Monday, November 22, 2010

கலாச்சாரச் சீரழிவும் பதிவர்களும்: ஒரு சர்வே!

கலாச்சாரம், கலாச்சாரம்னு பதிவுகலமே சீரழிஞ்சுக்கிட்டு இருக்கு.  கலாச்சாரத்தப் பத்தி நானும் ஏதாவது எழுதலேன்னா பெளாக்கு வெளங்காமப் போயிடும்னு, நம்ம காரமடை ஜோசியரு கனவுல வந்து குறி சொல்லிப்புட்டு போயிட்டாருங்கோ, அதுனால அந்தக் கருமத்த நானும் எழுதித் தொலைக்கிறேன்.
கலாச்சாரத்தப் பத்திப் பதிவர்கள் எவ்வளவு தூரம் வெவரமா இருக்காங்கன்னு  தெரிஞ்சுக்கிறதுக்காக ஒரு சிம்பிள் சர்வே வெச்சிருக்கேன்.  படிச்சிட்டு அவங்க அவங்க ஆன்சர  கமென்ட்ஸ்ல   போடுங்க. எல்லாமே மல்டிபிள் சாய்ஸ் கொஸ்டின் தான். அதுனால வழக்கம்போல பிட்டு ரெடி பண்ணிடாதீங்க! (ஆன்சர் தெரியலேன்னா ஒரு 599 ரூபாய அக்கவுண்ட்ல போட்டீங்கன்னா... மெயில்ல ஆன்சர் சீ்ட் அனுப்பி வெக்கிறேன்.)

அனைத்துக் கேள்விகளுக்கும் கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும். கொடுக்கப்பட்ட சாய்ஸில் இருந்து மட்டுமே விடையளிக்கலாம்

1. கலாச்சாரம் என்றால் என்ன?
அ. கலாக்கா புதிதாகத் தொடங்கியிருக்கும் நடனப் பள்ளி
ஆ. டாஸ்மாக்கில் கிடைக்கும் புதிய சைடு டிஷ்
இ. மலையாள பிட்டுப் படத்தின் பெயர்
ஈ. டாகுடர் விஜயின் அடுத்த படம்

2. கலாச்சார சீரழிவு என்பது?
அ. கேர்ள் பிரண்ட்/பாய்பிரண்ட் இல்லாமலே ஸ்கூல்/காலேஜ் படித்துக் கொண்டிருப்பது
ஆ. பிகருங்க பின்னாடி 'சும்மா'வே சுத்தறது
இ. காதலித்த பெண்ணையே கஷ்டப்பட்டுத் திருமணம் செய்வது
ஈ. பறங்கிமலை ஜோதியில் போய் விருதகிரி படம் பார்ப்பது
உ. ஏதோ ஒரு புதுப்படத்தின் டைட்டில் லைன்

3. லிவிங் டுகெதெர் என்பது
அ. புதிதாக வந்துள்ள கொரிய மொழி உலகத் திரைப்படம்
ஆ. ஷிட்னி ஷெல்டன் எழுதியுள்ள நாவல்
இ. பாரின் சரக்கின் பெயர்
ஈ. நமீதா வீட்டிலுள்ள நாயின் பெயர்
உ. மகாபலிபுரத்தில் உள்ள ஒரு லாட்ஜின் பெயர்

4. பண்பாடு என்றால் என்ன?
அ. கல்யாணத்திற்குப் போனால் மண்டப வாடகை எவ்வளவு என்று கேட்பது
ஆ. காரணம் சொல்லி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டபின்பே மைனஸ் ஓட்டுப் போடுவது
இ. மாறி மாறி கமென்ட்டும் ஓட்டும் போட்டுக்கொள்வது
ஈ. பிரபல பதிவர்கள் கமென்ட்டுகளுக்கு பதில் சொல்லாமல் இருப்பது
உ. பொறுமையாக இந்தப் பதிவைப் படித்துக் கொண்டிருப்பது (ஹி...ஹி...!)

5. கலாச்சாரத்தைப் பாதுகாக்கச் செய்ய வேண்டியது என்ன?
அ. குடும்பத்தோடு மானாட மயிலாட கண்டு மகிழலாம்!
ஆ. சேலத்து டாகுடருகிட்ட நல்ல லேகியமா வாங்கி சாப்புடலாம்!
இ. டாஸ்மாக்கில் தண்ணியடித்துவிட்டுக் கலாச்சாரத்தைப் பற்றி தினம் ஒரு உருக்கமான பதிவு எழுதலாம்.
ஈ. கலாச்சாரப் பதிவுகளில் மைனஸ் ஓட்டுகளைக் குத்தி தங்கள் ஆதரவைத் தெரிவிக்கலாம்.
உ. தினமும் ஒபாமா முதல் உள்ளூர் வரை அரசியல் பேசிவிட்டு, தேர்தல் வந்ததும், வாங்குவதை வாங்கிகொண்டு ஓட்டுப் போடலாம்

6. கலாச்சாரத் தூதராக யாரைத் தேர்வு செய்வீர்கள்?
அ. ரஞ்சிதா
ஆ. குஷ்பு
இ. கலாநிதி மாறன்
ஈ. எஸ்.ஏ. சந்திரசேகர்
உ. பிரபுதேவா

7. கலாச்சாரத்தைத் தூக்கி நிறுத்திய சிறந்த தமிழ்ப் படங்கள்
அ. ரசிகன்
ஆ. நியூ
இ. சிந்துச் சமவெளி
ஈ. ............................... (இங்கு மட்டும் நீங்கள் விரும்பும் பதிலைத் தரலாம்)

சர்வே முடிவுகள்: பதிவுக்கட்டணம் செலுத்துபவர்களூக்கு சர்வே முடிவுகள்  அனுப்பி வைக்கப்படும்.
கட்டணம்: வெறும் 3999 ரூபாய் மட்டுமே!
ஓக்கே, கொஸ்டின்லாம் ரொம்பக் கஷ்டமா இருந்திருக்கும். ஒரு சின்ன வீடியோவப் பாத்து ரிலாக்ஸ் பண்ணிக்குங்க.

வேண்டுகோள்
பாசிட்டிவ் ஓட்டுப் போடுபவர்களுக்கு:
தாங்கள் போடும் ஓட்டை வைத்துதான் இந்த வாரம் நான் கூழோ கஞ்சியோ குடிக்க வேண்டும் என்பதால், தயவுசெய்து உங்கள் பொன்னான வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல், கை ஆடிவிடாமல் மேலும் கீழும் உள்ள ஓட்டுப் பட்டைளில் அளிக்குமாறு வேண்டுகிறேன்!

நெகடிவ் ஓட்டுப் போடுபவர்களுக்கு:
ஒவ்வொரு நெகடிவ் ஓட்டிற்கும் என்னுடைய ஒரு முடி உதிர்ந்துவிடும் என்று காரமடை ஜோசியர் குறி சொல்லியிருப்பதால், தாராளமாக ஓட்டுப்போட்டு இந்த மாதம் என் முடிவெட்டும் செலவை மிச்சப்படுத்த உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

!

230 comments:

1 – 200 of 230   Newer›   Newest»
ganesh said...

என்னிடம் பணம் இல்லை..தவணை முறையில் செலுத்தலாம???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ganesh said...
என்னிடம் பணம் இல்லை..தவணை முறையில் செலுத்தலாம???///

அப்படின்னா 399 ரூபாய் அதிமாகும் அவ்வளவுதான்!

ganesh said...

பரவாயில்ல முடிவை அனுப்பி வைங்க...முக்கியமா 6 நம்பர் கேள்விக்கு விடை தெரிஞ்சாகனும்)))))

Arun Prasath said...

பரீட்சைனா என்னக்கு சின்ன வயசுல இருந்தே அலர்ஜி

நா.மணிவண்ணன் said...

என்னோட ஒட்டு நெகடிவ் ஓட்டுதான் .அதிக நெகடிவ் வோட்டுகள் விழுந்து உங்கள் தலை வழுக்கை தலையாக

LK said...

out of syllabus

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ganesh said...
பரவாயில்ல முடிவை அனுப்பி வைங்க...முக்கியமா 6 நம்பர் கேள்விக்கு விடை தெரிஞ்சாகனும்)))))////

ஓககே, உங்க கணக்கக வரவுல வெக்கிறேன், பணம் கெடச்ச உடனே ரிசல்ட் அனுப்படும்!

கும்மி said...

நான் கண்டுபிடிச்சிட்டேன்.
கலாச்சாரம் - ட்ரெயின்.
கலாச்சாரத்த காப்பாத்தறது - அந்த வீடியோவுல வ்ர்றது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Arun Prasath said...
பரீட்சைனா என்னக்கு சின்ன வயசுல இருந்தே அலர்ஜி///

அலர்ஜிக்கு ஒரு ஊசிய போடடுகிட்டு பரிட்சைய எழுதுங்கப்பு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நா.மணிவண்ணன் said...
என்னோட ஒட்டு நெகடிவ் ஓட்டுதான் .அதிக நெகடிவ் வோட்டுகள் விழுந்து உங்கள் தலை வழுக்கை தலையாக////

ம்ம்ம்..கடை இங்கதான போடுறீங்க?

rockzsrajesh said...

பன்னி குட்டி சார் மியூசிக் ஸ்டார்ட் பண்ணியாச்சு போல , அடியேன் வந்துதேன் வந்துதேன் . . . .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///LK said...
out of syllabus///

அப்பிடியெல்லாம் தப்பிக்க விட்டுடுவமா?

நாகராஜசோழன் MA said...

மாம்ஸ் எக்ஸாம் டைம் எவ்வளவு நேரம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கும்மி said...
நான் கண்டுபிடிச்சிட்டேன்.
கலாச்சாரம் - ட்ரெயின்.
கலாச்சாரத்த காப்பாத்தறது - அந்த வீடியோவுல வ்ர்றது.////

சாரி உங்க ஆன்சர் அவுட் ஆப் சில்லபஸ்.....

நாகராஜசோழன் MA said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நா.மணிவண்ணன் said...
என்னோட ஒட்டு நெகடிவ் ஓட்டுதான் .அதிக நெகடிவ் வோட்டுகள் விழுந்து உங்கள் தலை வழுக்கை தலையாக////

ம்ம்ம்..கடை இங்கதான போடுறீங்க?//

அதானே? கடையிலே சரக்கு இருக்கணுமா இல்ல தூக்கவா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
மாம்ஸ் எக்ஸாம் டைம் எவ்வளவு நேரம்?///

ஒரு குவார்டரு முடியற நேரம்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///rockzsrajesh said...
பன்னி குட்டி சார் மியூசிக் ஸ்டார்ட் பண்ணியாச்சு போல , அடியேன் வந்துதேன் வந்துதேன் . . . ./////

வாங்க, வாங்க....!

நாகராஜசோழன் MA said...

1. கலாச்சாரம் என்றால் என்ன?

ஈ. டாகுடர் விஜயின் அடுத்த படம்

நாகராஜசோழன் MA said...

2. கலாச்சார சீரழிவு என்பது?

அ. கேர்ள் பிரண்ட்/பாய்பிரண்ட் இல்லாமலே ஸ்கூல்/காலேஜ் படித்துக் கொண்டிருப்பது

நாகராஜசோழன் MA said...

