குஜய் டீவியின் டோபிநாத், அவனா இவனா நிகழ்ச்சிக்கு நம்ம பதிவர்கள் கோஷ்டியை அழைத்து வந்திருந்தனர். அன்றைய நிகழ்ச்சியின் தலைப்பு
”அடுத்த முதல்வர் சின்ன டாகுடரா பெரிய டாகுடரா?”
நிகழ்ச்சி தொடங்க இன்னும் சிறிது நேரம் இருக்கிறது. ஸ்டூடியோவில் அனைவருக்கும் மேக்கப் போடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
பாபு: டேய் என்னடா மேக்கப் போடுறீங்க…. ரொம்ப கருப்பா இருக்கு?
மேக்கப் மேன்: சார் உங்களுக்கு இன்னும் மேக்கப்பே போடல தண்ணிய தொட்டுதான் தொடச்சிருக்கோம்….
பாபு: நோ… அது தண்ணி இல்ல, தாரு……… யார்கிட்ட பொய் சொல்றே……? தண்ணிக்கு பதிலா தாரை தடவ சொன்னது யாரு, டெரர்தானே? எனக்கு அப்பவே தெரியும். அவன் இந்த மாதிரி ஏதாச்சும் பண்ணுவான்னு….. எனக்கு இந்த மேக்கப்பும் வேணாம் ஒரு எழவும் வேணாம்…. நான் சும்மாவே அழகாத்தான் இருக்கேன்…….
டெரர் பாண்டியன்: அப்போ எனக்கும் மேக்கப் வேணாம்….
கேமராமேன்: ஐய்யய்யோ…… சார்… சார்... ரெண்டு பேரும் மேக்கப் போடாட்டி கூட பரவால்ல இந்த வெள்ள சட்டையையாவது போட்டுக்குங்க, இல்லேன்னா கேமரா அடி வாங்கிரும்….
பாபு: யோவ் என்னய்யா பெரிய கேமரா... எங்க பட்டிக்காட்டான் ஜெய் பாக்காத கேமராவா….. உனக்கு முதல்ல ஸ்டில் போட்டோ ஒழுங்கா எடுக்க தெரியுமா? போட்டோ வாக்னா என்னான்னு தெரியுமா?
ஜெய்: (கிசுகிசுப்பாக) டேய் பாபு அத ஏன்டா இங்க கோர்த்து விடுறே…. என்ன கேமரா வெச்சிருக்கீங்கன்னு கேட்டா நான் மாட்டிப்பேன்டா……!
பாபு: ஏண்ணே?
ஜெய்: ஏன்னா நான் நோக்கியா 1100 வெச்சிதான்டா அந்த போட்டோ எடுத்தேன்…….
பாபு: க்க்க்ர்ர்ர்ர் தூ………
கேமராமேன்: (என்னது போட்டோ வாக்கா…….. ஒருவேள பெரிய போட்டோகிராபர்களா இருக்குமோ…?) சரி விடுங்க சார்….. உங்க இஷ்டம்…
மொக்கராசா: யோவ் பாபு, ப்ரோகிராம் ஆரம்பிக்க முன்னாடியே கேமராமேன்கிட்ட பேசி ஜெயிச்சிட்டியே, இன்னிக்கு நாமதான்யா ஜெயிக்கிறோம்…… ஆமா சார்... டைரக்டர்சார்… ஜெயிக்கிறவங்களுக்கு என்ன சார் கொடுப்பீங்க?
டைரக்டர்: யோவ் இது சமூக அக்கறைல(?) நடத்துற நிகழ்ச்சி, இத பாத்து நாலு பேரு திருந்துனாங்கன்னா போதும், அவ்ளோதான் பரிசெல்லாம் கிடையாது.
டெரர்பாண்டியன்: இந்த ப்ரோகிராம பாத்து திருந்துறானுங்களோ இல்லியோ, எங்கள பாத்து நிறைய பேர் திருந்திடுவானுங்க பாருங்க……
வைகை: அடிங்க….. உன்னைய பாத்து எவனும் திருந்த மாட்டான், பேதி புடிங்கி தான் ஓடுவான்……. ஹல்லோ டைரக்டர் சார், பாபு & டெரர் இவங்க ரெண்டு பேர்பக்கத்துலயும் என்னைய உக்கார வைங்க….
டைரக்டர்: ஏன்?
வைகை: இல்ல நான் கொஞ்சம் செகப்பு, அவங்க பக்கத்துல இருந்தா இன்னும் செகப்பா அழகா தெரிவேன்ல……
பாபு: நோ நோ…. அவன் பக்கத்துல இருந்தா நான்தான் செகப்பா தெரிவேன்…….
