Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Friday, October 28, 2016

பைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்

பைரவா... யார்ரா அவன்...?


அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உப்புமா என்று எழுதி வைத்தால் அதன் கீழே பைரவா என்று யாரோ கிறுக்கி விட்டு ஓடிவிடுகிறார்கள். ஒவ்வொரு ஹோட்டலிலும் இது நடக்கிறது ஹோட்டல் ஓனர்கள் கொதிப்படைந்து அதை கண்டுபிடிக்க அடியாள்களை வைக்கின்றனர். ஆனாலும் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

கடைசியில் ஊரே கூடி நின்று அதை பற்றி பேசுகின்றனர். அப்போது ஹோட்டல்கள் கூட்ட தலைவன் அது யார் என்று யாராவது தானா வந்து ஒத்துக்கொள்ளாவிட்டால் ஊரில் உள்ள எல்லா ஹோட்டல்களையும் அடைத்துவிடுவோம் என்று மிரட்டுகின்றான். ஊர் தலைவர்கள் செய்வதறியாது திகைக்கின்றனர். அப்போது அண்ணா வந்து அது தான்தான் என்று ஒத்துக் கொள்கிறார். அது ஏன் அப்படி எழுதினார் என்று எல்லாரும் கேக்கும் போது அவரது நண்பனின் தம்பி ரவா உப்புமா கேட்டு கெஞ்சியதாகவும், அது கிடைக்காமல் அதற்கு பதிலாக ரவா தோசை வாங்கி கொடுத்ததாகவும், அதனால் அவன் அந்த ரவா உப்புமா ஏக்கத்திலேயே செத்துப்போய் விட்டதாகவும் அதிலிருந்து எல்லா ஹோட்டல்களிலும் ரவா உப்புமா மட்டுமே செய்ய வேண்டும் என்றே அப்படி எழுதி போட்டதாக கண்ணீர்மல்க சொல்கிறார். அதைக் கேட்டு அனைவரும் நெகிழ்கின்றனர். இனி ஹோட்டல்களில் ரவா உப்புமா மட்டுமே சமைப்போம் என்று அனைத்து ஹோட்டல் உரிமையாளர்களும் சபதம் எடுக்கின்றனர். அன்றில் இருந்து அண்ணாவை பைரவா என்று அழைக்க ஆரம்பித்தனர்.

இதையெல்லாம் அமைதியாக ஒரு ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த ஒரு லாரி ஓனர், அண்ணாவின் ஃப்ளாஷ்பேக்கில் மிகவும் நெகிழ்ந்து போய் அண்ணாவை தனது லாரி கிளீனராக நியமனம் செய்து தனது லாரியை கண்ணீர் மல்க ஒப்படைக்கிறார் . அண்ணாவும் சந்தோசமாக வரலாம் வா வரலாம் வா என்றூ பாடிக்கொண்டே வேலை செய்கிறார். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் ஆட்டோக்காரன் பாடலை ஆட்டோ ஸ்டேண்டுகளில் ஆயுத பூஜையன்று போடுவதைப் போல இனி இந்தியா முழுதும் லாரி ஸ்டேண்டுகளில் இந்த பாட்டுதான் ஒலிக்கப்போகிறது.

க்ளீனராக இருக்கும் அண்ணா படிப்படியாக முன்னேறி லாரி ஓட்டுனராக பதவியேற்கிறார். லாரி ஸ்டேண்டு முழுதும் அண்ணாவை தலைவராக கொண்டாடுகிறார்கள். இப்படியே போய்க் கொண்டிருக்கும் போது ஒருநாள் சென்னைக்கு சரக்கு கொண்டு செல்லவேண்டிய வேலை வருகிறது. கொண்டு செல்லும் வழியில் ஒரு ரவுடி கேங் சரக்கைக் கைப்பற்ற முயல்கிறது, ஆக்ரோசமாக சண்டை போட்டு சரக்கை மீட்டுக் கொண்டு சென்னை விரைகிறார். சென்னை சென்றதும்தான் தெரிகிறது லாரியில் இருக்கும் சரக்கு ஒரு சர்வதேச போதை கும்பல் கைக்கு செல்ல இருக்கிறது என்று. அண்ணா சரக்கை அவர்களிடம் ஒப்படைக்காமல் லாரியோடு தலைமறைவாகிறார். போதை கும்பல் தலைவனிடம் தெரிஞ்ச எதிரியவிட தெரியாத எதிரிக்குத்தான் அல்லு அதிகம் இருக்கனும் என்று சவால் விடுகிறார்.



