Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Saturday, June 25, 2011

வந்தாரை வாழ வைக்கும் தமிழர்களே....!

சானல் 4 வீடியோ தொகுப்பு மூலமாக இலங்கை அரசின் உண்மையான நோக்கம் என்னவென்பதை முழுமையாக தெரிந்து கொண்டோம். மற்றநாட்டு அரசுகளுக்கு இவை முன்பே நன்கு தெரியும் என்றாலும், அவர்களுக்கு இருக்கும் வேறு சில உள்நோக்கங்களால் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். எங்கோ இருக்கும் சானல் 4-ற்கு இருக்கும் அக்கறையில் ஒரு சதவீதம் கூட நம் தமிழக தொலைக்காட்சிகளுக்கு இல்லையே? அதிகாரம், பணபலம், மீடியா எல்லாம் குறுகிய எண்ணம் கொண்ட ஒரு சிலரின் கையில் சிக்கி நம் வாழ்வு, சுற்றுச் சூழல், தொழில் வளர்ச்சி, சமூக மேம்பாடு என அனைத்தும் சீரழிந்து வருவதை ஆற்றாமையோடு பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறோம். 

சானல் 4-ன் கொலைக்களம் காணொளியை பார்த்த பின்னரும் நாம் எதையும் கண்டு கொள்ளாது இருந்தால் வரலாறு நம்மை மன்னிக்காது மக்களே! நம்மால் பெரிதாக எதுவும் செய்துவிட முடியாது என்றாலும், குறைந்தபட்ச உணர்வுகளையாவது வெளிப்படுத்துவோம். இதன்மூலம் இலங்கையில் தமிழர்கள் அரைமனிதர்களாக நடத்தப்பட்டு வரும் நிலையாவது மாறட்டும்.

ஜூன் 26 அன்று சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிக்கும் நாளாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்படிருக்கிறது. அந்நாளில் ஈழப் படுகொலைகளை நினைவு கூறும் அதே சமயம், இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட 543 தமிழக மீனவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும் இந்த நிகழ்வை அமைத்துக்கொள்ளலாம் நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இது அரசியல்/சினிமா நிகழ்வல்ல, லாரிகளில் அல்லக்கைகளை கொண்டுவந்து கொட்டுவதற்கு! மக்களால் மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சி! நீங்களும் உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், பக்கத்து வீட்டினர், அலுவல தோழர்கள் என அனைவரையும் கலந்து கொள்ளச் செய்யுங்கள். உங்களால் முடிந்த வரை இத்தகவலை பரப்பியும் உதவுங்கள். இதுதான் பாதிக்கப்பட்ட நம் சகோதரர்களுக்கு ஒரு சகமனிதனாக நாம் செய்யும் சிறு முயற்சி!







மெல்லிதயம் கொண்டோரே
மெழுகுதிரி ஏந்த
மெரினாவிற்கு வாரீர்.

சென்னையில்,
நாள்: ஜூன் 26
நேரம்: மாலை 5 மணி
இடம்: சென்னை மெரினா கண்ணகி சிலை.



மதுரையில்,
தமிழ் அன்னை சிலை
தமுக்கம் அருகில் ,மதுரை
ஈழ ஆதரவாளர் கூட்டமைப்பு -9443917588 இந்த எண்ணுக்கு போன் செய்து கேட்டு கொள்ளவும் .அல்லது உங்கள் வருகையை .உறுதி படுத்தி கொள்ளவும் .

கோவையில்,

இன்னும் இடம் உறுதி செய்ய படவில்லை. அதனால் .
திரு .பிரபாகர் அவர்களை 9865417418 தொடர்பு கொள்ளவும்.


டிவீட்டரில் பிரச்சாரத்தை முன்னெடுக்க, உங்கள் ட்வீட்டுகளில் #June26Candle ஐ சேர்த்துக் கொள்ளுங்கள்!

நன்றி!

சுகவீனமாக போதிலும் அயராது முயற்சி எடுத்து வரும் நண்பர் கும்மி அவர்களுக்கு ஒரு சல்யூட்!


!

Saturday, May 14, 2011

யோவ்... புடிங்கய்யா... புடிங்கய்யா.....!



 இனி அஞ்சு வருசம் அவன் கைல சிக்காம எப்படி ஓட்டுவேன்........அவ்வ்வ்வ்வ்வ்வ்..........!



அவன எங்கேய்யா தேடுறது? சிக்க மாட்டாங்கிறானே? ஒருவேள கூகிள்ல தேடிப் பாக்கலாமா?



 என்னது சிக்கிட்டானா? அவனை அப்படியே புடிச்சு வைங்கய்யா இதோ வந்துடறேன்...!



 அப்பாடா இனி தைரியமா அடிக்கலாம், மொதல்ல ஒரு நல்ல பீர் கப்பு வாங்கனும்...!



அந்தப் பய மட்டும் மாட்டுனான்னா இனி ஸ்ட்ரெயிட்டா ஷூட்டிங் சார்ஜ்தாண்டா........!


கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கமா.. சட்டசபைக்கு போய்ட்டு உடனே ஓடி வந்திடுறேன்..!


போய்ட்டானா....?

!

Friday, March 11, 2011

உங்களுக்காக ஒரு அதிரடி அரசியல் சர்வே....!

அன்பார்ந்த பெரியோர்களே தாய்மார்களே...வாக்காளப் பெருங்குடி மக்களே உங்கள் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி மகிழ்ந்திடுவதற்காக மீண்டும் ஒரு சர்வே...! வழக்கம் போல கிழிச்சு தொவச்சி காயப்போட்டுடுங்க.

சர்வே கேள்விகளுக்கு பதில் அளிக்க 5 நிமிடம் மட்டுமே நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் படித்துப் பார்க்க 10 நிமிடம் எடுத்துக் கொள்ளலாம். கொடுக்கப்பட்ட விடைகளில் இருந்து மட்டுமே பதில் அளிக்க வேண்டும். அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதில் அளிப்பவர்களுக்கு சிறப்புப் பரிசு காத்திருக்கிறது.


கேள்விகள்:

1. ஒரு ஓட்டிற்கு எவ்வளவு பணம் எதிர்பார்க்கிறீர்கள்?
அ) 2000
ஆ) 5000
இ) 1000


2. பணத்திற்குப் பதிலாக பொருளாகக் கொடுத்தால் என்ன வேண்டும்?
அ) ஒரு வெளிநாட்டு பானம் + பிரியாணி பொட்டலம்
ஆ) தியேட்டர்களில் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய டோக்கன் மதிப்பு 5000
இ) டாஸ்மாக்கில் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய டோக்கன் மதிப்பு 10000


3. உங்கள் தொகுதிக்கு சினிமா நடிகைகள் பிரச்சாரம் வருகின்றார்கள் என்றால், உங்கள் சாய்ஸ்
அ) குஷ்பு
ஆ) நமீதா
இ) சங்கவி


4. உங்கள் தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கும் நடிகர்கள்
அ) டாகுடர்.விஜய்
ஆ) டாகுடர் விஜயகாந்த்
இ) ஜேகே ரித்தீஷ்
ஈ) சாம் ஆண்டர்சன்


5. கீழ்கண்ட அரசியல் புள்ளிகள் உங்கள் தொகுதியில் போட்டியிட்டால் உங்கள் சாய்ஸ்
அ) கனிமொழி
ஆ) சசிகலா


6. தேர்தலில் போட்டியிட வேண்டும் என நீங்கள் விரும்பும் சினிமா விஐபிக்கள்
அ) எஸ். ஏ. சந்திரசேகர்
ஆ) இயக்குனர் பேரரசு
இ) டி ராஜேந்தர்


7. நீங்கள் சேரவிரும்பும் கட்சி
அ) லதிமுக
ஆ) மக்கள் இயக்கம்
இ) அ.இ.நா.ம.க (மொதல்ல இது யாரு கட்சின்னு கண்டுபுடிங்க...)



8. உங்களுக்குப் பிடித்த அரசியல்வாதி
அ) நீரா ராடியா
ஆ) மாயாவதி



9. 2016-ல் யார் முதல்வர்? உங்கள் கணிப்பு...?
(இதற்கு மட்டும் உங்கள் இஷ்டம் போல் பதில் சொல்லலாம்) 


10. நீங்கள் காலில் விழ விரும்பும் விஐபி
அ) ஜெயலலிதா
ஆ) கலைஞர்
இ) பன்னிக்குட்டி ராம்சாமி

அய்யோ.. நான் ஒண்ணும் சொல்லலீங்....!

என்ன மக்களே சர்வேய முடிச்சிட்டீங்களா? இப்போ அந்தப் பரிசு என்னன்னு தெரிஞ்சுக்கனும் அவ்வளவுதானே?

நமது மங்குனி அமைச்சரின் ப்ளாக் ஏலத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. அனைவரும் ஏலத்தில் கலந்து கொள்ளலாம். அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான விடை அளிப்பவர்களுக்கு, கடைசி ஏலத்தொகையில் 50% தள்ளுபடி அளிக்கப்படும்!

வழக்கம் போல் பிட் வசதி உண்டு, 1999 ரூபாய் செலுத்தினால், பிட் அனுப்பி வைக்கப்படும்!


Wednesday, March 9, 2011

அறுபத்து மூணு பேருக்கு என்ன பண்றது... ?

சாணக்கியனுக்கே சாணக்கியம் சொல்லிக்கொடுத்த அரசியல் சாணி.. சே... ஞானி, அரசியலின் அரிச்சுவடி, இந்தியாவின் விடிவெள்ளி, தமிழகத்தின் நிரந்தர முதல்வர், தமிழினத்தலைவர், களிங்கர்ஜீ அவர்களின் அனல் பறக்கும் அதிரடி அரசியல் ஆட்டத்தின் விளைவாக, காங்கிரஸ் கட்சி 63 சீட்களை பெருமையுடன் பெற்று களிங்கர்ஜீ அவர்கள் துணையுடன் மக்களுக்கு தொண்டாற்றி மகிழ்ந்திட துடியாய் துடித்துக் கொண்டு இருக்கிறது.

தானைத்தலைவர் ராகுல்ஜீ அவர்களின் வழிகாட்டுதலில் சீறு கொண்டு எழுந்துள்ள கட்சியினர், 63 சீட்டுகளை வாங்கிக் குவித்து வெற்றி நடை போடும் இன்னேரத்திலே நமக்குத் தேவையான அந்த 53 (மீதி 10 சீட்டு கோஷ்டித் தலைகளின் வாரிசுகளுக்குன்னு தெரியாதா உங்களுக்கு?)  சிங்கங்களைக் கண்டறியும் பணியில் அனைத்துக் கோஷ்டியினரும் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளனர் என்பதை இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்!


ரெண்டு நாளா நாங்க அடிச்ச அதிரடில எல்லாரும் இன்னேரம் ஸ்பெக்ட்ரத்த பத்தி மறந்திருப்பாங்கள்ல மேடம்...?


இப்படி சிரிக்கிறீங்களே.... ரெண்டு மூணு நாளா என்ன நடக்குதுன்னு உங்களுக்கு ஏதாவது வெளங்குதா மன்மோகன்ஜீ....?


என்ன சொல்றிங்க தங்கபாலு, 63 பேர்ல 53 பேரு எங்களுக்கு வேண்டப்பட்டவங்களா?



இப்பவாவது நாந்தான் அடுத்த முதல்வர்னு அறிவிச்சிருக்கலாம்...!


பாருங்க கஷ்டப்பட்டு சீட்டு வாங்கிக் கொடுத்துட்டேன்,  போயி எப்படியாவது 63 பேர புடிச்சிக்கிட்டு வாங்க...!



Tuesday, March 8, 2011

இனி நாங்கதான் தமிழ்நாடு....!


இனி நாங்கதான் தமிழ்நாடு....!


ஹலோ ஜோசியரா...?

பெரும்பாலான பதிவர்களின் கணிப்பின்(?) படி  தேர்தலில் அதிமுகவே வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது.  அம்மா தான் அடுத்த முதல்வர் என்று கிட்டத்தட்ட முடிவாகிருச்சு. அடுத்த ஆட்சியில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று தெரிந்து கொள்ள ரொம்ப ஆர்வமா இருப்பீங்க (ஆமா யாருக்குமே தெரியாதுல....?)  அதை வெச்சு ஒரு சின்ன கற்பனை...! 

