Monday, January 23, 2012

தானே கமிட்டாகிய தானைத்தலைவன்...


டேய்.... ஒரு அரசு அதிகாரிகிட்ட எப்படி நடந்துக்கனும்னு தெரியாது....?

காலை 6.15. அது ஜனவரி மாதமாகையால் கொஞ்சம் சிலுசிலுவென்றிருந்தது. தெருவில் ஒன்றிரண்டு பேர் சென்று கொண்டிருந்தார்கள். பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ் ரமேஷ் அலுவலகம் செல்வதற்காக வீட்டில் இருந்து கிளம்பினார். எப்போதும் சீக்கிரமே கிளம்பிவிடுவார், ஏனென்றால் அப்போதுதான் பக்கத்து டீக்கடையில் பழைய ஊசிப்போன வடை போண்டாக்களை தூக்கி வீசுவார்கள், அதை யாருக்கும் தெரியாமல் நைசாக எடுத்துக் கொள்வது ரமேசின் வழக்கம். வீட்டிலிருந்து அரை கிலோமீட்டர் நடந்தால் தான் பஸ் ஸ்டாப். தெருமுனையில் இருக்கும் அண்ணாச்சி கடை இன்னும் திறந்திருக்கவில்லை.  அண்ணாச்சி 8 மணிக்குத்தான் கடை திறப்பார். அண்ணாச்சி கடைமுன்பாகவும் ஏதாவது கிடந்தால் யாரும் பார்க்காதவாறு எடுத்துக் கொள்வார்.

ஆனால் இன்று கடைமுன்பாக யாரோ ஒருத்தர் நின்று கொண்டிருந்தார். புதிதாக இருந்தார். ஆள் பார்ப்பதற்கு ஷங்கர் படங்களில் வரும் அரசு உயர் அதிகாரி போல் இருந்தார். தலையில் ஒரு உல்லன் தொப்பி. அலுவலகத்திற்குச் செல்ல தயாராக இருப்பது போல் நின்று கொண்டிருந்தார். புதிதாக இந்த ஏரியாவிற்கு குடிவந்திருக்கலாம். கம்பெனி வண்டிக்காகவோ நண்பருக்காகவோ காத்துக் கொண்டிருக்கிறார் போல. இப்படி எண்ணிக் கொண்டவாரே பஸ்ஸ்டாப்பை அடைந்தார். 

மறுநாள் காலையும் அவர் அதே இடத்தில் நின்றிருந்தார். இப்போது கொஞ்சம் பழகிய(?) முகமாகி விட்டதால் மெலிதாக புன்னகைக்க முயற்சித்தார் சிரிப்பு போலீஸ், ஆனால் அவர் பதில் ரியாக்சன் கொடுக்காமல் ரொம்ப சீரியசான பாவனையுடன் இருந்ததால், முகத்தில் வந்த சினேகமான புன்னகையை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு எதுவும் நடக்காதது போல் அசடு வழிந்தவாறு தன்பாட்டுக்குச் செல்லத் தொடங்கினார். என்ன மனிதர் இவர், சும்மா பதிலுக்கு ஒரு சின்ன புன்னகை செய்தால் என்ன? காசா, பணமா? இப்படியும் இருக்கிறார்களே என்று திட்டிக் கொண்டே அலுவலகம் சென்றடைந்தார். ஒரு புன்னகை வீணாகிவிட்டதே என்ற வருத்தம் அவருக்கு!

அலுவலகத்தில் ரமேசால் அன்று வழக்கம்போல் நிம்மதியாக தூங்க முடியவில்லை. எவ்வளவோ முயற்சித்தும் அந்த புதுமனிதரைப் பற்றி  சிந்தனை அவ்வப்போது வந்து போனது. யாராக இருக்கும், பார்க்க வேறு பெரிய அதிகாரி போல் இருக்கிறார், உண்மையிலேயே உயர் அதிகாரியாக இருப்பாரோ? என்று பலவாறாக மண்டையைக் குடைந்து கொண்டு யோசித்துக் கொண்டே தாமதமாக சாப்பிட்டதில் கேண்டீனில் வடை காலியானதுதான் மிச்சம். அதையும் நினைத்து இன்னும் அதிகமாக புலம்பியவாறே அன்றைய பொழுதைக் கழித்தார்.

