Thursday, September 30, 2010

எந்திரன் பட்ஜெட் 200 கோடிதானா? எப்படி?



எந்திரன் படம் ரிலீசாகுறதுக்குள்ள எந்திரனப் பத்தி என்னென்ன எழுதனுமோ எழுதி முடிச்சிடனும்னு எல்லாரும் எழுதித் தள்ளிகிட்டு இருக்கானுங்க. ஏன்னா படம் ரிலீசானா அந்த கிக்கு குறைஞ்சி புஸ்ஸுனு போயிடும்ல. அந்த வகைல இது ஏதோ நம்மாள முடிஞ்சது!

எந்திரன் படத்தோட முக்கியமான அம்சங்கள்ல ஒண்ணு 200 கோடி பட்ஜெட்டாம்! சரி 200 கோடிய வெச்சிக்கிட்டு அப்பிடி என்னதான் பண்ணியிருப்பாங்க்யன்னு ராத்திரி பூரா யோசிச்சா, கதை வேற மாதிரியில்ல போகுது!

அத நீங்களே கொஞ்சம் பாருங்க சார்!

ரஜினி சம்பளம்..............................................................30 கோடி
ஐஸ்வர்யா..................................................................20 கோடி
ஷங்கர்.....................................................................20 கோடி
ஏ ஆர் ரஹ்மான்........................................................... 15 கோடி
மற்ற நடிகர்கள் ............................................................15 கோடி
கேமரா டெக்னிசியன்கள்.....................................................15 கோடி
கிராபிக்ஸ் .................................................................30 கோடி
3000 பிரின்ட்டுகள்...........................................................30 கோடி
விழா நடத்தும் செலவு.......................................................10 கோடி
எந்திரனைப்பற்றி எழுத
பத்திரிக்கை டீவிக்களுக்கு
கொடுத்தது ................................................................. 5 கோடி
போஸ்டர், விளம்பரம் .......................................................10 கோடி

ஆகக்கூடி மொத்தச் செலவு............................................ ......200 கோடி

இதுக்கே 200 கோடி ஆயிடிச்சே படம் எதுல எடுத்தாங்யன்னு தெரியலையே?

சார் சார் என்ன முறைக்கறீங்க, எந்திரன் பார்ட் - 2 வேற போயிக்கிட்டு இருக்கு, காசு விஷயத்துல கவனமா இருக்கனும்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க! அதனால
என்னன்னு கலாநிதி அண்ணண் கிட்ட கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க சார்!

எந்திரன் பார்ட்- 3 வேலைகளும் தொடங்கிடிச்சி. ஹீரோவ வெச்சி போட்டோ ஷூட் பண்ணியாச்சி. ஹீரோயின் தான் தேடிக்கிட்டு இருக்கோம், நடிக்க விருப்பமுள்ளவர்கள் அணுகலாம்!



(ஸ்ஸ்ஸ்ஸ்......! அப்பாடா....! ஒருவழியா எந்திரனப் பத்தி இன்னொரு பதிவு போட்டாச்சுப்பா, டேய் மண்டையா இன்னொரு குவார்டாரு சொல்லுடா...!)

பின்குறிப்பு: இந்தப் பதிவு ரஜினி ரசிகர்களுக்கு சமர்ப்பணம்!

Wednesday, September 29, 2010

எந்திரன் பார்ட்-2? ஷங்கர் அதிர்ச்சி!

ரெண்டு வருசமா ஷூட்டிங் நடத்தோ நடத்துன்னு நடத்தி, ஒருவழியா இப்பத்தான் எந்திரன் படம் ரிலீசுக்கு வருது. அதுக்குள்ள ஒரு குருப்பு எந்திரன் பார்ட்- 2 வ ரகசியமா எடுத்து முடிச்சிட்டாங்க. விஷயம் கேள்விப்பட்டு ஷங்கர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதற்கிடையில் எந்திரன் பார்ட்-2 படமும் இப்போதே ரிலீசாகப் போவதாக வந்த தகவலையொட்டி, கலாநிதி மாறன் தரப்பு அப்செட் அடைந்துள்ளது.

பரபரப்பாக வெளியாகி உள்ள எந்திரன் பார்ட்-2 ஸ்டில்ஸ்!

எச்சரிக்கை: குழந்தைகள், முதியவர்கள், இதய நோயாளிகள், இளகிய மனம் படைத்தவர்கள் இதைப் பார்க்க வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்!


ரஜினி... கபர்தார்ர்ர்ர்ர்..............!










கடைசியாக வந்த தகவலின்படி கலாநிதி மாறன் தரப்பு எந்திரன் பார்ட்- 2 வை 100 கோடிக்கு வாங்கப்போவதாக முடிவு செய்துள்ளது!

இதுக்கு மேலேயும் சும்மா இருக்க முடியுமா?

எந்திரன் பார்ட்- 3 ஷூட்டிங் ஆரம்பிச்சாச்சு! இனி 100 கோடி நமக்குத்தான், மாப்பு, மெட்ராஸ் எவ்வளவுன்னு வெலை கேட்டு வைய்யி!


Monday, September 27, 2010

ராமர் பிள்ளையும் மூலிகை பெட்ரோலும்: நடந்தது என்ன?




விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மம்சாபுரம் என்ற ஊரைச் சேர்ந்த ராமர் பிள்ளை என்பவர் 1996-ம் ஆண்டு மூலிகையில் இருந்து பெட்ரோல் எடுக்கும் முறையைக் கண்டுபிடித்ததாகக் கூறி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அவர் அப்போதைய முதலமைச்சர்கள் சந்திரபாபு நாயுடு, கலைஞர் முன்னிலையில் அதைச் செய்து காட்டி அனைவரையும் வியக்கவும் வைத்தார். ஆனால் IIT-யில் விஞ்ஞானிகள் முன்பு அவர் மூலிகையில் இருந்து பெட்ரோல் எடுத்துக் காண்பித்தபோது விஞ்ஞானிகள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். அதற்கு பல விஞ்ஞானக் காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால் மீடியாக்களின் தயவால், ஒரு பட்டிக்காட்டு விஞ்ஞானியின் கண்டுபிடிப்பைப் படித்த விஞ்ஞானிகள் புறக்கணிக்கிறார்கள் என்று மக்களும் அரசாங்கமும் நம்ப வைக்கப்பட்டார்கள். இதன் பின்பு மாநில அரசுகளிடமும் மக்களிடமும் கிடைத்த ஆதரவை வைத்து ராமர் பிள்ளை மூலிகைப் பெட்ரோல் தயாரித்து விற்று வந்தார். 2000-ம் ஆண்டில் இரசயானங்களை மூலிகைப் பெட்ரோல் என்று சொல்லி விற்பதாக ராமர் பிள்ளையைக் கைது செய்தது CBI. இது கதைச் சுருக்கம்.

இப்போது கொஞ்சம் விரிவாக நடந்தது என்ன என்று பார்ப்போமா?

ஆரம்பத்தில் அங்கே இங்கே என்று அலைந்து கொண்டிருந்த ராமர் பிள்ளைக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் ஆதரவளித்தது. அது சென்னை IIT- க்கு ராமர் பிள்ளைக்கு ஆய்வுக்கூடத்தில் விஞ்ஞானிகள் முன்பு மூலிகைப் பெட்ரோல் செய்துகாட்ட உதவுமாறு அறிவுறுத்தியது. ராம்ர் பிள்ளையின் மூலிகைப் பெட்ரோல் சென்னை IIT-யின் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் துறையில் பரிசோதனை செய்ய்ப்பட்டது. அது 2-ஸ்ட்ரோக், மற்றும் 4-ஸ்ட்ரோக் எஞ்சின்களை ஓட்டுமா, அதன் திறன் என்ன என்று ஆராயப்பட்டது. (இங்கே கவனிக்க வேண்டியது, இந்தச் சோதனையில் மூலிகைப்பெட்ரோலின் தன்மை குறித்தோ, அதில் கலந்திருப்பது என்னவென்றொ, அது எப்படி உருவாகின்றது என்றோ ஆராயப்படவில்லை, அது எஞ்சின்களை இயக்குமா என்று மட்டுமே சோதிக்கப்பட்டது). அச்சோதனையில் வெற்றியும் பெற்றது. இதுவே மூலிகைப் பெட்ரோலுக்கு ஒரு அங்கீகாரத்தை அளித்தது.