இதைப் படித்து தொழிலதிபர்கள், அல்லக்கைகள், கைத்தடிகள், வலதுகைகள் எல்லோரும் பயனடைவார்களாக!


நூறு எண்ணுற வரைக்கும் அப்பிடியே கெடக்கனும்.....!


அதிமுக ஆட்சிக்கு வந்த உடன்,


  1. புதிய சட்டசபைக்கட்டிடம் காலி செய்யப்பட்டு சட்டசபையும் தலைமையகமும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றப்படும்
  2. புதிய சட்டசபைக் கட்டிடத்திற்கு முழுதும் பச்சைப் பெயிண்ட் அடித்து யாகம் நடத்தி கிளியர் செய்யப்படும் 
  3. சசிகலா பேரவை இனி புதிய சட்டசபைக் கட்டிடத்தில் செயல்படும்.
  4. உடன்பிறவா சகோதரிக்கு துணைமுதல்வர் பதவி. அறிஞர்கள், சான்றோர்கள் பாராட்டு.
  5. அஞ்சாநெஞ்சன் கைது செய்யப்படுவார் (காரணம்லாம் தேவையா சார்?). அமைதியான முறையிலேயே கைது செய்யப்பட்டதாக ஜெயா டீவியில் நேரடி ஒளிபரப்பு
  6. சத்துணவில் முட்டை நிறுத்தப்படும், அதற்குப் பதிலாக உடன்பிறவா சகோதரியின் ஒண்ணுவிட்ட அத்தையின் மாமனாருடைய தம்பியின் மருமகன் நடத்தும் பண்ணையில் செய்யப்பட்ட சத்துருண்டை வழங்கப்படும்
  7. கேப்டனின் புதிய கல்யாண மண்டபம் தலை நிமிர்ந்து எழுந்து நிற்கும்
  8. டாஸ்மாக்கிற்கு இனி ஒரு கம்பெனியில் இருந்து மட்டுமே சப்ளை (அது யார் கம்பெனின்னு தெரியும்ல?)
  9. எந்த மொழியில் பெயர் வைத்தாலும் படங்களுக்கு வரிவிலக்கு. அதைப் பாராட்டி சினிமாத்துறை முதல்வருக்கு பாராட்டு  விழா.ஜெயா டீவியில் நேரடி ஒளிபரப்பு, மறு ஒளிபரப்பு!
  10. சென்னைக்கு தொழில் தொடங்க வரும் கம்பெனிகள் பெங்களுருக்கு அனுப்பி வைக்கப்படும் (எல்லாம் ஒரு பாசம்தான், பின்னே பெங்களுரும் இந்தியாதானே?)
  11. 108 ஆம்புலன்ஸ் விளம்பரம் ஜெயாடிவியில் மட்டும் வரும் 

மானத்த வாங்குறானே.....!


ஓக்கே காமெடி போதும்,  இனி கொஞ்சம் சீரியசா பார்ப்போமா?

  1. காவிரிப் பிரச்சனையை மெரீனாவில் உண்ணாவிரதம் இருந்து தீர்ப்பார். 
  2. முல்லைப் பெரியார் அணைக்காக மதுரையில் ஒரு உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம்
  3.  ஈழப்பிரச்சனைக்காக ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் 
  4. தமிழக மீனவர் பிரச்சனையில் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுதும் பந்த், ஆர்ப்பாட்டம் 
  5. தமிழகத்திற்குப் போதுமான மின்சாரம் ஒதுக்க்கீடு செய்யாத மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 
  6. ஒகேனெக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டம் கேன்சல் 
  7. சென்னை மெட்ரோ திட்ட வேலைகள் நிறுத்தி வைப்பு, இதுவரை போடப்பட்ட தூண்கள் மற்றும் பாலத்தின் தரம் பற்றி ஆராய தொழில்நுட்பக் குழு!
  8. தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனததை ஜெயாடிவி வாங்கும். 
  9. திமுகவை கூட்டணியில் இருந்து காங்கிரஸ் நீக்கிவிடும். காங்கிரசுடன் அதிமுக  மறுபடி கூட்டணி சேர்ந்து  மத்திய அமைச்சரவையில் இடமும் பிடிக்கும்.
  10. அதைப் பார்த்து மருத்துவர் அய்யா அவர்கள் மீண்டும் சகோதரியுடன் இணைவார். அன்புமகன் ஒருவழியாக மீண்டும் மத்திய அமைச்சராகுவார் (அப்பாடா.........!).
  11. இறையாண்மைக்கு எதிராக பேசியதற்காக சீமான் மறுபடி கைது செய்யப்படுவார்.

எல்லாரும் இவர பாத்து கத்துக்குங்க...!

முக்கிய அறிவிப்பு: இங்கு சிறந்த முறையில் காலில் விழுந்து எழும் பயிற்சி கொடுக்கப்படும். அல்லக்கைகளுக்கு உணவு, தங்குமிடம் இலவசம். உடனே அணுகுவீர்... இன்றே கடைசி...!

போதும் போதும்...!

Tuesday, February 1, 2011

ட்வீட்டர் #tnfisherman: இன்னும் எழுச்சி தேவை நண்பர்களே....!

?

நானும் அரசியல் பத்தி எழுத வேணாம்னு தான் ரொம்ப பொறுமையா இருந்தேன், முடியல சார், முடியல. 2-3 நாளா இவனுங்க வர்ர வரத்து தாங்க முடியல சார். பொதுமக்களை கூமுட்டைகள்னே கன்பர்ம் பண்ணிட்டானுங்க. இப்பவே இப்படின்னா தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் என்னென்ன கேவலங்கள் நடக்கப் போகுதோ?

தமிழக மீனவர்கள் மேல் இலங்கை அத்துமீறல்... இதுவரை 539 பேர் கொல்லப்பட்டிருக்காங்க. 10 வருசத்துக்கு மேல நடந்துக்கிட்டு இருக்கு. டெல்லிக்குப் போன நம்ம முதல்வர் என்ன சொல்லியிருக்காரு தெரியுமா? ”மீனவர் பிரச்சனை குறித்து பிரதமருக்கு அவ்வளவாக தெரியாது, அவரிடம் எடுத்து சொல்லியிருகிறோம்” என்ன கொடும சார் இது?  தன் நாட்டின் குடிமக்களை வெளிநாட்டு கடற்படை கொன்று குவிக்கிறது,  அதைப் பற்றி ஒரு நாட்டோட பிரதமருக்கு அவ்வளவாக தெரியாதாம். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இதைவிட ஒரு கேவலம் கிடையவே கிடையாது! நம் முதல்வர் என்ன நினைப்பில் அப்படி சொல்லியிருக்காருன்னே தெரியல.

ஒரு நாட்டின் பிரதமருக்கு இதெல்லாம் தெரியாது என்று கலைஞர் எப்படி முடிவு செய்தார்?  மக்கள் என்ன அவ்வளவு முட்டாள்களா? இல்லை பிரதமரே எனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டாரா? இப்படி ஒரு பிரதமர், முதலமைச்சர் இருந்தால்......இந்த  நாடு........ ?

எனக்கு அப்பவே டவுட்டு, என்ன வெளியுறவு செயலர் நிருபமா ராவ் தான் இலங்கை போறதா சொல்லிட்டாங்களே, இவரு எதுக்கு அதுக்கப்புறமும் டெல்லி போறாருன்னு! பார்த்தா கூட்டணி பேச்சு வார்த்தையாம். அதானே தலைவரு எங்கே அனுப்பிச்ச கடிதம் கெடச்சிருச்சான்னு கேக்க போறாரோன்னு நெனச்சுட்டேன். இதுக்கிடையில நம்ம மருத்துவர் அய்யா வேற மக்களோட நகைச்சுவை உணர்வோடு விளையாடுகிறார். அய்யா, நீங்கள்  எதையும் கண்டு கொள்ளாமல் உங்கள் நகைச்சுவையை தொடருங்கள், பல பிரச்சனைகளில் சிக்கிச் சீரழியும் மக்களுக்கு அதாவது கொஞ்சம் ஆறுதலாக இருக்கட்டுமே?

இந்த அரசியல் வியாதிகளுக்கும் அவர்கள் அல்லக்கைகளுக்கும் மீனவர் பிரச்சனையை விட தேர்தல்ல யாருக்கு எத்தனை சீட்டுங்கறதுதான் இப்போ முக்கிய விஷயமா இருக்கு. இப்படியே போனால் முதலுக்கே மோசமாகிவிடும் என்று உணர்த்தப்பட வேண்டும். நிருபமா ராவ் இலங்கையில் இருந்து கூட்டறிக்கை வெளியிட்டிருக்காங்க, அதாவது இரு நாடுகளின் கூட்டுக் குழு விரைவில் கூடி ஆலோசனை நடத்துமாம்.  ஏண் அந்தக் கருமத்த இப்பவே பேசித் தொலைச்சா என்ன? மூணு மாசத்துல தேர்தல் வர்ரதுனால அதுவரைக்கும் இப்படியே சமாளிச்சுட்டு அப்புறம் அப்படியே பழையபடி விட்டுட போறாங்க. அதுக்குத்தான் இந்த பம்மாத்து. அதற்கு இடம் தரக்கூடாது. நிரந்தர தீர்வு வர்ர வரை தொடர்ந்து அழுத்தம் தரப்பட வேண்டும் நண்பர்களே!

இணைய வழியாக போராட்டத்தை முன்னெடுக்கும் நண்பர்களை பாராட்டவும் நன்றி சொல்லவும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன். அதே நேரம் இது போதாது, இன்னும் நிறையப் பேர் வர வேண்டும். ட்விட்டர் தளத்தில் கடந்த ஒருவாரமாக நடந்து வரும் எழுச்சி மகத்தானது. ஆனால் இன்னும் #tnfisherman ட்விட்டர் ட்ரெண்ட்சில் முதலிடத்திற்கு வரவில்லை. எனக்கு தெரிந்த நிறைய நண்பர்களுக்கு இன்னும் ட்விட்டர் அக்கவுண்டே இல்லை (நானும் 4 நாட்கள் முன்புதான் தொடங்கினேன்). அவர்கள் இன்னும் தயங்கிக் கொண்டிருக்காமல் உடனே ட்விட்டரில் இறங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். டிவீட்டரும் ஃபேஸ்புக், ஆர்க்குட் போல ஒரு சோசியல் நெட்வொர்ர்கிங் தளம்தான். இருப்பதிலேயே பயன்படுத்த மிக சுலபமானது. ஒருவேளை தெரியவில்லை என்றால் கூச்சப்படாமல் கேளுங்கள். உங்கள் ட்வீட்டுகளால் பெரும் மாற்றத்தை உருவாக்க ஒரு அரிய வாய்ப்பு நெருங்கி வந்து கொண்டிருகிறது. பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
 
ட்விட்டரில் அப்படி என்ன செய்துவிட முடியும் என்று கேட்பவர்களுக்கு, நண்பர்களே, ட்விட்டரில் அதிகம் கமெண்ட் செய்யப்பட்ட விஷயம் உலக மீடியாக்களின் கவனத்தை பெறும். குறைந்தபடசம் இந்திய மீடியாக்களின் கவனைத்தையாவது பெறலாம். மேலும், இப்போதைக்கு இதுவே சுலபமான வழி. நீங்கள் தெருவில் இறங்கிப் போராட வேண்டியதில்லை, போலீஸ் பயமில்லை, நீங்கள் யாரென்று கூட காட்டிக் கொள்ள வேண்டியதில்லை, சும்மா ட்விட்டரில் ஒரு அக்கவுண்ட் ஆரம்பித்து ஒரு கமெண்ட் அடித்து அத்தோடு #tnfisherman என்பதையும் பேஸ்ட் செய்து அனுப்பிவிட வேண்டியதுதான் (140 எழுத்துக்களுக்குள் இருக்க வேண்டும்).  #tnfisherman என்று பேஸ்ட் செய்துவிட்டால், உங்கள் கமெண்ட்டுகள் #tnfisherman  அக்கவுண்டிற்கு சென்று விடும்.
 
