Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Friday, September 14, 2012

சம்பந்தமே இல்லாமல் ஒரு பதிவு...!




ஒரு ஊர்ல 4 விஞ்சாணிகள் இருந்தாங்க. அவங்க வேல மிருகங்களை பத்தி ஆராய்ச்சி பண்றது. குரங்குகளை பத்தி ஆராய்ச்சி பண்ணலாம்னு 10 குரங்குகளை புடிச்சிட்டு வந்து பெரிய கூண்டுல அடைச்சாங்க. கூண்டுக்குள்ள பெரிய வாழைத்தார தொங்க விட்டு, பக்கத்துல ஒரு ஏணியவும் வெச்சாங்க. வாழைப்பழத்த பார்த்த உடனே ஒரு குரங்கு உடனே ஏணில ஏற ஆரம்பிச்சது. ஏணில ஏறுன உடனே சுத்தி பயங்கர குளிர்ச்சியான தண்ணிய எல்லா குரங்குகள் மேலயும் பீச்சி அடிச்சாங்க. மேல ஏறுன குரங்கு தண்ணி வேகம் தாங்காம கீழே வந்துடுச்சு. அது ஏணில இருந்து இறங்கின உடனே தண்ணிய அடிக்கிறத நிப்பாட்டிட்டாங்க. 




கொஞ்ச நேரத்துல இன்னொரு குரங்கு அதே மாதிரி வாழைப்பழத்த சாப்பிடலாம்னு ஏணில ஏற தொடங்குச்சி. அது ஏணிய தொட்ட உடனே மறுபடியும் அதே மாதிரி குளிர் நீர் பீச்சுனாங்க. தாங்க முடியாம ஏறுன குரங்கும் உடனே இறங்கிடுச்சு. இப்படியே தொடர்ந்து 3 வாட்டி நடந்துச்சு. குரங்குகள் எல்லாத்துக்கும், அந்த ஏணிய டச் பண்ணா எல்லார் மேலேயும் குளிர்நீர் பீச்சியடிக்கும்னு புரிஞ்சிடுச்சு. அதுனால எல்லாம் அமைதியா உக்காந்திருச்சுங்க.



அப்போ கூண்டுக்குள்ள இருந்து ஒரு குரங்க வெளில எடுத்துட்டு, புதுசா ஒரு குரங்க உள்ள விட்டாங்க. அதுக்கு தண்ணி மேட்டர் எதுவுமே தெரியாதே. உள்ள போன உடனே வாழைப்பழத்த பார்த்துட்டு ஏணி பக்கத்துல போச்சு. அத பார்த்த உடனே மத்த குரங்குகள்லாம் ஓடிவந்து புதுக் குரங்க ஏணிய டச் பண்ண விடாம இழுத்துட்டு வந்து போட்டு அடிச்சதுங்க. புதுக்குரங்குக்கு ஒண்ணுமே புரியல. ஏணில ஏறுனா அடிப்பாங்கன்னு நெனச்சிட்டு சும்மா உக்காந்துச்சு. 



இப்ப,இன்னொரு பழைய குரங்க வெளில எடுத்துட்டு இன்னொரு புதுக்குரங்க உள்ள விட்டாங்க, அதுவும் வாழைப்பழத்த பார்த்துட்டு ஏணில ஏற முயற்சி பண்ணி மத்த குரங்குகள்கிட்ட அடிவாங்கிச்சு. ஏற்கனவே உள்ள போன புதுக்குரங்கும் அடிக்கிறதுல சேர்ந்துக்கிச்சி. உள்ள வந்த புதுக்குரங்குக்கும் எதுக்கு இப்படி போட்டு அடிக்கிறாங்கன்னு தெரில. 



இப்படியே ஒவ்வொரு குரங்கா வெளில எடுத்துட்டு ஒரு புதுக்குரங்க உள்ள விட்டாங்க. கொஞ்ச நேரத்துல எல்லா பழைய குரங்கும் வெளில வந்துடுச்சு.உள்ள புது குரங்குகள் மட்டும்தான். அப்பவும் எல்லாம் மத்த குரங்குகளை ஏணில ஏற விடாமே அடிச்சிட்டு இருந்துச்சுங்க. ஆனா அதுக எதுக்கும் வாழைப்பழத்த எடுக்க ஏணில ஏறுனா குளிர்ந்த நீர் பீச்சி அடிக்கும், அதுனாலதான் ஏறவிடாம அடிக்கிறோம்னு எதுவும் தெரியாது. முன்னாடி இருந்த குரங்குங்க, அடிச்சது, நாங்களும் அடிக்கிறோம்னு அடிச்சிட்டு இருந்துச்சுங்க. இப்படித்தாங்க உலகத்துல பல விஷயங்கள் நடக்குது......... பட் இதுக்கும் பதிவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதுங்கோ..... 




நன்றி: கூகிள் இமேஜஸ், இது கார்ப்பரேட் கம்பெனிகளில் இருக்கும் ஒர்க் கல்ச்சர் பற்றி கிண்டலடிக்கும் ஒரு பழைய கதை... அவ்வளவே!

!

Monday, January 23, 2012

தானே கமிட்டாகிய தானைத்தலைவன்...


டேய்.... ஒரு அரசு அதிகாரிகிட்ட எப்படி நடந்துக்கனும்னு தெரியாது....?

