Monday, December 13, 2010

வலைச்சரத்தில் குமுறிய டெர்ரர் கும்மி குரூப்ஸ்.....!

கடந்த வாரம் வலைச்சரத்தில் எழுதிக் கொண்டிருந்த பொழுது, நண்பர் வெங்கட், வலைச்சரத்துல இதுவரைக்கும் ஒரு பதிவுக்கு வந்த அதிகபட்ச கமென்ட் 320 தான். அத பிரேக் பண்ண முயற்சி பண்ணுங்களேன்னு சொன்னார். நானும் சரி பார்ப்போம்னு சொல்லி வைத்தேன். அடுத்த நாள் காலைல பாத்தா கும்மி டீம் மெம்பர்ஸ்லாம் தீயா நிக்கிறாங்க, எப்படியும் ரிக்கார்ட் பிரேக் பண்ணனும்னு! அப்போ இலக்கு 500 ன்னு தான் வெச்சாங்க. ஆனா புல்லட் ட்ரெய்ன் கெளம்புன மாதிரி கெளம்புச்சு பாருங்க நம்ம கும்மிப் பட்டாளம், 1300 தாண்டி எமர்ஜென்சி பிரேக் போட்டுத்தான் நிப்பாட்ட முடிஞ்சது. கடைசியா இன்று காலை வரை உள்ள கமென்ட்டுகளின் எண்ணிக்கை 1328.

ஆனால் தமிழ்ப்பதிவர்கள் வட்டாரத்தில் இதுவரை அதிகபட்சமாக 16000 கமென்ட்டுகள் ஒரே பதிவில் போடப்பட்டிருப்பதாகத் தகவல். அதை எங்கள் டெர்ரர் கும்மி குரூப்ஸ் சீக்கிரமே முறியடிக்க வாழ்த்துகிறேன்!

.




கமென்ட்டுகள் போட்டு சாதனை நிகழ்த்த ஆதரவு தந்த மற்ற நண்பர்கள்
மற்றும் அனைவருக்கும் நன்றி!

தொடர்ந்து இணைந்திருப்போம் நண்பர்களே.....!



பி.கு.: நண்பர்கள் பெயர் எதுவும் விடுபட்டிருக்குமானால் பொறுத்தருள்க...!







டாகுடரின் காவலன் ரிலீசை எதிர்பார்த்த படி....

(வறுத்தகரிய...சேச்சே...  விருதகிரியவே கண்ட கண்ட பயலுக எதிர்பார்த்துக் கெடந்து பாத்தானுக, நாம காவலன் படத்த எதிர்பார்க்கக் கூடாதுங்களா?)

!

Thursday, December 9, 2010

அமெரிக்காவில் இருந்து எனக்கு வரும் மெயில்கள்....!



ரெண்டு வருசத்துக்கு முன்னாடி பாரின்ல (அமெரிக்காவுல) இருந்து ஒருத்தரு ஈமெயிலு அனுப்பி இருந்தாருங்க. நமக்கெல்லாம் பாரின்ல இருந்து மெயில் வருதே என்னமோ ஏதோன்னு அவசரம் அவசரமா தொறந்து படிச்சா....அது அவரு என்னமோ மருந்து விக்கிறாராம் உங்களுக்கு வேணுமான்னு கேட்டிருந்தாருங்க. அது என்ன மருந்துன்னா கேக்குறீங்க, அட ஏங்க, நீங்க வேற,  தலவலி மருந்தா இருந்தா பரவால்லியே அது என்னமோ வயாகராவாம், எனக்குன்னு பெசல் ஆஃபராம். அதுக்குத் தபால் செலவு வேற தள்ளுபடியாம்.. எது எதுக்கு தள்ளுபடி கொடுக்குறானுங்க, பாத்தீங்களா?


நான் வேற பொறுப்பா, சாரி சார், இந்த மருந்து எனக்கு தேவையில்ல, எங்க ஊருலேயே இது சீப்பா கெடைக்குது, வேற யாராவது தேவைப்படுறவங்களுக்கு கொடுங்கன்னு ரிப்ளை போட்டேன். அன்னிக்குப் புடிச்சதுங்க கெரகம், ரெண்டு வருசமா, டெய்லி அந்த ஆளு எனக்கு மெயில் பண்றாருங்க. அந்த மருந்தே வாங்கித்தான் ஆகனும்னு அடம் புடிக்கிறாருங்க. நானும் என்னென்னமோ பண்ணிப் பாத்துட்டேங்க, ஆளு மசியற மாதிரி இல்ல. ஸ்பேம்ல போட்டாலும் பேர மாத்தி மாத்தி வர்ராருங்க. வயாகரா வாங்குனாத்தான் விடுவார்னு என் பிரண்டு சொல்றான், அதுனால யாருக்காவது இந்த மருந்து வேணும்னா சொல்லுங்கய்யா.... இவன அப்பிடியே உங்க கூட கோர்த்து விடுறேன்...!


என்னத்தச் சொல்ல?

இதாவது பரவால்லீங்க, இன்னொருத்தன் பண்ற அட்டூழியத்துக்கு. அவனும் அதே ஊருதாம்போல! ஒரு 6 மாசத்துக்கு முன்னாடி இருக்கும்னு நெனக்கிறேன், ஒரு நாளு உங்க ப்ரண்ட்ஸ பாக்கனுமான்னு சப்ஜக்டோட ஒரு மெயில் வந்துச்சுங்க. ஓப்பன் பண்ணிப் பாத்தா இந்தப் பன்னாட, உங்க ஏரியாவுல இருக்க பொண்ணுங்க டீடெயில் வேணுமான்னு கேட்டிருந்துச்சுங்க,



நானும் அத நம்பி, நம்ம சிரிப்பு போலீசுக்கு வேற உதவியா இருக்குமேன்னு நெனச்சு எங்க ஊரு சென்னைங்க, அங்க உள்ள பொண்ணுங்க டீட்டெயில் மட்டும் அனுப்புங்கன்னு ரிப்ளை பண்ணேன். அப்புறம் அனுப்புனாம் பாருங்க ரிப்ளை, கருமம் கருமம், சே...சே....  எல்லாம் கண்றாவி கண்றாவியா...சே.... அதுவும் சென்னையிலேயாம். இந்தக் கொடுமைய எங்க போயி சொல்ல?


நான் உடனே ரொம்பக் கடுப்பாயி திட்டி மெயில் போட்டேன். ஏண்டா இப்பிடி கேவலமான படமா அனுப்புற? அதுவும் நீ அனுப்புனது சென்னை பொண்ணுங்களே இல்லேடான்னு. ஆனா, அந்த  நாதாரி  அதையெல்லம்  கொஞ்சம் கூடக் கண்டுக்கவே இல்லங்க. அன்னில ஆரம்பிச்சதுங்க,  இன்னிக்கு வரைக்கும் ஒரு நாளு கூட கேப் விடல அந்த ராஸ்கல், தெனம் தெனம் அனுப்பிக்கிட்டே இருக்கான்.  நானும் ஒரு நாளாவது தப்பித் தவறி அவன் நம்ம சிரிப்பு போலீசுக்கு ஏத்த மாதிரி பொண்ணுங்க வெவரம் அனுப்பிடுவானோன்னு டெய்லி செக் பண்ணிக்கிட்டுதான் இருக்கேன். இன்னும் முடியலங்க.....

