Friday, October 28, 2016

பைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்

பைரவா... யார்ரா அவன்...?


அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உப்புமா என்று எழுதி வைத்தால் அதன் கீழே பைரவா என்று யாரோ கிறுக்கி விட்டு ஓடிவிடுகிறார்கள். ஒவ்வொரு ஹோட்டலிலும் இது நடக்கிறது ஹோட்டல் ஓனர்கள் கொதிப்படைந்து அதை கண்டுபிடிக்க அடியாள்களை வைக்கின்றனர். ஆனாலும் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

கடைசியில் ஊரே கூடி நின்று அதை பற்றி பேசுகின்றனர். அப்போது ஹோட்டல்கள் கூட்ட தலைவன் அது யார் என்று யாராவது தானா வந்து ஒத்துக்கொள்ளாவிட்டால் ஊரில் உள்ள எல்லா ஹோட்டல்களையும் அடைத்துவிடுவோம் என்று மிரட்டுகின்றான். ஊர் தலைவர்கள் செய்வதறியாது திகைக்கின்றனர். அப்போது அண்ணா வந்து அது தான்தான் என்று ஒத்துக் கொள்கிறார். அது ஏன் அப்படி எழுதினார் என்று எல்லாரும் கேக்கும் போது அவரது நண்பனின் தம்பி ரவா உப்புமா கேட்டு கெஞ்சியதாகவும், அது கிடைக்காமல் அதற்கு பதிலாக ரவா தோசை வாங்கி கொடுத்ததாகவும், அதனால் அவன் அந்த ரவா உப்புமா ஏக்கத்திலேயே செத்துப்போய் விட்டதாகவும் அதிலிருந்து எல்லா ஹோட்டல்களிலும் ரவா உப்புமா மட்டுமே செய்ய வேண்டும் என்றே அப்படி எழுதி போட்டதாக கண்ணீர்மல்க சொல்கிறார். அதைக் கேட்டு அனைவரும் நெகிழ்கின்றனர். இனி ஹோட்டல்களில் ரவா உப்புமா மட்டுமே சமைப்போம் என்று அனைத்து ஹோட்டல் உரிமையாளர்களும் சபதம் எடுக்கின்றனர். அன்றில் இருந்து அண்ணாவை பைரவா என்று அழைக்க ஆரம்பித்தனர்.

இதையெல்லாம் அமைதியாக ஒரு ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த ஒரு லாரி ஓனர், அண்ணாவின் ஃப்ளாஷ்பேக்கில் மிகவும் நெகிழ்ந்து போய் அண்ணாவை தனது லாரி கிளீனராக நியமனம் செய்து தனது லாரியை கண்ணீர் மல்க ஒப்படைக்கிறார் . அண்ணாவும் சந்தோசமாக வரலாம் வா வரலாம் வா என்றூ பாடிக்கொண்டே வேலை செய்கிறார். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் ஆட்டோக்காரன் பாடலை ஆட்டோ ஸ்டேண்டுகளில் ஆயுத பூஜையன்று போடுவதைப் போல இனி இந்தியா முழுதும் லாரி ஸ்டேண்டுகளில் இந்த பாட்டுதான் ஒலிக்கப்போகிறது.

க்ளீனராக இருக்கும் அண்ணா படிப்படியாக முன்னேறி லாரி ஓட்டுனராக பதவியேற்கிறார். லாரி ஸ்டேண்டு முழுதும் அண்ணாவை தலைவராக கொண்டாடுகிறார்கள். இப்படியே போய்க் கொண்டிருக்கும் போது ஒருநாள் சென்னைக்கு சரக்கு கொண்டு செல்லவேண்டிய வேலை வருகிறது. கொண்டு செல்லும் வழியில் ஒரு ரவுடி கேங் சரக்கைக் கைப்பற்ற முயல்கிறது, ஆக்ரோசமாக சண்டை போட்டு சரக்கை மீட்டுக் கொண்டு சென்னை விரைகிறார். சென்னை சென்றதும்தான் தெரிகிறது லாரியில் இருக்கும் சரக்கு ஒரு சர்வதேச போதை கும்பல் கைக்கு செல்ல இருக்கிறது என்று. அண்ணா சரக்கை அவர்களிடம் ஒப்படைக்காமல் லாரியோடு தலைமறைவாகிறார். போதை கும்பல் தலைவனிடம் தெரிஞ்ச எதிரியவிட தெரியாத எதிரிக்குத்தான் அல்லு அதிகம் இருக்கனும் என்று சவால் விடுகிறார்.



இதற்கிடையில் எதிர் கேங் அண்ணாவிடம் சரக்கு இருப்பதை அறிந்து பேரம் பேச வருகிறது. அண்ணா அவர்களை சண்டை போட்டு விரட்டி விடுகிறார். கோபமடையும் அந்த கும்பல் அண்ணாவை போலீசிடம் போட்டுக் கொடுத்துவிடுகிறது. அதை அறிந்த அண்ணா  கன்னத்தில் மறு வைத்து, தாடையில் தாடி வைத்து, தலையில் விக் வைத்து மாறுவேடத்தில் தண்ணீர் லாரி ஓட்ட ஆரம்பிக்கிறார். வழியில் கீர்த்தி சுரேஷுக்கு லிஃப்ட் கொடுத்து, அண்ணா லாரி ஓட்டும் அழகை பார்த்து கீர்த்திக்கு காதல் வந்து என்று தனியே ஒரு ரொமாண்ட்டிக் ட்ராக்கும் அழகாக வந்து போகிறது. போலீசையும், ரவுடி கேங்கையும், போதை கும்பலையும் சமாளித்து இறுதியில் கீர்த்தியை எப்படி கைப்பிடிக்கிறார் என்பதையில் வெள்ளித்திரையில் காண்க......




5 comments:

விஸ்வநாத் said...

// என்பதையில் //

எழுத்து பிழை (யில் is extra)

// வெள்ளித்திரையில் காண்க....//
கதை நல்லால்லே கவுண்டரே.

'பரிவை' சே.குமார் said...

ஹா... ஹா... கலக்கிட்டீங்க போங்க...

Anonymous said...

neenga facebook'la mattum post podareenga..athai appadiye ingeyum podunga..

Nanjil Siva said...

பன்னிக்குட்டி அண்ணா ஒரு பெட்ரொமாஸ் லைட் வேணும்... நீங்க எங்க இருக்கீங்க

Ranjith Ramadasan said...

மிகவும் அருமை நல்ல பதிவு வாழ்த்துக்கள் பயனுள்ள தகவல் நல்ல விஷயம் மிக்க மகிழ்ச்சி நல்ல இடுக்கை நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் தமிழில் பிளாக்கரை ஆரம்பிப்பது எப்படி? https://www.techhelpertamil.xyz/