சானல் 4 வீடியோ தொகுப்பு மூலமாக இலங்கை அரசின் உண்மையான நோக்கம் என்னவென்பதை முழுமையாக தெரிந்து கொண்டோம். மற்றநாட்டு அரசுகளுக்கு இவை முன்பே நன்கு தெரியும் என்றாலும், அவர்களுக்கு இருக்கும் வேறு சில உள்நோக்கங்களால் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். எங்கோ இருக்கும் சானல் 4-ற்கு இருக்கும் அக்கறையில் ஒரு சதவீதம் கூட நம் தமிழக தொலைக்காட்சிகளுக்கு இல்லையே? அதிகாரம், பணபலம், மீடியா எல்லாம் குறுகிய எண்ணம் கொண்ட ஒரு சிலரின் கையில் சிக்கி நம் வாழ்வு, சுற்றுச் சூழல், தொழில் வளர்ச்சி, சமூக மேம்பாடு என அனைத்தும் சீரழிந்து வருவதை ஆற்றாமையோடு பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறோம்.
சானல் 4-ன் கொலைக்களம் காணொளியை பார்த்த பின்னரும் நாம் எதையும் கண்டு கொள்ளாது இருந்தால் வரலாறு நம்மை மன்னிக்காது மக்களே! நம்மால் பெரிதாக எதுவும் செய்துவிட முடியாது என்றாலும், குறைந்தபட்ச உணர்வுகளையாவது வெளிப்படுத்துவோம். இதன்மூலம் இலங்கையில் தமிழர்கள் அரைமனிதர்களாக நடத்தப்பட்டு வரும் நிலையாவது மாறட்டும்.
ஜூன் 26 அன்று சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிக்கும் நாளாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்படிருக்கிறது. அந்நாளில் ஈழப் படுகொலைகளை நினைவு கூறும் அதே சமயம், இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட 543 தமிழக மீனவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும் இந்த நிகழ்வை அமைத்துக்கொள்ளலாம் நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இது அரசியல்/சினிமா நிகழ்வல்ல, லாரிகளில் அல்லக்கைகளை கொண்டுவந்து கொட்டுவதற்கு! மக்களால் மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சி! நீங்களும் உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், பக்கத்து வீட்டினர், அலுவல தோழர்கள் என அனைவரையும் கலந்து கொள்ளச் செய்யுங்கள். உங்களால் முடிந்த வரை இத்தகவலை பரப்பியும் உதவுங்கள். இதுதான் பாதிக்கப்பட்ட நம் சகோதரர்களுக்கு ஒரு சகமனிதனாக நாம் செய்யும் சிறு முயற்சி!
மெல்லிதயம் கொண்டோரே
மெழுகுதிரி ஏந்த
மெரினாவிற்கு வாரீர்.
சென்னையில்,
நாள்: ஜூன் 26
நேரம்: மாலை 5 மணி
இடம்: சென்னை மெரினா கண்ணகி சிலை.
மதுரையில்,
தமிழ் அன்னை சிலை
தமுக்கம் அருகில் ,மதுரை
ஈழ ஆதரவாளர் கூட்டமைப்பு -9443917588 இந்த எண்ணுக்கு போன் செய்து கேட்டு கொள்ளவும் .அல்லது உங்கள் வருகையை .உறுதி படுத்தி கொள்ளவும் .
கோவையில்,
இன்னும் இடம் உறுதி செய்ய படவில்லை. அதனால் .
திரு .பிரபாகர் அவர்களை 9865417418 தொடர்பு கொள்ளவும்.
டிவீட்டரில் பிரச்சாரத்தை முன்னெடுக்க, உங்கள் ட்வீட்டுகளில் #June26Candle ஐ சேர்த்துக் கொள்ளுங்கள்!
நன்றி!
சுகவீனமாக போதிலும் அயராது முயற்சி எடுத்து வரும் நண்பர் கும்மி அவர்களுக்கு ஒரு சல்யூட்!
!