இதெல்லாம் பரவால்லை, இன்னொருத்தன் அனுப்புறாம்பாருங்க, அந்தக் கருமத்த பசங்ககிட்ட கூட சொல்லமுடியாதுங்க, அப்பிடி ஒரு கேவலமான மேட்டர, அந்த நாதாரி வேல மெனக்கெட்டு எனக்கு டெய்லி அனுப்புதுங்க. நானும் தெரியாமத்தான் கேக்குறேன், இந்தப் பன்னாடப் பரதேசிங்களுக்கு வேற வேலையே இல்லையா?

இதுல வேற நம்ம பட்டாபட்டி, மங்குனி எல்லோருக்கும் மெயில்லேயே 1000 கோடி, 2000 கோடின்னு  கொடுக்குறானுங்களாம், நமக்கு ஒரு பயபுள்ளையும் அந்த மாதிரி அனுப்ப மாட்டேங்கிறானுகளே. (ஒரு வேள நாம பிரபல பதிவர் இல்லேன்னு அவனுகளுக்கும் தெரிஞ்சுடுச்சோ?)  நமக்கு மெயில் அனுப்புற நாதாரிகள்லாம் சொல்லி வெச்சா மாதிரி கோக்குமாக்காவேதான் அனுப்புறானுங்க. இவனுகளால, இப்பல்லாம் பக்கத்துல யாரையும் வெச்சுக்கிட்டு மெயில் ஓப்பன் பண்றதே இல்லீங்க...!


அப்புறம் உங்களுக்கும் யாராவது மெயில்ல 1000 கோடி பணம் கொடுத்தாங்கன்னா (கொடுப்பாங்க......), எனக்கும் கொஞ்சம் கொடுத்து ஹெல்ப் பண்ணுங்ணா, உங்க வசதிக்காக கீழ என்னோட பேங்க் டீட்டெயில்ஸ் கொடுத்திருக்கேன், அப்பிடியே பொத்துனாப்பல் ட்ரான்ஸ்பர் பண்ணிடுங்க, சரியா?

கணக்காளர் பெயர்: பன்னிக்குட்டி ராம்சாமி
கணக்கு எண்: 88888 88888 88888
பாஸ்வெர்ட்: ********
PIN நெ.:****
வங்கி: பேங்க் ஆப் 'ஆப்பு'ரிக்கா, உகாண்டா கிளை

 இந்த டிடி, ட்ரான்ஸ்பர், லொட்டு லொசுக்கு கமிசன்லாம் கழிச்சிட்டே அனுப்பிதொலைங்க.. என்ன தெரியுதா?


அப்புறம், ஒரு சின்ன ஹெல்ப்பு வேணும் சார்,  பிரபல பதிவர்களுக்கு வந்து கொண்டிருக்கும் இந்த 1000 கோடி, 2000 கோடி மெயில் எனக்கும் வர்ர மாதிரி ஏதாவது பண்ணமுடியுமா சார்?


!

Monday, December 6, 2010

வலைச்சரத்தில் நான்........!





எல்லோரும் ஒழுங்கா அப்பிடியே வலைச்சரத்துக்குப் போங்க.....!
ஏன்னா நம்ம பன்னிதான் இந்த வாரம் ஆசிரியராம்...!
போ...போ...போய்க்கிட்டே இரு.........!



நாங்களும் அங்கேதான் போறோம், நீங்க வரலியா?

(நன்றி சுரேஷ் கண்ணன் சார், புகைப்படத்திற்கு!)

Sunday, December 5, 2010

சிரிப்பு போலீசின் சாதனை....!

நண்பர் சிரிப்பு போலீஸ் அவர்கள், பதிவுல டாக்டர். கேப்டன் ரசிகர் மன்றத் தலைவராக கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்டது எல்லோருக்கும் தெரியும் என்று எண்ணுகிறேன். பதவியேற்று ஒரே வாரத்திற்குள் அடுக்கடுக்காக டாக்டர். கேப்டனின் பற்றியும் அவர் படத்தினைப் பற்றியும் எழுதித் தள்ளி அவர் புகழை எட்டுத் திக்கும் பரவச் செய்துவிட்டார். அதன் விளைவாக மங்குனி அமைச்சர் போன்ற பிரபல பதிவர்களே டாக்டர். கேப்டனை பற்றி எழுதி ஓட்டு வாங்கும் நிலைக்குத் தள்ளப் பட்டார்கள்.

இன்னிலையில் தான் சிரிப்பு போலீஸ் அவர்கள் அரும்பெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்.

அதை நிகழ்த்த எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டார் என்பது என்னைப் போன்ற சிலருக்கு மட்டுமே தெரியும். மன்றத் தலைவராக பதவியேற்ற அடுத்த வினாடியே எங்கெங்கோ போன் கால்கள் செய்து பரபரபாக டாக்டர். கேப்டனின் புகழ் பரப்பும் வேலையில் இறங்கிவிட்டார். அவர் செய்த முதல் போன், தமிழகத்தின் அதிகாரம் வாய்ந்த குடும்பத்தைச் சேர்ந்த தொழிலதிபருக்கு.

அவரிடம் சென்று கெஞ்சி, காலில் விழுந்து காரியத்தைச் சாதித்தே விட்டார். விளைவு, முதற்கட்டமாக  இன்று மாலை 4.00 மணீக்கு சன் டீவியில் டாக்டர். கேப்டன் அவர்கள் நடித்த புத்தம் புது சூப்பர் ஹிட் திரைப்படம் "எங்கள் ஆசான்"  ஒளிபரப்பாகிறது. காணத்தவறாதீர்கள். இனி வாரந்தோறும் டாக்டர். கேப்டன் அவர்கள் படமே ஒளிபரப்பாகுமாறு நமது சிரிப்பு போலீஸ் அவர்கள் மேலிடத்தில் பேசி ஏற்பாடு செய்து விட்டார்கள்.

இசெய்தியைக் கேள்விப்பட்டதும் அதனை உங்கள் அனைவருக்கும் உடனே  தெரிவிக்க வேண்டும் என்ற கடமை உணர்ச்சியின் காரணமாகவும்,  சாதனை  புரிந்த சிரிப்பு போலீசை வாழ்த்தவும்  ஓடோடி வந்து அயராத பணிச் சுமைகளுக்கிடையிலும் பதிவிடுகிறேன்...!

எத்தகைய சாதனை...! எத்தகைய உதவி இது.....!  இதற்கு நாம் எல்லோரும் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்? சற்று சிந்தித்துப் பார்ப்பீர்........! இதுபோல் இன்னும் பல சாதனைகள் புரிய சிரிப்பு போலீசை வாழ்த்துவோம்.

டாக்டர். கேப்டனுடன் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுவிட்ட சிரிப்பு போலீஸ் அவர்களின் அயராத முயற்சிகளுக்கு ஆதரவு தாரீர் என்று வேண்டிக் கொண்டவனாக இதை முடித்துக் கொள்ளுகிறேன்.


வாழ்த்த வயதில்லை. எனவே வணங்குகிறேன்...சிரிப்பு போலீஸை.....!








வாழ்க டாக்டர். கேப்டன்  !                                                        வளர்க சிரிப்பு போலீஸ்!

புகைபட உதவிக்கு நன்றி எஸ்.கே
!