இதற்கிடையில் எதிர் கேங் அண்ணாவிடம் சரக்கு இருப்பதை அறிந்து பேரம் பேச வருகிறது. அண்ணா அவர்களை சண்டை போட்டு விரட்டி விடுகிறார். கோபமடையும் அந்த கும்பல் அண்ணாவை போலீசிடம் போட்டுக் கொடுத்துவிடுகிறது. அதை அறிந்த அண்ணா  கன்னத்தில் மறு வைத்து, தாடையில் தாடி வைத்து, தலையில் விக் வைத்து மாறுவேடத்தில் தண்ணீர் லாரி ஓட்ட ஆரம்பிக்கிறார். வழியில் கீர்த்தி சுரேஷுக்கு லிஃப்ட் கொடுத்து, அண்ணா லாரி ஓட்டும் அழகை பார்த்து கீர்த்திக்கு காதல் வந்து என்று தனியே ஒரு ரொமாண்ட்டிக் ட்ராக்கும் அழகாக வந்து போகிறது. போலீசையும், ரவுடி கேங்கையும், போதை கும்பலையும் சமாளித்து இறுதியில் கீர்த்தியை எப்படி கைப்பிடிக்கிறார் என்பதையில் வெள்ளித்திரையில் காண்க......




Friday, October 14, 2016

ரெமோ என்னும் மாய யதார்த்தம்.....




ரெமோ படத்த பத்தி ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்துடுச்சு..... அதுனால இத வழக்கமான விமர்சனம் மாதிரி இல்லாம படத்த பத்தி சில குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் பார்ப்போம்... 

இதுவர வந்த நிச்சயமான பொண்ண காதலிச்சு மனச மாத்துற படங்கள்ல அந்த மாப்பிள்ளைய கெட்டவனாக காட்டி, அது நியாயம்னு அழகா எடுத்து சொல்லி இருப்பாங்க... அதே மாதிரி ரெமோவுலயும் அந்த மாப்ள ஏற்கனவே ஓரு பொண்ண கழட்டிவிட்டுட்டு வர்ரதாதான் சொல்றாங்க... அதுவும் இல்லாம அவனை பாத்தா நமக்கே புடிக்கல... ஒரு புடவை விஷயத்துலயே அந்த பொண்ணு மனச நோகடிச்சிருக்கானே... அவனை கட்டிக்கிட்டா அந்த பொண்ணு நிம்மதியா வாழுமா...  க்ளைமேக்ஸ்ல கூட கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்துறான் அந்த மாப்ள. ஹீரோயினை காதலிச்சது மூலமா அவளுக்கு நல்லதுதான் பண்ணி இருக்கார் ஹீரோ. சோ படத்தை பத்தின நெகடிவ் விமர்சனங்கள் அர்த்தமற்றவை. 

படத்துல ஏகப்பட்ட லாஜீக் மீறல்கள் இருக்குன்னு எல்லாருமே சொன்னாங்க. படத்துல நடிக்க சான்ஸ் கேக்கிறதுக்காக பொம்பள வேஷம் போடுறாரு சிகா. மொதோநாளு ஒரு வெள்ளக்கார தொர வந்து பொம்பள மேக்கப் போட்டுவிட்டாப்புல..... ஆனா அடுத்த நாளும் பொம்பள வேஷத்துல ஹீரோயின பாக்க போறாரு.... அப்போ யாருய்யா போட்டுவிட்டது.... சினிமா ஷூட்டிங்ல டெய்லி மேக்கப் போட காசு குடுத்து ஆள் வெச்சிருக்கானுங்களே அவனுங்க எல்லாம் கேனையனுங்களா...... அதுவும் தனக்குத்தானே மேக்கப் எப்படி அந்தளவுக்கு போட முடியும்? இதாவது பரவால்ல..  பர்த்டே விஷ் பண்ணும் போதும், க்ளைமேக்ஸ் ஃபைட் சீன்லயும் 10 செகண்டுல பொம்பள வேஷத்துல இருந்து ஆம்பளையா மாறுறாரு... அது எப்படி சாத்தியம்..... சும்மா வெறும் தண்ணில மூஞ்சிய கழுவவே 30 செகண்டாவது ஆகுமே? 

