Wednesday, August 25, 2010

டாக்டரேட் பட்டங்கள்: குழப்பங்களைத் தவிர்க்க ஒரு சிம்பிள் ஐடியா!டாக்டர் பட்டம் கொடுப்பதை வைத்து எப்படியெல்லாம் பிரச்சனை வரும் என்று பார்த்து கொண்டிருக்கிறோம். இந்நிலையில் தமிழகப் பல்கலைக்கழகங்களுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அக்கறையோடு யார் யாருக்கு எதிர்காலத்தில் டாக்டர் பட்டம் கிடைக்கப் போகிறது என்ற ஒரு லிஸ்ட்டை தயாரித்துள்ளோம். இதை வைத்து தேவையான முன்னேற்பாடுகளை அந்தந்த பல்கலைக்கழகங்கள் செய்து கொண்டால் கடைசிநேரக் குழப்படிகளைத் தவிர்க்கலாம்.

இன்னும் 6 மாததிற்குள் தேர்தல் வரக்கூடிய நிலை இருப்பதால், தேர்தல் முடிவுகளையொட்டிய சாத்தியக்கூறுகளை வைத்து லிஸ்ட் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

இனி யார் யாருக்கு டாக்டரேட் பட்டம் கிடைக்கப் போகிறது?

தேர்தலில் திமுக கூட்டணி வென்றால்:

1. அழகிரி
2. கனிமொழி
3. கலாநிதி மாறன்
4. தயாநிதி மாறன்
5. உதயதி
6. துரை தயாநிதி
7. அறிவுநிதி
8. வைரமுத்து
9. வாலி
10. இராம. நாராயணன்
11. எஸ். ஏ. சந்திரசேகர் (தனிகட்சி தொடங்கக்கூடாது என்ற உத்தரவாதத்துடன்)
12. விஜயகாந்த் (கூட்டணியில் இணைந்தால் அல்லது ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தால்)
13. டி. விஜய ராஜேந்தர்
14. ராதிகா சரத்குமார்

தேர்தலில் அதிமுக கூட்டணி வென்றால்

1. ஜெயலலிதா
2. சசிகலா
3. சசிகலாவின் அண்ணன் தம்பிகள் மற்றும் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்கள்
4. சசிகலாவின் அக்கா தங்கைகள் மற்றும் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்கள்


எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் டாக்டர் பட்டம் கிடைக்க வாய்ப்பே இல்லாதவர்கள்

1. வைகோ
2. மருத்துவர் அய்யா
3. நல்லமுத்து
4. தா. பாண்டியன்
5. திருமாவளவன்

பதிவர்களும் இந்த லிஸ்ட்டை பயன்படுத்தி சம்பந்தப் பட்டவர்களுக்கு முன்கூட்டியே வாழ்த்துத் தெரிவித்து ஆச்சர்யம் அளிக்கலாம். அதைப் பயன்படுத்தி அப்படியே அவர்களைப் பழக்கம்பிடித்து வைத்துக்கொண்டால் பின்னால் பயனளிக்கும்!

பி.கு.: தங்களுக்கும் டாக்டர் பட்டம் வேண்டும் என விரும்பும் பதிவர்கள், தமிழ்நாட்டில் உள்ள 17 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் (Deemed University) ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதனுடைய அதிபரை தகுந்த சிபாரிசோடும், சன்மானத்தோடும் சந்தித்தால், உங்களுக்கும் உண்டு பட்டம்!

எச்சரிக்கை: மத்திய அரசு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களைக் கலைக்கப் போவதாக கொள்கை முடிவு எடுத்து இப்போது நிலுவையில் உள்ளது. எனவே பட்டம் வேண்டுவோர் விரைந்து செயல்படுமாறு அறிவுறுத்தபடுகிறார்கள்!

Tuesday, August 24, 2010

தமிழகத்தின் தலைசிறந்த டாக்டர்கள்!பல்கலைக்கழகங்கள் பலருக்கும் கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்குவதுண்டு, அதில் தமிழகத்தின் தலைசிறந்த டாக்டர்கள் சிலரைப் பற்றிப் பார்ப்போம்.


டாக்டர். விஜய்
மாற்றம் ஒன்றே மாறாதது என்ற மாபெரும் இயற்கை நியதியையே தனது நடிப்புத் திறமையால் ஒன்றுமில்லாமல் ஆக்கியவர். தியேட்டர்களில் வணிக வளாகங்கள் பெருகுவதற்கு பெரும் உந்து சக்தியாகத் திகழ்கிறார்.


டாக்டர் ஷங்கர்
ஒரே கதையை வைத்து பத்துப் படங்களை எடுத்த அசகாயசூரர். டெக்னிகலாக மக்களை பிரம்மாண்டமான முட்டாள்களாக்கியவர், ஆக்கிக் கொண்டிருப்பவர்.


