இன்னிலையில் தான் சிரிப்பு போலீஸ் அவர்கள் அரும்பெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்.
அதை நிகழ்த்த எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டார் என்பது என்னைப் போன்ற சிலருக்கு மட்டுமே தெரியும். மன்றத் தலைவராக பதவியேற்ற அடுத்த வினாடியே எங்கெங்கோ போன் கால்கள் செய்து பரபரபாக டாக்டர். கேப்டனின் புகழ் பரப்பும் வேலையில் இறங்கிவிட்டார். அவர் செய்த முதல் போன், தமிழகத்தின் அதிகாரம் வாய்ந்த குடும்பத்தைச் சேர்ந்த தொழிலதிபருக்கு.
அவரிடம் சென்று கெஞ்சி, காலில் விழுந்து காரியத்தைச் சாதித்தே விட்டார். விளைவு, முதற்கட்டமாக இன்று மாலை 4.00 மணீக்கு சன் டீவியில் டாக்டர். கேப்டன் அவர்கள் நடித்த புத்தம் புது சூப்பர் ஹிட் திரைப்படம் "எங்கள் ஆசான்" ஒளிபரப்பாகிறது. காணத்தவறாதீர்கள். இனி வாரந்தோறும் டாக்டர். கேப்டன் அவர்கள் படமே ஒளிபரப்பாகுமாறு நமது சிரிப்பு போலீஸ் அவர்கள் மேலிடத்தில் பேசி ஏற்பாடு செய்து விட்டார்கள்.
இசெய்தியைக் கேள்விப்பட்டதும் அதனை உங்கள் அனைவருக்கும் உடனே தெரிவிக்க வேண்டும் என்ற கடமை உணர்ச்சியின் காரணமாகவும், சாதனை புரிந்த சிரிப்பு போலீசை வாழ்த்தவும் ஓடோடி வந்து அயராத பணிச் சுமைகளுக்கிடையிலும் பதிவிடுகிறேன்...!
எத்தகைய சாதனை...! எத்தகைய உதவி இது.....! இதற்கு நாம் எல்லோரும் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்? சற்று சிந்தித்துப் பார்ப்பீர்........! இதுபோல் இன்னும் பல சாதனைகள் புரிய சிரிப்பு போலீசை வாழ்த்துவோம்.
டாக்டர். கேப்டனுடன் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுவிட்ட சிரிப்பு போலீஸ் அவர்களின் அயராத முயற்சிகளுக்கு ஆதரவு தாரீர் என்று வேண்டிக் கொண்டவனாக இதை முடித்துக் கொள்ளுகிறேன்.
வாழ்த்த வயதில்லை. எனவே வணங்குகிறேன்...சிரிப்பு போலீஸை.....!
புகைபட உதவிக்கு நன்றி எஸ்.கே
!
