Monday, November 5, 2012

குஜய் டீவி வழங்கும் டோபிநாத்தின் அவனா இவனா...




குஜய் டீவியின் டோபிநாத், அவனா இவனா நிகழ்ச்சிக்கு நம்ம பதிவர்கள்  கோஷ்டியை அழைத்து வந்திருந்தனர். அன்றைய நிகழ்ச்சியின் தலைப்பு

”அடுத்த முதல்வர் சின்ன டாகுடரா பெரிய டாகுடரா?”


நிகழ்ச்சி தொடங்க இன்னும் சிறிது நேரம் இருக்கிறது. ஸ்டூடியோவில் அனைவருக்கும்  மேக்கப் போடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பாபு: டேய் என்னடா மேக்கப் போடுறீங்க…. ரொம்ப கருப்பா இருக்கு?

மேக்கப் மேன்: சார் உங்களுக்கு இன்னும் மேக்கப்பே போடல தண்ணிய தொட்டுதான் தொடச்சிருக்கோம்….

பாபு: நோ… அது தண்ணி இல்ல, தாரு……… யார்கிட்ட பொய் சொல்றே……? தண்ணிக்கு பதிலா தாரை தடவ சொன்னது யாரு, டெரர்தானே? எனக்கு அப்பவே தெரியும். அவன்  இந்த மாதிரி ஏதாச்சும் பண்ணுவான்னு….. எனக்கு இந்த மேக்கப்பும் வேணாம் ஒரு எழவும் வேணாம்…. நான் சும்மாவே அழகாத்தான் இருக்கேன்…….

டெரர் பாண்டியன்: அப்போ எனக்கும் மேக்கப் வேணாம்….

கேமராமேன்: ஐய்யய்யோ…… சார்… சார்... ரெண்டு பேரும் மேக்கப் போடாட்டி கூட பரவால்ல இந்த வெள்ள சட்டையையாவது போட்டுக்குங்க, இல்லேன்னா கேமரா  அடி வாங்கிரும்….

பாபு: யோவ் என்னய்யா பெரிய கேமரா... எங்க  பட்டிக்காட்டான் ஜெய் பாக்காத கேமராவா….. உனக்கு முதல்ல ஸ்டில் போட்டோ ஒழுங்கா எடுக்க தெரியுமா? போட்டோ வாக்னா  என்னான்னு தெரியுமா?

ஜெய்: (கிசுகிசுப்பாக) டேய் பாபு அத ஏன்டா இங்க கோர்த்து விடுறே…. என்ன கேமரா வெச்சிருக்கீங்கன்னு கேட்டா நான் மாட்டிப்பேன்டா……!

பாபு: ஏண்ணே?

ஜெய்: ஏன்னா நான் நோக்கியா 1100 வெச்சிதான்டா அந்த போட்டோ எடுத்தேன்…….

பாபு: க்க்க்ர்ர்ர்ர் தூ………

கேமராமேன்: (என்னது போட்டோ வாக்கா…….. ஒருவேள பெரிய போட்டோகிராபர்களா இருக்குமோ…?) சரி விடுங்க சார்….. உங்க இஷ்டம்…

மொக்கராசா: யோவ் பாபு, ப்ரோகிராம் ஆரம்பிக்க முன்னாடியே கேமராமேன்கிட்ட பேசி ஜெயிச்சிட்டியே, இன்னிக்கு நாமதான்யா ஜெயிக்கிறோம்…… ஆமா சார்... டைரக்டர்சார்… ஜெயிக்கிறவங்களுக்கு என்ன சார் கொடுப்பீங்க?

டைரக்டர்: யோவ் இது சமூக அக்கறைல(?) நடத்துற நிகழ்ச்சி, இத பாத்து நாலு பேரு திருந்துனாங்கன்னா போதும், அவ்ளோதான் பரிசெல்லாம் கிடையாது.