3. லிவிங் டுகெதெர் என்பது

உ. மகாபலிபுரத்தில் உள்ள ஒரு லாட்ஜின் பெயர்

நாகராஜசோழன் MA said...

4. பண்பாடு என்றால் என்ன?

அ. கல்யாணத்திற்குப் போனால் மண்டப வாடகை எவ்வளவு என்று கேட்பது

நாகராஜசோழன் MA said...

5. கலாச்சாரத்தைப் பாதுகாக்கச் செய்ய வேண்டியது என்ன?

ஈ. கலாச்சாரப் பதிவுகளில் மைனஸ் ஓட்டுகளைக் குத்தி தங்கள் ஆதரவைத் தெரிவிக்கலாம்.

நாகராஜசோழன் MA said...

6. கலாச்சாரத் தூதராக யாரைத் தேர்வு செய்வீர்கள்?

ஆ. குஷ்பு

நாகராஜசோழன் MA said...

7. கலாச்சாரத்தைத் தூக்கி நிறுத்திய சிறந்த தமிழ்ப் படங்கள்

ஈ. உயிர் (இங்கு மட்டும் நீங்கள் விரும்பும் பதிலைத் தரலாம்)

dineshkumar said...

கவுண்டரே இப்பதான் எனக்கும் நம்ம மச்சி கோல்டு பிரேம் க்கும் சேர்த்து பணம் உங்க அக்கவுண்ட்ல போட்டிருக்கேன் வந்து சேந்துச்சா

நா.மணிவண்ணன் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 10 ////நா.மணிவண்ணன் said...
என்னோட ஒட்டு நெகடிவ் ஓட்டுதான் .அதிக நெகடிவ் வோட்டுகள் விழுந்து உங்கள் தலை வழுக்கை தலையாக////

ம்ம்ம்..கடை இங்கதான போடுறீங்க?

ஆமானே ஆனா கடைல கலாசாரம் விக்கிறது இல்லனே

நாகராஜசோழன் MA said...

மாம்ஸ் என்னோட ஆன்செர்ஸ் எல்லாம் கரெக்டா?

Madhavan Srinivasagopalan said...

என்ன மக்கா அளக்க ஆரம்பிச்சிட்ட (survey ) ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...

மாப்பு, பல பரிட்சைகள் பாத்திருப்பே போல?

நாகராஜசோழன் MA said...

// dineshkumar said...

கவுண்டரே இப்பதான் எனக்கும் நம்ம மச்சி கோல்டு பிரேம் க்கும் சேர்த்து பணம் உங்க அக்கவுண்ட்ல போட்டிருக்கேன் வந்து சேந்துச்சா//

நண்பேன்டா!!

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...

மாப்பு, பல பரிட்சைகள் பாத்திருப்பே போல?//

எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் மாம்ஸ்(?!)

dineshkumar said...

ஹைய்யா வட எனக்கு

ப.செல்வக்குமார் said...

//அதுனால வழக்கம்போல பிட்டு ரெடி பண்ணிடாதீங்க! (ஆன்சர் தெரியலேன்னா ஒரு 599 ரூபாய அக்கவுண்ட்ல போட்டீங்கன்னா... மெயில்ல ஆன்சர் சீ்ட் அனுப்பி வெக்கிறேன்.)//

இலவசமா தரமாட்டீங்களா ..?

மொக்கராசா said...

//கட்டணம்: வெறும் 3999 ரூபாய் மட்டுமே

யார் இங்கே கொடுக்கப்பட்டுள்ள 7 கேள்விகளுக்கும் சரியான் பதிலை அளிக்கிறார்களோ அவர்களுக்கு உறுப்பினர்களிடம் வசூலித்த மொத்த ரூபாய் லம்சம்பாக கொடுக்கப்படும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Madhavan Srinivasagopalan said...
என்ன மக்கா அளக்க ஆரம்பிச்சிட்ட (survey ) ?///

அதுதானே நம்மதொழிலு...ஹி.ஹி..!

rockzsrajesh said...

///@பன்னி குட்டி ....
5. கலாச்சாரத்தைப் பாதுகாக்கச் செய்ய வேண்டியது என்ன?

ஆ. சேலத்து டாகுடருகிட்ட நல்ல லேகியமா வாங்கி சாப்புடலாம்!////

இந்த சாய்ஸ் எப்படி வந்துச்சுன்னு என்னக்கு இப்போ தெரிஞ்சாகனும் . சும்மா விட மாட்டேன் இதை . அங்க வந்து என்னோட பதிவுல ,
///

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ப்ரீயாத்தான் விட்டிருக்கேன்....ஹி...ஹி...!///

அப்படின்னு சொல்லிபுட்டு , நீர் உக்காந்து டிவி ல சேலம் டாக்டர் ப்ரோக்ராம் பார்த்துகிட்டு இருக்கேன்னு தெரியுது . ஏய்யா இல்ல தெரியாமதான் கேக்குறேன் அந்த ஆளு வாண்டை வாண்டைய திட்டுவரேயா , எப்படியா பார்க்குற அதை ?
ஒரு நாள் தெரியாம சேனல் மாத்தும் போது ஒரு 5 நிமிஷம் பார்த்ததுக்கே நான் ஒரு வாரம் தூங்கலையா . நீர் எப்படி ரெகுலரா பார்க்குரீறு? இல்லன எப்படி இங்க அப்படி ஒரு சாய்ஸ் வரும்கிறேன் ?
இதுக்கு நீ பதில் சொல்லியே ஆகனும் பன்னி சார் .

அலைகள் பாலா said...

//6. கலாச்சாரத் தூதராக யாரைத் தேர்வு செய்வீர்கள்?///

pannikutti ramsami

//இலவசமா தரமாட்டீங்களா ..?//

dnt wry boss crack pannidalam

ராஜகோபால் said...

//
தயவுசெய்து உங்கள் பொன்னான வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல், கை ஆடிவிடாமல் மேலும் கீழும் உள்ள ஓட்டுப் பட்டைளில் அளிக்குமாறு வேண்டுகிறேன்!
//

கை ஆடிவிடாமல் - இந்த வார்த்தைய மனசுல நீங்க வேர மாதிரி நெனசுருக்கீங்க கரக்டா ஆனா அடிக்கும் போது தப்பா அடிசிடிங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ப.செல்வக்குமார் said...
//அதுனால வழக்கம்போல பிட்டு ரெடி பண்ணிடாதீங்க! (ஆன்சர் தெரியலேன்னா ஒரு 599 ரூபாய அக்கவுண்ட்ல போட்டீங்கன்னா... மெயில்ல ஆன்சர் சீ்ட் அனுப்பி வெக்கிறேன்.)//

இலவசமா தரமாட்டீங்களா ..?///

நாங்க என்ன ஆச்சியா நடத்துறோம், எலவசமா தர்ரதுக்கு?

ப.செல்வக்குமார் said...

எனது பதில்கள் :
1.A.
2.c.
3.B.
4.D
5.F
6.d
7.C
(வழக்கம் போலவே , பின்கி பின்கி பாங்கி போட்டு எழுதிட்டேன் .. தயவு பண்ணி என்ன பாஸ் பண்ணி விட்டுருங்க ., ஏன்னா நானும் இத பத்தி எழுதலாம்னு இருக்கேன் .)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அலைகள் பாலா said...
//6. கலாச்சாரத் தூதராக யாரைத் தேர்வு செய்வீர்கள்?///

pannikutti ramsami

//இலவசமா தரமாட்டீங்களா ..?//

dnt wry boss crack pannidalam///

இதுவும் அவுட் ஆப் சிலபஸ்...ஹி..ஹி...!

rockzsrajesh said...

//// அலைகள் பாலா said...
//இலவசமா தரமாட்டீங்களா ..?//
dnt wry boss crack பண்ணிடலாம் ////

already crack ஆனதாலாதான் இப்படி பட்ட பதிவு எல்லாம் போடுறாரு பன்னி சார் , இன்னுமா crack பண்ண போறீங்க? வெளங்கிடும் . .. . .

dineshkumar said...

1. கலாச்சாரம் என்றால் என்ன?

ஆ. டாஸ்மாக்கில் கிடைக்கும் புதிய சைடு டிஷ்

ISAKKIMUTHU said...

ACCOUNT NUMBER ILLAYE...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///எனது பதில்கள் :
1.A.
2.c.
3.B.
4.D
5.F
6.d
7.C
(வழக்கம் போலவே , பின்கி பின்கி பாங்கி போட்டு எழுதிட்டேன் .. தயவு பண்ணி என்ன பாஸ் பண்ணி விட்டுருங்க ., ஏன்னா நானும் இத பத்தி எழுதலாம்னு இருக்கேன் .)///

பணம் கட்டாம பாஸ் கெடையாது

நாகராஜசோழன் MA said...

//மொக்கராசா said...

//கட்டணம்: வெறும் 3999 ரூபாய் மட்டுமே

யார் இங்கே கொடுக்கப்பட்டுள்ள 7 கேள்விகளுக்கும் சரியான் பதிலை அளிக்கிறார்களோ அவர்களுக்கு உறுப்பினர்களிடம் வசூலித்த மொத்த ரூபாய் லம்சம்பாக கொடுக்கப்படும்//

இதுவரைக்கும் நான் ஒருத்தன் தான் சரியான பதில் சொல்லி இருக்கேன். எனவே எனக்கே எல்லா தொகையும் தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ISAKKIMUTHU said...
ACCOUNT NUMBER ILLAYE...?///

பழைய பதிவுககளப் பாத்து எல்லாருக்கும் தெரஞ்சிருக்கும்னு நெனச்சேன்

நாகராஜசோழன் MA said...

// rockzsrajesh said...

//// அலைகள் பாலா said...
//இலவசமா தரமாட்டீங்களா ..?//
dnt wry boss crack பண்ணிடலாம் ////

already crack ஆனதாலாதான் இப்படி பட்ட பதிவு எல்லாம் போடுறாரு பன்னி சார் , இன்னுமா crack பண்ண போறீங்க? வெளங்கிடும் . .. . .//

நீங்க ஒருத்தர் தான் சரியாப் புரிஞ்சிருக்கீங்க!

ப.செல்வக்குமார் said...

50

நாகராஜசோழன் MA said...

அமௌன்ட் எப்போ கிடைக்கும் மாம்ஸ்?

ப.செல்வக்குமார் said...

50

dineshkumar said...

2. கலாச்சார சீரழிவு என்பது?

ஈ. பறங்கிமலை ஜோதியில் போய் விருதகிரி படம் பார்ப்பது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////rockzsrajesh said...
//// அலைகள் பாலா said...
//இலவசமா தரமாட்டீங்களா ..?//
dnt wry boss crack பண்ணிடலாம் ////

already crack ஆனதாலாதான் இப்படி பட்ட பதிவு எல்லாம் போடுறாரு பன்னி சார் , இன்னுமா crack பண்ண போறீங்க? வெளங்கிடும் . .. . .////

யோவ் கம்பேனி சீக்ரெட்ட லீக் பண்ணாதேய்யா...!

நாகராஜசோழன் MA said...

//ப.செல்வக்குமார் said...

50//

தம்பி வடை எனக்கு. தப்பு தப்பா எண்ணாதே!

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//கை ஆடிவிடாமல் - இந்த வார்த்தைய மனசுல நீங்க வேர மாதிரி நெனசுருக்கீங்க கரக்டா ஆனா அடிக்கும் போது தப்பா அடிசிடிங்க.//

மவனே மரியாதையா உன் ப்ளாக் 18+ போடு... எல்லாம் ட்ரிபிள் மீனிங்... :))

rockzsrajesh said...