டெரர்: நல்ல வேள என்னைய உக்கார வெச்சா டோட்டல் ஸ்டூடியோவும் டிம்மாகிடும்னு இன்னும் எவனுக்கும் தெரில போல…..
பன்னிக்குட்டி ராம்சாமி: டேய் இங்க இவ்வளவு அமளிதுமளி நடந்திட்டு இருக்கு, இந்த ரமேஷ் நாதாரி எங்கடா போனான்…….?
வைகை: அங்க பாரு………….
ரமேஷ் ஸ்டூடியோவில் கொடுத்த மாரி பிஸ்கட்டில் கடைசி பாக்கெட்டை தின்று முடித்துக் கொண்டு இருக்கிறார்…
பன்னி: அடேய்ய்….. இங்கேயுமாடா…? அடங்கொக்காமக்கா…. எல்லா பிஸ்கட்டையும் தின்னு முடிச்சிட்டியா?
ரமேஷ்: ஆமா மச்சி வீட்டுக்கு எதையும் எடுத்துட்டு போக கூடாதுன்னு சொல்லிட்டாங்க, அதான் எல்லாத்தையும் உக்காந்து தின்னு முடிச்சிட்டேன்…. சரி, ப்ரோகிராம்என்னாச்சு, ஆரம்பிச்சிடுச்சா?
பன்னி: இன்னும் இல்ல, பாபுவுக்கு மேக்கப் போடுறதுல பிரச்சனை ஆகிடுச்சு…..
ரமேஷ்: ஏன் மேக்கப் பத்தாம பெயிண்ட் ஃபேக்டரிக்கு கூட்டிட்டு போயிட்டாங்களா? அவனை பெயிண்ட் ட்ரம்முக்குள்ள பத்து நாளு ஊற வெச்சாலும் ஒண்ணியும்ஆவாதே…….. அவனுக்கு எதுக்கு மேக்கப் போடுறானுங்க…? சரி அதவிடு….. இந்த ப்ரோகிராம்ல கைய ஆட்டி ஆட்டி ஒரு புள்ள பேசுமே எங்கடா காணோம்?
மாலுமி (ப்ரொபசனல் குடிகாரன்): நானும் அதுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் மச்சி, கண்ணுலயே காட்ட மாட்றானுங்க…… சே
ரமேஷ்: ப்ரோகிராம் ஆரம்பிச்சிட்டா வந்துதானே ஆகனும்… ஆனா மியூசிக் வாசிக்கிற ஆளுகளையும் காணோமே?
பாபு: ம்மூதேவி…. இது டூப்பர் சிங்கர் ப்ரோகிராம் இல்ல, அவனா இவனா ப்ரோகிராம். இங்க பாடக்கூடாது, பேசனும்……….
ரமேஷ்: நான் பேசுனாவே பாடுற மாதிரிதானே இருக்கும்….. அதான் மியூசிக்கும் இருந்தா இன்னும் நல்லா ரீச் ஆகுமேன்னு பார்த்தேன்……
(ஆல் மெம்பர்ஸ்): க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் த்தூ..…
ரமேஷ்: இதுக்கு மட்டும் எல்லாரும் ஒண்ணுகூடிடுறானுங்கய்யா……..
மாலுமி: நான் டான்ஸ் ஆடனும்னு நினைச்சி ரெண்டு பாட்டு மனப்பாடம் பண்ணிட்டு வந்திட்டேனே.. இப்ப என்ன பண்றது?
பன்னி: பரவால்ல சும்மா ஆடு…. மப்பு தெளிஞ்சிடுச்சின்னு சொல்லி நாங்க சமாளிச்சிடுறோம்…
மாலுமி: இல்ல மச்சி, இன்னிக்கு பலாமாஸ்டர் முன்னாடி நல்லா ஆடி அசத்தனும்னு இருக்கேன்…. அதான்
பன்னி: டேய் இது பானாட பயிலாட இல்லடா….. அவனா இவனா நிகழ்ச்சி…….. இங்க டோபிநாத் தான் வருவார்.
மாலுமி: என்னது பலாமாஸ்டர் வரமாட்டாங்களா…..? அப்புறம் என்னைய ஏன்டா இந்த ப்ரோகிராமுக்கு கூப்புட்டீங்க? இன்னேரம் ரெண்டு ஃபுல்ல முடிச்சிருப்பேனே……
மொக்கை: என்னது டோபிநாத்தா…….? நம்ம பவர்ஸ்டார அசிங்கப்படுத்துனாரே… அவரா?
வைகை: அவரேதான்……….
