Friday, July 11, 2014

ஜில்லா: ஒரு பின்தங்கிய விமர்சனம்...!



ஓப்பனிங் சீன்ல மோகன்லால் வந்து சண்டை போடும் போதே தெரிஞ்சுடுது படம் எப்படின்னு. ஒரு மாசு பத்தாதுன்னு ரெண்டு மாசு காட்டி இருக்காங்க. சின்ன வயசுல அப்பனை கொன்னவனை பாத்து வெறியாகி அவனை பழிவாங்குற கதைதான், என்ன அது கொஞ்சம் வித்தியாசமா இந்த படத்துல வில்லன் சைடுல வருது. ஹீரோ & அல்லக்கைஸ் எல்லாரும் அந்த வில்லன் அப்படி பழிவாங்கிடாம தடுக்கிறாங்க. வழக்கம் போல ஒரு பெரிய தாதா. வழக்கம் போல அவருக்கு ஒரு விசுவாசமான அல்லக்கை. ஒரு சண்டைல உயிரை தியாகம் பண்ணிடுறார். தாதாவும் அந்த அல்லக்கையோட புள்ளைய தன் புள்ளையா நெனச்சு வளர்க்கிறார். அவர் தான் ஹீரோ. அவருக்கு கல்லால குறிபாத்து அடிக்கிற கலை(?) யை சின்ன வயசுல இருந்தே கத்துக் கொடுத்துடுறாங்க. அத வெச்சே அவரு பெரிய ரவுடியா ஃபார்ம் ஆகி தாதா மோகன்லாலோட ஆல் இன் ஆல் ஆக இருக்காரு. 




ரவுடி கும்பல் வந்து ஆஸ்பிட்டல்ல படுத்துக்கிட்டு எல்லாரையும் டார்ச்சர் பண்றானுங்கன்னு போலீஸ்,கீலீஸ்னு எல்லாத்தையும் ட்ரை பண்ணிட்டு கடைசியா மோகன்லால்கிட்ட வந்து கெஞ்சுறாங்க. அவரும் ஃபர்ஸ்ட் 50 பேரை அனுப்பி அடிவாங்கிட்டு, அப்புறம் டாகுடரை அனுப்பி வெக்கிறார். எதிர்பார்த்த மாதிரியே டாகுடர் போய் எல்லாரையும் அடிச்சு தொம்சம் பண்ணி வெரட்டி விடுறார். என்ன ஃபைட்டுல ஆஸ்பிட்டலுக்குதான் சேதாரம் கொஞ்சம் ஜாஸ்தியாகிடுது. சரி விடுங்க அது தயாரிப்பாளர் பிரச்சனை. எப்படியோ ஒரு வழியா ஓப்பனிங் சீன் சடங்க முடிச்சு கதைய(?) ஸ்டார்ட் பண்றாங்க. 




கதைல ஹீரோன்னு இருந்தா ஹீரோயினும் இருக்கனும்,. ஹீரோயின் இருந்தா காதலும் இருக்கனும் இல்லியா? அதுக்காகவே பலமாசம் உக்காந்து யோசிச்சு ஒரு சூப்பர் சீன் வெச்சிருக்காங்க. அதாவது லஞ்சம் வாங்குற பொம்பளை போலீசை ஹீரோயின் காஜல் வந்து கன்னத்துல அறையிறாங்க. பாத்த உடனே ஹீரோவுக்கு காதல் வந்துடுது. சாதா காதல்னா ஹீரோயின் பின்னாடியே போய் ஈவ் டீசிங் பண்ணி ஹீரோயின் மனசை மாத்தி காதலிப்பாங்க. இது தாதா காதலாச்சே, அதான் ஸ்ட்ரைட்டா ஹீரோயின் வீட்டுக்கே போய் பொண்ணு கேக்குறாங்க. ஹீரோயினோட அப்பாவும் பெரிய எடம் வந்திருக்குன்னு பவ்யமா பொண்ணை கூப்புடுறார். பொண்ணு போலீசாம். காக்கி யூனிபார்ம்ல வந்து நிக்குது. நம்ம ஹீரோவுக்குத்தான் காக்கி யூனிபார்ம்னாலே அலர்ஜி ஆச்சே, தெறிச்சு ஓடுறார். அனேகமா காமெடி சீனா ட்ரை பண்ணி இருப்பாங்கன்னு நினைக்கிறேன். நல்லா வந்திருக்கு.




ஹீரோவ போலீசாக்கனும்னு ஆசை டைரக்டருக்கு. அதுக்காகவே செம ட்விஸ்ட்டு ஒண்ணு வெச்சிருக்கார். மதுரைக்கு புது போலீஸ் கமிசனர் வர்ரார். வந்தவர் நேரா மோகன்லால்கிட்ட வந்து அரஸ்ட் பண்ணிக் கூட்டிட்டு போய் தனியா ஆள் இல்லாத ஏரியாவுல வெச்சி ரவுடிய விட போலீஸ்தான் பெருசுனு பஞ்ச் பேசி அங்கேயே ஒத்தையா விட்டுட்டு வந்துடுறார். அத வெச்சி ரவுடிய விட போலீஸ்தான் பெருசுன்னு மோகன்லாலுக்கு புரியுது. கமிசனரை பழிவாங்க என்ன பண்ணலாம்னு யோசிச்சு ஹீரோவை போலீசாக்கிடலாம்னு முடிவு பண்ணிடுறார். நம்ம ஹீரோவும் ஆரம்பத்துல பிகு பண்ணிட்டு அப்புறம் போனா போகுது அப்பா ஆசப்படுறார்னு போலீஸ் ஆகிடுறார். அதுவும் அசிஸ்டண்ட் கமிசனரா அவங்க ஏரியாவுக்கே வர்ரார். 