இதுவரை 17000 கமெண்ட்டிற்கு மேல் வந்துவிட்டதாக சொல்கிறார்கள். வெறும் தமிழ் பதிவர்களின் எண்ணிக்கையை மட்டும் வைத்துப் பார்த்தாலே இது மிக மிக குறைவு. தமிழ்மணத்தில் மட்டும் ஒரு நாளில் எழுதப்படும் பதிவுகள் 400, கமெண்ட்டுகள் 6000. இப்போது புரிகிறதா நாம் எங்கு இருக்கிறோம் என்று? ஆகவே நண்பர்களே உங்கள் அனைவரின் தொடர் ஆதரவும் தொடர்ந்து தேவைப்படுகிறது. தினமும் ஆளுக்கு 10 ட்வீட்களாவது #tnfisherman  க்கு செய்யுங்கள். அடுத்தவர் கமெண்ட்டை ரீட்வீட் செய்தாலும் சரி, இல்லை காப்பி பேஸ்ட்டாவது செய்யுங்கள், என்னுடைய #tnfisherman ட்வீட்டுகள் அனைத்தையும் யாரும் #tnfisherman க்காக பயன்படுத்திக்கொள்ளலாம்!


என் ட்வீட்டர் ஐடி: pannikkuttir

!

Monday, January 10, 2011

பட்டாபட்டியுடன் கேப்டன்: நடந்தது என்ன....?




கேப்டன் தேர்தல் வந்திடுச்சு.....
அட இருய்யா....வர்ரேன்.........


அவனை புடிங்கய்யா....  கட்சிக் கூட்டத்துல வந்து ஷூட்டிங்கான்னு கேக்குறான்?


ஓட்டுப் போடலேன்னா ஒரே குத்து.....!




போன எலக்சன்ல எனக்கு ஓட்டுப் போட்டவனுகளத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்.....  ராஸ்கல்ஸ்......எல்லாம் செல்லாத ஓட்டு


தமிழக அரசியல் சூழல்கள் வெகுவேகமாக மாறிவரும் வேளையில், தானைத்தலைவர் ராகுல்ஜீ, டாகுடர்.கேப்டன் கட்சியுடன் கூட்டணி வைக்க இசைந்துள்ளார்கள். அது சம்பந்தமாக ரகசிய பேச்சுவார்த்தை நடத்த தனது நம்பிக்கைகு உரிய தூதராக பட்டாபட்டி அவர்களை நியமித்து தமிழகம் அனுப்பி வைத்துள்ளார். அதன் விளைவே நீங்கள் பார்த்த இந்தப் பதிவின் டைட்டில் (நீங்க கேப்டன் டவுசரோட வந்துட்டாருன்னுதானே நெனச்சீங்க? என்னது இல்லியா...? இல்ல நெனச்சீங்க....)

நம்ம பட்சிகள் சும்மா இருக்குமா...? சீக்ரெட் மீட்டிங்கை சீக்ரெட்டா அள்ளிக்கிட்டு வந்துடுச்சுங்க, நீங்களும் பாருங்கப்பு.........


இன்னுமா நான் என்ன பண்ணப்போறேன்னு உங்களுக்குப் புரியல?


பட்டாஜீ: நான் தான் பட்டாபட்டி, ராகுல்ஜீ அனுப்பி வெச்சார்.

கேப்டன்ஜீ: என்னது ராகுல்ஜீ எனக்கு பட்டாபட்டி அனுப்பி இருக்காரா? பரவால்லையே......? ஒரு மதுரக்காரன் பட்டாபட்டிதான் போடுவான்னு கரெக்டா அனுப்பி இருக்காரு உங்க தலைவரு... சரி, எங்கே பட்டாபட்டி, கொடுங்க......போட்டுப்பார்க்குறேன்....!

பட்டாஜீ: சார், எம்பேருதான் பட்டாபட்டி, ஆனா நான் உங்களுக்குக் கொண்டு வந்தது, வெள்ளவேட்டி....!

கேப்டன்ஜீ:  சரி கொடுங்க, ஆமா என்ன விஷயமா வந்திருக்கீங்க, உங்க ராகுல்ஜீக்கு விருதகிரி பெசல் ஷோ ஏற்பாடு பண்ணிடுவோமா? என்னைக்குன்னு மட்டும் சொல்லுங்க...... டெல்லிலேயே ஷோவ வெச்சுக்கலாம்..

பட்டாஜீ:  (என்னது விருதகிரியா, ஆரம்பத்துலேயே ஆப்பா?) அதெல்லாம் இல்ல, கேப்டன், எங்க தானைத்தலைவன் ராகுல்ஜீ கூட்டு விஷயமா உங்ககிட்ட பேச சொன்னாருங்க

கேப்டன்ஜீ:  சரி அப்போ போகும்போது, விருதகிரி டிவிடிய எடுத்துட்டுப் போய் அவர்கிட்ட கொடுத்துப் பார்க்க சொல்லுங்க., அது என்ன கூட்டு மட்டும் கேக்குறீங்க இருந்து ஃபுல்மீல்சும் சாப்பிட்டுப் போங்க......

பட்டாஜீ: (சரியாப்போச்சு, இனி டெல்லில போயி விருதகிரிக்கு வேற வெளம்பரம் பண்ணனுமா? ) கேப்டன்......  தேர்தல் கூட்டணியபத்தி சொன்னா பொடலங்கா கூட்டப் பத்தி பேசுறீங்களே? இன்னும் மூணு மாசத்துல தேர்தல் வரப்போகுது தெரியுமில்ல?

கேப்டன்ஜீ: ஓ... அப்படியா.....  இப்போ என்ன பண்றது, மச்சான் வேற ஊர்ல இல்லியே?

பட்டாஜீ:  மச்சான் இல்லேன்னா என்ன கேப்டன், நீங்க சொல்லுங்க, உங்களுக்கு எத்தனை சீட்டு வேணும்?

கேப்டன்ஜீ: சரி வீட்டுக்காரம்மாவையாவது வரச்சொல்லிக்கிறேனே?

பட்டாஜீ:  இல்ல கேப்டன், அதுக்கெல்லாம் டைம் இல்ல, உங்ககிட்ட பேசிமுடிச்சிட்டு அப்புறம் இன்னொரு டாக்டரையும் பார்க்கனும், அதுனால, சீக்கிரம் சொல்லுங்க

கேப்டன்ஜீ:  சரி, மொதல்ல பொட்டியப் பத்தி பேசுவோம், அப்புறம் தான் சீட்டு.....!

பட்டாஜீ: என்ன கேப்டன்...  எத்தனை சீட்டு வேணும்னா என்ன பொட்டி கிட்டிங்கிறீங்க?

கேப்டன்ஜீ:  அதான் அடிச்சீங்கள்ல ஸ்பெக்ட்ரம்மு, 2G ன்னு, அதுல இருந்து கொஞ்சம் கொடுத்தா என்ன? நீங்க கொடுக்கலேன்னா என்ன? எனக்கு அந்தப்பக்கத்துல இருந்து 2 பொட்டி ரெடியா இருக்கு, ஒரு வருசமா.... தெரியுமில்ல?

பட்டாஜீ: அது...... வந்து....... அது எல்லாம் பங்கு பிரிச்சு முடிஞ்சுடுச்சு கேப்டன்.... இப்போ போயி யாருகிட்ட கேக்குறது?

கேப்டன்ஜீ: இப்பிடி கேட்டா நீங்க சரிவரமாட்டீங்க, பங்கு எங்கெங்க போயிருக்குன்னு களிங்கர்ஜீக்கு கூடவா தெரியாது? நான் சொல்றேன் கேட்டுக்குங்க, அடிச்சது 30000 கோடி, அதுல டெல்லிக்கு 10000 கோடி, ராசாவுக்கு, 300 கோடி, பெரிய குடும்பத்துக்கு, 5000 கோடி, சின்னக்குடும்பத்துக்கு 5000 கோடி, பேரன்களுக்கு 3000 கோடி, அல்லக்கைளுக்கு 100 கோடி, இது போக மீதி 6400 கோடி, அது எங்க போச்சு? சொல்லுங்க.....? சரி, உங்க லைனுக்கே வர்ரேன், எனக்கும் ஒரு பொட்டி வாங்கிக்கொடுத்திங்கன்னா உங்களுக்கு ஒரு பெர்சன்டேஜ் தார்ரேன்... எப்பிடி வசதி?




இன்னும் ரெண்டு பொட்டி சேர்த்துக் கேட்டிருக்கலாமோ?



பட்டாஜீ: (அடப்பாவி, இப்பிடி ஒரு வழி இருக்கா.....?) இதப் பத்தி நான் மேலிடத்துல பேசிட்டு சொல்றேன் கேப்டன்ஜீ.... கெளம்பரத்துக்கு முன்னாடி ஒரு சின்னக் கேள்வி......

கேப்டன்ஜீ: கேளுங்க பட்டாஜீ, இப்பத்தான் பார்ட்னராகப் போறோம்ல, தாராளமா கேளுங்க!

பட்டாஜீ: அஞ்சாநெஞ்சரு தனிக்கட்சி ஆரம்பிக்கப் போறாராமே, அவர் கூட நீங்க கூட்டு வெச்சுக்குவீங்களா?

கேப்டன்ஜீ: நானும் மதுரக்காரன், அவரும் மதுர, மதுரக்காரனுக்கு மதுரக்காரந்தன்யா உதவி செய்வான்..... புரியுதா?

பட்டாஜீ:  (நல்லவேள நான் மதுரக்காரன் இல்ல....... !) அப்போ டாகுடரு விஜய் கட்சி ஆரம்பிச்சா?

கேப்டன்ஜீ:  நிச்சயம் கூட்டணி வெப்பேன்.....

பட்டாஜீ: அவரு மதுரக்காரவரு இல்ல கேப்டன்....

கேப்டன்ஜீ: ஆனா மதுரேன்னு படம் பண்ணியிருக்காரே? பட்டாஜீ, நாங்கள்லாம் அரசியலை கரச்சி குடிச்சவிங்க, மதுரக்காரன் எங்கிட்டயேவா? மொதல்ல போயி பொட்டிய கொண்டுவாங்க, மேக்கொண்டு பேசுவோம்............!

பட்டாஜீ பொட்டிவாங்க நாளை டெல்லிக்கு செல்கிறார். பொட்டிதூக்க ஆள் தேவைப்படுகிறது, விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.... கமிசன் உண்டு...................!

ஒழுங்கா எனக்கு ஓட்டப் போட்டுட்டீங்கன்னா இத்தோட எல்லாத்தையும் விட்டுடுறேன்...


Monday, December 27, 2010

ஏலத்திற்கு வந்த பிரபல பதிவர்களின் சொத்துக்கள்......



நம்ம பிரபல பதிவர்கள்லாம் ப்ளாக்குகள்ல சைடுல கீழ, மேலேன்னு ஏதாவது ஒரு மேட்டர சென்டிமென்ட்டா வெச்சி இருக்காங்க. அது எதுக்குன்னு எனக்கும் ரொம்ப நாளா வெளங்காம இருந்துச்சு.  அப்புறம் ஒருநா காரமடை ஜோசியர்தான் சொன்னாரு, அட மண்டு அது ப்ளாக்குக்கு கெட்ட சக்திகள்லாம் வரக்கூடாதுன்னு மந்திரிச்சது, வாஸ்துப் படி அவங்கவங்க ப்ளாக்குல வெச்சிருக்காங்கன்னு! எனக்கும் ஒன்னு அந்த மாதிரி பண்ணிக்கொடுங்கன்னு கேட்டதுக்கு, திட்டித் தொறத்தி விட்டுட்டார். என்ன பண்றது, போன தடவ ஐடியா கேட்டதுக்கே இன்னும் கடன் பாக்கி! 

நானும் வேற வழியே தெரியாம, நம்ம பிரபல பதிவருங்க வெச்சிருந்த மேட்டருங்கள எல்லாம் நைஸா லவட்டிக்கிட்டு வந்துட்டேன். இப்போ திடீர்னு பாருங்க, நிதி நெலம கொஞ்சம் சரியில்ல, அதுனால அது எல்லாத்தையும் ஏலத்துல விட்டு கொஞ்சம் நிதி தெரட்டிக்கிடலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். கீழ கடை பரப்பியிருக்கேன், பாத்து புடிச்சத செலக்ட் பண்ணிக்கிட்டு வழக்கம்போல நம்ம பேங்க் ஆப் ஆப்புரிக்காவுல பணத்த போட்டுடுங்க சார்.


1. மங்குனி அமைச்சர் ப்ளாக்கில் இருக்கும் விலை உயர்ந்த நோக்கியா கேமரா செல்போன்.