டெரர்பாண்டியன்: இந்த ப்ரோகிராம பாத்து திருந்துறானுங்களோ இல்லியோ, எங்கள பாத்து நிறைய பேர் திருந்திடுவானுங்க பாருங்க……

வைகை: அடிங்க….. உன்னைய பாத்து எவனும் திருந்த மாட்டான், பேதி புடிங்கி தான் ஓடுவான்……. ஹல்லோ டைரக்டர் சார், பாபு & டெரர் இவங்க ரெண்டு பேர்பக்கத்துலயும் என்னைய உக்கார வைங்க….

டைரக்டர்: ஏன்?

வைகை: இல்ல நான் கொஞ்சம் செகப்பு, அவங்க பக்கத்துல இருந்தா இன்னும் செகப்பா அழகா தெரிவேன்ல……

பாபு: நோ நோ…. அவன் பக்கத்துல இருந்தா நான்தான் செகப்பா தெரிவேன்…….

டெரர்: நல்ல வேள என்னைய உக்கார வெச்சா டோட்டல் ஸ்டூடியோவும் டிம்மாகிடும்னு இன்னும் எவனுக்கும் தெரில போல…..





பன்னிக்குட்டி ராம்சாமி: டேய் இங்க இவ்வளவு அமளிதுமளி நடந்திட்டு இருக்கு, இந்த ரமேஷ்  நாதாரி  எங்கடா போனான்…….?

வைகை: அங்க பாரு………….

ரமேஷ்  ஸ்டூடியோவில் கொடுத்த மாரி பிஸ்கட்டில் கடைசி பாக்கெட்டை தின்று முடித்துக் கொண்டு இருக்கிறார்…

பன்னி: அடேய்ய்….. இங்கேயுமாடா…? அடங்கொக்காமக்கா…. எல்லா பிஸ்கட்டையும் தின்னு முடிச்சிட்டியா?

ரமேஷ்: ஆமா மச்சி வீட்டுக்கு எதையும் எடுத்துட்டு போக கூடாதுன்னு சொல்லிட்டாங்க, அதான் எல்லாத்தையும் உக்காந்து தின்னு முடிச்சிட்டேன்…. சரி, ப்ரோகிராம்என்னாச்சு, ஆரம்பிச்சிடுச்சா?

பன்னி: இன்னும் இல்ல, பாபுவுக்கு மேக்கப் போடுறதுல பிரச்சனை ஆகிடுச்சு…..

ரமேஷ்: ஏன் மேக்கப் பத்தாம பெயிண்ட் ஃபேக்டரிக்கு கூட்டிட்டு போயிட்டாங்களா? அவனை பெயிண்ட் ட்ரம்முக்குள்ள பத்து நாளு ஊற வெச்சாலும் ஒண்ணியும்ஆவாதே…….. அவனுக்கு எதுக்கு மேக்கப் போடுறானுங்க…? சரி அதவிடு….. இந்த ப்ரோகிராம்ல கைய ஆட்டி ஆட்டி ஒரு புள்ள பேசுமே எங்கடா காணோம்?

மாலுமி (ப்ரொபசனல் குடிகாரன்): நானும் அதுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் மச்சி, கண்ணுலயே காட்ட மாட்றானுங்க…… சே

ரமேஷ்: ப்ரோகிராம் ஆரம்பிச்சிட்டா வந்துதானே ஆகனும்… ஆனா மியூசிக் வாசிக்கிற ஆளுகளையும் காணோமே?

பாபு: ம்மூதேவி…. இது டூப்பர் சிங்கர் ப்ரோகிராம் இல்ல, அவனா இவனா ப்ரோகிராம். இங்க பாடக்கூடாது, பேசனும்……….

ரமேஷ்: நான் பேசுனாவே பாடுற மாதிரிதானே இருக்கும்….. அதான் மியூசிக்கும் இருந்தா இன்னும் நல்லா ரீச் ஆகுமேன்னு பார்த்தேன்……

(ஆல் மெம்பர்ஸ்): க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் த்தூ..…

ரமேஷ்: இதுக்கு மட்டும் எல்லாரும் ஒண்ணுகூடிடுறானுங்கய்யா……..

