Saturday, October 30, 2010

பொண்ணு பாக்கப் போறீங்களா? எச்சரிக்கை, ஏமாந்துடாதீங்க!

பொண்ணுங்க பசங்களுக்கு எப்பிடியெல்லாம் ஆப்பு கொடுக்குறாங்கன்னு பலவிதமா கேள்விப்பட்டிருப்பீங்க, சில பேரு எக்ஸ்பீரியன்சும் ஆயிருப்பீங்க. ஆனா நேத்திக்கு ஒரு மெயில் வந்திச்சி, பாத்துட்டு கதிகலங்கிப் போயிட்டேன்.   எந்திரன்ல ரஜினிக்கு போட்டங்கலே மேக்கப்பு, அதெல்லாம் சும்மா ஜுஜுபீ.... அப்பிடியிருக்கு அது! அதான் உங்கள எல்லாம் எச்சரிக்க பண்ணலாம்னு ஒரு நல்ல எண்ணத்துல அத பதிவாவே போட்டுட்டேன்! (நம்ம சிரிப்பு போலீசுக்கு உபயோகமா இருக்கும்!)
மேக்கப்ப வெச்சி ஏதோ கொஞ்சம் செகப்பா காட்டலாம்னு பாத்திருக்கோம் (நம்ம பசங்க சில பேருகூட அதப் பண்ணி ஏமாத்திக்கிட்டு இருப்பீங்க!) ஆனா இது புது ரகமாவுல்ல இருக்கு!










பாத்தீங்களாப்பு, மேக்கப்ப போட்டு எப்படியெல்லாம் ஏமாத்துறாங்கன்னு, ஆகவே நண்பர்களே பொண்ணு பாக்கப் போனா ஏமாந்துடாதீங்க, மொதல்ல மூஞ்சிய கழுவ சொல்லுங்க, அப்புறம் பாருங்க.... எச்சரிக்கை..., ஆமா சொல்லிப்புட்டேன்!

!

Wednesday, October 27, 2010

பீகார் யுனிவர்சிட்டில சேரப்போறேன்!

நம்ம பஞ்சாப் யுனிவர்சிட்டியில கொஸ்டின் பேப்பரு அவுட் பண்ணதுக்காக இனி யுனிவர்சிட்டி பக்கமே தலை வெச்சிப் படுக்கக்கூடாதுன்னு தொரத்திவிட்டுட்டானுங்க. நானும் என்ன பண்றது, நம்ம பட்டம் வாங்குறத தடுக்க இம்புட்டு பெரிய சதியான்னு குப்புறப்படுத்து யோசிச்சுக்கிட்டு இருக்குறப்போ, நம்ம பய ஒருத்தன் பீகாருல இருந்து போன் பண்ணான். அங்க என்னடா பண்றேன்னு கேட்டா, இப்போ பீகார் யுனிவர்சிட்டியிலயும் MA கும்மியாலஜி கோர்ஸ் ஆரம்பிச்சிட்டாங்கடா மாப்பு நானும் சேர்ந்துட்டேன்னு சொன்னான். கேட்டவுடனேயே நமக்கு சோடா சிந்தி குவார்ட்டருல விழுந்த மாதிரி இருந்துச்சு...! கெஞ்சிக் கூத்தாடி எனக்கும் ஒரு அப்பிளிக்கேசன் வாங்கிட்டேன். கேக்கும் போது இங்கிலிபீசு மீடியம்னுதான் சொன்னாங்க, ஆனா அப்ளிக்கேசன தலைகீழா வெச்சி படிச்சிப் பாத்தும்கூட, ஒண்ணும் புரியல, ஒருவேளை என்ட்ரன்ஸ் டெஸ்ட்டையே இதுலதான் வெக்கிறானுங்களோன்னு ஒரு டவுட்டு வேற வந்திடுச்சு! சத்திய சோதனை! அப்ளிகேசன் வாங்கியும் பிரச்சனைய பாருங்க! சே.... வழக்கமா எக்சாமுக்குத்தான் பிட்டு அடிப்போம், இவிங்க என்னடான்னா அப்ளிக்கேசன் பார்முக்கே பிட்டு அடிக்க வெக்கிறானுங்க. என்ன பண்றது எல்லாம் ஒரு டிகிரிக்காக! சரி, ஓகே பிரண்ட்ஸ், இப்போ மேட்டருக்கு வாரேன். அப்ளிக்கேசன் அனுப்ப நாளைக்குத்தான் லாஸ்ட் டேட்டாம், இங்கே பிரபல பதிவர்கள் நிறைய் பேரு இருப்பீங்களே,  (அதான் நேத்து டெஸ்ட்டு வேற வெச்சி நிறைய பேர பிரபல பதிவராக்கி இருக்கோம்ல?) யாராவது கொஞ்சம் தயவு பண்ணி பார்ம புல்லப் பண்ணி கொடுத்தீங்கன்னா நல்லாருக்கும்....!




இந்த அப்ளிகேசன யாராவது யூஸ் பண்ணி எனக்கு முன்னாடி போயி யுனிவர்சிட்டியில சேந்தீங்க, படுவா தொலச்சிபுடுவேன் தொலச்சி! எல்லாரும் நான் சேர்ந்ததுக்கு அப்புறம் தான் வரனும், ஏன்னா அப்போத்தானே ராகிங் பண்ண வசதியா இருக்கும்.... ஹி...ஹி...ஹி...!

பி.கு.: இது ஒரு மெயில்ல டெக்ஸ்ட்டா வந்துச்சி, நான் கொஞ்சம் பொட்டிதட்டி, பெண்டு நிமித்திப் போட்டிருக்கேன்!

Monday, October 25, 2010

நீங்கள் ஒரு பிரபல பதிவரா என்று தெரிந்து கொள்ள ஆசையா? எங்ககிட்ட வாங்க!



