ஒரு ஊர்ல 4 விஞ்சாணிகள் இருந்தாங்க. அவங்க வேல மிருகங்களை பத்தி ஆராய்ச்சி பண்றது. குரங்குகளை பத்தி ஆராய்ச்சி பண்ணலாம்னு 10 குரங்குகளை புடிச்சிட்டு வந்து பெரிய கூண்டுல அடைச்சாங்க. கூண்டுக்குள்ள பெரிய வாழைத்தார தொங்க விட்டு, பக்கத்துல ஒரு ஏணியவும் வெச்சாங்க. வாழைப்பழத்த பார்த்த உடனே ஒரு குரங்கு உடனே ஏணில ஏற ஆரம்பிச்சது. ஏணில ஏறுன உடனே சுத்தி பயங்கர குளிர்ச்சியான தண்ணிய எல்லா குரங்குகள் மேலயும் பீச்சி அடிச்சாங்க. மேல ஏறுன குரங்கு தண்ணி வேகம் தாங்காம கீழே வந்துடுச்சு. அது ஏணில இருந்து இறங்கின உடனே தண்ணிய அடிக்கிறத நிப்பாட்டிட்டாங்க.
கொஞ்ச நேரத்துல இன்னொரு குரங்கு அதே மாதிரி வாழைப்பழத்த சாப்பிடலாம்னு ஏணில ஏற தொடங்குச்சி. அது ஏணிய தொட்ட உடனே மறுபடியும் அதே மாதிரி குளிர் நீர் பீச்சுனாங்க. தாங்க முடியாம ஏறுன குரங்கும் உடனே இறங்கிடுச்சு. இப்படியே தொடர்ந்து 3 வாட்டி நடந்துச்சு. குரங்குகள் எல்லாத்துக்கும், அந்த ஏணிய டச் பண்ணா எல்லார் மேலேயும் குளிர்நீர் பீச்சியடிக்கும்னு புரிஞ்சிடுச்சு. அதுனால எல்லாம் அமைதியா உக்காந்திருச்சுங்க.
அப்போ கூண்டுக்குள்ள இருந்து ஒரு குரங்க வெளில எடுத்துட்டு, புதுசா ஒரு குரங்க உள்ள விட்டாங்க. அதுக்கு தண்ணி மேட்டர் எதுவுமே தெரியாதே. உள்ள போன உடனே வாழைப்பழத்த பார்த்துட்டு ஏணி பக்கத்துல போச்சு. அத பார்த்த உடனே மத்த குரங்குகள்லாம் ஓடிவந்து புதுக் குரங்க ஏணிய டச் பண்ண விடாம இழுத்துட்டு வந்து போட்டு அடிச்சதுங்க. புதுக்குரங்குக்கு ஒண்ணுமே புரியல. ஏணில ஏறுனா அடிப்பாங்கன்னு நெனச்சிட்டு சும்மா உக்காந்துச்சு.
இப்ப,இன்னொரு பழைய குரங்க வெளில எடுத்துட்டு இன்னொரு புதுக்குரங்க உள்ள விட்டாங்க, அதுவும் வாழைப்பழத்த பார்த்துட்டு ஏணில ஏற முயற்சி பண்ணி மத்த குரங்குகள்கிட்ட அடிவாங்கிச்சு. ஏற்கனவே உள்ள போன புதுக்குரங்கும் அடிக்கிறதுல சேர்ந்துக்கிச்சி. உள்ள வந்த புதுக்குரங்குக்கும் எதுக்கு இப்படி போட்டு அடிக்கிறாங்கன்னு தெரில.
இப்படியே ஒவ்வொரு குரங்கா வெளில எடுத்துட்டு ஒரு புதுக்குரங்க உள்ள விட்டாங்க. கொஞ்ச நேரத்துல எல்லா பழைய குரங்கும் வெளில வந்துடுச்சு.உள்ள புது குரங்குகள் மட்டும்தான். அப்பவும் எல்லாம் மத்த குரங்குகளை ஏணில ஏற விடாமே அடிச்சிட்டு இருந்துச்சுங்க. ஆனா அதுக எதுக்கும் வாழைப்பழத்த எடுக்க ஏணில ஏறுனா குளிர்ந்த நீர் பீச்சி அடிக்கும், அதுனாலதான் ஏறவிடாம அடிக்கிறோம்னு எதுவும் தெரியாது. முன்னாடி இருந்த குரங்குங்க, அடிச்சது, நாங்களும் அடிக்கிறோம்னு அடிச்சிட்டு இருந்துச்சுங்க. இப்படித்தாங்க உலகத்துல பல விஷயங்கள் நடக்குது......... பட் இதுக்கும் பதிவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதுங்கோ.....
நன்றி: கூகிள் இமேஜஸ், இது கார்ப்பரேட் கம்பெனிகளில் இருக்கும் ஒர்க் கல்ச்சர் பற்றி கிண்டலடிக்கும் ஒரு பழைய கதை... அவ்வளவே!
!