Thursday, December 23, 2010

எனது ரசனையில்: பெண்குரல் பாடல்கள்........

இதை ஒரு தொடர்பதிவாக பலரும் எழுதிவருவது தெரிந்ததே. என்னையும் இந்தத் தொடர்பதிவிற்கு நண்பர்கள் பலரும் அழைத்திருந்தனர். பிடித்த பாடல்களை வெறும் பத்தில் அடக்கிவிட முடியும் என்று தோன்றவில்லை. மேலும் வெவ்வேறு காலகட்டங்களில் வந்த பாடல்களை ஒன்றாக வகைப்படுத்துவதிலும் எனக்குச் சம்மதமில்லை. அதனால் பாடல்களை என்பது, தொண்ணூறு மற்றும் இரண்டாயிரம் ஆண்டுகளில் வந்தவை எனப் பிரித்திருக்கிறேன். பாடல்களைத் தரவரிசைப் படுத்தவில்லை. ரேண்டமாகவே கொடுத்திருக்கிறேன். ஒவ்வொரு பாடலுக்கும் சிறு குறிப்பு எழுத ஆசைதான் ஆனால், ஒரே பதிவிற்குள் அது சாத்திய்மில்லை என்பதால் விட்டுவிட்டேன்.

(இடமிருந்து வலமாக: எஸ்.ஜானகி, சுனந்தா, ஜென்ஸி)

(இடமிருந்து வலமாக:  உமாரமணன், எஸ்.பி.ஷைலஜா, சித்ரா)

80s:

1. புத்தம் புதுக் காலை…பொன்னிற வேளை…. எஸ். ஜானகி (அலைகள் ஓய்வதில்லை)

2. கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்… எஸ். ஜானகி (ரெட்டைவால் குருவி)

3. அழகிய கண்ணே…………எஸ். ஜானகி (உதிரிப் பூக்கள்)

4. ராசாவே உன்ன நம்பி…. எஸ்.ஜானகி (முதல் மரியாதை)

5. ஊரு சனம்… தூங்கிடுச்சு…. எஸ். ஜானகி (மெல்லத் திறந்தது கதவு)

6. ஒரு இனிய மனது…….. ஜென்ஸி (ஜானி)

7. காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள்…எஸ். ஜானகி (மங்கை ஒரு கங்கை)

8. சின்னச் சின்ன வண்ணக்குயில்…….. எஸ். ஜானகி (மௌனராகம்)

9. குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும்… சித்ரா (மெல்லத் திறந்தது கதவு)

10. தெய்வீக ராகம்…. ஜென்ஸி (உல்லாசப் பறவைகள்)

11. ஆசைய காத்துல தூது விட்டு……..எஸ்.பி.ஷைலஜா (ஜானி)

12. ஆனந்த ராகம்……….உமாரமணன் (பன்னீர் புஷ்பங்கள்)

13. பன்னீரில் நனைந்த பூக்கள்………….. எஸ்.ஜானகி (உயிரே உனக்காக)

14. மந்திரப் புன்னகையோ மஞ்சள் நிலவோ…… எஸ்.ஜானகி (மந்திரப் புன்னகை)

15. என் வானிலே ஒரே வெண்ணிலா……..ஜென்ஸி (ஜானி)

16. சின்னப்பூ சின்னப்பூ கண்ணெல்லாம் வண்ணப்பூ…… எஸ்.ஜானகி (ஜப்பானில் கல்யாணராமன்)

17. அழகு மலராட……………..எஸ். ஜானகி (வைதேகி காத்திருந்தாள்)

18. செண்பகமே செண்பகமே…. சுனந்தா (எங்க ஊரு பாட்டுக்காரன்)

19. ரோஜாப்பூ ஆடிவந்தது….. ஜானகி, கோரஸ் (அக்னி நட்சத்திரம்)

90s:

1. மாலையில் யாரோ மனதோடு பேச…. சுவர்ணலதா (சத்ரியன்)

2. கற்பூர பொம்மை ஒன்று….. பி. சுசீலா (கேளடி கண்மணி)

3. வந்ததே ஓ…ஓ..குங்குமம்…. சித்ரா (கிழக்கு வாசல்)

4. மன்னவா மன்னவா…..சுனந்தா (வால்டர் வெற்றிவேல்)

5. கொஞ்சம் நிலவு…… அனுபமா (திருடா திருடா)

6. ஊரடங்கும் சாமத்திலே…. சுஜாதா, உமா ரமணன் (புதுப்பட்டி பொன்னுத்தாயி)

7. ராசாவே உன்னை விட மாட்டேன்….. எஸ். ஜானகி (அரண்மனைக்கிளி)

8. வான்மதியே… வான்மதியே…. எஸ். ஜானகி (அரண்மனைக்கிளி)

9. நீதானே நாள்தோறும்… சுவர்ணலதா (பாட்டு வாத்தியார்)

10. அதிகாலைக் காற்றே நில்லு… எஸ். ஜானகி (தலைவாசல்)

11. கண்ணி ரெண்டில் ஏற்றி வைத்த நெய்விளக்கே…. பெண்குரல் கோரஸ் (அவதாரம்)

12. நிலா காய்கிறது……ஹரிணி (இந்திரா)

13. மார்கழிப் பூவே…….ஷோபா (மே மாதம்)

14. என்னுள்ளே என்னுள்ளே…….. ஸ்வர்ணலதா (வள்ளி)

15. அன்பென்ற மழையிலே….. அனுராதா ஸ்ரீராம் (மின்சாரக் கனவு)

 16. குயில்பாட்டு............ஸ்வர்ணலதா (என் ராசாவின் மனசிலே)

2000s

1. மயில் போல பொண்ணு ஒண்ணு… பவதாரிணி (பாரதி)

2. அடித் தோழி அடித்தோழியே…. கல்யாணி (தென்றல்)

3. ஒன்றா ரெண்டா ஆசைகள்…… பாம்பே ஜெயஸ்ரீ (காக்க காக்க)

4. இதுதானா……சித்ரா (சாமி)

5. திருமணமலர்கள்……… ஸ்வர்ணலதா….. (பூவெல்லாம் உன் வாசம்)

6. நினைத்து நினைத்து……. ஷ்ரெயாகோசல் (7G ரெயின்போ காலனி)

7. விடிகின்ற பொழுது…… மதுமிதா (ராம்)

8. அனல்மேலே பனித்துளி……. சுதா ரகுநாதன் (வாரணம் ஆயிரம்)

9. மருதாணி…….சாதனா சர்கம் (சக்கரக்கட்டி)

சமீப காலங்களில் அதிகமாக பாடல்கள் கேட்க முடியவில்லை, எனவேதான் அவை சற்றுக் குறைவாகவே உள்ளன.  மேலே உள்ள பாடல்கள் எதுவும் வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளலாம். ஈமெயிலில் அனுப்பித்தருகிறேன்.

