தக் காலத்துலேயும் இவ்வளவு நேர்மையா இருக்கீங்களே... இப்போ எங்க நிலையத்துக்கு வந்து அதை ஒப்படைக்க போறீங்க அவ்வளவுதானே?

சிரிப்பு போலீஸ்: அட நீங்க வேற யோவ், மொதல்ல நான் சொல்றத கேளுங்க, அந்தப் பர்சை மிஸ் பண்ண நரிக்கு ’என் கதை முடியும் நேரமிது’ பாட்டை டெடிகேட் பண்ணனும், அதுக்குத்தான் ஃபோன் பண்ணுனேன், உடனே போடுங்க..... ஓகே பை டாட்டா...சீ யூ....

************

நம்ம வெங்கட், ஊர்ல பயங்கர புயல் மழை அடிச்சிட்டு இருக்கும் போது KFC-ல போயி பார்சல் ஆடர் பண்ணியிருக்காரு, பார்க்க ரொம்ப யங்கா இருக்காரேன்னு கடைக்காரன் கேட்டிருக்கான்,


சார், உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?

வெங்கட்: ஏம்பா, எங்கம்மா இந்த மாதிரி என்னைய புயல் மழைல சிக்கன் வாங்க அனுப்புவாங்கன்னு நெனைக்கிறியா?

************

வேலண்டைன்ஸ் டே ஸ்பெசல் கார்ட்டூன்ஸ்

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket



நம்மாளுங்க தண்ணி கெடைக்காம தாகம் எடுத்தே செத்தாலும் சாவாய்ங்களே தவிர, சில விஷயங்கள விடவே மாட்டாய்ங்க...





வேல கெடச்சிருச்சு.........................
மங்குனி அமைச்சருக்கு மாருதி கம்பேனில எப்படியோ வேல கெடச்ச மாதிரி நமக்கும் ஒரு எடத்துல இருந்து வேலைக்கு வரச் சொல்லி ஆடர் வந்திருக்கு,  தனியா போறதவிட யாராவது என்கூட சேர்ந்தீங்கன்னா நல்லாருக்குமேன்னு பாக்குறேன். இடம், சாப்பாடு, ட்ரான்ஸ்போர்ட் எல்லாமே ஃப்ரீ. சம்பளம் கொஞ்சம் கம்மிதான், ஆனா டிப்சே பல மடங்கு தேறுமாம். அப்படி என்ன வேலைன்னு கேக்குறீங்களா? அதை வெளக்கமா வெளக்கறதவிட படமாவே காட்டிடறேன். கொஞ்சம் கீழ பாருங்க,



என்ன இந்த ஜாப் ஓக்கேயா? நெறைய கெடைக்கும் சார், டிப்சு...... 


சரி மேட்டருக்கு வருவோம். பீ சீரியஸ். துணைவியைப் பிரிந்து வெளிநாடுகளில் வாழும் நண்பர்களுக்காக ஒரு அருமையான பாடலை டெடிகேட் செய்கிறேன்.





பாடலின் சூழல், மெட்டு, வரிகள், குரல், இசை சேர்ப்பு, இடை இசை, ஹம்மிங், படமாக்கப்பட்ட விதம், நடிகர்கள் என்று அனைத்துமே அற்புதமாக ஒருங்கிணைந்த பாடல் இது, எனக்கு மிகவும் பிடித்த திரும்பத் திரும்பக் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று!

நன்றி: யூ ட்யூப், மற்றும் படங்கள் தயாரித்த, அனுப்பிய நண்பர்கள்

Friday, January 28, 2011

சிரிப்பு போலீசும் சி(ரி)க்காத பன்னியும்...!






சிரிப்பு போலீஸ்: டேய் எந்திரிடா.. டேய் நாதாரி..... பன்னிக்குட்டி எந்திரிடா டேய்....  எந்திரி....

பன்னிக்குட்டி:  டேய்ய்.....  டால்டா டின்னு மண்டையா கொஞ்சம் நேரம் கூட நிம்மதியா தூங்க விட மாட்டியாடா.. போடா போயி நேத்து  எவனோ ஒரு ஸ்பானர் தலையன் உனக்கு ஓசி்ல பன்னு வாங்கி தந்தானே, அதைப் பத்தி ஒரு பதிவைப் போட்டு, எலக்கியத்த புழிஞ்சு சேவை பண்ணு...!இப்போ என்னை தூங்க விடு..