ஏலத்தொகை: 99 பைசா மட்டுமே




எங்கள் வாடிக்கையாளர் ஒருவரின் கருத்து:
சௌந்தர்: கேமரா ரொம்ப சூப்பர் சார். போனவாரம் தான் வாங்கினேன். நல்ல வெயிட்டு. பிக்சர்ல 'இது மங்குனி அமைச்சர் ப்ளாக்கில் இருந்து திருடியதுன்னு' லெட்டர்ஸ் வருது சார். நல்லாருக்கு சார். அது எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு.

2. பட்டாபட்டி ப்ளாக்கில் இருக்கும் 1800-ங்கொய்யாலே ஹாட்லைன் சேட்டிலைட் ஃபோன்.

ஏலத்தொகை: 199 பைசா மட்டுமே



சிறப்பம்சங்கள்: அதிநவீன சேட்டிலைட் ஹாட்லைன் தொலைபேசி. இத்தாலி மற்றும் கொலம்பியாவிற்கு விஷேச இலவச அழைப்பு வசதி. மேலும் தற்போது தானைத்தலைவர் ராகுல் ஜீயின் தனி லைனுடன் பிரத்யேகமாக இணைக்கப்பட்டுள்ளது.  இதைப் பயன்படுத்தி பட்டாஜீ அவர்கள் போன வாரம் 2G யில் தனது பங்கைப் பெற்றுக்கொண்டதைப் போல, நீங்களும் பெற ஒரு அரிய வாய்ப்பு..... தவற விடாதீர்கள்... இன்றே கடைசி!

3. இம்சைஅரசன் பாபு வாயில் வைத்திருக்கும் அருவாள்.
இவர் எந்நேரமும் கவ்விக்கொண்டே திரியறதுனால, அந்த அருவாளை எடுக்க ரொம்பவே சிரமப்பட்டுட்டேங்க. அப்புறம் பாட்டி வடை சுட்ட கதையைப் வெச்சித்தான் எடுத்தோம். அதாங்க, நீங்க ரொம்ப நல்லாப் பாடுவீங்களே, எங்கே காக்கா மாதிரி ஒரு பாட்டுப் பாடுங்கன்னு சொன்னோம், அவ்வளவுதான்!
 இந்த அருவாளுக்கு ரெண்டு கத்தி எலவசங்கோவ்....  வாங்கிப் போட்டீங்கன்னா  கெடாவெட்டுக்கு யூஸ் ஆகும்ணா......!

ஏலத்தொகை: 99 பைசா மட்டுமே




4. கோமாளி செல்வா
செல்வா அந்த வெள்ளக் காக்காவ வெச்சுத்தான் இத்தன  நாளும்  கரெக்டா  வடையத்  தூக்குறாருன்னு இப்போதான் தெரிஞ்சது, விட்ருவமா?  உடனே  தூக்கிட்டோம்ல? இப்போ நீங்க வேணா உங்க ப்ளாக்குல அத வெச்சு அழகு பாருங்களேன்......!
வடை எடு...கொண்டாடு.....!

ஏலத்தொகை: 99 பைசா மட்டுமே



5. வெறும்பய:
இவர் ப்ளாக்குல இருந்து இதத் தூக்கிட்டு வாரதுக்குள்ள கைய சுட்டுடுச்சுங்க, ஒளிச்சு வேற வச்சிருந்தாரு. அது என்னான்னு நீங்களே பாத்துக்குங்க சார், பேரு சொன்னா அடிப்பாரு. இத உங்க ப்ளாக்குல வெச்சுக்கிட்டீங்கன்னா, கவிதையா எழுதித்தள்ளலாம். ரசிகைகளும் (!)  நிறைய கிடைப்பார்கள்.

ஏலத்தொகை: 99 பைசா மட்டுமே


6. டெர்ரர் பாண்டியன்:
இந்த ப்ளாக்குல ஒரு கருமாந்திரமும் கெடைக்கலிங்கோ, , சரி போனதுக்கு எதையாவது தூக்கித் தொலைவோமேன்னு இந்த ஒலக உருண்டையக் கெளப்பிக்கிட்டு வந்துட்டேங்கோ!

ஏலத்தொகை: 10 பைசா மட்டுமே




7. கோகுலத்தில் சூரியன் வெங்கட் ப்ளாக்குக்கு போனா ரெண்டு சங்கம்தான் கெடச்சுது. அப்பிடியே அள்ளிக்கிட்டு வந்துட்டோம். இந்த சங்கங்கள வாங்கி வெச்சுக்கிட்டீங்கன்னா, நீங்க ஒரு ப்ளாக்கு  வெச்சிருக்கறதே  மறந்திடுவீங்க  சார்.  பின்னே சங்கத்து ஆளை அடிச்சவன் எவன்டான்னு நீங்க பல பஞ்சாயத்த சமாளிக்கறதுக்கே நேரம் பத்தாது, அப்புறம் ப்ளாக்க வெச்சு வேற என்னத்தப் பண்றது...?

ஏலத்தொகை: வாங்குனா அவங்களே சங்கத்துல இருந்து உங்களுக்கு ஏதாவது போட்டுக் கொடுப்பாங்க சார்!



8. நெ.1 பதிவர் சித்தப்பு சிபி.செந்தில்குமார் ப்ளாக்கில் கிடைத்தது ஒரு சூப்பர் மேட்டரு(DVD)ங்க, அத எலவசமாவே எல்லாருக்கும் வழங்குறேன். இது என்ன படம்னு கண்டுபுடிச்சீங்கன்னா ஒரு சிறப்புப் பரிசு, அதுவும் சித்தப்பு கையால உண்டு.


9. தேவாவின் ப்ளாக்குல இருந்து எதையோ சுட்டுக்கிட்டு வந்தேன், ஆனா அது என்னன்னுதான் இப்போ வரைக்கும் கண்டுபுடிக்கமுடியல. யாரு கண்டுபுடிக்கிறீங்களோ, அவங்க அது என்னன்னு எல்லாத்ததுக்கும் சொல்லிட்டு அப்படியே ஃப்ரியா எடுத்துக்கலாம்!.




10. சிரிப்பு போலீஸ்:
இந்தக் கடைல தூக்குற மாதிரி ஒரு எழவுமே சிக்கல,  இன்னும் கொஞ்சம் டீப்பா தேடிப்பார்த்தா எனிமா கொடுத்த மாதிரி புடிங்கிரும்னு, ஸ்ட்ரெயிட்டா கடையவே தூக்கிட்டு வந்துட்டேன்...! வேணுங்கறவங்க எடுத்துக்கலாம். எத வேணா எழுதலாம், என்ன வேணா பண்ணலாம். ஆனால் பின்விளைவுகளுக்கு நிர்வாகம் கண்டிப்பாகப் பொறுப்பேற்காது. இன்சூரன்ஸ் வைத்து இருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்!


ஏலத்தொகை: எப்படியாவது யாராவது எடுத்துத்தொலைங்க போதும்...!


User Name: dumeel007
Password: *********

எச்சரிக்கை: மேலே காணப்படும் பெயர்கள் யாவும் கற்பனையே (?).

பட உதவிக்கு நன்றி: கூகிள், shutterstock.com

!

Monday, November 8, 2010

இந்தி கத்துக்குங்க சார்... இந்தி...!

எல்லாரும் நல்லபடியா தீபாவளி கொண்டாடி இருப்பிங்க. நெறையப் பேரு பலகாரம், பட்சணங்கற பேருல வீட்டுக்கார அம்மணியோட பல பரிசோதனை முயற்சிக்கு ஆளாகி இன்னும் தெளிஞ்சிருக்க மாட்டீங்க. சரி சரி.....  சின்ன விசயத்துக்குலாம் இப்பிடி கவலப்பட்டா எப்பிடி? கண்ணத் தொடைங்க! நான் சொல்றதக் கொஞ்சம் கேளுங்க, இப்போ நாம இந்தி கத்துக்கப் போறோம். கத்துக்கிட்டு எங்கேயோ போகப் போறோம், இனி நம்ம ரேஞ்சே வேற!

இந்திதான் தேசிய மொழின்னு 80 கோடி இந்திவாலாக்கள் நம்புறாங்க, சொல்றாங்க. ஒரு ஜனநாயக நாட்டுல, மெஜாரிட்டி கருத்துக்கு மரியாத கொடுக்குறதுதானே முறை? ஆகவே நம்ம ஜனநாயகத்தக் கட்டிக் காக்க நாமலும் இந்தி கத்துக்கப் போறோம் மக்கா. இந்தியக் கத்துக்கிட்டுப் போயி நாமல்லாம் யாருன்னு இந்திவாலாக்களுக்குக் காட்டறோம், சென்ட்டர்ல ஆச்சியப் புடிக்கிறோம்.

இவ்வளவு சொல்லியும் இந்தி கத்துக்க மாட்டேன்னு அழிச்சாட்டியம் பண்றவங்களுக்காக, நாம எல்லோரும் இந்தி கத்துக்கறதுனால என்னென்ன நன்மைகள்னு வெளக்கமா ஒரு பட்டியல் போட்ருக்கேன். அதப் பாத்தாவது திருந்ததுற வழியப் பாருங்கப்பு!

  1. தமிழ்நாடுங்கற பேர டமில் ப்ரதேஷ் அப்படின்னு மாத்தி உடனடியா தேசிய நீரோட்டத்துல ஓடிப்போயி தொபுக்கடீர்னு குதிச்சிடலாம்!
  2. ஒரு தமிழன் பிரதமரா வர்ரதுக்கு உடனடி வாய்ப்பு (அது அஞ்சாநெஞ்சனான்னு முந்திரிக்கொட்ட மாதிரிக் கேக்கப்படாது!)
  3. இனி நம்ம மீனவர்கள இலங்க்கை கடற்படை தாக்குனா, நம்ம இந்தியக் கடற்படை பெரும் போர் நடத்தி காப்பாத்தும்  (ஏன்னா இதுவரைக்கும், மாட்டிக்கிட்ட நம்ம மீனவர்கள், தமிழ்ல காப்பாதுங்கன்னு கத்தினது நம்ம கடற்படைக்குப் புரியல, இப்போ இந்தி கத்துக்கிட்டு, இந்தில காப்பாத்துங்கன்னு கத்தலாம், உடனடி உதவி நிச்சயம்!)
  4. காவிரில தண்ணி தினந்தோறும் திறந்துவிடப்படும், திறக்க மறுக்கும் கர்னாடக அரசு உடனே டிஸ்மிஸ் செய்யப்பட்டு, கவர்னர் ஆட்சி கொண்டு வரப்பட்டு தண்ணீர் திறந்துவிடப்படும்! (இதப்பத்தி நம்ம மொதல்வரு, தமிழ்ல கடிதம் எழுதுனதுதான் தப்பு! என்ன எழுதியிருக்குன்னு புரியாம, பிரதமர் அய்யா, நடவடிக்கை எடுக்க முடியாமப் போச்சு! இனி இந்தில கடிதம் எழுதி காரியத்த கச்சிதமா முடிப்போம்ல?)
  5. கேரளாவில் முல்லைப்பெரியார் அணைகட்டும் முயற்சியை மத்திய அரசு தடை செய்து இருக்கும் அணையைத் தமிழகத்திடம் ஒப்படைக்கும்! அதே போல் அந்திராவிலும் பாலாற்று அணைக்குத்தடை!
  6. சுப்ரீம் கோர்ட் கிளை உடனடியாக சென்னைக்குக் கொண்டுவரப்படும் (இனி தைரியமா டெல்லில இருந்து வந்து இந்திலயே வாதாடலாம்ல?)
  7. தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிசன் தேர்வை முழுக்க முழுக்க இந்தியிலேயே நடத்தி சாதனை படைப்பார் தமிழினத் தலைவர்!
  8. சன் டிவி ஒரு முழுநேர இந்திச் சேனல் ஆரம்பித்து நமக்குப் பேரானந்தம் அளிக்கும்! (சன்டிவியே பாத்துப் பாத்துப் பழகியவர்கள், இனி இந்தி சன்டிவியைப் பார்த்து பெருமிதம் அடையலாம்!)
  9. தமிழ்ப் படங்களுக்கு குறைந்தது 10 தேசிய விருதுகள் ஒவ்வொரு ஆண்டும்! அதைப்பத்தி கமல் இந்தியிலேயே பேட்டி அளிப்பார் (பயப்படாதீங்க, வழக்கம்போல யாருக்கும் புரியாத மாதிரிதான்!)
  10. டாகுடர் விஜய்யின் ஐம்பெருங்காப்பியங்களான ஆதி, வில்லு, குருவி, வேட்டைக்காரன், சுறா படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டு சரித்திரம் படைக்கும், அதைத் தொடர்ந்து டாகுடர் மும்பை ஜூஹூவில் பெரிய பங்களா வாங்குவார் (உடனே ரியல் எஸ்டேட் விலைகள் சரிந்து எல்லோரும் மும்பையில் வீடு வாங்கும் நல்ல நிலை(?) ஏற்படும்!)
  11. அது கண்டு மிரளும் அமிதாப்பும், ஷாருக்கானும் சென்னைக்கு ஓடிவந்து ஆளுக்கொரு பங்களா வாங்கிவிடுவார்கள் (தமிழர்கள் இனி தினமும் அவர்களைக் கண்டு மனமாறத் தரிசித்து இன்புறலாம்!)
  12. தமிழ் சினிமாவின் அழகுப் பதுமைகள் இனி சௌகர்யமாக இந்தியிலேயே பேட்டி கொடுத்து நம்மை மகிழ்விப்பார்கள் (ரொம்ப முக்கியம்! நமீதா மச்சான்ஸ்... ரசிகர்கள் சாரி வெறியர்கள் மன்னிப்பார்களாக!)
  13. அம்பானிகள், டாட்டாக்கள் சென்னையில் பாதிக் கம்பெனிகளை (பாதிச் சென்னையையும்தான்) வாங்கிவிடுவார்கள். நாமும் அவர்களுக்கு நம் புது விசுவாசத்தை இந்தியில் காட்டி மகிழலாம்!
  14. மாறன் அன் கோ, இனி அமிதாப்பை வைத்து எந்திரன் - 2 எடுக்கும்! (அப்போ எந்திரன் -3 கோவிந்தாவ வெச்சான்னுலாம் சின்னப்புள்ளத்தனமா கேக்கப்படாது!)
  15. அன்பு அண்ணன் அஞ்சாநெஞ்சர் தலைமையில் மதுரையில் மாபெரும் ஒலிம்பிக்ஸ் நடத்தி சரித்திரத்தில் இடம் பிடிக்கலாம் (அதையும் கல்மாடி அண்ணனே நடத்திக் கொடுப்பாரு!)
  16. தமிழகம் இந்தியாவின் 37வது மாநிலமாக இணைக்க்படும் (என்னது ஏற்கனவே அங்கேதான் இருக்கோமா, சாரி சாரி, டங்க்... சே.... கையி...ஸ்லிப்பு ஆய்டுச்சி, இத யாரும் படிக்காதீங்க!).

