Sunday, December 26, 2010

வலித்த இயற்கை........




ஆழிப்பேரலை வந்து
ஆறு வருடங்கள் இன்றோடு....!
உறவுகளை இழந்து தவிக்கும்
உறவுகளின் வலிக்கு,
ஆறா ரணத்தையும்
ஆற்றிடும் காலமே ஆறுதல்....!
ஆனால் நம் பூமிக்கு...?
இன்றாவது முடிவு
செய்வோம்....!
இயற்கையை அழிப்பதை
நிறுத்தி,
இயற்கை அழிப்பதை
நிறுத்துவோம்...!



36 comments:

Anonymous said...

/// இயற்கையை அழிப்பதைநிறுத்தி,இயற்கை அழிப்பதைநிறுத்துவோம்...!///

இத தான்யா நானும் சொல்றேன் ..,

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தில்லு முல்லு said...
/// இயற்கையை அழிப்பதைநிறுத்தி,இயற்கை அழிப்பதைநிறுத்துவோம்...!///

இத தான்யா நானும் சொல்றேன் ..,////

அப்படின்னா சரிதான்!

Anonymous said...

/////// ஆழிப்பேரலை /////

இயற்கையின் வலிமையை ஆழிபேரலையின் மூலம் தெரிந்து கொண்டேன் ...,

சௌந்தர் said...

இது யாரோ எழுதி கொடுத்த கவிதை மாறி இருக்கு

எஸ்.கே said...

சுயலாபத்திற்காக எதிர்காலத்தை எண்ணாமல் இயற்கையை அழித்தால் அதன் கோபம் நம்மை தாக்கும்!

சௌந்தர் said...

இயற்கை அழிப்பதை
நிறுத்துவோம்...!///

இப்படி பதிவு போடுவதை நிறுத்தினால் இயற்கை நன்றாக இருக்கும்..!

தினேஷ்குமார் said...

கவுண்டரே சாப்பிட போறேன் வந்து பார்க்கிறேன் நம்ம கட பக்கம் கொஞ்சம் வந்து போங்க இதோ வர்றேன் பசிக்குது பாஸ்

தினேஷ்குமார் said...

இயற்க்கை அழிப்பதை நிறுத்துவோம்
இயற்க்கை அழிவினை தடுப்போம்
இயற்க்கை அழகினில் இமைமூடி
யோசித்துப்பார் நம்முடன் பேசும்
நண்பனில் ஒருவனாக
நம்மையும் காக்கும்

தினேஷ்குமார் said...

கவுண்டரே கவிதை நல்லாருக்கு

மாணவன் said...

//இன்றாவது முடிவு
செய்வோம்....!
இயற்கையை அழிப்பதை
நிறுத்தி,
இயற்கை அழிப்பதை
நிறுத்துவோம்...//

வரிகள் ஒவ்வொன்றும் அருமை சார்..
ஆழிப்பேரலையால் மடிந்த உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபமும், அஞ்சலிகளும்....

பொன் மாலை பொழுது said...

கரையோரம் கிடக்கும் அந்த வெற்று சங்கு/ கிளிஞ்சல் படம் ஒரு கவிதை. மௌனமாக பேசும்.
ஆழ்ந்த அர்த்தங்கள் கொண்ட படமய்யா! நல்லாயிருக்கு "கவுண்டரே" :))

மொக்கராசா said...

பன்னி கலக்கிபுட்டேங்க, என்னை கண் கலங்க வச்சுபுட்டேங்க!!!!

வைகை said...

என் அஞ்சலிகளும்......

வைகை said...

சௌந்தர் said...
இயற்கை அழிப்பதை
நிறுத்துவோம்...!///

இப்படி பதிவு போடுவதை நிறுத்தினால் இயற்கை நன்றாக இருக்கும்..////


இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...!(ஹி ஹி )

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////தில்லு முல்லு said...
/// இயற்கையை அழிப்பதைநிறுத்தி,இயற்கை அழிப்பதைநிறுத்துவோம்...!///

இத தான்யா நானும் சொல்றேன் ..,////

அப்படின்னா சரிதான்//////////

அப்படின்னா அததான் நானும் சொல்றேன்!

வினோ said...

/ இயற்கையை அழிப்பதை
நிறுத்தி,
இயற்கை அழிப்பதை
நிறுத்துவோம்...! /

உண்மை தான் தல... அப்போ தான் வாழ்வு மிஞ்சும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையான கவிதை.. படமும் கதை சொல்கிறது..e

Anonymous said...

இயற்கையை அழிப்பதை
நிறுத்தி,
இயற்கை அழிப்பதை
நிறுத்துவோம்...!//

great

சாமக்கோடங்கி said...

//இயற்கையை அழிப்பதை
நிறுத்தி,
இயற்கை அழிப்பதை
நிறுத்துவோம்...!//

என்னவொரு வாக்கியம்...

உமர் | Umar said...

சிறப்பான கவிதை.

ப்ரியமுடன் வசந்த் said...

இயற்கையை அழிப்பதை
நிறுத்தி,
இயற்கை அழிவதை
நிறுத்துவோம்...!

இப்படி வந்திருக்கணுமோ....?

உமர் | Umar said...

//இப்படி வந்திருக்கணுமோ....? //

இல்லை பதிவில் இருப்பது சரிதான்.

இயற்கை (நம்மை) அழிப்பதை - இந்த அர்த்தம் வரும்

ப்ரியமுடன் வசந்த் said...

ரைட் ரைட் !

ராஜவம்சம் said...

ஆழமான விசயம்.

எம் அப்துல் காதர் said...

உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன். பெற்றுக்கொள்ளவும். நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எமது அஞ்சலிகளும் ............................ஆழமான பிரார்த்தனைகளும்!

சண்முககுமார் said...

கவுண்டரே நல்லாருக்கு

சௌந்தர் said...
"இது யாரோ எழுதி கொடுத்த கவிதை மாறி இருக்கு"


எனக்கும் அதே சந்தேகம் தான் பாஸ்


இதையும் படிச்சி பாருங்களேன்

குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம்

Philosophy Prabhakaran said...

அட கவிதை கூட எழுதுவீங்களா... கவுண்டமணி ஸ்டில்லை வச்சிட்டு இந்த மாதிரி கவிதை எல்லாம் எழுதுறது முரண்பாடா இருக்கு...

சி.பி.செந்தில்குமார் said...

>>>>இயற்கை அழிப்பதை
நிறுத்துவோம்...!


நல்ல வரிகள்.உங்களது இன்னொரு முக்ம் இப்படி வாரம் ஒரு முறை வெளி வரட்டும்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்லாயிருக்குங்க .

மங்குனி அமைச்சர் said...

வருத்தமான மறக்கவேண்டிய நாள்

Unknown said...

கவிதை.. ரொம்ப நல்லாயிருக்கு..

வார்த்தை said...

//ஆறா ரணத்தையும்
ஆற்றிடும் காலமே ஆறுதல்...!//

நல்லாயிருக்குங்க

'பரிவை' சே.குமார் said...

கவிதை நல்லாருக்கு.

செல்வா said...

//இயற்கையை அழிப்பதை
நிறுத்தி,
இயற்கை அழிப்பதை
நிறுத்துவோம்...!
//

உண்மைதாங்க ..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கருத்துரை அளித்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றி.......!