ஆபீஸ்லதான் நச்சு நச்சுன்னு உயிர வாங்குறானுங்கன்னா, வீட்டுக்கு வந்தா சப்பாத்தி சுடு, வெங்காய்த்த வெட்டு, பாத்திரம் கழுவு, டாய்லெட்ட கழுவுன்னு பெரிய கொடுமையா இருக்குன்னு நம்ம சிரிப்பு போலீஸ் ரமேஷ் கண்ணுல தண்ணி வெச்சிட்டார்.... அவருக்கு சிலபல ஐடியாக்கள் கொடுத்து இப்போ அவர கொஞ்சம் தெம்பா நடமாட விட்டிருக்கோம். அதே மாதிரி நாட்ல பல பேர் இருக்காங்க, அதுனால அவங்களுக்கும் பயன்படனும்னு சொல்லி அத ஒரு பதிவா போடுங்கன்னு அவர் கால்ல விழுந்து கெஞ்சுனதால இப்போ இந்த பதிவு.
1. வீட்டுக்கு ஆபீஸ்ல இருந்து போகும் போது எல்லாம் கைல ஏதாச்சும் ஆபீஸ் டாகுமெண்ட்ஸ் எடுத்து வெச்சுக்குங்க. அதுக்காக முக்கியமான டாகுமெண்ட எடுத்துட்டு போயி அதுல ரசம் கொட்டி டேமேஜர்கிட்ட வாங்கிக்கட்டிக்க வேணாம். ஏதாச்சும் கிழிச்சிப்போட வேண்டிய பேப்பர்ஸ் இருந்தா அத எடுத்துட்டு போனா போதும். வீட்டுக்கு வந்த உடனே அந்த பேப்பர்களை போட்டு சும்மா பொரட்டிக்கிட்டு இருங்க. அத பார்த்தாவே போதும், வீட்டம்மா உங்க பக்கத்துல கூட வரமாட்டாங்க. கில்மா பார்ட்டீஸ் ஏதாச்சும் கிளுகிளு கதைகளை பிரிண்ட் பண்ணி எடுத்துட்டு போய் ஆபீஸ் டாகுமெண்ட்ஸ் நடுவுல வெச்சிப் படிக்கலாம். ஆனா எக்குத்தப்பா மாட்டிக்கிட்டா அப்புறம் நிர்வாகம் பொறுப்பல்ல.
2. வீட்டுக்கு போன உடனே கம்ப்யூட்டர்ல போய் உக்காந்துடுங்க. ரெண்டு எக்செல், ரெண்டு வொர்டு ஃபைல் ஓப்பன் பண்ணிவெச்சிட்டு நீங்கபாட்டுக்கு ஃபேஸ்புக், ப்ளாக்னு மேயலாம். ஆனா என்ன வீட்டம்மா பக்கத்துல வரும் போது மூஞ்சிய கொஞ்சம் சீரியசா வெச்சிகிட்டு வொர்டு/ எக்செல் ஃபைலுக்கு போய் எதையாவது நோண்டனும்....... பட் மூஞ்சில பதட்டமே தெரியப்படாது பீ கேர்ஃபுல்...........
3. அப்புறம் இருக்கவே இருக்கு போன். மொபைல எடுத்து ஏதாச்சும் ஆபீஸ் நம்பருக்கு டயல் பண்ணி, ரிங் போகமுன்னாடி கட் பண்ணிடுங்க. அப்புறம் காதுல வெச்சி படு சீரியசா, எஸ் சார், ஓகே சார், நைட்டே முடிச்சிடுறேன் சார் அப்படின்னு வெரப்பா பேசுங்க (பீ கேர்புல், போன் சைலண்ட் மோடுல இருக்கனும்). அதுக்கப்புறம் வீட்டம்மாவே உங்க டேபிளுக்கு வந்து சாப்பாடு ஊட்டிவிடவும் வாய்ப்பு இருக்கு. பட் இத அடிக்கடி யூஸ் பண்ணா சந்தேகம் வந்துடும், மாட்டிக்கிட்டா எல்லா வழிகளும் அடைபட்டிரும்...அப்புறம் காலம்பூரா கைல கரிச்சட்டியும் பினாயிலும்தான்....
4. நீங்க ஒரேடியா டேபிள்லயே உக்காந்திருந்தாலும் மாட்டிப்பீங்க. அதுனால கொஞ்ச நேரத்துக்கு ஒருவாட்டி எந்திரிச்சி உலாத்தனும். மூஞ்சிய கொஞ்சம் சீரியசா வெச்சிட்டு காத்துலயே கணக்கு போடனும். அப்பப்போ வீட்டம்மா கிட்ட ஏதாச்சும் கேட்கனும், இன்னிக்கு என்ன கிழமை..... போனமாசம் 5-ம் தேதி எங்க போனோம் அப்படின்னு டக் டக்குனு கேட்கனும்.... பதில் சொல்ல முன்னாடி ஓகே ஓகேன்னு சொல்லிட்டு மறுக்கா போய் கம்ப்யூட்டர்ல/ஆபீஸ் டாகுமெண்ட்ஸ்ல உக்காந்துடனும். அப்புறம் ரொம்ப டயர்டாகிட்ட மாதிரி அப்பப்போ கொட்டாவி விடுறதும் நல்லது. இதுக்கு டீ, காபி, ஸ்னாக்ஸ்னு நல்ல பலனும் கிடைக்க வாய்ப்பிருக்கு.