பின்னர் ராமர்பிள்ளை சென்னை IIT யில் மூலிகையை வைத்துத் தண்ணீரைப் பெட்ரோலாக மாற்றும் பரிசோதனையை விஞ்ஞானிகளுக்கு முன்பு செய்துகாட்டினார். அங்குதான் பிரச்சனை தொடங்கியது. பரிசோதனைக்குத் தேவையான பாத்திரங்கள் IIT ஆய்வகத்தில் இருந்து கொடுக்கப்பட்டன. அனைத்து பொருட்களும் எடை போடப்பட்டது. கலக்குவதற்காக கிளாஸ் குச்சி (ஆய்வகங்களில் வழமையாகப் பயன்படுத்தப்படுவது) கொடுப்பட்டது. ராமர் பிள்ளையும் 45 நிமிடங்கள் வரை கலக்கியும் பெட்ரோல் உருவாகவில்லை. பின்னர், தான் கொண்டுவந்திருந்த உலோகத்திலான குச்சியைக் கொண்டு கலக்கினார் ராமர் பிள்ளை. 5 நிமிடங்களில் அந்தக் குச்சியிலிருந்து கெரோசின் வாடையுடன் ஏதோ திரவம் வரத்தொடங்கியது. அந்தக் குச்சியை மீண்டும் எடை போட்டுப் பார்த்த போது அது 28.68 gm குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே விஞ்ஞானிகள் மூலிகை பெட்ரோல் அந்தக் குச்சியில் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று முடிவு கட்டினார்கள்.

இதற்கு ராமர் பிள்ளையால் விளக்கம் சொல்ல முடியவில்லை. மறுபடியும் செய்துகாட்டசொல்லி விஞ்ஞானிகள் கேட்டபோது, போதுமான அளவு மூலிகைகள் கொண்டுவரவில்லை என்று கூறிவிட்டார் ராமர் பிள்ளை. இவ்வாறு ராமர் பிள்ளையின் மூலிகைப் பெட்ரோல் சோதனை தோல்வியில் முடிந்தது. பின்னர் IIT மறுபடியும் ராமர்பிள்ளையை அழைத்தபோது தனக்கும் குடும்பத்தினருக்கும் தகுந்த பாதுகாப்பு அளித்தால் மட்டுமே மீண்டும் செய்துகாட்ட முடியும் என்று கூறிவிட்டார்.

ஆனால் விஞ்ஞானிகள் வேண்டுமென்றே ராமர் பிள்ளையை நிராகரிப்பதாகவே மீடியாக்களும் பொதுமக்களும் கருதினார்கள். விளைவு? ராமர் பிள்ளை வெற்றிகரமாக (?) மூலிகைப் பெட்ரோல் உற்பத்தியைத் துவக்கினார் (அதன் பின்புலங்களையும் பினாமிகளையும் இங்கு பார்க்கலாம்). மூலிகைப் பெட்ரோல் விற்பனை சில வருடங்கள் சத்தமில்லாமல் நடந்தது. ராமர் பிள்ளை சென்னை IIT யில் நடந்ததை மறந்து விட்டார், ஆனால் CBI மறக்கவில்லை. அவர்கள் எல்லாவற்றையும் ரகசியமாகக் கண்காணித்துக் கொண்டுதான் இருந்தார்கள். தகுந்த ஆதாரங்கள் கிடைத்தவுடன் கைது செய்துவிட்டார்கள்.

அப்படி என்னதான் செய்தார் ராமர் பிள்ளை? இரசாயனத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தபடும் ஹைட்ரோகார்பன் எனப்படும் பென்சீன், டொலுவீன், (இன்டஸ்ட்ரியல் சால்வன்ட்ஸ் industrial solvents, அதாவது கரைப்பான்கள்) என்ற இரசாயனங்களைப் பல்வேறு பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகளில் இருந்து நண்பர்கள் உதவியுடன் குறைந்த விலைக்கு கொண்டுவந்து இருக்கிறார். அதை மிக்ஸ் பண்ணி மூலிகைப் பெட்ரோல் என்று விற்றிருக்கிறார். (இங்கே கவனிக்க: இந்த பென்சீன் மற்றும் டொலுவீன் எனும் இரசாயனங்கள் பயங்கரமாகப் பற்றி எரியும் தன்மை உடையவை. பெட்ரோலை விட அதிகம் எரியும் சக்தி கொண்டவை. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கருகே சுங்குவார் சத்திரம் என்னும் ஊரில் ஒரு டேங்கரும், டிராக்டரும் மோதி பற்றி எரிந்து கிட்டத்தட்ட 100 பேர் பலியானார்கள் எனபது நினைவிருக்கலாம். அந்த டேங்கர் லாரி ஏற்றி வந்தது பென்சீன் என்னும் திரவமே). CBI ஆட்கள், ராமர் பிள்ளையின் மூலிகைப் பெட்ரோலை சாதாரண மனிதர்கள் போல வந்து வாங்கிச் சென்று லேபுகளில் சோதனை செய்த போது இந்த இரசாயனங்கள் இருப்பது தெரிய வந்தது (லேபில், GC-MS எனப்படும் கருவியில் இது பரிசோதிக்கப்பட்டது). பின்பு அவருடைய நடமாட்டங்கள், தகவல் தொடர்புகளை கிளறிய CBI இந்த ரசாயனங்கள் எங்கிருந்து ராமர்பிள்ளைக்கு கிடைக்கின்றன, யார் யார் உதவுகிறார்கள் என்று கண்டுபிடித்தது. ராமர்பிள்ளையின் மூலிகைப் பெட்ரோலும் முடிவுக்கு வந்தது.

இப்படி ஒரு சின்ன உலோகக் குச்சியில் இரசாயனங்களை ஒளித்து வைத்துக் கொண்டு விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், மீடியாக்கள், பொதுமக்கள் என்று சகட்டுமேனிக்கு எல்லோரையும் ஏமாற்றியிருக்கிறார் ராமர் பிள்ளை! அவருடைய அப்பாவி கிராமத்தான் தோற்றம் வேறு அதற்கு மிக உதவியாக இருந்தது. இவரை இன்னும் நம்புபவர்கள் வேறு இருக்கிறார்கள்! இதுபோன்ற விஷயங்களில் மீடியாக்கள் பொறுப்புடன் நடந்து கொள்வது நல்லது.

இப்போது மறுபடியும் ராமர் பிள்ளை கிளம்பி வந்திருக்கிறார். அக்டோபர் 2-ம் தேதி மெரினா கடற்கரையில் ஒரு லட்சம் லிட்டர் கடல் நீரைப் பெட்ரோலாக்குவேன்னு சவால் விட்டிருக்கிறார், என்ன நடக்குதுன்னுதான் பார்ப்போமே?

Saturday, September 25, 2010

கேப்டனின் ரகஸ்ய டெக்னிக்!