சிரிப்பு போலீஸ்:  ஏன்டா பரதேசி ஆபீஸ்ல எப்பவும் தூங்கிட்டுத்தானே இருக்கே.. அப்புறம் என்னடா இங்கேயும் தூக்கம்...?



பன்னிக்குட்டி: அட போடா பல்பு வாயா.... ஆபீஸ்ல தூங்கினா பக்கத்து கேபின்ல இருக்கிற கொத்தவரங்கா பிலிப்பைனி பிகரும், அந்த டயர் வாயன் டேமேஜரும் தான் கனவுல வரானுங்க.. கனவுல கூட அந்த டயர்வாயன் திட்டிக்கிட்டே தான்டா இருக்கான்.... பிகரு பக்கத்துல போகவிட மாட்டேங்கிறான் படுவா.  ஒரு நாளு அவன் வாயில நம்ம கரடிய விட்டு கடிக்க வைக்கப் போறேன் பாரு....!

சிரிப்பு போலீஸ்:  பேச்ச குறைடா பொறம்போக்கு.. மரியாதையா எந்திரிச்சு என் கூட வந்திடு இல்லன்னா நான் எழுதி வச்சிருக்கிற கவிதைய உனக்கு படிச்சு காட்டிருவேன்..


பன்னிக்குட்டி: நீ அதுக்கு பேசாம நான் தூங்கும் போது தலைல கல்லைத் தூக்கிப் போட்டுடலாம்... இப்ப என்னடா உன்கூட கடைக்கு வரணும் அவ்வளவு தானே...?


சிரிப்பு போலீஸ்:  அதைத்தான்டா முதல்லேருந்தே சொல்லிட்டிருக்கேன் வெளக்கெண்ண...


பன்னிக்குட்டி: என் செல்லம் இல்ல, அதோ மூலையில கிழிஞ்ச அப்பளம் மாதிரி சுருண்டு படுத்திருக்கானே டெரர் பாண்டி, அவனைக் கூட்டிட்டு போமா ராஜா... !


சிரிப்பு போலீஸ்:  அவனை இப்போ தொந்தரவு பண்ணாதே மச்சி...  நேத்தைக்கு ராத்திரி வெறும்பயகிட்டே வாயக் கொடுத்து செமத்தியா விடிய விடிய அடி வாங்கிட்டு வந்து படுத்திருக்கான்..


பன்னிக்குட்டி: த்தூ....இந்தப் பன்னாட பரதேசிக்கு இதே வேலையா போச்சு.. எப்ப பாரு எவன்கிட்டேயாவது வம்பிழுக்க வேண்டியது.. அப்புறம் அடி வாங்கிட்டு இங்கே வந்து படுத்துக்க வேண்டியது..... இருக்கட்டும், படுவா இவனுக்கு ஒரு நா இருக்குடா...! ஆமா அது என்னடா அவன் வாய் முன்னாடி கக்கூசுல இருந்த பக்கெட்டைத் தூக்கிட்டு வந்து வெச்சிருக்கே. .?



சிரிப்பு போலீஸ்:  அதுவா நேத்தைக்கு கொஞ்சம் அடி ஓவரா வாங்கியிருப்பான் போல.. இது வரைக்கும் நானும் எவ்வளவோ இடத்துல அடி வாங்கியிருக்கேன், ஆனா இந்த மாதிரி ஆனதில்லப்பா.. அந்த வெறும்பய டெரரை அடிச்ச அடில மூக்கிலேருந்தும் வாயிலேருந்தும் ரத்தம் நிக்காம கொட்டிக்கிட்டு இருக்கு...  அதான் பக்கெட் வச்சிருக்கேன்... ரொம்புனதும் பிளட் பேங்குக்கு போன் பண்ணனும். அது இருக்கட்டும்... மொதல்ல நீ கெளம்பு.....!


பன்னிக்குட்டி: அடநாயே.... இன்னைக்கு பொழுது உன்கூடதானாடா? நீ என்னை விட்டுட்டுப் போறதா இல்ல.. ? சரி எங்கேதான்டா போகனும் அதையாவது சொல்லித்தொலை.....!