5. இன்னொரு முக்கியமான விஷயம், நீங்க ஆபீஸ்ல இருந்து கொண்டு வந்த பேப்பர்சை அடுத்த நாள் காலைல எடுத்துட்டு போகனும். மறந்தீங்கன்னா தொலஞ்சீங்க. மேட்டர் ஓவர். சும்மா சோம்பேறித்தனமா அதே பேப்பர்களை திரும்ப திரும்ப கொண்டு வரக்கூடாது. கண்டுபுடிச்சிடுவாங்க. வெறும் பேப்பர்களுக்கு பதிலா ஃபைலா கொண்டுவரலாம், பட் ஆபீஸ்ல மாட்டிக்காம கொண்டுவரனும். இல்லேன்னா அப்புறம் நெலமை ரெண்டுபக்கமும் இடிவாங்குற மத்தளமாகிடும்.
6. கடைசியா ரொம்ப ரொம்ப முக்கியமான பாய்ண்ட். இந்தப் பதிவ உங்க வீட்டம்மா படிச்சிடாம இருக்கனும். படிச்சிட்டாங்கன்னா அப்புறம் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.
அப்புறம் ஒரு சின்ன வெளம்பரம்.......... பாத்து படிச்சு எப்படியாவது பெரியாளாகிக்குங்க......!
102 comments:
thanks
என் கண்ணை திறந்துட்டீங்க பாஸ்
//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
thanks//////
எதுக்கு இப்ப இந்த எக்ஸ்ட்ரா பிட்டீங்கு...?
////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
என் கண்ணை திறந்துட்டீங்க பாஸ்//////
உன் கண்ணை என்ன பூட்டி வெச்சிருந்தியா?
இதே மாதிரி இந்த டேமேஜர்கள சமாளிக்க ஏதாச்சும் பதிவு போடுங்கண்ணே, தொல்ல தாங்க முடியல...
///// Dr. Butti Paul said...
இதே மாதிரி இந்த டேமேஜர்கள சமாளிக்க ஏதாச்சும் பதிவு போடுங்கண்ணே, தொல்ல தாங்க முடியல...///////
போட்ர வேண்டியதுதான்....... எங்க போனாலும் இந்த டேமேஜருக தொல்ல தாங்க முடிலடா சாமி......
ok.. gud better best. fantastic. wonderful. chanceless.
ஆடி போனா ஆவணி... ஆடிக்கு ஒருக்கா ஆவனிக்கு ஒருக்கா பதிவு போடுற நம்ம பன்னிக்குட்டி ராம்சாமி அண்ணே பதிவு போட்டுட்டாருடோய்..
நல்ல கொடுக்குகிறீங்க பில்டப்பு....தலைப்பை சொன்னேன்
//இதுக்கு டீ, காபி, ஸ்னாக்ஸ்னு நல்ல பலனும் கிடைக்க வாய்ப்பிருக்கு.//
இவ்வளவு தானா.....அதுக்கு மேல????
என் பண்ணி இவ்ளோ கச்ட்டப்படுரதுக்கு பேசாம பொண்டாட்டிய டைவேர்ஸ் பண்ணிட்டா சிம்பிளா வேலை முடுஞ்சிடுமே ??
////Madhavan Srinivasagopalan said...
ok.. gud better best. fantastic. wonderful. chanceless.///////
any problem...?
/////மொக்கராசு மாமா said...
ஆடி போனா ஆவணி... ஆடிக்கு ஒருக்கா ஆவனிக்கு ஒருக்கா பதிவு போடுற நம்ம பன்னிக்குட்டி ராம்சாமி அண்ணே பதிவு போட்டுட்டாருடோய்..////////
அதையும் இவரு படிக்கலடோய்ய்....
கடைசி படம் சம்பந்தமா????? எதுக்கு?...அப்படின்னா....அவ்வ்வ்வ்வ்வ்
//////மனசாட்சி™ said...
நல்ல கொடுக்குகிறீங்க பில்டப்பு....தலைப்பை சொன்னேன்///////
அடங்கொன்னியா....... அண்ணன் அங்க வரை போய்ட்டாரு போல.....
எப்படி எல்லாம் வியம்பரம் பண்றானுங்க!
/////மனசாட்சி™ said...
//இதுக்கு டீ, காபி, ஸ்னாக்ஸ்னு நல்ல பலனும் கிடைக்க வாய்ப்பிருக்கு.//
இவ்வளவு தானா.....அதுக்கு மேல????///////
அது அவங்கவங்க வசதிய பொறுத்தது......
////மங்குனி அமைச்சர் said...
என் பண்ணி இவ்ளோ கச்ட்டப்படுரதுக்கு பேசாம பொண்டாட்டிய டைவேர்ஸ் பண்ணிட்டா சிம்பிளா வேலை முடுஞ்சிடுமே ??////////
பண்ணு...... நானா வேணாங்கிறேன்.....?