மாலுமி: நான் டான்ஸ் ஆடனும்னு நினைச்சி ரெண்டு பாட்டு மனப்பாடம் பண்ணிட்டு வந்திட்டேனே.. இப்ப என்ன பண்றது?

பன்னி: பரவால்ல சும்மா ஆடு…. மப்பு தெளிஞ்சிடுச்சின்னு சொல்லி நாங்க சமாளிச்சிடுறோம்…

மாலுமி: இல்ல மச்சி, இன்னிக்கு பலாமாஸ்டர் முன்னாடி நல்லா ஆடி அசத்தனும்னு இருக்கேன்…. அதான்

பன்னி: டேய் இது பானாட பயிலாட இல்லடா….. அவனா இவனா நிகழ்ச்சி…….. இங்க டோபிநாத் தான் வருவார்.

மாலுமி: என்னது பலாமாஸ்டர் வரமாட்டாங்களா…..? அப்புறம் என்னைய ஏன்டா இந்த ப்ரோகிராமுக்கு கூப்புட்டீங்க? இன்னேரம் ரெண்டு ஃபுல்ல முடிச்சிருப்பேனே……

மொக்கை: என்னது டோபிநாத்தா…….? நம்ம பவர்ஸ்டார அசிங்கப்படுத்துனாரே… அவரா?

வைகை: அவரேதான்……….

மொக்கை: இது தெரிஞ்சிருந்தா நானும் இந்த ப்ரோகிராமுக்கே வந்திருக்க மாட்டேனே………

டெரர்: டேய் என்னடா ஆளாளுக்கு இப்படி சொல்லிட்டு இருக்கீங்க? அதான் வந்தாச்சில்ல……… வந்த வேலைய பாருங்கடா…..

பன்னி: ஆமா……. இது பெரிய ஃபோர்டு பேக்டரி…… எல்லாரும் கைல ஸ்பானர் எடுத்துட்டு போய் வேலைய பாருங்க……

டெரர்: ஆமா இவரு பெரிய மெக்கானிக்கு... கைல ஸ்பானர் இல்லாம வேல பாக்க மாட்டாரு……….

டைரக்டர்: என்னங்கடா இது… ப்ரோகிராமே ஆரம்பிக்கல அதுக்குள்ள அடிச்சிக்கிறானுங்க……..?

கேமராமேன்: சார் அப்படியே சைலண்ட்டா கேமராவ ஆன் பண்ணி விட்ரவா? ப்ரோகிராம இப்படியே முடிச்சிடலாம்….

டைரக்டர்: யோவ் அப்புறம் டைட்டிலுக்கு சம்பந்தமில்லாம போயிடுமேய்யா…?

கேமராமேன்: அதான் டோபிநாத் இருக்கார்ல…….? அவர தனியா கொஞ்சம் பேச சொல்லி எடிட் பண்ணி நடு நடுவுல போட்டு விட்டா எல்லாம் சரியா வந்திடும் சார்…….

டைரக்டர்: இதுவும் நல்ல ஐடியாவாத்தான் இருக்கு………….

டெரர்: சார் சீக்கிரம் ஆரம்பிங்க……. இல்லேன்னா இவனுங்க ப்ரோகிராமையே மாத்திடுவானுங்க…….

டைரக்டர்: ஏன்யா…?

டெரர்: இப்பவே பலா மாஸ்டர் எங்கேன்னு கேக்க ஆரம்பிச்சிட்டானுங்க……. இனி பமீதா எங்கே, பஷ்பு எங்கேன்னு ரகளை பண்ண ஆரம்பிச்சிடுவானுங்க சார்…. சட்டுன்னுப்ரோகிராம ஆரம்பிங்க……

டைரக்டர்: ஆமா உங்க டீம்ல நரின்னு ஒருத்தர் இன்னும் வர வேண்டி இருக்குன்னு சொன்னாங்களே…. வந்துட்டாரா?

தொடரும்.....


Wednesday, October 3, 2012

வீட்டில் வேலையே செய்யாமல் தப்பிப்பது எப்படி?