இப்படியே போனா படத்த எப்படி முடிக்கிறதுன்னு யோசிச்ச டைரக்டர், இன்னொரு ட்விஸ்ட்ட வெச்சிருக்கார். இவ்ளோ நாளும் பண்ணிக்கிட்டு இருந்த அராஜகம் எல்லாம் போலீசாகின உடனே தப்பா தெரிய ஆரம்பிக்குது நம்ம ஹீரோவுக்கு. அவங்க ஆளுகளையே பின்னி பெடலெடுக்கிறார். யூனிபார்ம போட்டுக்கிட்டு மோகன்லாலை பாக்க போறார். கொஞ்ச நேரம் தனியா உக்காந்து பொறுமையா எடுத்து சொல்லி புரிய வைக்க ட்ரை பண்ணலாம். ஆனா இண்டர்வல் சீன் வரனும்றதுக்காக சம்பந்தமே இல்லாம மாறி மாறீ பஞ்ச் டயலாக் பேசுறானுங்க. ஒருவழியா இண்டர்வல்னு போட்டு கொஞ்சம் நிம்மதி கொடுக்கிறானுங்க. 

இண்டர்வல் முடிஞ்சதும், நம்ம வில்லன் ஹீரோ கிட்ட மாட்டிக்கிட்டு எல்லாத்துக்கும் நாந்தான் காரணம்னு வாக்குமூலம் கொடுக்கிறான். சின்ன வயசுல இருந்து 20 வருசமா மோகன்லாலை கொல்ல ட்ரை பண்ணிட்டு இருக்கானாம். அதுவும் மோகன்லாலை வேற எவனும் கொல்லவிடாம இவரே கொல்லனும்னு 20 வருசம் கூடவே இருக்கார்னு ஒரு ஃப்ளாஷ்பேக் காட்டுவாங்க பாருங்க பாத்துட்டு இன்னும் மெய்சிலிர்த்துக்கிட்டு இருக்கேன்....  வழ்க்கம் போல இவர்தான் வில்லன்னு மோகன்லாலுக்கு தெரியாம நம்ம டாகுடரை தப்பா நினைக்க, டாகுடரோ தம்பிய காப்பாத்தனும்னு அரஸ்ட் பண்ணி கூட்டிட்டு போய் ஒளிச்சு வைக்கிறார். வில்லன் ஏன் அவ்ளோ நாள் சும்மா இருந்தான்னு தெரியல. ஒருவழியாக எல்லா சண்டையும் முடிஞ்சு கடைசில சுபம். என்ன தம்பியதான் காவு கொடுத்துறாங்க. தாதா படம்னா ஹீரோ சைடுலயும் ஏதாவது காவு கொடுக்கனும்ல, இல்லேனா லாஜிக்கா (?) இருக்காதுல, அதான்! 




குடும்ப கோஷ்டிகளையும் கவர் பண்ணனும்னு நடுவுல கொஞ்சம் தங்கச்சி செண்ட்டிமெண்ட் வேற வெச்சிருக்காங்க. இவரு பிரிஞ்ச போன உடனே தங்கச்சிக்கு கல்யாணம் நிச்சயமாகி, கல்யாணமும் ஆகுது. ஹீரோ ஆபீஸ்கே வந்து அவரைத்தவிர எல்லாரையும் இன்வைட் பண்றாங்க. ஹீரோ தங்கச்சி எப்படியும் போன்லயாவது கூப்பிடும்னு உருகுறார். கடைசில பாத்தா கல்யாண விருந்துல ஒரு பக்கமா உக்காந்து எதையும் கண்டுக்காம சாப்புட்டு இருக்கார். சாப்புட்டு வந்து ஒரு பஞ்ச் டயலாக் பேசுவார் பாருங்க, தங்கச்சி கல்யாணத்துல அண்ணன் கை நனைக்கனும்னு..... 

அண்ணன்-தங்கச்சி பாசத்துக்கு இப்படி ஒரு சீன் தமிழ் சினிமாவுல சமீபத்துல வந்திருக்காது. அனேகமா பாசமலருக்கு அடுத்த ரேங்க்ல இத வைப்பாங்கன்னு நினைக்கிறேன். படம் பார்க்க வர்ர யூத்துகள் இந்த செண்டிமெண்டால கடுப்பாகிட கூடாதுன்னு டாகுடரு தங்கச்சியா சூப்பர் பிகரை போட்டிருக்காங்க, படத்துல உள்ள ஒரே நல்ல விஷயம் இதுதான். விமர்சனம் எழுதுன யாரும் இதை பத்தி எழுதாம விட்டதை கடுமையா கண்டிக்கிறேன். பின்ன என்னய்யா விமரசனம்னா எல்லாத்தையும் கவர் பண்ணி எழுத வேணாமா? 




நன்றி: கூகிள் இமேஜஸ்...!

Friday, July 4, 2014

பத்து கேள்விகளும், பத்து பதில்களும்.....!

என்னமோ தொடர்பதிவாம்.... பத்து கேள்வி கேப்பாங்களாம் பதில் சொல்லனுமாம்..... என்னடா இது பதிவர்களுக்கு வந்த சோதனை.... சரி நம்ம வேலைய காட்டிட வேண்டியதுதான்னு நானும் களத்துல குதிச்சிட்டேன்...




1. உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக்
    கொண்டாட விரும்புகிறீர்கள்?
   

99-வது பிறந்த நாள எப்படி கொண்டாடுவேனோ அப்படித்தான்..... ங்கொய்யால கேள்விய பாரு, அந்த வயசுல நீங்க நினைக்கிறத எல்லாம் பண்ற மாதிரியா இருக்கும்......?


2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

தெரியாததை..... பின்ன தெரிஞ்சதையா கத்துக்க முடியும்........?


3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?


சிப்பு வந்த சிரிச்சிட வேண்டியதுதானே, எப்போ எதுக்குன்னு டைரில எழுதி வெச்சிட்டுதான் சிரிப்பாங்களாக்கும்........ போங்கய்யா.....