சிரிப்பு போலீஸ்:  அதுவா.. ஒரு ஆசாரிய பாக்கணும்டா


பன்னிக்குட்டி: என்னடா சொல்லவே இல்ல.. ஏதாவது பொண்ணு பாத்திட்டியா.. தாலி செய்யத் தானே...? (ங்கொக்கமக்கா... இதை மட்டும் எப்படியோ கமுக்கமா முடிச்சிடுறானுங்கடா....!)


சிரிப்பு போலீஸ்:  ங்கொய்யால..... காலைலயே வீணா என் வாய கிளறாதே.. நானே கடுப்பில இருக்கேன்..


பன்னிக்குட்டி: அப்போ சாயந்தரமா கிளரலாமா? படுவா.. உன் வாயி என்ன அல்வா கிண்டுற அண்டாவாடா கெளர்ரதுக்கு....?  கடுப்பாகாம மேட்டரை சொல்றா எரும வாயா......!


சிரிப்பு போலீஸ்:  பின்ன என்னடா, போன செவ்வாக்கிழமை நம்ம பாபு உனக்கொரு பொண்ணு பாத்திருக்கேன், நல்ல குடும்ப பொண்ணுடா பாக்கனுமின்னா சீக்கிரம் கிளம்பி லி மெரிடியன் ஹோட்டலுக்கு வாடான்னு சொன்னான்.. நானும் நல்லா குளிச்சிட்டு...


பன்னிக்குட்டி: டேய்  அதென்ன பேச்சுவாக்குல குளிசிட்டுன்னு பொய் சொல்ற....?


சிரிப்பு போலீஸ்:  சரி விடு. ஸ்பிரே அடிச்சிட்டு...அடிச்சு புடிச்சு போய் சேர்ந்தேன்.. பாபு கூட அந்த பொண்ணும் இருந்திச்சு. பார்க்க நல்லா அழகாத் தான் இருந்திச்சு.. ஆனா டிரஸ் தான் போட்டிருந்தாளா இல்லையான்னு கேக்குற அளவுக்கு ரொம்ப சின்னதா போட்டிருந்துச்சு, சரி மாடர்ன் பொண்ணுங்க இப்படி தான் இருப்பாங்கன்னு நினச்சு நம்பி உக்காந்தேன்.


ஒரு வார்த்தை கூட பேசலடா, கொஞ்சம் நேரம் மௌனமா இருந்தவ ஏதாவது குடிக்கலாமேன்னு சொன்னா, நானும் பேரரை கூப்பிட்டு என்ன தான் நம்ம முழு நேர குடி காரனா இருந்தாலும் இங்கே காட்டிக்க கூடாதுன்னு ரொம்ப டீசெண்டா ஒரு ஆப்பிள் ஜூஸ் சொன்னேன், உங்களுக்கு என்ன வேணுமோ நீங்களே சொல்லுங்கன்னு சொன்னதும் சட்டுன்னு ஒரு கிங் பிஷர் பீர் சொன்னா.. நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலடா மச்சான். அப்படியே பொறி கலங்கிப் போயிட்டேன்.



அந்த பாபு பன்னாட அவ பீர் சொன்னதும் என்னை பார்த்திட்டு அப்படியே நைசா எஸ் ஆகிட்டான் மச்சி. பரதேசி கையில மாட்டாமலா போவான். அது மட்டுமா, எதோ லிப்ஸ்டிக்கை எடுக்கிற மாதிரி பேக்க தொறந்து தம்ம எடுத்து பத்த வச்சா பாரு..  நம்ம சூப்பர் ஸ்டார் கூட அவ முன்னாடி நிக்க முடியாது... மறந்துட்டு நானே விசிலடிக்கப் பார்த்தேன்னா பாரேன்?


படுபாவி பாபு குடும்ப பொண்ணுன்னு சொன்னானே தவிர குடிமகள்னு சொல்லாம போயிட்டான். எது எப்படியோ நான் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவையே விட்டுட்டேன். பேசாம சாமியாரா போலாமுன்னு இருக்கேம்பா...


