பட்டா போய்விட்டார்....
நக்கல் நையாண்டிகள் முடிந்தது.
பின்னூட்ட போர்கள் ஓய்ந்தன.
இதுவரை முகம் தெரியாமலே இருந்துவிட்டு,
நீ இறந்துவிட்ட பின்பு பார்த்த உன் முகம்
இனி வதைத்துக் கொண்டே இருக்க போகிறது
அதையும் பார்க்காமலேயே இருந்திருக்கலாம்.....
என்றாவது ஒருநாள் பழையபடி பதிவுகளில்
ஒன்றாக களம் இறங்கி கலக்குவோம் என்று
காத்திருந்தது கானல் நீராகிவிட்டது...
அத்தனை ஆக்ரோஷமாக அரசியல் பதிவுகள்
எழுதினாலும், எத்தனை எத்தனை நட்புகளை
சம்பாதித்து வைத்திருக்கிறாய்?
எத்தனை பதிவுகள், எத்தனை அஞ்சலிகள்....
உனக்காக சிந்தும் கண்ணீரின் துளியோரம்
கொஞ்சம் பெருமிதமும் எட்டிப் பார்க்கிறது....
உன்னோடு இன்னும் கொஞ்சம் நன்றாக பேசி பழகி
இருக்கலாமோ என்று காலம் கடந்த
ஞானம் வருகிறது இன்று....
இருந்தாலும்...
உன் முகத்தை பார்க்காமலேயே
இருந்திருக்கலாம் கடைசிவரை....
Wednesday, May 15, 2013
Monday, May 13, 2013
நண்பனே...
இரண்டு மாதங்களாக ப்ளாக்கில் எதுவும் எழுதவில்லை. ஏதாவது எழுதலாம் என்று அவ்வப்போது எண்ணம் வந்து போனாலும் உக்காந்து எழுத முடியாத அளவுக்கு நேரப்பற்றாக்குறையாக இருந்து வருகையில், இன்று இப்படி ஒரு விஷயத்திற்காக எழுத நேர்ந்திருக்கிருக்கிறது என்பதை மிகுந்த வருத்ததுடன் எண்ணிப்பார்க்கிறேன்.
கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு முன்னால் ஏதேச்சையாக எதையோ கூகிளில் தேடிய போது வந்து மாட்டியது வெளியூர்க்காரன் ப்ளாக். அங்கே பின்னூட்டம் இடும் போதுதான் அவர் பழக்கமானார். பழக்கம் என்பதைவிட அறிமுகம் என்று சொல்லலாம். யார் இவர் என்று அவருடைய ப்ளாக்கிற்கு சென்று பார்த்துவிட்டு ஆடிப்போனேன். அசாத்திய துணிச்சல், நகைச்சுவை, நக்கல், சமூக பொறுப்பும் கலந்துகட்டி விளையாடிக் கொண்டிருந்தார்.மிக எளிமையான வார்த்தைகளில் எழுதுவார். இன்று வரை அவர் எழுதுவது போல் எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. ஆனால் அதன் அருகில் கூட செல்ல முடியவில்லை. ப்ளாக்கில் கும்மியடிப்பது என்றால் என்னவென்று தெரிந்து கொண்டது அங்கேதான். அந்த உந்துதலில் தான் இந்த ப்ளாக்கை ஆரம்பிக்கும் எண்ணமே ஏற்பட்டது. எங்கள் டெரர்கும்மி நண்பர் குழுவே அவரது ப்ளாக்கில் பின்னூட்டம் இடுபவர்களுக்குள் ஏற்பட்ட நட்பில் உண்டானதுதான்.