அனேகமாக அனைவரும் இந்தத் தொடர்பதிவை எழுதிவிட்டனர்.  இருந்தாலும் இரு பிரபல பதிவர்கள் இதை இன்னும் சட்டை செய்யாமலே இருக்கின்றனர். எனவே உங்கள் அனைவர் சார்பாகவும் அவர்கள் இருவரையும் இத்தொடர்பதிவிற்கு  அழைக்கிறேன்.

 !

131 comments:

பொன் மாலை பொழுது said...

//18. செண்பகமே செண்பகமே…. சுனந்தா (எங்க ஊரு பாட்டுக்காரன்)//

என்னருமை பன்னிக்குட்டி, இந்த பாடலை பாடியவர் சுனந்தா அல்ல.
பிரபல இந்தி பின்னணி பாடகி ஆஷா பான்ஸ்லே.

மற்றபடி தொகுப்பு பிரமாதம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கக்கு - மாணிக்கம் said...
//18. செண்பகமே செண்பகமே…. சுனந்தா (எங்க ஊரு பாட்டுக்காரன்)//

என்னருமை பன்னிக்குட்டி, இந்த பாடலை பாடியவர் சுனந்தா அல்ல.
பிரபல இந்தி பின்னணி பாடகி ஆஷா பான்ஸ்லே.

மற்றபடி தொகுப்பு பிரமாதம்.////

வாங்கண்ணே, சுனந்தா பாடிய பாடலும் இருக்குண்ணே, மொத்தம் மூணு பேர் பாடிய பாடல்கள் இருக்கு,
1. ஆஷா போன்ஸ்லே மட்டும் பாடியது
2. மனோ மட்டும்
3. சுனந்தா (கடைசி சரணம் மனோ)

எனக்கு சுனந்தா குரல் ரொம்ப ரொம்ப புடிக்கும், அதான்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vadaipoche

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ரேண்டமாகவே கொடுத்திருக்கிறேன்.//

அப்படியே ரே க்கு பதில் கா போட்டு கொடுத்திருக்கலாம். ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஒவ்வொரு பாடலுக்கும் சிறு குறிப்பு எழுத ஆசைதான் ஆனால், ஒரே பதிவிற்குள் அது சாத்திய்மில்லை என்பதால் விட்டுவிட்டேன்.//

தெரியலைன்னு சொல்லு. முடியலைன்னு சொல்லாத

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
(இடமிருந்து வலமாக: எஸ்.ஜானகி, சுனந்தா, ஜென்ஸி)///

எந்த இடத்திலிருந்து வலமாக?

தினேஷ்குமார் said...

கவுண்டரே கலக்கிட்டிங்க

எல்லாமே அருமை எதை நான் வர்ணிப்பது வார்த்தைகளால்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஆசைய காத்துல தூது விட்டு//

200% i liked

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னீரில் நனைந்த பூக்கள் also

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எனவே உங்கள் அனைவர் சார்பாகவும் அவர்கள் இருவரையும் இத்தொடர்பதிவிற்கு அழைக்கிறேன்.

1. பட்டாபட்டி
2. மங்குனி அமைச்சர்//

உன் நம்பிக்கையை பாராட்டுறேன். ஹிஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//ரேண்டமாகவே கொடுத்திருக்கிறேன்.//

அப்படியே ரே க்கு பதில் கா போட்டு கொடுத்திருக்கலாம். ஹிஹி//////

அடங்கொன்னியா... எப்பப்பாரு....இதே.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////dineshkumar said...
கவுண்டரே கலக்கிட்டிங்க

எல்லாமே அருமை எதை நான் வர்ணிப்பது வார்த்தைகளால்/////

வாங்க கவிஞரே... (நிறைய பேரு இதே பதிவுக்கு கூப்பிட்டுட்டாங்க, யாரு யாருன்னு மறுந்து போச்சு, அதான் யாரு கூப்புட்டாங்கன்னு பேரு போடல)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//ஆசைய காத்துல தூது விட்டு//

200% i liked/////

பார்ரா...........?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னீரில் நனைந்த பூக்கள் also////

அட, இந்தப்பையனுக்குள்ளேயும் என்னமோ இருந்திருக்கே.....?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அலைகள் ஓய்வதில்லை//

24X7?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ரெட்டைவால் குருவி//

New Edition?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//உதிரிப் பூக்கள்//

எத்தனை கிலோ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

முதல் மரியாதை

2nd?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மெல்லத் திறந்தது கதவு///

ரொம்ப பழைய கதவோ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஜானி//

முழம் யாரு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மங்கை ஒரு கங்கை

Kaveri yaar?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மௌனராகம்///

சத்தமே வராதா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஜப்பானில் கல்யாணராமன்

Singapore la?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைதேகி காத்திருந்தாள்//

எவ்ளோ நேரம்? எங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கேளடி கண்மணி

மரியாதை..
மரியாதை..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

OK Good night

பேய்வீடு said...

வாவ் வாவ்

பொன் மாலை பொழுது said...

நம்ம பண்ணிக்குட்டியை அணைவரும் "கவுண்ட்டரே " என்று செல்லமாக அழைப்து பார்த்து எனக்கு சிரிப்பாய் வருது .நானும் கூட அப்படித்தான் எழுதுவேன். ரோஜாவை எந்த பெயர் இட்டு அழைத்தால் என்ன?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கக்கு - மாணிக்கம் said...
நம்ம பண்ணிக்குட்டியை அணைவரும் "கவுண்ட்டரே " என்று செல்லமாக அழைப்து பார்த்து எனக்கு சிரிப்பாய் வருது .நானும் கூட அப்படித்தான் எழுதுவேன். ரோஜாவை எந்த பெயர் இட்டு அழைத்தால் என்ன?/////

அதனால என்னண்ணே, நமக்கு அதா முக்கியம்? ஹி..ஹி....!