////@ ப.செல்வக்குமார் சிட்
(வழக்கம் போலவே , பின்கி பின்கி பாங்கி போட்டு எழுதிட்டேன் .. தயவு பண்ணி என்ன பாஸ் பண்ணி விட்டுருங்க ., ஏன்னா நானும் இத பத்தி எழுதலாம்னு இருக்கேன் .) / / /

oh my god செல்வா நீங்களுமா? தாங்காதுடா சாமி , ஏன் இந்த கொலை வெறி ? இப்போ கலாச்சாரம் அப்படி என்ன பண்ணிடுசுனு எல்லாரும் இப்படி அதை வச்சு எல்லாரும் கும்மி அடிசுகிட்டு இருக்கீங்க ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
//மொக்கராசா said...

//கட்டணம்: வெறும் 3999 ரூபாய் மட்டுமே

யார் இங்கே கொடுக்கப்பட்டுள்ள 7 கேள்விகளுக்கும் சரியான் பதிலை அளிக்கிறார்களோ அவர்களுக்கு உறுப்பினர்களிடம் வசூலித்த மொத்த ரூபாய் லம்சம்பாக கொடுக்கப்படும்//

இதுவரைக்கும் நான் ஒருத்தன் தான் சரியான பதில் சொல்லி இருக்கேன். எனவே எனக்கே எல்லா தொகையும் தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.///

நீ வரிசையா ஆன்சர் எழுதும்போதே எனக்கு தெரியும்யா இதுல ஏதோ விலலங்கம் இருக்கும்னு!

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ISAKKIMUTHU said...
ACCOUNT NUMBER ILLAYE...?///

பழைய பதிவுககளப் பாத்து எல்லாருக்கும் தெரஞ்சிருக்கும்னு நெனச்சேன்//

பேங்க்: டுபாக்கூர் பேங்க்
அக்கவுன்ட் நம்பர்: 000-001-002-000
பிரான்ச் : கீழ்பாக்கம்

அலைகள் பாலா said...

/// 3. லிவிங் டுகெதெர் என்பது

மகாபலிபுரத்தில் உள்ள ஒரு லாட்ஜின் பெயர் //

gud business idea.. ipadilam hotelkku name vaikka matenguranga..

rockzsrajesh said...

பன்னி குட்டி சார் இன்னம் என்னோட 1 st கேள்விக்கு பத்தி சொல்லல ..... ஒழுங்கா என்னோட ரெண்டாவது பின்னூட்டத்த படிச்சுட்டு அதுக்கு reply பண்ணுங்கோ ................

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

நீ வரிசையா ஆன்சர் எழுதும்போதே எனக்கு தெரியும்யா இதுல ஏதோ விலலங்கம் இருக்கும்னு!//

இல்ல மாம்ஸ் தேர்தல் செலவுக்கு கொஞ்சம் காசு பத்தல. அதனால தான்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// rockzsrajesh said...
////@ ப.செல்வக்குமார் சிட்
(வழக்கம் போலவே , பின்கி பின்கி பாங்கி போட்டு எழுதிட்டேன் .. தயவு பண்ணி என்ன பாஸ் பண்ணி விட்டுருங்க ., ஏன்னா நானும் இத பத்தி எழுதலாம்னு இருக்கேன் .) / / /

oh my god செல்வா நீங்களுமா? தாங்காதுடா சாமி , ஏன் இந்த கொலை வெறி ? இப்போ கலாச்சாரம் அப்படி என்ன பண்ணிடுசுனு எல்லாரும் இப்படி அதை வச்சு எல்லாரும் கும்மி அடிசுகிட்டு இருக்கீங்க ?
////

கலலாச்சாரம் ஒண்ணூம் பண்ணலை, நாமதான் போட்டு கசக்கி புழிஞ்சி, சாறு எடுத்ததுக்ககிடடு இருக்கோம்!

dineshkumar said...

3. லிவிங் டுகெதெர் என்பது

இ. பாரின் சரக்கின் பெயர்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///rockzsrajesh said...
பன்னி குட்டி சார் இன்னம் என்னோட 1 st கேள்விக்கு பத்தி சொல்லல ..... ஒழுங்கா என்னோட ரெண்டாவது பின்னூட்டத்த படிச்சுட்டு அதுக்கு reply பண்ணுங்கோ ................///

கண்டிபப்பா.... வடை இலலேன்னாலும் விடை கிடைக்கும்!

rockzsrajesh said...

//// @ நாகராஜசோழன் MA said.
///already crack ஆனதாலாதான் இப்படி பட்ட பதிவு எல்லாம் போடுறாரு பன்னி சார் , இன்னுமா crack பண்ண போறீங்க? வெளங்கிடும் . .. . .//

நீங்க ஒருத்தர் தான் சரியாப் புரிஞ்சிருக்கீங்க! ///

thank you , thank you , இல்லன இந்த பன்னி குட்டி கூட எல்லாம் கும்மி அடிக்க முடியுமா? ஹி ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///dineshkumar said...
3. லிவிங் டுகெதெர் என்பது

இ. பாரின் சரக்கின் பெயர்///

இங்கதான்யா நிக்கிற நீய்யி...

rockzsrajesh said...

/// @ பன்னிக்குட்டி ராம்சாமி said ...
rockzs : already crack ஆனதாலாதான் இப்படி பட்ட பதிவு எல்லாம் போடுறாரு பன்னி சார் , இன்னுமா crack பண்ண போறீங்க? வெளங்கிடும் . .. . .////

யோவ் கம்பேனி சீக்ரெட்ட லீக் பண்ணாதேய்யா...! /////

அப்போ answer பேப்பர் இப்பவே மெயில் பண்ணு பன்னி சார் . . .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அலைகள் பாலா said...
/// 3. லிவிங் டுகெதெர் என்பது

மகாபலிபுரத்தில் உள்ள ஒரு லாட்ஜின் பெயர் //

gud business idea.. ipadilam hotelkku name vaikka matenguranga..///

ஆஹா.. அப்போ இந்தப்பேர மொதலல ரிஜிஸ்டர் பண்ணிடுவோம்!

rockzsrajesh said...

/// @ பன்னிக்குட்டி ராம்சாமி said ...

கலலாச்சாரம் ஒண்ணூம் பண்ணலை, நாமதான் போட்டு கசக்கி புழிஞ்சி, சாறு எடுத்ததுக்ககிடடு இருக்கோம்! // / / /

இது ஏதோ டபுள் மீனிங் மாதிரி இருக்கே . . . .

எஸ்.கே said...

ரொம்பவே ரசிச்சு சிரிச்சேன்! சூப்பர் சார்!

vaarththai said...

எவன்யா இவ்வளவு tough வா கொஸ்டின் பேப்பர் செட் பண்ணது?
பிஃகார் யுனிவர்சிடிக்கு கொஸ்டின் பேப்பர் செட் பண்ணறதா நெனப்பா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

//கை ஆடிவிடாமல் - இந்த வார்த்தைய மனசுல நீங்க வேர மாதிரி நெனசுருக்கீங்க கரக்டா ஆனா அடிக்கும் போது தப்பா அடிசிடிங்க.//

மவனே மரியாதையா உன் ப்ளாக் 18+ போடு... எல்லாம் ட்ரிபிள் மீனிங்... :))///

யோவ் 18+ போட்டு கலாச்சாரத்த சீரழிகக பாக்குறீயயா, நம்ம கிட்ட அது நடக்காது மாப்பு!

dineshkumar said...

4. பண்பாடு என்றால் என்ன?

ஈ. பிரபல பதிவர்கள் கமென்ட்டுகளுக்கு பதில் சொல்லாமல் இருப்பது

5. கலாச்சாரத்தைப் பாதுகாக்கச் செய்ய வேண்டியது என்ன?

இ. டாஸ்மாக்கில் தண்ணியடித்துவிட்டுக் கலாச்சாரத்தைப் பற்றி தினம் ஒரு உருக்கமான பதிவு எழுதலாம்.6. கலாச்சாரத் தூதராக யாரைத் தேர்வு செய்வீர்கள்?
அ. ரஞ்சிதா

7. கலாச்சாரத்தைத் தூக்கி நிறுத்திய சிறந்த தமிழ்ப் படங்கள்
அ. ரசிகன்
ஆ. நியூ
இ. சிந்துச் சமவெளி
ஈ.உயிர்............................... (இங்கு மட்டும் நீங்கள் விரும்பும் பதிலைத் தரலாம்)

கவுண்டரே பதிலெல்லாம் கரக்டா

vaarththai said...

அல்லா கேள்விக்கும் "all of the above"நு ஏன் சாய்ஸ் கொடுக்கல?
கொஸ்டின் பேப்பர் செட் பண்ணதே தப்பு.
strike..... strike.......strike.....
ஜிந்தாபாத்.... பகாலாபாத்....சாம்பார்பாத்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///vaarththai said...
எவன்யா இவ்வளவு tough வா கொஸ்டின் பேப்பர் செட் பண்ணது?
பிஃகார் யுனிவர்சிடிக்கு கொஸ்டின் பேப்பர் செட் பண்ணறதா நெனப்பா?///

பணம் கட்டுனா ஆன்சர் மெயில்ல வரும் எப்பிடி வசதி?

கக்கு - மாணிக்கம் said...

பன்னிகுட்டி ... பன்னிகுட்டி .........இந்த ஆட்டத்துக்கு வரல ..........ஏன்னா.. அதெல்லாம் என்னா னே நமக்கு தெரியாது ராசா. ஆளவுடு.................நா போட்டுட்டேன்..

ஏனய்யா கும்மி அடிக்கவும் ஒரு அளவு வேண்டாம்?? மேலே இருந்து கீழே ஸ்க்ரோல் பன்னி வர்றதுக்குள்ளே உச்சா வந்துடும்போல இருக்கே பாவிகளா!!

ப.செல்வக்குமார் said...

// எஸ்.கே said...
ரொம்பவே ரசிச்சு சிரிச்சேன்! சூப்பர் சார்!

//

என்ன நக்கலா உங்களுக்கு ..? எவ்ளோ கஷ்டப்பட்டு பரீட்சை வச்சா , சிரிப்பு வருதா உங்களுக்கு ..?

dineshkumar said...

TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

//கை ஆடிவிடாமல் - இந்த வார்த்தைய மனசுல நீங்க வேர மாதிரி நெனசுருக்கீங்க கரக்டா ஆனா அடிக்கும் போது தப்பா அடிசிடிங்க.//

மவனே மரியாதையா உன் ப்ளாக் 18+ போடு... எல்லாம் ட்ரிபிள் மீனிங்... :))

கவுண்டரே பாவம் விட்ருவோம் காலைலே தென்னங்கள்ளு அடிச்சிருக்காருனு நனைக்கிறேன்

rockzsrajesh said...