அவரை பிடித்துப் போனவர்களே எனது நண்பர்கள் வட்டமாக அமைந்தது தற்செயலானது அல்ல என்றே இப்போது தோன்றுகிறது. அவருடன் வழமையாக சாட்டோ, போன் காலோ செய்ததில்லை. இருப்பினும் நல்ல புரிதல் இருந்தது. சமீபகாலமாக அவரும் மிக பிசியாக இருந்ததால் முன்பு போல் அவருடன் தொடர்பில் இருக்க முடியவில்லை. இன்று காலை திடீரென வந்த இந்த செய்தி வெறும் வதந்தியாக இருக்கும் என்றே நினைத்தேன். செய்தி உறுதிப்படுத்தப்பட்ட போதும் நம்ப முடியாமல் அது வதந்தியாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கவே விரும்புகிறது மனது. அவருடைய குடும்பத்தினரும் நண்பர்களும் விரைவிலேயே மீண்டு வர வேண்டும். அதைத்தான் அவரும் விரும்புவார்.
எங்கள் அருமை நண்பர் பட்டாபட்டி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி
Monday, March 4, 2013
அப்ரைசலும் அடங்காத டேமேஜர்களும்........
நம்ம டெரர்பாண்டியன் ஆபீஸ்ல அப்ரைசல் டைம், அந்த வருசம் ரொம்ப நல்லா பர்ஃபார்ம் பண்ணி இருந்ததால, ரொம்ப எதிர்பார்ப்போட பாஸ்கிட்ட அது விஷயமா பேச போறாரு........
பாஸ்: இந்த வருசம் ரொம்ப நல்லா பர்ஃபார்ம் பண்ணி இருக்கீங்க, அதுனால உங்களுக்கு ரொம்ப முயற்சி பண்ணி ஆவரேஜ் ரேட்டிங் கொடுத்திருக்கோம்...
டெரர்: என்னது.......... ஆவரேஜா..............!!!!!!.... சார், அதான் நல்லா ஒர்க் பண்ணியிருக்கேனே, அப்புறம் எப்படி சார் ஆவரேஜ்?
பாஸ்: ம்ம்.... நீங்க... உங்களுக்கு பிசினஸ் ஸ்கில் குறைவு அதான்..
டெரர்: பட் போன வருசம் நீங்கதானே நான் பிசினஸ் எக்ஸ்பர்ட்னு சொல்லி என்னை இந்த குரூப்புக்கு பிசினஸ் ஸ்பெசலிஸ்ட் ஆக்குனீங்க.......?
பாஸ்: ஓ... ஆமால்ல...... ஆங்... உங்களுக்கு ஃபங்சனல் நாலெட்ஜ் இல்லேன்னு சொல்ல வந்தேன்....
டெரர்: என்னது?
பாஸ்: அதான்..... அதாவது நீங்க டெக்னிகல் நாலெஜை டீம் மெம்பர்ஸ் கூட ஷேர் பண்ணிக்க மாட்டேன்றீங்க.....
டெரர்: டெக்னிகல் நாலெஜ்ஜா? சார் மொதல்ல நான் டெக்னிகல் பர்சனே கிடையாது, நான் மேனேஜ்மெண்ட் ஆளு...... டெக்னிகல் மேட்டரை நான் எப்படி ஷேர் பண்ண முடியும்?
பாஸ்: இதான் இதுதான் உங்ககிட்ட எனக்கு பிடிக்கல, என்ன சொன்னாலும் பதில் பேசுறீங்க, காரணம் சொல்றீங்க.....
டெரர்: ???!!!
பாஸ்: ஓக்கே அடுத்து நீங்க உங்க கம்யூனிகேசன் ஸ்கில்லை நிறையவே இம்ப்ரூவ் பண்ணிக்கனும்......
டெரர்: சார் போனவருசம் கம்யூனிக்கேசன் ஸ்கில்ல நம்ம டீமையே நாந்தான் ட்ரைன் பண்ணேன்.... அப்போ நீங்க கூட உக்காந்து டவுட் கேட்டுட்டு இருந்தீங்க....
பாஸ்: ஓ....ம்ம்ம்......... அது நான் என்ன சொல்ல வர்ரேன்னா உங்க சோசியல் அஃபர்மேட்டிவ் ப்ராக்மாட்டிக் கம்யூனிக்கேசன் ஸ்கில்சை டெவலப் பண்ணனும்....