ராம்சாமி அண்ணே : எனக்கு ரொம்ப யூஸ் ஆகும் இந்த பதிவு. நெம்ப தேங்க்சு அண்ணே.
நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற. நம்ம நாட்டில் உள்ள பதிவர்களின் வாழ்வு முன்னேற ...!
என்றும் நல்லவங்க எல்லாரும் உங்க பின்னாலே ! நீங்க நினைப்பதெல்லாம் நடக்கும் உங்க கண்ணு முன்னாலே !
என்னங்க இது, சிட்டுக்குருவி லேகிய விளம்பரம் மாதிரி, வாலிப வயோதிக அன்பர்களே அபுபடீன்னுட்டு.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////மொக்கராசு மாமா said...
ஆடி போனா ஆவணி... ஆடிக்கு ஒருக்கா ஆவனிக்கு ஒருக்கா பதிவு போடுற நம்ம பன்னிக்குட்டி ராம்சாமி அண்ணே பதிவு போட்டுட்டாருடோய்..////////
அதையும் இவரு படிக்கலடோய்ய்....///
எழுத்து கூட்டி படிச்சிக்கிட்டு இருக்காரு டோய்
சரி
பன்னியாரே....உங்களின் ஆலோசனைகள்/ கருத்துக்களை பரிசீலித்து பயன் படுத்தி பாப்போம்
நண்ணி ஆங்
///// மனசாட்சி™ said...
கடைசி படம் சம்பந்தமா????? எதுக்கு?...அப்படின்னா....அவ்வ்வ்வ்வ்வ்///////
இது உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா?
Madhavan Srinivasagopalan said...
ok.. gud better best. fantastic. wonderful. chanceless.
*****
ராம்சாமி அண்ணே இந்த ஆளு இங்கிலீ பீசுலேயே பேசுது அண்ணே. புடிச்சு என்னான்னு கேளுங்க அண்ணே.
/////மனசாட்சி™ said...
எப்படி எல்லாம் வியம்பரம் பண்றானுங்க! //////
ஆங்... தொழிலதிபரே.... ஈரோடு போயி நீங்களும் ஒரு ஃபைனான்ஸ் கம்பேனி ஆரம்பிங்க......
//////மோகன் குமார் said...
ராம்சாமி அண்ணே : எனக்கு ரொம்ப யூஸ் ஆகும் இந்த பதிவு. நெம்ப தேங்க்சு அண்ணே.///////
வாங்க வாங்க, பிரபல பதிவர்களுக்காகத்தானே இத போட்டது.....
//////மோகன் குமார் said...
நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற. நம்ம நாட்டில் உள்ள பதிவர்களின் வாழ்வு முன்னேற ...!
என்றும் நல்லவங்க எல்லாரும் உங்க பின்னாலே ! நீங்க நினைப்பதெல்லாம் நடக்கும் உங்க கண்ணு முன்னாலே !///////
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா........
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////மனசாட்சி™ said...
எப்படி எல்லாம் வியம்பரம் பண்றானுங்க! //////
ஆங்... தொழிலதிபரே.... ஈரோடு போயி நீங்களும் ஒரு ஃபைனான்ஸ் கம்பேனி ஆரம்பிங்க......//
நீங்க மொத டெபாசிட் பண்ணுவதாக இருந்தால்..
//////பழனி.கந்தசாமி said...
என்னங்க இது, சிட்டுக்குருவி லேகிய விளம்பரம் மாதிரி, வாலிப வயோதிக அன்பர்களே அபுபடீன்னுட்டு.///////
அப்படியெல்லாம் சொன்னாத்தானே படிக்கிறாங்க.......
///////மொக்கராசு மாமா said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////மொக்கராசு மாமா said...
ஆடி போனா ஆவணி... ஆடிக்கு ஒருக்கா ஆவனிக்கு ஒருக்கா பதிவு போடுற நம்ம பன்னிக்குட்டி ராம்சாமி அண்ணே பதிவு போட்டுட்டாருடோய்..////////
அதையும் இவரு படிக்கலடோய்ய்....///
எழுத்து கூட்டி படிச்சிக்கிட்டு இருக்காரு டோய்/////////
இவரு கொஞ்சம் வேகமா எழுத்து கூட்டிட்டாருடோய்ய்......
//////மனசாட்சி™ said...
சரி
பன்னியாரே....உங்களின் ஆலோசனைகள்/ கருத்துக்களை பரிசீலித்து பயன் படுத்தி பாப்போம்
நண்ணி ஆங்////////
பின்விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல......
நெறைய மேட்டர் சொல்லிருக்கீங்க.. ஆனா என்ன பண்ணுறது எங்களுக்குதான் இத அனுபவிகிறதுக்கு கொடுப்பனவு இல்லையே... இருந்தாலும் மைன்ட்ல வச்சிக்கிறேன், ஒரு ரெண்டு மூணு வருஷம் கழிச்சு யூஸ் ஆகலாம்...(கடைசி மேட்டர ஒர்க் அவுட் பண்ணுறதுக்காக இந்த பதிவை இன்னும் ஒரு வருஷம் கழிச்சு டிலீட் பண்ணிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்)
/////மோகன் குமார் said...