நம்ம விசியக்காந்தண்ணே இருக்காரே அவரு கட்சிதான் அடுத்து ஆட்சிய பிடிச்சிடும்னு நம்புற மாதிரி வளர்ந்தாரு மனுசன். இப்ப யாரு கண்ணு பட்டுச்சோ ஒண்ணும் வேகமாட்டேங்கிது! வேகவேகமா வளர்ந்த கட்சி அப்பிடியே வளராம ஏன் இப்பிடி அடிவாங்கத் தொடங்குதுன்னு அப்பிடியே விட்டத்தப் பாத்தபடி படுத்துக்கிட்டே நல்லா யோசிச்சுப் பாத்தோம். ஒண்ணும் வெளங்கல. சரி போனாப் போகுதுன்னு ரெண்டு கட்டிங் விட்டுட்டு வந்து உக்காந்தா கடகடன்னு எல்லாம் தெள்ளத்தெளிவா புரியுது. தக்காளி விசியகாந்து அடுத்து மொதல்வராக என்னென்ன செய்யனும்னு கண்டு புடிச்சிட்டேன்யா! அத எப்பிடி அவருக்கு சொல்றதுன்னே தெரியல. சரி யாராவது தேமுதிக அல்லக்கைங்க நம்ம ப்ளாக்கப் படிப்பாங்கல்ல (ம்ம்.. நம்ம யாரு, பிரபல பதிவராச்சே, இவிங்க கூட படிக்கலைன்னா எப்படி?), அதுனால ப்ளாக்குல போட்டுட்டா அதப்பாத்துப் படிச்சி, வெளங்கி, அதன்படி நடந்து விசியக்காந்து ஆச்சிய புடிச்சி கழகங்கள்ட்ட இருந்து தமிழ்நாட்டக் காப்பாத்தட்டும்னு ஒரு நல்லெண்ணத்துல இந்தப் பதிவப் போடுறேன் (இதப் படிச்சிட்டு வேற யாராவது போயி ஆச்சியப் புடிக்க டிரைப் பண்ணீங்க, பிச்சிபுடுவேன் பிச்சி!)

கட்சி ஆரம்பிச்ச புதுசுல கேப்டன் என்ன சொன்னாரு? லஞ்சம் ஊழலே இல்லாத ஆட்சியக் கொடுப்பேன்னாரு! அது எப்புடின்னு கேட்டா, அது ரகசியம், இப்பவே சொல்லிட்டா எல்லாரும் அதக் காப்பியடிச்சிடுவாங்கன்னுட்டாரு! சரி, ங்கொக்காமக்கா இவன் ஏதோ மேட்டர் வெச்சிருக்காண்டான்னு ஒரு குருட்டு நம்பிக்கையில கொஞ்சம் பேரு போயி ஓட்டுப் போட்டாங்ய. அதுக்கப்புறமாவது அது என்னா டெக்கினிக்கின்னு சொல்லியிருக்க வேணாம்? மனுசன் அநியாயத்துக்கு பொறுமையச் சோதிச்சாரு! மக்களும் வெறுத்துப்போயி நம்பிக்கையிழந்துட்டாங்க. இப்போ குட்டிச்சுவரு தேடுற கழுத மாதிரி தலைவரு கூட்டணி தேடுறாரு!
பாத்தீங்கள்ல? உங்களூக்கே தெளிவாப் புரியுதுல்ல என்ன ப்ராப்ளம்னு? இதச் சரிபண்ணிட்டம்னா விசியக்காந்து ஆச்சியப் புடிச்சிடுவாருல்ல?
அதுனால, ஆட்சிக்கு வந்தா நம்மாளு எப்புடி லஞ்சம், ஊழல ஒழிக்கப்போறாருன்னு, இத்தனை நாளா காப்பாத்தி வந்த ரகசியத்த இப்போ உங்களுக்காக ஓப்பன் பண்றோம் மக்கா! பாத்துப் படிச்சி வெளங்கி நடந்துக்குங்க!

லஞ்சம், ஊழலை ஒழிக்கும் ரகஸ்ய வழிமுறைகள்:
1. அரசு கெஜட்டில் இருந்து லஞ்சம், ஊழல் போன்ற வார்த்தைகள் எடுக்கப்படும் (தக்காளி இனி லஞ்சம் ஊழல்னு யாரும் வெளையாட்டுக்கூட சொல்ல முடியாதுல்ல?)
2. தமிழ்மொழியில் இருந்தும் லஞ்சம், ஊழல் போன்ற வார்த்தைகள் அடியோடு நீக்கப்படும் (இனி மீடியாக்காரன் கூட அதப் பத்தி எழுதமுடியாது ஆமா..!)
3. தமிழ்நாட்டில் உள்ள 6,345,679 அரசு அலுவலகங்களிலும் எந்த ஒரு வேலையையும் முடிக்க அதிகாரிகளுக்கு அன்பளிப்பு அளிப்பது கட்டாயம்னு ஒரு சட்டம் போடப்படும் (அப்புறம் எவன் லஞ்சம் வாங்குவான்? எல்லாம் அன்பளிப்புத்தான்!)
4. எந்தக் கன்ட்ராக்டும், டென்டரும், பீஸ் தொகையுடன் சேர்த்து 10.3567% அன்பளிப்பு கொடுத்தால் மட்டுமே அரசால் ஏற்றுக்கொள்ளப்படும்.
5. அரசு அதிகாரிகள் தாங்கள் பெறும் அன்பளிப்பில் 10 சதவீதத்தை மேலதிகாரிகளுக்குக் கொடுத்துவிட வேண்டும். 25 சதவீதத்தை கட்சிக்காரர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும்.
6. காவல்துறையிலும் முற்றிலுமாக லஞ்சம் ஒழிக்கப்படும். காவல்துறை இனி அன்பளிப்பு அளித்தால் மட்டுமே வந்து பாதுகாப்புக் கொடுக்கும். ஒவ்வொரு வழக்கும் பதிவு செய்ய எவ்வளவு அன்பளிப்பு வழங்கவேண்டும் என்று தெளிவாக அரசாணை வெளியிடப்படும்.
7. தனியார் துறையில் அன்பளிப்புகள் கொடுக்கல் வாங்கல் குறித்து தனியாக சட்டம் இயற்றப்படும். அரசியல்வாதிகள் வாங்கும் அன்பளிப்பிற்கு இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
8. எல்லா அன்பளிப்புகளுக்கும் வருமான வரி, சேவை வரி, மற்றும் பிற வரிகளில் இருந்தும் விலக்கு அளிக்கப்படும்.
9. மதுரையில் வாழும் 15,745,342 பேருக்கும் அன்பளிப்பில் இருந்து 5.6531 % விலக்கு அளிக்கப்படுகிறது.
10. இதையும் மீறி லஞ்சம் வாங்குபவர்கள் கைது செய்யப்பட்டு விருதகிரி படம் ஓடும் 67 தியேட்டர்களிலும் மாறி மாறி சிறை வைக்கப்படுவார்கள் (ங்கொய்யால, இனி எவனாவது லஞ்சத்தப் பத்தி கனவுல கூட நெனப்பான்?)

இதுதாங்க நம்ம கேப்டன் லஞ்சத்த ஒழிக்கிறதுக்காக பாதுகாத்து வெச்சிருக்க ரகசியம்! இப்பிடி ஒரு அரும்பெரும்கொள்கைகளோட தமிழ்நாட்டையும், தமிழர்களையும் காப்பாத்தத் துடிச்சிக்கிட்டு இருக்கும் புரட்சிக்கலைஞரை இன்னமும் நீங்கள்லாம் கண்டுக்காம இருந்தா, என்ன அர்த்தம்? போங்கய்யா போயி அடுத்த மொதல்வரப் பாத்து மன்னிப்பு கேட்டுட்டு கட்சில சேர்ர வழியப் பாருங்க!

Saturday, September 18, 2010

எந்திரன் போஸ்டர் வெளியீட்டு விழா!

எந்திரன் படத்தோட ஆடியோ வெளியீடு மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாக்கள் எல்லாரையும் ஒரு மிரட்டு மிரட்டி கதிகலக்கிடுச்சி. இதுவே இப்பிடின்னா படம் எப்படியிருக்குமோன்னு ஊரே காத்துக்கெடக்கு! எந்திரன் டீமோ இப்பவே இப்படி பண்ணியாச்சே இனி அடுத்தடுத்து இதைவிட பிரமாண்டமா எப்படி விழா நடத்துறதுன்னு திகைச்சுப் போயி நிக்கிது! தமிழனுக்கு ஒலகம் பூரா பெருமைதேடித்தரப்போற படத்துக்கு நாமலும் ஏதாவது செஞ்சு சரித்துரல நம்ம பேர பச்சக்னு பதிய வெச்சுடனும்னு இப்பிடி எந்திரன் போஸ்டர் வெளியீட்டு விழாவ நடத்தியிருக்கோம். எல்லாரும் வந்து கலந்துக்குங்க!