/////vaarththai said... 71

எவன்யா இவ்வளவு tough வா கொஸ்டின் பேப்பர் செட் பண்ணது?
பிஃகார் யுனிவர்சிடிக்கு கொஸ்டின் பேப்பர் செட் பண்ணறதா நெனப்பா?////

இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல சார்? நமக்கெலாம் என்னைக்கு கொஸ்டின் ஈஸியா இருந்து இருக்கு? 1 ம் கிளாஸ் ல இருந்து கொஸ்டின் tough ஆ தானய்யா இருக்கு . புக்கை குடுத்து எழுத சொன்னாலும் அடுத்தவன் பேப்பர பார்துதானையா எழுதுவோம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கட்டணம்: வெறும் 3999 ரூபாய் மட்டுமே

யார் இங்கே கொடுக்கப்பட்டுள்ள 7 கேள்விகளுக்கும் சரியான் பதிலை அளிக்கிறார்களோ அவர்களுக்கு உறுப்பினர்களிடம் வசூலித்த மொத்த ரூபாய் லம்சம்பாக கொடுக்கப்படும்////

பாத்தியா கொழழுப்ப? வசூலிக்கிறதே பெரும்பாடா இருக்கு, அதுல இவரு லம்பா கொடுக்கப்பபோறாராம், பிச்சிபுடுவேன் பிச்சி!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

என்னய்யா இது, போன வாரத்தோட முடிஞ்சுடுசுன்னு நினைச்சேன், இந்த வாரமும் தொடருதா?

அலைகள் பாலா said...

kalaachchara munerta kalakam thalaivar funny "kutti" ramsamy...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////rockzsrajesh said...
///@பன்னி குட்டி ....
5. கலாச்சாரத்தைப் பாதுகாக்கச் செய்ய வேண்டியது என்ன?

ஆ. சேலத்து டாகுடருகிட்ட நல்ல லேகியமா வாங்கி சாப்புடலாம்!////

இந்த சாய்ஸ் எப்படி வந்துச்சுன்னு என்னக்கு இப்போ தெரிஞ்சாகனும் . சும்மா விட மாட்டேன் இதை . அங்க வந்து என்னோட பதிவுல ,
///

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ப்ரீயாத்தான் விட்டிருக்கேன்....ஹி...ஹி...!///

அப்படின்னு சொல்லிபுட்டு , நீர் உக்காந்து டிவி ல சேலம் டாக்டர் ப்ரோக்ராம் பார்த்துகிட்டு இருக்கேன்னு தெரியுது . ஏய்யா இல்ல தெரியாமதான் கேக்குறேன் அந்த ஆளு வாண்டை வாண்டைய திட்டுவரேயா , எப்படியா பார்க்குற அதை ?
ஒரு நாள் தெரியாம சேனல் மாத்தும் போது ஒரு 5 நிமிஷம் பார்த்ததுக்கே நான் ஒரு வாரம் தூங்கலையா . நீர் எப்படி ரெகுலரா பார்க்குரீறு? இல்லன எப்படி இங்க அப்படி ஒரு சாய்ஸ் வரும்கிறேன் ?
இதுக்கு நீ பதில் சொல்லியே ஆகனும் பன்னி சார் .//////

சேலத்து டாகுடருதானே எல்லாம் பிசினசு டீலிங்க்யா... இதப்போயி சும்மாநோண்டி நோண்டிக் கேட்டுக்கிட்டு.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பெயர் சொல்ல விருப்பமில்லை said...
என்னய்யா இது, போன வாரத்தோட முடிஞ்சுடுசுன்னு நினைச்சேன், இந்த வாரமும் தொடருதா?////

அது போனவாரம்,நாஞ்சொல்றது இந்த வாரம்!

Yoga.s.FR said...

கேள்வியெல்லாம் நல்லாத்தானிருந்திச்சு,ஆன்சர் தான்தெரில!எதை எடுத்துக்கிறது எதை வுடுறதுன்னு,ஒரே கொழப்பம் தான் போங்க!ஒங்க பேச்சு கா.........!

rockzsrajesh said...

////@பன்னிக்குட்டி ராம்சாமி said... 83

சேலத்து டாகுடருதானே எல்லாம் பிசினசு டீலிங்க்யா... இதப்போயி சும்மாநோண்டி நோண்டிக் கேட்டுக்கிட்டு.....!////
ஹி ஹி ஹி இப்படி புப்ளிகுட்டி பண்ணிபுட்டியே பன்னி குட்டி .. . . இதெல்லாம் நீ எனக்கு pvt ல சொல்லி இருக்கலாம் இல்ல ?
நீர் பிரீயதான் விட்டு இருக்கேன்னு சொல்லும்போதே சந்தேக பட்டேன் . சரி விடு சார் . . . ( முந்தரி , பாதாம் சாப்பிடு சார் )

இம்சைஅரசன் பாபு.. said...

அட பாவி நீ என் சந்தேகத்தை தீர்ப்ப ன்னு நினச்சு கடைய அங்க தொறந்து வைசிகிட்டு இருக்கேன் .....நீ இங்க பிட்டு பட ரேஞ்சுக்கு ஒரு பதிவ போட்டு வைச்சு இருக்கிற ..........

சரி சரி விடு ......இந்த கலாச்சாரம்ன ........நம்ம கலா அக்கா சாரம் (லுங்கி )கட்டிட்டு அடுத்த வாரம் டான்ஸ் ஆடுறத பத்தி தானே சொல்லுற

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////rockzsrajesh said...
////@பன்னிக்குட்டி ராம்சாமி said... 83

சேலத்து டாகுடருதானே எல்லாம் பிசினசு டீலிங்க்யா... இதப்போயி சும்மாநோண்டி நோண்டிக் கேட்டுக்கிட்டு.....!////
ஹி ஹி ஹி இப்படி புப்ளிகுட்டி பண்ணிபுட்டியே பன்னி குட்டி .. . . இதெல்லாம் நீ எனக்கு pvt ல சொல்லி இருக்கலாம் இல்ல ?
நீர் பிரீயதான் விட்டு இருக்கேன்னு சொல்லும்போதே சந்தேக பட்டேன் . சரி விடு சார் . . . ( முந்தரி , பாதாம் சாப்பிடு சார் )////

யோவ்..யோவ்..யோவ்.. இது அந்த மாதிரி பிசினஸ் லிங்க் இல்ல, அந்த டாகுடரு பேரு இங்க போடறது அவருக்கு ஒரு வெளம்பரம் மாதிரி, அந்த பிசினசு லிங்க்.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இம்சைஅரசன் பாபு.. said...
அட பாவி நீ என் சந்தேகத்தை தீர்ப்ப ன்னு நினச்சு கடைய அங்க தொறந்து வைசிகிட்டு இருக்கேன் .....நீ இங்க பிட்டு பட ரேஞ்சுக்கு ஒரு பதிவ போட்டு வைச்சு இருக்கிற ..........

சரி சரி விடு ......இந்த கலாச்சாரம்ன ........நம்ம கலா அக்கா சாரம் (லுங்கி )கட்டிட்டு அடுத்த வாரம் டான்ஸ் ஆடுறத பத்தி தானே சொல்லுற////

பாய்ன்ட கரெகடா கப்புன்னு புடிச்சிட்டே மாப்பு!

vaarththai said...

@rockzsrajesh said... 79

/////vaarththai said... 71

எவன்யா இவ்வளவு tough வா கொஸ்டின் பேப்பர் செட் பண்ணது?
பிஃகார் யுனிவர்சிடிக்கு கொஸ்டின் பேப்பர் செட் பண்ணறதா நெனப்பா?////

இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல சார்? நமக்கெலாம் என்னைக்கு கொஸ்டின் ஈஸியா இருந்து இருக்கு? 1 ம் கிளாஸ் ல இருந்து கொஸ்டின் tough ஆ தானய்யா இருக்கு . புக்கை குடுத்து எழுத சொன்னாலும் அடுத்தவன் பேப்பர பார்துதானையா எழுதுவோம்?///

அன்றிலிருந்து இன்று வரை எந்த மாற்றமும் இல்லை.
நான் கேட்கிறேன்.....
கொஸ்டின் பேப்பர் செட் செய்வது மாணவனை பாஸாக்கி விடவா இல்லை
பன்னிகுட்டி போன்ற வாத்தியாரின் திறமையை வெளிக்காட்டவா?

இந்த
அநியாயம்
அக்கிரமம்
ஏகாதிபத்யம்
ஏகப்பட்ட பத்தியம்
பெண்ணீயம்
ஆணீயம்
காரீயம்
கலாச்சாரம்
மாற வேண்டும்.....

(தம் கட்டி இவ்ளே நேரம் இழுக்குறேனே எவனாவது ஒரு சர்பத்தாவது வாங்கித்தர்ரானா?

இதே மாதிரி ஜார்கண்ட் யுனிவிசிட்டி கேம்பஸ்ல பேசுனா புஃல் மீல்ஸ்ஸே கிடைக்கும். (4 காஞ்ச ரொட்டி, ஒரு அவிச்ச உருளைகிழங்கு))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Yoga.s.FR said...
கேள்வியெல்லாம் நல்லாத்தானிருந்திச்சு,ஆன்சர் தான்தெரில!எதை எடுத்துக்கிறது எதை வுடுறதுன்னு,ஒரே கொழப்பம் தான் போங்க!ஒங்க பேச்சு கா.........!////

என்னது கொழப்பமா, லைட்டா ஒரு கட்டிங்க் விட்டுட்டு மறுபடி ஆரம்பிங்க!

கே.ஆர்.பி.செந்தில் said...

இதவிட ஒரு லொள்ளு கிடையவே கிடையாது சாமியோவ்... அப்புறம் நான் கூழுக்கு உத்தரவாதம் அளிச்சுட்டேன்..

rockzsrajesh said...

//// பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ்..யோவ்..யோவ்.. இது அந்த மாதிரி பிசினஸ் லிங்க் இல்ல, அந்த டாகுடரு பேரு இங்க போடறது அவருக்கு ஒரு வெளம்பரம் மாதிரி, அந்த பிசினசு லிங்க்.......!////

ஹி ஹி ஹி இதுக்கு நான் என்னத்த சொல்லன்னு நீர் எதிர் பார்க்குரீர் ? சொல்லுறதுக்கு ஒன்னும் இல்ல . . . ஹி ஹி ஹி

ப.செல்வக்குமார் said...

//பெண்ணீயம்
ஆணீயம்
காரீயம்//

ஈயத்துக்குப் பதில் செம்பு பயன்படுத்தினால்தான் இதற்கு ஒரு முடிவு பிறக்கும் ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கே.ஆர்.பி.செந்தில் said...
இதவிட ஒரு லொள்ளு கிடையவே கிடையாது சாமியோவ்... அப்புறம் நான் கூழுக்கு உத்தரவாதம் அளிச்சுட்டேன்..////

ஹி..ஹி... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////vaarththai said...////

மாப்பு உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லயா? ஒரு கமென்ட்டுகககு பதிலா பதிவே எழுதீட்டிகளே....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ப.செல்வக்குமார் said...
//பெண்ணீயம்
ஆணீயம்
காரீயம்//

ஈயத்துக்குப் பதில் செம்பு பயன்படுத்தினால்தான் இதற்கு ஒரு முடிவு பிறக்கும் ..////

அது செம்பு இல்ல.. தம்பி... சொம்பு!

rockzsrajesh said...