தினேஷ்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////dineshkumar said...
கவுண்டரே கலக்கிட்டிங்க

எல்லாமே அருமை எதை நான் வர்ணிப்பது வார்த்தைகளால்/////

வாங்க கவிஞரே... (நிறைய பேரு இதே பதிவுக்கு கூப்பிட்டுட்டாங்க, யாரு யாருன்னு மறுந்து போச்சு, அதான் யாரு கூப்புட்டாங்கன்னு பேரு போடல)

கவுண்டரே நீங்க பேரபோட்டா அவங்க மட்டும்தான் ஞாபகம் வருவாங்க ஆனா எல்லாரும் எம் மனசுலதான் இருக்காங்கன்னு சொல்லாம சொன்னீங்களே அங்க தான் கவுண்டரே நீங்க உசந்து நிக்கறீங்க ..........

உசந்தவரா வாழ்த்த சத்தியமா வயதில்ல கவுண்டரே வணங்குகிறேன் தங்களை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பேய்வீடு said...
வாவ் வாவ்/////

:) தேங்க்ஸ்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////dineshkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////dineshkumar said...
கவுண்டரே கலக்கிட்டிங்க

எல்லாமே அருமை எதை நான் வர்ணிப்பது வார்த்தைகளால்/////

வாங்க கவிஞரே... (நிறைய பேரு இதே பதிவுக்கு கூப்பிட்டுட்டாங்க, யாரு யாருன்னு மறுந்து போச்சு, அதான் யாரு கூப்புட்டாங்கன்னு பேரு போடல)

கவுண்டரே நீங்க பேரபோட்டா அவங்க மட்டும்தான் ஞாபகம் வருவாங்க ஆனா எல்லாரும் எம் மனசுலதான் இருக்காங்கன்னு சொல்லாம சொன்னீங்களே அங்க தான் கவுண்டரே நீங்க உசந்து நிக்கறீங்க ..........

உசந்தவரா வாழ்த்த சத்தியமா வயதில்ல கவுண்டரே வணங்குகிறேன் தங்களை//////

தினேஷ், சத்தியமா இதுக்கெல்லாம் எனக்குத் தகுதியே கெடையாது.....

அன்பரசன் said...

//1. புத்தம் புதுக் காலை…பொன்னிற வேளை….//
//15. என் வானிலே ஒரே வெண்ணிலா……..//

//13. மார்கழிப் பூவே…….//
//14. என்னுள்ளே என்னுள்ளே……..//
//15. அன்பென்ற மழையிலே…..//

//3. ஒன்றா ரெண்டா ஆசைகள்……//
//6. நினைத்து நினைத்து…….//
//7. விடிகின்ற பொழுது……//
//8. அனல்மேலே பனித்துளி…….//

சான்ஸே இல்லங்க...
இதெல்லாம் தொடர்ச்சியா எத்தனை முறை வேண்டுமானாலும் கேக்கலாம்...

அன்பரசன் said...

//சமீப காலங்களில் அதிகமாக பாடல்கள் கேட்க முடியவில்லை,//

வயசானா அப்படித்தான்....
என்ன ஒரு 55 இருக்குமா????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அன்பரசன் said...
//1. புத்தம் புதுக் காலை…பொன்னிற வேளை….//
//15. என் வானிலே ஒரே வெண்ணிலா……..//

//13. மார்கழிப் பூவே…….//
//14. என்னுள்ளே என்னுள்ளே……..//
//15. அன்பென்ற மழையிலே…..//

//3. ஒன்றா ரெண்டா ஆசைகள்……//
//6. நினைத்து நினைத்து…….//
//7. விடிகின்ற பொழுது……//
//8. அனல்மேலே பனித்துளி…….//

சான்ஸே இல்லங்க...
இதெல்லாம் தொடர்ச்சியா எத்தனை முறை வேண்டுமானாலும் கேக்கலாம்.../////

ஆமா அன்பரசன், சில பாடல்களை அப்பிடியே மனதையும் வருடும்..கேட்டுக்கொண்டே இருக்கலாம்..!
நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அன்பரசன் said...
//சமீப காலங்களில் அதிகமாக பாடல்கள் கேட்க முடியவில்லை,//

வயசானா அப்படித்தான்....
என்ன ஒரு 55 இருக்குமா????//////

அடப்பாவி, வெளினாட்டுக்கு வந்ததால முன்ன மாதிரி கேக்க முடியலன்னு சொன்னேன்.... கொஞ்சம் கேப்பு விடமுடியல சாமி......!

அன்பரசன் said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அன்பரசன் said...
//சமீப காலங்களில் அதிகமாக பாடல்கள் கேட்க முடியவில்லை,//

வயசானா அப்படித்தான்....
என்ன ஒரு 55 இருக்குமா????//////

அடப்பாவி, வெளினாட்டுக்கு வந்ததால முன்ன மாதிரி கேக்க முடியலன்னு சொன்னேன்.... கொஞ்சம் கேப்பு விடமுடியல சாமி......!//

சமாளிஃபிகேசன்...

தினேஷ்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////dineshkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

கவுண்டரே நீங்க பேரபோட்டா அவங்க மட்டும்தான் ஞாபகம் வருவாங்க ஆனா எல்லாரும் எம் மனசுலதான் இருக்காங்கன்னு சொல்லாம சொன்னீங்களே அங்க தான் கவுண்டரே நீங்க உசந்து நிக்கறீங்க ..........

உசந்தவரா வாழ்த்த சத்தியமா வயதில்ல கவுண்டரே வணங்குகிறேன் தங்களை//////

தினேஷ், சத்தியமா இதுக்கெல்லாம் எனக்குத் தகுதியே கெடையாது.....

கவுண்டரே கடவுள் எல்லாராலையும் மத்தவங்கள சிரிக்க வைக்க முடியாதுன்னு சிலருக்குத்தான் அந்த தகுதிய கொடுத்திருக்கான் அந்த ஒரு தகுதி போதும் கவுண்டரே உங்களுக்கு ....

நான் ஜோக்கரானுளும் மற்றவரை சந்தோசபடுதுரிங்களே இது ஒன்னு போதாதா உங்க மனச புரிஞ்சுக்க

Ramesh said...

//
2. அடித் தோழி அடித்தோழியே…. கல்யாணி (தென்றல்)///

இந்தப் பாட்டைத் தவிர மத்த எல்லா பாட்டுமே செம கலெக்சன்... அருமையான தொகுப்புங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பிரியமுடன் ரமேஷ் said...
//
2. அடித் தோழி அடித்தோழியே…. கல்யாணி (தென்றல்)///

இந்தப் பாட்டைத் தவிர மத்த எல்லா பாட்டுமே செம கலெக்சன்... அருமையான தொகுப்புங்க.../////

நன்றி ரமேஷ், ஏன் அந்தப் பாடல் பிடிக்காதா? கல்யாணியின் குரலுக்காகவே நான் அந்தப்பாடலை விரும்பிக் கேட்பதுண்டு!