வழக்கம்போல விவேக்குதான் மைக்கப் புடிச்சி எல்லாத்தையும் டேமேஜ் பண்ணுறாரு... சே.. மேனேஜ் பண்ணுறாரு...!

எந்திரன் படம் ஒரு மொக்கைன்னு நான் சொல்லமாட்டேன், ஏன்னா அந்த உரிமை உங்களுக்குத்தான் இருக்கு. நீங்க மொக்கைன்னு சொன்னா நான் ஒத்துக்க மாட்டேன், ஏன்னா கலாநிதி மாறன் சாருக்கு அது பிடிக்காது. மொத்தத்துல இந்திரன்...இது.... எந்திரன்.... ஒரு தலைசிறந்த உலகப்படமா அமையும்னு சொல்லி, வைரமுத்து சார மேடைக்கு அழைக்கிறேன்.

தமிழனுக்கோர் பெருமை என்றால் அது இந்தியாவுக்கே பெருமை, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கோரு பெருமை என்றால் அது தமிழனுக்கே பெருமை, டைரக்டர் ஷங்கருக்குப் பெருமை என்றால் எங்கள் சினிமாக் குடும்பத்திற்கே பெருமை, ஆனால் கலாநிதி மாறனுக்குப் பெருமை என்றால் அது அகில உலகத்திற்கே பெருமை....! (ஸ்பீக்கரில் ரிக்கார்ட் செய்யப்பட்ட கைதட்டல் ஒலிக்கிறது, அதைக்கேட்டு ஆடியன்சும் கைத்தட்டுகிறார்கள்)

கண்ணுக்கு மையழகு, கவிதைக்குப் பொய்யழகு, ரஜினிக்கு நடையழகு, எங்கள் சினிமாவிற்குக் கலாநிதி அழகு (மறுபடியும் கைதட்டல்), நன்றி!

நன்றி வைரமுத்து சார், நம்ம சினிமாவிற்கு எது அழகுன்னு விளக்கமா சொல்லிட்டீங்க. அழகு அழகுங்கும் போதுதான் எனக்கு ஒரு கதை ஞாபகம் வருது. ஒரு ஊர்ல ஒரு பாட்டி ஜீன்ஸ் பேன்ட் போட்டுக்கிட்டு வடை சுட்டுக்கிட்டு இருந்துச்சாம். மொத்தம் 5000 வடை. எல்லாத்தையும் ஒரே நேரத்துல ஒரு பெரிய சட்டில போட்டு சுட்டுக்கிட்டு இருந்துச்சி. அவ்வளவு வடையவும் சட்டில இருந்து ஒண்ணா ஒரு பெரிய முள்ளுக்கரண்டிய கிரேன்ல மாட்டி வெளிய எடுத்து வெச்சா அப்போ பாத்து ஆயிரம் காக்கா வரிசையா பறந்து வந்து ஆளுக்கொரு வடைய எடுத்துக்கிட்டு போயிடிச்சி. எல்லா காக்காயும் ஒரு போயி பெரிய மரத்துல உக்காந்துச்சி. மரத்துக்கு 2000 கிளைகள். பாட்டி வடையத் தேடி மரத்துக்கு வந்திடிச்சி. அவ்வளவு பெரிய மரத்தப் பாத்தும் பயப்படாம ஒரு பெரிய கல்ல எடுத்து மேலே வீசிச்சி. கல்லப் பாத்ததும் எல்லாக் காக்காயும் பயந்து போயி வடையக் கீழே போட்டு பறந்து போயிடிச்சி. இதுல வர்ர பாட்டியோட துணிச்சல்தான் எனக்கு அழகு....!..... கைதட்டுங்க எல்லாரும்...ம்ம்ம்..(*&^%$*&@#$...)

ரஜினி, ஷங்கர், கலாநிதி மாறன் எல்லாரும் தலையில் கைவைத்து உக்கார்ந்திருக்கின்றனர்.

ஓக்கே..ஓக்கே.. இப்பிடி எந்திரன் படத்தோட வெற்றிக்கு(!) முழுமுதல் காரணமாக இருக்கும் கலாநிதி மாறன் சாருக்கு எங்கள் சல்யூட்! (மற்படியும் கைதட்டல்!)

அடுத்ததாக டைரக்டர் ஷங்கர் அவர்களை மேடைக்கு அழக்கிறேன்!

எல்லோருக்கும் வணக்கம். போஸ்டர் வெளியீட்டு விழா நடத்தனும்னு முடிவு பண்ண உடனே நாங்க செஞ்ச முதல் காரியம் விவேக்கக் கூப்பிட்டதுதான் (!). போஸ்டர் டிசைன் பண்றதுக்காக ஜப்பானுக்கு அருகிலுள்ள கும்மாங்கோன்னு ஒரு தீவுக்குப் போயிருந்தோம். அங்கே தண்ணிக்கடியில சுமார் 6000 அடி ஆழத்துல இருந்துக்கிட்டே விடிய விடிய போஸ்டர் டிசைன் பண்ணோம். அப்புறம் அதை பிரிண்ட் பண்றதுக்காக உருகுவே நாட்டுக்குப் போனோம். அங்க உள்ள ஒரு எரிமலை உச்சியில் இருக்கும் ஒரு டிஜிட்டல் அச்சகத்துல கிட்டத்தட்ட ரெண்டு மாசம் தங்கியிருந்து போஸ்டர் பிரிண்ட் பண்ணோம். அங்கே வந்து ஒத்துழைப்புக் கொடுத்த அனைவரும் எனது நன்றிய தெரிவிச்சுக்கிறேன். அடுத்ததா ஒரு முக்கியமான விஷயம். போஸ்டர் ஒட்டுரதுக்காக மொராக்கோவுல இருந்து ஒரு மெசின வரவழைச்சிருக்கோம். அத வெச்சு முதல் போஸ்டர் ஒட்டும் விழா அடுத்து பனாமா நாட்டில் நடைபெறும். இந்த சந்தர்ப்பத்த பயன்படுத்தி உங்க எல்லாரையும் அதற்கு அழைக்கிறேன். இதேற்கெல்லாம் தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் கலாநிதி மாறன் சாருக்கு நன்றி!

நன்றி ஷங்கர் சார். உங்க முதல் போஸ்டர் ஒட்டும் விழாவுக்கு என்னையும் அழைச்சிருக்கீங்க. அதையும் ஒரு வெற்றி விழாவா ஆக்குவது என் கடமை. உங்க பிரம்மாண்டதிற்கு நான் அடிமை. கலாநிதி மாறன் சாருக்கு அது என்றும் பெருமை! அடுத்ததா நாம் எல்லோரும் ஆவலுடம் எதிர்பார்க்கும் சூப்பர் ஸ்டார் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன் (கைதட்டல்...விசில்!)

எல்லாருக்கும் வணக்கம்...(கைதட்டல்..!)..நான் எப்பவும் எதை செஞ்சாலும்...எந்தப் படம் பண்ணாலும் அது தமிழனுக்கு பெருமை தருவதாகத்தான் இருக்கும் (கைதட்டல்...!) இப்படி ஒரு வாய்ப்புக்கொடுத்த கலாநிதி மாறன் அவர்களுக்கு நான் என்றென்றும் கடன் பட்டிருக்கிறேன். நன்றி!



தமிழனின் பெருமை!

Thursday, September 16, 2010

அடப்பாவிகளா தேனுக்கும் பிரச்சனையா?