////@vaarththai said... 90 @rockzsrajesh said... 79
/////vaarththai said... 71
எவன்யா இவ்வளவு tough வா கொஸ்டின் பேப்பர் செட் பண்ணது?
பிஃகார் யுனிவர்சிடிக்கு கொஸ்டின் பேப்பர் செட் பண்ணறதா நெனப்பா?////

இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல சார்? நமக்கெலாம் என்னைக்கு கொஸ்டின் ஈஸியா இருந்து இருக்கு? 1 ம் கிளாஸ் ல இருந்து கொஸ்டின் tough ஆ தானய்யா இருக்கு . புக்கை குடுத்து எழுத சொன்னாலும் அடுத்தவன் பேப்பர பார்துதானையா எழுதுவோம்?///

அன்றிலிருந்து இன்று வரை எந்த மாற்றமும் இல்லை. ///////

எதுக்கு மாறனும் ? இல்ல எதுக்கு மாறனுக்குறேன் ? அப்படி மாறாத இருந்த , இன்னிமே answer பேப்பர அவங்க (ஆசிரியர்கள் , including பன்னி சார் ) செட் பாண்னட்டும் , கொஸ்டின் பேப்பர நாம( மாணவர்கள் , including you & me ) செட் பண்ணுவோம் . என்ன நான் சொல்லுறது?
மாற்றம் மட்டுமே மாறாத ஒன்று . . .

ப.செல்வக்குமார் said...

100

ப.செல்வக்குமார் said...

100

ப.செல்வக்குமார் said...

வென்று விட்டேன் வென்று விட்டேன் ., வடையை வென்றுவிட்டேன் ..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////rockzsrajesh said...
//// பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ்..யோவ்..யோவ்.. இது அந்த மாதிரி பிசினஸ் லிங்க் இல்ல, அந்த டாகுடரு பேரு இங்க போடறது அவருக்கு ஒரு வெளம்பரம் மாதிரி, அந்த பிசினசு லிங்க்.......!////

ஹி ஹி ஹி இதுக்கு நான் என்னத்த சொல்லன்னு நீர் எதிர் பார்க்குரீர் ? சொல்லுறதுக்கு ஒன்னும் இல்ல . . . ஹி ஹி ஹி////

ம்மம்ம்....இதப்பாத்துட்டு அந்த டாகுருகிட்ட போயி சொல்லுஙக ஹி...ஹி...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////rockzsrajesh said...
......

எதுக்கு மாறனும் ? இல்ல எதுக்கு மாறனுக்குறேன் ? அப்படி மாறாத இருந்த , இன்னிமே answer பேப்பர அவங்க (ஆசிரியர்கள் , including பன்னி சார் ) செட் பாண்னட்டும் , கொஸ்டின் பேப்பர நாம( மாணவர்கள் , including you & me ) செட் பண்ணுவோம் . என்ன நான் சொல்லுறது?
மாற்றம் மட்டுமே மாறாத ஒன்று . . ./////

நல்லா செட் பண்றீங்கப்பா.... எதையாவது செட் பண்ணா சரிதான்!

விந்தைமனிதன் said...

//4. பண்பாடு என்றால் என்ன?
அ. கல்யாணத்திற்குப் போனால் மண்டப வாடகை எவ்வளவு என்று கேட்பது
ஆ. காரணம் சொல்லி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டபின்பே மைனஸ் ஓட்டுப் போடுவது
இ. மாறி மாறி கமென்ட்டும் ஓட்டும் போட்டுக்கொள்வது
ஈ. பிரபல பதிவர்கள் கமென்ட்டுகளுக்கு பதில் சொல்லாமல் இருப்பது
உ. பொறுமையாக இந்தப் பதிவைப் படித்துக் கொண்டிருப்பது (ஹி...ஹி...!)
//

இதான்யா டாப்பு! நெறய பேத்துக்கு பச்ச மொளகாய பல்லு வெளக்காம கடிச்ச மாதிரி இருந்திருக்கும்! அட... அட!

அப்பாலிக்கா நானும் கூழு ஊத்திட்டேன் சாமியோவ்!

rockzsrajesh said...

/////vaarththai said...
இதே மாதிரி ஜார்கண்ட் யுனிவிசிட்டி கேம்பஸ்ல பேசுனா புஃல் மீல்ஸ்ஸே கிடைக்கும். (4 காஞ்ச ரொட்டி, ஒரு அவிச்ச உருளைகிழங்கு))

இதையா தருவாங்க ? இதை சாப்பிட்ட ஒன்னுமே வளராதே அப்பு . i mean brain ந சொன்னேன்ப்ப ..... ssshhhuubbaaaa

விக்கி உலகம் said...

கிரெடிட் கார்டு ஓகேயா

பஞ்ச படி பயணப்படி எதாவது உண்டா.

எதாவது தனி விரோதம் இருந்தா சொல்லிடுங்க. அதுக்காக இந்த மாதிரி வீடியோ போட்டு பயமுறுத்தாதீங்க.

ஒரு மொள்ளமாரி train cheasing - டூ மச்

மண்டையன் said...

1. கலாச்சாரம் என்றால் என்ன?
யாரு கடா வெட்டுனாலும் வழி தெரியலனாலும் .
போயி மோத ஆளா உக்காறது .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////விந்தைமனிதன் said...
//4. பண்பாடு என்றால் என்ன?
அ. கல்யாணத்திற்குப் போனால் மண்டப வாடகை எவ்வளவு என்று கேட்பது
ஆ. காரணம் சொல்லி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டபின்பே மைனஸ் ஓட்டுப் போடுவது
இ. மாறி மாறி கமென்ட்டும் ஓட்டும் போட்டுக்கொள்வது
ஈ. பிரபல பதிவர்கள் கமென்ட்டுகளுக்கு பதில் சொல்லாமல் இருப்பது
உ. பொறுமையாக இந்தப் பதிவைப் படித்துக் கொண்டிருப்பது (ஹி...ஹி...!)
//

இதான்யா டாப்பு! நெறய பேத்துக்கு பச்ச மொளகாய பல்லு வெளக்காம கடிச்ச மாதிரி இருந்திருக்கும்! அட... அட!

அப்பாலிக்கா நானும் கூழு ஊத்திட்டேன் சாமியோவ்!////

என்னது பச்ச மொளகாய பல்லு வெளக்காம கடிச்ச மாதிரியா.... நல்லா புடிக்கிறிங்க, உதாரணம்....
ஹி..ஹி... அப்போ இந்தவாரம் கூழு கனபர்ம்.....!

R.Gopi said...

1. கலாச்சாரம் என்றால் என்ன?

கலாக்கா தொடங்கியிருக்கும் நடனப்பள்ளியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் கிடைக்கும் சைட் டிஷ் என்று டாகுடர் விஜய் சொல்கிறார்...

2. கலாச்சார சீரழவு என்பது?

டாகுடர் விஜயின் அடுத்த பட ரிலீஸ் தான்..

3. லிவிங் டுகெதர் என்பது?

சிட்னி ஷெல்டன் எழுதி, புதிதாய் வந்துள்ள ஒரு கொரிய பார் சரக்கு அடித்த நமீதா இருக்கும் மகாபலிபுரத்தில் உள்ள லாட்ஜ்...

4. பண்பாடு என்றால் என்ன?

பண்பு கொண்ட ஒரு ஆட்டின் வகை.. ஆடு என்றால் “ஆட்டை” போடுவது அல்ல என்கிறார் ஆட்டையாம்பட்டி அங்குராசு....

5. கலாச்சாரத்தை பாதுகாக்க செய்ய வேண்டியது என்ன?

குடும்பத்தோடு வந்து கலாக்காவோட குத்தாட்டம் போடுவது... இல்லையென்றால் டாகுடர் விஜய் போல், பக்கத்து வீட்டு அம்மா, குளிக்கும் போது, சோப் போடுவது..

6. கலாச்சார தூதுவராக யாரை தேர்வு செய்வீர்கள்?

சங்கவி

7. கலாச்சாரத்தை தூக்கி நிறுத்திய சிறந்த படங்கள்

போக்கிரி
குருவி
ரசிகன்
கோயமுத்தூர் மாப்ளே

8. உங்கள் ஆல்டைம் ஃபேவரிட் ஜீரோ

ஒன் அண்ட் ஒன்லி டாகுடர் விசய்...

rockzsrajesh said...

////@பன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்லா செட் பண்றீங்கப்பா.... எதையாவது செட் பண்ணா சரிதான்! / / / /

எங்கத்த செட் பண்ணுறது? ஒரு பிகிர ப்லோக்க்கு வர விடுறிய நீ ? இப்படி ஒரே டபுள் மீனிங் க பேசிக்கிட்டு இருந்த எங்கத்த பகிர் வர்றது ? எங்கத்த செட் பண்ணுறது ?
நீ ஒன்னுயா , சும்மா கடுப்புக்க கிளப்பிகிட்டு . . .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////rockzsrajesh said...
/////vaarththai said...
இதே மாதிரி ஜார்கண்ட் யுனிவிசிட்டி கேம்பஸ்ல பேசுனா புஃல் மீல்ஸ்ஸே கிடைக்கும். (4 காஞ்ச ரொட்டி, ஒரு அவிச்ச உருளைகிழங்கு))

இதையா தருவாங்க ? இதை சாப்பிட்ட ஒன்னுமே வளராதே அப்பு . i mean brain ந சொன்னேன்ப்ப ..... ssshhhuubbaaaa///

அப்போ அவிங்களுக்கு அது வளரலயா? (நானும் ப்ரெய்னதான்யா சொல்றேன்)

அருண் பிரசாத் said...

me the 112

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////@பன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்லா செட் பண்றீங்கப்பா.... எதையாவது செட் பண்ணா சரிதான்! / / / /

எங்கத்த செட் பண்ணுறது? ஒரு பிகிர ப்லோக்க்கு வர விடுறிய நீ ? இப்படி ஒரே டபுள் மீனிங் க பேசிக்கிட்டு இருந்த எங்கத்த பகிர் வர்றது ? எங்கத்த செட் பண்ணுறது ?
நீ ஒன்னுயா , சும்மா கடுப்புக்க கிளப்பிகிட்டு . . .///

ஓஹோ நம்ம பளாக்குலயே இந்தக் கருமாந்திர வேலையெல்லாம் பண்ண ப்ளான் பண்றீயா? படுவா தொலச்சிபுடுவேன் தொலச்சி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////R.Gopi said...////

ஒங்க கடமை உணர்ச்சில கண்ணு கலங்கிட்டேன், உஙளூக்குக் கணடிப்பா ஏதாவது கெடைக்கும்!

அருண் பிரசாத் said...

1. அ
2. ஆ
3. இ
4. ஈ
5. உ
6. ஊ
7. எ
8. ஏ
9. ஐ
10. ஒ
11. ஓ
12. ஓள்
13 ஃ

முடிஞ்சது... சரியா கவுண்டரே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// அருண் பிரசாத் said...
1. அ
2. ஆ
3. இ
4. ஈ
5. உ
6. ஊ
7. எ
8. ஏ
9. ஐ
10. ஒ
11. ஓ
12. ஓள்
13 ஃ

முடிஞ்சது... சரியா கவுண்டரே//////////

என்ன வெளயாடடு இது என்ன வெளயாட்டு?

vaarththai said...

வாழ்கையில் பக்தர்களை ஆண்டவன் சோதிக்கிறான்.
ப்ளாகில் எங்களை பன்னிகுட்டி சோதிக்கிறான்.
பரிட்சை வைத்து.