பன்னிக்குட்டி: அட மானங்கெட்டவனே இன்னுமாடா நீ உயிரோட இருக்கே...?இதுக்கு நீ நாண்டுகிட்டு செத்திருக்கலாம்.... ஆனாலும் உனக்கு ரொம்பப் பேராசைடா, பின்னே இங்க ஒரு பொண்ணுக்கே வழியக் காணோம், அதுக்குள்ள எப்பிடிரா கொஞ்சம் கூசாம உடனே சாமியாரா போறேன்னு சொல்ற?


சிரிப்பு போலீஸ்:  சரி அத விடு.... இப்போ நீ என்கூட வரப்போறியா இல்லையா...?


பன்னிக்குட்டி: சரி வந்து தொலையுறேன்.. எந்த ஆசாரிகிட்டே போற.. எதுக்கு போறேன்னு சொல்லு...?


சிரிப்பு போலீஸ்:  அது ஒன்னுமில்லடா ஏழு ஜன்னல் செய்யணும் அதுக்கு தான் ஆசாரிய பார்த்து நல்லதா செய்ய சொல்லணும்...


பன்னிக்குட்டி: ஏன்டா வீடு ஏதாவது கட்ட போறியா..  நீதான் ஏற்கனவே ரெண்டு மூணு சின்ன வீடு வெச்சிருக்கியே...?


சிரிப்பு போலீஸ்:  நமக்கெதுக்குடா இனி வீடெல்லாம்.. நான் தான் சாமியாராக போறனே...?


பன்னிக்குட்டி: என்ன நக்கலா...? அப்புறம் என்ன எழவுக்குடா இந்த ஜன்னல்...? நம்ம குஷ்பக்கா மாதிரி நீயும் உன் சட்டைல ஜன்னல் வெச்சுக்கப் போறியா? ஒழுங்கு மரியாதையா சொல்லிடு இல்லன்னா மவனே, மூஞ்சில முள்ளுக் கரண்டிய வெச்சி கொத்தி விட்ருவேன்....!


சிரிப்பு போலீஸ்:  பறக்காதடா பரதேசி.. சொல்றேன் சொல்றேன்... கொஞ்ச நாளாவே என்னோட கம்ப்யூட்டர் சொல்ற பேச்சு கேக்க மாட்டேங்குது... அதனாலதான் போன வாரம் ஒழுங்கா பதிவு கூட போட முடியல.. நமக்கு தான் இந்த கருமாந்திரத்த பற்றி ஒண்ணுமே தெரியாதே. அதனால மொரிசியஸ்ல இருக்கிற அருண்கிட்டே ஏதாவது உதவி கேக்கலாமுன்னு கேட்டேன் . அப்போ தான் அருண் சொன்னாரு windows 7 போட்டா எந்த பிரச்சனையும் வராது, அதுக்குள்ள வழியப் பாருன்னு.. அதாண்டா ஏழு ஜன்னல் செய்றதுக்கு ஆசாரிய பார்க்க போலாமுன்னு கிளம்புறேன்... நீ வரியா இல்லையா..? உன் ப்ளாக்குக்கும் சேர்த்தே ஜன்னல் ஆர்டர் பண்ணிடுவோம்... சீப்பா பேசி முடிச்சிடலாம்!

பன்னிக்குட்டி: $%%$%^ @#@*&* &*^% #$^&&(^ @%&*(( (*%$$#@@!@! @!%^&*^%% $#*&&$*$

சிரிப்பு போலீஸ்:  இப்போ எதுக்குடா இவ்வளவு அசிங்கமா திட்டுற...? என் கூட வர விருப்பமில்லன்னா இல்லைன்னு சொல்ல வேண்டியதுதானே... ! சரி நீயும் உன் ப்ளாக்கும் எக்கேடாவது கேட்டு நாசமா போங்க. எனக்கு என் ப்ளாக் முக்கியம். நான் ஆசாரிய பார்க்க போறேன்...!



ஆசாரியைப் பார்க்கப் போன சிரிப்பு போலீஸ் இன்னும் திரும்பவில்லை. பிடித்துக் கொடுப்பவர்களுக்கு, சிரிப்பு போலீசுக்கு இன்று கிடைக்கும் ஓசி பன்னில் பாதி பிய்த்துக் கொடுக்கப்படும்!


இது நண்பர்களும் நானும் சேர்ந்து எழுதியது!