மறுநாள் காலை எழுந்ததில் இருந்தே மறுபடியும் அவர் பற்றிய எண்ணங்கள் சிரிப்பு போலீஸ் மனதில் ஓடத் தொடங்கியது. போன் பேச முடியவில்லை,  எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியவில்லை, ஆசையாக இட்டிலியும் சட்டினியும் சாப்பிட முடியவில்லை... என்று எங்கு சென்றாலும் அதே நெனப்பு... ரொம்பவே வெறுத்துப் போனார் போலீஸ். கொஞ்சம் அவமானப்படுத்தினாலும் பரவாயில்லை இன்று எப்படியும் அவரிடம் பேசி இதை ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று முடிவு செய்தார். 

அரசு உயர் அதிகாரி மாதிரி இருக்கிறார், நம் ஏரியாவில் வேறு வசிக்கிறார், பழகி வைத்துக் கொண்டால் பின்னர் எப்போதாவது ஓசி சாப்பாடு கிடைக்கக்கூடும் என்று அவரது உள்மனது பக்காவாக கணக்குப் போட்டது. இன்று நம் பேச்சுத் திறமை முழுதையும் காட்டி அவரை நம்வழிக்கு கொண்டு வந்துவிட வேண்டியதுதான் என்று எண்ணிக் கொண்டு 10 நிமிடம் முன்னதாகவே கிளம்பினார். 

அதே அண்ணாச்சி கடை முன்பாக அந்த அதிகாரி நின்று கொண்டிருந்தார். ரமேஷ் சட்டென்று ஒரு ரெடிமேட் புன்னகையை வரவழைத்துக் கொண்டு அவர் அருகில் சென்று சார் வணக்கம் என்றார். பதிலுக்கு அவர் கையை நீட்டினார். கைகுலுக்கலாம் என்று ரமேசும் கையை நீட்டினார், பார்த்தால் அவர் கையில் கத்தி இருந்தது..  ரமேஷ் சற்று குழம்பியவராக அதிர்ந்து போய் நிமிர்ந்து பார்த்தார்... உடனே அதிகாரி டேய்.. பணத்த எட்ரா..... என்றார்.


Wednesday, January 18, 2012

ஆனந்த தொல்லை: ஒரு இனிய ஆரம்பம்...!


சில பிரபல பதிவர்கள் (உச்சத்தில் இருப்பவர் உள்பட) ஒருவழியாக பவர்ஸ்டார் வெறியர்களின் அன்பான மிரட்டலுக்கிணங்க ஆனந்த தொல்லை என்ற அற்புத உலகமகா காவியத்திற்கு விமர்சனம் எழுதுவதாக உறுதியளித்துள்ளார்கள். மேலும் சில இளம்பதிவர்கள் ஆனந்த தொல்லை படம் ஓடும் 500+ நாள் வரைக்கும் தினமும் பவர்ஸ்டாரை பற்றி ஏதாவது எழுதுவதாகவும் முடிவு செய்துள்ளார்கள். அவர்களுக்கு உதவுவதற்காக பவர்ஸ்டாரின் பவர்ஃபுல் படங்கள் சிலவற்றை இங்கே பிரசுரித்திருக்கிறோம். இளகிய மனம் படைத்தவர்கள் தயவு அப்படியே சென்று விடவும்!பவர் ஸ்டார் சொல்றான்..... பவர் ஸ்டார் முடிக்கிறான்....


ஐயாம் தி நியூ ஆர்னால்ல்டு சுவார்ர்ர்செனேகார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....என்னா லுக்கு......?இது காதுல வேணா நான் தான் பவர்ஸ்டார்னு சொல்லிப் பார்க்கவா...?எலேய்ய்.... படம் வந்ததும் ஒழுங்கா எல்லாப்பயலும் விமர்சனம் எழுதிடுங்க... இல்லே.....டீசர்ட்டுகளில் பவனி வரப்போகும் பிரபல பவர்ஸ்டார் கார்ட்டூன்...


இப்படிக்கு,
பவர்ஸ்டார் கொலவெறி குருபீஸ்
சர்வதேச கிளை மற்றும் மரம்


நன்றி: கூகிள் இமேஜஸ், கெட்சினிமாஸ் கார்ட்டூன், பவர்ஸ்டார்

Tuesday, January 17, 2012

நண்பன்: எனது விமர்சனம், முதல் முறையாக...
முதல் முறையாக ஒரு விமர்சனம் எழுதலாம் என்றவுடன் எனக்கு கொஞ்சம் உதறலாகத்தான் இருந்தது. பின்னே பெரிய பெரிய ஜாம்பவான்கள் கோலோச்சும் இடத்தில் கத்துக்குட்டிகள் நுழைவதற்கு கொஞ்சம் அப்படித்தானே இருக்கும்? நல்ல தெளிவான மனநிலையுடன் விமர்சனம் எழுதலாம் என்று முடிவு செய்து கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக் கொண்டு அமர்ந்தேன், அப்போதுதானே எல்லா முக்கியமான விஷயங்களையும் சரியாக நினைவில் வைத்து கோர்வையாக எழுதலாம்?