இவன் கலாச்சார சீரழிவு எனும்
காரிளிருந்து எமை காக்க வந்த
கலங்கரை விளக்கா
இல்லை

நடப்பு அரசியல் கொந்தழிப்புகளிருந்து
மக்கள் மனதை திசை திருப்ப‌
அரசியல்வாதிகளிடமிருந்து
கட்டிங் வாங்கி செயல்படும்
கறையான் புத்தா...?

இந்த பதிவு ஒரு
சமுதாய பங்களிப்பா
இல்லை
நாளைய நாட்டின் முதல்வராக‌
தன்னை முன்னிலைப்படுத்தும
பன்னிகுட்டியின்
சாணக்கியத்தனமா?

வருங்கால முதல்வர் பன்னிகுட்டி வாழ்க.....

(அய்யோ, என்ன ஆச்சு எனக்கு. இதுக்குத்தான் இந்த பக்கமே வரக்கூடாதுங்குறது.
அய்யா ருத்ரனோட கிளினிக்குக்கு யாராவது வழி சொல்லுங்க‌ )

rockzsrajesh said...

பன்னி சார் டாடா , bubye

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////rockzsrajesh said...
பன்னி சார் டாடா , bubye////

எங்கே சேலத்துக்கா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///vaarththai said...
வாழ்கையில் பக்தர்களை ஆண்டவன் சோதிக்கிறான்.
ப்ளாகில் எங்களை பன்னிகுட்டி சோதிக்கிறான்.
பரிட்சை வைத்து.////

இதெல்லாம் நியாயமா? அடுக்குமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மண்டையன் said...
1. கலாச்சாரம் என்றால் என்ன?
யாரு கடா வெட்டுனாலும் வழி தெரியலனாலும் .
போயி மோத ஆளா உக்காறது .///

இதுவும் அவுட் ஆப் சிலபஸ் மாதிரி இருக்கே..... அப்போ இது ரிஜக்டட்!

வெறும்பய said...

நான் இந்த பதிவை புறக்கணிக்கிறேன்...

rockzsrajesh said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 119 ////rockzsrajesh said...
பன்னி சார் டாடா , bubye////

எங்கே சேலத்துக்கா?////
யோவ் போக விட மாட்டியே நீ .
இரு வந்துட்டேன் .
என்னது சேலத்துக்கவா ? ஆமா சேலதுக்குதான் உனக்காக பீஸ் pay பண்ண போய்கிட்டு இருக்கேன் . .. ஹி ஹி ஹி

எஸ்.கே said...

@ பன்னிகுட்டி ராம்சாமி

தாங்கள் இப்போதெல்லாம் உயர்தர கேள்வித்தாள்கள், பல்கலைகழக தரத்தில் அளிக்கின்றீர்கள். தங்கள் பணியை மெச்சி தங்களுக்கு டாக்டர் பட்டம் அளிக்கப்படுகிறது.

டாக்டர் பட்டம்

இனி தாங்கள் தங்கள் பெயருக்கு முன்னால் பின்னால் நடுவில் எங்கு வேண்டுமானாலும் டாகுடர் பட்டம் போட்டுக்கலாம்!!!

வெறும்பய said...

இந்த பதிவில் இணைத்திருந்த காணொளியை பார்த்து என் நண்பருக்கு மாரடைப்பு வந்து விட்டது...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
நான் இந்த பதிவை புறக்கணிக்கிறேன்...///

சொல்லிட்டாருய்யா கெவர்னரு...!
(ஆனசர் தெரியலியாக்கும்?)

வெறும்பய said...

எஸ்.கே said...

@ பன்னிகுட்டி ராம்சாமி

தாங்கள் இப்போதெல்லாம் உயர்தர கேள்வித்தாள்கள், பல்கலைகழக தரத்தில் அளிக்கின்றீர்கள். தங்கள் பணியை மெச்சி தங்களுக்கு டாக்டர் பட்டம் அளிக்கப்படுகிறது.

டாக்டர் பட்டம்

இனி தாங்கள் தங்கள் பெயருக்கு முன்னால் பின்னால் நடுவில் எங்கு வேண்டுமானாலும் டாகுடர் பட்டம் போட்டுக்கலாம்!!!

///

எனக்கொரு டவுட்டு.. டாக்டர் பட்டம்... டாக்டர் பட்டம் அப்படின்னு சொல்றான்கேலே அது எப்படி இருக்கும்.. அந்த பட்டத்த காற்றில் பறக்க விட முடியுமா.. டீல் போட முடியுமா...

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சொல்லிட்டாருய்யா கெவர்னரு...!
(ஆனசர் தெரியலியாக்கும்?)

//

அதை இப்படியா புப்ளிக்ல சொல்லி காட்டுறது...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பன்னிகுட்டி ராம்சாமி

தாங்கள் இப்போதெல்லாம் உயர்தர கேள்வித்தாள்கள், பல்கலைகழக தரத்தில் அளிக்கின்றீர்கள். தங்கள் பணியை மெச்சி தங்களுக்கு டாக்டர் பட்டம் அளிக்கப்படுகிறது.

டாக்டர் பட்டம்

இனி தாங்கள் தங்கள் பெயருக்கு முன்னால் பின்னால் நடுவில் எங்கு வேண்டுமானாலும் டாகுடர் பட்டம் போட்டுக்கலாம்!!!////

அந்த லிஙகுல நெஜமாவே ஒரு படடம் வருதுங்கோ.... (ஆமா இதுல உள்குத்து எதுவும் இல்லியே டாகுடரு விஜய்க்கு கொடுதத மாதிரி?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

சொல்லிட்டாருய்யா கெவர்னரு...!
(ஆனசர் தெரியலியாக்கும்?)

//

அதை இப்படியா புப்ளிக்ல சொல்லி காட்டுறது...///

நாங்கதான் ஆன்சர் தெரியாதவங்களுக்கும் ஒரு ஆப்சன் வெச்சிருக்கோம்ல?

rockzsrajesh said...

/// @வெறும்பய said... 125

இந்த பதிவில் இணைத்திருந்த காணொளியை பார்த்து என் நண்பருக்கு மாரடைப்பு வந்து விட்டது...///
எல்லாவித அடைப்புகளையும் எடுத்துவிட பன்னி சார் கைவசம் ஆள் வச்சு இருக்காரு . பப்ளிக்கா கேக்காதிங்க சார் , pvt ல கேளுங்க சொல்லுவாரு ஹி ஹி ஹி . .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
இந்த பதிவில் இணைத்திருந்த காணொளியை பார்த்து என் நண்பருக்கு மாரடைப்பு வந்து விட்டது...////

ஆஹா நான்வேற முன்ஜாமீன் எதுவும் எடுக்கலியே இப்போ என்ன பண்றது?

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நாங்கதான் ஆன்சர் தெரியாதவங்களுக்கும் ஒரு ஆப்சன் வெச்சிருக்கோம்ல?

//

ஜஸ்ட் எ மினிட்.. பதிவ படிச்சிட்டு வரேன்...

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆஹா நான்வேற முன்ஜாமீன் எதுவும் எடுக்கலியே இப்போ என்ன பண்றது?

//

ஏற்க்கனவே ஒருத்தன் தற்கொலை பன்னபோறேன்னு சொன்னான்.. இதில இது வேற.. மவனே நீ இன்னைக்கு காலிடி... ஹா ஹா ஒழிந்தான் எதிரி..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

நாங்கதான் ஆன்சர் தெரியாதவங்களுக்கும் ஒரு ஆப்சன் வெச்சிருக்கோம்ல?

//

ஜஸ்ட் எ மினிட்.. பதிவ படிச்சிட்டு வரேன்...////

அப்போ இம்புட்டு நேரமும் படிக்காமத்தான் இந்த லந்தா...? வெளங்கிரும்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆஹா நான்வேற முன்ஜாமீன் எதுவும் எடுக்கலியே இப்போ என்ன பண்றது?

//

ஏற்க்கனவே ஒருத்தன் தற்கொலை பன்னபோறேன்னு சொன்னான்.. இதில இது வேற.. மவனே நீ இன்னைக்கு காலிடி... ஹா ஹா ஒழிந்தான் எதிரி..///

அப்போ எதுக்கும் நான் பின்ஜாமீன் எடுத்து வெச்சிக்கிறேன்!

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஜஸ்ட் எ மினிட்.. பதிவ படிச்சிட்டு வரேன்...////

அப்போ இம்புட்டு நேரமும் படிக்காமத்தான் இந்த லந்தா...? வெளங்கிரும்...!

//

அப்புறம் என்ன பண்றது.. கிடைச்ச கொஞ்சம் கேப்புல விட்டு ஆணி புடுங்க போனா.. அந்த நேரத்தில பதிவையும் போட்டுக்கிட்டு.. அதுக்கு ஓராயிரம் கம்மேன்ட்டும் போட்டா நான் என்ன பண்றது...

rockzsrajesh said...

/// @பன்னிக்குட்டி ராம்சாமி said...
////வெறும்பய said...
இந்த பதிவில் இணைத்திருந்த காணொளியை பார்த்து என் நண்பருக்கு மாரடைப்பு வந்து விட்டது...////

ஆஹா நான்வேற முன்ஜாமீன் எதுவும் எடுக்கலியே இப்போ என்ன பண்றது? ////

முன்ஜாமீன் எடுக்கலேன்னா என்ன ? வழக்கம் போல உங்க தோஸ்த கூப்பிட்டு அடைப்ப 1st எடுத்து விடுங்க பன்னி சார் . ( அவரு தோஸ்து யாருன்னு தெரியும் இல்ல , சேலம் டாக்டர் . . ஹி ஹி ஹி ) . வழக்கமா உங்க பதிவுக்கு வரவங்களுக்கு வர அடைப்புதானே i mean மாரடைப்புதானே ? இது என்ன புதுசா ? இப்படி பதறிங்க ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////rockzsrajesh said...
/// @பன்னிக்குட்டி ராம்சாமி said...
////வெறும்பய said...
இந்த பதிவில் இணைத்திருந்த காணொளியை பார்த்து என் நண்பருக்கு மாரடைப்பு வந்து விட்டது...////

ஆஹா நான்வேற முன்ஜாமீன் எதுவும் எடுக்கலியே இப்போ என்ன பண்றது? ////

முன்ஜாமீன் எடுக்கலேன்னா என்ன ? வழக்கம் போல உங்க தோஸ்த கூப்பிட்டு அடைப்ப 1st எடுத்து விடுங்க பன்னி சார் . ( அவரு தோஸ்து யாருன்னு தெரியும் இல்ல , சேலம் டாக்டர் . . ஹி ஹி ஹி ) . வழக்கமா உங்க பதிவுக்கு வரவங்களுக்கு வர அடைப்புதானே i mean மாரடைப்புதானே ? இது என்ன புதுசா ? இப்படி பதறிங்க ?/////

ங்கொய்யா நீ இன்னும் போகலிய்யா?

வித்யா said...

செம நக்கலு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஜஸ்ட் எ மினிட்.. பதிவ படிச்சிட்டு வரேன்...////

அப்போ இம்புட்டு நேரமும் படிக்காமத்தான் இந்த லந்தா...? வெளங்கிரும்...!

//

அப்புறம் என்ன பண்றது.. கிடைச்ச கொஞ்சம் கேப்புல விட்டு ஆணி புடுங்க போனா.. அந்த நேரத்தில பதிவையும் போட்டுக்கிட்டு.. அதுக்கு ஓராயிரம் கம்மேன்ட்டும் போட்டா நான் என்ன பண்றது.../////

ஆணியப் புடுங்கவா...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வித்யா said...
செம நக்கலு...///

வாஙகோ வாங்கோ..

vaarththai said...