4.  24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன? 

25-வது மணி நேரத்துக்கு வெயிட் பண்ண வேண்டியதுதான்........  வேற என்ன செய்றது, கரண்ட்டு இல்லேன்றதுக்காக கரண்ட்டு கம்பத்துலயா போய் தொங்க முடியும்?

5.  உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன? 

எல்லாத்தையும் அதுக்கு முன்னாடியே சொல்லி முடிச்சிடுவேனுங்க, அன்னிக்கு இதுக்கெல்லாம் எங்க டைம் இருக்க போவுது........?


6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும்
என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

பிரச்சனையத்தான்...... பிரச்சனைன்னு வந்துட்டாலே பிரச்சனைதானுங்களே.... அப்புறம் அதைத்தானே தீர்க்கனும்.....?

7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

எல்லார்கிடேயும் தான்..... பின்ன என்னங்க, எவனை பாத்தாலும் வாய தொறந்தாலே அட்வைஸ்தான் பண்றானுங்க... அதுக்காக காதை பொத்திக்கிட்டா பேச முடியும்..... சொல்ற வரைக்கும் சொல்லுங்கடான்னு சைலண்ட்டா கேட்டுக்க வேண்டியதுதான்....


8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால்என்ன செய்வீர்கள்?

அதெல்லாம் கரெக்டுதாங்கன்னு சொல்லிட்டு கம்முன்னு இருந்துட வேண்டியதுதான்..... இப்ப என்ன இவனுங்க கிட்ட நல்ல பேரு வாங்கி ஐநா சபை லீடராக போறோமா.... போய் அடுத்த வேலைய பாருங்கய்யா.......


9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

உங்க மனைவி இறந்துட்டாங்கன்னு சொல்ல வேண்டியதுதான்..... வேற வழி..? சொல்லித்தானே ஆகனும்....?


10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

கக்கூஸ் கழுவுவேன்........ ங்கொய்யால வீட்டுல சும்மா உக்காந்துக்கிட்டு அப்புறம் கப்பல் யாவாரமா செய்ய முடியும்?


இதுக்கு மேலயும் யாராவது இத தொடர்வீங்க...........?




நன்றி: கூகிள் இமேஜஸ்.....!

Tuesday, June 3, 2014

நேர்ந்து விடப்பட்ட சிலர்.....





பலவருடங்களுக்கு முன் ஒருவர் தனக்கு பிகர் இல்லையே என்று என்னிடம் வந்து மிகவும் வருத்தப்பட்டார். அது ஏன் அவர் என்னிடம் வந்து இப்படி வருத்தப்பட்டார் என்று தெரியவில்லை. இருந்தாலும் அவரை சேலம் வைத்தியரிடம் கூட்டிச் சென்று அங்கே கூடும் கூட்டத்தை காண்பித்து, பிகர் இருந்தும் அவதிப்படுபவர்கள் நிலையை உணர்த்தினேன். அந்த ஒரு சம்பவம் அவர் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. இன்று அவர் உலகின் மிகப்பெரிய சித்த வைத்திய நிபுணராகி பலரின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்துக் கொண்டிருக்கிறார். 

அந்த சம்பவத்தை பற்றி நெடுநாள் யோசித்துக் கொண்டிருந்தேன். பல அறிஞர்களுடன் அதை பற்றி விவாதித்திருக்கிறேன்.  மனித இனம் தழைத்தோங்க வேண்டும் பண்பாட்டு நுண்ணறிவு வளரவேண்டும் என்ற அறிவுத்திறன் கொண்டவர்கள் அந்த வைத்தியர்கள்தான். அவர்கள்தான் இன்று நாம் காணும் இந்த வளர்ச்சியை, எழுச்சியை உருவாக்கியவர்கள். மீதிப்பேர் லேகியம் என்ற பெயரில் மைதா மாவை விற்பவர்கள். வைத்திய தொழிலின் தொடர்ச்சியை நீட்டிப்பதைத் தவிர எந்த ஒரு பொறுப்பையும் அவர்கள் அளிக்கவில்லை.

25 வருடங்களுக்கு முன் ஒரு நாள் பறங்கிமலைஜோதி தியேட்டரில் இருந்துவெளியே வரும் போது அங்கே அடுத்த காட்சிக்காக நின்றிருந்த பெரும் கூட்டத்தைப் பார்த்து மன அதிர்ச்சி அடைந்தேன். அவர்கள் யாருக்குமே இந்தப்படத்தின் எந்த இடத்தில் நல்ல பிட்டு வரும் என்று தெரியாது. அவர்கள் யாரும் இதைப் பற்றியெல்லாம் யோசிப்பவர்கள் அல்ல. அவர்கள் கிடைக்கப் போவது பழைய லோக்கல் பிட்டே. அதை எண்ணியது பெரும் துக்கம் வந்து என் நெஞ்சை அடைத்தது. கண்களில் தானாக கண்ணீர் வந்துவிட்டது. 




மனிதர்கள் எல்லோரும் ஒரேமாதிரி கிடையாது. சிலருக்கு பலான புத்தகமே பிடிக்கிறது. சிலருக்கு அந்த வகைஎழுத்துக்களே வருகிறது. அவர்களின் நுண்ணுணர்வு அத்தகையது. இந்த வகை இலக்கியத்தை எழுதும் தகுதியும் பொறுப்பும் அவர்களுக்கே உண்டு. அவர்கள்  இந்த தியாகத்தை செய்துதான் ஆக வேண்டும். அதுதான் இயற்கை அவர்களுக்கு அளித்த நியதி. இத்தனை தியாகங்களோடு இவர்கள் எழுதும் புத்தகங்களை பாமரர்களும் படித்து சுவைத்து இன்புற்று மகிழ்வார்கள், ஆனால் இறுதிவரை எழுதியவர் யார் என்றே தெரியாமல் வாழ்வார்கள். அதுதான் மரபு.