டெரர்: ???!!!*** என்ன அது..........?
பாஸ்: தெரியல பாத்தீங்களா, அதுக்குத்தான் உங்களை அதை பத்தி தெரிஞ்சுக்க சொல்லலாம்னு சொன்னா நீங்க சொல்லவே விடாமே எதிர்கேள்வி கேட்கிறீங்க.....!
டெரர்: ..........(<>)(<>)............
பாஸ்: அப்புறம் உங்க ரெக்ரூட்மெண்ட் ஸ்கில்சையும் நீங்க இம்ப்ரூவ் பண்ணிக்கனும்... நீங்க ரெக்ரூட் பண்ண ஆளுக எல்லாரும் ஒரே மாசத்துல ஓடிட்டானுங்க.....
டெரர்: சார்.... அது நீங்க அவனுங்க சீட்பக்கத்துலயே உக்காந்து எல்லா ஒர்க்கையும் டெய்லி செக் பண்ணுவேன்னு சொன்னதால வந்தது. அதுல 2-3 பேரு சூசைட் அட்டம்ப்ட் வேற பண்ணதா கேள்வி......
பாஸ்: ஓ.....அது.... வந்து......... எப்படியோ எல்லாத்துக்கு மேலேயும் உங்களுக்கு பெட்டர் ரேட்டிங் கொடுக்க ரொம்ப முயற்சி பண்ணியிருக்கேன், பட் நம்ம ரேட்டிங் சிஸ்டம் ஆவரேஜ்தான் கொடுத்திருக்கு......
டெரர்: அது எப்படி சார், போன வருசத்தவிட இந்த வருசம் நல்லாவே பர்ஃபார்ம் பண்ணியிருக்கேன், போன வருசம் எக்சலண்ட் ரேட்டிங்கும், இந்த வருசம் ஆவரேஜ் ரேட்டிங்கும் வந்திருக்கு? அப்படி என்ன ரேட்டிங் சிஸ்டம் சார் அது?
பாஸ்: அது ரொம்ப காம்ப்ளிகேட்டட் ப்ராசஸ்....... உங்களுக்கு புரியாது, நீங்க கேட்கவும் விரும்ப மாட்டீங்க....
டெரர்: பரவால்ல சொல்லுங்க சார், நான் கேட்கிறேன்...
பாஸ்: அது...... அதாவது மேனேஜர்கள்லாம் ஏதாவது மீட்டிங் ரூம்ல உக்காந்து அவங்கவங்க குரூப் ஆளுக பேரை பேப்பர்ல எழுதி தூக்கி மேல போடுவோம்...... எது தரைல விழுகுதோ அவங்க ஆவரேஜ், டேபிள்ல விழுந்தா குட், எங்களால கேட்ச் பண்ண முடிஞ்சது எல்லாம் எக்சலண்ட், ஏதாவது மேல சீலிங்லயே ஒட்டிக்கிட்டா அவுட்ஸ்டேண்டிங் இப்படி ரேட்டிங் கொடுப்போம்....
டெரர்: அப்போ பூவர் ரேட்டிங் யாருக்கு கொடுப்பீங்க?
பாஸ்: அது நாங்க எழுத மறந்த ஆளுகளுக்கு.......!
டெரர்: (அட அயோக்கியப்பயலுகளா........!) இது என்ன சார் முட்டாள்தனமான சிஸ்டமா இருக்கு?
பாஸ்: என்னதிது, நம்ம கம்பெனியோட 25 வருச அப்ரைசல் சிஸ்டத்த கேள்வி கேக்கிறீங்க, இதெல்லாம் ரொம்ப தப்பு..... போய் உங்க வேலைய பாருங்க............
டெரர் மயங்கி விழுகிறார்.............
பாஸ்: (என்ன இதுக்கே மயங்கிட்டான்...... அடுத்த வருசம் இவனையும் மேனேஜர் ஆக்கி விட்ரவேண்டியதுதான், இவன் தான் இதுக்கு சரியான ஆளு.............)