ஆபீஸ்லதான் நச்சு நச்சுன்னு உயிர வாங்குறானுங்கன்னா, வீட்டுக்கு வந்தா சப்பாத்தி சுடு, வெங்காய்த்த வெட்டு, பாத்திரம் கழுவு, டாய்லெட்ட கழுவுன்னு பெரிய கொடுமையா இருக்குன்னு நம்ம சிரிப்பு போலீஸ் ரமேஷ் கண்ணுல தண்ணி வெச்சிட்டார்....  அவருக்கு சிலபல ஐடியாக்கள் கொடுத்து இப்போ அவர கொஞ்சம் தெம்பா நடமாட விட்டிருக்கோம். அதே மாதிரி நாட்ல பல பேர் இருக்காங்க, அதுனால அவங்களுக்கும் பயன்படனும்னு சொல்லி அத ஒரு பதிவா போடுங்கன்னு அவர் கால்ல விழுந்து கெஞ்சுனதால இப்போ இந்த பதிவு.





1. வீட்டுக்கு ஆபீஸ்ல இருந்து போகும் போது எல்லாம் கைல ஏதாச்சும் ஆபீஸ் டாகுமெண்ட்ஸ் எடுத்து வெச்சுக்குங்க. அதுக்காக முக்கியமான டாகுமெண்ட எடுத்துட்டு போயி அதுல ரசம் கொட்டி டேமேஜர்கிட்ட வாங்கிக்கட்டிக்க வேணாம். ஏதாச்சும் கிழிச்சிப்போட வேண்டிய பேப்பர்ஸ் இருந்தா அத எடுத்துட்டு போனா போதும்.  வீட்டுக்கு வந்த உடனே அந்த பேப்பர்களை போட்டு சும்மா பொரட்டிக்கிட்டு இருங்க. அத பார்த்தாவே போதும், வீட்டம்மா உங்க பக்கத்துல கூட வரமாட்டாங்க. கில்மா பார்ட்டீஸ் ஏதாச்சும் கிளுகிளு கதைகளை பிரிண்ட் பண்ணி எடுத்துட்டு போய் ஆபீஸ் டாகுமெண்ட்ஸ் நடுவுல வெச்சிப் படிக்கலாம். ஆனா எக்குத்தப்பா மாட்டிக்கிட்டா அப்புறம் நிர்வாகம் பொறுப்பல்ல.






2. வீட்டுக்கு போன உடனே கம்ப்யூட்டர்ல போய் உக்காந்துடுங்க. ரெண்டு எக்செல், ரெண்டு வொர்டு ஃபைல் ஓப்பன் பண்ணிவெச்சிட்டு நீங்கபாட்டுக்கு ஃபேஸ்புக், ப்ளாக்னு மேயலாம். ஆனா என்ன வீட்டம்மா பக்கத்துல வரும் போது மூஞ்சிய கொஞ்சம் சீரியசா வெச்சிகிட்டு  வொர்டு/ எக்செல் ஃபைலுக்கு போய் எதையாவது நோண்டனும்....... பட் மூஞ்சில பதட்டமே தெரியப்படாது பீ கேர்ஃபுல்...........





3. அப்புறம் இருக்கவே இருக்கு போன். மொபைல எடுத்து ஏதாச்சும் ஆபீஸ் நம்பருக்கு டயல் பண்ணி, ரிங் போகமுன்னாடி கட் பண்ணிடுங்க. அப்புறம் காதுல வெச்சி படு சீரியசா, எஸ் சார், ஓகே சார், நைட்டே முடிச்சிடுறேன் சார் அப்படின்னு வெரப்பா பேசுங்க (பீ கேர்புல், போன் சைலண்ட் மோடுல இருக்கனும்). அதுக்கப்புறம் வீட்டம்மாவே உங்க டேபிளுக்கு வந்து சாப்பாடு ஊட்டிவிடவும் வாய்ப்பு இருக்கு. பட் இத அடிக்கடி யூஸ் பண்ணா சந்தேகம் வந்துடும், மாட்டிக்கிட்டா எல்லா வழிகளும் அடைபட்டிரும்...அப்புறம் காலம்பூரா கைல கரிச்சட்டியும் பினாயிலும்தான்....