காலை 6.15. அது ஜனவரி மாதமாகையால் கொஞ்சம் சிலுசிலுவென்றிருந்தது. தெருவில் ஒன்றிரண்டு பேர் சென்று கொண்டிருந்தார்கள். பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ் ரமேஷ் அலுவலகம் செல்வதற்காக வீட்டில் இருந்து கிளம்பினார். எப்போதும் சீக்கிரமே கிளம்பிவிடுவார், ஏனென்றால் அப்போதுதான் பக்கத்து டீக்கடையில் பழைய ஊசிப்போன வடை போண்டாக்களை தூக்கி வீசுவார்கள், அதை யாருக்கும் தெரியாமல் நைசாக எடுத்துக் கொள்வது ரமேசின் வழக்கம். வீட்டிலிருந்து அரை கிலோமீட்டர் நடந்தால் தான் பஸ் ஸ்டாப். தெருமுனையில் இருக்கும் அண்ணாச்சி கடை இன்னும் திறந்திருக்கவில்லை.  அண்ணாச்சி 8 மணிக்குத்தான் கடை திறப்பார். அண்ணாச்சி கடைமுன்பாகவும் ஏதாவது கிடந்தால் யாரும் பார்க்காதவாறு எடுத்துக் கொள்வார்.

ஆனால் இன்று கடைமுன்பாக யாரோ ஒருத்தர் நின்று கொண்டிருந்தார். புதிதாக இருந்தார். ஆள் பார்ப்பதற்கு ஷங்கர் படங்களில் வரும் அரசு உயர் அதிகாரி போல் இருந்தார். தலையில் ஒரு உல்லன் தொப்பி. அலுவலகத்திற்குச் செல்ல தயாராக இருப்பது போல் நின்று கொண்டிருந்தார். புதிதாக இந்த ஏரியாவிற்கு குடிவந்திருக்கலாம். கம்பெனி வண்டிக்காகவோ நண்பருக்காகவோ காத்துக் கொண்டிருக்கிறார் போல. இப்படி எண்ணிக் கொண்டவாரே பஸ்ஸ்டாப்பை அடைந்தார். 

மறுநாள் காலையும் அவர் அதே இடத்தில் நின்றிருந்தார். இப்போது கொஞ்சம் பழகிய(?) முகமாகி விட்டதால் மெலிதாக புன்னகைக்க முயற்சித்தார் சிரிப்பு போலீஸ், ஆனால் அவர் பதில் ரியாக்சன் கொடுக்காமல் ரொம்ப சீரியசான பாவனையுடன் இருந்ததால், முகத்தில் வந்த சினேகமான புன்னகையை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு எதுவும் நடக்காதது போல் அசடு வழிந்தவாறு தன்பாட்டுக்குச் செல்லத் தொடங்கினார். என்ன மனிதர் இவர், சும்மா பதிலுக்கு ஒரு சின்ன புன்னகை செய்தால் என்ன? காசா, பணமா? இப்படியும் இருக்கிறார்களே என்று திட்டிக் கொண்டே அலுவலகம் சென்றடைந்தார். ஒரு புன்னகை வீணாகிவிட்டதே என்ற வருத்தம் அவருக்கு!

அலுவலகத்தில் ரமேசால் அன்று வழக்கம்போல் நிம்மதியாக தூங்க முடியவில்லை. எவ்வளவோ முயற்சித்தும் அந்த புதுமனிதரைப் பற்றி  சிந்தனை அவ்வப்போது வந்து போனது. யாராக இருக்கும், பார்க்க வேறு பெரிய அதிகாரி போல் இருக்கிறார், உண்மையிலேயே உயர் அதிகாரியாக இருப்பாரோ? என்று பலவாறாக மண்டையைக் குடைந்து கொண்டு யோசித்துக் கொண்டே தாமதமாக சாப்பிட்டதில் கேண்டீனில் வடை காலியானதுதான் மிச்சம். அதையும் நினைத்து இன்னும் அதிகமாக புலம்பியவாறே அன்றைய பொழுதைக் கழித்தார்.

மறுநாள் காலை எழுந்ததில் இருந்தே மறுபடியும் அவர் பற்றிய எண்ணங்கள் சிரிப்பு போலீஸ் மனதில் ஓடத் தொடங்கியது. போன் பேச முடியவில்லை,  எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியவில்லை, ஆசையாக இட்டிலியும் சட்டினியும் சாப்பிட முடியவில்லை... என்று எங்கு சென்றாலும் அதே நெனப்பு... ரொம்பவே வெறுத்துப் போனார் போலீஸ். கொஞ்சம் அவமானப்படுத்தினாலும் பரவாயில்லை இன்று எப்படியும் அவரிடம் பேசி இதை ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று முடிவு செய்தார். 

அரசு உயர் அதிகாரி மாதிரி இருக்கிறார், நம் ஏரியாவில் வேறு வசிக்கிறார், பழகி வைத்துக் கொண்டால் பின்னர் எப்போதாவது ஓசி சாப்பாடு கிடைக்கக்கூடும் என்று அவரது உள்மனது பக்காவாக கணக்குப் போட்டது. இன்று நம் பேச்சுத் திறமை முழுதையும் காட்டி அவரை நம்வழிக்கு கொண்டு வந்துவிட வேண்டியதுதான் என்று எண்ணிக் கொண்டு 10 நிமிடம் முன்னதாகவே கிளம்பினார். 