(ஈமெயில்ல வந்ததுதான், முடிஞ்சளவு தமிழ்ப்படுத்தி இருக்கேன்.....)
நன்றி: கூகிள் இமேஜஸ்....
Monday, February 4, 2013
கடல்: ஒரு பின்நவீனத்துவ இலக்கிய விமர்சனம்...
இது ஒரு பழிவாங்கும் நாடகம். பழிவாங்கும் ஏங்கி இந்த ஆண்டு அர்ஜூன் நரம்புகள் வழியாக பந்தயம் இருந்த ஆனால், அவர் சுவாமி தனது வாய்ப்பு மோதல் வரை அது பற்றி எதுவும் இல்லை. ஹீரோ வந்த வளர்ப்பு தனது அரவிந்த் சுவாமி சவால் தொடர்ந்து அது இருக்கிறது.
அவர் சாத்தானின் பாதையில் பிந்தைய வார்டு கூட, ஹீரோ அவுட் பதிலாக தனது புதிய வழிகாட்டியாக பக்கமாக மற்றும் பிந்தைய மூலம் என்ற தனது ஆடம்பரமான பிடித்து யார் கீழ் வளர்க்கப்பட்ட பெண் தெரியவில்லை உள்ளன அல்லது அவர் நினைவு அல்லது அவர் கையில் என்ன.
படம் எளிதில் மோதல் ஒருவர் ஒரு பழிவாங்கும் நாடகம் ஒரு காதல் கதை இருந்து அனைத்து இருந்தது, ஆனால் அதை திருப்பி, அது இல்லை.
மணிரத்னம் இயக்கிய கடல், இதுவரை சதி பகுதியாக இருந்து, தான் பின்னணியில் உள்ளது. அதன் பல்வேறு மனநிலை மற்றும் வண்ணங்கள் கொண்ட கடல் அழகாக உள்ளன, ஆனால் அது சேர்த்து ஸ்கிரிப்டை செல்ல எதுவும் இல்லை. எனவே இறுதி மோதல் போது அதை ராஜினாமா, பதிலாக ஒரு பாத்திரம் மாறும் போது, அது ஒரு பெயர்ப்பரப்பு நகல்கள் உள்ளது.
நடிப்பு, செயல் வீரர்கள் அர்ஜுன், அர்விந்த் சுவாமி நீங்கள் எதிர்பார்ப்பது போல் நன்றாக வேலை. ஆனால் அவர்கள் ஒரு ஆதரவு பங்கை படத்தின் இறுதியில் இரண்டு புதுமுகமாக தோள்களில் உள்ளது.
அவர்கள், கவுதம் ஒரு இயற்கை மற்றும் உணர்சிகளை வெளிப்படுத்துகிறார். தெளிவாக, இந்த குழந்தை மிகவும் துளசி இன்னும் ஒரு குழந்தை மற்றும் அவர் ஒரு அப்பாவி வெளிப்பாடு படம் மூலம் போக வேண்டும், அதே நேரத்தில், ஸ்கிரிப்ட் அவர் இறுதியில் வாழ்க்கையில் வர வேண்டும் போது அவள் நன்றாக செய்ய நிர்வகிக்கிறது.
மணிரத்னம் போன்ற, அவர் மிகவும் மாஸ்டர் கைவினைஞர்களின் குழு ஒன்று மற்றும் அனைத்து வெற்றிகொள்ளவல்ல காதல் கவர்ச்சிகரமான கதைகள் சுற்ற வேண்டும்.
Labels:
தமிழ் சினிமா,
நகைச்சுவை,
புனைவு,
மரண மொக்கை
Wednesday, January 9, 2013
பவர்ஸ்டார் படத்தின் கதை வெளியானது?
பார் புகழும் பவர்ஸ்டார் நடித்து ரிலீஸ் ஆக தயாராக இருக்கும் படம் ”கண்ணா லட்டு தின்னா ஆசையா?” இந்தப் படத்தில் பவர்ஸ்டார் காமெடி ஹீரோ வேடத்தில் கலக்கி வருகிறார். படப்பிடிப்பு பற்றிய செய்திகள், படங்கள் அவ்வப்போது வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருப்பதும், நகைச்சுவைக்காக உலகளவில் பேசப்படும் படங்களில் ஒன்றாக இது அமையும் என்ற பலத்த எதிர்பார்ப்பும் நிலவி வருவது அனைவரும் அறிந்ததே.