தேன் என்றாலே சுத்தமானது, இயற்கையாகக் கிடைக்கக் கூடியது என்று நம்புகிறோம். அதனாலேயே குழந்தைகளுக்கும் நோயாளிகளுக்கும் தரப்படுகிறது. சித்த, ஆயுர்வேதமருத்துவங்களில் தேனே ஒரு மருந்தாகவும் உள்ளது. வீடுகளில் இருக்கும் பாட்டிவைத்தியத்திலும் தேனே முதன்மை வகிக்கிறது. இப்படி நம் அன்றாட வாழ்க்கையில் தேனுக்கு எப்போதும் இடம் உண்டு. இப்போது அந்தத் தேனுக்கும் பிரச்சனை வந்து விட்டது. அது என்னவென்றால் மார்க்கெட்டுகளில் கிடைக்கும் தேனில் ஆறு வகையான ஆன்டிபயாடிக் எனப்படும் மருந்துகள் அதிக அளவில் கலந்திருந்தது என்று சென்டர் பார் சைன்ஸ் அன்ட் என்விரான்மென்ட் Centre for Science and Environment(குளிர்பானங்களில் அதிக அளவில் பூச்சிமருந்துகள் கலந்திருப்பதைக் கண்டறிந்தவர்கள் இவர்களே) அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
தேனில் ஏன் ஆன்டிபயாடிக் கலந்திருக்கிறது? அதனால் வரும் பிரச்சனைகள் என்னென்ன? கொஞ்சம் விலாவாரியாக பார்ப்போமா?
பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள் தேனையும் நவீன பேக்கிங்கில் விற்கிறார்கள். இவர்கள் யாரும் காட்டில் இயற்கையாகக் கிடைக்கும் தேனை எடுத்து விற்பதில்லை. அது சாத்தியமும் இல்லையென்பதால், தேனீக்களை பெரிய அளவில் வளர்த்துத் தேனை அறுவடை செய்பவர்களிடம் இருந்து வாங்குகிறார்கள். அல்லது தாங்களே அப்படி ஒரு பண்ணை வைத்துக்கொள்கிறார்கள். இவ்வாறு தேனீக்கள் செயற்கையான் சூழல்களில் வளர்க்கப்படும் போது அவற்றுக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. (கோழிப்பண்ணைகளிலும் இதே போல் ஆன்டிபயாடிக் ஊசிகள் போடப்படுகின்றன). இதுதான் தேனில் ஆன்டிபயாடிக் மருந்துகள் கலந்திருப்பதற்குக் காரணம்.

எந்த அளவு வரை அதிகபட்சமாக ஒவ்வொரு ஆன்டிபயாடிக் மருந்தும் தேனில் இருக்கலாம் என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வரையரை வைத்துள்ளன. அந்த அளவுக்கு மேல் ஆன்டிபயாடிக் இருந்தால் அது தேனை சாப்பிடுபவர்களுக்குப் பாதுகாப்பானதல்ல. அத்தகைய தேனை அந்த நாடுகளும் அனுமதிப்பதில்லை. இந்தியாவில் தேன் தயாரிக்கும் கம்பெனிகள் இந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொழுது இந்தக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டே தேன் தயாரிக்கின்றார்கள். ஆனால் பிரச்சனையே அவர்கள் இந்தியச் சந்தைக்கு வரும்போதுதான். இந்தியச் சந்தை என்று வரும்போது வழக்கம்போல எல்லாக் கம்பெனிகளும் செய்வது போல அவர்கள் தரம் குறைந்த மற்றும் ஆன்டிபயாடிக் அளவு அதிகம் உள்ள தேனையே விற்கிறார்கள். இத்தேனை அவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பியிருப்பார்களேயானால் அது நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பபட்டு விடும். ஆனால் இந்தியாவில் தேனிற்கென்று எந்தவிதமான பாதுகாப்பு வரைமுறைகளும் சட்டங்களோ இல்லாததால் கம்பெனிகள் வேறு நாடுகளில் விற்க முடியாததை நம்தலையில் கட்டுகின்றார்கள்.
சமீபத்திய பரிசோதனை முடிவு இந்தியாவின் எல்லாப் பெரிய கம்பெனிகளின் தேனிலும் ஆன்டிபயாடிக் மருந்துகள் மிக அதிக அளவு உள்ளதாகத் தெரிவிக்கிறது. இதில் இரண்டு வெளிநாட்டுக்கம்பெனிகளும் அடக்கம் (உள்ளூர்க்காரனுக்கே நம்மளப் பத்தி அக்கரையில்லைன்னா அப்புறம் வெளிநாட்டுக்காரன் சும்மாவா இருப்பான்?). அந்த வெளிநாட்டுக்கம்பெனிகளின் தேன் முதலில் அவர்கள் நாட்டு விதிமுறைகளின்படியே பயன்படுத்தக்கூடாத ஒன்றாக இருக்கிறது. அவர்கள் அதைத் தம்நாடுகளில் விற்கவே முடியாது. அதனால் இதுக்கென்றே இருக்கும் நம் நாட்டுச் சந்தைகளுக்குத் தள்ளிவிடுகிறார்கள்.
இப்படி அதிக அளவு ஆன்டிபயாடிக் கலந்த தேனை நாள்பட சாப்பிடுவதால் இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், சிறுநீரகம், ஈரல் பிரச்சனைகளும் ஏற்படலாம். மேலும், நம் உடம்பிலேயே அந்த ஆன்ட்டிபயாடிக்குகள் இருந்து கொண்டிருப்பதால், தேவையான சமயத்தில் கொடுக்கபடும் போது அவை செயற்படாது போகலாம். (சூப்பர் பக் கிருமிகள் இந்தியாவில் அதிக அளவில் காணப்படுவதற்கு இதுபோன்ற காரணங்கள் இருக்கக்கூடும்).

வெளிநாட்டுக்கம்பெனிகளை இந்தியாவில் அனுமதிக்கத் தொடங்கியபிறகு, இந்தியக் கம்பெனிகளும் சரி, வெளிநாட்டுக்கம்பெனிகளும் சரி, இரட்டைத் தரக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாகவே தெரிகிறது (நம்ம இரட்டை குவளை சிஸ்டம் ஞாபகம் வந்தா அதுக்கு நான் பொறுப்பு கிடையாதுங்கோ). அதாவது, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு ஒரு தரம், உள்நாட்டுச் சந்தைக்கு ஒருதரம் என்று கம்பெனிகள் நேரடியாகவே நம்மை ஏளனம் செய்கின்றன. இதில் சில கம்பெனிகள் எக்ஸ்போர்ட் குவாலிட்டி என்று விளம்பரம் செய்து விற்பது கேவலத்தின் உச்ச கட்டம்! எக்ஸ்போர்ட் குவாலிட்டிக்கு இந்தியர்கள் தகுதியில்லை என்று ஒருமனதாக எல்லோரும் முடிவு செய்துவிட்டார்கள். இதில் பெரும்பாலும் அனைத்து இந்தியக் கம்பெனிகளும் அடக்கம் என்பதுதான் நம் தேசப்பற்றின் நிஜமான முகம்!. இங்கே பணம் கிடைக்கிறது என்றால் எதுவுமே தவறில்லை! உணவில் கலப்படம், பாலில் கலப்படம், சிமென்ட்டிலும் கலப்படம், ....எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம்! வாழ்க ஜனநாயகம்! வளர்க பணநாயகம்! ஓங்குக வாரிசுரிமை!