அதே அண்ணாச்சி கடை முன்பாக அந்த அதிகாரி நின்று கொண்டிருந்தார். ரமேஷ் சட்டென்று ஒரு ரெடிமேட் புன்னகையை வரவழைத்துக் கொண்டு அவர் அருகில் சென்று சார் வணக்கம் என்றார். பதிலுக்கு அவர் கையை நீட்டினார். கைகுலுக்கலாம் என்று ரமேசும் கையை நீட்டினார், பார்த்தால் அவர் கையில் கத்தி இருந்தது..  ரமேஷ் சற்று குழம்பியவராக அதிர்ந்து போய் நிமிர்ந்து பார்த்தார்... உடனே அதிகாரி டேய்.. பணத்த எட்ரா..... என்றார்.


Friday, November 19, 2010

நமீதாவின் வீடு!


தீடிர்னு கண்ணு முழிச்சிப் பாக்குறேன், ஏதோ வித்தியாசமா தெரிஞ்சது, உடம்பெல்லாம், வெயிட்டே இல்லாம லேசா இருக்கற மாதிரி, குனிஞ்சு பாத்தா, மெதந்துக்கிட்டு இருக்கேன். அய்யய்யோ.. டேய்.. என்னாங்கடா இது... என் கால வேற காணோம், திரும்பிப் பாத்தா நான் இல்ல இல்ல என் உடம்பு கீழே கெடக்குது, அப்போ நான் செத்துட்டேனா, அதுக்குள்ளேயா? அந்தப் பக்கமாப் பாத்தா, என் காதலியும் அவ சித்தப்பனும் போறாங்க, ஆங்.....இப்போ எல்லாம் ஞாபகம் வந்துருச்சு, என் காதலியே என்னை ஏமாத்தி இங்கே வரவெச்சி என்னை கொல்ல வெச்சிருக்காய்யா....!

ஆமாய்யா ஆமா நான் சுப்பிரமணியபுரத்துக்காரன்தான்யா...... இப்போ அதுவா முக்கியம்.....அவனுகள என்ன பண்ணலாம், சொல்லுங்கயா...  சும்மா விடாலாமா? விடக்கூடாதுல்ல? இப்போ என்ன பண்றேன் பாரு....  ங்கொய்யா, இதோ வந்துட்டேண்டா.....  உன் கழுத்த நெறிச்சி....என்னது இது அவன் கழுத்தப் புடிக்கவே முடியல, ஆவியாயிட்டா ஒண்ணும் பண்ண முடியாதா? அப்போ ஜகன்மோகினி படத்துல வந்தது எல்லாம் உண்மையில்லியா? என்ன கொடும சார் இது?

இது என்ன புதுசா ரெண்டு பனிமூட்டம் என்னை நோக்கி வருதுங்க, கையவேற  புடிக்கிறாங்க.

யேய்.... ய்ய்...  யாருப்பா நீங்க, என்ன எங்க தூக்குறிங்க,

அற்ப மானிடனே... நீ இறந்து விட்டாய். நாங்கள் உன்னைக் கடவுளிடம் அழைத்துச் செல்கிறோம்.

என்னை விடுங்க, நான் இவனுகள பழிவாங்கனும்..

அதை கடவுளிடம் வந்து சொல்!

அங்க ஏன் என்னை கூட்டிட்டுப் போறீங்க? கடவுள் என்னை என்ன  செய்வார்... ?

கடவுள் உன் செயல்களுக்கேற்ப உன்னை சொர்க்கத்திற்கோ இல்லை நரகத்திற்கோ அனுப்புவார். அவ்வளவுதான்.. அதுவரை உன் ஊத்தை வாயை முடிக்கொண்டு வா!

அவங்க படுவேகமா என்னைத் தூக்கிகொண்டு பறந்தாங்க. கொஞ்ச நேரத்துல எல்லாம் இருட்டாயிடுச்சு... வேகம்.... வேகம்...படுவேகம்...... தூரத்துல தெரிஞ்ச ஒரு ஒளிப்புள்ளி நோக்கிப் போனோம். அது பக்கத்துல வந்த உடனே, இந்தப் பனிமூட்டைகள் என்னை அது முன்னாடி நிறுத்துனானுக!

வா மனிதா....

நீங்கதான் கடவுளா......? என்னை சீக்கிரமா பூமிக்கு திருப்பி அனுப்புங்க கடவுள் சார்.... ப்ளீஸ்.....  எனக்கு ஒரு ரொம்ப முக்கியமான வேலை இருக்கு!

இல்லை அற்பனே, நீ இறந்துவிட்டாய்...  பூமியில் நீ செய்த செயல்களுக்கு ஏற்ப நீ சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ போகலாம், இனிமேல் பூமிக்கெல்லாம்   போக முடியாது...

அப்போ எனக்கு சொர்க்கமா நரகமா? அதையாவது சொல்லுங்க!