Philosophy Prabhakaran said...

ஜென்சி, சுனந்தா, ஷைலஜா என்று பழைய பாடகிகளை அருமையாக நினைவுகூர்ந்தீர்கள்...

Philosophy Prabhakaran said...

சாதனா, ஸ்ரேயா கோஷல் இவங்கல்லாம் எனக்கும் ரொம்ப பேவரிட்....

வினோ said...

ராமசாமி அண்ணே, எல்லாம் அருமையான பாடல்கள்.. 80 யில் வந்த பாடல்கள் எல்லாம் நிறைய தடவை கேட்டிருக்கிறேன்... நன்றி...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@ரமேஷ்- ரொம்ப
@பன்னி

//எனவே உங்கள் அனைவர் சார்பாகவும் அவர்கள் இருவரையும் இத்தொடர்பதிவிற்கு அழைக்கிறேன்.

1. பட்டாபட்டி
2. மங்குனி அமைச்சர்//

உன் நம்பிக்கையை பாராட்டுறேன். ஹிஹி
//

என்னை புரிந்துகொண்ட ரமேஸ்க்கு நன்றி..
நீயும் மூளைக்காரந்தான்னு நிருபிச்சுட்டே மக்கா..

ஹி..ஹி

@பன்னி..
யோவ்..இப்படியெல்லாம் கோத்துவிடுவீங்கனுதான், ”ஆணி”-னு போர்ட் வெச்சுட்டு ”எஸ்” ஆகியிருக்கேன்..

ஆனாலும் உனக்கு தில் அதிகம் மச்சி.. என்னைய தொடர் பதிவுக்கு கூப்பிட்ட உன்
நேர்மைய,
ஒழுக்கத்தை,
வீரத்தை,
மனதிடத்தை
பாராட்ட வார்த்தையே இல்ல....

உஷ்.. மூச்சு வாங்குது..

உம்.. சொல்லமறந்துட்டேன்.. நான் எழுதினா நாறும்..ஹி..ஹீ.. அதனால், வேற ஏதாவது புள்ளபூச்சிய பாரு..ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

லிஸ்ட் எல்லாம் நல்லாதான் இருக்கு..
நான் பாட்டு கேட்பதோட சரி...

விமர்சனம் எழுத ..ஹி..ஹி எனக்கு வராது.. சாரி மிஸ்டர் பன்னிக்குட்டி...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சோனியா..சோனியா..சொக்க வைக்கும் சாணியா..

இதுவும் எனக்கு பிடித்த பாடல்.. ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அதுவுமில்லாம, எனக்கு தமிழ் கொஞ்சம்..கொஞ்சம்தான் வரும்.. அதான்....ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஏய்யா..செம்மொழி பாட்டு பிடிக்காதா?.. ஓ இந்த பதிவு சினிமா பாட்டை பற்றீயது..சே. மறந்துட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேன்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யாருமேயில்லாத கடையில 50 ஆவது வடை எடுப்பதில் என்ன திறமை இருக்கிறது..

^டவுட்^....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யோவ்.. பிரபல பதிவனுகளும் , இதுல கலந்துக்கிட்டு இருக்கானுக.. இப்பதான் பார்த்து ஷாக் ஆயிட்டேன்...

அதாம்பா. அந்த பெண் பதிவர்களின் காதலன்.. சே... காவலன்...
அதனால நான் இந்த ஆட்டத்துக்கு வரலே.. ஹி..ஹி

நீயாச்சு.. அந்த காதலன் பீஸ் ஆச்சு.. நல்லா , கூடி நின்னு கும்மியடிங்க...

மாணவன் said...

அனைத்துப்பாடல்களின் தேர்வும் அருமை அண்ணே,யார் பாடியது என்ற விளக்கங்களும் சூப்பர்...

நம்ம ராகதேவனின் பாடல்களை அதிகமாக தேர்வு செய்ததற்கு சிறப்பு நன்றிகள் பல........

மாணவன் said...

// பட்டாபட்டி.... said...
லிஸ்ட் எல்லாம் நல்லாதான் இருக்கு..
நான் பாட்டு கேட்பதோட சரி...

விமர்சனம் எழுத ..ஹி..ஹி எனக்கு வராது.. சாரி மிஸ்டர் பன்னிக்குட்டி.//

பட்டா சார் சார்பா நான் வேணா எழுதவா அண்ணே?

ஹிஹிஹிஹி

சி.பி.செந்தில்குமார் said...

யாரப்பா அது மிட்நைட்ல பதிவு போடறது

சி.பி.செந்தில்குமார் said...

ஓ ராம்சமியா? நீங்க போடலாம்

சி.பி.செந்தில்குமார் said...

என்னது?கேப் விடாம கிடா வெட்டறீங்க?

சி.பி.செந்தில்குமார் said...

திடீர்னு தொடர் பதிவா போட்டு அசத்தறீங்க

சி.பி.செந்தில்குமார் said...

வழக்கம் போலவே தொடர் பதிவுக்கு என்னை அழைக்கமல் கேவலபடுத்தியதை வன்மையாகக்கண்டித்து ஓட்டு போட்டுட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

பட்டாபட்டி.... said...
யோவ்.. பிரபல பதிவனுகளும் , இதுல கலந்துக்கிட்டு இருக்கானுக.. இப்பதான் பார்த்து ஷாக் ஆயிட்டேன்...

அதாம்பா. அந்த பெண் பதிவர்களின் காதலன்.. சே... காவலன்...
அதனால நான் இந்த ஆட்டத்துக்கு வரலே.. ஹி..ஹி

நீயாச்சு.. அந்த காதலன் பீஸ் ஆச்சு.. நல்லா , கூடி நின்னு கும்மியடிங்க...

December 23, 2010 4:10 PM

யார் அந்த டோமரு?நான் நெட்ல அதிக நேரம் இருக்க முடியறது இல்ல அதனால எதுவும் எனக்கு தெரியறதில்ல

சி.பி.செந்தில்குமார் said...

வழக்கமா நீங்க பதிவு போடற டைம் இது இல்லையே

சி.பி.செந்தில்குமார் said...

குற்றம் நடந்தது என்ன?

சி.பி.செந்தில்குமார் said...

கடை ஓனரு மப்புல கவுந்தடிச்சு படுத்திருக்கும்போது நமக்கு என்ன வேலை இங்கே?

ஜெயந்த் கிருஷ்ணா said...

பயங்கர ரசனக்காரரா இருப்பீங்க போலிருக்கே..

எல்லா பாடல்களும் அருமையான பாடல்கள்..