தெரிந்தோ தெரியாமலோ நிறைய பேரு பிரபல பதிவராகனும்னு ஆசைப்படுறோம். ஆனா நாம பிரபல பதிவர் ஆயிட்டோமா இல்லியான்னு நிறைய பேரு தெரிஞ்சுக்க முடியாம ரொம்ப சிரமப்படுறாங்க. நம்முடைய தொடர் ஆய்வுகளின் விளைவா இப்போ அதுக்கும் ஒரு வழி கண்டுபிடிச்சாச்சு. கீழே உள்ள டெஸ்ட்டுக்கு சரியான பதில் கண்டுபிடிங்க. அப்புறம் அந்த வழி என்னன்னு பாருங்க!

(நீங்க ஏற்கனவே பிரபல பதிவர்னு சொல்றீங்களா, கவலையேபடாதீங்க நீங்க பிரபல பிரபல பதிவர் ஆயிட்டீங்களான்னு பாத்துக்கலாம்!)



என்ன டெஸ்ட்டுக்கு போவமா?



குறிப்புகள்:

1. அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும்

2. பிட்டு பயன்படுத்தலாம் (படம் அல்ல!)





ஓக்கே இனி கேள்விகள்:


1. நீங்க ஒரு ரேசுல ஓடிக்கிட்டு இருக்கீங்க, ரெண்டாவதா வரும் ஆள முந்திடுறீங்க. இப்போ எந்த எடத்துல இருப்பீங்க?



மொதல் எடத்துலதானே? தப்பு தப்பு!



2. இப்போ ரேசுல, கடைசி ஆள முந்துறீங்க, உங்க பொசிசன் என்ன?



சிம்பிள் அவருக்கு முன்னாடி பொசிசன்? இதுவும் தப்பு..!



3. அடுத்து ஒரு கணக்கு. கண்டிப்பா கால்குலேட்டர் யூஸ் பண்ணக்கூடாது. மனக்கணக்குதான் போடனும்.

ஆயிரத்தோட நாப்பத கூட்டுங்க, இன்னொரு ஆயிரத்த சேருங்க, இப்போ ஒரு முப்பத கூட்டுங்க, இன்னொரு ஆயிரம் சேருங்க, இப்போ ஒரு இருபதக் கூட்டுங்க, இன்னொரு ஆயிரம் சேருங்க. இனி ஒரு பத்தக் கூட்டுங்க. மொத்தம் எத்தனை?



5000 தானே வந்துச்சு? சாரி நீங்க கால்குலேட்டரே யூஸ் பண்ணுங்க



4. லூசியோட அப்பாவுக்கு ஆறு பொண்ணுங்க. 1. நானா 2. நானி 3. நீனா 4. நீனி 5. நூனா 6. ? ஆறாவது பொண்ணு பேரு என்ன?



நூனிதானே அது? எங்கே நல்லா யோசிங்க?



5. ஒரு வாய்பேச முடியாதவர், பல்லு வெளக்க பிரஷ் வாங்க போனார். கையால பல்லு வெளக்கற மாதிரி சைகை பண்ணிக்காட்டி வாங்கிட்டார். அதே போல பார்வை இல்லாதவரும் பிரஷ் வாங்கப் போனா என்ன பண்ணுவார்?



பிம்பிளிக்கி ப்பீப்பீ....என்ன பண்ணுவாரு நல்லா யோசிங்க!





என்ன எல்லாத்துக்கும் தப்பா பதில் சொல்லிட்டீங்களா? கையக் கொடுங்க, அப்போ நீங்கதான் பிரபல பதிவர்! கரெக்ட்டா பதில் சொன்னவங்க அப்பிடியே தப்பிச்சிடலாம்னு மட்டும் நெனக்காதீங்க, உங்களுக்கு இன்னொரு டெஸ்ட் இருக்கு.... ! ஓக்கே ஓக்கே, ரிலாக்ஸ்....ரிலாக்ஸ்.....! அந்த டெஸ்ட் அடுத்த வாரம்தான். அதுவரைக்கும் நல்லா படிச்சிக்கிட்டு இருங்க!


மேலே சம்பந்தமில்லாம சங்கவி படம் எதுக்குன்றீங்களா? அதையும் நீங்களே கண்டுபிடிச்சுக்குங்க     ....ஹி..ஹி...ஹி...!


!

Monday, October 18, 2010

வீடியோ புதிர் 18+: கவுண்டருடன் வரும் அந்த நடிகை யார்?

கடந்த சில நாட்களாக நம்ம பஞ்சாப் யுனிவர்சிட்டிக்காக(!) செய்துவரும் தீவிர வீடியோ ஆய்வில்(?), ஒரு சர்ப்ரைஸ் உண்மையைக் கண்டுபிடித்துள்ளோம். அதை ஒரு புதிரா கொடுத்தா நல்லாருக்கும்னு ஒரு எண்ணம். போட்டோ புதிர் மாதிரி, இது வீடியோ புதிர். தலைப்பை பாத்துட்டு அதுவும் 18+ ச பாத்துட்டு ஒரு நமுட்டுச் சிரிப்போட சுத்தும் முத்தும் பாத்துக்கிட்டே வந்தீங்கன்னா சாரி இது அந்த மாதிரி வீடீயோ இல்ல. இது நம்ம கவுண்டருடைய பிரபலமான காமெடிகளில் ஒன்று. ஜல்லிக்காட்டுக் காளை படத்தில் வருவது. ஆனால் சில காட்சிகளோ, சில வசனங்களோ யாருக்கேனும் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம், அதான் 18+. ஓக்கே? ஸ்டார்ட் மியூசிக்.....!


இப்போ புதிர் என்னன்னா, கீழே உள்ள வீடியோவுல, கவுண்டரு ரெண்டாவதாக பார்க்கும் பெண்ணின் பெயர் என்ன? (க்ளு: அவர் ஒரு பிரபல நடிகை)




நிறையப் பேரு முகத்த வெச்சே கண்டுபிடிச்சுடுவீங்கன்னு நெனைக்கிறேன். அதுனால கமென்ட் மாடரேசன் போடுறேன். சரியான 5 பதில்கள் வந்திடிச்சின்னா மாடரேசன் நீக்கப்படும்.



சரி எல்லாரும் ரொம்ப யோசிச்சு (?) காஞ்சு போயிருப்பீங்க, அதுனால ஒரு ஜாலி வீடியோ (வெய்ட் வெய்ட், இதுல போட்டி எதுவும் இல்ல!).