ம்ம்... அப்படிக்கேள்...  உனக்கு நரகம்தான், உனக்காக ஒரு கொதிக்கும்  எண்ணைக்  கொப்பறை தயாராகிக் கொண்டுள்ளது. அது தயாரானதும்  அங்கே அழைத்துச் செல்லப்படுவாய்!

கடவுளே... கடவுளே.... இந்த மனிதனைத் தவறாக அழைத்துவந்து விட்டோம், இவனுக்கு இன்னும் வாழ்நாள் மீதி இருக்கிறது...

அடேய்... பனிமூட்டைகளா.....  என்ன சொல்கிறீர்கள்? தவறு எப்படி நிகழ்ந்தது? சரி.. சரி.... இப்போது இந்த அற்பன் முன்பு உங்கள் பஞ்சாயத்தைப் பேச வேண்டாம்... அதைப் பின்பு உங்கள் அப்ரைசலில் பார்த்துக் கொள்வோம்!

(ஆஹா... கரெக்டா சிக்கிட்டீங்கடி மாப்பு...!) கடவுளே, பார்த்தீங்களா? நீங்களே தப்புப் பண்ணியிருக்கீங்க, அதுக்காகவாவது இப்போ என்னை பூமிக்கு அனுப்பக் கூடாதா? நான் போயி ஜஸ்ட் என்னக் கொன்னவனுங்க டோட்டல் பேமிலியவும் போட்டுத்தள்ளிட்டு உடனே  திரும்பி  வந்திடுறேனே....!

மனிதா.. முதலில் இந்தப் பழிவாங்கும் உணர்ச்சியைக் கைவிடு!

ஆமா..இப்போ என்னை நரகத்துல போடப் போறேன்னு சொல்றிங்களே அது மட்டும் என்னவாம்?

ஸ்ஸ்ஸ்ஸப்ப்பா.............  முடியல....  சரி...   இப்போது என்னதான் வேண்டும் உனக்கு மனிதா?

கிழிஞ்சது...... இவ்வளவு நேரமா சொன்னது வெளங்கலிய்யா? நான் திரும்ப பூமிக்குப் போகனும்யா....!

சரி நீ பூமிக்குப் போகலாம்... ஆனால் மனிதனாக அல்ல, ஆவியாக...

அப்படின்னா.......?

நீ எல்லோரையும் பார்க்கலாம், உன்னை யாரும் பார்க்கமுடியாது. உன்னை யாரும் உணரமுடியாது, நீ யாரையும் தொடவும் முடியாது

வெளங்கிரும்.... (இந்தக் கருமத்துக்கு நான் எண்ணைக் கொப்பறையிலேயே பர்மனென்டா செட்டில் ஆய்டுவேனே?) கடவுளே, நம்ம விட்டலாச்சார்யா படத்துல வர மாதிரி பழிவாங்குற சக்தியுள்ள ஆவியா என்ன மாத்தி அனுப்பப்படாதா?

அது முடியாது மானிடா!

அல்லோ.... மிஸ்டர் கடவுள், உங்க ஆளுக என்னத் தப்பா சாவடிச்சு தூக்கிட்டு வந்திருக்காங்க, அது ஞாபகம் இருக்கட்டும்!

ஓ...... (பன்னாட எப்பிடி நேரம் பாத்து அடிக்குது பாரு?) சரி, அப்போ... உனக்கு மட்டும் ஒரு விஷேஷ சக்தியை அளிக்கின்றேன். நீ விரும்பும் நேரத்தில் உணர்வுகளைப் பெறலாம். அப்போது   மற்றவர்களும் உன்னைப் பார்க்கவும் உணரவும் முடியும்.  இதை நீ ஒரே ஒருமுறை மட்டுமே செய்யலாம், அதுவும் 3 மணிநேரத்திற்கு மட்டுமே நிலைத்திருக்கும். பின்பு மறுபடி நீ ஆவியாக  மாறி இங்கு வந்துவிடுவாய்!

ஓக்கே, தேங்க்ஸ் கடவுளே!

சரி மனிதா நீ போகலாம்.

அப்பாடா என்னையப் போகச் சொல்லிட்டு, கடவுள் போயிட்டாரு...

சரி, இந்த பனி மூட்டைங்க எங்கே? எச்சூஸ் மி... பனிமூட்டைஸ்... கடவுள் சொன்னதக் கேட்டீங்கள்ல? அப்பிடியே பூப்போல என்னத் தூக்கிட்டுப் போயி, அதே எடத்துல எறக்கி விட்டுடுங்க!

அதெல்லாம் முடியாது, மனிதா.... நீ தனியேதான் திரும்பிப் போகவேண்டும்

இது அநியாயம், அக்கிரமம், கூப்புடுங்கய்யா கடவுள, நான் அவருகிட்டேயே பேசிக்கிறேன், நான் மட்டும் தனியா போகனுமா?

பொறு மனிதா... ஏன் கோபப்படுகிறாய்....  அதோபார், உங்க பூமிதெரியுதுல்ல..  அப்பிடியே போ.. கூகிள் எர்த் தெரியுமில்ல, கிட்டத்தட்ட அதே மாதிரிதான் இருக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போ மனிதனே!

இது ஆவுறதில்ல... 