வெங்கட் said...

// பிடித்த பாடல்களை வெறும் பத்தில்
அடக்கிவிட முடியும் என்று தோன்றவில்லை.
மேலும் வெவ்வேறு காலகட்டங்களில் வந்த
பாடல்களை ஒன்றாக வகைப்படுத்துவதிலும்
எனக்குச் சம்மதமில்லை. //

அட.. இந்த புள்ளக்குள்ள
என்னமோ இருந்திருக்கு பாரேன்..!!

வைகை said...

நல்ல ரசனையான தொகுப்பு! நீங்க என்ன பண்றீங்க! இதை எல்லாம் சீடீயா போட்டு எங்க எல்லாருக்கும் அனுப்பிவிடுங்க!

வைகை said...

அப்பறம் ஒரு சின்ன திருத்தம் மருதாணி பாட்டு பாடியது சாதனா சர்க்கம் இல்ல மதுஸ்ரீ!(ஒரு வேளை இதுவும் தப்பா?!!)

சௌந்தர் said...

சமீப காலங்களில் அதிகமாக பாடல்கள் கேட்க முடியவில்லை, எனவேதான் அவை சற்றுக் குறைவாகவே உள்ளன.///

இது குறைவா......இப்போது எல்லாம் பாடலே கேட்பது இல்லையா

எஸ்.கே said...

எல்லாமே ரொம்ப சூப்பரான பாட்டு! சில எனக்கு ரொம்ப பிடிச்சது! மனசுக்கு இதமா இருக்கும்!

Ramesh said...

//////பிரியமுடன் ரமேஷ் said...
//
2. அடித் தோழி அடித்தோழியே…. கல்யாணி (தென்றல்)///

இந்தப் பாட்டைத் தவிர மத்த எல்லா பாட்டுமே செம கலெக்சன்... அருமையான தொகுப்புங்க.../////

நன்றி ரமேஷ், ஏன் அந்தப் பாடல் பிடிக்காதா? கல்யாணியின் குரலுக்காகவே நான் அந்தப்பாடலை விரும்பிக் கேட்பதுண்டு!//

அப்படிங்களா சூப்பருங்க.. சில பாடல்கள் நல்லாவே இருந்தாலும்.. முதல் முறை கேக்கும் போது எதாவது மூடு சரியில்லாம இருந்ததுன்னா... மறுபடியும் அந்தப் பாட்டை கேக்கும்போது.. அந்த மூடே வந்து இரிடேட் பன்னும் இல்லிங்களா.. அந்த மாதிரி எதோ தோணும் இந்த பாட்டு கேக்கும் போது.. அதனால பிடிக்காது..

Arun Prasath said...

அடடா அண்ணனுக்கு என்ன ரசனை

Arun Prasath said...

80 s 90 s ன்னு பிரிச்சு போட்டது சூப்பர் ஐடியா அண்ணே

அருண் பிரசாத் said...

ராம்ஸ் உங்களுக்குள்ள இப்படிபட்ட ஒரு ரசிகன் ஒளிஞ்சி இருக்கானா?

செமயா ரசனையான பாட்டுகளை தந்து இருக்கீங்க

ஆனந்தி.. said...

10. அதிகாலைக் காற்றே நில்லு… எஸ். ஜானகி (அமராவதி)
தலைவாசல் படத்தில் தான் எனக்கு ரொம்ப பிடிச்ச இந்த சாங் கேட்டு இருக்கேன்...அமராவதியில் இப்படி ஒரு சாங் இருக்கா????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஆனந்தி.. said...
10. அதிகாலைக் காற்றே நில்லு… எஸ். ஜானகி (அமராவதி)
தலைவாசல் படத்தில் தான் எனக்கு ரொம்ப பிடிச்ச இந்த சாங் கேட்டு இருக்கேன்...அமராவதியில் இப்படி ஒரு சாங் இருக்கா????//////

ஆமாங்க அது தலைவாசல்தான், நாந்தான் ஏதோ ஞாபகத்த்ல போட்டுட்டேன், நன்றி!

எல் கே said...

அருமையான பாடல்கள் ராம் சார்.

பாலராஜன்கீதா said...

சிற்சில பாடல்களைவிட மற்றவை எல்லாம் எங்களுக்கும் பிடிக்கும். நல்ல இரசனையான தொகுப்பு.

Anonymous said...

உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.
தவறாமல் எழுதவும்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆமாங்க அது தலைவாசல்தான், நாந்தான் ஏதோ ஞாபகத்த்ல போட்டுட்டேன், நன்றி! //

பன்னி சார்..நாங்க போட்ட கமென்ஸ்க்கு பதில் சொல்லமாட்டீரு போல..
உம்..
காற்று கீழ(?) வீசுது.. நடக்கட்டும்,,
நடக்கட்டும்..

நான் பாம்பே-க்கு போய் ஆப்ரேஷன் பண்ண தயாரில்ல.. டிகே..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாபட்டி.... said...
ஆமாங்க அது தலைவாசல்தான், நாந்தான் ஏதோ ஞாபகத்த்ல போட்டுட்டேன், நன்றி! //

பன்னி சார்..நாங்க போட்ட கமென்ஸ்க்கு பதில் சொல்லமாட்டீரு போல..
உம்..
காற்று கீழ(?) வீசுது.. நடக்கட்டும்,,
நடக்கட்டும்..

நான் பாம்பே-க்கு போய் ஆப்ரேஷன் பண்ண தயாரில்ல.. டிகே../////

தலைவரே... அந்தக் கமென்ட்டுக்கு அப்பூறம், பதிவுல கரெக்சன் பண்ணியிருக்கேன், அதனால தான் அந்தக் கமென்ட். மற்றபடி அனைவருக்கும் வரிசைப்படியே (கும்மியைத்தவிர) பதிலளிக்கப்படும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////philosophy prabhakaran said...
ஜென்சி, சுனந்தா, ஷைலஜா என்று பழைய பாடகிகளை அருமையாக நினைவுகூர்ந்தீர்கள்...////

மறக்கமுடியுமா அந்தக் குரல்களை?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////philosophy prabhakaran said...
சாதனா, ஸ்ரேயா கோஷல் இவங்கல்லாம் எனக்கும் ரொம்ப பேவரிட்....///////

எனக்கும்...........:))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வினோ said...
ராமசாமி அண்ணே, எல்லாம் அருமையான பாடல்கள்.. 80 யில் வந்த பாடல்கள் எல்லாம் நிறைய தடவை கேட்டிருக்கிறேன்... நன்றி...