படங்களுக்கு நன்றி கூகிள் இமேஜஸ்!

!

Tuesday, January 25, 2011

நெம்பர் கடைசி பதிவரின் ஒரு பெரிய பேட்டி

எச்சரிக்கை: இது எதிர்பதிவு அல்ல, நேர் பதிவு!

நம்பர் 1. பதிவர் நண்பர் சி.பி. செந்தில்குமாருடைய பேட்டியை நண்பர் பிரபாகரன் வெளியிட்டிருந்தார். சரி நாமலும் ஒரு பேட்டிய எடுத்துப் போடுவோமேன்னு முயற்சி பண்ணதுல  நம்பர் கடைசி பதிவர்தான் சிக்குனாரு. சரி ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டைன்னு சொல்லுவாங்களே, அது மாதிரி ஏதோ நமக்குக் கிடைச்சது நம்பர் கடைசி பதிவர்தான் மனசைத் தேத்திக்கிட்டு பேட்டி எடுத்திருக்கோம். பார்த்துப் படிச்சு வெளங்கி நடந்துக்குங்க மக்களே!

பதிவுலகின் கடைசி இடத்தை பல வருடங்களாக வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் பிரபலபதிவர் எருமக்குட்டி ஏரிச்சாமியின் அசுர வளர்ச்சி பிரமிக்க வைகிறது. போனமாதம்தான் வெற்றிகரமாக 150 கிலோவைக் கடந்தார். அதனால் அவரைப் பேட்டி எடுக்க விரும்பி தொடர்பு கொண்டோம். உடனே மறுத்துவிட்டார். சிலநாட்களுக்குப் பிறகு மறுபடியும் தொடர்பு கொண்டோம். முதலில் தயங்கியவர், பின்பு டீ வாங்கித் தருகிறேன் என்றவுடன் ஒப்புக் கொண்டார்.

(இது நேர்காணல் அல்ல, சைடு(வாங்கிய)காணல்)



ஒழுங்கா தொடர்ந்து பதிவு எழுத மாட்டேங்கிறீங்களே ஏன்?
பொதுவாவே எனக்கு சாப்பாடு, தண்ணின்னா ரொம்ப இஷ்டம். அதுனால எல்லா வெரைட்டியவும் ஒரு கை.... இல்ல, இல்ல ரெண்டு கை பார்த்துடுவேன். ஓவரா தின்றது எப்போவாவது டைஜஸ்ட் ஆகாம புடிங்கிட்டுப் போகும், அப்போ தான் பதிவே எழுதுவேன். சோ, பதிவு எப்போ எழுதுவேன்கறது என் கையில இல்ல, இங்க (வயிற்றைக் காட்டி) இங்க தான் இருக்கு, சிகுனல் அங்கே இருந்து வரனும், புரிஞ்சதா?

Off the record:
வெளங்கிரும், தொடர்ந்து எழுதாததுக்கு இதான் காரணமா? அப்போ நல்ல டாகுடரை பாருங்க.

டாகுடரை பார்த்ததுல இருந்துதான் இப்படி இருக்கு!


பதிவு எழுத எப்படி உங்களுக்கு நேரம் கிடைக்கிறது?
அதான் சொன்னேனே, அப்பப்போ கக்கூஸ் போவேன்னு, அப்படிப் போகும் போது அங்கேயே உக்காந்து எழுதுவேன்.

Off the record:

அப்போ கக்கூஸ்ல கூட நெட் கனெக்சன் வெச்சிருக்கீங்களா?

இல்ல சார், சிலேட்டு கல்லு குச்சி வெச்சிருக்கேன். அப்போதான் அழிச்சி அழிச்சி எழுத வசதியா இருக்கும்!



மொக்கைப் பதிவுகளை எப்படி உங்களால் எழுத முடிகிறது?
நாம எழுதுதறது எல்லாமே மொக்கைதானே? இதுக்கெல்லாம் ஆர்மில போயியா ட்ரெயினிங் எடுக்க முடியும்? வேணும்னா சிரிப்பு போலீசு ப்ளாக்க மூணு நாள் உக்காந்து படிங்க, அப்புறம் நீங்க சும்மா பேசுனா கூட அது ரொம்பக் கேவலமான மொக்கை ஆகிடும்.