Madhavan Srinivasagopalan said...
ok.. gud better best. fantastic. wonderful. chanceless.
*****
ராம்சாமி அண்ணே இந்த ஆளு இங்கிலீ பீசுலேயே பேசுது அண்ணே. புடிச்சு என்னான்னு கேளுங்க அண்ணே. ///////
அவரு பழைய பேப்பர் யாவாரிண்ணே.... அப்பப்ப இப்படித்தான் இங்கிலிபீஸ் பேப்பர பாத்து ஏதாச்சும் சொல்லிட்டு போவாரு......
பன்னிக்குட்டி ராம்சாமி said...
வாங்க வாங்க, பிரபல பதிவர்களுக்காகத்தானே இத போட்டது.....
****
போங்கண்ணே. பிரபல பதிவர்னு சொல்றதுக்கு பதிலா நீங்க கேட்ட வார்த்தையிலேயே திட்டிருக்கலாம்; எல்லாரும் இதை சொல்லியே திட்டுறீங்க அண்ணே
உங்க பாஷையில் சொல்லனும்னா " புடலங்காய் விக்குறவன் புண்ணாக்கு விக்குறவன் எல்லாரும் தொழிலதிபர்ங்றான் :))
//////மொக்கராசு மாமா said...
நெறைய மேட்டர் சொல்லிருக்கீங்க.. ஆனா என்ன பண்ணுறது எங்களுக்குதான் இத அனுபவிகிறதுக்கு கொடுப்பனவு இல்லையே... இருந்தாலும் மைன்ட்ல வச்சிக்கிறேன், ஒரு ரெண்டு மூணு வருஷம் கழிச்சு யூஸ் ஆகலாம்...(கடைசி மேட்டர ஒர்க் அவுட் பண்ணுறதுக்காக இந்த பதிவை இன்னும் ஒரு வருஷம் கழிச்சு டிலீட் பண்ணிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்)/////////
கடைசி மேட்டர்னா ஃபைனான்ஸ் கம்பேனியா.....? நோ நோ அது ஈரோட்டு போய்தான் பண்ணனும்...... அதுனால டெலிட் பண்ண மாட்டேன்....
நீங்க என்னைய அண்ணே அப்படிங்குறதும், பதிலுக்கு நான் உங்களை அண்ணேங்குறதும், இங்கே வந்தாலே ஒரே பாச மழையா இருக்குண்ணே
///////மோகன் குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
வாங்க வாங்க, பிரபல பதிவர்களுக்காகத்தானே இத போட்டது.....
****
போங்கண்ணே. பிரபல பதிவர்னு சொல்றதுக்கு பதிலா நீங்க கேட்ட வார்த்தையிலேயே திட்டிருக்கலாம்; எல்லாரும் இதை சொல்லியே திட்டுறீங்க அண்ணே
உங்க பாஷையில் சொல்லனும்னா " புடலங்காய் விக்குறவன் புண்ணாக்கு விக்குறவன் எல்லாரும் தொழிலதிபர்ங்றான் :))///////////
அண்ணே நான் கப்பல் யாவாரிண்ணே.... கப்பல்னு சொல்லித்தான் ஆகனும்.....!
////மோகன் குமார் said...
நீங்க என்னைய அண்ணே அப்படிங்குறதும், பதிலுக்கு நான் உங்களை அண்ணேங்குறதும், இங்கே வந்தாலே ஒரே பாச மழையா இருக்குண்ணே //////
ஊர்நாட்டுப்பக்கம் இதெல்லாம் சகசம்தானுங்களே......?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
கடைசி மேட்டர்னா ஃபைனான்ஸ் கம்பேனியா.....? நோ நோ அது ஈரோட்டு போய்தான் பண்ணனும்...... அதுனால டெலிட் பண்ண மாட்டேன்....////
நோ நோ.. அந்த //வீட்டம்மா படிச்சிடாம இருக்கனும். /// அத சொன்னேன்...
ஈரோடு மேட்டர நம்ம சென்னிமலை அண்ணன்கிட்ட சொல்லி டீல் பண்ணிக்கலாம்...
//////மொக்கராசு மாமா said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
கடைசி மேட்டர்னா ஃபைனான்ஸ் கம்பேனியா.....? நோ நோ அது ஈரோட்டு போய்தான் பண்ணனும்...... அதுனால டெலிட் பண்ண மாட்டேன்....////
நோ நோ.. அந்த //வீட்டம்மா படிச்சிடாம இருக்கனும். /// அத சொன்னேன்...
ஈரோடு மேட்டர நம்ம சென்னிமலை அண்ணன்கிட்ட சொல்லி டீல் பண்ணிக்கலாம்...////////
அப்போ உங்க கம்ப்யூட்டர்ல இருந்து இந்த பதிவ டெலிட் பண்ணிடுங்க......
இந்த ஐடியாவை இதுக்கு முன்னாடி எங்கேயோ கேட்டாப்புல இருக்கே...?!
விக்கி, சிபி போன்றோருக்கு மிகவும் பயன்படும் பதிவு இது, என் கண்ணுல தண்ணியா ஊத்துது.