Wednesday, December 1, 2010

லிவிங் டுகெதருக்கு நீங்கள் லாயக்கா? தெரிந்துகொள்வது எப்படி? (18+)

லிவிங் டுகெதெரப் பத்தி நம்மாலுக எழுது எழுதுன்னு எழுதி் கிழிச்சு, தொவச்சு, கசக்கிப் புழிஞ்சு காயப்போட்டுட்டாங்க. ஏதோ கொஞ்சம் நஞ்சம் வெளங்குனவங்களையும் போட்டு நல்லாக் கொழப்பிக் குட்டைய கலக்கி விட்டாச்சு. இப்படியே போயிக்கிட்டு இருந்தா அப்புறம் கலாச்சாரம் என்ன ஆகுறதுன்னு ரொம்பக் கவலையாப் போச்சுங்க!

கலாச்சாரம், லிவிங் டுகெதெரப் பத்தி, எழுதுனவங்க எல்லாரும், ஒரு முக்கியமான விஷயத்த மறந்துட்டாங்க. யார், யாருக்கு, லிவிங் டுகெதர் பொருந்தும், யார் யாருக்கு கலாச்சாரம் தான் சரின்னு யாருமே சொல்லலை. இதுக்கிடையில, நம்ம சர்வே முடிவுகள் வேற நாம அபாயகட்டத்த நோக்கிப் போயிக்கிட்டு இருக்கோம்னு சொல்லுது! அதுனால நம்ம ஆராய்ச்சிய தீவிரப் படுத்தி, யார் யாருக்குலாம் லிவிங் டுகதெர் பொருத்தமா இருக்கும்னு கண்டுபுடிக்கிறதுக்காக ஒரு டெக்னிக்க  உருவாக்கியாச்சு.

வழக்கம்போல டெஸ்ட்டுதான் (ஆரம்பிச்சுட்டான்டா...!)... ஆனா இதுல ரெண்டு ஸ்டேஜா வெச்சசிருக்கேன். (எல்லாம் ஒரு டெவலப்மென்ட்டுதான் ஹி..ஹி..!)

1. பிரிலிமினரி
2. மெயின்

ரெண்டையும் பாஸ் பண்ணிட்டீங்கன்னா, உங்களுக்கு எது பொருத்தம்னு கரெக்டா தெரிஞ்சுடும்.

சரி போவமா (டெஸ்ட்டுக்குத்தான்.......!)


பிரிலிமினரி டெஸ்ட்:

1. ஒட்டகத்தை எப்படி ரெஃப்ரிஜ்ரேட்டருக்குள்ள (ஃப்ரிட்ஜ்தான் ஹி..ஹி.....!) வைக்கிறது?

யோசிங்க......
......
.......

யோசிங்க.......
......
......

என்ன தெரியலியா...? ஏன் சார் இப்படித் தேவையில்லாம காம்ப்ளிக்கேட் பண்றீங்க?  ஃப்ரிட்ஜ் கதவத் தொறந்து    ஒட்டகத்த உள்ள வெச்சிட்டு கதவ சாத்த வேண்டியதுதானே...!

சரி சரி, நெக்ஸ்ட் கொஸ்டின் போவோம், மனச திடப்படுத்திக்குங்க.....!


2. யானையை ஃப்ரிட்ஜுக்குள் வைப்பது எப்படி?

....
....
....
என்னது, ஃப்ரிட்ஜ் கதவத் தொறந்து    யானைய உள்ள வெச்சிட்டு கதவ சாத்தனுமா?

சாரி ராங் ஆன்சர்.....

நல்லா யோசிங்க.....
...
...
யோசிங்க........
.....

.....

சரி இதையும் நானே சொல்லித் தொலையறேன்....!  ஃப்ரிட்ஜத் தொறந்து மொதல்ல ஒட்டகத்த வெளிய எடுக்கோனும், அப்புறம் யானைய உள்ள வெக்கோனும்.... என்ன புரியுதா?

ஹி...ஹி....! வேறவழி ... ? நெக்ஸ்ட்டு என்னான்னு பாப்போம்!


3. காட்டு ராஜா சிங்கம் எல்லா அனிம்ல்ஸையும் கூப்புட்டு ஒரு பெரிய மீட்டிங்க் போட்டுச்சாம். கரெக்டா எல்லா மிருகமும் வந்துடுச்சு, ஒண்ணு மட்டும் வரல, அது எது, ஏன்?

....
யோசிங்கப்பு.....

நல்லா....

இன்னும்....


என்னது இதுவும்  தெரியலையா.....

சரி..சரி.. இதுவும் நாந்தான் சொல்லனுமா?

யானைதான்யா அந்த மீட்டிங்குக்குப் போகாத மிருகம்...!  அது எப்பிடி சார் போகும்...நீங்கதான் அத ஃபிரிட்ஜுக்குள்ள வெச்சுட்டீங்களே? என்ன சார் இது யானைய ஃப்ரிட்ஜ் உள்ள நீங்களே வெச்சிட்டு இப்படி அநியாயமா தெரியாதுன்னு சொல்றீங்க?

சரி சரி பீலீங்ஸ கன்ட்ரோல் பண்ணிக்கிட்டு அப்பிடியே நாலாவது கேள்விக்குப் போவோம்!


4. நீங்க ஒரு ஆத்தக் கடக்கனும், உங்களுக்கு நீச்சலும் தெரியும். ஆனா அந்த ஆறு முழுக்க பயங்கர முதலைகள் வாழ்ற இடம். இப்போ என்ன பண்ணுவீங்க?
(உங்ககிட்ட போட் எதுவும் கிடையாது, ஞாபகம் வெச்சுக்குங்க!)

என்ன..யோசிக்கலையா... (எப்படியும்  நான் சொல்லிடுவேன்னு தெகிரியம்....?)

ம்ஹும் மொதல்ல நீங்களே யோசிங்க.....அப்புறம் நான் சொல்றேன்....

....
...
...
...
..

சரிப்பா நானே சொல்லிடறேன்.

முதலைக தான் சிங்கம் கூப்பிட்ட அனிமல்ஸ் மீட்டிங்குக்கு போயிடுச்சுல்ல, அப்புறம் என்ன?  நீங்கபாட்டுக்கு ஜாலியா நீந்திப் போகவேண்டியதுதானே... ?


பொறுமை.....பொறுமை.. இப்படியெல்லாம் உணர்ச்சி வசப்படக்கூடாது, மொதல்ல கல்ல கீழ போடுங்க.. அமைதியா உக்காருங்க....  கண்ணத் தொடைங்க.....! இன்னும் மெயின் டெஸ்ட்டுக்கே போகல, அதுக்குள்ள இப்படிப் பண்ணா எப்படி?

பிரிலிமினரி யாரும் பாஸ் பண்ணியிருக்க மாட்டீங்க, தெரியும்(பண்ணியிருந்தாலும் ஒத்துக்கவே மாட்டேன்.. ஹி...ஹி...!), அதுனால எல்லாரும் அப்பிடியே மெயின் டெஸ்ட்டுக்குப் போங்க

மெயின் டெஸ்ட்:
கிழ உள்ள படத்த நல்லா உத்துப் பாருங்க.


படத்துல எத்தன டால்பின்ஸ் இருக்குன்னு கரெக்டா எண்ணனும்....!  5 செகண்டுக்குள்ள எண்ணி முடிக்கனும்..... ஆமா!