பாத்திங்களா மக்களே எம்புட்டு நன்மைகள் நம்மத் தேடி வருதுன்னு? இதுக்கு மேலேயும் இந்தி கத்துக்காம இருக்கலாமா? அது தப்பில்லையா? அநியாயமில்லையா?

சரி, ஏழுகழுத வயசாயிடுச்சு இதுக்கு மேல எங்கே போயி இந்தி கத்துக்கிறதுன்னு யோசிக்கிறீங்களா? நான் இருக்கும் போது நீங்க இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயத்துக்குலாம் தயங்கலாமா? பயப்படாம வாங்க நான் கத்துதரேன், அதுவும் இலவசமா!

ஓக்கே, ஸ்டார்ட்!

பர்ஸ்ட்டு, நம்பர் சொல்றது,
கையில ஏதாவது கர்லாக் கட்ட இருந்தா தூக்கிகிடுங்க (ஏதாவது உருட்டுக்கட்டயா இருந்தாலும் பரவால்ல! ) இப்போ வரிசையா சொல்லுங்க பாப்போம்!
ஏக்கு, தோவ்வு, தீனு, சாரு (பிச்சிபுடுவேன், இது அந்தச் சாரு இல்ல!), பாஞ்ச்சு.....!
அட என்ன சார் நீங்க இதக் கூட சரியா சொல்ல மாட்டேங்கிறீங்க? சரி சரி, கோச்சுக்காதீங்க, கக்கூசுல கக்கா போவும்போது இன்னொரு வாட்டி சொல்லிப் பாத்துக்கிடுங்க போதும்! இனி நாம அடுத்த பாடத்துக்குப் போவோம்!


ஒருவழியா நம்பர் சொல்லக் கத்துக்கிட்டீங்க, அதே மாதிரி இனி பேசுறது எப்படின்னு பாப்போம். பக்கத்துல ஏதாவது மிக்சர், பக்கோடா, காராச்சேவு ஏதாவது வெச்சுக்குங்க! (எதுக்குன்னு வெளக்கெண்ண கேள்வியெல்லாம் கேக்கப்படாது!)

மிக்சர கைநெறைய அள்ளி வாயில போட்டுக்குங்க, இப்ப நான் சொல்லச் சொல்ல நீங்க திருப்பி சொல்லனும் (இது பார்த்திபன் மாதிரி திருப்பி இல்ல!)

ஏக் காவுன் மே....... (கவுனு இல்ல காவுன்...    கா....   வு....    ன்.....!)


ஏக் கிஸான்......


ரக தாதா.....!


எங்க இன்னொரு வாட்டி சொல்லுங்க

ஏக் காவுன் மே..............    ஏக் கிஸான்................    ரக தாதா...... ரக.,... ரக..... ரக தாதா......

என்ன சார் இப்பிடி சொதப்புறீங்க, இது சரிப்படாது, இன்னும் கொஞ்சம் மிக்சர் வாய்ல அள்ளிப் போட்டுக்கிட்டு, இன்னொரு வாட்டி இந்த வீடியோவப் பாத்து அதே மாதிரி டிரை பண்ணுங்க!




சரி பாடம் படிச்சாச்சு, இனி டெஸ்ட்டு. கீழே இருக்க கேள்விகளுக்கு பதில் சொன்னா அதிரடி பரிசுகள் உண்டு!


1. "ஏக் மார் தோ துக்கடா" என்றால் என்ன?


2. "கலத் காம் மத் கர்": சிறு குறிப்பு வரைக.


சரியாக விடையளிக்கும் முதல் மூன்று அதிர்ஷ்டசாலிகளுக்கு,

முதல் பரிசு:
மங்குனி அமைச்சர் ராப்பகலாக எழுதிக்கொண்டிருக்கும் 'இந்தி டிக்சனரி' என்ற அதிர வைக்கும் திரில்லர் நாவல்!

இரண்டாம் பரிசு:
பட்டாஜி அவர்கள் இத்தாலி மொழியில் எழுதியுள்ள 'அன்னையின் ஆணை' குணச்சித்திர நாவல்!

மூன்றாம் பரிசு:
சிரிப்பு போலீஸ் சிங்கை லக்கி பிளாசாவில் தோழிகளுடன் அமர்ந்து கொலம்பியா மொழியில் எழுதிய 'பழைய காதலி' என்ற மனதை மயக்கும் காதல்கதை!

போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் நம்ம டீஆர் இந்தியில் நடித்துக்கொண்டிருக்கும் புதிய தமிழ்ப்படத்தின் DVDக்கள் ஆறுதல் பரிசாக வழங்கப்படும்!

Wednesday, October 27, 2010

பீகார் யுனிவர்சிட்டில சேரப்போறேன்!

நம்ம பஞ்சாப் யுனிவர்சிட்டியில கொஸ்டின் பேப்பரு அவுட் பண்ணதுக்காக இனி யுனிவர்சிட்டி பக்கமே தலை வெச்சிப் படுக்கக்கூடாதுன்னு தொரத்திவிட்டுட்டானுங்க. நானும் என்ன பண்றது, நம்ம பட்டம் வாங்குறத தடுக்க இம்புட்டு பெரிய சதியான்னு குப்புறப்படுத்து யோசிச்சுக்கிட்டு இருக்குறப்போ, நம்ம பய ஒருத்தன் பீகாருல இருந்து போன் பண்ணான். அங்க என்னடா பண்றேன்னு கேட்டா, இப்போ பீகார் யுனிவர்சிட்டியிலயும் MA கும்மியாலஜி கோர்ஸ் ஆரம்பிச்சிட்டாங்கடா மாப்பு நானும் சேர்ந்துட்டேன்னு சொன்னான். கேட்டவுடனேயே நமக்கு சோடா சிந்தி குவார்ட்டருல விழுந்த மாதிரி இருந்துச்சு...! கெஞ்சிக் கூத்தாடி எனக்கும் ஒரு அப்பிளிக்கேசன் வாங்கிட்டேன். கேக்கும் போது இங்கிலிபீசு மீடியம்னுதான் சொன்னாங்க, ஆனா அப்ளிக்கேசன தலைகீழா வெச்சி படிச்சிப் பாத்தும்கூட, ஒண்ணும் புரியல, ஒருவேளை என்ட்ரன்ஸ் டெஸ்ட்டையே இதுலதான் வெக்கிறானுங்களோன்னு ஒரு டவுட்டு வேற வந்திடுச்சு! சத்திய சோதனை! அப்ளிகேசன் வாங்கியும் பிரச்சனைய பாருங்க! சே.... வழக்கமா எக்சாமுக்குத்தான் பிட்டு அடிப்போம், இவிங்க என்னடான்னா அப்ளிக்கேசன் பார்முக்கே பிட்டு அடிக்க வெக்கிறானுங்க. என்ன பண்றது எல்லாம் ஒரு டிகிரிக்காக! சரி, ஓகே பிரண்ட்ஸ், இப்போ மேட்டருக்கு வாரேன். அப்ளிக்கேசன் அனுப்ப நாளைக்குத்தான் லாஸ்ட் டேட்டாம், இங்கே பிரபல பதிவர்கள் நிறைய் பேரு இருப்பீங்களே,  (அதான் நேத்து டெஸ்ட்டு வேற வெச்சி நிறைய பேர பிரபல பதிவராக்கி இருக்கோம்ல?) யாராவது கொஞ்சம் தயவு பண்ணி பார்ம புல்லப் பண்ணி கொடுத்தீங்கன்னா நல்லாருக்கும்....!




இந்த அப்ளிகேசன யாராவது யூஸ் பண்ணி எனக்கு முன்னாடி போயி யுனிவர்சிட்டியில சேந்தீங்க, படுவா தொலச்சிபுடுவேன் தொலச்சி! எல்லாரும் நான் சேர்ந்ததுக்கு அப்புறம் தான் வரனும், ஏன்னா அப்போத்தானே ராகிங் பண்ண வசதியா இருக்கும்.... ஹி...ஹி...ஹி...!

பி.கு.: இது ஒரு மெயில்ல டெக்ஸ்ட்டா வந்துச்சி, நான் கொஞ்சம் பொட்டிதட்டி, பெண்டு நிமித்திப் போட்டிருக்கேன்!

Friday, October 1, 2010

அண்ணன் அழைக்கிறார்!

லதிமுக முதல் மாநில மாநாடு!

எனக்கும் இருக்கு ஓட்டு!
20 சீட்டுத் தந்தாத்தான் கூட்டு!


நமது லட்சிய(?)திமுக வின் (அப்படியென்றால் என்ன என்பவர்கள் இங்கே பார்க்கவும்), முதல் மாநில மாநாடு விரைவில் நடக்க இருப்பதால் நமது கட்சி உறுப்பினர்கள் அனைவரும் நன்கொடை சேகரித்து வருமாறு அல்லது கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு மேலும் கட்சியை பலப்படுத்த (?) உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிதாகச் சேர்பவர்களைக் கவரும் வகையில் சில திட்டங்கள் அறிமுகப்படுத்தப் பட உள்ளன.
1. பணம் கொண்டு வந்தால் தேர்தலில் சீட்டு, இல்லேன்னா உனக்கு வேட்டு, எல்லாமே வெத்துவேட்டு!
2. ஐந்து அல்லக்கைகளைக் கூட்டி வந்தால் உங்களுக்கு நீங்கள் கேட்ட பதவி, அஞ்சுல ஒண்ணு கொறஞ்சாலும் அது நீங்க கட்சிக்கு செய்யற உதவி!
3. கூட்டணி கட்சியக் கூட்டிட்டு வந்தா நீந்தான் செயலாளரு, உனக்கு எப்பவுமே நாந்தான் மேலாளரு!
4. வெறுங்கையோட வராதே மச்சி, வந்தா மூஞ்சில ஊத்துவேன் ஆசிட வெச்சி, இனி ஊரெல்லாம் என்னோட பேச்சி! நான் தாளம் போடுறது கொட்டாங்குச்சி!(அவரு அப்பிடித்தான் பேசுவாரு, நீங்க வெறுங்கையோடவாவது வாங்க!, எப்படியாச்சும் வந்தாப் போதும்!)
5. நாங்கூட சேத்துக்க மாட்டேன் விஜயகாந்த(கேப்டன் நம்ம நெலம இப்பிடி ஆயிடிச்சே?), கூப்பிட்டாலும் வரமாட்டாரு ரஜினிகாந்த்!