வீட்டுல கண்டு பிடிச்சுட்டா இப்போ சிம்பிளா கொடூரமா ஒரு தண்டனை தாருறாங்க அதாவது தலவாணி இல்லாம போன்னு விட்டுருதாங்க.
@PANNIKUTTHI
krrrrrrrrrrrrrrr ...thoo..thoo
////// MANO நாஞ்சில் மனோ said...
இந்த ஐடியாவை இதுக்கு முன்னாடி எங்கேயோ கேட்டாப்புல இருக்கே...?!////////
நான் இந்த பதிவு போட்டத கனவுல படிச்சிருப்பீங்க......
///////MANO நாஞ்சில் மனோ said...
விக்கி, சிபி போன்றோருக்கு மிகவும் பயன்படும் பதிவு இது, என் கண்ணுல தண்ணியா ஊத்துது.///////
அவங்கள்லாம் பெரியாளுக, இந்த மாதிரி சின்ன சின்ன ஐடியாவலாம் ஃபாலோ பண்ண மாட்டாங்க.....
//////MANO நாஞ்சில் மனோ said...
வீட்டுல கண்டு பிடிச்சுட்டா இப்போ சிம்பிளா கொடூரமா ஒரு தண்டனை தாருறாங்க அதாவது தலவாணி இல்லாம போன்னு விட்டுருதாங்க.////////
அதுனால என்ன...... விடிய விடிய உக்காந்து பதிவு எழுத வேண்டியதுதானே?
/////இம்சைஅரசன் பாபு.. said...
@PANNIKUTTHI
krrrrrrrrrrrrrrr ...thoo..thoo////////
ok thank u..........
பயனுள்ள பதிவு. நமஸ்காரம்.:-)))
/////பட்டிகாட்டான் Jey said...
பயனுள்ள பதிவு. நமஸ்காரம்.:-)))//////
பயனுள்ள கமெண்ட், நமஸ்காரம்...!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////MANO நாஞ்சில் மனோ said...
விக்கி, சிபி போன்றோருக்கு மிகவும் பயன்படும் பதிவு இது, என் கண்ணுல தண்ணியா ஊத்துது.///////
அவங்கள்லாம் பெரியாளுக, இந்த மாதிரி சின்ன சின்ன ஐடியாவலாம் ஃபாலோ பண்ண மாட்டாங்க...//
அம்பது அறுவது உக்கிப் போட்டு தப்பிச்சுருவானுகளோ?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////இம்சைஅரசன் பாபு.. said...
@PANNIKUTTHI
krrrrrrrrrrrrrrr ...thoo..thoo////////
ok thank u..........///
கர்... த்து.....
#இதையும் தொடச்சிட்டுப் போகவும்...
நன்னி
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////MANO நாஞ்சில் மனோ said...
வீட்டுல கண்டு பிடிச்சுட்டா இப்போ சிம்பிளா கொடூரமா ஒரு தண்டனை தாருறாங்க அதாவது தலவாணி இல்லாம போன்னு விட்டுருதாங்க.////////
அதுனால என்ன...... விடிய விடிய உக்காந்து பதிவு எழுத வேண்டியதுதானே?//
ஆமாய்யா இதுவும் நல்லாத்தான் இருக்கு ஹி ஹி....
///////MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////MANO நாஞ்சில் மனோ said...
விக்கி, சிபி போன்றோருக்கு மிகவும் பயன்படும் பதிவு இது, என் கண்ணுல தண்ணியா ஊத்துது.///////
அவங்கள்லாம் பெரியாளுக, இந்த மாதிரி சின்ன சின்ன ஐடியாவலாம் ஃபாலோ பண்ண மாட்டாங்க...//
அம்பது அறுவது உக்கிப் போட்டு தப்பிச்சுருவானுகளோ?////////
உக்கி போடுறதால என்ன பிரயோசனம்? நைசா எல்லாத்துணியையும் தொவச்சி கொடுத்துடுவாங்கன்னு நினைக்கிறேன்......
/////வெளங்காதவன்™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////இம்சைஅரசன் பாபு.. said...
@PANNIKUTTHI
krrrrrrrrrrrrrrr ...thoo..thoo////////
ok thank u..........///
கர்... த்து.....
#இதையும் தொடச்சிட்டுப் போகவும்...
நன்னி////////
சொல்லிட்டாருய்யா பெரிய கெவர்னரு......
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வெளங்காதவன்™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////இம்சைஅரசன் பாபு.. said...
@PANNIKUTTHI
krrrrrrrrrrrrrrr ...thoo..thoo////////
ok thank u..........///
கர்... த்து.....
#இதையும் தொடச்சிட்டுப் போகவும்...
நன்னி////////
சொல்லிட்டாருய்யா பெரிய கெவர்னரு......///
நல்லவேள, திரும்ப துப்பல....
#ஆமா பன்னி, ஆபீஸ்ல இருக்கும்போது உமக்கு காது செவப்பாயிரும்னு சொல்லறாங்களே, அப்பிடியா?
///////வெளங்காதவன்™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வெளங்காதவன்™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////இம்சைஅரசன் பாபு.. said...
@PANNIKUTTHI
krrrrrrrrrrrrrrr ...thoo..thoo////////
ok thank u..........///
கர்... த்து.....