December 23, 2010 2:22 PM/////

நன்றி வினோ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பட்டாபட்டி.... said...
@ரமேஷ்- ரொம்ப
@பன்னி

//எனவே உங்கள் அனைவர் சார்பாகவும் அவர்கள் இருவரையும் இத்தொடர்பதிவிற்கு அழைக்கிறேன்.

1. பட்டாபட்டி
2. மங்குனி அமைச்சர்//

உன் நம்பிக்கையை பாராட்டுறேன். ஹிஹி
//

என்னை புரிந்துகொண்ட ரமேஸ்க்கு நன்றி..
நீயும் மூளைக்காரந்தான்னு நிருபிச்சுட்டே மக்கா..

ஹி..ஹி

@பன்னி..
யோவ்..இப்படியெல்லாம் கோத்துவிடுவீங்கனுதான், ”ஆணி”-னு போர்ட் வெச்சுட்டு ”எஸ்” ஆகியிருக்கேன்..

ஆனாலும் உனக்கு தில் அதிகம் மச்சி.. என்னைய தொடர் பதிவுக்கு கூப்பிட்ட உன்
நேர்மைய,
ஒழுக்கத்தை,
வீரத்தை,
மனதிடத்தை
பாராட்ட வார்த்தையே இல்ல....

உஷ்.. மூச்சு வாங்குது..

உம்.. சொல்லமறந்துட்டேன்.. நான் எழுதினா நாறும்..ஹி..ஹீ.. அதனால், வேற ஏதாவது புள்ளபூச்சிய பாரு..ஹி..ஹி

December 23, 2010 3:58 PM///////

எத்தன லாரி ஆணி வந்தாலும், நீ போட்டுத்தாண்டி ஆகனும், 6 மாசமோ, 1 வருசமோ, வெயிலோ மழையோ, நாங்க வெயிட் பண்ணுவோம்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// பட்டாபட்டி.... said...
லிஸ்ட் எல்லாம் நல்லாதான் இருக்கு..
நான் பாட்டு கேட்பதோட சரி...

விமர்சனம் எழுத ..ஹி..ஹி எனக்கு வராது.. சாரி மிஸ்டர் பன்னிக்குட்டி.../////

நாங்க மட்டும் என்ன விமர்சனமா எழுதியிருக்கோம்? சும்மா லிஸ்ட்டு மட்டும் போட்டா போதும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாபட்டி.... said...
சோனியா..சோனியா..சொக்க வைக்கும் சாணியா..

இதுவும் எனக்கு பிடித்த பாடல்.. ஹி..ஹி//////

ஹி....ஹி....! அப்போ புடிச்ச ஹீரோயின் பழமொழிதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////பட்டாபட்டி.... said...
அதுவுமில்லாம, எனக்கு தமிழ் கொஞ்சம்..கொஞ்சம்தான் வரும்.. அதான்....ஹி..ஹி

December 23, 2010 4:03 PM//////

ஆமாமா.. எங்களுக்கு டெய்லி 15 கிலோ வருது......!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பட்டாபட்டி.... said...
ஏய்யா..செம்மொழி பாட்டு பிடிக்காதா?.. ஓ இந்த பதிவு சினிமா பாட்டை பற்றீயது..சே. மறந்துட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேன்...

December 23, 2010 4:04 PM//////

ஹி...ஹி... நல்லவேள தப்பிச்சேன், இல்லேனா தெய்வக்குத்தமாயிருக்கும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாபட்டி.... said...
யாருமேயில்லாத கடையில 50 ஆவது வடை எடுப்பதில் என்ன திறமை இருக்கிறது..

^டவுட்^....//////

அதானே ஆறுன வடைக்கு என்ன வேண்டியிருக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பட்டாபட்டி.... said...
யோவ்.. பிரபல பதிவனுகளும் , இதுல கலந்துக்கிட்டு இருக்கானுக.. இப்பதான் பார்த்து ஷாக் ஆயிட்டேன்...

அதாம்பா. அந்த பெண் பதிவர்களின் காதலன்.. சே... காவலன்...
அதனால நான் இந்த ஆட்டத்துக்கு வரலே.. ஹி..ஹி

நீயாச்சு.. அந்த காதலன் பீஸ் ஆச்சு.. நல்லா , கூடி நின்னு கும்மியடிங்க...///////

யோவ் அந்தப் பன்னாடைய எந்தப் பன்னாடைய கூப்பிட்டு இருக்கு, தொலையறானுங்க விடு, இந்தத் தொடர்பதிவே நீயெ முடிச்சி வச்சிடு........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மாணவன் said...
அனைத்துப்பாடல்களின் தேர்வும் அருமை அண்ணே,யார் பாடியது என்ற விளக்கங்களும் சூப்பர்...

நம்ம ராகதேவனின் பாடல்களை அதிகமாக தேர்வு செய்ததற்கு சிறப்பு நன்றிகள் பல......../////

பின்னே ராகதேவன் இல்லையேல், இந்தத்தொடர்பதிவே இல்லை.......!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மாணவன் said...
// பட்டாபட்டி.... said...
லிஸ்ட் எல்லாம் நல்லாதான் இருக்கு..
நான் பாட்டு கேட்பதோட சரி...

விமர்சனம் எழுத ..ஹி..ஹி எனக்கு வராது.. சாரி மிஸ்டர் பன்னிக்குட்டி.//

பட்டா சார் சார்பா நான் வேணா எழுதவா அண்ணே?

ஹிஹிஹிஹி///////

நீங்க எழுதலியா இதுவர? அப்போ இதையே வேண்டுகோளா ஏற்று எழுதுங்களேன். ஆனா பட்டா சார்பா இல்ல, (பட்டாவ எப்படியும் இத எழுத வெச்சிடாலாம்னு பார்க்குறேன், வேற ஒண்ணுமில்ல....ஹி..ஹி...)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
யாரப்பா அது மிட்நைட்ல பதிவு போடறது/////

அது எழுதி முடிக்க ரொம்ப நேரமாயிடுச்சு..... சரின்னு அப்படியே பப்ளிஷ் பண்ணிட்டேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
ஓ ராம்சமியா? நீங்க போடலாம்

December 23, 2010 5:00 PM/////

என்ன வெளையாட்டு இது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// சி.பி.செந்தில்குமார் said...
என்னது?கேப் விடாம கிடா வெட்டறீங்க?/////

என்னண்ணே சொல்றீங்க, நானே வாரத்துக்கு 2-3 பதிவுதான் போடுறேன்.....ஹி..ஹி....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி.பி.செந்தில்குமார் said...
திடீர்னு தொடர் பதிவா போட்டு அசத்தறீங்க/////

இந்தத் தொடர்பதிவுக்கு இதுவரைக்கு 4-5 பேரு கூப்புட்டுட்டாங்க, சரி அதான்னு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// சி.பி.செந்தில்குமார் said...
வழக்கம் போலவே தொடர் பதிவுக்கு என்னை அழைக்கமல் கேவலபடுத்தியதை வன்மையாகக்கண்டித்து ஓட்டு போட்டுட்டேன்

December 23, 2010 5:01 PM///////

ஹி...ஹி......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// சி.பி.செந்தில்குமார் said...
பட்டாபட்டி.... said...
யோவ்.. பிரபல பதிவனுகளும் , இதுல கலந்துக்கிட்டு இருக்கானுக.. இப்பதான் பார்த்து ஷாக் ஆயிட்டேன்...