ஆகவேதான் எனக்கு இந்த புத்தகங்களைப் படிக்க தோன்றுவதே இல்லை. ஏன் பலான புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று ஒருவர் கேட்ட போது என்ன வேலை செய்கிறீர்கள் என்று கேட்டேன். நான் ஏன் வேலை செய்ய வேண்டும் என திரும்ப கேட்டார். குரூரமான கேள்வி என்று இப்போதும் தோன்றுகிறது. ஆனால் அதுதான் உண்மை. ஏனென்றால் அவர் வெட்டியாகத்தான் இருந்தார்.  

ஆம் இந்த புத்தகங்களை எல்லாம் படிக்கிறீர்கள் என்றால் இணையத்தில் கோடான கோடி  வாய்ப்புகள் இருக்கும் போது இதை மட்டும் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். இலவசமாக இணைய தொடர்பு பெற்றவர், இப்புத்தகங்களை படிப்பது பெரிய அறியாமை. இயற்கை அவருக்களித்த வாய்ப்பை தட்டிக்கழிக்கும் மென் அவமதிப்பு. கையில் முறுக்கை வைத்துக் கொண்டு காராச்சேவை பொறுக்க முயலும் குழந்தைகளின் நிலை அது. இதெல்லாம் ஒரு மாபெரும் வாய்ப்புதான், ஆனால் அதை தவறவிடும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது.  






நன்றி: ஃபேஸ்புக்,கூகில் இமேஜஸ்!

Thursday, August 22, 2013

மாநிற அண்ணாவும் மாநிற எம்ஜிஆரும்......




டாகுடர் தலைவா ரிலீஸ் ஆகிவிட்ட களிப்பில்  நல்லா சாப்புட்டு மப்பும் மந்தாரமுமா ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கார். அப்போ உள்ளே டைரக்டர் விஜய் வர்ரார்.

டைரக்டர் விஜய்: அண்ணே... அண்ணே...

டாகுடர்: வாங்கண்ணா... வணக்கங்கண்ணா எப்படிங்ணா இருக்கீங்க.. ?

டைரக்டர்: வணக்கம்ணே....உங்க புண்ணியத்துல நல்லாருக்கேண்ணே...

டாகுடர்: அப்புறங்ணா....?

டைரக்டர்: உங்களை வெச்சி இன்னொரு படத்துக்கு கதை ரெடி பண்ணிட்டு வந்திருக்கேண்ணே...

டாகுடர்: என்னாது உங்கூட இன்னொரு படமா? சரி விடுங்ணா, நாமல்லாம் என்ன தெய்வத்திருமகன் மாதிரி படத்துலயா நடிக்க முடியும்? என் பேர வெச்சிருந்தப்பவே நெனச்சேன் நீங்களும் டுபாக்கூராத்தான் இருப்பீங்கன்னு.... சரி கதைய சொல்லுங்ணா.......

டைரக்டர்: ஒப்பனிங் சீன், அது ஒரு வில்லேஜ், திருவிழா நடந்திட்டு இருக்கு, எல்லாரும் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க....

டாகுடர்: ஸ்டாப் ஸ்டாப், ஸ்டாப், இதெல்லாம் நானும் எங்க நைனாவும் பாத்துக்கிறோம், மொதல்ல நீங்க க்ளைமேக்ஸ் பைட் பத்தி சொல்லுங்ணா.....

டைரக்டர்: அது செம சீனுங்கண்ணா, உங்களுக்காகவே ஒரு மாசம் உக்காந்து யோசிச்சது...




டாகுடர்: அட சொல்லுங்ணா..........

டைரக்டர்: ஒரு பெரிய பில்டிங்க், 20-25 மாடி ரேஞ்சில புடிக்கிறோம். நீங்க வில்லனுங்க எல்லாரையும் அடிச்சி துவைச்சி தூக்கு கொண்டு போய் அந்த பில்டிங்கோட லிப்ட் முன்னாடி போடுறீங்க, எல்லாருக்கும் திக்கு திக்குங்குது, என்ன பண்ண போறீங்கன்னு...

டாகுடர்: செமையா இருக்கே..... அடிச்சு தூக்கி போட்டுட்டு அடுத்து என்னங்ணா பண்றேன்...

டைரக்டர்: அங்கதாண்ணே பெரிய டிவிஸ்ட்டே வெச்சிருக்கேன், ஹாலிவுட்டே அசந்திடுவானுங்கண்ணே.... இந்த சீனுக்காக நாம ஹாலிவுட் போய் எடுக்க வேண்டி இருக்கும்ணே, பெரிய ப்ரொடியூசரா போடுங்கண்ணே......

டாகுடர்: அதெல்லாம் நாங்க பாத்துக்கிறோம், நீங்க மேட்டருக்கு வாங்ணா....

டைரக்டர்: ஒவ்வொருத்தனா அடிச்சி, முடிச்சி கடைசில மெயின் வில்லனையும் அடிச்சு கொண்டு வந்து போடுறீங்க. லிப்ட் கதவை ஓப்பன் பண்ணி, எல்லாரையும் உள்ள தூக்கி போடுறீங்க, போட்டுட்டு உள்ள போய் டாப் ப்ளோர் பட்டனை அமுக்கிட்டு வெளில வந்துடுறீங்க....

டாகுடர்: ஆஹா........ சூப்பர்........ அப்புறம்.......



டைரக்டர்: லிப்ட் மேல போக முன்னாடி செம ஸ்பீடா படிக்கட்டுல ஏறி மொட்டமாடிக்கு போயி....

டாகுடர்: போயி........