#இதையும் தொடச்சிட்டுப் போகவும்...
நன்னி////////
சொல்லிட்டாருய்யா பெரிய கெவர்னரு......///
நல்லவேள, திரும்ப துப்பல....
#ஆமா பன்னி, ஆபீஸ்ல இருக்கும்போது உமக்கு காது செவப்பாயிரும்னு சொல்லறாங்களே, அப்பிடியா?/////////
ஆளே செகப்பு(!) ..... இதுல காது மட்டும் என்ன?
//// FOOD NELLAI said...
அந்த கடைசி வெளம்பரத்துக்கு எம்புட்டு காசு வாங்குனீங்க சார்?/////
அந்தக் கம்பெனியே நம்மளுதுதானே?
presenttu
hi guys how are u all?
நாலாவது படத்தில் இருப்பது பன்னிக்குட்டி ராம்சாமி - அப்படின்னு ஒரு தகவல்
பன்னியாரே உண்மையா
யாம் ஏற்கனவே சொன்னோம் மீண்டும் சொல்கிறோம்
மொபைல் வீவ் வைக்கவும்
/////vinu said...
presenttu//////
சரி அண்ணன் நோட் பண்ணிக்கிட்டேன்....
///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
hi guys how are u all?/////
இப்பத்தான் ஜெயில்ல இருந்து வந்திருக்கார்..... ஆங் வீட்ல இருந்து......!
/////மனசாட்சி™ said...
நாலாவது படத்தில் இருப்பது பன்னிக்குட்டி ராம்சாமி - அப்படின்னு ஒரு தகவல்
பன்னியாரே உண்மையா///////
அங்க நெஜமாவே ஒரு பன்னிதான் இருக்குது.......
/////மனசாட்சி™ said...
யாம் ஏற்கனவே சொன்னோம் மீண்டும் சொல்கிறோம்
மொபைல் வீவ் வைக்கவும்////////
மொபைல் வியூ வெச்சா வேற என்னமோ பிரச்சனை வருதுன்னு ஒரு ஐடி அப்பாட்டக்கர் எப்பவோ சொன்னாருங்கோ..... அது என்னன்னு விசார்க்கிறேன்....!
அதே மாதிரி நாட்ல பல பேர் இருக்காங்க, அதுனால அவங்களுக்கும் பயன்படனும்னு சொல்லி அத ஒரு பதிவா போடுங்கன்னு அவர் கால்ல விழுந்து கெஞ்சுனதால இப்போ இந்த பதிவு.//
அவனபத்தி கொஞ்சம் டீசண்டா சொல்லியிருக்க போல? :-)
வீட்டுக்கு ஆபீஸ்ல இருந்து போகும் போது எல்லாம் கைல ஏதாச்சும் ஆபீஸ் டாகுமெண்ட்ஸ் எடுத்து வெச்சுக்குங்க. அதுக்காக முக்கியமான டாகுமெண்ட எடுத்துட்டு போயி அதுல ரசம் கொட்டி டேமேஜர்கிட்ட வாங்கிக்கட்டிக்க வேணாம். ///
டீ வாங்கி கொடுக்குற நான் எந்த டாக்குமன்ட்ட எடுத்துகிட்டு போறது?
இப்படிக்கு,
டெரர் பாண்டியன்
வீட்டுக்கு போன உடனே கம்ப்யூட்டர்ல போய் உக்காந்துடுங்க. ரெண்டு எக்செல், ரெண்டு வொர்டு ஃபைல் ஓப்பன் பண்ணிவெச்சிட்டு நீங்கபாட்டுக்கு ஃபேஸ்புக், ப்ளாக்னு மேயலாம். ////
வர வரா அடக்கும் கரெண்டு இல்லா மக்கா
இப்பதிக்கு,
பாபு
அப்புறம் இருக்கவே இருக்கு போன். மொபைல எடுத்து ஏதாச்சும் ஆபீஸ் நம்பருக்கு டயல் பண்ணி, ரிங் போகமுன்னாடி கட் பண்ணிடுங்க. //
அதுக்கு மொபைல்ல பேலன்ஸ் இருக்கனுமால்ல?
இபபடிக்கு,
கொசக்கி
மூஞ்சிய கொஞ்சம் சீரியசா வெச்சிட்டு காத்துலயே கணக்கு போடனும். ///
என் மொகரையே அப்பிடிதான்!
இபபடிக்கு,
அருண்
ரொம்ப அருமையான யோசனைகளை கொடுத்திங்க சகோ இதுல கடைசியா மனைவிக்கு தெரியகூடாது என்பதை முதல்லையே சொல்லி இருந்திங்கான என் மனைவி போன பிறகு பார்த்திருப்பேன் என் மனைவியோட சேர்ந்து படிச்சிட்டேன் வேற எதாவது யோசனை இருந்த சொல்லுங்க
அட! கம்ப்யூட்டர்ல ஒக்காந்துகிட்டு நான் பண்ணறத அப்படியே சொல்லிட்டீங்களே!
//////வைகை said...