பின்குறிப்பு:
தேனில கலந்திருப்பதாகக் கண்டறியப்பட்ட ஆன்டிபயாடிக்குகள்:

ஆக்ஸி டெட்ராசைக்கிளின், ஆம்ப்பிசிலின், எரித்ரோமைசின், குளோரம்பினிகால், சிப்ரோப்ளாக்சசின், என்ரோப்ளாக்சசின்

பரிசோதனையில் அதிக அளவு ஆன்டிபயாடிக் கலந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ள தேன் கம்பெனிகள்:
டாபர், ஹிமாலயா, பதஞ்சலி ஆயுர்வேதா, பைத்தியநாத், காதி (சமீபத்தில் டாபர் கம்பெனி தரம்குறைந்த தேனை விற்பதாக நேபாளத்தில் பிரச்சனை எழுந்த பொழுது, அது இந்தியக் கம்பெனிகளைக் குறிவைத்துச் செய்யப்படும் அவதூறுப் பிரச்சாரம் என்று டாபர் கம்பெனி சமாளித்தது நினைவில் இருக்கலாம்)

மேற்கொண்டு விபரங்களுக்கு கீழே உள்ள சம்பந்தப்பட்ட வெப்சைட்டிற்குச் சென்று பார்க்கலாம்.
http://www.cseindia.org/content/press-release-cse-busts-myth-about-%E2%80%98natural-and-pure%E2%80%99-honey

Friday, September 10, 2010

பாமக துணையில்லாமல் ஆட்சியமைக்க முடியாது! எப்பிடி?எப்பிடி?எப்பிடி?




நம்ம அன்புமணியண்ணே பாமக துணையில்லாமல் ஆட்சியமைக்க முடியாதுன்னு சும்மா நச்சுன்னு சூப்பரா சொல்லியிருக்காரு. இப்பிடி ஒரு தெனாவெட்டு தமிழ்நாட்டுல வேற யாருக்குண்ணே வரும்? எப்பேர்ப்பட்ட தன்னம்பிக்கை, சாணக்கியத்தனம்?

சரி நாம மேட்டருக்கு வருவோம்,
பாமக துணையில்லாமல் ஆட்சியமைக்க முடியாது, அதுதான் எப்பிடி?
எப்பிடின்னு தெரிஞ்சுக்க உங்களுக்கெல்லாம் ரொம்ப ஆர்வமா இருக்குல்ல?

நாங்கதான் தேர்தல்ல எந்தக்கட்சி ஜெயிச்சாலும் அவங்க கூட நாங்களா போயி சேர்ந்துக்குவோம்ல (அப்பிடித்தானே இதுவரைக்கும் பண்ணிக்கிட்டு இருக்கோம்), அப்புறம் அவங்களா எப்பிடி ஆட்சி அமைச்சாலும் நாங்களும் துணைதானே! எப்பூடி...?
நாங்களும் அரசியல்ல சாணிய சே...சே... சாணக்கியத்தனத்த அள்ளிக் குடிச்சவங்கதாம்ல!

நைனா நைனா என்னை மறுபடியும் மினிஸ்டராக்கு நைனா...! வீட்டுல உக்காந்து என்ன செய்யிறதுன்னே தெரியல!

Thursday, September 9, 2010

யாராவது அஞ்சு பேரு போயித்தொலைங்கய்யா!

நேத்து டாஸ்மாக்குல கடைதொறக்குறதுக்காக எப்பவும்போல காலைலேயே போயி கடைவாசல்ல நின்னுக்கிட்டு இருந்தேன். ஆளுங்கவந்து ஷட்டர ஓப்பன் பண்ணிக்கிட்டு இருந்தானுங்க. சரி இன்னிக்கும் நாமதான் பர்ஸ்ட்டுன்னு பெருமையா திரும்பிப் பாத்தா அதுக்குள்ள ஒரு ஆளு திமுதிமுன்னு வந்து என்னை முட்டித்தள்ளிக்கிட்டு முன்னாடி போயி எனக்கு முன்னாடி ஒரு புல்லும் வாங்கிட்டான். நானும் முறைச்சிக்கிட்டே நம்ம ஐட்டத்த வாங்கிட்டு வேகமா அவன பாலோ பண்ணேன். ஒருவழியா மூத்திர சந்துக்குள்ள வெச்சி ஆளயும் புடிச்சிட்டேன். தக்காளி யாருடா நீய்யி? எங்க ஏரியாவுல வந்து எங்களுக்கு முன்னாடி புல்லு வாங்குரேன்னு கழுத்துச்சட்டையப் புடிச்சி ஒருவாங்கு வாங்குனா...... எங்க தலைவருக்காக வாங்குறேன்னான். ஓஹோ அப்ப நீயி அல்லக்கைய்யா? யாருடா உங்க பாஸு, ங்கொய்யா வாடா ரெண்டுல ஒண்ணு பாத்துடலாம்னு நம்ம சிரிப்பு போலீசு இருக்கிர தெகிரியத்துல கெளம்பிட்டேன்.
போயிப் பாத்தா எங்கேயோ பாத்த மாதிரியே இருக்கு. அவன்கிட்டேயே கேட்டேன். யோவ் நீ சுனாசாமி மாதிரியே இருக்கியே? அதுக்கு அந்தாளு, ஆமாப்பா நான் சுனாசாமிதான் சும்மா விடுப்பான்னு சொல்றாப்ல! யோவ் நீயெல்லாம் ஸ்டாரு ஹோட்டல்ல அடிக்கிற ஆளாச்சே என்யா இங்க வந்தேன்னு கேட்டா, எலக்சன் வரப்போகுதுல எங்க கட்சி சார்பா நிக்கிறதுக்கு அஞ்சு பேரும் வேணும், அதுக்கு ஆள் புடிக்கிறதுக்குத்தான் இப்பிடி மாறுவேஷத்துல அலையிறேங்கோன்னாரு, எனக்கு தூக்கிவாரிப்போட்டிருச்சி,

என்னது மாறுவேஷமா, அப்பிடி ஒண்ணுமே தெரியலையே?

உடனே கன்னத்துல இருந்து ஒரு மச்சத்த எடுத்துட்டு,
இது என்னன்னு தெரியலைய்யா?

(ங்கொக்காமக்கா...இந்த நியாயத்த எங்க போயிச் சொல்ல? )

சரி அது என்ன அஞ்சு சீட்டு கொடுத்தா கூட்டணி?

ஆமா இல்லேன்னா அப்புறம் 234 தொகுதிலேயும் நிக்க வேண்டி வந்திடும், அத்தினிபேருக்கு நான் எங்க போவேன்? அஞ்சு பேருக்கே ஊரு ஊரா மாறுவேசத்துல அலைஞ்சிக்கிட்டு இருக்கேன்!

அது சரி, இப்போ 5 பேரு புடிச்சிட்டீங்களா?

ஒருத்தனும் சிக்க பாட்டேங்கிரானுங்கய்யா, இவ்வளவு கேக்கிரியே, நீ ஒரு சீட்ட எடுத்துக்கோயேன்.

(தக்காளி கடைசில எனக்கே ஆப்பா! )

யோவ் இவ்வளவு நேரம் உங்கூட பேசிக்கிட்டு இருந்ததுக்கு இப்பிடி பண்ணுறியே?

ஆமாய்யா எல்லாரும் இப்பிடியே சொன்னா, நான் என்னதான் பண்றது? ஒண்ணு செய்யேன், நீதான் பிரபலப் பதிவ்ராச்சே, அதுவும் பலபேரு வந்து போற எடம்னு வேற போட்டிருக்கே, நீயே அஞ்சு பேரு வேணும்னு ஒரு வெளம்பரம் கொடுத்துடேன்!

சரி சென்டிமென்ட்டா (!) கேக்குறதுனால கருமத்தப் போட்டுத் தொலைக்கிறேன். யாராவது அஞ்சு பேரு போயித்தொலைங்கய்யா!