மொக்கை: இது தெரிஞ்சிருந்தா நானும் இந்த ப்ரோகிராமுக்கே வந்திருக்க மாட்டேனே………
டெரர்: டேய் என்னடா ஆளாளுக்கு இப்படி சொல்லிட்டு இருக்கீங்க? அதான் வந்தாச்சில்ல……… வந்த வேலைய பாருங்கடா…..
பன்னி: ஆமா……. இது பெரிய ஃபோர்டு பேக்டரி…… எல்லாரும் கைல ஸ்பானர் எடுத்துட்டு போய் வேலைய பாருங்க……
டெரர்: ஆமா இவரு பெரிய மெக்கானிக்கு... கைல ஸ்பானர் இல்லாம வேல பாக்க மாட்டாரு……….
டைரக்டர்: என்னங்கடா இது… ப்ரோகிராமே ஆரம்பிக்கல அதுக்குள்ள அடிச்சிக்கிறானுங்க……..?
கேமராமேன்: சார் அப்படியே சைலண்ட்டா கேமராவ ஆன் பண்ணி விட்ரவா? ப்ரோகிராம இப்படியே முடிச்சிடலாம்….
டைரக்டர்: யோவ் அப்புறம் டைட்டிலுக்கு சம்பந்தமில்லாம போயிடுமேய்யா…?
கேமராமேன்: அதான் டோபிநாத் இருக்கார்ல…….? அவர தனியா கொஞ்சம் பேச சொல்லி எடிட் பண்ணி நடு நடுவுல போட்டு விட்டா எல்லாம் சரியா வந்திடும் சார்…….
டைரக்டர்: இதுவும் நல்ல ஐடியாவாத்தான் இருக்கு………….
டெரர்: சார் சீக்கிரம் ஆரம்பிங்க……. இல்லேன்னா இவனுங்க ப்ரோகிராமையே மாத்திடுவானுங்க…….
டைரக்டர்: ஏன்யா…?
டெரர்: இப்பவே பலா மாஸ்டர் எங்கேன்னு கேக்க ஆரம்பிச்சிட்டானுங்க……. இனி பமீதா எங்கே, பஷ்பு எங்கேன்னு ரகளை பண்ண ஆரம்பிச்சிடுவானுங்க சார்…. சட்டுன்னுப்ரோகிராம ஆரம்பிங்க……
டைரக்டர்: ஆமா உங்க டீம்ல நரின்னு ஒருத்தர் இன்னும் வர வேண்டி இருக்குன்னு சொன்னாங்களே…. வந்துட்டாரா?
39 comments:
வடை எனக்கே...
bonda
வடை போண்டாவெல்லாம் போட்டு ரொம்ப நாளாச்சி.........
சைபர் கிராம், ஒன் கிரைம் டூ கிரைம் எல்லோரும் வர்றாங்கடாய்
எங்க தம்பி தங்ககம்பியை கருப்புன்னு சொன்னதுக்காக பத்து பஸ்ஸை கொளுத்தப்போறோம், நாகர்கோவில் டூ திருநெல்வேலி சாலையை பறிக்கப்போறோம் ச்சே ச்சீ மறிக்கப்போறோம்.
ஓ அப்ப வடைன்னு போடாம இடியாப்பம்னு போட்டுருவோமா..?
திருநெல்வேலி சாலையை பறிக்கப்போறோம் ச்சே ச்சீ மறிக்கப்போறோம்.//
வேணும்ன்னா அவரயே தாரா(தார்) கூடா யூஸ் பண்ணுங்க
////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சைபர் கிராம், ஒன் கிரைம் டூ கிரைம் எல்லோரும் வர்றாங்கடாய்//////
சிரிப்பு போலீஸ்னு போட்டு போலீசையே அசிங்கப்படுத்துனதுக்காக உன்னைய தேடிட்டு இருக்காங்களாம்..... எங்கேயாவது ஓடிப்போயி ஒளிஞ்சிக்க......!
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சைபர் கிராம், ஒன் கிரைம் டூ கிரைம் எல்லோரும் வர்றாங்கடாய்//
இன்னைக்கி எத்தனைபேரு டவுசர் கிழியப்போகுதோ தெரியலையே, எலேய் தம்பி பாபு கேர்ஃபுல்
கடைசி வரைக்கும் சொப்பன சுந்தரிய யார் வச்சிருக்காங்கன்னு சொல்லவே மாற்றானுகளே ????