டால்பின்சை சரியாக கண்டுபிடித்துவிட்டவர்களுக்கு:
வெரிகுட்... கெளம்புங்க சார்,  போயி சீக்கிரமா ஒரு ஆளப் புடிங்க சார், லிவிங் டுகெதருக்கு.....!
(எத்தனை டால்பின்ஸ் என்று கன்பர்ம் பண்ண விரும்புபவர்கள்.... கரெக்ட்..... அதேதான்.....  ரூபாய் 999  முன்பணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்!)

மற்றவர்களுக்கு:
என்னது டால்பினே தெரியலியா....  ஏதோ ஏடாகூடமா தெரியுதா? சாரி சார், உங்களுக்குக் கலாச்சாரம்தான் லாயக்கு.... லிவிங் டுகதரையெல்லாம் மூட்ட கட்டி வெச்சிட்டு, போயி கல்யாணத்தப் பண்ணுங்க... சார்....!


சரி கடைசியா ஒரு கொசுறு கேள்வி:



நம்ம அனுஷ்கா லிவிங் டுகெதருக்குக் கூப்பிட்டா போவிங்களா?

அ) போவோம்னு சொல்றவங்க... பாசிட்டிவ் ஓட்டுப்போடுங்க.....

ஆ) போகமாட்டோம்னு சொல்றவங்க......

வெயிட் வெயிட்.....

நீங்களும் பாசிட்டிவ் ஓட்டுதான் போடூறீங்க (நான் என்ன மங்குனியா? பிச்சிபுடுவேன் பிச்சி!) ஓட்டப் போட்டுட்டு, சுட்டி டீவில டோராவின் பயணங்கள் ஸ்டார்ட் ஆகப் போவுது, சீக்கிரமாப் போயி குச்சி முட்டாய சப்பிக்கிட்டே எஞ்சாய் பண்ணுங்க....!

பி.கு.: அனுஷ்கா பிடிக்காது(!) என்று சொல்பவர்கள் (அப்பிடி யாரும் இருக்கீங்களா?)  மற்றவர்களை வைத்தும் ஓட்டுப் போடலாம்! மேலும் அது யார் என்று கமென்ட்டில் தெரிவித்து இன்புறலாம்!




!

Monday, November 29, 2010

(பிரபல)பதிவர்கள் பார்த்த பிட்டுப்பட பெசல் (ஃ)ப்ரிவியூ ஷோ...!


நம்ம ஓலப்பட்டி ஒண்டிப்புலி புதுசா ஒரு பிட்டுப் படத்த சொப்பன சுந்தரிய வெச்சு சுத்திச் சுத்தி ராவோடு ராவா எடுத்து முடிச்சிட்டாரு. அவருக்கு ஒரு தீராத ஆசை, பிரபல பதிவருங்கள்லாம் படத்தப் பாத்துப்புட்டு ஒரு நாலு வார்த்த நல்ல வார்த்த எழுதுனாங்கன்னா நல்ல பேரு வாங்கி படத்த ஓட்டிப்புடலாமேன்னு…  ! உடனே நம்ம சி.பி. செந்தில்குமார் சார கூப்புட்டு விஷயத்தச் சொல்லி பதிவர்கள் அனைவரையும் கூட்டிட்டு வாங்கன்னு சொல்லிட்டாரு. பிட்டுப் படம் அதுவும், ஓசிலேன்னா கேக்கவா வேணும், எல்லோரும் லீவு போட்டுட்டுச் சோறு தண்ணி கூட சாப்புடாமக் கெளம்பிட்டாய்ங்க.
தியேட்டர் டேமேஜர் கவுண்டரு வாசல்ல நின்னு ஒவ்வொருத்தரா வரவேற்கிறாரு. வாங்க நாமும் போயி என்ன நடக்குதுன்னு பார்ப்போம்..!
மொத.. ஆளா (?) மங்குனி அமைச்சர் தான் வரார்.
கவுண்டர்: வாங்க சார்…வாங்க  அது என்ன ஏதோ வயர இழுத்துக்கிட்டு வரீங்க?
மங்குனி அமைச்சர்: அது இன்டர்னெட் கனெக்சன், நேரா எங்க வீட்ல இருந்து வருது, ஏன்னா நான் டெய்லி 6 மணிக்கு பதிவு போடனும். இல்லேன்னா சூனியம் வெச்சிடுவாய்ங்க… !
கவுண்டர்: (ஏற்கனவே எழெட்டுத் தடவ வெச்ச மாதிரிதான் இருக்கு…!) ஆங்… இங்க கக்கூசுலாம் நல்லாத்தானுங்க இருக்கும், நீங்க 6 மணி என்ன 7 மணி வரைக்கும் கூட இருந்துட்டுப் போகலாம்…!
மங்குனி அமைச்சர்: அய்யா நான் சொன்னது ஆயி அல்ல, பதிவு…! பதிவு சார் பதிவு….! அதுக்கு இன்டர்னெட் கனெக்சன் வேணும், அதுக்குத்தான் இந்த வயர் கனெக்சன்…!
கவுண்டர்: என்ன கருமமோ.. என்ன கனெக்சனோ….  படம் முடியற வர யாருக்கும் ஒண்ணும் ஆகாம இருந்தா சரி…..!
மங்குனி அமைச்சர்: அப்போ இந்தப்படம் பார்ப்பது சரியா தவறான்னு இந்த பட்டன அமுக்கி உங்க கருத்த பதிவு பண்ணுங்க சார்…
கவுண்டர்: சார், மொத ஆளா வந்திருகீங்க,  பேசாம அப்பிடியே உள்ள போயிடுங்க சார்… இல்லே அப்புறம் வெட்டுக்குத்தாகிப் போயிடும் சொல்லிட்டேன்….!
 ...................................
பட்டாபட்டி: சார் படம் எந்த மொழில எடுத்திருக்காங்க?
கவுண்டர்: ஒலகத்துலேயே ஒரு பிட்டுப்படம் எந்த மொழின்னு கேட்ட மொத ஆளு நீதான்யா…!
பட்டாபட்டி: அதுக்கில்ல சார், இத்தாலி இல்ல கொலம்பியா மொழி, ரெண்டுல மட்டும் தான் நான் படம் பார்ர்ப்பேன், அதுனால தான் கேட்டேன். நல்லா ரோசன பண்ணிச் சொல்லுங்க…ஹி..ஹி..!
கவுண்டர்: யோவ்.. போஸ்டர பாக்கலே? இது தமிழ்ப் படம்யா…
பட்டாபட்டி: அப்போ நான் இந்தப் படம் பார்க்க மாட்டேன்…. சரி ஹீரோ யாரு..?  வந்ததுக்கு அதாவது தெரிஞ்சிட்டுப் போறேன்…ஹி..ஹி….!
கவுண்டர்: (கருமாந்திரம் புடிச்சவனுங்க, பிட்டுபடத்துல போயி ஹீரோ யாருன்னு கேக்குறானுங்க, சே… !)  அது வந்து… ஹீரோ.. யாரோ புதுமுகம் சார்… பேரு….  ராகுல்….
பட்டாபட்டி: யோவ்… இத மொதல்ல சொல்லித்தொலைய வேண்டியதுதானே? என் தானைத்தலைவன் நடிச்சிருக்கான் அந்தப் படத்த நான் பாக்கலைன்னா எப்படிய்யா.. ? நான் இப்பவே உள்ள போறேன்…தானைத்தலைவன் ராகுல் வாழ்க, அன்னை சோனியா வாழ்க….!
கவுண்டர்: அடங்கப்பா சாமி….. நல்ல வேள ஹீரோ பேரு ராகுல்னு மாத்தி சொன்னேன்….  இப்போ உள்ள போயி ஹீரோ பேரு தொங்கபாலுன்னு தெரிஞ்ச உடனே என்ன பண்ணப் போறாரோ……?
 ...................................
சிரிப்பு போலீஸ்: சார், இந்தக்கேமராவப் புடிங்க… அப்பிடியே என்ன எடுங்க சார், கேட்டுல நிக்கிற மாதிரி, டிக்கட் வாங்குற மாதிரி, கக்கூஸ்ல போண்டா திங்கிற மாதிரி, கேன்டீன்ல ஆயி போற மாதிரின்னு வரிசையா எடுத்துத் தள்ளுங்க சார்…!
கவுண்டர்: ங்கொக்காமக்கா டேய்…போட்டோ எடுக்க இது என்ன ஊட்டியா, கொடைக்கானலா, இல்ல தாஜ்மகாலா? இது பிட்டுபடம் ஒடுற தியேட்டருய்யா.. இங்க வந்து போட்டோ புடிச்சு என்ன அயல் நாட்டுக்கு அனுப்பப் போறியா?
சிரிப்பு போலீஸ்: ஹலோ… உள்ள போடுற படத்த விட, வெளிய எடுக்குற இந்தப் படம் தான் எனக்கு ரொம்ப முக்கியம்.. ஏன்னா இத வெச்சே… குறைஞ்சது 25 பதிவாவது போட்ருவேன்ல?
கவுண்டர்: அய்யோ ராமா, என்னை ஏன் இந்த மாதிரி கழிசடை பசங்களோடவுலாம் கூட்டு சேக்குறே?.. டேய்… மரியாதையா உள்ள போயி கம்முன்னு படத்தப் பாரு..  மறுபடி இந்தக் கேமராவோட உன்ன எங்கேயாவது பாத்தேன்… படுவா கொள்ளிக்கட்டைய எடுத்து சொறிஞ்சு விட்ருவேன் ஆமா..!
.......................................
பனங்காட்டு நரி: சார் இந்த மந்திரப் புன்னகை பெசல் ப்ரிவியூ ஷோ இங்கதானே ஓடுது?
கவுண்டர்: அதெல்லாம் முடிஞ்சு அடுத்த ப்ரிவியூவும் போட்டாச்சு, என்ன ஒரு வாரமா ஜெயில்ல இருந்துட்டு வர்ரியா?
பனங்காட்டு நரி: அதுலாம் இல்ல சார். நான் அப்பவே கெளம்பிட்டேன், ஆனா இப்போதான் சார் தியேட்டர கண்டுபுடிச்சேன்…!
கவுண்டர்: சரி சரி வந்தது வந்த, இது பிட்டுப்படம்தான், சும்மா பாத்துட்டுப் போய்யா…!
பனங்காட்டு நரி: அடடா இந்தப் படத்த ஏற்கனவே (?) நான் பாத்துட்டேனே, சரி இருந்தாலும் இன்னொரு வாட்டி பாக்கிறேன். அப்புறம் இந்தச் சீட்ட வெச்சுக்குங்க, இதுல என் பேரு, அட்ரஸ் எழுதி வெச்சிருக்கேன். படம் முடிஞ்ச உடனே என்னக் கூப்பிட்டுக் கொடுங்க, இல்லேன்னா நான் யாரு எங்கே போகனும்னு மறந்திடுவேன்…!
கவுண்டர்: சரி சரி, இது தியேட்டர்னு மறக்க முன்னாடி உள்ள போயி உக்காரு!
....................................