ஆட்கள் தேவை!
வரும் தமிழக சட்டசபை தேர்தலில் சனதா கட்சியின் சார்பாக நிற்க ஐந்து வேட்பாளர்கள் தேவை. தேர்தல் முடியும் வரை உணவு தங்குமிடம் இலவசம்.
கண்டிசன்கள்:
1. வரும்போது டெபாஸிட் தொகையும் கொண்டுவரவேண்டும்.
2. கட்சித்தொண்டர்கள் என்ற பெயரில் ஆளுக்குக் குறைந்தது 50 பேராவது திரட்டி வரவேண்டும்.
3. அழுகிய தக்காளி, முட்டை வீசிய, வாங்கிய அனுபவம் கண்டிப்பாக இருக்கவேண்டும்.
4. மாதாமாதம் கேஸ் போடுவதற்கு மேட்டர் கொண்டுவரவேண்டும் (நல்ல பரபரப்பான மேட்டருக்கு ரூ.50 கொடுக்கப்படும்)
5. கட்சியில் குறைந்தது 2 ஆண்டுகளுக்கு உறுப்பினராக சம்மதம் தெரிவிக்கவேண்டும்.
6. அவ்வவப்போது கட்சிப் பணியில் ஈடுபட்டு கட்சியை பலப்படுத்த வேண்டும்.
7. வேறு மாநிலங்களில் நம் கட்சி போட்டியிடும்போது கட்சிப் பணிகளுக்காக அங்கே செல்ல வேண்டும்.

கண்டிசன்களுக்கு உடன்படுபவர்கள் உடனே புறப்பட்டுவரவும்.

முகவ்ரி:
சுனாசாமி
தலைவர், செயலாளர், பொருளாளர், உதவித் தலைவர், உதவி செயலாளர் மற்றும் உதவிப்பொருளாளர்,
சனதா கட்சி,
தலைமை அலுவலகம்,
சென்னை.





எச்சரிக்கை: இது அரசியல் பதிவல்ல!

Monday, September 6, 2010

எந்திரன் கதை என்ன?



வரவர நம்ம சூப்பர் ஸ்டாரோட எந்திரனுக்கு இருக்கும் பரபரப்பு கூடிக்கிட்டே போகுது! எப்பவும்போல சங்கர் கதையப் பத்தி சின்ன ஹின்ட் கொடுத்ததோட விட்டுட்டாரு. அதுவேற பரபரப்ப ஏத்தி விட்டுருச்சி! முழுக்கதையும் என்னவா இருக்கும்னு ஒரே டென்சன்! இத இப்பிடியே விட்டா எப்பிடின்னு கதையக் கண்டுபிடிச்சி உங்களுக்காக இங்க கொடுத்திருக்கோம், படிச்சி உங்க பரபரப்பக் கொஞ்சம் குறைச்சுக்குங்க!

விஞ்ஞானி ரஜினி, ரொம்ப நாள் பாடுபட்டு ஒரு அற்புதமான ரோபோவை (எந்திரமனிதன்) கண்டுபிடிக்கிறார். அது அசாத்தியமான திறமைகள் கொண்டது. அதை எப்படி புரோகிராம் செய்கிறோமோ அப்படி இயங்கக்கூடியது. விமானம் ஓட்டுவது, கப்பல் ஓட்டுவது, என்று எல்லாம் செய்யும். அதைக்கேள்விப்பட்டு ஒரு அமைச்சரும், அரசு அதிகாரிகளும் அதைக் காண ரஜினியின் ஆய்வுக்கூடத்திற்கு வருகிறார்கள். அங்கே அவர்கள் ரோபோவைப் பார்த்து வியந்து போய் அதை ரகசிய அடியாளாகப் பயன்படுத்த விலை பேசுகிறார்கள். ரஜினி இதற்கு மறுக்கிறார். இதனால் அமைச்சருக்கும் அவருக்கும் பகை ஏற்படுகிறது. அமைச்சர் எப்படியாவது ரோபோவை கைப்பற்றிவிட வேண்டும் என்று அடியாட்களை அனுப்புகிறார்.

அதிலிருந்து தப்பிக்கும் ரஜினி நேரடியாக முதலமைச்சரைப் பார்க்க்கிறார். அவரும் உதவுவதாக வாக்களிக்கிறார். ஆனால் அரசு அதிகாரிகள் ஒவ்வொருவரும் அவருக்கு உதவுவதற்கு பெரும் தொகை ஒன்றை லஞ்சமாகக் கேக்கின்றனர். வில்லன் அமைச்சரும் பலவழிகளில் இருந்தும் இடைஞ்சல் கொடுக்கிறார். வெறுத்துப் போன ரஜினி திடீரென்று தலைமறைவாகிறார். பின்னர் அவர் தனது ரோபோவைப் பயன்படுத்தி லஞ்சம் கேட்ட ஒவ்வொரு அதிகாரியாக நவீன முறையில் கொல்கிறார். இடையில் ஐஸ்வர்யா ரோபோ ரஜினியை நிஜமென்று நம்பி அதைக் காதலிக்கிறார். ரோபோவும் காதலித்து டூயட் பாடுகிறது.

நேர்மையான போலீஸ் அதிகாரி ஒருவரிடம் இந்தக் கொலை வழக்குகள் ஒப்படைக்கப்படுகிறது. அவர் சாமர்த்தியமாகச் செயல்பட்டு ரோபோவை மடக்கிச் செயல் இழக்கச் செய்கிறார். பின்னர் ரோபோவை கோர்ட்டில் ஒப்படைக்கிறார். ரோபோவைக் குற்றவாளிக்கூண்டில் பார்த்து நீதிமன்றமே திகைக்கிறது. நீதிபதி போலிசைப் பார்த்து ரோபோவை எப்படித் தண்டிக்க முடியும் எனவே அதைக் கண்டுபிடித்தவரை பிடித்து வாருங்கள் என்று உத்தரவிடுகிறார்.
பல சேசிங்கிற்குப் பிறகு விஞ்ஞானி ரஜினியை பிடித்து கோர்ட்டில் நிறுத்துகிறார்கள். பரபரப்பாக வாக்குவாதம் நடக்கிறது. ரஜினி தான் ரோபோவிற்கு சுயமாக சிந்திக்கும் திறனை அளித்துவிட்டதாகவும் அது செய்த கொலைகளுக்கு தாம் பொறுப்பேற்க முடியாது என்றும் வாதிடுகிறார். அதை எற்றுக் கொண்ட நீதிபதிகள் ரோபோவை அழித்துவிட உத்தரவிடுகின்றனர். ரஜினியும் விடுவிக்கப்படுகிறார். கோர்ட்டிற்கு வந்திருக்கும் ஐஸ்வர்யா உண்மையை உணர்ந்து விஞ்ஞானி ரஜினியுடன் இணைகிறார்.
இறுதியில் ரஜினி மீண்டும் அதே போன்று ஒரு ரோபோவை உருவாக்க ஆரம்பிக்கிறார். அதோடு படம் முடிகிறது.

கதையைக் கண்டுபிடித்துத்(?) தந்தவர்கள்:
கு.மு.க. கதை இலாகா (உங்களுக்காக எவ்வளவோ பண்ணிட்டோம் இதப்பண்ண மாட்டோமா?...எஞ்சாய்...........!)

Saturday, September 4, 2010

அதிரடி வீட்டுக்குறிப்புகள்: கைகளால் பேப்பர் கிழிப்பது எப்படி?

ஒருவழியா பிரபலப் பதிவர் ஆயாச்சு, பலபேரு ஆர்வமா(!) பாலோ பண்ணத் தொடங்கிட்டாங்க, ஒரு பதிவு போட்டா ஓடி வந்து கும்முவதற்கு ஒரு படையே தயாரா இருக்கு, இவ்வளவு இருந்தும் ஏதோ மிஸ்ஸாகுற மாதிரியே ஒரு பீலீங். சரி எதுக்கும் இருக்கட்டும்னு நம்ம கேரளா ஜோசியர் குஞ்சுன்னிய போயி பாத்து என்ன செய்யலாம் கேட்டோம். அவரு நீங்க எல்லாத்துக்கும் உபயோகப்படுற மாதிரி ஒரு பதிவப் போடுங்க, உங்க மனபாரம் குறைஞ்சாலும் குறையும்னு சொல்லிப்புட்டாரு.