அப்போ என்ன பண்ணலாம்.....ம்..ம்ம்..    ஒன்று செய்... இந்த நோக்கியா மொபைல் போனை வைத்துக்கொள்....  இதில் மேப் வசதி உள்ளது. பயன்படுத்திக்கொள். ஆனா திரும்ப கட்டாயமாக் கொண்டு வந்து கொடுத்திடனும் மானிடனே...

இதெல்லாம் உங்களுக்கு எப்பிடிய்யா கெடச்சது?

அதுவா, இப்போ சாகுரவனுங்கள்லாம், செல்போன வெச்சிக்கிட்டேதான் சாகுறானுங்க, அதுலேயும் ஒருத்தனோட ஆவிய செல்பொன கூட சேத்து தூக்குனதுக்கப்புறம்தான் பாடிய விட்டு வெளியே வந்துச்சு. அவனை எண்ணைக் கொப்பரைல தள்ளிட்டு, செல்போன நாங்க வெச்சிக்கிட்டோம் அவ்வளவுதான். சரி நீ மொதல்ல் இங்கிருந்து கெளம்பு!

ஒகே... பனிமூட்டைஸ்.... .....  வர்ட்டா....


நமக்கு வேண்டியது கெடச்சிடுச்சு.... பரவால்ல, கடவுள்கிட்டேயே பேசி ஜெயிச்சுட்டோம்... திரும்ப வந்து அப்பிடியே பேச்சப் போட்டு சொர்க்கத்துக்குப் போயிட வேண்டியதுதான். இல்ல இந்திரலோகத்தில நா. அழகப்பன் மாதிரி ஏதாவது பண்ணமுடியுமான்னு பாப்போம்....
பூமிக்கிப் போனதும் சீக்கிரமா எல்லாரையும்  போட்டுத்தள்ளிடனும்... மூணுமணி நேரம் தான் இருக்கு... எல்லாத்தையும் வரிசையா நிக்க வெச்சி சுட்டுடலாமா.... என்ன பண்ணலாம்.....

என்னது இது ஏதோ கெட்ட நாத்தம் அடிக்கிது.... நமக்குப் பழக்கமான வாடையா வேற இருக்கு...  அட....... நம்ம சென்னை. எதை எதையோ நெனச்சுக்கிட்டே இங்கே வந்துட்டேம்போல.... சரி வந்தது வந்தோம் ஒரு ரவுண்டு அடிச்சிட்டுப் போவோம்... இது என்ன ஏரியா? ..... இது....   கோடம்பாக்கமுங்கோவ்.....  ஆஹா  சினிமாக்காரங்க ஏரியாவாச்சே இது......

இங்கே.......   ஹை....  ஐடியா.......    ங்கொக்கா மக்கா...... இன்னைக்கு இருக்குடி வேட்டை.....   ரொம்ப நாளு ஆசைய இன்னைக்கி நிறைவேத்திட வேண்டியதுதான்....... செல்போனை எடுத்து மேப்பில் தேடுபொறியை இயக்கி, அவசரம் அவசரமாய் 'நமீதாவின் வீடு' என்று டைப் செய்தேன்........    .... 
என்னது இது என்னென்னமோ காட்டுது, ஒண்ணும் புரியல.....  மண்டை காயுது..  சே.....  இப்போ எப்பிடி அங்க போறது?

எச்சூஸ் மி சார், உங்க யாருக்காவது அட்ரஸ் தெரிஞ்சா சொல்றீங்களா சார், உங்களையும் கூட்டிட்டுப் போறேன்!



!

Sunday, November 14, 2010

அறியாப் பூனைகளின் தெரியா விளையாட்டு!

ஒரு ஊர்ல ஒரு மன்னரு ரொம்ப இம்சையா ஆட்சி பண்ணிக்கிட்டு இருந்தாரு.  பல கேடிப்பசங்களும் மன்னருக்கு கொடுக்க வேண்டியதக் கொடுத்து நிம்மதியா தொழில் பண்ணிட்டு இருந்தாங்க. திடீருனு நாட்டுல எலித்தொல்ல ரொம்ப அதிகமாயிடுச்சு. அதுவும் ஒரே ஒரு எலியால!  கேடிப்பசங்களால வழக்கம் போல தொழில் பண்ண முடியாம  சிரமப்பட்டாங்க. உடனே மன்னருகிட்ட போயி முறையிட்டாங்க. மன்னரும் அமைச்சர கூப்புட்டு எலித்தொல்லைய உடனே ஒழிங்கன்னு உத்தரவு போட்டாரு. அப்போ அமைச்சருகிட்ட நாலு பூனைகள் வேல பாத்துக்கிட்டு இருந்துச்சு.  இந்த நாலு பூனைகள வெச்சித்தான் ஓட்டுமொத்த நாட்டு நிர்வாகத்தையும் (?) பண்ணிக்கிட்டு இருந்தாரு அமைச்சரு.

மன்னரோட உத்தரவக் கேட்டுப்புட்டு, ஒரே யோசனையா ரெண்டு நாளு சுத்துனவருக்கு திடிர்னு அந்த ஐடியா(?) வந்துச்சு.  நாமதான்  நாலு பூனைகள  தண்டமா வெச்சிருக்கோமே, அதுகள இதுக்கு பயன்படுத்திட்டா என்னன்னு!  உடனே மன்னர்கிட்டேயும் போயி சொன்னாரு. மன்னர் கேட்டுபுட்டு ரொம்ப ஆச்சர்யப் பட்டாரு. அந்தப் பூனைகள பார்க்கனும் உடனே ஏற்பாடு பண்ணுங்கன்னு  சொல்லிப்புட்டாரு!