கவுண்டர்: என்னய்யா உடம்பெல்லாம் காயம்.. ஹெவி டேமேஜா தெரியுதே?
டெர்ரரு பாண்டியன்: ஆமா சார், இப்போதான் ஒரு பதிவு போட்டுட்டு வர்ரேன், அதான் சுத்தி வளைச்சிப் பின்னிப் பெடலெடுத்துட்டானுங்க…
கவுண்டர்: அடப்பாவி, பாத்தா லாரில அடிபட்ட மாதிரியே இருக்கே, ஆமா…அப்பிடி என்னதான்யா எழுதுனே?
டெர்ரரு பாண்டியன்: அது புரிஞ்சா நானே அதச் சொல்லி அடில இருந்து தப்பிச்சிருக்க மாட்டேனா?
கவுண்டர்: ஓஹோ… மேட்டர் அப்பிடியா… புரியாமத்தான் அடிச்சிருக்கானுகளா, அது ஒண்ணுமில்ல தம்பி, ஒட்டகம் மேய்க்கிற பயலுக்கு இம்புட்டு அறிவான்னு எல்லாத்துக்கும் பொறாம, அதான்.
டெர்ரரு பாண்டியன்: ஆமாண்ணே…
கவுண்டர்: நீ எழுதுனத, தஞ்சாவூர் கோயில் பக்கத்துல ஒரு கல்வெட்டுல செதுக்கி வெச்சிட்டு நீயும் பக்கத்துலேயே நின்னுக்க, நமக்குப் பின்னாடி வர்ர சந்ததிகள் பாத்துப் படிச்சி என்ன ஏதுன்னு வெளங்கி நடந்துக்கட்டும்…!
.....................................

அருண்பிரசாத்: சார் படம் நல்லாருக்கும்ல? ஏன்னா இதுக்காக நான் மொரீசியஸ்ல இருந்து வந்திருக்கேன்.
கவுண்டர்: ம்ம்ம்… ஓசில பிட்டுப் படம் போட்டா உகாண்டாவுல இருந்து கூட வருவீங்கடா…
ஆமா படம் நல்லா இல்லேன்னா என்ன பண்ணுவ?
அருண்பிரசாத்: ஏன் சார் இப்பிடி அபசகுனமா பேசுறிங்க? அப்புறம் அடுத்த புதிர் போட்டுடுவேன்….
கவுண்டர்: அப்போ படம் நல்லா இருந்தா?
அருண்பிரசாத்: அப்போவும் புதிர்தான்…!
கவுண்டர்: என்னது அதுக்கும் புதிரா, ஆள விடுரா சாமி…எனக்கு இன்னும் அந்த இன்னொரு வாழைப்பழத்துக்கே வெடை தெரியல… யம்மா……!
...................................

நாகராஜசோழன் எம். ஏ: என்றா மணியா, இங்க வந்து சும்மா ஜம்முன்னு கண்ணாடியப் போட்டுக்கிட்டு நின்னுட்ட? பிட்டுப்படம் ஓசில போடுறாங்கன்னதும் சோறுகூடத் திங்காம ஓடிவந்துட்டே பாத்தியா?
கவுண்டர்: யோவ் மாப்பு, உன் நக்கலுக்கு அளவே இல்லையா?  நான் இங்கதான் மேனேஜரா இருக்கேன்னு உனக்குத் தெரியுமில்ல?
நாகராஜசோழன் எம்.ஏ.: சரி விடு மாம்சு, என்ன இங்க யாரையுமே காணோம்?
கவுண்டர்: ஏன்யா… எவ்வளவு பேரு உள்ள போயிக்கிட்டு இருக்காங்க, தெரியலியா..? உனக்கு என்ன கண்ணு கிண்ணு தெரியாமப் போச்சா?
நாகராஜசோழன் எம்.ஏ.: யோவ்… நான் கேட்டது ஜிங்லீஸ்…  என்ன… யாருமே வரலியா?
கவுண்டர்: நீ என்ன தெரிஞ்சுதான் கேக்குறீயா? இது பிட்டுபடம்யா, அவங்கள்லாம் வரமாட்டாங்க…!
நாகராஜசோழன் எம்.ஏ.: அட என்னய்யா மாம்சு நீ… அவங்கள்லாம் வராத எடத்துக்கு என்ன எதுக்கு கூப்பிட்ட? என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறீயே..? சரி நான் வேற நல்ல பசையான எடமா பாத்து போய்க்கிறேன்..!
கவுண்டர்: நீ இன்னும் இந்தப் பழக்கத்த விடலையா? இவன் இப்பிடியே காலத்துக்கும் தெள்ளவாரியாத்தான்யா  இருப்பான்!
.....................................

