எவனுக்காவது ஞாபகம் இருக்கும், கூப்பிட்டு வாழ்த்துவாங்க, பாராட்டு விழா எடுப்பாங்க, மாலை போடுவாங்க, பொன்னாட போத்துவாங்க அப்படி இப்படின்னு என்னென்னமோ கனவு கண்டுக்கிட்டு இருந்தேங்க, ஆனா ஒரு பய கூட கண்டுக்கல. அட எனக்கே ஞாபகம் இல்லேன்னா பாருங்களேன்.
அப்படி என்னன்னு கேட்கறீங்களா? அட அதாங்க நான் ப்ளாக்ல எழுத (?) ஆரம்பிச்சு ஒரு வருசம் (?) ஆகிடுச்சாம். இப்ப சொல்லுங்க, ஒரு வருசமா எப்படியெல்லாம் எழுதி எழுதி களைச்சி போயி இருக்கேன், பொன்னாட போர்த்தலேன்னா கூட பரவால்ல, அட ஒரு வார்த்தையாவது சொல்லி பாராட்ட வேணாமா? என்ன ஒலகமடா இது....? ஒரு பிரபல பதிவர பாராட்டனுமே, ஆறுதலா நாலு வார்த்த பேசனுமே கொஞ்சம் கூட அக்கறையில்லாம.... சே....!
ஓகே விடுங்க சார், நானே என்னை வாழ்த்திக்கிறேன். இப்போ மேட்டருக்கு வருவோம். இன்னிக்கு ஆண்டு விழா கொண்டாடப் போறேன். (ஏன் மெட்ரிக்குலேசன் ஸ்கூல்தான் ஆண்டுவிழா கொண்டாடனுமா...? நாங்களும் கொண்டாடுவோம்ல....!) அதுனால ப்ளாக் பக்கம் வரும் அன்பர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகள், பரிசுகள் தரலாம்னு இருக்கேன்.
இன்றைய ஆண்டுவிழா பதிவிற்கான பரிசுகள் அறிவிப்பு
1. இன்று ப்ளாக்கிற்கு வருபவர்கள் அனைவருக்கும் பவர் ஸ்டாருடன் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு
பதிவு எழுதிக் கொண்டிருக்கும் போதே ப்ளாக்கிற்கு வந்து உடனடியாக பவர் ஸ்டாருடன் போட்டோ எடுத்துக் கொள்ளும் வாய்ப்பினை பெற்ற ஒபாமா
(பவர் ஸ்டார்: நான் ஒரு ப்ளாக் ஆரமிக்கலாம்ன்னு இருக்கேன்...
ஒபமா: ஏன் டாகுடர்?
பவர் ஸ்டார்: மொக்கை படத்துக்கு விமர்சனம் எழுதுற சிபி கூட என் படத்துக்கு விமர்சனம் எழுத மாட்டேங்கிறாரே.அதான் நானே எழுதிடலாமேன்னு......! )
2. முதல் கமெண்ட் போடுபவருக்கு அடுத்த 20 கமெண்ட்டுகள் இலவசம்
3. நீங்கள் இங்கே போடும் ஒவ்வொரு ஓட்டிற்கும் பதிலாக உங்கள் பதிவிற்கு ஒரு ஓட்டு போடப்படும், ப்ளாக் இல்லாதவர்கள் உடனே ஆரம்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
4. 50, 100, 150 வது கமெண்டுகள் போடுபவர்களுக்கு ஒரு வடை வாங்கித் த்ரப்படும் அல்லது வடை போட்டோவாவது தரப்படும்.
5. இன்று அதிக கமெண்ட் போடுபவர்களுக்கு மேல்சபையில் இடம் பார்க்கப்படும்.