இதக் கேட்டதும் அமைச்சருக்கு ரொம்ப பயமா போச்சு, பூனைங்க மன்னரு முன்னாடி ஏதாவது பண்ணி மானத்த வாங்கி பதவிக்கு வேட்டு வெச்சிட்டா என்ன பண்றதுன்னு! அதுனால பூனைகள தயார் பண்ண முடிவு பண்ணி எல்லாத்தையும் கூப்புட்டாரு, அதுங்க உடனே வராம அங்கே இங்கே துள்ளிக்கிட்டு இருந்துச்சுங்க. அமைச்சருக்கு பொசுக்குன்னு கோவம் வந்து சாட்டையத் தூக்குனாரு. உடனே எல்லாப் பூனையும் வரிசையா பம்மிக்கிட்டு வந்து உக்காந்துச்சு!



ஒரு எலி ரொம்ப நாளா தொந்தரவு பண்ணிக்கிட்டு இருக்கு, அத உங்கள்ல யாராவது போயி புடிச்சிக்கிட்டு வரனும் முடியுமான்னு பூனைகளப் பாத்து அமைச்சரு கேட்டாரு. பூனைங்களுக்கு ரொம்ப நாளு கழிச்சி நல்ல இரை கெடைக்கப் போவுதுன்னு ஒரெ சந்தோசம், நாந்தான் போவேன், நாந்தான் போவேன்னு ஒரே சண்டை, கூக்குரல்...! சைலன்ஸ்........... என்று அமைச்சர் கத்தியதும் பூனைகள் தத்தம் இடங்களில்  போய் பவ்யமாக அமர்ந்தன.  சரி உங்கள் எல்லாருக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்பேன்,  யாரு திறமைய நிரூபிக்கிறீங்களோ, அவங்களுக்குத்தான் எலி என்றார் அமைச்சர்.

அது கேட்டு பூனைகளுக்கு சிறிது தயக்கம். இருந்தாலும் சரி நாங்கள் தயார் என்றன. முதல்   பூனையை அழைத்து உன் திறமையக் காட்டு என்றார் அமைச்சர். உடனே அது சென்று பெரிய பேப்பர் ஒன்றை எடுத்து வந்து விதவிதமான கெட்ட வார்த்தைகளை எழுதியது. எலியை  நாராசாரமாகத்  திட்டி எழுதியது. அதைப்  பார்த்து  மற்ற  பூனைகளும்  சந்தோசமாகக் ஆரவாரமிட்டன.

அடுத்து என்றார் அமைச்சர். அடுத்த பூனை வந்தது, கிச்சனுக்குப் போயி 12 வடைகள எடுத்துக்கிட்டு வந்து சரியா நாலு நாலா, மூணு பங்கு வெச்சுச்சு, அமைச்சர் உதட்டைப் பிதுக்கினார். மூன்றாவது பூனை முன்னே வந்தது, அது மதுக்கூடத்துக்குப் போயி ஒரு புல் பாட்டில் ரம்மை தூக்கிட்டு வந்து அதை சரியாக ஒரு ஒரு லார்ஜாகப் பிரித்துக் கிளாசில் ஊற்றியது ஒரு துளி கூட சிந்தாமல்! அமைச்சர் முகத்தில் திருப்தியில்லை. அடுத்து என்று தலையசைத்தார். நான்காவது பூனை வந்தது, சுற்றும் முற்றும் பார்த்தது, ஓடிப்போயி, வடையை எடுத்துத் தின்றது, வடையைத்தின்று கொண்டே ஒவ்வொரு லார்ஜாக உள்ளே இறக்கியது, எல்லாம் முடிந்ததும், முதல் பூனை எழுதி வைத்த பேப்பர் மேல் கக்கா போனது. பின்பு அப்பிடியே ஒரமாகப் போயி படுத்துக்கிட்டு காலை ஆட்டியபடி அமைச்சரைப் பார்த்து கண்ணடித்தது.

அமைச்சருக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி!  இன்னும் சிறிது நேரத்தில் பூனைகளை பார்க்க மன்னர் வந்துவிடுவார். என்ன நடக்கப் போகிறதோ என்று அமைச்சர் தீவிர யோசனையில் ஆழ்ந்தார். பூனைகள் நடக்கப் போகும் விபரீதத்தை அறியாமல், வழக்கம்போல் துள்ளி ஓடியாடின. ஒருவரை ஒருவர் மாறி மாறி அடித்துக் கொண்டு விளையாடின. இப்போ அமைச்சர் என்னதான் செய்யறது? யாராவது உடனே ஐடியா கொடுங்களேன்!

பி.கு.: இது ஒரு பின்நவீனத்துவ கதை, அதுனால என்ன எழவுன்னு எனக்கே புரியல, யாருக்காவது புரிஞ்சா கொஞ்சம் சொல்லித் தொலைங்க சார்....!

!

Tuesday, November 2, 2010

நினைவுகளின் விளைவுகள்! ஒரு டைரிக் குறிப்பிலிருந்து.......!

