ஐ படத்தோட பட்ஜெட் பத்தி தாறுமாறா செய்திகள் வந்து எல்லாரையும் கதிகலங்க வெச்சிட்டு இருக்கு! தமிழனுக்கு ஒலகம் பூரா பெருமைதேடித்தரப்போற படத்துக்கு நாமலும் ஏதாவது செஞ்சு சரித்துரல நம்ம பேர பச்சக்னு பதிய வெச்சுடனும்னு இப்பிடி இசை வெளியீட்டு விழாவ அட்வான்சா நடத்தியிருக்கோம். எல்லாரும் வந்து கலந்துக்குங்க!
வழக்கம்போல விவேக்குதான் மைக்கப் புடிச்சி எல்லாத்தையும் டேமேஜ் பண்ணுறாரு... சே.. மேனேஜ் பண்ணுறாரு...!
ஐ படம் ஒரு மொக்கைன்னு நான் சொல்லமாட்டேன், ஏன்னா அந்த உரிமை உங்களுக்குத்தான் இருக்கு. நீங்க மொக்கைன்னு சொன்னா நான் ஒத்துக்க மாட்டேன், ஏன்னா ஷங்கர் சாருக்கு அது பிடிக்காது. மொத்தத்துல ஐ.... ஒரு தலைசிறந்த உலகப்படமா அமையும்னு சொல்லி, மொதல்ல வைரமுத்து சார மேடைக்கு அழைக்கிறேன்.
தமிழனுக்கோர் பெருமை என்றால் அது இந்தியாவுக்கே பெருமை, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கோரு பெருமை என்றால் அது தமிழனுக்கே பெருமை, டைரக்டர் ஷங்கருக்குப் பெருமை என்றால் எங்கள் சினிமாக் குடும்பத்திற்கே பெருமை, ஆனால் ஒரு தமிழ்ப்படத்திற்கு பெருமை என்றால் அது அகில உலகத்திற்கே பெருமை....!(ஸ்பீக்கரில் ரிக்கார்ட் செய்யப்பட்ட கைதட்டல் ஒலிக்கிறது, அதைக்கேட்டு ஆடியன்சும் கைத்தட்டுகிறார்கள்)
கண்ணுக்கு மையழகு, கவிதைக்குப் பொய்யழகு, ரஜினிக்கு நடையழகு, எங்கள் சினிமாவிற்கு ஷங்கர் அழகு (மறுபடியும் கைதட்டல்), நன்றி!
நன்றி வைரமுத்து சார், நம்ம சினிமாவிற்கு எது அழகுன்னு விளக்கமா சொல்லிட்டீங்க. அழகு அழகுங்கும் போதுதான் எனக்கு ஒரு கதை ஞாபகம் வருது. ஒரு ஊர்ல ஒரு பாட்டி ஜீன்ஸ் பேன்ட் போட்டுக்கிட்டு வடை சுட்டுக்கிட்டு இருந்துச்சாம். மொத்தம் 5000 வடை. எல்லாத்தையும் ஒரே நேரத்துல ஒரு பெரிய சட்டில போட்டு சுட்டுக்கிட்டு இருந்துச்சி. அவ்வளவு வடையவும் சட்டில இருந்து ஒண்ணா ஒரு பெரிய முள்ளுக்கரண்டிய கிரேன்ல மாட்டி வெளிய எடுத்து வெச்சா அப்போ பாத்து ஆயிரம் காக்கா வரிசையா பறந்து வந்து ஆளுக்கொரு வடைய எடுத்துக்கிட்டு போயிடிச்சி. எல்லா காக்காயும் ஒரு போயி பெரிய மரத்துல உக்காந்துச்சி. மரத்துக்கு 2000 கிளைகள். பாட்டி வடையத் தேடி மரத்துக்கு வந்திடிச்சி. அவ்வளவு பெரிய மரத்தப் பாத்தும் பயப்படாம ஒரு பெரிய கல்ல எடுத்து மேலே வீசிச்சி. கல்லப் பாத்ததும் எல்லாக் காக்காயும் பயந்து போயி வடையக் கீழே போட்டு பறந்து போயிடிச்சி. இதுல வர்ர பாட்டியோட துணிச்சல்தான் எனக்கு அழகு....!..... கைதட்டுங்க எல்லாரும்...ம்ம்ம்..(*&^%$*&@#$...)
ரஜினி, ஷங்கர், வைரமுத்து எல்லாரும் தலையில் கைவைத்தபடி உக்கார்ந்திருக்கின்றனர். அர்னால்டு மலங்க மலங்க முழித்தபடி இருக்கிறார்.
ஓக்கே..ஓக்கே.. இப்பிடி ஐ படத்தோட வெற்றிக்கு(!) முழுமுதல் காரணமாக இருக்கும் ஷங்கர் சாருக்கு எங்கள் சல்யூட்! (மற்படியும் கைதட்டல்!)
அடுத்ததாக டைரக்டர் ஷங்கர் அவர்களை மேடைக்கு அழக்கிறேன்!
