சிரிப்பு போலீஸ்: டேய் எந்திரிடா.. டேய் நாதாரி..... பன்னிக்குட்டி எந்திரிடா டேய்.... எந்திரி....
பன்னிக்குட்டி: டேய்ய்..... டால்டா டின்னு மண்டையா கொஞ்சம் நேரம் கூட நிம்மதியா தூங்க விட மாட்டியாடா.. போடா போயி நேத்து எவனோ ஒரு ஸ்பானர் தலையன் உனக்கு ஓசி்ல பன்னு வாங்கி தந்தானே, அதைப் பத்தி ஒரு பதிவைப் போட்டு, எலக்கியத்த புழிஞ்சு சேவை பண்ணு...!இப்போ என்னை தூங்க விடு..
சிரிப்பு போலீஸ்: ஏன்டா பரதேசி ஆபீஸ்ல எப்பவும் தூங்கிட்டுத்தானே இருக்கே.. அப்புறம் என்னடா இங்கேயும் தூக்கம்...?
பன்னிக்குட்டி: அட போடா பல்பு வாயா.... ஆபீஸ்ல தூங்கினா பக்கத்து கேபின்ல இருக்கிற கொத்தவரங்கா பிலிப்பைனி பிகரும், அந்த டயர் வாயன் டேமேஜரும் தான் கனவுல வரானுங்க.. கனவுல கூட அந்த டயர்வாயன் திட்டிக்கிட்டே தான்டா இருக்கான்.... பிகரு பக்கத்துல போகவிட மாட்டேங்கிறான் படுவா. ஒரு நாளு அவன் வாயில நம்ம கரடிய விட்டு கடிக்க வைக்கப் போறேன் பாரு....!
சிரிப்பு போலீஸ்: பேச்ச குறைடா பொறம்போக்கு.. மரியாதையா எந்திரிச்சு என் கூட வந்திடு இல்லன்னா நான் எழுதி வச்சிருக்கிற கவிதைய உனக்கு படிச்சு காட்டிருவேன்..
பன்னிக்குட்டி: நீ அதுக்கு பேசாம நான் தூங்கும் போது தலைல கல்லைத் தூக்கிப் போட்டுடலாம்... இப்ப என்னடா உன்கூட கடைக்கு வரணும் அவ்வளவு தானே...?
சிரிப்பு போலீஸ்: அதைத்தான்டா முதல்லேருந்தே சொல்லிட்டிருக்கேன் வெளக்கெண்ண...
பன்னிக்குட்டி: என் செல்லம் இல்ல, அதோ மூலையில கிழிஞ்ச அப்பளம் மாதிரி சுருண்டு படுத்திருக்கானே டெரர் பாண்டி, அவனைக் கூட்டிட்டு போமா ராஜா... !
சிரிப்பு போலீஸ்: அவனை இப்போ தொந்தரவு பண்ணாதே மச்சி... நேத்தைக்கு ராத்திரி வெறும்பயகிட்டே வாயக் கொடுத்து செமத்தியா விடிய விடிய அடி வாங்கிட்டு வந்து படுத்திருக்கான்..
பன்னிக்குட்டி: த்தூ....இந்தப் பன்னாட பரதேசிக்கு இதே வேலையா போச்சு.. எப்ப பாரு எவன்கிட்டேயாவது வம்பிழுக்க வேண்டியது.. அப்புறம் அடி வாங்கிட்டு இங்கே வந்து படுத்துக்க வேண்டியது..... இருக்கட்டும், படுவா இவனுக்கு ஒரு நா இருக்குடா...! ஆமா அது என்னடா அவன் வாய் முன்னாடி கக்கூசுல இருந்த பக்கெட்டைத் தூக்கிட்டு வந்து வெச்சிருக்கே. .?
சிரிப்பு போலீஸ்: அதுவா நேத்தைக்கு கொஞ்சம் அடி ஓவரா வாங்கியிருப்பான் போல.. இது வரைக்கும் நானும் எவ்வளவோ இடத்துல அடி வாங்கியிருக்கேன், ஆனா இந்த மாதிரி ஆனதில்லப்பா.. அந்த வெறும்பய டெரரை அடிச்ச அடில மூக்கிலேருந்தும் வாயிலேருந்தும் ரத்தம் நிக்காம கொட்டிக்கிட்டு இருக்கு... அதான் பக்கெட் வச்சிருக்கேன்... ரொம்புனதும் பிளட் பேங்குக்கு போன் பண்ணனும். அது இருக்கட்டும்... மொதல்ல நீ கெளம்பு.....!