அப்புறம் நர்ஸ்னா டாக்டர் பின்னாடி போறதுதான் வேலையா... ஊசி போடாம எத்தன நாள்யா சமாளிக்க முடியும்..... டெம்பரேச்சர் பாக்கனும், பல்ஸ் பாக்கனும், பிரெசர் செக் பண்ணனும், கட்டுப்போடனும்..... இதுல நர்சிங் சூபர்வைசருக்கே சந்தேகம் வருது.... கூடவே இருக்க டாக்டர் ஹீரோயினுக்கு சந்தேகம் வராதா...? அந்த நர்சிங் சூபர்வைசர் ரெமோ நர்ஸ்தானானு செக் வேற பண்ணுது, அதான் அப்பவே சொதப்புறான்ல, அதுக்கப்புறம் அத என்னன்னு பாக்கவே மாட்டாங்களா.... படத்துல லாஜிக் மீறல் இருக்கலாம்.... ஆனா படமே லாஜீக் மீறலா இருந்தா எப்படி...? 

இது காமெடிப்படம்னு பரவலா எல்லாரும் பேசிக்கிட்டாங்க... ஆனா படத்துல ஒரு காமெடி சீன் கூட இல்ல..... தியேட்டர்ல கூட யாரும் சிரிக்கிற சத்தம் கேக்கல..... பட் க்ளைமேக்ஸ்ல காவியா நோவியான்னு ஒரு சாங் வருது.... அது படத்துல பாத்தீங்கன்னா சிரிப்புக்கு 100% கேரண்டி. காமெடி சீன் இல்லாத குறைய இந்த பாட்டுதுதான் போக்குது, தேங்ஸ் அனிருத். 


அம்மாவ வர்ர சரண்யா..... பாவம்... சிகா பண்ற ப்ராடு வேலைய பாத்து திட்டுறவங்க, கீர்த்தி சுரேஷ் அழக(?) பாத்ததும் அப்படியே சேஞ்ச் ஆகிடுறாங்களாம்... என்ன பிராடுத்தனம் பண்ணாலும் பரவால்ல, இவளைத்தான் நீ கல்யாணம் பண்ணனும்னு சொல்றாங்க....  தியேட்டர்ல படத்த குடும்பம் குடும்பமா வந்து பாக்குறதுக்கு இதுதான் காரணம்னு நினைக்கிறேன்....  சதீஷ் காமெடியனா வர்ராராம்... பட் படத்துல காமெடி சீனே இல்லாம எதுக்கு காமெடியனை போட்டிருக்காங்கன்னு புரியல... அவராவது பரவால்ல. மொட்டை ராஜேந்திரனும் கூடவே வர்ரார். அது அவருக்கே ஏன்னு புரிஞ்சிருக்காது. சோ அதை கேள்வி கேட்பது நியாயம் இல்லை. 

கல்யாணம் நிச்சயமான பொண்ண மனசை கெடுத்து காதலிக்கிறத புல்டைம் ஜாபா வெச்சிருக்கார் சிகான்னு கலாச்சார காவலர்கள் பலரும் இணையத்துல குரல் கொடுத்துட்டு இருக்காங்க. அவங்க எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி வெச்சிருக்கேன்... படத்துல ஹீரோயின் நிச்சயார்த்த மோதிரத்த கழட்டுற சீன்ல நச்னு வீணை மியூசிக் போட்டு கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் எல்லாத்தையும் தனியாளா தூக்கி நிறுத்தி இருக்கார் நம்ம அனிருத்...  நம் கலாச்சார காவலர்கள் என்னதான் படத்தை திட்டினாலும் அட்லீஸ்ட் அனிருத்தையாவது பாராட்டி இருக்கனும்... 

ஹீரோயினை பத்தி எதுவுமே சொல்லலியான்னு கேக்குறீங்க அதானே..... படத்துல வர்ர யதார்த்தமான ஒரே கேரக்டர் அதுதான். ஹீரோயின் கேரக்டர் டாக்டராவே இருந்தாலும் தமிழ் சினிமா இலக்கணத்தை மீறாம லூசுத்தனமாதான் காட்டி இருக்காங்க. அதுக்காக அவங்க கேரக்டரை டைரக்டர் பாத்து பாத்து செதுக்கி இருக்கார் போல. டாக்டருக்கு படிச்சிட்டு இப்படி கேனையா இருக்கேன்னு படத்துல ஒரு இடத்துல கூட நமக்கு தோனவே இல்ல... அதுவே இந்த கேரக்டரின் வெற்றி.... 

படத்துல இத்தனை லாஜிக்மீறல்கள், கலாச்சார சீரழிவுகள் இருந்தாலும் கிளைமேக்ஸ்ல ஹீரோ, வில்லன்கூட நேருக்கு நேர் கையால சண்டை போட்டு ஜெயிப்பதை பார்ப்பது மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு..... கமர்சியல் சினிமாவுல கூட இப்படி வெகு யதார்த்தமான சீன் வைப்பது தமிழ்சினிமாவில் மட்டுமே சாத்தியம்....... 