4. நீங்க ஒரேடியா டேபிள்லயே உக்காந்திருந்தாலும் மாட்டிப்பீங்க. அதுனால கொஞ்ச நேரத்துக்கு ஒருவாட்டி எந்திரிச்சி உலாத்தனும். மூஞ்சிய கொஞ்சம் சீரியசா வெச்சிட்டு காத்துலயே கணக்கு போடனும். அப்பப்போ வீட்டம்மா கிட்ட ஏதாச்சும் கேட்கனும், இன்னிக்கு என்ன கிழமை..... போனமாசம் 5-ம் தேதி எங்க போனோம் அப்படின்னு டக் டக்குனு கேட்கனும்.... பதில் சொல்ல முன்னாடி ஓகே ஓகேன்னு சொல்லிட்டு மறுக்கா போய் கம்ப்யூட்டர்ல/ஆபீஸ் டாகுமெண்ட்ஸ்ல உக்காந்துடனும். அப்புறம் ரொம்ப டயர்டாகிட்ட மாதிரி அப்பப்போ கொட்டாவி விடுறதும் நல்லது. இதுக்கு  டீ, காபி, ஸ்னாக்ஸ்னு நல்ல பலனும் கிடைக்க வாய்ப்பிருக்கு.



இது இம்புட்டு கஷ்டமாடா....?


5. இன்னொரு முக்கியமான விஷயம், நீங்க ஆபீஸ்ல இருந்து கொண்டு வந்த பேப்பர்சை அடுத்த நாள் காலைல எடுத்துட்டு போகனும். மறந்தீங்கன்னா தொலஞ்சீங்க. மேட்டர் ஓவர். சும்மா சோம்பேறித்தனமா அதே பேப்பர்களை திரும்ப திரும்ப கொண்டு வரக்கூடாது. கண்டுபுடிச்சிடுவாங்க. வெறும் பேப்பர்களுக்கு பதிலா ஃபைலா கொண்டுவரலாம், பட் ஆபீஸ்ல மாட்டிக்காம கொண்டுவரனும். இல்லேன்னா அப்புறம் நெலமை ரெண்டுபக்கமும் இடிவாங்குற மத்தளமாகிடும்.





6. கடைசியா ரொம்ப ரொம்ப முக்கியமான பாய்ண்ட். இந்தப் பதிவ உங்க வீட்டம்மா படிச்சிடாம இருக்கனும். படிச்சிட்டாங்கன்னா அப்புறம் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.


அப்புறம் ஒரு சின்ன வெளம்பரம்.......... பாத்து படிச்சு எப்படியாவது பெரியாளாகிக்குங்க......!




நன்றி: கூகிள் இமேஜஸ்....!

Friday, September 14, 2012

சம்பந்தமே இல்லாமல் ஒரு பதிவு...!




ஒரு ஊர்ல 4 விஞ்சாணிகள் இருந்தாங்க. அவங்க வேல மிருகங்களை பத்தி ஆராய்ச்சி பண்றது. குரங்குகளை பத்தி ஆராய்ச்சி பண்ணலாம்னு 10 குரங்குகளை புடிச்சிட்டு வந்து பெரிய கூண்டுல அடைச்சாங்க. கூண்டுக்குள்ள பெரிய வாழைத்தார தொங்க விட்டு, பக்கத்துல ஒரு ஏணியவும் வெச்சாங்க. வாழைப்பழத்த பார்த்த உடனே ஒரு குரங்கு உடனே ஏணில ஏற ஆரம்பிச்சது. ஏணில ஏறுன உடனே சுத்தி பயங்கர குளிர்ச்சியான தண்ணிய எல்லா குரங்குகள் மேலயும் பீச்சி அடிச்சாங்க. மேல ஏறுன குரங்கு தண்ணி வேகம் தாங்காம கீழே வந்துடுச்சு. அது ஏணில இருந்து இறங்கின உடனே தண்ணிய அடிக்கிறத நிப்பாட்டிட்டாங்க. 




