இது நியாயமா?
நம்ம சின்ன டாகுடரோட அடுத்த படமான வேலாயுதம் பரபரப்பா தயாராகிட்டு இருக்கும் நிலையில் ஒருநாள் நம்ம கவுண்டர் பார்ல உக்காந்து அடிச்சிட்டு இருக்கும் போது அங்கே எசகுபிசகா சின்ன டாகுடரை மீட் பண்ண வேண்டியதா போச்சு. கவுண்டரு பொங்கலுக்கே வெடி வெடிப்பாரு, தீவாளின்னா சும்மா விடுவாரா?
டே வீங்குன வாயா... இன்னிக்கு எப்படியும் அவனை ரெண்டுல ஒண்ணு பாத்துடுறேண்டா....
படத்த ஓட்டுறதுக்கு உன்னத்தாம்மா நம்பி இருக்கேன், கைவிட்ர மாட்டியே?
நைனா இவங்க எல்லாத்துக்கும் ஓட்டு இருக்காம், நல்லா செக் பண்ணிட்டேன்...
குளுகுளு பார், இரவு நேரம் ஒன்பதரை:
கவுண்டர்: அடடடா..... இந்த தனியா உக்காந்து தண்ணிய்டிக்கிற சொகம் இருக்கே..... என்ன கொடுத்தாலும் கெடைக்காதுப்பா..... என்னமா ஏறுதுய்யா....
டாகுடர்: ங்ணா வணக்கம்ணா....
கவுண்டர்: டேய்ய்.. யார்ராவன்... இங்க வந்து.... ஓ நீய்யா? வணக்கம் சொல்ற இடமாடா இது?
டாகுடர்: சும்மா ஒரு மரியாதைக்குங்ணா....
கவுண்டர்: அது என்ன சும்மா மரியாத.... சொமந்துகிட்டு மரியாத.....! சரி சரி வந்தது வந்தே, உக்காரு... சேந்தே அடிப்போம்
டாகுடர்: இல்லீங்ணா.. அது வந்து....
கவுண்டர்: ஆமா நீங்கள்லாம் எங்க கூட அடிக்க மாட்டீங்கள்ல?
டாகுடர்: அப்படிலாம் இல்லீங்ணா......
கவுண்டர்: அப்ப ஒழுங்கா அப்படி உக்காந்து அத எடுத்து அடி......
(கொஞ்ச நேரம் அமைதியா ரெண்டு பேரும் அடிக்கிறாங்க.....)
கவுண்டர்: ம்ம்.... அப்புறம் தம்பி அடுத்த படம் எப்படி வந்துட்டு இருக்கு?
டாகுடர்: வேலாயுதத்த பத்தி கேட்குறீங்களாங்ணா...? சூப்பரா போயிட்ருக்குங்ணா....
கவுண்டர்: என்ன.. ஷூட்டிங்லாம் சூப்பராத்தான் போகும், படம்தான் படுத்துக்கும்.... அதெல்லாம் இருக்கட்டும், கதை என்ன? (அய்யய்யோ.... இவன் படத்துல போயி கதைய பத்தி கேட்டுட்டேனே? இன்னிக்கு என்னாகப்போகுதோ?)
இந்த தடவ அந்த மாதிரி எஸ்.எம்.எஸ்லாம் வராது சார், தைரியமா இருங்க...!
டாகுடர்: அப்படி கேளுங்ணா, இந்தப் படத்துல மொத தடவையா இதுவரைக்கும் யாருமே எடுக்காத ஒரு கதைய வெச்சி எடுக்குறோம்ணா...
கவுண்டர்: அது என்ன யாருமே எடுக்காத கதை?... என்ன ஆப்பிரிக்கா கரடிய ஜோடியா வெச்சு எடுக்குறியா?
டாகுடர்: அட அது இல்லீங்ணா, மொதல்ல நீங்க கதைய கேட்டுப்பாருங்க, அப்படியே புல்லரிச்சி போய்டுவீங்க...
கவுண்டர்: இந்த புல்லரிக்கிறது, புளுத்து போய் அரிக்கிறதெல்லாம் இருக்கட்டும் தம்பி... நீ மொதல்ல கதைய சொல்லு...
டாகுடர்: அதாவதுங்ணா கதைப்படி ஹீரோ டீக்கடை வெச்சிட்டு, அமைதியா தங்கச்சி கூட வாழ்ந்துட்டு இருக்கான். அவளுக்கு பணக்கார பையன் ஒருத்தனோட காதல் வந்துடுது,
கவுண்டர்: டேய்ய் பெருச்சாளி மண்டையா..... இதுதான் யாருமே எடுக்காத கதையாடா? படுவா...தொலச்சிபுடுவேன் தொலச்சி ராஸ்கல்...! இத உன் படத்துலேயே நாலஞ்சு தடவ எடுத்திருக்கியேடா ....?