எனக்கும் இருக்கு ஓட்டு, 20 சீட்டுத் தந்தாத்தான் கூட்டு! (ங்ணா, நீங்க புடலங்கா கூட்டத்தானே சொல்றீங்க? அதுக்கு போயி 20 சீட்டு கேக்குறீங்ளேண்ணா இது அடுக்குமா? மனசாட்சியே இல்லியா?)

யக்கா....டும்..டும்..டும்.... டன்டனக்கா...டனக்கு நக்கா....!

அழைப்புலாம் நல்லாத்தானுங்ணா இருக்கு, ஆனா யாரும் வர மாட்டேங்கிரானுங்களே? எல்லாரும் ஒரு கிலோமிட்டருக்கு அந்தப் பக்கத்துலேயே பாத்துட்டு எஸ்கேப் ஆயிடுறானுங்ணா! நீங்க எதுக்கும் சேவிங் பண்ணிட்டு வந்து மறுக்கா கூப்புட்டுப் பாருங்ணா!

நம்ம சொன்னதையும் நம்பி மனுசன் போயி ஷேவ் பண்ணிட்டு வந்தாரு பாருங்க, இனி ஆயுசுக்கும் யாருக்கு ஐடியாவே கொடுக்க மாட்டேனுங்ணா!

எச்சரிக்கை (நிஜமாவே!): இளகிய மனம் படைத்தவர்கள் மேற்கொண்டு பார்க்க வேண்டாம்!

-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-




நன்றி யோகேஷ் (புகைப்படதிற்கு!)

நன்றி சேட்டை உங்க பதிவப் பாத்துதான் டெவலப் பண்ணேன்!

Monday, September 27, 2010

ராமர் பிள்ளையும் மூலிகை பெட்ரோலும்: நடந்தது என்ன?




விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மம்சாபுரம் என்ற ஊரைச் சேர்ந்த ராமர் பிள்ளை என்பவர் 1996-ம் ஆண்டு மூலிகையில் இருந்து பெட்ரோல் எடுக்கும் முறையைக் கண்டுபிடித்ததாகக் கூறி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அவர் அப்போதைய முதலமைச்சர்கள் சந்திரபாபு நாயுடு, கலைஞர் முன்னிலையில் அதைச் செய்து காட்டி அனைவரையும் வியக்கவும் வைத்தார். ஆனால் IIT-யில் விஞ்ஞானிகள் முன்பு அவர் மூலிகையில் இருந்து பெட்ரோல் எடுத்துக் காண்பித்தபோது விஞ்ஞானிகள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். அதற்கு பல விஞ்ஞானக் காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால் மீடியாக்களின் தயவால், ஒரு பட்டிக்காட்டு விஞ்ஞானியின் கண்டுபிடிப்பைப் படித்த விஞ்ஞானிகள் புறக்கணிக்கிறார்கள் என்று மக்களும் அரசாங்கமும் நம்ப வைக்கப்பட்டார்கள். இதன் பின்பு மாநில அரசுகளிடமும் மக்களிடமும் கிடைத்த ஆதரவை வைத்து ராமர் பிள்ளை மூலிகைப் பெட்ரோல் தயாரித்து விற்று வந்தார். 2000-ம் ஆண்டில் இரசயானங்களை மூலிகைப் பெட்ரோல் என்று சொல்லி விற்பதாக ராமர் பிள்ளையைக் கைது செய்தது CBI. இது கதைச் சுருக்கம்.

இப்போது கொஞ்சம் விரிவாக நடந்தது என்ன என்று பார்ப்போமா?

ஆரம்பத்தில் அங்கே இங்கே என்று அலைந்து கொண்டிருந்த ராமர் பிள்ளைக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் ஆதரவளித்தது. அது சென்னை IIT- க்கு ராமர் பிள்ளைக்கு ஆய்வுக்கூடத்தில் விஞ்ஞானிகள் முன்பு மூலிகைப் பெட்ரோல் செய்துகாட்ட உதவுமாறு அறிவுறுத்தியது. ராம்ர் பிள்ளையின் மூலிகைப் பெட்ரோல் சென்னை IIT-யின் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் துறையில் பரிசோதனை செய்ய்ப்பட்டது. அது 2-ஸ்ட்ரோக், மற்றும் 4-ஸ்ட்ரோக் எஞ்சின்களை ஓட்டுமா, அதன் திறன் என்ன என்று ஆராயப்பட்டது. (இங்கே கவனிக்க வேண்டியது, இந்தச் சோதனையில் மூலிகைப்பெட்ரோலின் தன்மை குறித்தோ, அதில் கலந்திருப்பது என்னவென்றொ, அது எப்படி உருவாகின்றது என்றோ ஆராயப்படவில்லை, அது எஞ்சின்களை இயக்குமா என்று மட்டுமே சோதிக்கப்பட்டது). அச்சோதனையில் வெற்றியும் பெற்றது. இதுவே மூலிகைப் பெட்ரோலுக்கு ஒரு அங்கீகாரத்தை அளித்தது.

பின்னர் ராமர்பிள்ளை சென்னை IIT யில் மூலிகையை வைத்துத் தண்ணீரைப் பெட்ரோலாக மாற்றும் பரிசோதனையை விஞ்ஞானிகளுக்கு முன்பு செய்துகாட்டினார். அங்குதான் பிரச்சனை தொடங்கியது. பரிசோதனைக்குத் தேவையான பாத்திரங்கள் IIT ஆய்வகத்தில் இருந்து கொடுக்கப்பட்டன. அனைத்து பொருட்களும் எடை போடப்பட்டது. கலக்குவதற்காக கிளாஸ் குச்சி (ஆய்வகங்களில் வழமையாகப் பயன்படுத்தப்படுவது) கொடுப்பட்டது. ராமர் பிள்ளையும் 45 நிமிடங்கள் வரை கலக்கியும் பெட்ரோல் உருவாகவில்லை. பின்னர், தான் கொண்டுவந்திருந்த உலோகத்திலான குச்சியைக் கொண்டு கலக்கினார் ராமர் பிள்ளை. 5 நிமிடங்களில் அந்தக் குச்சியிலிருந்து கெரோசின் வாடையுடன் ஏதோ திரவம் வரத்தொடங்கியது. அந்தக் குச்சியை மீண்டும் எடை போட்டுப் பார்த்த போது அது 28.68 gm குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே விஞ்ஞானிகள் மூலிகை பெட்ரோல் அந்தக் குச்சியில் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று முடிவு கட்டினார்கள்.

இதற்கு ராமர் பிள்ளையால் விளக்கம் சொல்ல முடியவில்லை. மறுபடியும் செய்துகாட்டசொல்லி விஞ்ஞானிகள் கேட்டபோது, போதுமான அளவு மூலிகைகள் கொண்டுவரவில்லை என்று கூறிவிட்டார் ராமர் பிள்ளை. இவ்வாறு ராமர் பிள்ளையின் மூலிகைப் பெட்ரோல் சோதனை தோல்வியில் முடிந்தது. பின்னர் IIT மறுபடியும் ராமர்பிள்ளையை அழைத்தபோது தனக்கும் குடும்பத்தினருக்கும் தகுந்த பாதுகாப்பு அளித்தால் மட்டுமே மீண்டும் செய்துகாட்ட முடியும் என்று கூறிவிட்டார்.

ஆனால் விஞ்ஞானிகள் வேண்டுமென்றே ராமர் பிள்ளையை நிராகரிப்பதாகவே மீடியாக்களும் பொதுமக்களும் கருதினார்கள். விளைவு? ராமர் பிள்ளை வெற்றிகரமாக (?) மூலிகைப் பெட்ரோல் உற்பத்தியைத் துவக்கினார் (அதன் பின்புலங்களையும் பினாமிகளையும் இங்கு பார்க்கலாம்). மூலிகைப் பெட்ரோல் விற்பனை சில வருடங்கள் சத்தமில்லாமல் நடந்தது. ராமர் பிள்ளை சென்னை IIT யில் நடந்ததை மறந்து விட்டார், ஆனால் CBI மறக்கவில்லை. அவர்கள் எல்லாவற்றையும் ரகசியமாகக் கண்காணித்துக் கொண்டுதான் இருந்தார்கள். தகுந்த ஆதாரங்கள் கிடைத்தவுடன் கைது செய்துவிட்டார்கள்.

அப்படி என்னதான் செய்தார் ராமர் பிள்ளை? இரசாயனத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தபடும் ஹைட்ரோகார்பன் எனப்படும் பென்சீன், டொலுவீன், (இன்டஸ்ட்ரியல் சால்வன்ட்ஸ் industrial solvents, அதாவது கரைப்பான்கள்) என்ற இரசாயனங்களைப் பல்வேறு பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகளில் இருந்து நண்பர்கள் உதவியுடன் குறைந்த விலைக்கு கொண்டுவந்து இருக்கிறார். அதை மிக்ஸ் பண்ணி மூலிகைப் பெட்ரோல் என்று விற்றிருக்கிறார். (இங்கே கவனிக்க: இந்த பென்சீன் மற்றும் டொலுவீன் எனும் இரசாயனங்கள் பயங்கரமாகப் பற்றி எரியும் தன்மை உடையவை. பெட்ரோலை விட அதிகம் எரியும் சக்தி கொண்டவை. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கருகே சுங்குவார் சத்திரம் என்னும் ஊரில் ஒரு டேங்கரும், டிராக்டரும் மோதி பற்றி எரிந்து கிட்டத்தட்ட 100 பேர் பலியானார்கள் எனபது நினைவிருக்கலாம். அந்த டேங்கர் லாரி ஏற்றி வந்தது பென்சீன் என்னும் திரவமே). CBI ஆட்கள், ராமர் பிள்ளையின் மூலிகைப் பெட்ரோலை சாதாரண மனிதர்கள் போல வந்து வாங்கிச் சென்று லேபுகளில் சோதனை செய்த போது இந்த இரசாயனங்கள் இருப்பது தெரிய வந்தது (லேபில், GC-MS எனப்படும் கருவியில் இது பரிசோதிக்கப்பட்டது). பின்பு அவருடைய நடமாட்டங்கள், தகவல் தொடர்புகளை கிளறிய CBI இந்த ரசாயனங்கள் எங்கிருந்து ராமர்பிள்ளைக்கு கிடைக்கின்றன, யார் யார் உதவுகிறார்கள் என்று கண்டுபிடித்தது. ராமர்பிள்ளையின் மூலிகைப் பெட்ரோலும் முடிவுக்கு வந்தது.

இப்படி ஒரு சின்ன உலோகக் குச்சியில் இரசாயனங்களை ஒளித்து வைத்துக் கொண்டு விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், மீடியாக்கள், பொதுமக்கள் என்று சகட்டுமேனிக்கு எல்லோரையும் ஏமாற்றியிருக்கிறார் ராமர் பிள்ளை! அவருடைய அப்பாவி கிராமத்தான் தோற்றம் வேறு அதற்கு மிக உதவியாக இருந்தது. இவரை இன்னும் நம்புபவர்கள் வேறு இருக்கிறார்கள்! இதுபோன்ற விஷயங்களில் மீடியாக்கள் பொறுப்புடன் நடந்து கொள்வது நல்லது.

இப்போது மறுபடியும் ராமர் பிள்ளை கிளம்பி வந்திருக்கிறார். அக்டோபர் 2-ம் தேதி மெரினா கடற்கரையில் ஒரு லட்சம் லிட்டர் கடல் நீரைப் பெட்ரோலாக்குவேன்னு சவால் விட்டிருக்கிறார், என்ன நடக்குதுன்னுதான் பார்ப்போமே?

Saturday, September 25, 2010

கேப்டனின் ரகஸ்ய டெக்னிக்!