கொஞ்ச நேரத்துல இன்னொரு குரங்கு அதே மாதிரி வாழைப்பழத்த சாப்பிடலாம்னு ஏணில ஏற தொடங்குச்சி. அது ஏணிய தொட்ட உடனே மறுபடியும் அதே மாதிரி குளிர் நீர் பீச்சுனாங்க. தாங்க முடியாம ஏறுன குரங்கும் உடனே இறங்கிடுச்சு. இப்படியே தொடர்ந்து 3 வாட்டி நடந்துச்சு. குரங்குகள் எல்லாத்துக்கும், அந்த ஏணிய டச் பண்ணா எல்லார் மேலேயும் குளிர்நீர் பீச்சியடிக்கும்னு புரிஞ்சிடுச்சு. அதுனால எல்லாம் அமைதியா உக்காந்திருச்சுங்க.



அப்போ கூண்டுக்குள்ள இருந்து ஒரு குரங்க வெளில எடுத்துட்டு, புதுசா ஒரு குரங்க உள்ள விட்டாங்க. அதுக்கு தண்ணி மேட்டர் எதுவுமே தெரியாதே. உள்ள போன உடனே வாழைப்பழத்த பார்த்துட்டு ஏணி பக்கத்துல போச்சு. அத பார்த்த உடனே மத்த குரங்குகள்லாம் ஓடிவந்து புதுக் குரங்க ஏணிய டச் பண்ண விடாம இழுத்துட்டு வந்து போட்டு அடிச்சதுங்க. புதுக்குரங்குக்கு ஒண்ணுமே புரியல. ஏணில ஏறுனா அடிப்பாங்கன்னு நெனச்சிட்டு சும்மா உக்காந்துச்சு. 



இப்ப,இன்னொரு பழைய குரங்க வெளில எடுத்துட்டு இன்னொரு புதுக்குரங்க உள்ள விட்டாங்க, அதுவும் வாழைப்பழத்த பார்த்துட்டு ஏணில ஏற முயற்சி பண்ணி மத்த குரங்குகள்கிட்ட அடிவாங்கிச்சு. ஏற்கனவே உள்ள போன புதுக்குரங்கும் அடிக்கிறதுல சேர்ந்துக்கிச்சி. உள்ள வந்த புதுக்குரங்குக்கும் எதுக்கு இப்படி போட்டு அடிக்கிறாங்கன்னு தெரில. 



இப்படியே ஒவ்வொரு குரங்கா வெளில எடுத்துட்டு ஒரு புதுக்குரங்க உள்ள விட்டாங்க. கொஞ்ச நேரத்துல எல்லா பழைய குரங்கும் வெளில வந்துடுச்சு.உள்ள புது குரங்குகள் மட்டும்தான். அப்பவும் எல்லாம் மத்த குரங்குகளை ஏணில ஏற விடாமே அடிச்சிட்டு இருந்துச்சுங்க. ஆனா அதுக எதுக்கும் வாழைப்பழத்த எடுக்க ஏணில ஏறுனா குளிர்ந்த நீர் பீச்சி அடிக்கும், அதுனாலதான் ஏறவிடாம அடிக்கிறோம்னு எதுவும் தெரியாது. முன்னாடி இருந்த குரங்குங்க, அடிச்சது, நாங்களும் அடிக்கிறோம்னு அடிச்சிட்டு இருந்துச்சுங்க. இப்படித்தாங்க உலகத்துல பல விஷயங்கள் நடக்குது......... பட் இதுக்கும் பதிவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதுங்கோ..... 




நன்றி: கூகிள் இமேஜஸ், இது கார்ப்பரேட் கம்பெனிகளில் இருக்கும் ஒர்க் கல்ச்சர் பற்றி கிண்டலடிக்கும் ஒரு பழைய கதை... அவ்வளவே!

!