என்னடா இது இப்பிடி ஒரு குண்டத் தூக்கிப் போட்டுபுட்டாரு நமக்குத்தான் சுட்டுப்போட்டாலும் உருப்படியா எழுத வராதே, என்ன பதிவு போடலாம்னு விடிய விடிய ரெண்டு புல்ல காலி பண்ணி யோசிச்சதுல வந்த ஐடியாதான் இது. அது என்னன்னா கைய வெச்சி பேப்பர் கிழிப்பது எப்பிடின்னு எல்லாத்துக்கும் சொல்லிக்கொடுப்பது. நிச்சயமா உபயோகமான குறிப்பா இருக்கும் ஏன்னா யாருமே வாழ்க்கைல பேப்பர் கிழிக்காம இருக்க மாட்டாங்கல்ல, அதுனால் எப்பிடியும் நம்ம பதிவு யூஸ் ஆகிடும் இல்லியா?

சரி, இப்போ பேப்பர கிழிப்பது எப்படின்னு பார்ப்போமா?

மொதல்ல நீங்க கிழிக்கவேண்டிய பேப்பர கையில எடுத்து வெச்சிக்கிடுங்க.
அப்புறம் அத ரெண்டா கவனமாக பாருங்க, ரெண்டா மடிங்க. எங்க கிழிக்க்கனுமோ அந்த எடத்துல மடிப்பு வர்ர மாதிரி மடிக்கனும். அது ரொம்ப முக்கியம். ஆமா.



பேப்பர மடிசிட்டீங்களா? மடிப்புல கை விரல வெச்சி நல்லாத் தேச்சி விடனும். அப்புறம் பேப்பர விரிக்கனும். ஏதாவது மேசைல பேப்பர வெச்சிட்டு ஒரு பக்கத்த ஒரு கையால அழுத்தி பிடிச்சிக்கிட்டு இன்னொரு பக்கத்த பிடிச்சி டர்ருனு கிழிக்கனும். மடிப்புல ஒரு ஸ்கேல வெச்சிக்கிட்டுக் கூட டர்ருனு இழுத்துக் கிழிக்கலாம். அது உங்க சவுகர்யத்த பொறுத்தது.



இப்பிடி டர்ருனு கிழிக்க விரும்பாதவங்களுக்கு இன்னொரு டெக்னிக் வெச்சிருக்கேன். பேப்பர மடிச்சீங்கள்ல, அத விரிக்காம, மடிப்புக்குள்ள ஒரு ப்ளேட விட்டு சர்ருனு இழுத்துட்டீங்கன்னா அப்பிடியே கிழிஞ்சுரும் ஆமா.

இப்பிடி நீங்க வரிசையா பேப்பர கிழிச்சுக்கிட்டே போகலாம். பேப்பரத்தான் கிழிக்கனும்னு இல்ல, உங்க வசதியப் பொறுத்து, ரூவா நோட்டு, நியூஸ் பேப்பரு, புக்கு, இப்பிடி எத வேணூம்னாலும் கிழிக்கலாம், அதுக்கு நம்ம டெக்னிக் கண்டிப்பா கை கொடுக்கும். மனசத் தளரவிடாம கிழிச்சிக்கிட்டே போங்க! ஆல் தி பெஸ்ட்!




ஓக்கே மக்கா...இன்னிக்கு கையால பேப்பர் கிழிப்பது எப்படின்னு பாத்தோம், இதுக்கு கெடைக்கிற வரவேற்பப் பொறுத்து அடுத்து காலால பேப்பரக் கிழிப்பது எப்படின்னு பார்ப்போம், அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது உங்கள் ப.ரா.!

Friday, September 3, 2010

காவல்காரன் ரிலீசுக்கு ஆட்கள் தேவை!

நம்ம டாக்குடர்ரு தம்பி விஜய்யோட அடுத்த படம் காவல்காரன் விரைவில் ரிலீசாகப்போகுது, இன்னும் பதிவர்கள்லாம் சும்மா இருந்தா எப்பிடி? அதுனால மேட்டர நாமலே தொடங்கி வெப்போம்னு ஒரு நல்லெண்ணத்துலதான் இப்பிடி!






(மேட்டரப் சரியா படிக்க முடியலேன்னா, அது மேலேயே உங்க மௌச வெச்சி நல்லா ஓங்கி குத்துங்க, உங்களுக்காக அது பெரிசா தொறக்கும்!)



படத்தில் உள்ள மேட்டர் தெளிவாகத் தெரியவில்லை என்று வந்த தகவலால், கீழே டெக்ஸ்ட்டாகவும் கொடுத்து இருக்கிறேன்.

ஆட்கள் தேவை
எதிர்வரும் தீபாவளித்திருநாள் அன்று ரிலீசாகும் எங்கள் இளையதலைவலி உங்கள் விஜய் அவர்கள் நடித்துள்ள(!) காவல்காரன் திரைப்படத்தை முதல் காட்சியன்று கண்டு ரசிக்க ஆட்கள் தேவை! டிக்கட் மற்றும் போக்குவரத்துச் செலவு இலவசம். மேலும் இடைவேளையின் போது சந்து பாம், அமிர்தாஞ்சன், கால்ப்பால் மருந்துகள் தள்ளுபடி விலையில் வழங்கப்படும்! அதிரடி சலுகையாக முதல் 50 நபர்களுக்கு இன்சூரன்ஸ் முற்றிலும் இலவசம்!

அனுபவம் மற்றும் தகுதி: வேலை வெட்டி எதுவும் இல்லாமல் தறுதலையாகச் சுற்றிய அனுபவம் 2 வருடங்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும், வில்லு, குருவி, சுறா போன்ற படங்களை முதல் காட்சியில் பார்த்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

நிபந்தனைகள்: 1. படம் ஓடும்போது கண்டிப்பாக தூங்கக் கூடாது
2. படம் துவங்கியவுடன் கதவுகள் பூட்டப்படும், எனவே இடையில் எழுத்து வெளியே செல்ல முயற்சிக்கக் கூடாது. (பாடல் காட்சியில் கூட தம்மடிக்கச் செல்லக்கூடாது)
3. படம் முடிந்து வெளியே வரும்போது கேமராவில் தெரியுமாறு படம் சூப்பர் என்று சொல்லவேண்டும்.
4. முக்கியமான காட்சிகளில் கைதட்டவேண்டும். (எச்சரிக்கை: கைதட்டாவதர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுபிடிக்கபட்டு மறுபடியும் அடுத்த ஷோவிற்கு அனுப்பப்படுவார்கள்)

தகுதியுடையவர்கள் விபரங்களுடன் உடனடியாக கீழ்கண்ட முகவரிக்கு நேரடியாக வரவும்:
முகவரி:
அனைந்திந்திய இளையதலவலி ரசிகர் பேரவை,
கு.மு.க. தலைமை அலுவலக வளாகம்,
ஆற்காடு சாலை, சென்னை - 600 024
இலவச டோல் ப்ரீ எண்: 1800- ங்கொய்யா – 000

ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
படம் பார்க்க வரும் ரசிகர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 50 அதிர்ஷ்டசாலிகளுக்கு அடுத்த மாதம் சிங்கப்பூரில் நடக்க இருக்கும் பிரபல பதிவர் ஜெய்யின் ஸ்பெசல் கீரிப்ப்புள்ளை ஷோவிற்கான டிக்கட் வழங்கப்படும். (அதிலிருந்து ஒருவரை பிரபலப் பதிவர் ஜெய்யே தேர்ந்தெடுத்து கீரிப்புள்ளை ஒன்றை பரிசளிப்பார்!)


ம்ம்ம்...கெளப்புங்கள்....தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்!

Thursday, September 2, 2010

போட்டோ பதிவு: நெஞ்சுக்கு நீதி!








பி.கு.: இது அரசியல் பதிவல்ல!