டைரக்டர்:  லிப்டுக்கு நேர மேல இருக்க கூரையை உடைச்சி எடுத்துடுறீங்க, கீழ இருந்து செம ஸ்பீடா வர்ர லிப்ட் அப்படீயே மேல ராக்கெட் மாதிரி பறக்குது... 100 அடி ஹைட் போயி வெடிச்சி சிதறுது..... பின்னாடி தீப்பிழம்பு தெறிக்க ஸ்லோ மோசன்ல நீங்க உங்க வழக்கமான ஸ்டைல்ல கேமராவ பாத்து நடந்து வர்ரீங்க.. அப்படியே ப்றீஸ் பண்ணி படத்தை முடிக்கிறோம்... அந்த இடத்துல ஏதாவது நச்சின்னு கேப்சன் ஒண்ணு புடிச்சு போட்டுடலாம்.....

டாகுடர்: வாவ் செம சூப்பருங்ணா............ உடனே பூஜைய ஆரம்பிங்ணா...... விஸ்வரூபம்-2 கூட சேர்த்தே ரிலீஸ் பண்ணி கலக்குவோம்....

எஸ்.ஏ.சி: ஆங் டைரக்டர் தம்பி.. எல்லாம் நல்லாருக்கு பட் ஒரு விஷயம்.....

டைரக்டர்: சொல்லுங்கண்ணே.....

எஸ்.ஏ.சி: பட டைட்டில்ல மாநிற அண்ணா, மற்றும் மாநிற எம்ஜிஆர் வழங்கும்னு போடனும், ஓக்கேவா....?




டைரக்டர்: போயாங்க்........................ இதுக்கு நான் எங்கூரு பக்கமா போயி புண்ணாக்கு வித்து பொழச்சிக்குவேன், ஆளை விடுங்கடா சாமி..........



நன்றி: கூகிள் இமேஜஸ்!


Saturday, August 3, 2013

பதிவர் சந்திப்பில் பன்னியின் நூல் வெளியீடு...?

வர இருக்கிற பதிவர் சந்திப்புல பதிவர்கள்லாம் நூல் வெளியிடலாம்னு சொன்னதுல இருந்து வாசகர் கடிதங்கள் இருமடங்காகிடுச்சு. சொல்லி வெச்ச மாதிரி அத்தனை கடிதங்கள்லயும் நீங்க ஏன் இந்த பதிவர் சந்திப்புல ஒரு நூல் வெளியிடக் கூடாதுன்னு அடம்புடிக்கிறதாவே இருக்கு. இன்னும் சிலர் கட்டாயம் நீங்க ஒரு நூல் வெளியிட்டே ஆகனும்னு சொல்லிட்டாங்க. பட் நூல் வெளியிடனும்னா அதுக்கு முதல்ல நூல் தயாரா இருக்கனுமே? 

நம்ம பதிவுகள் எல்லாத்தையும் சேர்த்து மொத்தமா ஒரு நூலா வெளியிட்டுடலாம்னு ஒரு வாசகர் சொன்னார். ரொம்ப பெருசா வருமேன்னு கேட்டதுக்கு, ரெண்டு வால்யூமா போட்டுடலாம்னுட்டார். ரெண்டு வால்யூம்னா ரெண்டு வாட்டி வெளியிடனுமான்னு தெரியலை. கமெண்ட்டுகளையும் சேத்து வெளியிடனும், கமெண்ட்ஸ் இல்லேன்னா பதிவுகள் எதுக்குமே செல்ப் எடுக்காது. அப்படின்னா குறைஞ்சது பதினேழு வால்யூம் வரைக்கும் வரும்னு ஒரு நிபுணர் சொன்னார். அப்போ பதினேழு பதிவர் சந்திப்பு நடத்த வேண்டி இருக்கும். அதுனால பதிவுகளை புத்தகமா வெளியிடுறதை பத்தி விவாதிக்க தனியா ஒரு வாசகர் சந்திப்பை நடத்தி அப்புறமா முடிவு பண்ணிக்கலாம்னு விட்டுட்டேன்.

இப்போ பதிவர் சந்திப்புக்கு என்ன நூல் வெளியுடுறது? பேஸ்புக் ஸ்டேட்டஸ் எல்லாத்தையும் போட்டு ஒரு குறுநூல் வெளியிட்டுடலாமா? இல்ல, உக்காந்து கவிதையா எழுதி பக்காவா ஒரு நூலை ரெடி பண்ணிடலாமான்னு ஒரே குழப்பம். என்ன பண்ணலாம்னு நம்ம நாய் நக்ஸ் நக்கீரன்கிட்ட ஆலோசனை கேட்டேன். அவர் நல்லா யோசிச்சு ரெண்டு நாள்ல சொல்றேன்னு சொல்லிட்டார்.

சொன்ன மாதிரியே ரெண்டுநாள் கழிச்சு மெயில் பண்ணி இருந்தார். ஒண்ணு இல்ல, ரெண்டு நூலா ரிலீஸ் பண்ணிடுவோம். உங்களுக்கு புடிச்சிருக்கா பாருங்கன்னு நூல்களை அட்டாச் பண்ணி வேற அனுப்பி இருந்தார். பார்த்த உடனே எனக்கு பிடிச்சுட்டுது. உங்களுக்கும் புடிக்கும்னு நினைக்கிறேன். ரெண்டு நூல்களுக்கும் நல்ல பேர் வெச்சி பதிவர் சந்திப்புல என் சார்பாக நாய்நக்ஸ் நக்கீரனையே வெளியிட சொல்லிடலாம்னு இருக்கேன். 
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.


என்ன சார் நம்ம நூல்கள் உங்களுக்கு புடிச்சிருக்கா?


நன்றி: கூகிள் இமேஜஸ்

Thursday, July 25, 2013

கன்னி கணிணி அனுபவம்....