பன்னிக்குட்டி: அடநாயே.... இன்னைக்கு பொழுது உன்கூடதானாடா? நீ என்னை விட்டுட்டுப் போறதா இல்ல.. ? சரி எங்கேதான்டா போகனும் அதையாவது சொல்லித்தொலை.....!
சிரிப்பு போலீஸ்: அதுவா.. ஒரு ஆசாரிய பாக்கணும்டா
பன்னிக்குட்டி: என்னடா சொல்லவே இல்ல.. ஏதாவது பொண்ணு பாத்திட்டியா.. தாலி செய்யத் தானே...? (ங்கொக்கமக்கா... இதை மட்டும் எப்படியோ கமுக்கமா முடிச்சிடுறானுங்கடா....!)
சிரிப்பு போலீஸ்: ங்கொய்யால..... காலைலயே வீணா என் வாய கிளறாதே.. நானே கடுப்பில இருக்கேன்..
பன்னிக்குட்டி: அப்போ சாயந்தரமா கிளரலாமா? படுவா.. உன் வாயி என்ன அல்வா கிண்டுற அண்டாவாடா கெளர்ரதுக்கு....? கடுப்பாகாம மேட்டரை சொல்றா எரும வாயா......!
சிரிப்பு போலீஸ்: பின்ன என்னடா, போன செவ்வாக்கிழமை நம்ம பாபு உனக்கொரு பொண்ணு பாத்திருக்கேன், நல்ல குடும்ப பொண்ணுடா பாக்கனுமின்னா சீக்கிரம் கிளம்பி லி மெரிடியன் ஹோட்டலுக்கு வாடான்னு சொன்னான்.. நானும் நல்லா குளிச்சிட்டு...
பன்னிக்குட்டி: டேய் அதென்ன பேச்சுவாக்குல குளிசிட்டுன்னு பொய் சொல்ற....?
சிரிப்பு போலீஸ்: சரி விடு. ஸ்பிரே அடிச்சிட்டு...அடிச்சு புடிச்சு போய் சேர்ந்தேன்.. பாபு கூட அந்த பொண்ணும் இருந்திச்சு. பார்க்க நல்லா அழகாத் தான் இருந்திச்சு.. ஆனா டிரஸ் தான் போட்டிருந்தாளா இல்லையான்னு கேக்குற அளவுக்கு ரொம்ப சின்னதா போட்டிருந்துச்சு, சரி மாடர்ன் பொண்ணுங்க இப்படி தான் இருப்பாங்கன்னு நினச்சு நம்பி உக்காந்தேன்.
ஒரு வார்த்தை கூட பேசலடா, கொஞ்சம் நேரம் மௌனமா இருந்தவ ஏதாவது குடிக்கலாமேன்னு சொன்னா, நானும் பேரரை கூப்பிட்டு என்ன தான் நம்ம முழு நேர குடி காரனா இருந்தாலும் இங்கே காட்டிக்க கூடாதுன்னு ரொம்ப டீசெண்டா ஒரு ஆப்பிள் ஜூஸ் சொன்னேன், உங்களுக்கு என்ன வேணுமோ நீங்களே சொல்லுங்கன்னு சொன்னதும் சட்டுன்னு ஒரு கிங் பிஷர் பீர் சொன்னா.. நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலடா மச்சான். அப்படியே பொறி கலங்கிப் போயிட்டேன்.
அந்த பாபு பன்னாட அவ பீர் சொன்னதும் என்னை பார்த்திட்டு அப்படியே நைசா எஸ் ஆகிட்டான் மச்சி. பரதேசி கையில மாட்டாமலா போவான். அது மட்டுமா, எதோ லிப்ஸ்டிக்கை எடுக்கிற மாதிரி பேக்க தொறந்து தம்ம எடுத்து பத்த வச்சா பாரு.. நம்ம சூப்பர் ஸ்டார் கூட அவ முன்னாடி நிக்க முடியாது... மறந்துட்டு நானே விசிலடிக்கப் பார்த்தேன்னா பாரேன்?
படுபாவி பாபு குடும்ப பொண்ணுன்னு சொன்னானே தவிர குடிமகள்னு சொல்லாம போயிட்டான். எது எப்படியோ நான் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவையே விட்டுட்டேன். பேசாம சாமியாரா போலாமுன்னு இருக்கேம்பா...