அறிவிப்பு: மைனஸ் ஓட்டுப் போடுபவர்களுக்கு பவர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பு வாங்கித் தரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
எச்சரிக்கை: வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் ஆஹா, அருமை, சூப்பர், கலக்கல்னு கமெண்ட் போடுபவர்களுக்கு பவர் ஸ்டாரின் ஆனந்த தொல்லை டிவிடி வழங்கப்படும், அப்படியும் அடங்காதவர்களுக்கு சராமாரியாக மைனஸ் ஓட்டுகள் போட்டுத்தள்ளப்படும்!
நன்றிகள்:
எஸ்கே: புகைப்படம்
சிரிப்பு போலீஸ்: ஒபாமா-பவர் ஸ்டார் உரையாடல்
!
232 comments:
«Oldest ‹Older 201 – 232 of 232ஓக்கே..சீன் ஓவர்..குட்நைட் :))
////////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வைகை said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
@ Speed Master
இந்த மாதிரி கமெண்ட் போடாதீங்கப்பா. scroll பண்ணி படிக்க முடிய//
படிச்சி என்ன பண்ணப்போற?
///////
படிச்சு பட்டம் வாங்குவாரு....//
நயன்தாரா விட்ட பட்டமா?////////
இல்ல பீச்ல விடுற பட்டம்..
//////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வைகை said...
நானும் வந்துட்டேன் என்னோட குலுக்குவாரா ...நான் கைய சொன்னேன் ////
நல்லா குலுக்குவாராம் மக்கா.. கையைத்தான் :))
/////////
அவரு கைய்யி அவரு குலுக்குறாரு...//
அப்ப.நம்ம கைய யாரு குலுக்கனும்?///////
நாமதான் குலுக்கனும்.... பின்ன இதுக்குன்னு ஒரு ஆளா வேலைக்கு வெக்க முடியும்?
சரிடா நாயே!!
mee the firstu..
>> மைனஸ் ஓட்டுப் போடுபவர்களுக்கு பவர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பு வாங்கித் தரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
சூப்பரப்பூ!
-
வெங்கடேஷ்
எவனுக்காவது ஞாபகம் இருக்கும், கூப்பிட்டு வாழ்த்துவாங்க, பாராட்டு விழா எடுப்பாங்க, மாலை போடுவாங்க, பொன்னாட போத்துவாங்க அப்படி இப்படின்னு என்னென்னமோ கனவு கண்டுக்கிட்டு இருந்தேங்க, ஆனா ஒரு பய கூட கண்டுக்கல. அட எனக்கே ஞாபகம் இல்லேன்னா பாருங்களேன்.//
சகோ, மன்னிக்கனும், எல்லோர் வலையும் மேய்ந்து வரக் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு...
நான் புதுப் பையன் சகோ. எனக்கு உங்க ஆண்டு விழா பற்றி தெரியலை..
தெரிஞ்சிருந்தா, பவர் ஸ்டார் கையால் உங்களுக்கு ஒரு pancake வாங்கித் தந்திருப்பேனே;-)))
பொன்னாட போர்த்தலேன்னா கூட பரவால்ல,//
கவலைய விடுங்க சகோ, நாம பொன்னாடை என்ன?
உங்களுக்கு பன்னாடையே போர்த்திறோம்,
ப்ளாக் பக்கம் வரும் அன்பர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகள், பரிசுகள் தரலாம்னு இருக்கேன்//
சகோ என்ன ஒரு கொலை வெறி, ஏன் ஏன் இப்படி?
அப்போ நாம கேட்கிற சலுகைகள் எல்லாம் தருவீங்களா?
இல்லை ஒன்லி யுவர் சாய்ஸ் ஆ?
இன்று ப்ளாக்கிற்கு வருபவர்கள் அனைவருக்கும் பவர் ஸ்டாருடன் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு//
அடிங்....ஏன் இதை விட பவர் ஸ்டாருடன் நடித்த நடிகை கூட வாய்ப்பு வாங்கி தரலாமே?