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சைபர் கிராம், ஒன் கிரைம் டூ கிரைம் எல்லோரும் வர்றாங்கடாய்//////
சிரிப்பு போலீஸ்னு போட்டு போலீசையே அசிங்கப்படுத்துனதுக்காக உன்னைய தேடிட்டு இருக்காங்களாம்..... எங்கேயாவது ஓடிப்போயி ஒளிஞ்சிக்க......!//
ஆமாய்யா அந்த சிட்டி போலீசு தொப்பி போடாம வெடி வைப்பதில் கில்லாடியாம், பீரா ஜாஸ்பின் சொன்னாங்க.
/////MANO நாஞ்சில் மனோ said...
எங்க தம்பி தங்ககம்பியை கருப்புன்னு சொன்னதுக்காக பத்து பஸ்ஸை கொளுத்தப்போறோம், நாகர்கோவில் டூ திருநெல்வேலி சாலையை பறிக்கப்போறோம் ச்சே ச்சீ மறிக்கப்போறோம்.////////
அங்க எல்லாம் ஏற்கனவே அப்படித்தானுங்க இருக்கு.......
யோவ் அப்போ கையாட்டி பேசும் சொப்பன சுந்தரி வராதா...அடப்போங்கப்பா...
///// MANO நாஞ்சில் மனோ said...
ஓ அப்ப வடைன்னு போடாம இடியாப்பம்னு போட்டுருவோமா..?//////
ஊசிப்போன வடைய எடுத்துக்கிட்டு இப்ப பேச்ச பாரு.......
மங்குனி அமைச்சர் said...
கடைசி வரைக்கும் சொப்பன சுந்தரிய யார் வச்சிருக்காங்கன்னு சொல்லவே மாற்றானுகளே ????//
இப்போ அந்த காரையே யார் வச்சிருக்கான்னு சொல்லமாட்டேங்குறாங்க.
////மங்குனி அமைச்சர் said...
கடைசி வரைக்கும் சொப்பன சுந்தரிய யார் வச்சிருக்காங்கன்னு சொல்லவே மாற்றானுகளே ????//////
கேட்டுட்டாருய்யா பெரிய கலக்டரு.....
////MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சைபர் கிராம், ஒன் கிரைம் டூ கிரைம் எல்லோரும் வர்றாங்கடாய்//////
சிரிப்பு போலீஸ்னு போட்டு போலீசையே அசிங்கப்படுத்துனதுக்காக உன்னைய தேடிட்டு இருக்காங்களாம்..... எங்கேயாவது ஓடிப்போயி ஒளிஞ்சிக்க......!//
ஆமாய்யா அந்த சிட்டி போலீசு தொப்பி போடாம வெடி வைப்பதில் கில்லாடியாம், பீரா ஜாஸ்பின் சொன்னாங்க.//////
என்னது பீரா ஜாஸ்பினா...... கெரகம்..... நல்ல நெலம இப்படி ஆகிடுச்சே......?
நான் டோபி வந்துருக்கேன்..டோபி வந்திருக்கேன்னு கூவுவாரு...
ஏன் தம்பி டோபின்னா...
அதாங்க துணியெல்லாம் க்ளீன் பண்ணி தர்றவன்..
இப்படி வெளக்கமா சொல்லாமே எதுக்கு கூவுற..அடிக்கடி மூஞ்சிய வேற எரரா வச்சிக்கற...
/////விக்கியுலகம் said...
யோவ் அப்போ கையாட்டி பேசும் சொப்பன சுந்தரி வராதா...அடப்போங்கப்பா...//////
பார்ரா......?
/////விக்கியுலகம் said...
நான் டோபி வந்துருக்கேன்..டோபி வந்திருக்கேன்னு கூவுவாரு...
ஏன் தம்பி டோபின்னா...
அதாங்க துணியெல்லாம் க்ளீன் பண்ணி தர்றவன்..
இப்படி வெளக்கமா சொல்லாமே எதுக்கு கூவுற..அடிக்கடி மூஞ்சிய வேற எரரா வச்சிக்கற...////////
அப்படித்தான் மூஞ்சிய வெச்சிக்கனும்னு டைரக்டர் சொல்லி இருக்காராம்ல......?
என்னது தொடருமா? இந்தியால பிளாக்க தடை செய்ய போராங்க..
நீங்களாவது டோபிநாத்தை பொண்ணுங்க பக்கம் உட்கார விடாதீங்க......நம்ம எருமை கருப்பு டெரர் பாண்டி கிட்ட உட்கார வையுங்க......
இடரும்..... ??