கன்னி கணிணி அனுபவம்னு ஒரு தொடர்பதிவு எழுதிக்கிட்டு வர்ராங்க. நம்மளைலாம் யாரும் கூப்புட மாட்டாங்க பட் அதுக்காக அப்படியே விட்ர முடியுமா? தன்கையே தனக்கு உதவவில்லை யெனில், முழங்கை கூட மதிக்காதுன்னு பாலமன் ஆப்பையாவே சொல்லி இருக்கறதால நானே என்னை கூப்டுக்கிட்டு நானே எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

காலேஜ்ல படிச்சிட்டு இருந்த டைம். இண்டர்னெட் பிரபலமாகிட்டு இருந்துச்சு. கொஞ்சம் ப்ரீ டைம் கிடைச்சா போதும், ஆளாளுக்கு ஒரு பிகர தள்ளிக்கிட்டு போய்டுவானுங்க. நமக்கு போக்கிடமே இருக்காது. கேண்டீனுக்கு போனா எல்லா டேபிள்லயும் இவனுங்களே சிங்கிள் டீய வாங்கி வெச்சிக்கிட்டு ரெண்டு மணி நேரம் வறுப்பானுங்க, உக்காந்து வேடிக்க பார்க்க கூட இடம் கிடைக்காது, கிரவுண்ட் பக்கம் போனா வெட்டியா ஒரு பால், பேட்ட வெச்சிக்கிட்டு நாலு பேரு சீன் போட்டுட்டு இருப்பானுங்க. அவனுங்களும் வெளையாட மாட்டானுங்க அடுத்தவனையும் வெளையாட விடமாட்டானுங்க. அவனுங்களுக்கு சப்போர்ட் பண்றதுக்குன்னு தஸ்புஸ்னு பேசுற நாலு பிகருக அங்க நின்னுக்கிட்டு ஹாய்யா போயா வாயான்னு அலப்பற பண்ணிட்டு இருப்பாளுக.

வெளில போய் டீக்கடைலயாவது உக்காரலாம்னா அங்க காலேஜ் வாத்தியாருங்க தொல்லை. சரி மிச்சம் மீதி இருக்க அல்லகைஸ் எவனையாவது ரெடி பண்ணிட்டு தியேட்டர் பக்கம் போகலாம்னா, அவனுங்க பிட்டுப்படத்த தவிர வேற படம் பாக்க மாட்டோம்னுட்டானுங்க. நாமலும் ஒரே படத்த எத்தன வாட்டிதான் பாக்குறது? இப்படி நம்ம பொழப்பு லோல்பட்டுக்கிட்டு இருந்துச்சு. 

ஒருநா இந்த மாதிரியான ஒரு நேரத்துல என்ன பண்றதுன்னே தெரியாம லைப்ரரில தனியா உக்காந்து பெரிய பெரிய பொஸ்தகங்களை வெச்சி வெட்டி சீன் போட்டுட்டு இருந்தப்ப ஒரு சுமாரான ஜூனியர் பிகரு, பேரு சுதா,  பக்கத்துல வந்துச்சு. வந்து சுத்திமுத்தி பாத்துட்டு,

சார், வந்து.....

சொல்லு சுதா.. என்ன வேணும்?

அது வந்து, நீங்கதான் கம்ப்யூட்டர்ல பெரியாள்னு சொன்னாங்க ...

"!!!!!!!" ( எவனோ நம்ம பசங்கதான் சொல்லி இருக்கனும், நம்ம பசங்க எப்பவும் இந்த மாதிரி நல்ல விஷயம்லாம் பண்ண மாட்டானுங்களே, இதுல எதுவும் சதி இருக்குதா?) எவனாவது ஒளிஞ்சிருந்து வாட்ச் பண்ணிட்டு இருக்கானான்னு சுத்தி முத்தி பார்த்தேன்..... ஒரு பக்கியையும் கணோம்...

என்ன சார், யோசிக்கிறீங்க, நான் வேணா அப்புறம் வரவா?

...ம்ம் இல்ல இல்ல,. சொல்லு சுதா... ஏதாவது ப்ரோகிராம் இன்ஸ்டால் பண்ணனுமா?

இல்ல சார், பிரவுசிங் செண்டர் போய் ஈமெயில் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணனும் கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?

ஆஹா டிக்கட்டு வாண்டடா வந்து வலைல விழுகுதே..... சரி வா போகலாம்னு பக்கத்துல இருந்த பிரவுசிங் செண்டருக்கு கூட்டிட்டு போனேன். 




அப்போ நெட்டு இருந்த ஸ்பீடுக்கு ஒரு ஈமெயில் செக் பண்ணவே அரை மணி நேரம் ஆகிடும். ஈமெயில் அக்கவுண்ட் கிரியேட் பண்றேன்னு ஆரம்பிச்சி வெச்சி கடலை வறுத்துட்டு இருந்தேன். கொஞ்ச நேரம் நல்லா போய்ட்டு இருந்துச்சு. அப்புறம்தான் கவனிச்சேன், அங்க ஒரு சூப்பர் பிகர் வேலைல இருக்குன்னு. இவ்ளோ பக்கத்துல இருக்கு, நமக்கு எப்படி தெரியாம போச்சுன்னு ஆச்சர்யமா இருந்துச்சு. அதை கூப்புடனும்னா சிஸ்டத்துல ஏதாவது ஹெல்ப் வேணும்னுதான் கூப்புட முடியும், நாமலோ பெரிய ஐடி அப்பாட்டக்கர் ரேஞ்சுக்கு ஈமெயில் அக்கவுண்ட் ஆரம்பிச்சிட்டு இருக்கோம், கடலை வேற நல்லா போய்ட்டு இருக்கு, இருக்கறத விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசைப்படனுமான்னு ஒரே யோசனை. பட் அதுக்காக இந்த பிகரையும் மிஸ் பண்ணவும் மனசில்ல.




கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு பிரண்டு ஒருத்தன், பிகர் விஷயத்துல கரை கண்டவன், கண்டிப்பா நல்ல ஐடியா கொடுப்பான்னு நம்பி அவனுக்கு கால் பண்ணேன்.  நம்புன மாதிரியே செமையா ஐடியா கொடுத்தான். மச்சி காலேஜ் பிகர் கிணத்து தண்ணி மாதிரி, எப்ப வேணா கடலை போட்டுக்கலாம். பிரவுசிங் செண்டர் பிகர் ஆத்துத்தண்ணி மாதிரி, சான்ஸ் கிடைக்கிறப்பவே கடலை வறுத்துடனும்னு தெளிவா சொல்லிட்டான். சரின்னு சொல்லி கொஞ்சம் ஸ்பீடா ஈமெயில் அக்கவுண்ட் கிரியேட் பண்ணிக் கொடுத்து காலேஜ் பிகரை சீக்கிரமே அனுப்பி வெச்சிட்டேன், அது போனதும் சும்மா ரெண்டு வெப்சைட்ட ஓப்பன் பண்ணி வெச்சிட்டு, பிரவுசிங் செண்டர் பிகரை ஹெல்ப்புக்கு கூப்பிட்டேன். ரொம்ப நேரமா கூப்புடாத ஆள் கூப்பிடுறாரேன்னு அதுவும் வேகமா பக்கத்துல வந்துச்சு, வந்து...,

என்னண்ணா... சிஸ்டம் ஹேங் ஆகிடுச்சா?




நன்றி: கூகிள் இமேஜஸ்!

Monday, July 22, 2013

தலைவா.... எனது பார்வையில்...!




எச்சரிக்கை: இது ஒரு முன் விமர்சனம்

ஓப்பனிங் சீன். சந்தானம், மனோபாலா மற்றும் பிற அல்லக்கைகள் எல்லாரும் எதற்கோ காத்திருகிறார்கள். அங்கே ஒரு புதியவர் வந்து பார்த்து எல்லாரும் காத்திருப்பதைப் பார்த்து திகைக்கிறார். ஏன் இப்படி காத்திருக்கீங்க ஏன்று திட்டுகிறார். அதற்கு சந்தானம் படத்துக்கு படம் பலவருசமா இப்படித்தான் பண்ணிட்டு இருக்கோம் உங்களுக்கு தெரியாதா. ஏன்யா சினிமா எதுவும் பாத்தது இல்லையா...? ஸ்ட்ரெயிட்டா சென்ட்ரல் ஜெயில்ல இருந்து வர்ரியான்னு எகிற,  மனோபாலா எல்லாத்தையும் மூடிட்டு உக்காந்து வேடிக்கை பாரு தெரியும்னு சொல்ல, எல்லாருக்கும் பல்ஸ் பதறுது. தங்கச்சி கேரக்டர்ஸ் ரெண்டு பேரு எங்கண்ணன் இப்ப வந்துடும், இப்ப வந்துடும்னு சொல்லி சொல்லி தாய்க்குலங்களை தவியா தவிக்க வெக்கிறாங்க.  திடீர்னு ஒரு சத்தம், நாலஞ்சு பேர் தலைவா வந்துட்டார் தலைவா வந்துட்டார்னு கத்திக்கிட்டே தலைதெறிக்க ஓடிவாராங்க. அந்த இடம் முழுதும் ஒரே பதட்டமும்  பரபரப்பும் தொற்றிக் கொள்கிறது.




அப்போ க்ளோசப்ல ஒரு வலது பக்க ஷூவ மட்டும் (காலோடுதான்யா) காட்டுறாங்க. அதுல நாலாபக்கமும் நெருப்பு பொறி சிதறிட்டு இருக்கு. இடது பக்க ஷூவையும் காட்டுறாங்க அதுலயும் நெருப்பு பொறி சிதறிட்டு இருக்கு. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா கேமராவ மேல தூக்குறாங்க. டாகுடர் எதுக்குன்னே தெரியாம ஆக்ரோஷத்தோட வர்ராரு. முகத்துல இருந்தும் நெருப்பு பொறி அங்கங்க தெரிச்சு விழுது. பக்கத்துல வந்ததும் முகம் டக்குன்னு சாந்த்தமா மாறுது, உடனே க்ளோசப்ல காட்டுறாங்க. அப்படியே கைய மேல தூக்கி வணக்கம் வைக்கிறார் பாருங்க, சான்சே இல்ல, பட்டாசு கிளப்பும் சீன். பின்னால தலிவா... ச்சே தலைவா தலைவான்னு கோசம் வேற விண்ணை முட்டுது. பார்க்கும் போதே உடம்பெல்லாம் சிலிர்க்குது. இதுவரை எந்த படத்துலயும் வந்திராத ஓப்பனிங்  சீன்ன்னு கண்ணு, வாயி, மூக்குன்னு எல்லாத்தையும் மூடிட்டு சொல்லலாம். இப்படி ஒரு வழியா ஓப்பனிங் சீன்  முடிஞ்சு ஓப்பனிங் சாங் ஆரம்பிக்குது. சாங்னா சாங் அப்படி ஒரு சாங். விஜய் யார், என்ன செய்றாரு, என்ன செய்ய போறாரு, எப்படி செய்ய போறாரு, அவருடைய திறமை, புகழ், பெருமைன்னு எதையும் விட்டு வைக்காம நம்மளை திக்குமுக்காட வெக்கிறாங்க, ஒரே பாட்டுல இவ்ளோ விஷயத்தையும் எப்படி கொண்டுவந்தாங்கன்னு திகைப்பா இருக்கு. ஒண்டர்புல் ஜாப்.