நம்ம பிரண்டு ஒருத்தன் விஜய் ரசிகன். ரொம்ப நல்ல பையன், கொஞ்சம் அப்பாவித்தனமா இருப்பான், ஆனா ஊமைக்குசும்பு அதிகம். திடீர் திடீர்னு ஏதாவது வில்லங்கமா பண்ணிட்டு வந்து நிப்பான். அப்பல்லாம் நாங்க வீக்கெண்ட்ஸ்ல ஈவ்னிங் ஏதாவது படத்துக்கு போவோம், ஷோ முடிஞ்சு வந்த உடனே நல்லதா ஒரு ஹோட்டலுக்கு போய் செமயா சாப்பிடுவோம். சாப்பாடு விஷயத்தில் ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி ரசனை. அதனால ஹோட்டல்கள்ல வெரைட்டியா ஆர்டர் பண்றதுக்கு ஈசியா இருக்கும்.

அப்படித்தான் அவன்கூட பல படங்களுக்குப் போனேன். இந்த மாதிரி பசங்களுக்கு ஃப்ரெண்டா இருக்க விஷயம் இருக்கு பாருங்க, அதைவிட ஒலகத்துலேயே கொடுமையான விஷயம் கிடையாதுங்க. ஏதாவது புதுப்படம் வந்தா போதும், இவனுங்க அத பாத்துட்டு வந்து மூணு நாளைக்கு நம்மளையும் தூங்க விடமாட்டானுங்க, சாப்பிட விடமாட்டானுங்க. இவனுங்ககிட்ட இருந்து தப்பிக்கிறதுக்குள்ள நாலு ஜல்லிக்கட்டு காளைகளுக்கு லாடம் கட்டிட்டு வந்துடலாம்.

இப்படி போய்ட்டு இருந்தப்போதான் நண்பன் படம் ரிலீஸ் ஆகுச்சு. படம் வேற ரொம்ப நல்லா இருக்கறதா பேச்சு வந்துடுச்சா... நான் கொஞ்சம் கலங்கிட்டேன். பயலை சமாளிக்கிறதுக்குள்ள பெரும்பாடா போச்சு. தினம் ஒரு காரணம் சொல்லி தள்ளிப் போட்டுட்டே வந்து ஆளை. கொஞ்சம் கொஞ்சமா நார்மலாக்கி, அப்புறம் படத்துக்கு போகலாம்னு ப்ளான். இதையெல்லாம் அப்படித்தான் டீல் பண்ணனும் என்ன சரிதானே?

எப்படி இருக்கு என் நண்பன் விமர்சனம்? இருங்க இருங்க நீங்க எந்த நண்பன் விமர்சனம்னு நெனச்சீங்க? நண்பன் பட விமர்சனம்னா? நான் என்ன நண்பன் படம் விமர்சனம்னா சொன்னேன், நண்பன் விமர்சனம்னுதானே சொல்லி இருக்கேன், எங்கே டைட்டிலை மறுக்கா படிச்சுப் பாருங்க?

ரூம் போட்டு அழ விரும்புபவர்கள் உடனே பெயரை முன்பதிவு செய்து கொள்ளவும்!

நன்றி: கூகிள் இமேஜஸ்!

Monday, January 16, 2012

மேதை: ஒரு சிறப்பு பார்வை....!


இந்த பாருங்கண்ணே, என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது எனக்கு இப்ப உடனே மஞ்ச சட்ட வரனும் ஆமா...


அங்க என்ன பாக்குறீங்க? 
நான் எங்க பார்க்குறேன், எல்லாம் கருப்பாத்தான் தெரியுது, ஏதோ குத்துமதிப்பா டைரக்டர் சொன்ன பக்கமா நிக்கிறேன்


அப்படியெல்லாம் அவசரப்பட்டு போய்டாதீங்கண்ணே, நீங்களும் போயிட்டா தியேட்டர்ல ஆப்பரேட்டர் மட்டும் தனியா என்னண்ணே பண்ணுவாரு?