மொத்தத்தில் ரெமோ ஒரு மாய யதார்த்த கலைப்படைப்பு...!



(படம் பார்த்துட்டே ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ்களா போட்டத ஒருங்கிணைத்து பட்டி டிங்கரிங் பண்ணி விமர்சனமா மாத்தி இருக்கேன்.... ஹி....ஹி..... )

Saturday, February 28, 2015

காக்கிச்சட்டை...!




நண்பனிடம் இருந்து திடீரென்று ஒரு கால், சீக்கிரம் வா, காக்கிச்சட்டை பார்க்கனும் என்று அவசர அழைப்பு. அந்த குறிப்பிட்ட பிரபலமான மாலுக்கு வரச்சொல்லி இருக்கிறான்... காக்கிச்சட்டை படத்திற்கு ஏற்பட்டிருக்கும் எகிற வைக்கும் எதிர்பார்ப்பிற்கு நான் மட்டும் என்ன விதி விலக்கா...? விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் சிவகார்த்திக்கேயன் தான் என்று பதிவர்கள் விமர்சனம் எழுதும் அளவிற்கு கலக்கி இருக்கிறார்கள் என்று பேச்சு வேறு.... எப்படியாவது படத்தை பார்த்துவிட வேண்டும் என்று என்னையும் முடிவு செய்ய வைத்திருந்தது, அந்த நேரத்தில்தான் நண்பனிடம் இருந்து அழைப்பு.

வேகமாக தயாராகி, சில பல நிமிடங்களில் அந்த மாலை சென்றடைந்தேன். இந்த காலத்தில் தான் எவ்வளவு வசதிகள்... மால்களுக்குள் நுழைந்தாலே போதும், படம் பார்த்து, பொருள் வாங்கி, உண்டு களித்து வெளியேறலாம், அத்தனையும் குளு குளு ஏசியில்....... கலர்புல் லைஃப்...... கொடுத்து வெச்ச கல்லூரி பசங்க. எந்தக்கடையிலும் எந்தப்பொருளும் வாங்க வேண்டியதில்லை, சும்மா ஏசியில் உலாவிக்கொண்டிருந்தாலே போதும் பொழுது போய்விடும்.


மால்களுக்கென்றே பிரத்யேகமாக பெண்களை தயார் செய்து அனுப்புவார்கள் போல. அதற்காகவே பையன்கள் கூட்டம் கூடுகிறது. எல்லா மால்களும் சொல்லி வைத்தது போல பெண்கள் கூட்டம் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. ஒருவேளை இது மால்களால் ஏற்பாடு செய்யப்பட்டதாக கூட இருக்கலாம். பலநூறு கோடி முதலீடுகளில் மால்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. இது எல்லாம் வியாபார யுக்திகள். எதுவும் சொல்வதற்கில்லை.

அங்கே நண்பன் காத்துக் கொண்டிருந்தான். வழக்கம் போல, ஏண்டா லேட்டு என்று கடிந்தபடி, வா போகலாம் என்று அழைத்துச் சென்றான். சில தளங்கள் மேலே ஏறினோம், பின்பு கீழே சென்றோம். அங்குதான் அந்த மல்டிப்ளக்ஸ் இருந்தது. அதில் ஒரு தியேட்டரில்தான் காக்கிச்சட்டை படம் ஓடுகிறது. படம் ஆரம்பிக்க இன்னும் நேரம் இருந்தது. இன்னும் கூட்டம் வரத்தொடங்கி இருக்கவில்லை.


கும்பல் கும்பலாக ஆங்காங்கே நின்று பேசிக் கொண்டிருந்தனர். சில ஜோடிகளும் இருந்தார்கள். கல்லூரி வகுப்புகளை கட் அடித்துவிட்டு வந்திருக்கலாம். டீன் ஏஜ் சிறுவர் கூட்டம் ஒன்றும் நின்று கொண்டிருந்தது. பள்ளி நேரத்தில் இவர்கள் எப்படி இங்கே என்று சிந்தித்தபடி, வேகமாக நடந்து கொண்டிருந்த நண்பனுக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓட்டமும் நடையுமாக சென்று கொண்டிருந்தேன்.