அதே மாதிரி நாட்ல பல பேர் இருக்காங்க, அதுனால அவங்களுக்கும் பயன்படனும்னு சொல்லி அத ஒரு பதிவா போடுங்கன்னு அவர் கால்ல விழுந்து கெஞ்சுனதால இப்போ இந்த பதிவு.//
அவனபத்தி கொஞ்சம் டீசண்டா சொல்லியிருக்க போல? :-)////////
இதுக்கு மேல டீசண்ட்டா எப்படி சொல்றதுன்னு தெரியல, அதான்...!
////வைகை said...
வீட்டுக்கு ஆபீஸ்ல இருந்து போகும் போது எல்லாம் கைல ஏதாச்சும் ஆபீஸ் டாகுமெண்ட்ஸ் எடுத்து வெச்சுக்குங்க. அதுக்காக முக்கியமான டாகுமெண்ட எடுத்துட்டு போயி அதுல ரசம் கொட்டி டேமேஜர்கிட்ட வாங்கிக்கட்டிக்க வேணாம். ///
டீ வாங்கி கொடுக்குற நான் எந்த டாக்குமன்ட்ட எடுத்துகிட்டு போறது?
இப்படிக்கு,
டெரர் பாண்டியன்///////
டீ கெளாச கழுவாம அப்படியே எடுத்துட்டு போனா போதும்....
/////வைகை said...
வீட்டுக்கு போன உடனே கம்ப்யூட்டர்ல போய் உக்காந்துடுங்க. ரெண்டு எக்செல், ரெண்டு வொர்டு ஃபைல் ஓப்பன் பண்ணிவெச்சிட்டு நீங்கபாட்டுக்கு ஃபேஸ்புக், ப்ளாக்னு மேயலாம். ////
வர வரா அடக்கும் கரெண்டு இல்லா மக்கா
இப்பதிக்கு,
பாபு///////
ப்ளீஸ் யூஸ் ஜெனரேட்டர்.....
/////வைகை said...
அப்புறம் இருக்கவே இருக்கு போன். மொபைல எடுத்து ஏதாச்சும் ஆபீஸ் நம்பருக்கு டயல் பண்ணி, ரிங் போகமுன்னாடி கட் பண்ணிடுங்க. //
அதுக்கு மொபைல்ல பேலன்ஸ் இருக்கனுமால்ல?
இபபடிக்கு,
கொசக்கி///////
மொபைல்ல பேலன்ஸ் இல்லேன்னு தராசுல போய் வெச்ச பயதானே நீய்யி..... படுவா......!
////வைகை said...
மூஞ்சிய கொஞ்சம் சீரியசா வெச்சிட்டு காத்துலயே கணக்கு போடனும். ///
என் மொகரையே அப்பிடிதான்!
இபபடிக்கு,
அருண்/////
வீ வில் சேஞ்ச் இட்....!
///// Mohan P said...
ரொம்ப அருமையான யோசனைகளை கொடுத்திங்க சகோ இதுல கடைசியா மனைவிக்கு தெரியகூடாது என்பதை முதல்லையே சொல்லி இருந்திங்கான என் மனைவி போன பிறகு பார்த்திருப்பேன் என் மனைவியோட சேர்ந்து படிச்சிட்டேன் வேற எதாவது யோசனை இருந்த சொல்லுங்க////////
போய் பத்து பாத்தரம் வெளக்குங்க.....
///T.N.MURALIDHARAN said...
அட! கம்ப்யூட்டர்ல ஒக்காந்துகிட்டு நான் பண்ணறத அப்படியே சொல்லிட்டீங்களே!//////
இனிமே மானிட்டர ஆஃப் பண்ணிட்டு உக்காருங்கண்ணே......
ஹெல்மெட் போட்டுக்கிட்டுக் காய்கறி வெட்டுற படத்தைப் பார்த்துச் சிரிக்க ஆரம்பிச்சதுலேருந்து, கடைசியிலே வந்த விளம்பரத்தைப் படிச்சு முடிச்சு, இப்போ பின்னூட்டம் போடுற வரைக்கும் சிரிச்சிட்டே இருக்கேன் பானா ராவன்னா! பிரமாதம்! :-)))
//கடைசியா ரொம்ப ரொம்ப முக்கியமான பாய்ண்ட். இந்தப் பதிவ உங்க வீட்டம்மா படிச்சிடாம இருக்கனும். படிச்சிட்டாங்கன்னா அப்புறம் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.
//
ஹ,, ஹ,, ஹா,,,,,, அருமை
சூப்பர்ணே..ரொம்ப நாளாச்சு, இப்படி ஒரு கலக்கல் பதிவை நீங்க எழுதி!
இது சிப்புக்காக எழுதுனதா...இல்லே சொந்த/வெந்த அனுபவமா?
அது என்னய்யா விளம்பரம்?..சைடு பிஸினஸா?
/////சேட்டைக்காரன் said...
ஹெல்மெட் போட்டுக்கிட்டுக் காய்கறி வெட்டுற படத்தைப் பார்த்துச் சிரிக்க ஆரம்பிச்சதுலேருந்து, கடைசியிலே வந்த விளம்பரத்தைப் படிச்சு முடிச்சு, இப்போ பின்னூட்டம் போடுற வரைக்கும் சிரிச்சிட்டே இருக்கேன் பானா ராவன்னா! பிரமாதம்! :-)))///////
வாங்க சேட்டை, ப்ரொஃபைல்ல உங்க போட்டோவையே வெச்சிட்டீங்க போல.....? உங்க முகத்தை பார்த்தது எல்லாருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சிதான்......!