இதோ பாரும்மா, இந்தப்படத்துக்கு நாந்தான் ஹீரோ, நீ என் கூடத்தான் டூயட் பாடியாகனும் வேற வழி இல்லமா....... சொன்னா புரிஞ்சுக்க....


சார்லி, இந்த படத்துல நடிக்கிறவங்க எல்லாரும் படத்துக்கு 100 நாள் வரை டெய்லி டிக்கட் வாங்கனும்னு முன்னாடியே சொன்னேனே, இப்போ முடியாதுன்னா எப்படி?


டேய்ய் என்ன அப்படி பாக்கிறே...?
பல்ல வெளக்கிட்டு வந்துடுங்கண்ணே..... முடியலண்ணே.....


யப்பா..சாமி.. நீ இந்த பதிவர்களை எப்படியாவது கண்ட்ரோல் பண்ணு.....  படத்த  ஓட்டுறத நான் பாத்துக்கிறேன்....


சார்லிண்ணே, நல்லா பாத்துக்குங்க, நம்ம படம் ரிலீசான உடனே இவங்கதான் படத்த 300 நாள் வரைக்கும் டெய்லி பார்க்க போறவங்க, எல்லாம் பேசி முடிச்சிட்டேன்...


இது கிராமத்து படம் இல்ல சார், இப்பவாவது நம்புங்க......

நன்றி: கூகிள் இமேஜஸ் மற்றும் http://chennai365.com

Monday, January 9, 2012

சாட் ஹிஸ்டரியும் பிரபல பதிவரும்...


அப்பவே இந்தப்படம் வேணாம்னு சொன்னேனே கேட்டியா....? இனி பார்க்கிறவன்லாம் இவர் கூட நம்மை கம்பேர் பண்ணித் தொலைவானுங்களே...?நேத்து வேலையெல்லாம் முடிஞ்சு மெயில் செக் பண்ணிட்டு இருக்கேன், திடீர்னு ஒருத்தர் சாட்ல வந்தார். அவர் பேரு சங்கராம். எங்கூட கொஞ்சம் பேசனும்னார். யார்னு தெரியல, ஏதாவது பிரபல பதிவரா இருக்கப்போறாரு சும்மா பேசி வைப்போம்னு சாட் பண்ணேன்.. 

சங்கர்: சார் வணக்கம்

பன்னி: வணக்கம்.. 

சங்கர்: எப்படி இருக்கீங்க? உங்க கூட சாட் பண்றதுல ரொம்ப மகிழ்ச்சி சார்

பன்னி: நமக்குள்ள எதுக்குங்க சார் எல்லாம், நான் என்ன கலக்டரா... இல்ல ஜட்ஜா ?

சங்கர்: சரிங்க.. இருந்தாலும் நீங்க எவ்ளோ பெரிய பிரபல பதிவரு என் கூடலாம் சாட் பண்ணுவீங்கன்னு நம்பவே இல்ல...

பன்னி: அட பிரபல பதிவர்னா என்னங்க.. நானும் உங்கள மாதிரி சாதரண ஆளு தாங்க... 

சங்கர்: அப்படியெல்லாம் இல்லைங்க, நான் ரொம்ப நாளா உங்க ரசிகன். 

பன்னி: ஓ அப்படிங்களா..... நன்றி சங்கர்

சங்கர்:  ஆமாங்க, டெய்லி காலைல உங்க பதிவுலதான் கண்ணு முழிப்பேன். அதுக்காக லேப்டாப்ல உங்க ப்ளாக்க ஓப்பன் பண்ணி பக்கத்துல வெச்சிக்கிட்டுத்தான் தூங்குவேன்.

பன்னி: (ங்கொய்யால இவன் என்ன லூசா... இல்ல நக்கல் பண்றானா?) யோவ் ரசிகன்னு சொன்னீங்க சரி, ஆனா இதெல்லாம் ரொம்ப ஓவரு...

சங்கர்: ஓவர்தான் இருந்தாலும் உண்மைய சொல்லித்தானே ஆகனும்...... என்னோட லவ்வரும் உங்க ரசிகைதாங்க, அவ சொல்லித்தான் நானும் உங்க ரசிகர் ஆனேன். இல்லைன்னா என்னைய அவ லவ் பண்ணி இருக்கவே மாட்டா...

பன்னி: (டேய்.. டேய்ய்...  இன்னிக்கு நாந்தானாடா சிக்குனேன்....... ) தம்பி தண்ணியடிச்சிருக்கீங்களா? நாம வேணா அப்புறமா சாட் பண்ணுவோமே?