//ஒரு சின்ன வீடியோவப் பாத்து ரிலாக்ஸ் பண்ணிக்குங்க.//

அநியாயம், அபாண்டம்.
இது சின்ன வயசுல எரும மாடு கூட போட்டி போட்டு பன்னிகுட்டி
டயர் வண்டி ஓட்டுனத ஒளிஞ்சி இருந்து பாத்து காப்பி அடிச்சிருக்கானுக.

உடனே கேஸ் போடணும் ( பன்னிகுட்டி ஏன் பல் இளிக்குற இது லாயர், கோர்ட் அந்த கேஸ்)

அன்பரசன் said...

பணம் ட்ரான்ஸ்ஃபார் பண்ணியாச்சு.

எங்க அவார்டு?
எங்க அவார்டு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////vaarththai said...
//ஒரு சின்ன வீடியோவப் பாத்து ரிலாக்ஸ் பண்ணிக்குங்க.//

அநியாயம், அபாண்டம்.
இது சின்ன வயசுல எரும மாடு கூட போட்டி போட்டு பன்னிகுட்டி
டயர் வண்டி ஓட்டுனத ஒளிஞ்சி இருந்து பாத்து காப்பி அடிச்சிருக்கானுக.

உடனே கேஸ் போடணும் ( பன்னிகுட்டி ஏன் பல் இளிக்குற இது லாயர், கோர்ட் அந்த கேஸ்)////

அப்போ நல்ல (?) லாயராப் பாத்து போடுங்க..ஹிஹி..

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இந்த பதிவு இந்த வாரம் பூரா தாக்கு பிடிக்கும்..அந்தளவு எனெர்ஜி

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கலக்கிட்டீங்க சூப்பர்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அன்பரசன் said...
பணம் ட்ரான்ஸ்ஃபார் பண்ணியாச்சு.

எங்க அவார்டு?
எங்க அவார்டு?///

சர்வே முடிஞ்ச உடனே ஏற்பாடு பண்ணிடுவோம்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ரஞ்சிதா கலாச்சார தூதுவர் என்பதற்கு பிறகு வேறு மாற்று கருத்து எவனாவது சொன்னா பிச்சிடுவேன் பிச்சி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஆர்.கே.சதீஷ்குமார் said...
இந்த பதிவு இந்த வாரம் பூரா தாக்கு பிடிக்கும்..அந்தளவு எனெர்ஜி////

ஹி...ஹி... பின்னே கலாச்சாரம்னா சும்மா விட்டுடுவமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஆர்.கே.சதீஷ்குமார் said...
கலக்கிட்டீங்க சூப்பர்///

நன்றிங்கோ!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

. கலாச்சார சீரழிவு என்பது?

ஈ. பறங்கிமலை ஜோதியில் போய் விருதகிரி படம் பார்ப்பது

ஆர்.கே.சதீஷ்குமார் said...

லிவிங் டுகெதெர் என்பது

உ. மகாபலிபுரத்தில் உள்ள ஒரு லாட்ஜின் பெயர்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஆர்.கே.சதீஷ்குமார் said...
லிவிங் டுகெதெர் என்பது

உ. மகாபலிபுரத்தில் உள்ள ஒரு லாட்ஜின் பெயர்///

நீங்களும் நல்லாத்தான் ட்ரை ப்ண்ணுறீங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஆர்.கே.சதீஷ்குமார் said...
ரஞ்சிதா கலாச்சார தூதுவர் என்பதற்கு பிறகு வேறு மாற்று கருத்து எவனாவது சொன்னா பிச்சிடுவேன் பிச்சி/////

நீங்களே சொல்லிட்டீங்கன்னா சரிதானுங்ணா.....!

ப.செல்வக்குமார் said...

155 வடை போச்சே .!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ப.செல்வக்குமார் said...
155 வடை போச்சே .!!///

150 தே போச்சு.....!

நாகராஜசோழன் MA said...

//rockzsrajesh said...

/// @பன்னிக்குட்டி ராம்சாமி said...
////வெறும்பய said...
இந்த பதிவில் இணைத்திருந்த காணொளியை பார்த்து என் நண்பருக்கு மாரடைப்பு வந்து விட்டது...////

ஆஹா நான்வேற முன்ஜாமீன் எதுவும் எடுக்கலியே இப்போ என்ன பண்றது? ////

முன்ஜாமீன் எடுக்கலேன்னா என்ன ? வழக்கம் போல உங்க தோஸ்த கூப்பிட்டு அடைப்ப 1st எடுத்து விடுங்க பன்னி சார் . ( அவரு தோஸ்து யாருன்னு தெரியும் இல்ல , சேலம் டாக்டர் . . ஹி ஹி ஹி ) . வழக்கமா உங்க பதிவுக்கு வரவங்களுக்கு வர அடைப்புதானே i mean மாரடைப்புதானே ? இது என்ன புதுசா ? இப்படி பதறிங்க ?//

மாம்ஸ் இந்த மாதிரி வேற நடக்குதா?

karthikkumar said...

மேரி சீ மாறி வரும் கலாச்சாரத்தை அச்சு பிசகாமல் சமுகத்திற்கு எடுத்து காட்டி இருக்கிறீர்கள். குறிப்பாக அந்த வீடியோவில் வரும் சம்பவங்கள் பசுமரத்தாணி போல என் மனதில் படிந்து விட்டன. இதை ஏன் நம் டாக்டர் விஜய் செய்ய வில்லை விளக்கவும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////karthikkumar said...
மேரி சீ மாறி வரும் கலாச்சாரத்தை அச்சு பிசகாமல் சமுகத்திற்கு எடுத்து காட்டி இருக்கிறீர்கள். குறிப்பாக அந்த வீடியோவில் வரும் சம்பவங்கள் பசுமரத்தாணி போல என் மனதில் படிந்து விட்டன. இதை ஏன் நம் டாக்டர் விஜய் செய்ய வில்லை விளக்கவும்/////

இப்பிடியெல்லாம் அவசரப்பட்டு முடிவு பண்ணப்படாது, டாகுரரு கண்டிப்பா அடுத்த படடத்துல இந்த சீனு வெப்பாரு, ஏன்னா இது தெலுங்கு படம்!

மொக்கராசா said...

பன்னி எல்லா விடையும் கரெக்டடான்னு செக் பன்னு

என்னய்யா எக்ஸாம் ஹால் நீ அரேஞ்ச் பன்னுன.முன்னாடி இருக்குறவன பேப்பர் ஒன்னும் தெரியல அதான் உன்னய மாதிரி சொந்த மூளைய உஸ் பன்னி
விடைய கண்டுபிடுச்சேன்.

1. கலாச்சாரம் என்றால் என்ன?

விடை:
@#$@#4234234#@4#%^#$

2.கலாச்சார சீரழிவு என்பது?

விடை:
@#$@#$@#$2@#$@#423

3.லிவிங் டுகெதெர் என்பது

விடை:
#$@#$234232#$234

4.பண்பாடு என்றால் என்ன?

விடை: #$%#$%#$%#&*(&)&(:"""

5. கலாச்சாரத்தைப் பாதுகாக்கச் செய்ய வேண்டியது என்ன?
விடை:&**(*(*(*(*(*(*($%^%$^$%64

6. கலாச்சாரத் தூதராக யாரைத் தேர்வு செய்வீர்கள்?

விடை:^*^&*^&*^&*^&*^&*^&+**()*(_))_+)

7. கலாச்சாரத்தைத் தூக்கி நிறுத்திய சிறந்த தமிழ்ப் படங்கள்

விடை:%^&%^&@#$@#!#!~!@~!@~எ#$%#$%

dineshkumar said...

மொக்கராசா said...
பன்னி எல்லா விடையும் கரெக்டடான்னு செக் பன்னு

என்னய்யா எக்ஸாம் ஹால் நீ அரேஞ்ச் பன்னுன.முன்னாடி இருக்குறவன பேப்பர் ஒன்னும் தெரியல அதான் உன்னய மாதிரி சொந்த மூளைய உஸ் பன்னி
விடைய கண்டுபிடுச்சேன்.

ப்ளீஸ் வெய்ட் கவுண்டரு கணக்கு பாத்துகுனு இருக்கார் ஆமா பீஸ் கட்டியாச்சா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
பன்னி எல்லா விடையும் கரெக்டடான்னு செக் பன்னு

என்னய்யா எக்ஸாம் ஹால் நீ அரேஞ்ச் பன்னுன.முன்னாடி இருக்குறவன பேப்பர் ஒன்னும் தெரியல அதான் உன்னய மாதிரி சொந்த மூளைய உஸ் பன்னி
விடைய கண்டுபிடுச்சேன்./////

தங்கள் விடைத்தாள், திருத்தும் வரிசையில் 1094783478 இடத்தில் வைக்கப்பட்டுள்ளது திருத்திமுடிந்ததும் உங்ளூக்கு முடிவுகள் அனுப்படும். அதுவரை காத்திருத்தலுக்கு நன்றி!

மொக்கராசா said...

/ஆமா பீஸ் கட்டியாச்சா

பீஸ்சுக்கு பதிலா பாரின் சரக்கு வாங்கி கொடுத்துருக்கேன்.

பன்னி நல்ல ரெசல்ட் சொல்லுவப்புல

மொக்கராசா said...

//தங்கள் விடைத்தாள், திருத்தும் வரிசையில் 1094783478 இடத்தில் வைக்கப்பட்டுள்ளது //திருத்திமுடிந்ததும் உங்ளூக்கு முடிவுகள் அனுப்படும். அதுவரை காத்திருத்தலுக்கு நன்றி

யேவ் அது வரக்கும் நான் என்ன பன்னுரது, ரெசட்ல் வச்சு நான் பீகார் யுனிவர்சிட்டியில் IAS,IPS,IFS,IIIIWER,IIRTY,IIGHJ,IITYU,IJJ அப்பிலை பன்ன்னும. இன்னொரு சரக்கு வாங்கி தறேன். சீக்கரம்

ஹரிஸ் said...

இந்த பதிவு ஓரு கலாச்சார சீரழிவு..

ஹரிஸ் said...

1. கலாச்சாரம் என்றால் என்ன?
இ. மலையாள பிட்டுப் படத்தின் பெயர்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஹரிஸ் said...
இந்த பதிவு ஓரு கலாச்சார சீரழிவு../////

சொல்லிட்டாருய்யா கெவர்னரு....!

ஹரிஸ் said...

2. கலாச்சார சீரழிவு என்பது?
அ. கேர்ள் பிரண்ட்/பாய்பிரண்ட் இல்லாமலே ஸ்கூல்/காலேஜ் படித்துக் கொண்டிருப்பது

ஹரிஸ் said...

3. லிவிங் டுகெதெர் என்பதுஇ. பாரின் சரக்கின் பெயர்

dineshkumar said...

மொக்கராசா said...
/ஆமா பீஸ் கட்டியாச்சா

பீஸ்சுக்கு பதிலா பாரின் சரக்கு வாங்கி கொடுத்துருக்கேன்.

பன்னி நல்ல ரெசல்ட் சொல்லுவப்புல

கவுண்டரே பாரின் சரக்காம்யா புள்ளைய பாஸ் போட்ருயா

Nove

ஹரிஸ் said...