இது நம்ம டாகுடரும் (ஆரம்பிச்சிட்டாண்டா!) கவுண்டரும் இணைந்து கலக்கும் ரீமிக்ஸ், சில காட்சிகள் கொஞ்சம் ஓவரா இருந்தாலும், அந்த ட்ரெய்ன் காட்சி மிக்சிங்குக்காக அத மன்னிச்சிடலாம். சரியா?

ரோபோவுலாம் என்ன ரோபோ? சங்கரு ஒரு வெவரம் தெரியாத ஆளு (3 இடியட்ஸ் எடுக்கும் போது எப்பிடியும் தெரிஞ்சுதானே ஆகனும்?), 150 கோடி செலவு பண்ணி ரோபோ எடுத்திருக்காரு, நம்ம டாகுடர பத்தி தெரியலேன்னு நெனக்கிறேன். முக்கியமான நேரத்துல ஆற்காட்டாரு வெளையாடிட்டாருன்னா ரோபோ கதி என்னாகும்னு உங்களூக்கே தெரியும். இப்பிடி இப்பிடி பேட்டரி, ஒயரு, லொட்டு லொசுக்குன்னு எந்தப் பிரச்சனையுமே இல்லாம நம்ம டாகுடரு எப்பிடி கலக்கலா ட்ரெய்ன பிடிக்கிறாரு, அத எப்புடி நம்ம கவுண்டரு பாத்து ரசிக்கிறாருன்னு நீங்களும் கொஞ்சம் பாத்து எஞ்சாய் பண்ணுங்க!






வீடியோக்களை மிக்சிங் மற்றும் அப்லோட் செய்த அந்த முகம் தெரியாத நண்பர்களுக்கு நன்றி!

Thursday, October 14, 2010

டாகுடரு விஜய்க்கும் அஜித்திற்கும் இடையில்...டொட்டடைய்ங்???

சமீபத்துல ஒரு விழாவுல நம்ம டாகுடரு விஜயும் அஜித்தும் பக்கத்துல உக்காந்து ரொம்ப நேரம் சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தாங்க. பாத்தவங்க எல்லாருக்கும் ஒரே ஆச்சர்யம், அப்படி என்னதான் பேசுறாங்க ரெண்டு பேரும்னு! யாருக்குமே வெளங்கல, மண்டையப் பிச்சுக்காத குறை!



ஒலக நடிப்புடா சாமி....!



மேலே உள்ள ப்டத்துல பாத்தீங்கள்ல? என்னமா போட்டி போட்டு நடிச்சிருக்காங்க ரெண்டு பேரும்? ங்கொய்யா...! இந்த நடிப்புல கால்வாசிய படத்துல பண்ணியிருந்தா போதுமே, ஜனங்க இப்பிடி பீதியாயி பேதியாயி இருக்க மாட்டாங்கள்ல? சரி, நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!
 
நம்ம மேட்டருக்கு வருவோம், உங்களுக்கெல்லாம் அவங்க ரெண்டு பேரும் அப்பிடி என்னதான் பேசிக்கிட்டாங்கன்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வமா இருக்குல்ல? (இருக்கனுமே, இல்லைன்னா நம்ம பொழப்பு எப்பிடி ஓடுறது?) உங்களுக்காக ரெண்டு பேரும் பேசிக்கித அப்பிடியே சென்சார் (?)  பண்ணாம இங்கே கொடுத்திருக்கேன்!
 
 


அஜித்: ஒரு படம் கூட ஒடமாட்டேங்கிதேன்னு ரொம்பக் கவலையா இருந்திச்சி! இப்போ உங்க நிலமையப் பாத்த உடனே எல்லாக் கவலையும் போயே பொச்சு!

விஜய்: ஹி...ஹி...ஹி...! (ப்ரண்ட்ஸ் படத்துல தங்க்ச்சி ப்ரெண்ட்ச ஜொள்ளுவிட்டு மாட்டிக்கிட்டு சிரிப்பாரே அந்த  சிரிப்பு!)


அஜித்: அது எப்பிடி விஜய் இத்தன ப்ளாப் கொடுத்தும் கொஞ்சம்கூட யோசிக்காமா இப்பிடி அசராம படம் பண்ணிக்கிட்டே இருக்கீங்க?

விஜய்: படம் எதுக்கு நல்லா(!) ஓடுது, ஏன் ப்ளாப் ஆகுதுன்னே தெரியல? அப்புறம் அதப் பத்தி யோசிச்சி என்ன பண்றது? அதான் இப்பல்லாம் கதையப் பத்தி கவலையே படாம நடிக்கிறேன்!



அஜித்: என்ன விஜய் இன்னிக்கு கலைநிகழ்ச்சில காமெடி புரோகிராம்ல உங்கபேரு போட்டிருக்காங்க?

விஜய்: ஆமா அஜித், அத ஏன் கேக்குறீங்க? இன்னிக்கு விவேக் வரலியாம், அதான் என்ன பண்றதுன்னு தெரியாம என்ன சும்மா வந்து மேடைல நில்லுங்க(?) மத்தத நாங்க பாத்துக்கிறோம்னாங்க!



அஜித்: என்ன விஜய் உங்களுக்கு காமெடி நல்லா வரும்போல இருக்கு, ஒரு புல் காமெடி படம் ஒன்னு பண்ணவேண்டியதுதானே?

விஜய்: அடபோங்க அஜீத், நான் சீரியசா படம் எடுத்தாலே காமெடி பண்றானுங்க, இதுல காமெடியாவே எடுத்தா இன்னும் என்னென்ன பண்ணுவாங்களோ?



அஜித்: என்ன விஜய் உங்களுக்கு வடிவேலுக்கும் ஷூட்டிங் ஸ்பாட்ல தகராறாமே?

விஜய்: ஆமா அஜித் என்னன்னே தெரியல (!), எல்லாக் காமெடி சீனையும் நானே பண்ணிடறேன்னு கோவப்படுறாரு வடிவேலு!



விஜய்: என்ன அஜித் ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல?