நம்ம விசியக்காந்தண்ணே இருக்காரே அவரு கட்சிதான் அடுத்து ஆட்சிய பிடிச்சிடும்னு நம்புற மாதிரி வளர்ந்தாரு மனுசன். இப்ப யாரு கண்ணு பட்டுச்சோ ஒண்ணும் வேகமாட்டேங்கிது! வேகவேகமா வளர்ந்த கட்சி அப்பிடியே வளராம ஏன் இப்பிடி அடிவாங்கத் தொடங்குதுன்னு அப்பிடியே விட்டத்தப் பாத்தபடி படுத்துக்கிட்டே நல்லா யோசிச்சுப் பாத்தோம். ஒண்ணும் வெளங்கல. சரி போனாப் போகுதுன்னு ரெண்டு கட்டிங் விட்டுட்டு வந்து உக்காந்தா கடகடன்னு எல்லாம் தெள்ளத்தெளிவா புரியுது. தக்காளி விசியகாந்து அடுத்து மொதல்வராக என்னென்ன செய்யனும்னு கண்டு புடிச்சிட்டேன்யா! அத எப்பிடி அவருக்கு சொல்றதுன்னே தெரியல. சரி யாராவது தேமுதிக அல்லக்கைங்க நம்ம ப்ளாக்கப் படிப்பாங்கல்ல (ம்ம்.. நம்ம யாரு, பிரபல பதிவராச்சே, இவிங்க கூட படிக்கலைன்னா எப்படி?), அதுனால ப்ளாக்குல போட்டுட்டா அதப்பாத்துப் படிச்சி, வெளங்கி, அதன்படி நடந்து விசியக்காந்து ஆச்சிய புடிச்சி கழகங்கள்ட்ட இருந்து தமிழ்நாட்டக் காப்பாத்தட்டும்னு ஒரு நல்லெண்ணத்துல இந்தப் பதிவப் போடுறேன் (இதப் படிச்சிட்டு வேற யாராவது போயி ஆச்சியப் புடிக்க டிரைப் பண்ணீங்க, பிச்சிபுடுவேன் பிச்சி!)

கட்சி ஆரம்பிச்ச புதுசுல கேப்டன் என்ன சொன்னாரு? லஞ்சம் ஊழலே இல்லாத ஆட்சியக் கொடுப்பேன்னாரு! அது எப்புடின்னு கேட்டா, அது ரகசியம், இப்பவே சொல்லிட்டா எல்லாரும் அதக் காப்பியடிச்சிடுவாங்கன்னுட்டாரு! சரி, ங்கொக்காமக்கா இவன் ஏதோ மேட்டர் வெச்சிருக்காண்டான்னு ஒரு குருட்டு நம்பிக்கையில கொஞ்சம் பேரு போயி ஓட்டுப் போட்டாங்ய. அதுக்கப்புறமாவது அது என்னா டெக்கினிக்கின்னு சொல்லியிருக்க வேணாம்? மனுசன் அநியாயத்துக்கு பொறுமையச் சோதிச்சாரு! மக்களும் வெறுத்துப்போயி நம்பிக்கையிழந்துட்டாங்க. இப்போ குட்டிச்சுவரு தேடுற கழுத மாதிரி தலைவரு கூட்டணி தேடுறாரு!
பாத்தீங்கள்ல? உங்களூக்கே தெளிவாப் புரியுதுல்ல என்ன ப்ராப்ளம்னு? இதச் சரிபண்ணிட்டம்னா விசியக்காந்து ஆச்சியப் புடிச்சிடுவாருல்ல?
அதுனால, ஆட்சிக்கு வந்தா நம்மாளு எப்புடி லஞ்சம், ஊழல ஒழிக்கப்போறாருன்னு, இத்தனை நாளா காப்பாத்தி வந்த ரகசியத்த இப்போ உங்களுக்காக ஓப்பன் பண்றோம் மக்கா! பாத்துப் படிச்சி வெளங்கி நடந்துக்குங்க!

லஞ்சம், ஊழலை ஒழிக்கும் ரகஸ்ய வழிமுறைகள்:
1. அரசு கெஜட்டில் இருந்து லஞ்சம், ஊழல் போன்ற வார்த்தைகள் எடுக்கப்படும் (தக்காளி இனி லஞ்சம் ஊழல்னு யாரும் வெளையாட்டுக்கூட சொல்ல முடியாதுல்ல?)
2. தமிழ்மொழியில் இருந்தும் லஞ்சம், ஊழல் போன்ற வார்த்தைகள் அடியோடு நீக்கப்படும் (இனி மீடியாக்காரன் கூட அதப் பத்தி எழுதமுடியாது ஆமா..!)
3. தமிழ்நாட்டில் உள்ள 6,345,679 அரசு அலுவலகங்களிலும் எந்த ஒரு வேலையையும் முடிக்க அதிகாரிகளுக்கு அன்பளிப்பு அளிப்பது கட்டாயம்னு ஒரு சட்டம் போடப்படும் (அப்புறம் எவன் லஞ்சம் வாங்குவான்? எல்லாம் அன்பளிப்புத்தான்!)
4. எந்தக் கன்ட்ராக்டும், டென்டரும், பீஸ் தொகையுடன் சேர்த்து 10.3567% அன்பளிப்பு கொடுத்தால் மட்டுமே அரசால் ஏற்றுக்கொள்ளப்படும்.
5. அரசு அதிகாரிகள் தாங்கள் பெறும் அன்பளிப்பில் 10 சதவீதத்தை மேலதிகாரிகளுக்குக் கொடுத்துவிட வேண்டும். 25 சதவீதத்தை கட்சிக்காரர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும்.
6. காவல்துறையிலும் முற்றிலுமாக லஞ்சம் ஒழிக்கப்படும். காவல்துறை இனி அன்பளிப்பு அளித்தால் மட்டுமே வந்து பாதுகாப்புக் கொடுக்கும். ஒவ்வொரு வழக்கும் பதிவு செய்ய எவ்வளவு அன்பளிப்பு வழங்கவேண்டும் என்று தெளிவாக அரசாணை வெளியிடப்படும்.
7. தனியார் துறையில் அன்பளிப்புகள் கொடுக்கல் வாங்கல் குறித்து தனியாக சட்டம் இயற்றப்படும். அரசியல்வாதிகள் வாங்கும் அன்பளிப்பிற்கு இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
8. எல்லா அன்பளிப்புகளுக்கும் வருமான வரி, சேவை வரி, மற்றும் பிற வரிகளில் இருந்தும் விலக்கு அளிக்கப்படும்.
9. மதுரையில் வாழும் 15,745,342 பேருக்கும் அன்பளிப்பில் இருந்து 5.6531 % விலக்கு அளிக்கப்படுகிறது.
10. இதையும் மீறி லஞ்சம் வாங்குபவர்கள் கைது செய்யப்பட்டு விருதகிரி படம் ஓடும் 67 தியேட்டர்களிலும் மாறி மாறி சிறை வைக்கப்படுவார்கள் (ங்கொய்யால, இனி எவனாவது லஞ்சத்தப் பத்தி கனவுல கூட நெனப்பான்?)

இதுதாங்க நம்ம கேப்டன் லஞ்சத்த ஒழிக்கிறதுக்காக பாதுகாத்து வெச்சிருக்க ரகசியம்! இப்பிடி ஒரு அரும்பெரும்கொள்கைகளோட தமிழ்நாட்டையும், தமிழர்களையும் காப்பாத்தத் துடிச்சிக்கிட்டு இருக்கும் புரட்சிக்கலைஞரை இன்னமும் நீங்கள்லாம் கண்டுக்காம இருந்தா, என்ன அர்த்தம்? போங்கய்யா போயி அடுத்த மொதல்வரப் பாத்து மன்னிப்பு கேட்டுட்டு கட்சில சேர்ர வழியப் பாருங்க!

Thursday, September 16, 2010

அடப்பாவிகளா தேனுக்கும் பிரச்சனையா?

தேன் என்றாலே சுத்தமானது, இயற்கையாகக் கிடைக்கக் கூடியது என்று நம்புகிறோம். அதனாலேயே குழந்தைகளுக்கும் நோயாளிகளுக்கும் தரப்படுகிறது. சித்த, ஆயுர்வேதமருத்துவங்களில் தேனே ஒரு மருந்தாகவும் உள்ளது. வீடுகளில் இருக்கும் பாட்டிவைத்தியத்திலும் தேனே முதன்மை வகிக்கிறது. இப்படி நம் அன்றாட வாழ்க்கையில் தேனுக்கு எப்போதும் இடம் உண்டு. இப்போது அந்தத் தேனுக்கும் பிரச்சனை வந்து விட்டது. அது என்னவென்றால் மார்க்கெட்டுகளில் கிடைக்கும் தேனில் ஆறு வகையான ஆன்டிபயாடிக் எனப்படும் மருந்துகள் அதிக அளவில் கலந்திருந்தது என்று சென்டர் பார் சைன்ஸ் அன்ட் என்விரான்மென்ட் Centre for Science and Environment(குளிர்பானங்களில் அதிக அளவில் பூச்சிமருந்துகள் கலந்திருப்பதைக் கண்டறிந்தவர்கள் இவர்களே) அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
தேனில் ஏன் ஆன்டிபயாடிக் கலந்திருக்கிறது? அதனால் வரும் பிரச்சனைகள் என்னென்ன? கொஞ்சம் விலாவாரியாக பார்ப்போமா?
பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள் தேனையும் நவீன பேக்கிங்கில் விற்கிறார்கள். இவர்கள் யாரும் காட்டில் இயற்கையாகக் கிடைக்கும் தேனை எடுத்து விற்பதில்லை. அது சாத்தியமும் இல்லையென்பதால், தேனீக்களை பெரிய அளவில் வளர்த்துத் தேனை அறுவடை செய்பவர்களிடம் இருந்து வாங்குகிறார்கள். அல்லது தாங்களே அப்படி ஒரு பண்ணை வைத்துக்கொள்கிறார்கள். இவ்வாறு தேனீக்கள் செயற்கையான் சூழல்களில் வளர்க்கப்படும் போது அவற்றுக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. (கோழிப்பண்ணைகளிலும் இதே போல் ஆன்டிபயாடிக் ஊசிகள் போடப்படுகின்றன). இதுதான் தேனில் ஆன்டிபயாடிக் மருந்துகள் கலந்திருப்பதற்குக் காரணம்.

எந்த அளவு வரை அதிகபட்சமாக ஒவ்வொரு ஆன்டிபயாடிக் மருந்தும் தேனில் இருக்கலாம் என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வரையரை வைத்துள்ளன. அந்த அளவுக்கு மேல் ஆன்டிபயாடிக் இருந்தால் அது தேனை சாப்பிடுபவர்களுக்குப் பாதுகாப்பானதல்ல. அத்தகைய தேனை அந்த நாடுகளும் அனுமதிப்பதில்லை. இந்தியாவில் தேன் தயாரிக்கும் கம்பெனிகள் இந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொழுது இந்தக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டே தேன் தயாரிக்கின்றார்கள். ஆனால் பிரச்சனையே அவர்கள் இந்தியச் சந்தைக்கு வரும்போதுதான். இந்தியச் சந்தை என்று வரும்போது வழக்கம்போல எல்லாக் கம்பெனிகளும் செய்வது போல அவர்கள் தரம் குறைந்த மற்றும் ஆன்டிபயாடிக் அளவு அதிகம் உள்ள தேனையே விற்கிறார்கள். இத்தேனை அவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பியிருப்பார்களேயானால் அது நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பபட்டு விடும். ஆனால் இந்தியாவில் தேனிற்கென்று எந்தவிதமான பாதுகாப்பு வரைமுறைகளும் சட்டங்களோ இல்லாததால் கம்பெனிகள் வேறு நாடுகளில் விற்க முடியாததை நம்தலையில் கட்டுகின்றார்கள்.
சமீபத்திய பரிசோதனை முடிவு இந்தியாவின் எல்லாப் பெரிய கம்பெனிகளின் தேனிலும் ஆன்டிபயாடிக் மருந்துகள் மிக அதிக அளவு உள்ளதாகத் தெரிவிக்கிறது. இதில் இரண்டு வெளிநாட்டுக்கம்பெனிகளும் அடக்கம் (உள்ளூர்க்காரனுக்கே நம்மளப் பத்தி அக்கரையில்லைன்னா அப்புறம் வெளிநாட்டுக்காரன் சும்மாவா இருப்பான்?). அந்த வெளிநாட்டுக்கம்பெனிகளின் தேன் முதலில் அவர்கள் நாட்டு விதிமுறைகளின்படியே பயன்படுத்தக்கூடாத ஒன்றாக இருக்கிறது. அவர்கள் அதைத் தம்நாடுகளில் விற்கவே முடியாது. அதனால் இதுக்கென்றே இருக்கும் நம் நாட்டுச் சந்தைகளுக்குத் தள்ளிவிடுகிறார்கள்.
இப்படி அதிக அளவு ஆன்டிபயாடிக் கலந்த தேனை நாள்பட சாப்பிடுவதால் இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், சிறுநீரகம், ஈரல் பிரச்சனைகளும் ஏற்படலாம். மேலும், நம் உடம்பிலேயே அந்த ஆன்ட்டிபயாடிக்குகள் இருந்து கொண்டிருப்பதால், தேவையான சமயத்தில் கொடுக்கபடும் போது அவை செயற்படாது போகலாம். (சூப்பர் பக் கிருமிகள் இந்தியாவில் அதிக அளவில் காணப்படுவதற்கு இதுபோன்ற காரணங்கள் இருக்கக்கூடும்).