இப்படத்தின் கதையை யாரும் அறிந்துவிடாதவாறு படுரகசியமாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், படத்தின் கதை வெளியானது படக்குழுவுனரை மட்டுமல்லாது பவர்ஸ்டார் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கதையை யார் வெளியிட்டது என்பதை உயர்மட்டக் குழு ஒன்று விசாரிக்க வேண்டும் என்று பவர்ஸ்டார் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நம் பவர்ஸ்டார் படத்தின் கதை ’இன்று போய் நாளை வா’ என்ற படத்தில் 1981-ம் ஆண்டு வெளியாகி இருப்பதாக சினிமா செய்திகள் தெரிவிக்கின்றன. பவர்ஸ்டார் நடிக்கும் க.ல.தி. ஆ வை எடுத்துக் கொண்டிருக்கும் போதே, அதன் கதையை திருடி இன்னொரு படத்தை எடுத்ததும் இல்லாமல் அதனை 1981-லேயே ரிலீசும் செய்திருப்பது கோடம்பாக்கத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் தொடர்வது தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியம் அல்ல என்று சினிமா வல்லுனர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தப் பரபரப்பினால் க.ல.தி.ஆ. படத்திற்கான எதிர்பார்ப்பு படுபயங்கரமாக அதிகரித்துள்ள நிலையில் கமல் துணிச்சலாக விஸ்வரூபம் படத்தை பவர்ஸ்டார் படத்துடன் ரிலீஸ் செய்ய நினைத்து தற்போது பின்வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: கூகிள் இமேஜஸ்...!
Labels:
அனுபவம்,
சினிமா,
நகைச்சுவை,
மரண மொக்கை
Monday, January 7, 2013
கடல் படத்தின் கதை....?
மணியண்ணன் கடல் படத்த வழக்கம் போல படுசீக்ரட்டா (?) எடுத்திட்டிருக்காராம். அதுக்காக சும்மா விட்ர முடியுங்களா.....? உக்காந்து தோண்டி துருவி கதைய கிண்டி எடுத்துட்டோம்ல.......
கதைப்படி ஹீரோ ஒரு மீனவர். பார்ட் டைம் ரவுடியாவும் இருக்கார். ஓப்பனிங் சீன்... விடிஞ்சும் விடியாமயும் இருட்டா இருக்கு, கடல்ல ஹீரோ கட்டுமரத்துல அன்னிக்கு கெடச்ச மீனை வெச்சிட்டு வந்துட்டு இருக்கார். அங்கங்க சக மீனவர்களும் வந்துட்டு இருக்காங்க. ஹீரோவுடைய நண்பனும் அருகில் தன் கட்டுமரத்தில வந்துட்டு இருக்கான். அப்போ அவனை ரெண்டு பேர் தாக்குறாங்க. ஹீரோ உதவிக்கு போறார். ஹீரோ ஏற்கனவே ரவுடின்றதால (?) எல்லாரையும் அடிச்சி துவம்சம் பண்றார். கடல் தண்ணிலயே ஃபைட்டு தண்ணி சிதற சிதற நடக்குது. ஒருவழியா நண்பனை காப்பாத்தி கரைக்கு கூட்டிட்டு வர்ரார். கரைல மெயின் வில்லன்...... நேரா நின்னுட்டு இருக்கான். ஹீரோவ பாத்து கேட்கிறான்.
வில்லன்: வந்துடு.. என்கூட வந்துடு
ஹீரோ: ஏன்?
வில்லன்: உனக்கு தெரியல..
ஹீரோ: அதான் ஏன்?
வில்லன்: எனக்கும் தெரியல....
ஹீரோ: வரலேன்னா....?