அஜித்: ஆமா விஜய், என் படம் ஓடுனப்போ கூட இவ்வலவு சந்தோசப்படல. ஆனா நீங்க அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போறேன்னதுக்கு அப்புறம் அவ்வளவு ஹேப்பியா இருக்கேன்.



அஜித்: என்ன விஜய் அடுத்தபடமும் ப்ளாப் ஆயிட்டா என்ன பண்ணுவீங்க?

விஜய்: சிம்பிள், அதுக்கடுத்த படம் பண்ணுவேன்! (எத்தன ப்ளாப் பாத்தவன் எங்கிட்டயேவா?)



அஜித்: இப்போ பதிவுலகம் புல்லா நீங்கதான் ஹாட் டாப்பிக்காமே?

விஜய்: இருக்கனுமே, நம்ம அடுத்த படம் வருதுல?

அஜித்: மூஞ்சி! உங்க ப்ளாப் படங்களப் போட்டு உங்கள கிழிகிழின்னு கிழிச்சிக்கிட்டு இருக்கானுக

விஜய்: அப்பிடியா? அடுத்த படம் மட்டும் வரட்டும், அப்புறம் என்ன செய்வாங்கன்னு பாக்குறேன்!

அஜித்: என்ன செய்வாங்க, அந்தப் படத்தப்போட்டு கிழிப்பாங்க!

விஜய்: ஹி...ஹி...ஹி...!



அஜித்: ஏன் விஜய் அந்த வில்லு இன்டர்வியூவுல அப்பிடி கத்துனீங்க?

விஜய்: பின்னே, நீங்க டாக்டர் பட்டம் வாங்கிட்டீங்களே இனிமே நடிப்ப விட்டுட்டு கிளினிக் ஆரம்பிக்க போறீங்களாமேன்னு கேட்டா என்ன பண்றது?



அஜித்: என்ன விஜய், நாங்களும்தான் நடிக்கிறோம், உங்களுக்கு மட்டும் எப்படி டாக்டர் பட்டம் கொடுத்தாங்க?

விஜய்: பின்னே சும்மாவா? படம் ப்ளாப் ஆனதுக்கப்புறமும் 100 நாளு ஓடுனதா விழா கொண்டாடுறோம்ல, அதுவும் அதே தயாரிப்பாளர் செலவுல! அதுக்குத்தான் கொடுத்திருப்பாங்க!
 
 
தி பைனல் பஞ்ச்!!!
அஜித்: இன்னுமா இந்த ஒலகம் நம்ம ரெண்டு பேரையும் நம்புது?
விஜய்: ஹி...ஹி...ஹி...!

Wednesday, October 13, 2010

எச்சூஸ் மி! யாராவது பிட்டு எழுதிக் கொடுக்கறீங்களா?

சார், நான் பஞ்சாப் யுனிவர்சிட்டில MA (கும்மியாலஜி) கரஸ்ல படிச்சிக்கிட்டு இருக்கேன் (அதுக்கென்ன இப்போங்கிறீங்களா?), அடுத்த வாரம் எக்ஸாம்! வழக்கம்போல ஒண்ணும் படிக்கல (நாம எப்பத்தான் படிச்சோம், இப்போ மட்டும்  படிக்கிறதுக்கு?) நல்லவேளையா கொஸ்டின் பேப்பர் அவுட் ஆயிடிச்சாம், ஒரு பக்கி மெயில்ல அனுப்பி வெச்சிருக்கு. ஆனா நம்ம நல்ல நேரம் (?) பாருங்க, எப்பவும்போல பிட்டு எழுதி வெக்கலாம்னு பாத்தா அந்த கொஸ்டின் பேப்பருக்கு ஒரு ஆன்சர் கூட தேத்தமுடியல. ஏற்கனவே படிச்சி(!) பாஸ் பண்ண சீனியர்ஸ் நிறைய பேரு இருக்கீங்க. அதுனால இந்த  பிட்டையே நீங்கதான் எழுதித் தரப்போறீங்க ஆமா!

ப்ளீஸ் சார், நல்லா ட்ரை பண்ணி எப்பிடியாவது எழுதிக் கொடுத்துடுங்க!  நான் அத வெச்சி பாஸ் பண்ணி சர்ட்டிபிகேட்ல வேணும்னா பாதிய உங்களுக்கு கொடுக்கிறேன்!




பி.கு.: இதத் தமிழ்ல மொழிபெயர்த்தால் சரியா வரும்னு தோணலை, அதான் அப்பிடியே விட்டுட்டேன்!

Monday, October 11, 2010

சந்தியா.. சந்தியா....!

இப்போ பதிவுலகத்துல காதல் வரும் பருவம் போல! நம்ம மங்குனி, வசந்த்னு எல்லாரும் ஒரே ரொமான்டிக் பதிவா போட்டு அசத்துறாங்க. அதப் படிச்சி படிச்சி நமக்கும் பீலிங்ஸ் ஸ்டார்ட் ஆயிடிச்சு! ஆனா இப்போ அதையெல்லாம் உக்காந்து எழுதுற அளவுக்கு பொறுமை இல்லை. ஆணிகள் நாந்தான் வந்து புடுங்கனும்னு கெஞ்சிக்கிட்டு இருக்கு. சோ, நான் ஏற்கனவே எழுதியிருந்த "சந்தியா.. சந்தியா" என்ற பதிவை ஒரு மீள்பதிவா போடுறேன். படிச்சிட்டு நீங்களும் பீல்(?) பண்ணுங்க! பாத்து...பாத்து! ரொம்ப பீல பண்ணி வீட்ல அடிவாங்கிடாதீங்க!




எச்சரிக்கை: இப்பதிவில் வரும் அனைத்தும் 'கற்பனையே!'






சந்தியா..சந்தியா....பாடல் மிதந்து வருகின்றது. காற்றில் வந்த மழைவாசம் பாடலோடு இணைந்து மூச்சில் கலந்து கொண்டிருந்தது. பாடலைக்கேட்கக் கேட்க நினைவுகள் மயங்குகின்றன. அவள் இப்போது எங்கே இருப்பாள்? தெரியவில்லை. எதுவும் தெரியக்கூடாது என்றுதானே முகவரியோ, தொலைபேசி எண்ணோ வாங்கிக் கொள்ளவில்லை. என்ன செய்வது, தவிப்பு அடங்க மறுக்கின்றதே!