சங்கர்: இல்லீங்க, நான் தெளிவாத்தான் இருக்கேன், நீங்க தான் நம்ப மாட்டேங்கிறீங்க. இப்ப நான் உங்க கூட சாட் பண்றதுக்குக் கூட அவதான் காரணம்.

பன்னி: எப்படி?

சங்கர்: போனவாரம் அவ கிட்ட ஒரே ஒரு கிஸ் கேட்டேங்க, ஆனா அவ உங்க கிட்ட சாட் பண்ணதுக்கு ஆதாரம் கொடுத்தாத்தான் கொடுப்பேன்னு சொல்லிட்டா.. அதான் உங்களை தேடி கண்டுபுடிச்சி சாட்டுக்கு வந்தேன்

பன்னி: (வெளங்கிரும்....) தம்பி இதெல்லாம் நல்லதுக்கில்ல, வேணாம் நீங்க என் ப்ளாக் படிக்கலைன்னாலும் பரவால்ல, இந்த மாதிரியெல்லாம் பேச வேணாம் சொல்லிட்டேன்

சங்கர்: சரி அத விடுங்க, நீங்க ஏன் உங்களை பத்தியே எழுதிட்டு இருக்கீங்க?

பன்னி: ஏம்பா நீ என் ப்ளாக் படிச்சிருக்கியா, இல்ல குத்துமதிப்பா பேசிட்டு இருக்கியா? இப்போ கொஞ்சநாளா பவர்ஸ்டார்னு ஒருத்தரை வெச்சித்தான் கடைய நடத்திட்டு இருக்கேன்..  தெரியும்ல?

சங்கர்: ஓ அப்படியா.....  படிச்ச மாதிரியே ஞாபகம் இல்லியே... நீங்க சிரிப்பு போலீஸ் ரமேஷ்தானே?

பன்னி: தக்காளி அப்படிப் போடு அருவாள.......... நீ கோக்குமாக்கா பேசும் போதே எனக்கு தெரியும்யா இந்தா மாதிரி ஏதாவது இருக்கும்னு........ ங்கொய்யால இது என்ன அந்தக் காலத்து லேண்ட்லைன் போனா யார்னு தெரியாம கால் பண்றதுக்கு? சாட்ல என்பேர் தான் வந்திட்டு இருக்குல்ல, அதுகூட தெரியாமையா இவ்ளோ நேரம் சாட் பண்ணீங்க?

சங்கர்:  சாரி சார் சின்னத் தப்பு நடந்து போச்சு. 

பன்னி: என்னடா சாரி.... பரதேசி பன்னாட... காலைலேயே மூட் அவுட் பண்ணிட்டியேடா ராஸ்கல்.... இனி ஒரு ஆஃப் அடிச்சாத்தாண்டா தெளியும்... ஆமா.. டேய்ய்.... நீ அந்த சங்கர்தானே? ங்கொக்காமக்கா..... உனக்கேன்டா இந்த வேல?

சங்கர்: அது வந்து சார், அவசரத்துல கவனிக்காம இப்படி பண்ணிட்டேன்

பன்னி: தம்பி நீ யாருன்னு எனக்கு நல்லா தெரிஞ்சு போச்சு..... ஒழுங்கா உண்மைய சொல்லிரு.... இல்லேன்னா ஏகப்பட்ட கெட்டவிளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும், நான் ஒரு பிரபல பதிவர் தெரியும்ல?

சங்கர்: அண்ணே மன்னிச்சிருங்கண்ணே, சிரிப்பு போலீஸ்தாண்ணே இப்படி பண்ண சொன்னாரு......... அஞ்சும் பத்துமா தர்ரேன், ஒவ்வொரு பிரபல பதிவரா சாட் பண்ணு, ஆஹா ஓஹோன்னு சொல்லு, கடைசில நீங்க சிரிப்பு போலீஸ் ரமேஷ்தானேன்னு கேட்டுட்டு வந்திருன்னாரு.....

பன்னி: ம்ம்.... அப்படி வாடி.......... இதான் மேட்டரா... சரி நீ போ... இத நான் டீல் பண்ணிக்கிறேன்.......

அய்யோ ராமா என்ன ஏன் இந்தமாதிரி கழிசடைங்க கூடலாம் கூட்டு சேக்குற....... நல்லா பாத்துக்குங்க மகாஜனங்களே....  இந்தப் பாவத்துக்குலாம் நான் ஆளாகவே மாட்டேன்...  