வில்லன்: அடிப்பேன்....
ஹீரோ: யாரை.....?
வில்லன்: அவனை...
ஹீரோ பதில் சொல்லாமல் திரும்பி போறார். ஒருநாள் கடற்கரையில் சண்டை நடக்கிறது. ஹீரோ யாரையோ போட்டு அடித்துக் கொண்டிருக்கிறார். ஹீரோயின் குடைபிடித்தபடி அந்த வழியாக வந்தவர் சண்டையை பார்த்து திகைத்துப் போய் நிற்கிறார். சண்டையின் நடுவே ஹீரோ, ஹீரோயினை பார்க்கிறார். கண்ணும் கண்ணும் நோக்குகின்றன. நோக்கு வர்மம் வேலை செய்கிறது. சண்டை நிற்கிறது. ஹீரோ திகைத்துப் போய் நின்று கொண்டிருக்கும் போதே ஹீரோயின் தலையை குனிந்தபடி சென்று விடுகிறார். ஹீரோவும் பின்னாடியே சென்று ஹீரோயின் அந்த ஊரில் உள்ள ஸ்கூலில் வந்திருக்கும் புது டீச்சர் என்பதை கண்டுபிடிக்கிறார்.
மாலை நேரம், இருட்டியும் இருட்டாமலும் இருக்கிறது. டீச்சரை பார்த்ததில் இருந்து அவர் ஞாபகமாவே இருக்கும் ஹீரோ எப்படியாவது டீச்சரை பார்த்துவிட வேண்டும் என்று இருட்டு சந்தில் இருக்கும் டீச்சர் வீட்டுப் பக்கமாக செல்கிறார். வீட்டுக்குள் இருந்து குடைபிடித்தபடி டீச்சர் வெளியே வருகிறார். வெளியில் நின்று கொண்டிருக்கும் ஹீரோவைப் பார்த்த டீச்சர் ஹீரோவை அருகில் அழைக்கிறார்.
டீச்சர்: எனக்கு வேணும்...
ஹீரோ: என்ன வேணும்..?
டீச்சர்: மீன்...
ஹீரோ: என்ன மீன்?
டீச்சர்: வஞ்சிரம்...
ஹீரோ: எடுத்துக்கோ... எல்லாம் உனக்குத்தான் எடுத்துக்கோ.....
டீச்சர்: எதை?
ஹீரோ: நான் புடிக்கிற மீன் எல்லாமே உனக்குத்தான்.... அது ஏன் உனக்கு புரியமாட்டேங்குது?
டீச்சர் கண்கலங்கி நிற்க பாடல் ஆரம்பமாகிறது. பாடல் முடிந்ததும் பார்த்தால் கடற்கரை மணலில் மறுபடியும் சண்டை. உக்கிரமாக நடக்கிறது. ஹீரோ சுற்றிச் சுற்றி எல்லோரையும் போட்டு அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறார். ஹீரோயின் குடைபிடித்தபடி கடற்கரை மணலில் அலைகள் ஓரத்தில் நடந்து வந்து கொண்டிருக்கிறார். அலைகள் வந்து வந்து போய்க் கொண்டிருக்கிறன. சண்டையை பார்க்கிறார். மௌனமாக நிற்கிறார். க்ளோசப் ஷாட். டீச்சர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடுகிறது. உதடுகள் விம்முகின்றன. ஹீரோ இதைக் கவனித்து விட்டு மறுபடியும் ஃப்ரீஸ் ஆகி நிற்கிறார். டீச்சர் அருகில் வருகிறார்.
டீச்சர்: நிறுத்தனும்... எல்லாத்தையும் நிறுத்தனும்....
ஹீரோ: மொதல்ல அவங்கள நிறுத்த சொல்லுங்க....
டீச்சர்: நீங்கதான் மொதல்ல நிறுத்தனும்....
ஹீரோ: ஏன்?
டீச்சர்: ஏன்னா நீங்கதான் அடிக்கிறீங்க, அவங்க அடிவாங்குறாங்க....
ஹீரோ: முடியாது....