குட்டிசுவத்து மேல டாக்டர் விஜய் தன் நண்பர்களோட உக்காந்து ஜாலியா அரட்டை அடிச்சிட்டு இருக்கார். அப்போ சைடு வில்லன் & கோ குவாலிஸ், ஸ்கார்ப்பியோ சகிதமா கத்திக்கிட்டே தாறூமாறா வர்ராங்க. கைல அருவாள வேற வெச்சி சுத்திக்கிட்டே இருக்கானுங்க (அப்பதானே அவங்க அருவா வெச்சிருக்கறது நமக்கு தெரியும்?) நம்ம ஹீரோ & கோ அதை கண்டுக்காம அலட்சியமா அரட்டைல பிசியா இருக்காங்க. வில்லன் குரூப்ல இருந்து ஒரு வண்டி அவங்க பக்கத்துல நிக்குது, அதுல இருந்து கரடுமுரடா ஒருத்தன் இறங்கி நேரா இவங்கள நோக்கி வந்து பக்கத்துல வந்த உடனே விலகி  அருகிலேயே ஒண்ணுக்குப் போறான். அவன் இறங்கி வர்ரதும், ஒதுங்கி ஒண்ணுக்குப் போறதும் பரபரப்பின் உலகத்தரம். அதைப் பார்த்து நமக்கே கோவம் கோவமா வருது.

ஆனா டாக்டர் விஜய், அதையும் கண்டுக்காம அலட்சியமா ஒரு லுக் விட்டுட்டு அரட்டையை கண்டினியூ பண்ணுவது செம கெத்து சீன். அந்த கரடுமுரடு பார்ட்டி ஒண்ணுக்கடிக்கும் போது வேணும்னே ஹீரோ கோஷ்டியோட அல்லக்கை கால் மேல தெரிக்கிற மாதிரி அடிக்கிறான். அதை பார்த்ததும் விஜய் அவன் சட்டைய புடிச்சு இழுத்து ஏண்டா இப்படி பண்றே என்று கேக்கிறார். அதுக்கு அவன் ஒண்ணுக்கடிக்கிற இடத்துல உக்காந்திருந்தா மேல படத்தாண்டா செய்யும்னு சொல்றான். அதைக் கேட்டதும் விஜய் சூறாவளியா கெளம்பி வேட்டையாடுறாரு பாருங்க, சான்சே இல்ல. தமிழ் சினிமாவுல இப்படி ஒரு சண்டைய பாத்து எத்தன வருசமாச்சுய்யா. 

சண்டை போட்டு முடிஞ்சதும்தான் தெரியுது அந்த வில்லன் & கோ ஏதோ வில்லங்கமான வேலைக்காகத்தான் போய்ட்டு இருக்காங்கன்னு. அவங்களோட எல்லா கார்களையும்  நிறுத்தி பரபரன்னு செக் பண்றார். நமக்கும் திக் திக்னு இருக்கு. அதுல ஒரு கார்ல அமலா பால் கட்டி வைக்கப்பட்டிருக்கார். விஜய் உடனே அவரை விடுவிக்கிறார். ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கிறாங்க. உடனே நம்ம டாக்டர் வழக்கம் போல ஸ்டைலா வாய்க்குள்ள கோலிக்குண்டை குதப்புறார். அப்படியே செமத்தியா ஒரு டூயட் சாங்க். செம பீல் குட் எபக்ட்.




பாட்டு முடிஞ்சதும் டாக்டர் விஜயோட தேடுதல் வேட்டை ஆரம்பிக்குது. வில்லன் கும்பல்ல எல்லாரும், அடிக்கடி தேவையில்லாம அழுகுறாங்க. அதை நோட் பண்ணி, அவங்க கடத்துறது சாம்பார் வெங்காயம்தான்னு கண்டுபிடிப்பது சபாஷ் போட வைக்கிறது. அந்த வில்லன் கும்பல் சென்னைல இருந்துதான் சாம்பார் வெங்காயத்தை கடத்திட்டு வர்ராங்கன்னும் கண்டுபுடிக்கிறார். நண்பர்கள்லாம் இது ரொம்ப பெரிய இடம் வேணாம்னு சொல்லும் போது பதிலுக்கு அவர் பேசும் பஞ்ச் டயலாக்குகள் இனி பட்டிதொட்டியெங்கும் பேசப்படும். வெளிநாட்டு விஞ்ஞானிகள் உதவியுடன் சாம்பார் வெங்காயத்தை வைத்து வில்லன்  சாராயம் தயாரிக்க முயற்சிப்பதும், அதை டாக்டர் விஜய் அந்த விஞ்ஞானிகள் மூலமாகவே தடுப்பதும் செம ஹைடெக். இந்த நவீன கம்ப்யூட்டர் யுகத்திற்கேற்ப எல்லாமே பேஸ்புக்கிலேயே நடப்பதாக காட்டி இருப்பது மிகவும் சுவராசியமாக இருக்கிறது.

சென்னைல உள்ள அவங்க நெட் ஒர்க்கை கண்டுபுடிச்சி மெயின் வில்லனை அழித்து ஒழிக்கறதுக்காக சென்னை கிளம்புறார். அவர் சென்னை செல்லும் அந்த பாட்டு சீன்கள் ஜோரா வந்திருக்கு. அமலா பாலும் சென்னைக்கு வருவது, அவரை வில்லன்கள் கடத்த முயற்சிப்பது எல்லாம் கிளாஸ்.  சென்னைல அவர் ஒவ்வொரு தாதாவா தனித்தனியா ஸ்கெட்ச் போட்டு, பஞ்ச் டயலாக் பேசி(யே)  போட்டுத்தள்ளும் சீன்கள் ஏ ஒன் ரகம். செம விருவிருப்பு. கடைசில அவர் மெயின் வில்லனை நேருக்கு நேரா சந்திச்சு கேள்விகள் கேக்குறது செம பஞ்ச். அவற்றை உலகில் உள்ள தாதாக்கள் அனைவரையும் கேக்க வைத்தால் அவர்கள் அனைவரும் அந்த நிமிடமே திருந்திவிடுவார்கள்.  அவ்வளவு கருத்துக்களும், தத்துவங்களும் அவற்றில் பொதிந்திருக்கின்றன.  சமூக ஆர்வலர்கள் முயற்சிக்கலாம்.

மொத்தத்தில் தலைவா பட்டாசு கிளப்புகிறான்.

நன்றி: கூகிள் இமேஜஸ்!