டாகுடர்: ங்ணா.. பொறுமையா கேளுங்ணா இன்னும் நிறைய இருக்கு, அவன் அவளை ஏமாத்திட்டு வெளிநாட்டுக்கு தப்பிச்சி போயிடுறான். இங்கதான் ஒரு பயங்கரமான சீன் வெச்சிருக்கோம், பயப்படாம கேளுங்க
கவுண்டர்: கருமாந்திரம் கருமாந்திரம்.... உன்கிட்ட போய் கத கேக்கறதுன்னு உக்காந்தாச்சு, இதெல்லாம் பாத்தா முடியுமா? சரி, இன்னொரு ரவுண்டு அடிச்சிட்டு நீ பயப்படாம சொல்லு!
டாகுடர்: ஹி..ஹி... அப்படி பொறுமையா கேளுங்ணா, இனிமேத்தானே ட்விஸ்ட்டே வெச்சிருக்கோம், அவனைத்தேடி நானும் வெளிநாட்டுக்கு போறேன், அங்க ஒரு தமிழ் பொண்ண பாத்து எனக்கு லவ் வந்துடுது, அப்பிடியே அங்க ரெண்டு டூயட் சாங்ஸ் எடுக்குறோம்.
கவுண்டர்: க்க்க்ர்ர்ர்..... க்க்க்ர்ர்ர்..... த்த்தூ............ இதுதான் உங்க ட்விஸ்ட்டா... வெளங்கிரும் அந்த படம்..... !
டாகுடர்: சரி அத விடுங்ணா... கெட்டப்ப பத்தி நீங்க கேக்கலியே...? இந்தப்படத்துல இதுவரைக்கும் எந்தப் படத்துலயுமே வராத ஒரு கெட்டப் போட்டிருக்கேன்.... பாத்தா அப்படியே அசந்துடுவீங்ணா....
கவுண்டர்: நீ மேக்கப் போடாம வந்தா போதுமே, அதுவே இதுவரைக்கும் யாருமே பாக்காத கெட்டப்பா இருக்குமே?
டாகுடர்: உங்களுக்கு ரொம்பக் குறும்புனா.....!
கவுண்டர்: சரி அந்த கெட்டப்பு கருமத்த சொல்லித்தொலை....!
டாகுடர்: மீசைய எடுத்துட்டு, கன்னத்துல ரெண்டு பக்கமும் மரு வெச்சிட்டு பயங்கரமா வர்ரேனுங்ணா... அதுல....
கவுண்டர்: %^&%$#$#$*&*&............ டேய் எவண்டா பார் மேனேஜரு.. இங்க வாடா.... இவனுக்கு குதிரைக்கு ஊத்துற ரம்மு இருந்தா கொண்டு வந்து கொடுங்கடா.... அய்ய்யோ... சொகமா முட்ட பரோட்டாவும் சிக்கன் கறியும் தின்னுக்கிட்டு இருந்தேன்... பன்னாட எல்லாத்தையும் கெடுத்துட்டானே......
டாகுடர்: ங்ணா என்னங்ணா.... இன்னும்முழுக்கதையவும் சொல்லலியே.... அதுக்குள்ள இப்படி உணர்ச்சி வசப்பட்டா எப்படி?
கவுண்டர்: டாய் பன்னாட பரதேசி படுவா..... நான் உனக்கு என்னடா பண்ணுனேன், தனியா உக்காந்து தண்ணியடிச்சிட்டு சந்தோசமா இருந்தேன் எல்லாத்தையும் கெடுத்துட்டியேடா? இனி மூணுநாளு கண்ணுமுழிச்சி உக்காந்து தண்ணியடிச்சாலும் இந்தக் கேவலமான ஃபீலிங் மாறாதேடா....
டாகுடர்: ங்ணா உங்களுக்கு இன்னிக்கு நேரம் சரியில்ல போல... அ..து ...ச்ச்சே மூடு சரியில்ல போல அதுனால..... நான் அப்பாலிக்கா வந்து கத சொல்றேனுங்ணா....
கவுண்டர்: அடேய்ய் எலிப்புழுக்க வாயா.... ஒருதடவ நாலு வரி கத கேட்டதுக்கே என்னைய இப்படி ஆக்கிட்ட, இதுல மறுக்கா வேற வந்து சொல்லுவியா? படுவா அதுக்கு உன் படத்தையே நாலுதடவ பாத்துடுவேனே.....
டாகுடர்: சரிங்ணா இன்னும் 10 நிமிசத்துல சங்கவி வந்துடும்ணா, நான் கெளம்பறேன்.....
கவுண்டர்: அடங்கொன்னியா.... இன்னும் இந்த பழக்கத்த நீ விடலியா? அய்யோ ராமா என்னை ஏன் இந்த மாதிரி கழிசடைகளோட கோர்த்து விடுற.....? சே.. என்ன எழவுடா இது..... இன்னிக்கு ஆல் ப்ரோகிராம் கேன்சல்......!
அய்யா சாமிகளா இந்தாளு பேச்ச கேட்டுக்கிட்டு படத்துக்கு மட்டும் வராம இருந்திடாதீங்கய்யா.......
படங்களுக்கு நன்றி கூகிள் இமேஜஸ்!
!