எல்லோருக்கும் வணக்கம். இசை வெளியீட்டு விழா நடத்தனும்னு முடிவு பண்ண உடனே நாங்க செஞ்ச முதல் காரியம் விவேக்கக் கூப்பிட்டதுதான் (!). அழைப்பிதழ் டிசைன் பண்றதுக்காக ஜப்பானுக்கு அருகிலுள்ள கும்மாங்கோன்னு ஒரு தீவுக்குப் போயிருந்தோம். அங்கே தண்ணிக்கடியில சுமார் 6000 அடி ஆழத்துல இருந்துக்கிட்டே விடிய விடிய டிசைன் பண்ணோம். அப்புறம் அதை பிரிண்ட் பண்றதுக்காக உருகுவே நாட்டுக்குப் போனோம். அங்க உள்ள ஒரு எரிமலை உச்சியில் இருக்கும் ஒரு டிஜிட்டல் அச்சகத்துல கிட்டத்தட்ட ரெண்டு மாசம் தங்கியிருந்து போஸ்டர் பிரிண்ட் பண்ணோம். அங்கே வந்து ஒத்துழைப்புக் கொடுத்த அனைவரும் எனது நன்றிய தெரிவிச்சுக்கிறேன். அடுத்ததா ஒரு முக்கியமான விஷயம். இந்த விழாவுக்கு போஸ்டர் ஒட்டுரதுக்காக மொராக்கோவுல இருந்து ஒரு மெசின வரவழைச்சிருக்கோம். அத வெச்சு முதல் போஸ்டர் ஒட்டும் விழா அடுத்து பனாமா நாட்டில் நடைபெறும். இந்த சந்தர்ப்பத்த பயன்படுத்தி உங்க எல்லாரையும் அதற்கு அழைக்கிறேன். இதேற்கெல்லாம் தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் ரசிகர்களுக்கு நன்றி!
நன்றி ஷங்கர் சார். உங்க முதல் போஸ்டர் ஒட்டும் விழாவுக்கு என்னையும் அழைச்சிருக்கீங்க. அதையும் ஒரு வெற்றி விழாவா ஆக்குவது என் கடமை. உங்க பிரம்மாண்டதிற்கு நான் அடிமை. தமிழனுக்கு அது என்றும் பெருமை! அடுத்ததா நாம் எல்லோரும் ஆவலுடம் எதிர்பார்க்கும் சூப்பர் ஸ்டார் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன் (கைதட்டல்...விசில்!)
எல்லாருக்கும் வணக்கம்...(கைதட்டல்..!)..நான் எப்பவும் எதை செஞ்சாலும்...எந்தப் படம் பண்ணாலும் அது தமிழனுக்கு பெருமை தருவதாகத்தான் இருக்கும் (கைதட்டல்...!) இப்படி ஒரு வாய்ப்புக்கொடுத்த ஷங்கர் அவர்களுக்கு நான் என்றென்றும் கடன் பட்டிருக்கிறேன். ஐ படத்தில் முதலில் என்னைத்தான் நடிக்க சொன்னார்கள், ஆனால் கோச்சடையான் படத்திற்கு பிறகு தொழில்நுட்ப படம் வேணாம் என்று நினைத்ததால் நான் நடிக்கவில்லை.அர்னால்டு நல்ல மனிதர், அழைத்ததும் வந்துவிட்டார். விக்ரம் நல்ல நடிகர், ஷங்கர் நல்ல இயக்குனர், அம்மா நல்ல முதலமைச்சர். நான் அரசியலுக்கு வருவதாக இருந்தால் வருவேன், இல்லையென்றால் வரமட்டேன். லிங்கா இன்னும் சிறிது நாளில் தயாராகிவிடும். எனவே அனைவருக்கும் நன்றி!
டிஸ்கி: எந்திரன் படத்தை பற்றி முன்பு எழுதிய பதிவை டிங்கரிங் செய்து போடப்பட்ட பதிவு இது....!
14 comments:
அரும! அரும!
////உருகுவே நாட்டுக்குப் போனோம். அங்க உள்ள ஒரு எரிமலை உச்சியில் இருக்கும் ஒரு டிஜிட்டல் அச்சகத்துல கிட்டத்தட்ட ரெண்டு மாசம் தங்கியிருந்து போஸ்டர் பிரிண்ட் பண்ணோம். /// அந்த எரிமலைக்கும் பெயிண்ட் பன்னியாச்சாமே
பன்னிக்குட்டி ராக்ஸ் !!!
கலக்கிட்டீங்க...
கெக்கே!பிக்கே!!!ஹி!ஹி!!ஹீ!!!!
ஆல் அல்லக்கைஸ்... வணக்கம்ங்... ஆங்.. படிங்கங்கோ.......!
குட்மார்னிங் ஆப்பீசர்! (நைட்டா இருந்தாலும் இதுதான்!)
என்னப்பத்தித் தெரியுமில்ல!
ங்ணா.... வெட்டி நாயம் பேசுறவங்க தெரியாம வந்துட்டீங்கன்னா அப்படியே ரிவர்ஸ் கியர் போட்டுக்குங்ணா...
நீங்களும் வந்து பூமிதிச்சிட்டு போங்க.....!
ராப்பகலா கண்ணு முழிச்சி கடையத் தொறந்து வெச்சும் இவ்வளவுதானுங்க!
வெளங்கிரும்...
Last but not the Least
"ஸ்டார்ட் மியூசிக்.."
(ஸ்பீக்கரில் ரிக்கார்ட் செய்யப்பட்ட கைதட்டல் ஒலிக்கிறது, அதைக்கேட்டு ஆடியன்சும் கைத்தட்டுகிறார்கள்)
...SUPER... Shankar's speechah neenga ezhuthi irukkathu avar padatha vida brahmmaandam... LIKE LIKE LIKE!!!
Post a Comment