Off the record:

நான் தான்  படிக்க சொன்னேன்னு சொல்லி, தயவு செஞ்சு நம்ம கோமாளி செல்வாவோட மொக்கைய தொடர்ந்து மூணு நாளு படிச்சிடாதீங்க சார், அப்புறம்  கோர்ட்டு, கேசுன்னு என்னால அலைய முடியாது!



மொக்கைப் பதிவு எழுதும்போது எதிர்க்குரல்கள் கிளம்புமே?
ஆமா, நிறைய மொக்கைப் பதிவர்கள் இதுனால அவங்க பேரு கெட்டுப் போகுதுன்னு போன் பண்ணியும், ஈமெயிலிலும் திட்டுறாங்க. இதெல்லாம் ஒரு குத்தமாய்யா? பேரு கெட்டுப் போச்சுன்னா ஒண்ணு பேர ஃப்ரிட்ஜ்லேயே வெச்சுக்கனும் இல்ல தூக்கிப்போட்டுட்டு வேற பேரு வாங்கிடனும். அதவிட்டுப்புட்டு என்னைய குத்தம் சொன்னா எப்பிடி சார்?


சமீபத்தில் சிரிப்பு போலீசை சந்தித்த போது அவர் சொன்ன ஒரு சீரியசான விஷயம், நீங்கள் நீண்ட காலமாக எழுதிவருகின்றீர்களாமே?
அந்த ஆளுக்கு இதே வேலையா போச்சுய்யா! இப்படி சொன்னா நான் யூத்து இல்லேன்னு எல்லோரும் நம்பிடுவாங்கன்னு அவர் திட்டமிட்டே இந்த வதந்தியைப் பரப்பி வருகிறார். நான் மட்டுமா எழுதறேன் எல்லாரும்தான் எழுதறீங்க. எல்கேஜி சேர்ந்ததுல இருந்து எல்லோரும் எழுதிக்கிட்டுத்தான் இருக்கீங்க. ஏ, பி, சி, டி, ஆனா, ஆவன்னான்னு இதுவரை எம்புட்டோ எழுதியாச்சு.

நான் எல்கேஜில எழுத ஆரம்பிச்ச புதுசுல என்னைப் பெரிதும் ஊக்குவித்தவர் சிரிப்பு போலீஸ். ஏன்னா அவருதான் எங்க ஸ்கூலு வாத்தி!

Off the record:

வாத்தின்ன உடனே அவருக்கு ரொம்ப வயசாயிடுச்சோன்னு தப்பா நெனச்சுடாதீங்க சார். அவருக்கு இன்னும் ரெண்டு வருசம் இருக்கு ரிட்டையர்மெண்ட்டுக்கு!



அப்படின்னா சிரிப்பு போலீசுகிட்ட நிறைய அடிவாங்கியிருப்பிங்களே?
அதுதான் இல்ல. எப்போதும் போல சிரிப்பு போலீசுதான் எங்ககிட்ட அடிவாங்குனாரு. மொதல்ல ரொம்ப வருத்தப்பட்டாரு, அப்புறம் நம்ம விதி அவ்வளவுதான்னு நேர்மையா ஏத்துக்கிட்டாரு.
சார், டீ ஆர்டர் பண்ணிட்டீங்களா? அப்பிடியே ரெண்டு பஜ்ஜியும் சொல்லிடுங்க. ஏன்னா, அது ’அது’க்கு நல்லதாம்.

Off the record:

அதுன்னா எதுங்க?

தறுதலை சொல்ற அது இல்ல இது, இது வேற அது!

அதுதான் எதுன்னு கேக்குறேன்?

சாப்பாடு வாங்கிக் கொடுத்தா சொல்றேன்

ஹி..ஹி.. அடுத்த மொக்கைக்கே..சே...  கேள்விக்கே போவோம்!

த்தூ........
நோ மென்சன்.......



மொக்கை எழுதி சர்ச்சையானது போல வேற ஏதாவது சர்ச்சை ஏற்பட்டதுண்டா?
வேற ஏதாவது எழுதுனாத்தானே வேற சர்ச்சை வரும்? மொக்கையத் தவிர வேற ஏதாவது எழுதச் சொல்லி மிரட்டுறாங்க. வேற எதுவும் எழுதக்கூடாதுன்னும் சொல்லி மிரட்டுறாங்க. நான் என்னதான் பண்றது? நான் வேற அலுவலகத்துல இருந்து எழுதறதால, டேமேஜரு இல்லாத நேரமா பாத்து மிரட்டுனா நல்லாருக்கும். (ஒரே நேரத்துல எத்தனை பேருகிட்டதான் அடிவாங்கறது?)