ஹா.ஹா.ஹா.ஹா.........முடியல தலிவா முடியலை
என் மனம் வருந்தும்படியும் மன உளைச்சலுக்கு ஆளாகும்படியும் என் பெயரை பயன்படுத்தி கருத்துக்களை இங்கே நண்பர் பகிர்ந்திருப்பதால் இதை நான் அப்படியே முட்டை குற்றத்திற்கு (சைபர் க்ரைம் ) அனுப்பி வைக்கிறேன்!
அப்ப கன்பார்ம் .......
உங்களுக்கு என்ன களி பிடிக்கும்.........????????????
நரி வந்து உங்க எல்லோருக்கும் முடிவு கட்டுவார்!
///
மங்குனி அமைச்சர் said...
கடைசி வரைக்கும் சொப்பன சுந்தரிய யார் வச்சிருக்காங்கன்னு சொல்லவே மாற்றானுகளே ????
///
அமைச்சரே...சொப்பன சுந்தரியை யார் வச்சிருந்தாங்கங்கறதா முக்கியம்....அவங்க அட்ரஸ் என்னெங்கிறது தான் முக்கியம்...அதை கேட்காம எதையெதையோ போய் கேட்டுகிட்டு... :)
யோவ் டோபி நாத்.... சின்னப்பயங்றதுனால தானே என்னை அடிச்சுப்புட்ட...எங்க தைரியம் இருந்தா எங்க அண்ணன் 'பன்னிக்குட்டி ராம்சாமி' மேல கைவச்சு பாரு பார்ப்போம்!
#பவர் ஸ்டார் வாய்ஸ்!
//////"என் ராஜபாட்டை"- ராஜா said...
என்னது தொடருமா? இந்தியால பிளாக்க தடை செய்ய போராங்க../////
அது கூகிள் கம்பேனிக்காரன் பிரச்சனை அவன் பாத்துக்கட்டும்....
//////மொக்கராசா said...
நீங்களாவது டோபிநாத்தை பொண்ணுங்க பக்கம் உட்கார விடாதீங்க......நம்ம எருமை கருப்பு டெரர் பாண்டி கிட்ட உட்கார வையுங்க......///////
அப்புறம் டோபிநாத்த காப்பாத்துறது யாரு?
/////Madhavan Srinivasagopalan said...
இடரும்..... ??/////
படரும்.....
////// K.s.s.Rajh said...
ஹா.ஹா.ஹா.ஹா.........முடியல தலிவா முடியலை
//////
என்னாது முடியலையா........?
//////வைகை said...
என் மனம் வருந்தும்படியும் மன உளைச்சலுக்கு ஆளாகும்படியும் என் பெயரை பயன்படுத்தி கருத்துக்களை இங்கே நண்பர் பகிர்ந்திருப்பதால் இதை நான் அப்படியே முட்டை குற்றத்திற்கு (சைபர் க்ரைம் ) அனுப்பி வைக்கிறேன்!///////
குற்றத்தை நீங்கள் வைத்துக் கொண்டு முட்டையை இங்கே அனுப்பி விடவும்.....!
////நாய் நக்ஸ் said...
அப்ப கன்பார்ம் .......
உங்களுக்கு என்ன களி பிடிக்கும்.........????????????///////
ஓஹோ... இதுக்கு ஆப்சன்லாம் வேற கொடுக்கிறாங்களா....?
//////எஸ்.கே said...
நரி வந்து உங்க எல்லோருக்கும் முடிவு கட்டுவார்!////
மொதல்ல அவன் முடி வெட்டட்டும்......
////வரலாற்று சுவடுகள் said...
///
மங்குனி அமைச்சர் said...
கடைசி வரைக்கும் சொப்பன சுந்தரிய யார் வச்சிருக்காங்கன்னு சொல்லவே மாற்றானுகளே ????
///
அமைச்சரே...சொப்பன சுந்தரியை யார் வச்சிருந்தாங்கங்கறதா முக்கியம்....அவங்க அட்ரஸ் என்னெங்கிறது தான் முக்கியம்...அதை கேட்காம எதையெதையோ போய் கேட்டுகிட்டு... :)////////
அண்ணன் வெலாசத்துலயே குறியா இருக்காரே......?
/////வரலாற்று சுவடுகள் said...
யோவ் டோபி நாத்.... சின்னப்பயங்றதுனால தானே என்னை அடிச்சுப்புட்ட...எங்க தைரியம் இருந்தா எங்க அண்ணன் 'பன்னிக்குட்டி ராம்சாமி' மேல கைவச்சு பாரு பார்ப்போம்!
#பவர் ஸ்டார் வாய்ஸ்!/////
நல்லா கோர்த்துவிடுறாங்கய்யா.....
தொடருமா?
கர்ர் த்த்து...
Post a Comment