பன்னி வழங்கும் ப்ளாக்கர் அவார்ட்ஸ் 2010
இன்றோடு 2010ம் ஆண்டு முடிவடைவதை ஒட்டி, இந்த ஆண்டில வெவ்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பதிவர்களுக்கு எம் சார்பில் விருதுகள் வழங்க தீர்மானித்துள்ளோம். இதற்கென ஒரு நடுவர் குழு அமைக்கப்பட்டு, அவர்கள் கடந்த இருவாரகால தீவிர பரிசீலனைக்குப்பிறகு தங்கள் முடிவுகளைத் தெரிவித்துள்ளனர். கீழே விருதுப் பட்டியல் தரப்பட்டிருக்கிறது. சண்டை போடாமல் பிரித்து எடுத்துக்கொள்ளுங்கள். விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
நடுவர் குழு:
- வடக்குப்பட்டி ராம்சாமி
- காளிங்கன்
- ஐடியா மணி
- கொரங்கு கண்ணாயிரம்
- பலூன் கந்தசாமி
விருதுகள்:
சிறந்த பிரபல பதிவர் விருது 2010
யார் யார் தாம் ஒரு சிறந்த பிரபல பதிவர் என்று நினைக்கிறீர்களோ அவர்களுக்கு இந்த விருதை பெருமையுடன் அளிக்கிறோம்.
சிறந்த சீரியஸ் பதிவர் விருது 2010
சீரியஸ் பதிவர்கள் பலர் இருப்பதால், இதையும் அவர்கள் முடிவுக்கே விடுகிறோம். சிறந்த சீரியஸ் பதிவர்கள் அனைவருக்கும் இவ்விருது வழங்கப்படுகிறது.
சிறந்த காமெடி பதிவர் விருது 2010
தலைசிறந்த மொக்கை, நகைச்சுவை, காமெடி பீஸ் பதிவர்கள் அனைவருக்கும் இந்த விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது.
சிறந்த கவிதைப் பதிவர் விருது 2010
கவிதை, கதை, இலக்கியம் என்று எழுதும் பதிவர்களில், சிறந்தவர் என்று யார் நினைக்கிறீர்களோ அவர்களுக்கு இவ்விருது செல்கிறது.
சிறந்த சமையல் குறிப்பு விருது 2010
இவ்வாண்டின் சிறந்த சமையல் குறிப்பு விருது, சமையல் குறிப்பு, வீட்டு உபயோக குறிப்பு, தங்கமணி, ரங்கமணி இத்யாதிகள் எழுதும் பதிவர்களில் சிறந்தவர்களுக்கு அளிக்கப்படுகிறது.
சிறந்த புதுமுகப் பதிவர் விருது 2010
வலைப்பூ தொடங்கி 3 மாததிற்கும் குறைவாக இருப்பவர்கள், 50 ஃபாலோயர்களுக்கும் குறைவாக வைத்திருப்பவர்கள், 14 பதிவுகளுக்குக் குறைவாக எழுதி இருப்பவர்கள், கமென்ட் மட்டுமே போட்டுக் கொண்டிருப்பவர்களில் சிறந்து விளங்குபவர்கள் அனைவருக்கும் இந்த விருது கொடுக்கப்படுகிறது.
ஸ்பெசல் ஜூரி அவார்ட் 2010
அடுத்தவர் ப்ளாக்குகளில் கமென்ட் என்ற பெயரில் வாந்தி எடுப்பவர்கள், பிரச்சனைகளை ஏற்படுத்தி ஆதாயம் தேடும் டோமர்கள், திருட்டுப் பதிவு போடுபவர்கள், பெண் பதிவர்களைக் குறி வைத்து டார்ச்சர் பண்ணும் பதிவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்த ஸ்பெசல் ஜூரி விருதினை வழங்க நடுவர் குழு ஒருமனதாகப் பரிந்துரைத்துள்ளது.
தமிழ்ப் வலைப்பதிவுலகத்தின் எழுதப்படாத சட்டப்படி, விருது பெற்ற அனைவரும், விருதினை தங்கள் வலைப்பூக்களில் கண்டிப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் எனப்தால், இந்த விருதுகளையும் விருது பெற்றவர்கள் அவ்வாறே செய்து கொள்ளலாம். ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட விருதுகள் பெற்றிருந்தாலும் சரி.
இந்த ஆண்டு விருது பெற்றவர்கள் அனைவரையும் இன்னும் சிறப்பாக எழுதி அடுத்த ஆண்டும் விருதுகளைப் பெறவும், விருது பெறாதவர்கள் கடுமையாக உழைத்து அடுத்த ஆண்டு விருதினைப் பெற்றிடவும் வாழ்த்துகிறோம்.
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!
பட உதவிக்கு நன்றி கூகிள்!
!