அவளைக் கடைசியாகப் பார்த்த அன்று காதலர் தினம்! காதலர்தினம்தான் காதலர்கள் பிரிவதற்கும் பயன்பட்டிருக்கிறது. அன்றுதான் அவள் மனம் திறந்தாள், அதற்கு அவசியமே இருக்கவில்லையென்றாலும்! ஒருவேளை பின்னர் அதுவே பெரிய தவிப்பாகிவிடும் என்றுதான் சொன்னாளா? நான் எதுவுமே பேசவில்லை, அவளும் கேட்கவில்லை. ஒருவேளை நானும் சொல்லியிருக்கலாமோ? எனக்கு ஏன் சொல்லவேண்டும் என்று தோன்றவில்லை? அவளை பார்த்த நாளில் இருந்து அவளோடு ஒற்றை வார்த்தையாவது பேசிவிடவேண்டும் துடித்த எத்தனையோ பொழுதுகளும், அவள் பெயரை உச்சரித்தே வாழ்ந்த நாட்களும் என்னோடு இன்னும் சண்டை போடுகின்றன. அவள் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த டைரி என்னைத் தினமும் ஏளனம் செய்கிறது, நான் என்ன செய்வேன்? அவள் கீழே வீசிச்சென்ற கசங்கிய காகிதம் தினமும் என்னோடு பேசுகிறது.

அவள் பேசிய வார்த்தைகள்தான் காலத்துடன் சண்டைபோட்டு என்னை அவ்வப்போது மீட்டு வந்தன. ஆனால் அவளுடைய வார்த்தைகளை காலம் என் டைரிக்குள் போட்டுப் பூட்டிவிட்டது. நான் என்ன செய்வேன்? அவள் நின்ற இடம், பேசிய இடம் என்று ஒவ்வொரு இடமாகத் தேடித் தேடிப் போகிறேன். அங்கே உள்ள காற்றை சுவாசிக்கிறேன். இங்கேதானே என் தேவதை சுவாசித்திருப்பாள். அவள் பதிவு செய்து கொடுத்த பாடல் கேசட் பெட்டியில் உறங்கிகொண்டிருக்கிறது. அதை ஒவ்வொரு முறை எடுத்துப் பார்க்கும்போதும் மனம் நடுங்குகிறது. இங்குதானே அவள் தொட்டிருப்பாள், கேசட்டைத் தடவிப்பார்க்கின்றேன்.

அவள் எனக்காக எழுதிய வாழ்த்து அட்டை படபடக்கிறது. படிக்க தெம்பில்லை. கீழே சட்டை, அது அவளோடு முதல் முதலாகப் பேசியபோது அணிந்திருந்தது, அப்படியே இருக்கிறது துவைக்காமல், பொக்கிசமாக! எடுத்து அணைத்துக்கொள்கிறேன். அவள் சிரிக்கும் சத்தம் கேட்கிறது. சட்டையை கீழே வைக்கிறேன், சட்டைதான் என்னைப்பார்த்து சிரிக்கிறது. வேகமாக டைரியை எடுக்கிறேன். அவள் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் உள்ளே, இடையே இடையே அவள் கையெழுத்துக்களும், டைரியைத் திறக்கமுடியவில்லை.டைரியை வைத்துவிட்டு எப்போதும் போல நினைத்துக் கொள்கிறேன், என்றாவது ஒருநாள் அவள் வருவாள், வந்து அவளே படித்துக்காட்டுவாள்.



அதுவரைக்கும் நான் என்ன செய்வேன்? காலத்தை யாராவது நிறுத்திவையுங்களேன்!





இப்பதிவு காதலித்துக்கொண்டிருப்பவர்களுக்கும், காதலிக்கப் போகின்றவர்களுக்கும் சமர்ப்பணம்!

Saturday, October 9, 2010

உங்ககிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா?

நண்பர்களே நேற்று சந்தோஷ்பக்கங்கள் இந்த பதிவை போட்டு இருந்தார் , "இந்த விஷயத்தை உங்களால் முடிந்தால் நாலு பேருக்கு பகிருங்க" அப்படின்னு கேட்டு இருந்தார் , ரொம்ப நல்ல விஷயம் எனவே நண்பர்களே உங்களால் முடிந்த அளவுக்கு அனைவரும் குறைந்த பட்சம் ஒரே ஒரு நாளாவது உங்கள் பிளாக்கில் இந்த பதிவை போடுங்க நிறைய பேருக்கு ரீச் ஆகும் . விருப்பமுள்ளவர்கள் அனைவரும் இந்த தொடர்பதிவை தொடரலாம் .

உங்க கிட்ட நீங்க உபயோகப்படுத்தாத பொருட்கள் ஆடைகள், பொம்மைகள் இருக்கா? அதை தூக்கி எறியவும் மனசு இல்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிங்களா?

CTC - Chennai Trekking Club என்று ஒரு இயக்கம் இருக்கிறது.. நீங்க மேற் சொன்ன விஷயங்களை கொடுத்து யாருக்கேனும் உதவ விரும்பினால் இந்த சுட்டியில் (https://spreadsheets1.google.com/viewform?hl=en&formkey=dEU1d2gzVnNVVTBMR3Z2eGNiMS1RaVE6MQ#gid=0)
உள்ள Excel Formஜ நிரப்புங்கள். தன்னார்வலர் ஒருவர் உங்களை தொடர்பு கொண்டு உங்களை சந்தித்து அதை பெற்றுக்கொள்வார். இப்போதைக்கு இது சென்னையில் உள்ளவர்களுக்கு மட்டுமே.. உங்களால் நீங்க அளிக்க இருக்கும் பொருட்களை சென்னைக்கு அனுப்ப முடிந்தால் கூட தொடர்பு கொள்ளலாம்.

தயவு செய்து திரும்ப உபயோகப்படுத்தும் நிலையில் இருந்தால் மட்டும் குடுங்க.. கிழிந்த துணிகளை எல்லாம் குடுக்காதிங்க பிளீஸ்...!