நான் நேராக நிமிர்ந்து அமர்ந்து கொண்டு இப்போ சொல்லுங்க என்றேன். அவர் ஆரம்பித்தார். எனக்கு தூக்கம் கண்களைச் சுழற்றியது. நன்றாக வயிறு முட்ட சாப்பிட்டிருந்தது வேறு, கண்ணைத் திறக்கவே முடியவில்லை. இந்த ஆளை ஏன் இன்னேரத்தில் அழைத்தோம் என்று என்னையே கடிந்து கொண்டேன். நான் யார் என்று என்னைப் பற்றி நானே கூறிக் கொள்வது சரியாக இருக்காது என்றாலும், இங்கே அதைக் கூறுவது அவசியமாகிறது. நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு அழகான இளம் வாலிபன். நான் எப்போதும் மிகவும் கலகலப்பாக இருப்பேன், அதனால் என்னைச் சுற்றி எப்போதும் நண்பர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள். நானும் அவர்களுக்குத் தாராளமாக டீ, சிகரெட், தண்ணி என்று செலவு செய்வேன். இதனால் என்ன பயன் என்கிறீர்களா, ஓசியில் ஏதாவது கிடைக்குமே என்று தினமும் அவர்கள் செய்யும் காரியங்கள்தான். அதெல்லாம் இங்கு சொல்லி மாளாது, சில சமயங்களில் நானே கண்கலங்கியிருக்கிறேன்.



இப்போது அவளைப்பற்றியும் சொல்லியாக வேண்டும். அவளை நான் பார்க்கும் வரை யாருக்கும், அவள் யாரென்றே தெரியாது. ஏனென்றால் அவள் வெகு சுமாராக பக்கத்து வீட்டுப் பெண் போலத்தான் இருப்பாள். கூட்டத்தில் நிற்பாளேயானால் தேடினாலும் அவளைக் கண்டுகொள்ள முடியாது. ஆனால் நான் அப்படி அல்ல. நேர்மாறானவன். ஆர்ப்பாட்டமானவன். நான் எங்கு சென்றாலும் ஒரு அதிர்வு இருக்கும். நான் நடந்து வரும் போது என் ஷூக்களில் இருந்து தீப்பொறி கிளம்புவதாக நண்பர்கள் கூறுவார்கள். சில நேரம் சுழல் காற்று அடிப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். என் கண்ணில் ஒருவித காந்த சக்தி வெளிப்படுவதாகக் கூட சில நண்பர்கள் சொல்வதுண்டு. ஒரு சமயம் நான் கல்லூரிக்குள் வந்தபோது அந்த சுழல் காற்று அதிகமாகி சாலையில் கிடந்த குப்பைகளை கல்லூரி முழுதும் பரப்பிவிட்டது. அதற்காக எங்கள் கல்லூரி முதல்வருக்கும், துப்புரவு தொழிளாருக்கும் ஒருநாள் முழுதும் தண்ணீர் விருந்து வைக்கவேண்டியது ஆகிவிட்டது. என் பார்வையில் இருக்கும் லேசர் கூர்மையைப் பார்த்து பலரும் வியந்துள்ளனர். ஒரு நாள் அப்படித்தான், ஒரு பெண்ணின் மோதிரம் கழன்று திறந்து கிடந்த கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து விட்டது. எனது லேசர் பார்வையை வைத்தே அதைக் கண்டுபிடித்து, பின்பு அத்தொட்டிக்குள் இறங்கி அந்த மோதிரத்தை எடுத்துக் கொடுத்தேன்.

இப்படி என்னுடைய பல திறமைகளைப் பார்த்தே எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். எந்தப் பேருந்தையும், டிரைனையும் நான் மிஸ் பண்ணியதே கிடையாது. ஒருமுறை நண்பர்களோடு சினிமாவிற்குச் செல்லும்போது, பேருந்தில் கால்சுண்டுவிரல் கூட வைக்க முடியாத அளவிற்குக் கூட்டம், அப்போது நான் செய்த டெக்னிக்கைப் பார்த்து கல்லூரியில் எனக்கு பெரிய ரசிகர் மன்றமே உருவாகிவிட்டது. என்ன செய்தேன் என்கிறீர்களா? பேருந்தில் ஏற முடியவில்லை என்றதும், பேருந்தின் வேகத்திலேயே அதனோடு ஓடி வந்து மூன்று ரூபாயை மிச்சப்படுத்தியதுடன், சரியான நேரத்தில் தியேட்டருக்கும் சென்றடைந்தேன்.

அதன் பின்பு நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்று வாங்கி விட்டேன். அதை வைத்தே நிறைய பெண் நண்பர்களுடன் ஊர் சுற்றினேன். எல்லோரும் அது என் அப்பா வாங்கிக் கொடுத்தது என்று எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அது என் ஆருயிர் நண்பன் கொண்டித்தோப்பு குமார், மும்பையிலிருந்து எனக்காக லவட்டிக் கொண்டு வந்தது. அந்த பைக்கில் எப்போதும் பெண் நண்பர்களை மட்டுமே ஏற்றுவது என் வழக்கம். அவர்கள் எல்லோரும் என்கூட ஊர் சுற்ற, சினிமா பார்க்க விரும்புவார்கள். நானும் சென்று சினிமா, ஐஸ்க்ரீம் என்று எஞ்சாய் பண்ணுவதுண்டு. சிலநேரம் ஓட்டலுக்குப் போவோம். அப்போதெல்லாம் நன்றாக மூக்குப் பிடிக்க சாப்பிட்டு விட்டு மட்டையாகிவிடுவேன். இப்படி போய்க் கொண்டு இருந்த சமயத்தில் தான் அவளைப் பார்த்தேன்.