சொல்லிட்டாருய்யா கெவர்னரு....!//

எனக்கு கவர்னராக பதவி பிரமாணம் செய்து வைத்த நீதிபதி பன்னிகுட்டியார் வாழ்க..

ஹரிஸ் said...

4. பண்பாடு என்றால் என்ன?

உ. பொறுமையாக இந்தப் பதிவைப் படித்துக் கொண்டிருப்பது

எங்களுக்கும் பண்பாடு இருக்கு..

ஹரிஸ் said...

6. கலாச்சாரத் தூதராக யாரைத் தேர்வு செய்வீர்கள்?

ஆ. குஷ்பு

ஹரிஸ் said...

டாக்டரோட குருவா காணொளில?

பிரியமுடன் ரமேஷ் said...

//சேலத்து டாகுடருகிட்ட நல்ல லேகியமா வாங்கி சாப்புடலாம்! //

ஹ ஹ ஹ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஹரிஸ் said...
டாக்டரோட குருவா காணொளில?////

இலல அவரு குருவோட குரு....!

மொக்கராசா said...

//இலல அவரு குருவோட குரு....!
எப்படி எல்ல பதிவிலும் 150 குறையாம கமெண்ட் வாங்க்கி விடுகிரீர்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
//இலல அவரு குருவோட குரு....!
எப்படி எல்ல பதிவிலும் 150 குறையாம கமெண்ட் வாங்க்கி விடுகிரீர்கள்/////

எல்லாம் நம்ம காரமடை ஜோசியரோட செய்வினதான்!

சேட்டைக்காரன் said...

பானா ராவன்னா! உங்க கொஸ்டின் பேப்பர் லீக் ஆயிருச்சுன்னு காத்து வாக்குலே கேள்விப்பட்டேன். அதுனாலே, ஒரு பொதுநல வழக்குப் போடலாமுன்னு இருக்கேன். :-)

மொக்கராசா said...

//பானா ராவன்னா! உங்க கொஸ்டின் பேப்பர் லீக் ஆயிருச்சுன்னு காத்து வாக்குலே கேள்விப்பட்டேன்.

மேட்டர் தெரியதா உங்களுக்கு -பாரின் சரக்கு வாங்கி குடுத்த question paper-யை லீக் பன்னுவாரு ,
அப்புற்ம பட்ட சராயம் வாங்கி குடுத்த உங்களுக்குகாக எக்ஸாமே எழுதுவரு

செ.சரவணக்குமார் said...

கலக்குறீங்க நண்பா. பதில்களையெல்லாம் அப்புறமா மெயில் பண்ணுங்க..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சேட்டைக்காரன் said...
பானா ராவன்னா! உங்க கொஸ்டின் பேப்பர் லீக் ஆயிருச்சுன்னு காத்து வாக்குலே கேள்விப்பட்டேன். அதுனாலே, ஒரு பொதுநல வழக்குப் போடலாமுன்னு இருக்கேன். :-)////

கொஸ்டின் பேப்பரு தானே அத நான் தான் ஒரு குவார்ட்டரு வாங்கிட்டு லீக் பண்ணுனேன்,
கேஸ் போடுறது போடுறீங்க, ஒரு நல்ல லாயரா பாத்து போடங்கண்ணே!

சி.பி.செந்தில்குமார் said...

ராம்சாமி,கை குடுங்க பதிவு சூப்பர் ஹிட் ஆகிடுச்சு ஆகிடுச்சு (எக்கோ)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
ராம்சாமி,கை குடுங்க பதிவு சூப்பர் ஹிட் ஆகிடுச்சு ஆகிடுச்சு (எக்கோ)////

ஆமாங்க இன்னிககு கொஞ்சம் ஓவராத்தான் போயிடுச்சு!

சி.பி.செந்தில்குமார் said...

வழக்கமா உங்க பதிவு போடப்பட்ட 12 மணீ நேரத்துல இண்ட்லில 28 ஓட்டும் தமிழ்மணத்துல 16 ஓட்டும் வாங்கும்,(சராசரி)ஆனா இந்த டைம் பின்னீட்டீங்க அதுல 40,இதுல 22ம்ம்.அடுத்த வார டாப் 20 ல வர முடிவு பன்னீட்டீங்க போல>

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

எனது பதில்கள் :
1.A.
2.c.
3.B.
4.D
5.F
6.d
7.C
(வழக்கம் போலவே , பின்கி பின்கி பாங்கி போட்டு எழுதிட்டேன் .. தயவு பண்ணி என்ன பாஸ் பண்ணி விட்டுருங்க ., ஏன்னா நானும் இத பத்தி எழுதலாம்னு இருக்கேன் .)

யோவ் செல்வா,இப்படித்தான் டிகிரி வாங்குனீங்களா?விளங்கிடுச்சுய்யா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
வழக்கமா உங்க பதிவு போடப்பட்ட 12 மணீ நேரத்துல இண்ட்லில 28 ஓட்டும் தமிழ்மணத்துல 16 ஓட்டும் வாங்கும்,(சராசரி)ஆனா இந்த டைம் பின்னீட்டீங்க அதுல 40,இதுல 22ம்ம்.அடுத்த வார டாப் 20 ல வர முடிவு பன்னீட்டீங்க போல>////

என்னண்ணே இது அதுக்குள்ள விருதகிரி பாட்டு கேட்டுப்புட்டீங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

>>> நாகராஜசோழன் MA said...

5. கலாச்சாரத்தைப் பாதுகாக்கச் செய்ய வேண்டியது என்ன?

ஈ. கலாச்சாரப் பதிவுகளில் மைனஸ் ஓட்டுகளைக் குத்தி தங்கள் ஆதரவைத் தெரிவிக்கலாம்.

வாய்யா நாகா,நீங்க தான் மனஸ் ஓட்டு போடற மைனாரிட்டி பார்ட்டியா?ஜாக்கிரதையா இருந்துக்கனும்யா

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ப.செல்வக்குமார் said...
//அதுனால வழக்கம்போல பிட்டு ரெடி பண்ணிடாதீங்க! (ஆன்சர் தெரியலேன்னா ஒரு 599 ரூபாய அக்கவுண்ட்ல போட்டீங்கன்னா... மெயில்ல ஆன்சர் சீ்ட் அனுப்பி வெக்கிறேன்.)//

இலவசமா தரமாட்டீங்களா ..?///

நாங்க என்ன ஆச்சியா நடத்துறோம், எலவசமா தர்ரதுக்கு?

இது செம டைமிங்க் ராம்சாமி அண்ணே

சி.பி.செந்தில்குமார் said...

ராம்சாமி,ஒரு டவுட்,3 எழுத்துள்ள ஒரு பெண் பதிவரின் பதிவுக்கு பதிலடி குடுக்கத்தான் இந்தப்பதிவுன்னு வெளில பேசிக்கறாங்களே,அது உண்மையா?

சி.பி.செந்தில்குமார் said...

மொக்கராசா said...

//இலல அவரு குருவோட குரு....!
எப்படி எல்ல பதிவிலும் 150 குறையாம கமெண்ட் வாங்க்கி விடுகிரீர்கள்

அதான்யா எல்லார் கண்ணையும் உறுத்துது..

மொக்கராசா said...

//எப்படி எல்ல பதிவிலும் 150 குறையாம கமெண்ட் வாங்க்கி விடுகிரீர்கள்

//அதான்யா எல்லார் கண்ணையும் உறுத்துது..

அது வேர ஒன்னும் இல்லங்க அவரே,'தேங்காய் மூடி தலையா','செல்போன் வாயா', 'அனுகுண்டு மண்டையா' என்பது போன்ற பல பெயர்களில் comments போட்டு , ஓட்டும் அவருக்கே குத்திக்கிறாரு

THOPPITHOPPI said...

1. கலாச்சாரம் என்றால் என்ன?
அ. கலாக்கா புதிதாகத் தொடங்கியிருக்கும் நடனப் பள்ளி

2. கலாச்சார சீரழிவு என்பது?
இ. காதலித்த பெண்ணையே கஷ்டப்பட்டுத் திருமணம் செய்வது

3. லிவிங் டுகெதெர் என்பது
அ. புதிதாக வந்துள்ள கொரிய மொழி உலகத் திரைப்படம்

4. பண்பாடு என்றால் என்ன?
இ. மாறி மாறி கமென்ட்டும் ஓட்டும் போட்டுக்கொள்வது

5. கலாச்சாரத்தைப் பாதுகாக்கச் செய்ய வேண்டியது என்ன?
அ. குடும்பத்தோடு மானாட மயிலாட கண்டு மகிழலாம்!

6. கலாச்சாரத் தூதராக யாரைத் தேர்வு செய்வீர்கள்?
ஆ. குஷ்பு

7. கலாச்சாரத்தைத் தூக்கி நிறுத்திய சிறந்த தமிழ்ப் படங்கள்
இ. சிந்துச் சமவெளி

சி.பி.செந்தில்குமார் said...

மொக்கராசா said...

//எப்படி எல்ல பதிவிலும் 150 குறையாம கமெண்ட் வாங்க்கி விடுகிரீர்கள்

//அதான்யா எல்லார் கண்ணையும் உறுத்துது..

அது வேர ஒன்னும் இல்லங்க அவரே,'தேங்காய் மூடி தலையா','செல்போன் வாயா', 'அனுகுண்டு மண்டையா' என்பது போன்ற பல பெயர்களில் comments போட்டு , ஓட்டும் அவருக்கே குத்திக்கிறாரு

adheppidingka அதெப்பிடிங்க அவர் ஒரு ஓட்டுதானே குத்த முடியும்?

மொக்கராசா said...

//adheppidingka அதெப்பிடிங்க அவர் ஒரு ஓட்டுதானே குத்த முடியும்?

நம்ம பன்னிக்கு தெரியாத டாகல்டியா,
அமெரிக்க ஒபாமவே இந்தியா வந்த போது அமெரிக்கா பொருளாதாரத்தை உயர்த்துவது எப்படின்னு பன்னி கிட்ட 'டிஸ்கோஸ்' பண்ணுனாருன்ன பார்த்துங்கோங்க

Jayadeva said...

ஐயா தெய்வமே இந்த விடியோவ எங்கேயிருந்து புடிச்சிகிட்டு வந்தீக ராசா? யாரையாச்சும் குளோஸ் பண்ணனும்னா வேற எதுவுமே வேண்டாம், அவனை ஒரு சேரில் கட்டிப் போட்டுவிட்டு இந்த விடியோவை நாலு தடவை காமிச்சா போதும், நானே செத்துடறேன்னு சொல்லி செத்துடுவான். தாங்க முடியலைடா சாமி....[ஆனா ஒன்னு, இனி எந்த தமிழ் படத்தையும் பாக்கும் மனோ திடத்தை இந்த விடியோ குடுத்துடுச்சு... ஹி....ஹி....ஹி........]

சி.பி.செந்தில்குமார் said...

கள்ள ஓட்டு போட மாட்டாரே?கள்ளக்காதலி வேணா 2 உண்டு

சி.பி.செந்தில்குமார் said...

கடையை விட்டுட்டு எங்கே போனாரு ஓனரு?

சி.பி.செந்தில்குமார் said...

200

«Oldest ‹Older   1 – 200 of 230   Newer› Newest»