/////தொழிற்களம் குழு said...
//கடைசியா ரொம்ப ரொம்ப முக்கியமான பாய்ண்ட். இந்தப் பதிவ உங்க வீட்டம்மா படிச்சிடாம இருக்கனும். படிச்சிட்டாங்கன்னா அப்புறம் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.
//
ஹ,, ஹ,, ஹா,,,,,, அருமை//////
பின்னே அங்க மாட்டிட்டா எல்லாமே முடிஞ்சதே.....?
///செங்கோவி said...
சூப்பர்ணே..ரொம்ப நாளாச்சு, இப்படி ஒரு கலக்கல் பதிவை நீங்க எழுதி!////
ஹி...ஹி....!
///////செங்கோவி said...
இது சிப்புக்காக எழுதுனதா...இல்லே சொந்த/வெந்த அனுபவமா?//////
எல்லாம்தான்.....
/////செங்கோவி said...
அது என்னய்யா விளம்பரம்?..சைடு பிஸினஸா?///////
ஊர்ல இப்ப அதாண்ணே பெரிய பிசினசு.....!
இரவு வணக்கம்,ப.ரா சார்!ரொம்ப நன்றிங்க!இத்தனை நாள் ஒன்னும் புரியாம தேங்கா துருவுறது கூட நான் தான்!அதிலயும் கடேசியா சொன்னீங்க பாருங்க,அது வொர்க் அவுட் ஆவும்!ஏன்னா தங்கமணிக்குத்தான் கம்பியூட்டர் ஒப்பன் பண்ணவே தெரியாதே?ஹ!ஹ!ஹா!!!!!!
கொஞ்சம் ஓவர்டோஸாகி, வீட்டம்மா கடுப்பாகி அடியப்போட்டா நீங்க ஆஸ்பத்திரி செலவை ஏத்துக்கங்க.
////Yoga.S. said...
இரவு வணக்கம்,ப.ரா சார்!ரொம்ப நன்றிங்க!இத்தனை நாள் ஒன்னும் புரியாம தேங்கா துருவுறது கூட நான் தான்!அதிலயும் கடேசியா சொன்னீங்க பாருங்க,அது வொர்க் அவுட் ஆவும்!ஏன்னா தங்கமணிக்குத்தான் கம்பியூட்டர் ஒப்பன் பண்ணவே தெரியாதே?ஹ!ஹ!ஹா!!!!!!///////
வணக்கம் யோகா ஐயா, அப்போ எல்லா ஐடியாவையும் மாத்தி மாத்தி யூஸ் பண்ண ஆரம்பிச்சிடுங்க.....!
/////இந்திரா said...
கொஞ்சம் ஓவர்டோஸாகி, வீட்டம்மா கடுப்பாகி அடியப்போட்டா நீங்க ஆஸ்பத்திரி செலவை ஏத்துக்கங்க./////
அதான் கீழ பின்விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காதுன்னு சொல்லி இருக்கோமே.....?
இதெல்லாம் வீட்டு பொம்பளக்கிட்ட எடு படாதுங்கண்ணா..:-) வேனும்னா முயற்சி செய்து பார்க்கலாம்!!
///Riyas said...
இதெல்லாம் வீட்டு பொம்பளக்கிட்ட எடு படாதுங்கண்ணா..:-) வேனும்னா முயற்சி செய்து பார்க்கலாம்!!////
நீங்க சொல்றத பாத்தா உங்க வீட்ல நெலம கொஞ்சம் கவலைக்கிடம்தான் போல...... குத்துமதிப்பா ட்ரை பண்ணி மாட்டிக்காதிங்கங்கோ.......
இன்னும் கல்யாணம் ஆகல இருந்தாலும் நோட் பண்ணிக்கிறேன்...
கண்டிப்பா தேவைப்படும் :))
//// Prabu M said...
இன்னும் கல்யாணம் ஆகல இருந்தாலும் நோட் பண்ணிக்கிறேன்...
கண்டிப்பா தேவைப்படும் :))/////
மனப்பாடம் பண்ணிக்குங்க... எப்ப வேணா யூஸ் ஆகும்...
ரொம்ப நாள் கழிச்சு ஏரியா குள்ள வந்தேன்.....
நீங்க கலக்குறீங பாஸ்...... :)
///// Prabu M said...
ரொம்ப நாள் கழிச்சு ஏரியா குள்ள வந்தேன்.....
நீங்க கலக்குறீங பாஸ்...... :)///////
நன்றி பிரபு...... நீங்கள்லாம் பழைய ஆளாச்சே...... !
கொஞ்சமாவது வீட்டு வேலை பார்க்கலாம் என்று நினைக்கும் ஆண்களையும் நாசமாக்கும் உங்கள் மீது அகில உலக பெண்கள் சார்பாக கேஸ் போட போறேன்.ஏதாவது வழி இருக்கான்னு மோகன் குமார் கிட்ட ஐடியா கேட்கணும்.
Post a Comment