அப்போ நம்ம கவிஞர் தினேஷ்குமார் வேக வேகமா கவுண்டர இடிச்சிட்டு உள்ள போறாரு….
கவுண்டர்: டேய்.. ஸ்டாப்…. ஒன் ஸ்டெப் பேக் மேன்…. என்ன அது கிளிங் கிளிங்னு சவுண்டு..?
தினேஷ்குமார்: ஒண்ணுமில்ல கவுண்டரே, அது சும்மா மனப்பிராந்தியா இருக்கும்..!
கவுண்டர்: பக்கத்துல வாய்யா, அது என்ன பிராந்தின்னு கண்டுபுடிக்கிறேன்……..      அடப்பாவி, என்னய்யா இது ஒரு மாசத்துக்கு தேவையான அளவுக்கு ஸ்டாக் வெச்சிருக்கே…. என்ன ஏதாவது பிராந்திக்கடைய கொள்ளையடிச்சிட்டியா?
தினேஷ்குமார்: அதெல்லாம் ஒண்ணுமில்ல கவுண்டரே, வேணுங்கறத எடுத்துக்கிட்டு சீக்கிரம் ஆள விடுங்க, படம் போட்ர போறாங்க!
கவுண்டர்: ஓக்கே… யூ கோ….. உள்ள போயி பேசாம படத்தப் பாக்கனும், தண்ணி அடிச்சிட்டு தூங்கப்படாது… வெளிய வரும்போது படத்துல இருந்து கேள்வி கேப்பேன், என்ன தெரியுதா…  ஓக்கே…?
......................................

இம்சை அரசன்: செங்கல் வெலையெல்லாம் ஏறிப்போச்சு… ம்ம்  எப்படித்தான் இந்தத் தியேட்டர்லாம் கட்டுறாங்களோ…?
கவுண்டர்: டேய்…. ஸ்டாப்…. என்ன இது..  தனியா பொலம்பிக்கிட்டு வர்ர?
இம்சை அரசன்: அதவிடுங்க சார், இந்தத் தியேட்டர் என்ன ரேட்டுன்னு சொல்ல முடியுமா?
கவுண்டர்: தெரிஞ்சு என்ன பண்ணப் போற? வாங்கி பாக்கெட்டுல வெச்சுக்கப் போறியா? படுவா ஓசில பிட்டுப் படம் பாக்க வந்துட்டு லொல்லப்பாரு…. எகத்தாளத்தப் பாரு… ! டிக்கட்டு என்ன ரேட்டுன்னு கேளு சொல்றேன்…?
இம்சை அரசன்: நீங்க எந்த டிக்கட்ட சொல்றீங்க?
கவுண்டர்: (ம்ம்ம், இன்னமும் இந்த வேல ஒண்ணுதான் பாக்கி இருந்துச்சு, விட்டா அதையும் பண்ண வெச்சிடுவானுங்க போல….!) .. கண்ணு… அந்த டிக்கட்டுலாம் நம்ம ஒடம்புக்குத் தாங்காது ராஜா… மெள்ளமா… அப்பிடியே உள்ள போயி உக்காருமா…!
....................................

வெறும்பய: எங்கே அவள்…
கவுண்டர்: படமே பாக்கலே அதுக்குள்ள என்ன?
வெறும்பய: சும்மா பாடக்கூடதா?
கவுண்டர்: ஏன் இதோ இந்த தடியனத் தூக்கித் தலைல வெச்சிக்கிட்டு பாடுறது?
வெறும்பய: ஹி..ஹி.. அப்புறம்…. இந்தத் தியேட்டர் பேரு…என்ன?
கவுண்டர்: படுவா…..பிட்டுப் படம் ஓசில காட்டுறாங்கன்னா, தியேட்டரு பேரு கூட தெரிஞ்சுக்காம வந்துடுறீங்கடா…? இந்தத்தியேட்டர் பேரு, பறங்கிமலை ஜோதி…..!
வெறும்பய: நோ…… இந்தப் பேரு எனக்குப் புடிக்கல, நான் இந்தப் படம் பாக்கமாட்டேன்..
கவுண்டர்: புடிக்கலைனா போ…. அடங்கொன்னியா…… கொழுப்பப் பாத்தியா… படம் பாக்கமாட்டேன்னுட்டு நைஸா உள்ளே போறத….. வெளிய வரட்டும் பேசிக்கிறேன்…!
.......................................

(அப்போ மங்கி கேப் போட்டுட்டு ஒருத்தர் வரார்)
கவுண்டர்: எச்சூஸ் மி,  ப்ளீஸ்  ரிமூவ் தி கேப்…..!  
சௌந்தர்: இல்லே சார், எனக்கு ஏசின்னா ஒத்துக்காது அதான்… ஹி..ஹி… இருந்தாலும் உங்களுக்காகக் கழட்டுறேன்
கவுண்டர்:  என்னது கழட்டுனாலும் அப்பிடியேதான் இருக்கு? கருமம்… இதுக்கு நீ கழட்டாமயே இருந்திருக்கலாம்…!
சௌந்தர்: ஹி..ஹி…  சரி, இந்தப்படம் என்ன கான்செப்ட்ல எடுத்திருக்காங்க? சொல்லுங்க, தெரிஞ்சுக்காம நான் படம் பாக்கமாட்டேன்
கவுண்டர்: இந்தக் கான்செப்ட்டு… கத்திரிக்காவுலாம் எனக்குத்தெரியாது, இது பிட்டுப்படம் அவ்வளவுதான்.
சௌந்தர்: அப்படின்னா லிவிங் டுகெதெர வெச்சுதானே எடுத்திருப்பாங்க?
கவுண்டர்: சார், தயாரிப்பாளருக்கு ஏதோ கெட்ட நேரம், படம் எடுக்கனும்னு இப்பிடி வந்து மாட்டிக்கிட்டாரு. பாவம்..சார், விட்ருங்க, ஏதோ அப்பிடி இப்பிடி கொஞ்சம் நஞ்சம் கெடைக்கறதையும் கெடுத்துடாதீங்க சார்…!
சௌந்தர்: இது சரிப்பட்டு வராது, உங்களுக்கும் ஒரு கலாச்சார விருது கொடுத்தாத்தான்யா வழிக்கு வருவீங்க, இங்கேயே இருங்க, படத்தப் பாத்துட்டு வந்து அதப் பத்தி பேசுறேன்!
கவுண்டர்: என்னது பிட்டுப்படத்துக்குக் கலாச்சார விருதா? வெளங்கிரும்…….  ரொம்ப நல்லா டெவலப் ஆகியிருக்கீங்கப்பா….!
......................................