டாக்டர் கலைஞர்
தமிழனத் தலைவராய் நீண்டகாலம் இருந்து வருபவர், கழகத்தைக் கம்பேனியாக்கியவர். கடிதம் எழுதுவது எண்ணும் சர்வரோக நிவாரணியைக் கண்டுபிடித்த மகா சாதனையாளர்!


டாக்டர் அம்மா
தமிழர்களுக்கு சூடு சொரணை எதுவும் அறவே கிடையாது என்பதை நிரூபித்துக் கொண்டிருப்பவர்.

2007 லிலிருந்து உலக செஸ் சாம்பியனாக இருப்பவரும், பத்ம விபூசன், கேல் ரத்னா போன்ற விருதுகளைப் பெற்றவருமான விஸ்வனாதன் ஆனந்த் போன்றவராலேயே பெறமுடியாத டாக்டர் பட்டத்தை மேற்கண்ட சாதனையாளர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே அனைவரும் அவர்களை வாழ்த்திப் பயனடையுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Wednesday, August 18, 2010

உமாசங்கருக்குக் குரல் கொடுப்போம்!
அரசு அதிகாரி உமாசங்கர் மீது தமிழக அரசால் பழிவாங்கும் நோக்கில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் கடும் கண்டனத்திற்கு உரியவை. திமுக அரசின் அட்டூழியங்கள் முந்தைய அதிமுக ஆட்சிக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல என்று கூறும் வகையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிமுக மோசமாக உள்ளது என்பதற்காக திமுக ஆட்சியின் அராஜகங்களை நியாயப்படுத்த முடியாது.
இந்த அரசு சில நல்ல திட்டங்களை மக்களுக்கு அளித்து வருகிறது என்பதாலோ, வேறு சரியான மாற்று சக்திகள் இல்லை என்பதாலோ, அவர்கள் செய்யும் அராஜகங்களைப் பொறுத்துக்கொண்டு இருக்க வேண்டுமா?

நியாயத்திற்குக் குரல் கொடுப்போம். இது நம் ஜனநாயகக் கடமை.

தமிழகத்தின் தலைவிதி இரு பெரும் குடும்பங்கள் கையில் (மன்னார்குடி குடும்பத்தார்களாலும், கலைஞர் குடும்பத்தினர்களாலும்) சீரழிந்து வருவது ஜனநாயக சக்திகளால் தடுக்கப்பட வேண்டும்.

உங்கள் கண்டங்களையும் ஒரு பதிவாக இட்டு நம் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யுங்கள். கீழ்கண்ட பதிவுகளுக்கும் சென்று உங்கள் கண்டங்களைப் பதிவு செய்யுங்கள்.

1. Complaint filed by C.Umashankar IAS., against the State of Tamil Nadu: (தருமி ஐயா)

2. http://umashankarias.wordpress.com/

3. Campaign to save democracy and Justice for Umashankar IAS

4. உமாசங்கருக்காக ஒரு விண்ணப்பம்: வால்பையன்

5. உமாசங்கர் IAS பணிநீக்கம் ஏன்? அரசு விளக்கம் - ஏற்றுக்கொள்ள முடியாது: ப்ரியமுடன் வசந்த்

6. உமாசங்கரை பழிவாங்கிய அரசு எ(இய)ந்திரத்திற்கு...: பட்டாபட்டி

7. உமாசங்கருக்காக -- ஒரு விண்ணப்பம்: மங்குனி அமைச்சர்

8. உமாசங்கர் -விண்ணப்பம் + கண்டனம் - பட்டிக்காட்டான் (பட்டணத்தில்)

Monday, August 16, 2010

பட்டாபட்டிபிரபல தமிழக கிரிக்கெட் வீரர் சடகோபன் ஒரு தமிழ்படத்தில் நடித்து வருகிறார். மதுரையில் நடக்கும் ஒரு கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் கதை. படம் பட்டாபட்டி 50- 50 என்று பெயரிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் சம்பந்தப்பட்ட கதை என்பதால் கிரிக்கெட் ஆடத்தெரிந்தவர்களையே துணை நடிகர்களாக வைத்து படம் எடுக்கப்பட்டு வருகிறது. சடகோபன் ஏற்கனவே ஒரு படத்தில் ஜெயம் ரவிக்கு அண்ணனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.கு.: நமது தானைத்தலைவர் பட்டாபட்டி அவர்கள் பினாமியாகத் தயாரித்து வரும் இப்படத்தை வெற்றியடையச் செய்யுமாறு கு.மு.க உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவை வேண்டுகிறோம்!