தூக்கம் தொலைந்த தனிமைகள்…
தனிமையில் நீளும் இரவுகள்…
இரவுகள் சொல்லாத கனவுகள்…
கனவுகள் மறக்காத காதல்...
காதலை மறக்கப் பயணங்கள்…
பயணங்கள் என்றும் முடிவதில்லை…
தூங்காத விழிகள்
சொல்லாத வார்த்தைகளை
மௌனத்தின் ஒலிகளில்
கேட்டுக் கேட்டு
நீங்காத நினைவுகளால்
ஏங்கித் தவிக்கிறது மனது….
தினமும் கேட்கும்
அவளுக்குப்
பிடித்த பாடலில்
இன்று ஒலித்தது
ஒரு விசும்பல்…
இன்று அவள்
பிறந்த நாள்…
புகைப்பட உதவிக்கு நன்றி கூகிள்
!