அதாம்பா. அந்த பெண் பதிவர்களின் காதலன்.. சே... காவலன்...
அதனால நான் இந்த ஆட்டத்துக்கு வரலே.. ஹி..ஹி

நீயாச்சு.. அந்த காதலன் பீஸ் ஆச்சு.. நல்லா , கூடி நின்னு கும்மியடிங்க...

December 23, 2010 4:10 PM

யார் அந்த டோமரு?நான் நெட்ல அதிக நேரம் இருக்க முடியறது இல்ல அதனால எதுவும் எனக்கு தெரியறதில்ல/////

இதெல்லாம் வெளிய சொல்லமுடியாது சித்தப்பு......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
வழக்கமா நீங்க பதிவு போடற டைம் இது இல்லையே

December 23, 2010 5:03 PM//////

அது காலைல தூங்கவேண்டிய வேலை இருந்ததுனால் நைட்டே போட்டுட்டேன், அவ்வளவுதாங்கோ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
குற்றம் நடந்தது என்ன?////

நடக்கப்போவது என்னன்னு கேளுங்க......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
கடை ஓனரு மப்புல கவுந்தடிச்சு படுத்திருக்கும்போது நமக்கு என்ன வேலை இங்கே?//////

அதானே நீங்களும் ஒரு கட்டிங் போட்டுட்டு வந்துடுங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
பயங்கர ரசனக்காரரா இருப்பீங்க போலிருக்கே..

எல்லா பாடல்களும் அருமையான பாடல்கள்..

December 23, 2010 5:54 PM/////

நன்றி ஜெயந்த்..........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வெங்கட் said...
// பிடித்த பாடல்களை வெறும் பத்தில்
அடக்கிவிட முடியும் என்று தோன்றவில்லை.
மேலும் வெவ்வேறு காலகட்டங்களில் வந்த
பாடல்களை ஒன்றாக வகைப்படுத்துவதிலும்
எனக்குச் சம்மதமில்லை. //

அட.. இந்த புள்ளக்குள்ள
என்னமோ இருந்திருக்கு பாரேன்..!!////

அதானே....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை said...
நல்ல ரசனையான தொகுப்பு! நீங்க என்ன பண்றீங்க! இதை எல்லாம் சீடீயா போட்டு எங்க எல்லாருக்கும் அனுப்பிவிடுங்க!

December 23, 2010 6:21 PM/////

ஊர்ல இருந்தா கண்டிப்பா பண்ணுவேன் வைகை......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
அப்பறம் ஒரு சின்ன திருத்தம் மருதாணி பாட்டு பாடியது சாதனா சர்க்கம் இல்ல மதுஸ்ரீ!(ஒரு வேளை இதுவும் தப்பா?!!)/////

சந்தேகம்தான்......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சௌந்தர் said...
சமீப காலங்களில் அதிகமாக பாடல்கள் கேட்க முடியவில்லை, எனவேதான் அவை சற்றுக் குறைவாகவே உள்ளன.///

இது குறைவா......இப்போது எல்லாம் பாடலே கேட்பது இல்லையா/////

கேட்கறதுதான், ஆனா இந்தப் பதிவுக்கு பொருத்தமான பாடல்கள் அவ்வளவாக இல்லை!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எஸ்.கே said...
எல்லாமே ரொம்ப சூப்பரான பாட்டு! சில எனக்கு ரொம்ப பிடிச்சது! மனசுக்கு இதமா இருக்கும்!//////

நன்றி எஸ்.கே...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பிரியமுடன் ரமேஷ் said...
//////பிரியமுடன் ரமேஷ் said...
//
2. அடித் தோழி அடித்தோழியே…. கல்யாணி (தென்றல்)///

இந்தப் பாட்டைத் தவிர மத்த எல்லா பாட்டுமே செம கலெக்சன்... அருமையான தொகுப்புங்க.../////

நன்றி ரமேஷ், ஏன் அந்தப் பாடல் பிடிக்காதா? கல்யாணியின் குரலுக்காகவே நான் அந்தப்பாடலை விரும்பிக் கேட்பதுண்டு!//

அப்படிங்களா சூப்பருங்க.. சில பாடல்கள் நல்லாவே இருந்தாலும்.. முதல் முறை கேக்கும் போது எதாவது மூடு சரியில்லாம இருந்ததுன்னா... மறுபடியும் அந்தப் பாட்டை கேக்கும்போது.. அந்த மூடே வந்து இரிடேட் பன்னும் இல்லிங்களா.. அந்த மாதிரி எதோ தோணும் இந்த பாட்டு கேக்கும் போது.. அதனால பிடிக்காது..///////

நீங்கள் சொல்வதும் சரிதான் ரமேஷ்.. நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Arun Prasath said...
அடடா அண்ணனுக்கு என்ன ரசனை/////

அது சரி....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Arun Prasath said...
80 s 90 s ன்னு பிரிச்சு போட்டது சூப்பர் ஐடியா அண்ணே/////

நன்றி அருண், நான் பாடல் கேட்கும் பொதும் அப்படித்தான் கேப்பேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அருண் பிரசாத் said...
ராம்ஸ் உங்களுக்குள்ள இப்படிபட்ட ஒரு ரசிகன் ஒளிஞ்சி இருக்கானா?

செமயா ரசனையான பாட்டுகளை தந்து இருக்கீங்க//////

ஹி...ஹி.... நன்றி அருண்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எல் கே said...
அருமையான பாடல்கள் ராம் சார்.

December 23, 2010 10:49 PM/////

நன்றி எல் கே....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பாலராஜன்கீதா said...
சிற்சில பாடல்களைவிட மற்றவை எல்லாம் எங்களுக்கும் பிடிக்கும். நல்ல இரசனையான தொகுப்பு.