இந்த விஷயத்தை உங்களால் முடிந்தால் நாலு பேருக்கு பகிருங்க.

(நன்றி :சந்தோஷ்பக்கங்கள், மங்குனி அமைச்சர் )

இத்தகவலை மேலும் பகிர்பவர்களுக்கும், உதவுபவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

Thursday, October 7, 2010

3 இடியட்ஸ்! ஷங்கர் குழப்பம்?



ஒரு வழியா ஷங்கரு எந்திரன ரிலீஸ் பண்ணிட்டு அடுத்த படமான 3 இடியட்ஸுக்குத் தயாராயிட்டாரு! நம்ம டாகுடருதம்பி விஜய் தான் ஒரு இடியட்டுங்றது எல்லாருக்கும் தெரியும். இப்போ படத்துக்கு சில சிக்கல்கள். மொதல்ல தமிழ்ல ஒரு நல்ல பேரு வெக்கனும் (ஏன்னா டாகுடர் தம்பி படத்துல அது மட்டும்தான் நல்லா(?) இருக்கும்). அப்புறம் மத்த ரெண்டு இடியட்ஸ், அதுவும் டாகுடர் தம்பியோட நல்ல கெமிஸ்ட்ரி உள்ளவங்களா பாத்துப் போடனும். ஜீவா, சித்தார்த்துன்னு பேச்சு அடிபட்டாலும் இன்னும் முடிவாகல. பிரச்ச்னை என்னன்னா, நம்ம டாகுடரு தம்பி பேரக் கேட்டாலே எந்த ஹீரோவும் பக்கத்துல கூட வரமாட்டேங்கிராங்க. ஷங்கரு மத்த ரெண்டு ஹீரோ செலக்சனுக்கு படாத பாடு பட்டுக்கிட்டு இருக்காரு.


நம்மை வாரா வாரம் மகிழ்விப்பதும் இல்லாமல் ஆயிரமாயிரம் ஹிட்ஸ் வாங்கித் தந்து கொண்டிருக்கும் டாகுடரு தம்பி ப்டத்திற்கு இப்பிடி ஒரு நிலையா? நம்மல்லாம் இதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கலாமான்னு மனசாட்சி உறுத்துது. அதனால டைட்டில், மற்றும் ஹீரோ செலக்சன்ல நாமலும் இறங்கிட்டோம்.

தமிழ் டைட்டில்கள்:

1. 3 மடையன்கள்
2. 3 களவாணிகள்
3. 3 மாக்கான்கள்
4. 3 பொறம்போக்குகள்

இப்பிடியே நெறைய எழுதிக்கிட்டு போகலாம். நீங்களும் உங்களால முடிஞ்ச வரைக்கும் நிறைய டைட்டில்ஸ் கொடுத்து உதவுங்க. அது நன்றிக் கடனை தீர்ப்பது போலாகும் (ஏன்னா டாகுடரு தம்பி உங்களையும் ரொம்ப நல்லா சிரிக்க வெச்சி சந்தோசப்படுத்தியிருக்காரு, மறந்துடாதீங்க!)

மற்ற ரெண்டு ஹீரோக்கள் யார் யார்?:

1. தன்மானச்சிங்கம் டீஆர் அவர்கள்:



அந்த வீடியோ பாத்ததிலேருந்து எல்லாருக்குமே நல்லாத் தெரியும் நம்ம டாகுடரு தம்பிக்கும் டீஆருக்கும் கெமிஸ்ட்ரி எப்பிடி சூப்பரா இருக்கும்னு, அதுவுமில்லாம பஞ்ச் டயலாக் பேசுறதுல நம்ம தன்மானச் சிங்கத்த மிஞ்ச ஒலகத்துலேயே யாரும் இல்ல. அதுனால நம்ம டீஆருதான் முதல் சாய்ஸா இருக்காரு!

2. கேப்டன் விஜயகாந் அவர்கள்



கேப்டனோட டாகுடரு தம்பி காம்பினேசன் கெமிஸ்ட்ரிய யாருமே மறந்திருக்க மாட்டீங்க. கேப்டனோட பெசல் கிக்கும், வசனமும் படத்துக்கு ரொம்ப பக்கபலமா இருக்கும். மேலும் கேப்டன் அரசியல்ல இருக்குறதுனால நம்ம டாகுடரு தம்பியோட வருங்கால அரசியல் வாழ்க்கைக்கும் ரொம்ப உபயோகமா இருக்கும்!

3. மக்கள் நாயகன் ராமராஜன்:



மக்கள் நாயகனப் பத்தி ரொம்பச் சொல்ல வேண்டியதில்ல. இவரு இந்த லிஸ்ட்லேயே இல்லைன்னாலும், நம்ம சிரிப்பு போலீசோட ஸ்ட்ராங் ரெகமென்டேசன்னால இவரும் முக்கியமான சாய்ஸா இருக்காரு. மக்கள் நாயகனோட சிறப்பம்சமே யாருக்கும் தொந்தரவு கொடுக்க மாட்டாரு அவரு பாட்டுக்கு மாடு உண்டு, பாட்டு உண்டுன்னு போயிடுவாரு (ஷங்கரு கூட ஏதாவது ரோபோ மாடு வெச்சி புதுசா ட்ரை பண்ணலாம்!).

4. வீரத்தளபதி ஜேகே ரித்தீஷ் அவர்கள்



நம்ம வீரத்தளபதியப் பத்தி யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. ஏன்னா அவ்வளவு புகழ் பேற்றவர். திரைக்கு வந்து குறுகிய காலத்திலேயே சூப்பர் ஸ்டாருக்குப் போட்டியாக விளங்கும் அளவுக்குப் பேரும் புகழும் (?) அடைந்தவர். சூப்பர் ஸ்டாருடைய ஒவ்வொரு வியர்வைத்துளியையும் தமிழ் மக்கள் தங்கமாக்கினார்கள். ஆனால் நம் வீரத்தளபதியோ உங்களுடைய ஒவ்வொரு வாழ்க கோஷத்தையும் தங்கமாக்குவார். படத்தோட பட்ஜெட்டப் பத்தி ஷங்கரு மட்டுமில்ல, கலாநிதி மாறனே கவலைப் படவேண்டியதில்லேன்னா பாத்துக்குங்களேன்!