பன்னிக்குட்டி: அட மானங்கெட்டவனே இன்னுமாடா நீ உயிரோட இருக்கே...?இதுக்கு நீ நாண்டுகிட்டு செத்திருக்கலாம்.... ஆனாலும் உனக்கு ரொம்பப் பேராசைடா, பின்னே இங்க ஒரு பொண்ணுக்கே வழியக் காணோம், அதுக்குள்ள எப்பிடிரா கொஞ்சம் கூசாம உடனே சாமியாரா போறேன்னு சொல்ற?
சிரிப்பு போலீஸ்: சரி அத விடு.... இப்போ நீ என்கூட வரப்போறியா இல்லையா...?
பன்னிக்குட்டி: சரி வந்து தொலையுறேன்.. எந்த ஆசாரிகிட்டே போற.. எதுக்கு போறேன்னு சொல்லு...?
சிரிப்பு போலீஸ்: அது ஒன்னுமில்லடா ஏழு ஜன்னல் செய்யணும் அதுக்கு தான் ஆசாரிய பார்த்து நல்லதா செய்ய சொல்லணும்...
பன்னிக்குட்டி: ஏன்டா வீடு ஏதாவது கட்ட போறியா.. நீதான் ஏற்கனவே ரெண்டு மூணு சின்ன வீடு வெச்சிருக்கியே...?
சிரிப்பு போலீஸ்: நமக்கெதுக்குடா இனி வீடெல்லாம்.. நான் தான் சாமியாராக போறனே...?
பன்னிக்குட்டி: என்ன நக்கலா...? அப்புறம் என்ன எழவுக்குடா இந்த ஜன்னல்...? நம்ம குஷ்பக்கா மாதிரி நீயும் உன் சட்டைல ஜன்னல் வெச்சுக்கப் போறியா? ஒழுங்கு மரியாதையா சொல்லிடு இல்லன்னா மவனே, மூஞ்சில முள்ளுக் கரண்டிய வெச்சி கொத்தி விட்ருவேன்....!
சிரிப்பு போலீஸ்: பறக்காதடா பரதேசி.. சொல்றேன் சொல்றேன்... கொஞ்ச நாளாவே என்னோட கம்ப்யூட்டர் சொல்ற பேச்சு கேக்க மாட்டேங்குது... அதனாலதான் போன வாரம் ஒழுங்கா பதிவு கூட போட முடியல.. நமக்கு தான் இந்த கருமாந்திரத்த பற்றி ஒண்ணுமே தெரியாதே. அதனால மொரிசியஸ்ல இருக்கிற அருண்கிட்டே ஏதாவது உதவி கேக்கலாமுன்னு கேட்டேன் . அப்போ தான் அருண் சொன்னாரு windows 7 போட்டா எந்த பிரச்சனையும் வராது, அதுக்குள்ள வழியப் பாருன்னு.. அதாண்டா ஏழு ஜன்னல் செய்றதுக்கு ஆசாரிய பார்க்க போலாமுன்னு கிளம்புறேன்... நீ வரியா இல்லையா..? உன் ப்ளாக்குக்கும் சேர்த்தே ஜன்னல் ஆர்டர் பண்ணிடுவோம்... சீப்பா பேசி முடிச்சிடலாம்!
பன்னிக்குட்டி: $%%$%^ @#@*&* &*^% #$^&&(^ @%&*(( (*%$$#@@!@! @!%^&*^%% $#*&&$*$
சிரிப்பு போலீஸ்: இப்போ எதுக்குடா இவ்வளவு அசிங்கமா திட்டுற...? என் கூட வர விருப்பமில்லன்னா இல்லைன்னு சொல்ல வேண்டியதுதானே... ! சரி நீயும் உன் ப்ளாக்கும் எக்கேடாவது கேட்டு நாசமா போங்க. எனக்கு என் ப்ளாக் முக்கியம். நான் ஆசாரிய பார்க்க போறேன்...!
ஆசாரியைப் பார்க்கப் போன சிரிப்பு போலீஸ் இன்னும் திரும்பவில்லை. பிடித்துக் கொடுப்பவர்களுக்கு, சிரிப்பு போலீசுக்கு இன்று கிடைக்கும் ஓசி பன்னில் பாதி பிய்த்துக் கொடுக்கப்படும்!
இது நண்பர்களும் நானும் சேர்ந்து எழுதியது!
படங்களுக்கு நன்றி கூகிள் இமேஜஸ்!
!