பதிவு எழுதிக் கொண்டிருக்கும் போதே ப்ளாக்கிற்கு வந்து உடனடியாக பவர் ஸ்டாருடன் போட்டோ எடுத்துக் கொள்ளும் வாய்ப்பினை பெற்ற ஒபாமா//
என்ன ஒரு கொல வெறி...
ஹி....ஹி....
பதிவெழுதும் போது இது நடக்கு என்றால், பதிவு வந்தாப் பின்னாடு என்ன எல்லாம் நடக்கும்?
2. முதல் கமெண்ட் போடுபவருக்கு அடுத்த 20 கமெண்ட்டுகள் இலவசம்//
இதுக்கு இணை அனுசரணை, நம்ம நாஞ்சில் மனோவா?
நீங்கள் இங்கே போடும் ஒவ்வொரு ஓட்டிற்கும் பதிலாக உங்கள் பதிவிற்கு ஒரு ஓட்டு போடப்படும், ப்ளாக் இல்லாதவர்கள் உடனே ஆரம்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்//
பாஸ், புதுசா ப்ளாக் ஆரம்பித்து ஓட்டுப் பட்டை இல்லேன்னா என்ன பண்ணுவீங்க?
எங்கே ஓட்டுப் போடுவீங்க/
4. 50, 100, 150 வது கமெண்டுகள் போடுபவர்களுக்கு ஒரு வடை வாங்கித் த்ரப்படும் அல்லது வடை போட்டோவாவது தரப்படும்.//
கொடுமை, கொடுமை..
நான் இருநூற்றிப் பதினேழாவது கமெண்ட் போடுறேன், எனக்கு ஏதாச்சும் சிறப்பு சலுகை உண்டா.
மைனஸ் ஓட்டுப் போடுபவர்களுக்கு பவர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பு வாங்கித் தரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.//
என்னம்மா யோசிக்கிறீங்க....அவ்...
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் ஆஹா, அருமை, சூப்பர், கலக்கல்னு கமெண்ட் போடுபவர்களுக்கு பவர் ஸ்டாரின் ஆனந்த தொல்லை டிவிடி வழங்கப்படும், அப்படியும் அடங்காதவர்களுக்கு சராமாரியாக மைனஸ் ஓட்டுகள் போட்டுத்தள்ளப்படும்!//
அப்போ இப்படிக் கமெண்ட் போட்டால் என்ன பரிசு கிடைக்கும்?
ஆ அஷ்கு
ஆய் புஷ்கு
ஆய் விஸ்கு
அடி கிஸ்கு
பசக் பசக்
ஜலக் ஜலக்
தடக் தடக்
தகத் தகத்
தந்தனத்தோம் தகதினத்தோம்
பாஸ்...
இப்போ மேட்டருக்கு வாறேன்,
பதிவுலகில் உங்கள் பின்னூட்டங்களாலும், நகைச்சுவை முத்துக்களாலும் எங்களையெல்லாம் சிரிக்க வைக்கும் உங்கள் பணி தொடர வேண்டும், அத்தோடு இன்னும் பல ஆண்டுகளுக்குப் பன்னிக்குட்டியாரின் பகிடிகள் தொடர வேண்டும்!
பகிடி- நகைச்சுவை
he he he he naanum presenttuuuu
பிங்கிளிப்பி பியாப்பி.....
#வாழ்த்துக்கள் அண்ணே!
ஆண்டு விழா முடிஞ்சுடுச்சா.. ரைட்டு.. அடுத்த ஆண்டு விழாக்கு வர்றேன்..
ஆண்டு விழா முடிஞ்சுடுச்சா.. ரைட்டு.. அடுத்த ஆண்டு விழாக்கு வர்றேன்..
இன்னும் யார் யாரெல்லாம் ஆண்டுவிழாவுக்கு வந்தாங்கனு சீக்கிரம் பதிவிடுங்க. சஸ்பென்ஸ் தாங்க முடியலை ...,
Post a Comment