5. இயக்குனர் பேரரசு



இயக்குனர் பேரரசு, பஞ்ச் டயலாக் பேசுவதிலும், பறந்து பறந்து பைட் பண்ணுவதிலும் பெரு புரட்சியை(?) உண்டு பண்ணியவர். டாகுடரு தம்பிக்கு மிக நெருக்கமானவர். படத்திற்கு மிகவும் பக்க பலமா இருப்பார் என்று நம்பலாம். படம் பிச்சிக்கிட்டு ஓடுவதற்கு(?) இவர் கேரன்டி. அதனால் இவரும் ஒரு அதிமுக்கியமான சாய்ஸ்.


அப்பாடா ஒரு வழியா 5 பேரு கெடச்சிட்டாங்க. இதுல இருந்து ரெண்டு பேர செலக்ட் பண்ணனும். எல்லாருமே ஈக்குவலா வேற இருக்காங்க. ரொம்பக் கொழப்பமா இருக்கு. சரி, மகா ஜனங்களே ரெண்டு பேர செலக்ட் பண்ணும் பொறுப்பை (!) உங்களிடமே ஒப்படைக்கிறேன். நம்ம டாகுடரு தம்பியோட பேருக்கும், புகழுக்கும்(?) எந்த வித களங்கமும் வந்துடாம பாத்து செலக்ட் பண்ணுங்க சரியா? (புது சாய்ஸா பாத்து செலக்ட் பண்ணாலும் சரி!)

நோ....! நோ கெட்ட வார்த்தை ப்ளீஸ், ஷங்கரு பாவம்!

Sunday, October 3, 2010

டாக்குடரு விஜய்யும் நானும்!



டாக்குடர்ரு விஜயப் பத்தின பதிவுன்ன உடனேயே நிறைய பேருக்கு குஷியாகி இருக்கும். இளையதலவலி ரசிகர்களுக்கு (அப்பிடியெல்லாம் இன்னும் இருக்காங்களா?) கொஞ்சம் கடுப்பாயிருக்கும். அதப் பத்தி நமக்கென்ன வந்திச்சி. நம்ம மேட்டருக்குப் போவோம்.

இந்தப் பதிவுல நாம டாக்குடரு தம்பியப் பத்தி கிண்டல் (?) எதுவும் பண்ணப் போறதில்ல (அதையெல்லாம் கமென்ட்டுகள்ல பாத்துக்கலாம்). இளையதலவலியோட படங்கள ஆரம்ப கட்டங்கள்ல இருந்து பார்த்துட்டு(?) வர்ரவன்கிற முறையில சில விஷயங்கள பட்டியல் போட்டிருக்கேன்!



சிறப்பம்சங்கள்
1. எலி புழுக்கை போட்ட மாதிரியே(?) வசனம் பேசுறது!
2. எப்பவும் பைல்ஸ்(?) முத்திப் போன மாதிரியே நடக்குறது!
3. பஞ்சரு ஆனாலும் வஞ்சகமில்லாம பஞ்ச் டயலாக் பேசுறது! (நம்ம டாக்குடர்ரு தம்பி பேசுறதப் பாத்து இப்ப கண்ட பயலும் பேசுறாங்ய!)
4. பேரரசு மாதிரி அரிய இயக்குனர்கள கண்டுபிடிச்சி தூக்கி விடுறது! (தப்பித் தவறி கூட நல்ல டைரக்டருங்க கண்ணுல பட்டுடக் கூடாதுல்ல!)
5. கோவமே வராத அப்பாவிப் புள்ள மாதிரி நெஜ வாழ்க்கையிலும் நடிக்கிறது (சைலன்ஸ்... பேசிக்கிட்டு இருக்கோம்ல? புரியாதவங்க கீழே உள்ள வீடியோவ பாருங்க!)
6. காமெடி பண்றேன்னு அடிக்கடி காமெடி பீசாகுறது!
7. அடுத்த மொதல்வர் திட்டம்! (கேப்டனும், சரத்தும் பண்றத பாத்தும் கொஞ்சம் கூட அசரலியே டாக்குடர் தம்பி?)

படக் காட்சிகள்
1. ஷாஜஹான் படத்து கிளைமாக்ஸ்ல கன்னத்துல அடிச்சிக்கிட்டே கதறி அழுகும் சீன் (அதப்பாத்து தமிழ்நாடே கதறிடிச்சுங்ணா!)
2. திருப்பாச்சி படத்துல த்ரிசா மல்லிகாகிட்ட பெட் கட்டிட்டு விஜய கூப்புடும்போது நடந்து வருவாரே டியான் டியான்னு ஒரு நடை! (கலக்கல்ங்ணா அது! இது உங்க நிஜ நடைங்ளா?)
3. ரசிகன் படத்துல மாமியாருக்கு சோப்பு போட்டு விடுறது (கருமாந்திரம், படத்த ரெண்டாவது தடவ சென்சாரு பண்ணாங்ய!)
4. துள்ளாத மனமும் துள்ளும் படத்துல லேடீஸ் பாத்ரூம் சுவத்தப் புடிச்சித் தொங்கிக்கிட்டே பாக்குறது (அந்த சீன்ல மூஞ்சில ஒரு எக்ஸ்பிரசன் வெச்சிருப்பீங்க்ளேங்ணா அது ரொம்ப பிடிக்கும்னா)
5. ப்ரண்ட்ஸ் படத்து கிளைமாக்ஸ்ல மொட்டை போட்ட மாதிரி கட்டிங் பண்ணிட்டு (மொட்டைதான் போட்டுத் தொலையறது?) ஒரு மாதிரி உக்கார்ந்திருப்பாரே அந்த சீன்! (இந்த எக்ஸ்பிரசனும் எனக்கும் புடிக்கும்ணா!)