டீச்சர்: ஏன்?
ஹீரோ: எனக்கு என்னோட பங்கு வேணும்...
டீச்சர்: எதுல...?
ஹீரோ: அவங்க பண்ண சுண்டக்கஞ்சில....
டீச்சர்: அது வேணாம்....
ஹீரோ: ஏன்?
டீச்சர்: நான் காய்ச்சி தாரேன்.....
இதைக் கேட்டு ஹீரோ சிரிக்கிறார். ஹீரோயினும் சிரிக்கிறார். மாறி மாறி சிரிக்கிறார்கள். மறுபடியும் பாடல் தொடங்குகிறது........ பாடல் முடிந்த உடன் பார்த்தால் ஹீரோவும் ஹீரோயினும் அதே இடத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். பின்னால் ஏற்கனவே அடிவாங்கி ஓடியவன் கத்தியோடு ஓடி வந்து ஹீரோவை குத்தி விடுகிறான். ஹீரோ மயங்கிச் சரிகிறார். டீச்சரின் கதறலோடு ஷாட் முடிகிறது.
ஹீரோயின் வீடு. டீச்சருக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். மாப்பிள்ளை வீட்டார் வந்து அமர்ந்து காப்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். டீச்சர் உள்ளே அறையில் சோகம் அப்பிய முகத்துடன் மௌனமாக நின்று கொண்டிருக்கிறார். அப்போது திடீரென சர்ச்சில் இருந்து மணி அடிக்கும் சத்தம் வருகிறது. டீச்சர் அதிர்ந்து போய் நிற்கிறார்...... டீச்சரின் குடும்பத்தினரும் திகைத்துப் போய் ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர்.
நன்றி: கூகிள் இமேஜஸ்
Labels:
தமிழ் சினிமா,
நகைச்சுவை,
மரண மொக்கை,
மொக்கை
Saturday, January 5, 2013
தமிழ்சினிமாவின் டாப் நடிகர்கள்-2012
2012-ம் ஆண்டுக்கான பலவிதமான தரவரிசைகளில் முக்கியமானது சினிமா நடிகர்களின் வரிசை. அந்த வகையில் தமிழ்சினிமாவின் டாப் நடிகர் யார் என்று என்னுடைய பார்வையில் (?) இப்போது பார்க்க போகிறோம். முதலில் பரிசீலனையில் இருப்பவர்களைப் பற்றி பார்த்துவிடுவோம்.
முகமூடி நடிகர்
இவர் முகமூடி என்ற படத்தில் நடித்திருந்தார். படத்தின் தலைப்பைப் போலவே படத்திலும் இவர் முகமூடி போட்டிருந்ததால் ஆள் யார் என்றே தெரியவில்லை. இருப்பினும் அருமையான நடிப்பை வாரி வழங்கி இருப்பதால் இவரைப் பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டியிருக்கிறது. முகத்தை மூடி இருந்தாலும் சிக்ஸ் பேக் போன்ற கட்டுடல், கைகளோடு படத்தில் காட்டி இருப்பது பிரம்மாண்டம். சண்டைக்காட்சிகள் ரசனையின் உட்சகட்டம்.
மாற்றான் சூர்யா
2011-ல் 7-ம் அறிவு என்ற மெய்சிலிர்க்க வைக்கும் விஞ்சாணக் காவியத்தை கொடுத்த சூர்யா, மீண்டும் அதே போல் மாற்றான் என்ற அற்புதத்தை வழங்கி அனைவரையும் புல்லரிக்க செய்தார். ஒட்டிக் கொண்டு பிறந்த இரட்டையர்கள் வேடத்தில் ஜாலியாக தோளில் கையை போட்டுக் கொண்டே (?) நடித்து, காதல் செய்து, நடனம் ஆடி.. கண் கலங்க வைத்தார். படத்தில் ஒரே ஒரு ஹீரோயின் மட்டுமே இருந்தது ஒரு பெரிய குறை. இரண்டு ஹீரோயின்கள் இருந்திருந்தால் ஒரே நேரத்தில் விமலன், அகிலன் இருவரும் காதல் செய்து உலக சாதனை படைத்திருப்பார்கள் என்பது நிபுணர்களின் கருத்து.