அவளை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. எப்படியாவது மடக்கிவிடலாம் என்று முயற்சி செய்ய ஆரம்பித்தேன். நண்பர்கள் வேறு நன்றாக ஏற்றிவிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது பார்த்து என் நண்பன் ஒருவன் வெகுநாட்களாக ஒருதலையாகக் காதலித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் திடீர் தைரியம் வந்து காதலைச் சொல்லி செருப்படி வாங்கினான். அது வேறு அடிக்கடி ஞாபகம் வந்து என் வயிற்றைக் கலக்கிக் கொண்டிருந்தது. ஏற்கனவே ஒருமுறை லேப் கிளீன் பண்ணும் பெண்ணிடம் விளக்குமாற்று அடிவாங்கியிருந்தாலும் அதை யாருக்கும் தெரியாமல், அப்படியே பணம் கொடுத்து மறைத்து விட்டேன். அந்தப் பயம் வேறு. எனவே இப்பெணிற்கு நான் வழக்கமாகக் கையாளும் மோதலில் ஆரம்பித்து காதலில் முடியும் டெக்னிக்கை பயன்படுத்த முடிவு செய்தேன்.


திடீரென்று ஒருநாள் என் நண்பனின் போன்கால், ரொம்ப அவசரமாக ரிஜிஸ்டர் ஆபீசுக்கு வரச் சொன்னான். சரி யாராவது பிரெண்டுக்குக் கடத்தல் கல்யாணமாக இருக்கும் என்று ஒரு கிளைமாக்ஸ் பைட்டிற்கு ஏற்ற மாதிரி லெதர் ஜாக்கெட், கிளவுஸ், தொப்பி எல்லாம் அணிந்து கொண்டு கிளம்பிப் போனேன். அங்கு பாத்தால் என் நண்பனுக்குத் தான் திருமணம். ஏன் முன்பே சொல்லவில்லை என்று திட்டினேன். அவன் அதற்கு அவங்க வீட்ல ப்ராப்ளம் அதான் என்றான். இவ்வளவு நாள் ஒண்ணா சுத்திட்டு இருந்துட்டு பாவி, எனக்கே தெரியாம லவ் பண்ணியிருக்கான். மச்சி நீயும் இப்படி லவ் பண்றேன்னே எனக்கு இப்பத்தாண்டா தெரியும், ஏண்டா இப்பிடிப் பண்ணே, அப்படின்னு கேட்டேன். அவன், மாப்ள உன்ன மாதிரி ஆளுகள பக்கத்துல வெச்சிக்கிட்டு எப்படிடா லவ் பண்ணமுடியும், நீதான் பொண்ணுக மனச கலைச்சி நாசம் பண்ணீடுவியேடா என்று மூஞ்ச்சியில் அடித்தால் போல் சொல்லிவிட்டான். எனக்கு ஒருமாதிரியாகப் போய் விட்டது. நல்லவேளை வேறு யாரும் பார்க்கவில்லை. சரி சரி டென்சனாகாத விடு என்று சொல்லிவிட்டு வெளியே வந்து தம்மைப் பற்ற வைத்தேன்.


அப்போது ஆட்டோவில் ஒரு பெண் மணக்கோலத்தில் வந்து இறங்கினாள். யார் என்று பார்த்தால், அடிப்பாவி நீயா? அவள் என் காதலி, இவளையா நம் நண்பன் காதலித்து இருக்கிறான். ...எனக்கு அழுகை அழுகையாக வந்தது. அடக்க முடியவில்லை. பார்ப்பவர்கள் தவறாக நினைப்பார்கள் என்று திரும்பி நின்று கொண்டு குலுங்கி குலுங்கி அழுதேன். கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டு அழுதேன். சே... இவர்கள் காதல் நமக்கு முன்பே தெரியாமல் போய் விட்டதே? தெரிந்திருந்தால் பேசியே அவர்களைக் கலைத்து அவளை நாம லவட்டிக் கொண்டு போயிருக்கலாமே.... சரி இனி அழுகக் கூடாது இப்போதும் ஒன்றும் ஆகிவிடவில்லை, இவளை இப்போதே கடத்திச் சென்று கல்யாணம் செய்துகொள்ளலாம் என்று முடிவு செய்தேன். திரும்பிப் பார்த்தால் யாரையும் காணோம். டேய் மச்சி எங்கேடா போனே? சீக்கிரம் வந்து கையெழுத்துப் போடுடா வெண்ணை....என்று அழைத்தது நண்பனின் குரல்...........!



திடுக்கிட்டு விழித்துப் பார்க்கிறேன்..... ......................!

...

...

இயக்குனர் பேரரசு ஆவேசமாக அடுத்த படத்திற்குக் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்........!

...

...

...


டாக்டர் விஜயின் டைரிக் குறிப்பிலிருந்து......!



!