பாடல்கள்
1. பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி... (ரசிகன்)
2. சிக்கன் கறி..சிக்கன் கறி... (செல்வா)
3. தொட்டபேட்டா ரோட்டுமேல முட்ட பரோட்டா... (விஷ்னு)
4. அய்யய்யோ அலமேலு...ஆவின் பசும்பாலு.....(இந்தப் பாடலைப் பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய்) (தேவா)
5. கட்டிப்புடி கட்டிபுடிடா.... (பாட்டை ரேடியோவுல கூட கேக்க முடியலைடா சாமி!)

(அஜீரணமாயிடுச்சோ என்னமோ தெரியல, ஒருவழியா இந்தக் கொத்து பரோட்டா பாட்டுகள விட்டுட்டாரு டாக்குடரு!)


கொசுறு: டாக்குடரு தம்பியோட ஒலக பேமஸ் பேட்டி (நெறைய பேரு பாத்திருப்பீங்க, இருந்தாலும் பாக்காதவங்க யாரும் இருந்தா பாக்கட்டுமேன்னுதான் ஹி...ஹி..)
எல்லா வீடியோவையும் நல்லா சவுண்டு வெச்சிப் பாருங்க! (சவுண்டு ரொம்ப முக்கியம், ஏன்னா இளையதலவலி அங்கே தான் பெரிய ட்விஸ்ட்டே வெச்சிருக்காரு! ஆப்பிஸ்ல சவுண்டு வெக்க முடியாதவங்க, கட்டாயம் வீட்ல போயி சவுண்டு வெச்சிப் பாருங்க!)




டாக்குடரு தம்பிக்கு அப்பிடி ஏன் பொசுக்குன்னு கோவம் வந்திச்சின்னு இந்த வீடியோவுல காட்றாங்க!






இது சூப்பர் ரீமிக்ஸ், பாத்து ரொம்ப நாளாயிருக்கும், இன்னொரு வாட்டி பாருங்க, செம ஜாலியா இருக்கும்!




கில்லி, காதலுக்கு மரியாதை படங்களோட DVD இருந்தா ப்ரியா இருக்கும் போது போட்டுப் பாருங்ணா! அப்போ வரட்டுங்ளாங்ணா!

(சரி நம்ம தறுதலையப் பத்தியும் யாராவது எழுதுங்களேன்!)

Friday, October 1, 2010

அண்ணன் அழைக்கிறார்!

லதிமுக முதல் மாநில மாநாடு!

எனக்கும் இருக்கு ஓட்டு!
20 சீட்டுத் தந்தாத்தான் கூட்டு!


நமது லட்சிய(?)திமுக வின் (அப்படியென்றால் என்ன என்பவர்கள் இங்கே பார்க்கவும்), முதல் மாநில மாநாடு விரைவில் நடக்க இருப்பதால் நமது கட்சி உறுப்பினர்கள் அனைவரும் நன்கொடை சேகரித்து வருமாறு அல்லது கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு மேலும் கட்சியை பலப்படுத்த (?) உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிதாகச் சேர்பவர்களைக் கவரும் வகையில் சில திட்டங்கள் அறிமுகப்படுத்தப் பட உள்ளன.
1. பணம் கொண்டு வந்தால் தேர்தலில் சீட்டு, இல்லேன்னா உனக்கு வேட்டு, எல்லாமே வெத்துவேட்டு!
2. ஐந்து அல்லக்கைகளைக் கூட்டி வந்தால் உங்களுக்கு நீங்கள் கேட்ட பதவி, அஞ்சுல ஒண்ணு கொறஞ்சாலும் அது நீங்க கட்சிக்கு செய்யற உதவி!
3. கூட்டணி கட்சியக் கூட்டிட்டு வந்தா நீந்தான் செயலாளரு, உனக்கு எப்பவுமே நாந்தான் மேலாளரு!
4. வெறுங்கையோட வராதே மச்சி, வந்தா மூஞ்சில ஊத்துவேன் ஆசிட வெச்சி, இனி ஊரெல்லாம் என்னோட பேச்சி! நான் தாளம் போடுறது கொட்டாங்குச்சி!(அவரு அப்பிடித்தான் பேசுவாரு, நீங்க வெறுங்கையோடவாவது வாங்க!, எப்படியாச்சும் வந்தாப் போதும்!)
5. நாங்கூட சேத்துக்க மாட்டேன் விஜயகாந்த(கேப்டன் நம்ம நெலம இப்பிடி ஆயிடிச்சே?), கூப்பிட்டாலும் வரமாட்டாரு ரஜினிகாந்த்!

எனக்கும் இருக்கு ஓட்டு, 20 சீட்டுத் தந்தாத்தான் கூட்டு! (ங்ணா, நீங்க புடலங்கா கூட்டத்தானே சொல்றீங்க? அதுக்கு போயி 20 சீட்டு கேக்குறீங்ளேண்ணா இது அடுக்குமா? மனசாட்சியே இல்லியா?)

யக்கா....டும்..டும்..டும்.... டன்டனக்கா...டனக்கு நக்கா....!

அழைப்புலாம் நல்லாத்தானுங்ணா இருக்கு, ஆனா யாரும் வர மாட்டேங்கிரானுங்களே? எல்லாரும் ஒரு கிலோமிட்டருக்கு அந்தப் பக்கத்துலேயே பாத்துட்டு எஸ்கேப் ஆயிடுறானுங்ணா! நீங்க எதுக்கும் சேவிங் பண்ணிட்டு வந்து மறுக்கா கூப்புட்டுப் பாருங்ணா!

நம்ம சொன்னதையும் நம்பி மனுசன் போயி ஷேவ் பண்ணிட்டு வந்தாரு பாருங்க, இனி ஆயுசுக்கும் யாருக்கு ஐடியாவே கொடுக்க மாட்டேனுங்ணா!

எச்சரிக்கை (நிஜமாவே!): இளகிய மனம் படைத்தவர்கள் மேற்கொண்டு பார்க்க வேண்டாம்!

-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-




நன்றி யோகேஷ் (புகைப்படதிற்கு!)

நன்றி சேட்டை உங்க பதிவப் பாத்துதான் டெவலப் பண்ணேன்!