அய்யய்யோ..... நான் பிரபல பதிவர் இல்லீங்கோ...  நான் பிரபல பதிவர் இல்லீங்கோ...  நான் பிரபல பதிவர் இல்லீங்கோ...  ஆள விடுங்கடா சாமி.....!

நன்றி: கூகிள் இமேஜஸ்

Monday, January 2, 2012

பிரபல பதிவர்களின் பயங்கர டேட்டா


ம்ம்... இது யாரா இருக்கும்?

பெயர்                     : பதிவர்

புனைப்பெயர்             : பிரபல பதிவர்

தொழில்                  : பதிவு எழுதுதல்

உபதொழில்               : தனக்கு ஓட்டு, கமெண்ட் போட்டவர்களுக்கு திருப்பி மொய் செய்தல்

தலைவர்                    : தலை இருக்கறவன்லாம் தலைவர்தான்...

துணைத்தலைவர்           : வாக்களிப்பவர்கள் அனைவரும்

பொழுதுபோக்கு             : புது பதிவர்களைத் தேடி ஃபாலோயராக சேர்ந்து தனக்கு ஃபாலோயர்கள் சேர்த்தல்

துணைப்பொழுதுபோக்கு    : உள்குத்து பதிவுகள் போடுதல்

மேலும் பொழுதுபோக்கு    : வில்லங்கமான தலைப்புகளை தேடிப்பிடித்தல்

வயது                        : இன்னும் சைட்டடிக்கும் வயசுதான்

பலம்                        : நண்பர்கள்

பலவீனம்                 : நண்பர்கள்

சமீபத்திய சாதனை         : பதிவர் சந்திப்புகள்

நீண்டகால சாதனை        : ஒருவழியாக காப்பி பேஸ்ட்டுகளை குறைத்தது

சமீபத்திய எரிச்சல்          : சீரியஸ் பதிவர்களின் புலம்பல்கள்

நீண்டகால எரிச்சல்         : ஹிட்ஸ் ஒரு அளவுக்கு மேல் அதிகரிக்காதது

நண்பர்கள்                   : ரெகுலர் வாக்காளர்கள், கமெண்ட்டாளர்கள்

எதிரிகள்                     : அட்வைஸ் பண்ணும் அனைவரும்

ஆசை                        : எப்போதும் குறையவே குறையாத ஹிட்ஸ்

நிராசை                      : வட்டத்தை விட்டு வெளியே செல்ல முடியாதது

நம்பிக்கை                   : பிரபல பிரபல பதிவர்

பயம்                         : பதிவுலகிற்கு செலவிடும் நேரம் தாறுமாறாக அதிகரித்து வருவது

லட்சியம்                    : அப்படின்னா?

இதுவரை மறந்தது         : சீரியஸ் வாசிப்புகள்

இனி மறக்க வேண்டியது   : ஹிட்ஸ், ஓட்டு….!

விரும்புவது                 : மொய் செய்யாமலே ஓட்டு, கமெண்ட்டு பெற...

விரும்பாதது                 : அதிக ஹிட்ஸ் கிடைக்கும் நேரம் தவறி பதிவு போடுவதை...

ஆதங்கம்                    : ஞாயிற்றுக்கிழைமை பதிவுலகிலும் ஹிட்ஸ் குறைவாக இருப்பது...

கலங்கித் தவிப்பது          : தனிப்பட்ட நேரம் முழுக்க பதிவுலகிலேயே போவதை நினைத்து...


மகா ஜனங்களே நல்லா பார்த்துக்குங்க... இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல....

அறிவிப்பு: டெம்ப்ளேட் கமெண்ட்டுகள் வரவேற்கப்படுகின்றன. கவலை வேண்டாம், எப்படியும் திருப்பி மொய் செய்யப்படும்....!

பதிவை படிக்க நேரம் இல்லாமல் (?) வெறும் கமெண்ட் மட்டும் போடுபவர்கள் வசதிக்காக சில டெம்ப்ளேட் கமெண்ட்டுகள் தரப்பட்டுள்ளது. அப்படியே காப்பி பேஸ்ட் செய்து கொள்ளலாம்.

 • கலக்கல்
 • சூப்பர் 
 • அருமை
 • நல்ல பகிர்வு
 • ரைட்டு
 • :)
 • பதிவு அருமை
 • ஆஹா சூப்பர்
 • வாழ்த்துகள்
 • அருமை நண்பா
 • எப்படி சார் இப்படி....
 • கலக்குறீங்க தல...
 • ஹா..ஹா.....!

நன்றி கூகிள் இமேஜஸ், மற்றும் பிரபல பதிவர்கள்!