தாண்டவம் விக்ரம்
தொடர்ந்து டுமாங்கோலி படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கொள்கை முடிவெடுத்து அதன்படி நடித்து வரும் நடிகர் விக்ரம், இந்த வருடமும் நம்மை ஏமாற்றவில்லை. தாண்டவம் என்ற உலகப்படத்தில் வயதான வேடத்தில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்து எல்லோரையும் பரவசப்படுத்தினார். அவருடைய பழைய படங்களான சாமி, தூள் போன்ற படங்களை பார்த்தவர்கள் அனைவரும் தாண்டவம் பார்த்து சிலிர்த்திருப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம். விக்ரமின் டுமாங்கோலி சாதனையில் இது இன்னும் ஒரு மைல்கல்.
முரட்டுக்காளை சுந்தர் சீ
டாகுடர் கேப்டன் அவர்கள் தீவிர அரசியலில் குதித்தவுடன் ஏற்பட்ட மிகப்பெரிய வெற்றிடத்தை யார் நிரப்புவார்களோ என்று கவலைப்பட்ட தமிழ் சினிமா ஆர்வலர்களின் காயத்திற்கு அருமருந்தாக வந்து அமர்ந்தவர் நமது சுந்தர் சீ. கேப்டனின் இடத்தை மட்டுமல்ல, சூப்பர் ஸ்டாரின் இடைத்தையும் என்னால் நிரப்ப முடியும் என்று உலகுக்கே எடுத்துக்காட்டும் விதமாக முரட்டுக்காளை என்ற காவியத்தில் நடித்து தன்னை மெருகேற்றிக் கொண்டார். அவரது வசனங்கள், உச்சரிப்பு, சண்டைக்காட்சிகள் அனைத்துமே வருங்கால தமிழ்சினிமாவை அவரது தோளில் குண்டுக்கட்டாக அப்படியே தூக்கிவைத்துவிடக் கூடிய தீவிரத்துடன் இருக்கின்றன. வெல்டன் சுந்தர் சீ.
மேதை ராமராஜன்
2012-ன் தொடக்கத்தில் வெளியான மேதை படம் ராமராஜனுக்கு பெரும்புகழ் தேடித்தந்தது. பதிவர்கள், ட்வீட்டர்கள், ஃபேஸ்புக்காளர்கள் அனைவரும் மேதை படத்தை சந்தோசத்துடன் ஆரவாரமாக வரவேற்றனர். ஒரே குத்தில் 10 பேரை ராமராஜன் வீழ்த்திய மயிர்க்கூச்செரியும் காட்சி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இது இளம் நடிகர்களான சாம் ஆண்டர்சன், பவர்ஸ்டார், சொம்பு ஆகியோர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் மேதையில் நடித்து மாமேதையான ராமராஜன் 2012-ன் முக்கிய நடிகர்கள் வரிசையில் தனக்கென ஒரு தனி இடத்தைத் தக்க வைத்துள்ளார்.
இத்தனை நடிகர்கள் முதலிடத்திற்கு போட்டா போட்டி (?) போட்டாலும், மிக எளிதாகவும் சுலபமாகவும் அதை தட்டிச் செல்பவர், 2012-ல் எந்தப் படத்திலும் நடிக்காமலே வருடம் முழுதும் அவரைப் பற்றியே அனைவரையும் பேச வைத்த பெருமை மிக்க நடிகரான.....
.
.
.
.
.
.
.
பவர்ஸ்டாரே.......!
பவர்ஸ்டாரின் எழில்மிகு தோற்றம்....!
வாட் எ பர்ஃபாமன்ஸ்... வாட் எ பர்ஃபாமன்ஸ்......!
நன்றி: கூகிள் இமேஜஸ்
Subscribe to:
Posts (Atom)





















