வரவர வலைப்பதிவுகள் படிக்கறது, கமென்ட் போடுறது எல்லாம் ரொம்பக் கஷ்டமாகிக்கிட்டே போகுதுங்க. ஆமாங்க, ஆப்பீசுல ஆணியெல்லாம் வேற புடுங்க சொல்றாங்க. ஏதாவது ப்ளாக்கத் தொறந்து வெச்ச உடனே பாஸ் கால் பண்ணிடுறாரு. எத்தன தடவ விண்டோவ குளோஸ் பண்ணி, தொறந்து, குளோஸ் பண்ணி, தொறந்து படிக்கறது? இப்படி படிச்சா கமென்ட் எப்படி வக்கனையா போடுறது? இதுல வேற டெம்ப்லேட் கமென்ட் பொடுறதில்லேன்னு காரமடை ஜோசியர்கிட்ட சத்தியம் பண்ணிக்கொடுத்தாச்சு, இப்போ என்ன பண்றது சார்?
எங்க ஆப்பீசு மக்களை நெனசா, எங்க பாஸே தேவலைன்னு தோனும், அந்தளவுக்கு இருப்பானுங்க. அவனுங்களுக்கு இங்கிதமே சுத்தமா கெடையாது சார். நம்ம எப்பனாச்சும் ஒரு 18+ பதிவ ஓப்பன் பண்ணி வெச்சு ஏதாவது கில்மா போட்டோவ பாத்துக்கிட்டு இருப்போம். இந்த நாதாரிங்களுக்கு எப்படித்தான் மூக்கு வேர்க்கும்னே தெரியாது, உடனே ஏதாவது ஒரு பேப்பரத் தூக்கிட்டு ஓடியாந்துடுவானுக. அதுவும் நம்ம மானிட்டர பார்க்குற ஆங்கிள்ல தான் கரெக்டா வந்து நிப்பானுங்க. நாமலும் அவசரம் அவசரமா எல்லா விண்டோ கருமாந்திரத்தையும் குளோஸ் பண்ணனும். எப்பவாவது சாட் பண்ணோம்னா, கரெக்டா இவனுங்களுக்கு மட்டும் டவுட் வரும். ஆப்பீசுல இன்னிக்கு அந்தளவுக்கு வொர்க் எதுவுமே இல்லியே, அப்படி என்னத்தப் போட்டு மாங்கு மாங்குன்னு டைப் பண்றீங்கன்னு குடை குடைன்னு குடைஞ்சு எடுத்துடுவானுக. பதில் சொல்லி மாளாது.
நீங்களே சொல்லுங்க சார், எத்தன தடவ இப்பிடி கண்ணா மூச்சி வெளையாடுறது? எத்தன நாளு பம்மி பம்மி, ப்ளாக்கு படிக்கறது, கமென்ட் போடுறது? இதுக்கு என்ன தான் வழி?
இப்படி யோசிச்சுக்கிட்டு இருக்கும் போதுதான் என் பழைய ஃப்ரண்டு ஒருத்தன் போன் பண்ணான். அப்போ பேச்சுவாக்குல நம்ம பிரச்சனையச் சொன்னேன். அவனும் ஒரு சூப்பர் வழி சொன்னான். அவன் சொன்னபடி, அந்த பொருள்களை வாங்கி கம்ப்யூட்டர்ல ஃபிக்ஸ் பண்ணிட்டேங்க. இப்போ ஆப்பீஸ்ல நிம்மதியா ப்ளாக் படிக்கிறேன். கமென்ட் போடுறேன். ஏன் 18+ பதிவுகள் கூட தைரியமா ஆப்பீஸ்லேயே படிக்கிறேன். உங்களுக்கும் அந்த கம்ப்யூட்டர் அக்சஸ்சரீஸ்கள் எல்லாம் தர்ரேங்க. உங்க ஆப்பீசு கம்ப்யூட்டல ஃபிக்ஸ் பண்ணிட்டீங்கன்னா, இனி நீங்களும் நிம்மதியா ப்ளாக்ல உலா வரலாம்.
சரி, எல்லாத்தையும் கீழே கொடுத்திருக்கேன் நீங்களே பார்த்து உங்களுக்குத் தேவையான அக்சஸ்சரிச செலக்ட் பண்ணிக்குங்க சார்.... பணம்..........??? அட என்ன சார், நாம என்ன அப்பிடியா பழகியிருக்கோம்? சும்மா வெச்சுக்குங்க சார்.... !
இனி யாரும் உங்க மானிட்டர எட்டிப் பார்க்க முடியாது, நீங்க என்ன டைப் பண்றீங்கன்னும் தெரியாது. டைப் பண்ற சவுண்டு கூட வெளியே கேட்காது (ஜாலியா சாட் பண்ணலாம்!)
எங்கள் வாடிக்கையாளர்களின் கருத்து:
மங்குனி அமைச்சர்: ஒருவாரமாத்தான் இந்த டெக்னிக்க என் ஆபீஸ் சிஸ்டத்துல யூஸ் பண்றேன். இப்பல்லாம் ரொம்ப சுதந்திரமா உணர்கிறேன். எல்லா ப்ளாக்கையும் இஷ்டத்துக்க்ப் படிக்கிறேன், கமென்ட் அடிக்கிறேன். என் பாஸ் கூட பாத்துட்டு எனக்கும் ஒண்ணு வாங்கிக்கொடுங்கன்னு கேட்டிருக்கார்.
லேப்டாப் மாடல், இனி நீங்க என்ன பண்றீங்கன்னு எந்தக் கொம்பனாலும் கண்டுபுடிக்க முடியாது. பெஸ்ட் ஃபார் பர்சனல் யூஸ்...!
கஸ்டமர் ஃபீட்பேக்:
டெர்ரர் பாண்டியன்: எனக்கு இந்த டெக்னிக் ரொம்ப யூஸ் ஆகுது சார். பதிவு ஒன்னும் எழுதுறது இல்லேன்னாலும், டெய்லி நிறைய படிக்கிறேன் சார், சாரி, பார்க்கிறேன் சார். இப்பல்லாம் ஆபீஸ்ல யாரும் என் பக்கத்துல கூட வர்ரதில்ல சார். நேத்துக்கூட தேவலீலை படம் இதுலதான் பார்த்தேன், சூப்பர்.
கீபோர்டுக்கு மட்டும்,
ப்ளாக் அடிக்கடி ஹேக் செய்யப்படும் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஏற்றது. ஏனென்றால் நீங்கள் டைப் செய்யும் யூசர் நேம், பாஸ்வெர்ட் யாருக்கும் தெரியாது, ஏன் உங்களுக்கே தெரியாது.
கஸ்டமர் ஃபீட்பேக்:
சிரிப்பு போலீஸ்: ரொம்ப நாள் கழிச்சு இப்போதான் சார் லவ் பண்ண ஆரம்பிச்சிருக்கேன். இது அதுக்கு ரொம்ப யூஸ் ஆகுது சார். சாட்டிங் பண்றதுக்கு ரொம்ப நல்லாருக்கு சார்.
பி.கு: போட்டோக்கள் ஃபார்வர்டட் மெயிலில் வந்தவை
!