செல்வா: இது மொக்கப் படமா?
கவுண்டர்: இல்ல பிட்டுபடம்
செல்வா: அப்போ பிட்டுப்படத்துல மொக்கையே இருக்காதா?
கவுண்டர்: டேய்.. வேணாம்.. பேசாம உள்ள போயிரு….!
செல்வா: உள்ள போனா மொக்கை வருமா?
கவுண்டர்: இப்போ என் கைதான் வரும், உன் கன்னத்துக்கு…!  படுவா… முளைச்சு மூனு எல விடல அதுக்குள்ள பிட்டுப் படத்துக்கு வந்துட்டு பேச்சப் பாரு.. பிச்சிபுடுவேன் பிச்சி… மொதல்ல உன் வயசு என்ன? பர்த் சர்ட்டிபிகேட் எடு.. இல்லேன்னா உள்ள விடமாட்டேன்……
செல்வா: என்னண்ணே இதுக்குப் போயி கோவிச்சிக்கிட்டு.. ஹி… ஹி…. இது நல்ல பிட்டுப்படம், நீங்க ஒரு நல்லவரு…..  வல்லவரு…..  நாலும் தெரிஞ்சவரு… சரியாண்ணே?
கவுண்டர்: ம்ம்… இப்பிடி நல்லவிதமா நாலு வார்த்த பேசிப் பழகுற வழியப்பாரு…..! சரி போ உள்ள ….!
......................................

எஸ். கே.: மிக்க மகிழ்ச்சி!
கவுண்டர்: இன்னும் படமே ஆரம்பிக்கல, அதுக்குள்ள என்ன மகிழ்ச்சி?
எஸ். கே.: இல்ல தியேட்டருக்கு வந்ததே மகிழ்ச்சிதான்.. சூப்பர்
கவுண்டர்: என்ன சூப்பர்? போஸ்டர சொல்றிங்களா?
எஸ்.கே.: இல்ல பொதுவாச் சொன்னேன், ஆள விடுங்க சார்… படம் போட்டுடப் போறாங்க நான் உள்ள போகனும்!
........................................
கவுண்டர்: யோவ் யாருய்யா நீய்யி… இந்தப் படத்து ஹீரோ(!) மாதிரியே இருக்கே?
 மாதவன்: ஹி..ஹி.. நான் ஆளு பாக்கத்தான் ஹீரோ மாதிரி இருப்பேன், ஆனா பேரு வேற..!
கவுண்டர்: இப்போ நான் உன் பேரக் கேக்கவே இல்லியே?
மாதவன்: நானும் சொல்லவே இல்லியே?
கவுண்டர்: சரி சரி, போய்யா போ.. சீக்கிரம் உள்ள போ… அப்புறம் நீதான் இந்தப் படத்து ஹீரோன்னு எவனாவது கலாச்சார ஆளுக வந்து மூஞ்சில தார் அப்பிட போறாய்ங்க!
.....................................

ப்ரியமுடன் வசந்த்: இறகுகள், சிறகுகள், வானம், மானம்… கானம்…பானம்
கவுண்டர்: பார்ட்டி ஏதோ ஏரியா மாறி வந்துட்ட மாதிரி தெரியுதே? ஹல்லோ எச்சூஸ் மி, உங்களுக்கு என்ன வேணும்?
ப்ரியமுடன் வசந்த்: பதிவர்களுக்கு ஸ்பெசல் ஷோ போடுறாங்களே அது இங்க தானே?
கவுண்டர்: (பார்ட்டி வெவரமாத்தான் இருக்கு….) ஆமா இங்கதான், இது பிட்டுப் படம் தெரியுமில்ல?
ப்ரியமுடன் வசந்த்: தெரியும் தெரியும், எங்க இளையதளபதி விஜய்யே அசிங்கப்பட்டுடாரு..   இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் நாங்களும் நல்லவன் மாதிரியே நடிக்கிறது? சரி சரி, இந்தத் தியேட்டர்ல மன்த்லி டிக்கட் கெடைக்குமா?
கவுண்டர்: நீங்க கேட்டா மன்த்லி என்ன, இயர்லியே கெடைக்கும் தம்பி,  உங்கள மாதிரி ஆளுகள நம்பித்தானே இந்த மாதிரி தியேட்டரே நடத்துறோம்… மொதல்ல படத்த பாத்துட்டு வாங்க, அப்புறம் உக்காந்து இதப் பத்தி டீட்டெயிலா பேசுவோம்!
......................................
தேவா: #%$^%^  &^*((*(*  &#$%#
கவுண்டர்: சார் என்ன கேட்டீங்க?
தேவா: @#$%$% ^ %&&@ # %$%^$
கவுண்டர்: (அய்யய்யோ என்னது இது,  இதுவரைக்கும் கேள்விப்படாத மொழியா இருக்கு?)
நல்லவேள… ஆளு அவரே…உள்ள போயிட்டாரு….!
......................................

கவுண்டர்: யோவ் வாட்ச்மேன்… என்னய்யா அது.. கன்டெயினர் லாரிலாம் உள்ள வருது?
வாட்ச்மேன்: யரோ உண்மைத்தமிழன்னு பதிவராம் அவருதுதாங்க அந்தக் கன்டெயினரு. அது புல்லா வெள்ளைப் பேப்பருங்களாம். இதே மாதிரி இன்னொரு கன்டெயினரும் வருதாம், அது புல்லா பேனாவாம்… சார்!

கவுண்டர்: ஆல் ப்ரோகிராம் கேன்சல்…. மேட்டர் ஓவர்! (அப்படியே மயங்கி விழுகிறார்!)

பி.கு.: ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே நேரடியாகச் சென்று பார்த்து விமர்சனம் எழுதிவிட்டதால், நம்ம சி.பி. செந்தில்குமார் அவர்கள் இந்த பிட்டுப் பட ஸ்பெசல் ஷோவுக்கு வரவில்லை… !


!

Thursday, November 25, 2010

சார்... சார்... 'பின்''நவீன'த்துவம்னா என்ன சார்?

பன்னிக்குட்டி: என்ன அமைச்சரே ரொம்ப டல்லா இருக்கீங்க?

மங்குனி அமைச்சர்: ஆமாப்பா, நேத்துதான் ஊர்ல இருந்து ட்ரெய்ன்ல வந்தேன், ட்ரெய்ன்ல அப்பர் பெர்த்துதான் கெடச்சது. தூக்கமே வரல. ஒரே தலைவலி!

பன்னிக்குட்டி: இது ஒரு பிரச்சனையா? லோயர் பெர்த்துல இருந்தவங்ககிட்ட சொல்லி மாத்திக்க வேண்டியதுதானே?

மங்குனி அமைச்சர்: நானும் அப்பிடி நெனச்சுத்தான் வெயிட் பண்ணிக்கிட்டு  இருந்தேன், ஆனா கடைசி வர லோயர் பெர்த்துக்கு யாருமே வரல...!

........................................

மங்குனி அமைச்சர், சென்னைக்கு வந்த புதுசுல, நண்பரோடு சூப்பர் மார்க்கெட்டுக்கு போயிருந்தார். அங்கே...

மங்குனி அமைச்சர்: இது என்ன?

நண்பர்: இது ஆரஞ்ச் ஜூஸ் மிக்ஸ்...

மங்குனி அமைச்சர்: அப்படின்னா?

நண்பர்: அப்படின்னா... ஆரஞ்சு ஜூஸ் பவுடரு, தண்ணியோட கலந்தா ஆரஞ்ச் ஜூஸ் வரும்.