December 24, 2010 1:07 AM//////

நன்றி பாலராஜங்கீதா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இந்திரா said...
உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.
தவறாமல் எழுதவும்./////

இப்பத்தான் ஒருதொடர்பதிவ எழுதி முடிச்சிருக்கேன், அதுக்குள்ள இன்னொன்னா?

Madhavan Srinivasagopalan said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said... 113

//////இந்திரா said...
உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.
தவறாமல் எழுதவும்./////

இப்பத்தான் ஒருதொடர்பதிவ எழுதி முடிச்சிருக்கேன், அதுக்குள்ள இன்னொன்னா //

நானும் ஒங்கள தொடர் பதிவுக்கு கூப்பிடு இருக்கேன்..
எங்கேயா.. ?
அஆஇஈ@உஊஎஏ.காம்_நெட்_இன்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யோவ் அந்தப் பன்னாடைய எந்தப் பன்னாடைய கூப்பிட்டு இருக்கு, தொலையறானுங்க விடு, இந்தத் தொடர்பதிவே நீயெ முடிச்சி வச்சிடு........
//

”முடிச்சுவெச்சிடுவா?”..
ஹி..ஹி
நிசமாவா சொல்றே சார்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Madhavan Srinivasagopalan said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said... 113

//////இந்திரா said...
உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.
தவறாமல் எழுதவும்./////

இப்பத்தான் ஒருதொடர்பதிவ எழுதி முடிச்சிருக்கேன், அதுக்குள்ள இன்னொன்னா //

நானும் ஒங்கள தொடர் பதிவுக்கு கூப்பிடு இருக்கேன்..
எங்கேயா.. ?
அஆஇஈ@உஊஎஏ.காம்_நெட்_இன்//////

ங்கொக்கமக்கா இந்தத்தொடர்பதிவு பஞ்சாயத்த ஒருநா முடிவு கட்டுறேன்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாபட்டி.... said...
யோவ் அந்தப் பன்னாடைய எந்தப் பன்னாடைய கூப்பிட்டு இருக்கு, தொலையறானுங்க விடு, இந்தத் தொடர்பதிவே நீயெ முடிச்சி வச்சிடு........
//

”முடிச்சுவெச்சிடுவா?”..
ஹி..ஹி
நிசமாவா சொல்றே சார்?//////

ஆமாய்யா, நீ குடுக்குற குடுல, இனி ஒருபய தொடர்பதிவு, மண்ணாங்கட்டின்னு கெளம்பக்கூடாது...! (அதுக்குத்தானேய்யா உன்னக் கோர்த்து விட்டதே?)

மங்குனி அமைச்சர் said...

பன்னி உன்னோட செலக்சன் எல்லாம் ரொம்ப சூப்பர் பன்னி ............ நல்ல பாடல்கள்

மங்குனி அமைச்சர் said...

இருந்தாலும் இரு பிரபல பதிவர்கள் இதை இன்னும் சட்டை செய்யாமலே இருக்கின்றனர்.///

அப்படியா பண்றானுக ....தக்காளி யாருன்னு சொல்லு நம்ம "டெர்ரர் கும்மில" வச்சு கேடா வெட்டிருவோம்

மங்குனி அமைச்சர் said...

1. பட்டாபட்டி
2. மங்குனி அமைச்சர்////

வானிலை மேகமூட்டத்துடன் காணப்படுவதால் , மங்குனி தலைமறைவாகிவிட்டார்

மங்குனி அமைச்சர் said...

யாராவது இருக்கிகளா .,...... தனியா கிடக்க பயமா இருக்கு .........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மங்குனி அமைச்சர் said...
பன்னி உன்னோட செலக்சன் எல்லாம் ரொம்ப சூப்பர் பன்னி ............ நல்ல பாடல்கள்

December 24, 2010 9:30 PM//////

நன்றி அமைச்சரே, தாமதத்திற்கு காரணம் என்னவொ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மங்குனி அமைச்சர் said...
இருந்தாலும் இரு பிரபல பதிவர்கள் இதை இன்னும் சட்டை செய்யாமலே இருக்கின்றனர்.///

அப்படியா பண்றானுக ....தக்காளி யாருன்னு சொல்லு நம்ம "டெர்ரர் கும்மில" வச்சு கேடா வெட்டிருவோம்/////

அப்பொ அடுத்த வெள்ளிக்கெழம் ஃப்ரியா அமைச்சரே, முறை செஞ்சுடுவோம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மங்குனி அமைச்சர் said...
1. பட்டாபட்டி
2. மங்குனி அமைச்சர்////

வானிலை மேகமூட்டத்துடன் காணப்படுவதால் , மங்குனி தலைமறைவாகிவிட்டார்/////

எங்க போனாலும் புகைப் போடடு புடிச்சிடுவோம் அமைச்சரே.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மங்குனி அமைச்சர் said...
யாராவது இருக்கிகளா .,...... தனியா கிடக்க பயமா இருக்கு .........

December 24, 2010 9:36 PM/////

லேட்டா வந்துட்டு இப்ப பேச்சப் பாரு?

Unknown said...

நல்ல தொகுப்புங்க..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பதிவுலகில் பாபு said...
நல்ல தொகுப்புங்க../////

நன்றி பாபு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ம் .../////

:)

R.Gopi said...

தல....

என்னா ரசனையா உனக்குள்ள...

எல்லாமே படு சூப்பரப்பு....

வானம் said...

பன்னிகுட்டி அண்ணே, தேர்வு செஞ்ச பாடல்கள் எல்லாம் சிறப்பா இருக்குது.ஆனா 2000க்கு பின்னதான பாடல்கள் எதுவுமே பிடிக்கல.
அப்படியே அந்த பாடல்கள பதிவிறக்கம் பண்ண தேவையான வலைத்தள முகவரிய கொடுத்தீங்கன்னா நல்லாருக்கும்.

Unknown said...

ஆசைய காத்துல ...............பாடலை எஸ்.பி சைலஜா வின் அசத்தலான குரலில் இனிமை.
இந்த பாடலை பல பாடகிகள் மேடையில் பாடியிருக்கிறார்கள். ஆனால் சைலஜா பாடுவது போல் இனிமை இல்லை . என்றாலும் எஸ்.பி சைலஜா வின் அந்த ஏக்கம் நிறைந்த குரலில் எவ்வளவோ இனிமை. இந்த பாடலுக்கு இளையராஜாவும் மிகப் பொருத்தமாக எஸ்.பி சைலஜா வை தெரிவு செய்தது பாராட்ட வேண்டிய ஒன்று .