வெளிநாட்டுக்கம்பெனிகளை இந்தியாவில் அனுமதிக்கத் தொடங்கியபிறகு, இந்தியக் கம்பெனிகளும் சரி, வெளிநாட்டுக்கம்பெனிகளும் சரி, இரட்டைத் தரக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாகவே தெரிகிறது (நம்ம இரட்டை குவளை சிஸ்டம் ஞாபகம் வந்தா அதுக்கு நான் பொறுப்பு கிடையாதுங்கோ). அதாவது, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு ஒரு தரம், உள்நாட்டுச் சந்தைக்கு ஒருதரம் என்று கம்பெனிகள் நேரடியாகவே நம்மை ஏளனம் செய்கின்றன. இதில் சில கம்பெனிகள் எக்ஸ்போர்ட் குவாலிட்டி என்று விளம்பரம் செய்து விற்பது கேவலத்தின் உச்ச கட்டம்! எக்ஸ்போர்ட் குவாலிட்டிக்கு இந்தியர்கள் தகுதியில்லை என்று ஒருமனதாக எல்லோரும் முடிவு செய்துவிட்டார்கள். இதில் பெரும்பாலும் அனைத்து இந்தியக் கம்பெனிகளும் அடக்கம் என்பதுதான் நம் தேசப்பற்றின் நிஜமான முகம்!. இங்கே பணம் கிடைக்கிறது என்றால் எதுவுமே தவறில்லை! உணவில் கலப்படம், பாலில் கலப்படம், சிமென்ட்டிலும் கலப்படம், ....எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம்! வாழ்க ஜனநாயகம்! வளர்க பணநாயகம்! ஓங்குக வாரிசுரிமை!


பின்குறிப்பு:
தேனில கலந்திருப்பதாகக் கண்டறியப்பட்ட ஆன்டிபயாடிக்குகள்:

ஆக்ஸி டெட்ராசைக்கிளின், ஆம்ப்பிசிலின், எரித்ரோமைசின், குளோரம்பினிகால், சிப்ரோப்ளாக்சசின், என்ரோப்ளாக்சசின்

பரிசோதனையில் அதிக அளவு ஆன்டிபயாடிக் கலந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ள தேன் கம்பெனிகள்:
டாபர், ஹிமாலயா, பதஞ்சலி ஆயுர்வேதா, பைத்தியநாத், காதி (சமீபத்தில் டாபர் கம்பெனி தரம்குறைந்த தேனை விற்பதாக நேபாளத்தில் பிரச்சனை எழுந்த பொழுது, அது இந்தியக் கம்பெனிகளைக் குறிவைத்துச் செய்யப்படும் அவதூறுப் பிரச்சாரம் என்று டாபர் கம்பெனி சமாளித்தது நினைவில் இருக்கலாம்)

மேற்கொண்டு விபரங்களுக்கு கீழே உள்ள சம்பந்தப்பட்ட வெப்சைட்டிற்குச் சென்று பார்க்கலாம்.
http://www.cseindia.org/content/press-release-cse-busts-myth-about-%E2%80%98natural-and-pure%E2%80%99-honey

Friday, September 10, 2010

பாமக துணையில்லாமல் ஆட்சியமைக்க முடியாது! எப்பிடி?எப்பிடி?எப்பிடி?




நம்ம அன்புமணியண்ணே பாமக துணையில்லாமல் ஆட்சியமைக்க முடியாதுன்னு சும்மா நச்சுன்னு சூப்பரா சொல்லியிருக்காரு. இப்பிடி ஒரு தெனாவெட்டு தமிழ்நாட்டுல வேற யாருக்குண்ணே வரும்? எப்பேர்ப்பட்ட தன்னம்பிக்கை, சாணக்கியத்தனம்?

சரி நாம மேட்டருக்கு வருவோம்,
பாமக துணையில்லாமல் ஆட்சியமைக்க முடியாது, அதுதான் எப்பிடி?
எப்பிடின்னு தெரிஞ்சுக்க உங்களுக்கெல்லாம் ரொம்ப ஆர்வமா இருக்குல்ல?

நாங்கதான் தேர்தல்ல எந்தக்கட்சி ஜெயிச்சாலும் அவங்க கூட நாங்களா போயி சேர்ந்துக்குவோம்ல (அப்பிடித்தானே இதுவரைக்கும் பண்ணிக்கிட்டு இருக்கோம்), அப்புறம் அவங்களா எப்பிடி ஆட்சி அமைச்சாலும் நாங்களும் துணைதானே! எப்பூடி...?
நாங்களும் அரசியல்ல சாணிய சே...சே... சாணக்கியத்தனத்த அள்ளிக் குடிச்சவங்கதாம்ல!

நைனா நைனா என்னை மறுபடியும் மினிஸ்டராக்கு நைனா...! வீட்டுல உக்காந்து என்ன செய்யிறதுன்னே தெரியல!

Thursday, September 9, 2010

யாராவது அஞ்சு பேரு போயித்தொலைங்கய்யா!

நேத்து டாஸ்மாக்குல கடைதொறக்குறதுக்காக எப்பவும்போல காலைலேயே போயி கடைவாசல்ல நின்னுக்கிட்டு இருந்தேன். ஆளுங்கவந்து ஷட்டர ஓப்பன் பண்ணிக்கிட்டு இருந்தானுங்க. சரி இன்னிக்கும் நாமதான் பர்ஸ்ட்டுன்னு பெருமையா திரும்பிப் பாத்தா அதுக்குள்ள ஒரு ஆளு திமுதிமுன்னு வந்து என்னை முட்டித்தள்ளிக்கிட்டு முன்னாடி போயி எனக்கு முன்னாடி ஒரு புல்லும் வாங்கிட்டான். நானும் முறைச்சிக்கிட்டே நம்ம ஐட்டத்த வாங்கிட்டு வேகமா அவன பாலோ பண்ணேன். ஒருவழியா மூத்திர சந்துக்குள்ள வெச்சி ஆளயும் புடிச்சிட்டேன். தக்காளி யாருடா நீய்யி? எங்க ஏரியாவுல வந்து எங்களுக்கு முன்னாடி புல்லு வாங்குரேன்னு கழுத்துச்சட்டையப் புடிச்சி ஒருவாங்கு வாங்குனா...... எங்க தலைவருக்காக வாங்குறேன்னான். ஓஹோ அப்ப நீயி அல்லக்கைய்யா? யாருடா உங்க பாஸு, ங்கொய்யா வாடா ரெண்டுல ஒண்ணு பாத்துடலாம்னு நம்ம சிரிப்பு போலீசு இருக்கிர தெகிரியத்துல கெளம்பிட்டேன்.
போயிப் பாத்தா எங்கேயோ பாத்த மாதிரியே இருக்கு. அவன்கிட்டேயே கேட்டேன். யோவ் நீ சுனாசாமி மாதிரியே இருக்கியே? அதுக்கு அந்தாளு, ஆமாப்பா நான் சுனாசாமிதான் சும்மா விடுப்பான்னு சொல்றாப்ல! யோவ் நீயெல்லாம் ஸ்டாரு ஹோட்டல்ல அடிக்கிற ஆளாச்சே என்யா இங்க வந்தேன்னு கேட்டா, எலக்சன் வரப்போகுதுல எங்க கட்சி சார்பா நிக்கிறதுக்கு அஞ்சு பேரும் வேணும், அதுக்கு ஆள் புடிக்கிறதுக்குத்தான் இப்பிடி மாறுவேஷத்துல அலையிறேங்கோன்னாரு, எனக்கு தூக்கிவாரிப்போட்டிருச்சி,

என்னது மாறுவேஷமா, அப்பிடி ஒண்ணுமே தெரியலையே?

உடனே கன்னத்துல இருந்து ஒரு மச்சத்த எடுத்துட்டு,
இது என்னன்னு தெரியலைய்யா?

(ங்கொக்காமக்கா...இந்த நியாயத்த எங்க போயிச் சொல்ல? )

சரி அது என்ன அஞ்சு சீட்டு கொடுத்தா கூட்டணி?

ஆமா இல்லேன்னா அப்புறம் 234 தொகுதிலேயும் நிக்க வேண்டி வந்திடும், அத்தினிபேருக்கு நான் எங்க போவேன்? அஞ்சு பேருக்கே ஊரு ஊரா மாறுவேசத்துல அலைஞ்சிக்கிட்டு இருக்கேன்!

அது சரி, இப்போ 5 பேரு புடிச்சிட்டீங்களா?

ஒருத்தனும் சிக்க பாட்டேங்கிரானுங்கய்யா, இவ்வளவு கேக்கிரியே, நீ ஒரு சீட்ட எடுத்துக்கோயேன்.

(தக்காளி கடைசில எனக்கே ஆப்பா! )

யோவ் இவ்வளவு நேரம் உங்கூட பேசிக்கிட்டு இருந்ததுக்கு இப்பிடி பண்ணுறியே?

ஆமாய்யா எல்லாரும் இப்பிடியே சொன்னா, நான் என்னதான் பண்றது? ஒண்ணு செய்யேன், நீதான் பிரபலப் பதிவ்ராச்சே, அதுவும் பலபேரு வந்து போற எடம்னு வேற போட்டிருக்கே, நீயே அஞ்சு பேரு வேணும்னு ஒரு வெளம்பரம் கொடுத்துடேன்!

சரி சென்டிமென்ட்டா (!) கேக்குறதுனால கருமத்தப் போட்டுத் தொலைக்கிறேன். யாராவது அஞ்சு பேரு போயித்தொலைங்கய்யா!

ஆட்கள் தேவை!
வரும் தமிழக சட்டசபை தேர்தலில் சனதா கட்சியின் சார்பாக நிற்க ஐந்து வேட்பாளர்கள் தேவை. தேர்தல் முடியும் வரை உணவு தங்குமிடம் இலவசம்.
கண்டிசன்கள்:
1. வரும்போது டெபாஸிட் தொகையும் கொண்டுவரவேண்டும்.
2. கட்சித்தொண்டர்கள் என்ற பெயரில் ஆளுக்குக் குறைந்தது 50 பேராவது திரட்டி வரவேண்டும்.
3. அழுகிய தக்காளி, முட்டை வீசிய, வாங்கிய அனுபவம் கண்டிப்பாக இருக்கவேண்டும்.
4. மாதாமாதம் கேஸ் போடுவதற்கு மேட்டர் கொண்டுவரவேண்டும் (நல்ல பரபரப்பான மேட்டருக்கு ரூ.50 கொடுக்கப்படும்)
5. கட்சியில் குறைந்தது 2 ஆண்டுகளுக்கு உறுப்பினராக சம்மதம் தெரிவிக்கவேண்டும்.
6. அவ்வவப்போது கட்சிப் பணியில் ஈடுபட்டு கட்சியை பலப்படுத்த வேண்டும்.
7. வேறு மாநிலங்களில் நம் கட்சி போட்டியிடும்போது கட்சிப் பணிகளுக்காக அங்கே செல்ல வேண்டும்.

கண்டிசன்களுக்கு உடன்படுபவர்கள் உடனே புறப்பட்டுவரவும்.

முகவ்ரி:
சுனாசாமி
தலைவர், செயலாளர், பொருளாளர், உதவித் தலைவர், உதவி செயலாளர் மற்றும் உதவிப்பொருளாளர்,
சனதா கட்சி,
தலைமை அலுவலகம்,
சென்னை.





எச்சரிக்கை: இது அரசியல் பதிவல்ல!