மங்குனி அமைச்சர்: ஓ.... சரி...சரி..,  இது என்ன?

நண்பர்: மில்க் பவுடரு....

மங்குனி அமைச்சர்: தண்ணில மிக்ஸ் பண்ணா மில்க் வரும் அதுதானே?

நண்பர்: ஆமா.. பரவால்லயே வெரி குட்...

மங்குனி அமைச்சர்: சரி, இது என்ன?

நண்பர்: இது பேபி பவுடர்...

மங்குனி அமைச்சர்: அப்படின்னா....... அய்யயோ அடப்பாவிங்களா....... இங்க அந்தளவுக்கு போயிட்டீங்களாடா? இது கலாச்சாரச் சீரழிவு இல்லடா, கலாச்சாரப் பேரழிவு.....!


...................................................
சிரிப்பு போலீஸ்: நேத்து ஸ்பென்சருக்கு ஷாப்பிங் போயி ரொம்ப பேஜாராயிடுச்சுப்ப்பா...!

பன்னிக்குட்டி: ஏன் யாரையாவது கையப் புடிச்சி இழுத்திட்டீங்களா போலீஸ்கார்?

சிரிப்பு போலீஸ்: சேச்சே... இப்பல்லாம் அப்பிடி பண்றதில்ல... எஸ்கலேட்டர்ல போயிட்டு இருக்கும் போது திடீர்னு பவர் கட் ஆயிடுச்சு.

பன்னிக்குட்டி: அய்யய்யோ.. .. அப்புறம்?

சிரிப்பு போலீஸ்: அப்புறம், வேற என்ன பண்றது....? பவர் வர வரைக்கும் எஸ்கலேட்டர்லேயே உக்காந்திருக்க வேண்டியதாப் போச்சு...!

.......................................................
பன்னிக்குட்டி: என்னது நம்ம சிரிப்பு போலீச பின்னியெடுத்துட்டாங்களா.. ஏன்?

மங்குனி அமைச்சர்: நேத்து நைட்டு லேட்டா வந்திருக்கார். ஒரு கான்ஸ்டபிளு, பைக்க நிறுத்தி, யாரு நீங்க, எங்க போறீங்கன்னு கேட்டாராம். அதுக்கு இவரு பழக்கதோஷத்துல நான் தான் சிரிப்பு போலீசுன்னு சொல்லியிருக்காரு, அவ்வளவுதான் அப்பிடியே தூக்கிட்டுப் போயி பட்டையக் கெளப்பிட்டானுங்க...!


....................................................
 
பன்னிக்குட்டி: அங்க என்னய்யா கலாட்டா?

சிரிப்பு போலீஸ்: ரேசன் கடை கியூவுல மொத ஆளா நின்னதுக்குப் போயி நம்ம செல்வா வடை குடுங்கன்னு அடம் பிடிச்சிருக்கான். அதான் அடிச்சிக்கிட்டு இருகாங்க.

பன்னிக்குட்டி: சரி சரி, அடிச்சி முடிச்சு இங்க அனுப்பி வெக்க சொல்லு...!


..................................................
பன்னிக்குட்டி: என்னது நம்ம சி.பி. செந்தில்குமாரு சாரு அவசரமா கேரளா போயிருக்காரா... ஏன்?

சிரிப்பு போலீஸ்: ஆமா அவரு எழுதுன பிட்டுப்பட விமர்சனம் நல்லா இல்லேன்னு, அந்தப் பட டைரக்டரு, அடுத்த படத்துக்கு விமர்சனம் எழுத ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வரச்சொல்லிட்டாராம்!

பன்னிக்குட்டி: அடடடா....   நாமலும் போறதுக்கு ஏதாவது வழி இருக்கா...?

சிரிப்பு போலீஸ்: இது டூ லேட்..... நம்ம மங்குனி அமைச்சரு அல்ரெடி  சீக்ரெட்டா போயிட்டு  வந்திட்டாரு....

..........................................


செல்வா: நம்ம கேப்டன் தோனியில்ல, அவரு ஹர்பஜன் கிட்ட ரெண்டு பெப்சி வாங்கிட்டு வரச்சொன்னாரு. பெப்சி வங்கிட்டு வந்த ஹர்பஜன் தோனிகிட்ட போகாம, ஷேவாக் கிட்ட போனாரு ஏன்?

பன்னிக்குட்டி: ஏன்?

செல்வா: ஏன்னா... ஷேவாக் தானே ஓப்பனரு?

.........................................................
செல்வா: நம்ம டெர்ரரு ஆபீஸ் போகும்போதும் வரும்போதும், நடுவழிலே டிபன் பாக்ச ஓப்பன் பண்ணிப் பார்ப்பாரு, எதுக்கு?

பன்னிக்குட்டி: டிபன் பாக்ஸ் அவருது தானான்னு செக் பண்றதுக்காகப் பார்ப்பாரா..?

செல்வா:  இல்ல...  இல்ல.... அவரு ஆபீசுக்குப் போயிக்கிட்டு இருக்காரா, இல்ல வீட்டுக்குப் போயிட்டு இருக்காரான்னு டிபன் பாக்ஸப் திறந்து பார்த்து கன்பர்ம் பண்ணிக்குவாரு!

...........................................................

பன்னிக்குட்டி: நம்ம பனங்காட்டு நரி புது ப்ளாக்கு ஆரம்பிச்சிருக்காராமே?

டெர்ரரு பாண்டியன்: அட ஆமாய்யா... அவன் தொந்தரவு தாங்கமுடியல. பாஸ்வெர்ட் மறந்துபோனாக்கூட பரவால்ல, மன்னிச்சு விட்ரலாம், ஆனா இவன் யூசர் நேம் மறந்துடுச்சுன்னு புது ப்ளாக்கு ஆரம்பிச்சிருக்கான்யா... என்னத்த சொல்ல?

பன்னிக்குட்டி: சரி விடு விடு, நம்ம எல்லாத்துக்கும் ஒரு பாலோயர் கூடுதல்னு வெச்சுக்க........!


........................................................


பன்னிக்குட்டி: பட்டா சார்.... பட்டா சார்... இந்த பின்நவினத்துவம்னா என்ன சார்?

பட்டாபட்டி: ம்ம்ம். அதுவா... வெஸ்டர்ன் டாய்லெட்டுல கக்கா போறதுதான் 'பின்''நவீன'த்துவம்!

பன்னிக்குட்டி: அப்போ முன்நவீனத்துவம்னா....?

பட்டாபட்டி:  #$^%^%$##@!^%^%$#@!!


(பதிவர்கள் நலன் கருதி பட்டாபட்டி அவர்களின் பதில் மட்டுறுத்தப்பட்டுள்ளது.  தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் முன்பணமாக 699 ரூபாய் செலுத்தி பதிவு செய்துகொள்ளவும்!)

(இதுல சில ஜோக்ஸ் என்னோடது, சிலது சுட்டது, அத எழுதுனவங்க யாரா இருந்தாலும் என் நன்றிகள்!)

கொசுறு:
இந்தக் காட்சிக்குத் தமிழில் பொருத்தமான ஹீரோ யார்?
அ. டாகுடர். கேப்டன். விஜயகாந்த்
ஆ. டாகுடர். இளையதலவலி. விஜய்
இ. (டாகுடர்). வீரத்தளபதி. ரித்தீஷ்
ஈ. (டாகுடர்). சுந்தர். சி





!