Off the record:

தொடர்ந்து ஒரே ஆளுதான் சார் மெரட்டுறாரு. அதுவும் அவருக்கு ஓட்டுப் போடச் சொல்லி மெரட்டுறாரு சார்! எனக்குத் தெரிஞ்சா நான் போட மாட்டேனா?



சரி இது ஒரு ஜாலி பேட்டி என்பதால் அரசியல் பக்கம் போகவேண்டாம், நீங்கள் பார்த்த படங்களில் எது பெஸ்ட் என்பது பற்றி உங்கள் கருத்து?
கமர்சியலாகப் பார்த்தால் அஞ்சரைக்குள்ள வண்டிக்குத்தான் முதலிடம். அடுத்ததாக ஒரு ஆங்கிலப்படம் என்ற வகையில் சிராக்கோ படத்தைச் சொல்லலாம். தேவலீலை படம் அனைத்துத் தரப்பினருக்கும் பிடிக்காது என்பது எனது கருத்து.  மாயவலை டப்பா.

Off the record:

அலெக்சாண்ட்ரா படத்தோட டவுன்லோட் லிங் கிடைச்சா கொடுங்க சார். ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன். கஸ்டமர் ஒருத்தருக்கு அர்ஜென்ட்டா தேவைப்படுது!


தேவலீலைதான் டாப் படம்னு எல்லாரும் சொல்றாங்களே?
நல்ல படம்தான், புடிச்சிருந்தா போயிப் பாருங்க. ஆனா அந்த பிகரு மூஞ்சிக்கு இந்தப் படம் எடுபடாது என்பதே எனது கணிப்பு!

Off the record:

என்னங்க மூஞ்சி எடுபடாதுன்னு சொல்றீங்க?

அப்படித்தான் சொல்ல முடியும்!



அப்படின்னா தேவலீலை?
அந்தப் படத்த பறங்கிமலை ஜோதிலகூட போடமாட்டாங்கன்னு நெனைக்கிறேன்.

Off the record:

நெட்ல கூட வராது!



மில்லியன் டாலர் கேள்வி: ஒவ்வொரு பதிவிலும் இருபது முப்பது மொக்கை போடுறீங்களே எப்படி?
மொதல்ல அந்த மில்லியன் டாலரைக் கொடுங்க, பதில் சொல்றேன்.

Off the record:

அட என்ன சார் நீங்க, மொக்கையப் போயி எண்ணிக்கிட்டு,  எல்லாம் குத்துமதிப்பா எழுதறதுதான்.  எல்லாரும் நெனச்சுக்கிட்டு இருக்காங்க, நான் நோட்டு பேனா எடுத்துட்டுப் போயி எழுதுறேன்னு, அதுதான் இல்ல, நான் எப்பவுமே சிலேட்டு, கல்லுகுச்சிதான் யூஸ் பண்றேன். ஏன்னா எங்க இஸ்கோல்ல நோட்டு பென்சில்ல எழுத சொல்லிக் கொடுக்கவே இல்ல! 

சூப்பர்ப் எருமக்குட்டி ஏரிச்சாமி, உங்களோட பசி ஷெட்யூலில் எனக்காக நேரம் ஒதுக்கி இந்தப் பேட்டியைக் கொடுத்தமைக்கு நன்றி.

Off the record:

தம்பி டீ இன்னும் வரல....!
சே.....  ஒன் பை டூ டீக்கெல்லாம் பேட்டி கொடுக்க வேண்டியிருக்கு......



அடுத்த தடவ பேட்டி எடுக்கும் போது சாப்பாடா வாங்கிக் கொடுக்கப் பாருங்க தம்பி,





எதிர்பதிவுக்கு உடனே ஒத்துக்கொண்ட இரு நண்பர்களுக்கும் நன்றி!





படங்களுக்கு நன்றி கூகிள் இமேஜஸ்!
!