நண்பன் தியேட்டர் பகுதியை கடந்து சென்று கொண்டிருந்தான். படம் ஆரம்பிக்க இன்னும் நேரம் இருப்பதால் சும்மா சுற்றலாம் என்று போகிறான் போல என்று நானும் பின்னே தொடர்ந்தேன். கீழே சென்றோம், அந்த பகுதியில்தான் பிரபல சூப்பர்மார்க்கெட் ஒன்று இருக்கிறது. அங்கே செல்ல வேண்டு என எனக்கு நீண்ட நாளா ஆசை. சும்மா சுத்துவதற்கு அந்த மார்க்கெட்டுக்குள் போய்ப் பார்க்கலாம் என்று எண்ணி நண்பனை, அழைத்தேன், அதற்குள் அவன் என்னையும் உள்ளே வரச்சொல்லி விட்டு கடைக்குள் நுழைந்துவிட்டான். நேராக துணிகள் இருந்த பகுதிக்குச் சென்றான். போய் சிலவினாடிகள் தேடிவிட்டு, மச்சி இது எப்படி இருக்கு, இத பாக்கத்தான் உன்னை வரச்சொன்னேன் என்று தூக்கிக் காட்டினான். அவன் கையில் இருந்தது, ஒரு காக்கிச்சட்டை!


Sunday, September 21, 2014

Friday, September 19, 2014

கத்தி: கதை(?) விமர்சனம்...!




கதைப்படி ஹீரோ நம்ம தற்காலிக சூப்பர்ஸ்டார்தான்.... எங்க பாத்தாலும் பவர்கட்டா இருக்கே, எல்லார் வாழ்க்கைலயும் வெளிச்சத்த ஏத்தலாம்னு ஒரு உயர்ந்த குறிக்கோளோட  ஊர்ல சின்னதா ஒரு கடை போட்டு பெட்ரோமேக்ஸ் லைட் வாடகைக்கு விட்டுட்டு இருக்கார். ஊர் திருவிழாவுக்கு புல் லைட் சப்பளையும் அவருதான். அத வெச்சே செமையா இண்ட்ரோ சாங் எடுத்திருக்காங்க. குரூப் டான்சர்ஸ் எல்லாரும் ஆளுக்கொரு பெட்ரோமேக்ஸ் லைட்ட தூக்கி பிடிச்சிட்டே ஆடுறது கண்ணைப் பறிக்குது. இப்படியே போய்ட்டு இருக்கும் போது ஒரு நாள் ஒரு பொம்பள கைல கூடையோட வந்து பெட்ரோமேக்ஸ் லைட்டு வேணும்னு கேக்குது... அந்த இடத்துல நம்ம டாகுடரோட ரியாக்சனை பார்க்கனுமே.... கண்ணு சிவக்குது, கை துடிக்குது, நாடி நரம்பெல்லாம் புடைக்குது, பின்னணி மியூசிக் அதிருது........ சான்சே இல்ல, அப்படி ஒரு பந்தாவான சீன்....! கூடை வெச்சிருக்கவங்களுக்கு எல்லாம் பெட்ரோமேக்ஸ் லைட் கிடையாதுன்னு சொல்லிடுறார். அந்தம்மாவும் திட்டிக்கிட்டே போய்டுது.

ஆனா இத வில்லனோட அல்லக்கை ஒருத்தன் ஒளிஞ்சி நின்னு பாத்துடுறான். அவன் நேரா போய் வில்லன்கிட்ட சொல்லிடுறான். வில்லன் உடனே அல்லக்கைகள் எல்லார் கைலயும் ஆளுக்கொரு கூடைய கொடுத்து போய் பெட்ரோமேக்ஸ் லைட்டு வாங்கிட்டு வாங்கடான்னு அனுப்பி வைக்கிறான். டாகுடருக்கு கோவம் கோவமா வருது, என்னடா இது இன்னிக்குன்னு பாத்து பெட்ரோமேக்ஸ் லைட் வாங்க வர்ரவங்கள்லாம் கைல கூடையோடவே வர்ராங்கன்னு. அப்போ கூடவே சுத்திட்டு இருக்க காமெடியன் இது வில்லனோட வேலைன்னு சொல்லி புரியவைக்கிறான். அவ்வளவுதான் டாகுடருக்கு கோபம் கொப்பளிக்குது.

கூடைய வெச்சி ஆளனுப்புறவனை கூடைக்குள்ளயே வெச்சி அடிப்பேண்டான்னு பஞ்ச் டயலாக் பேசியபடி வில்லன்களை அடிச்சு துவம்சம் பண்றார். அப்போதான் அவருக்கு தெரியுது கூடைகள்லாம் இந்தியாவுல்ல செஞ்சது இல்லேன்னு. வில்லன்கள் பின்னாடியே ஃபாலோ பண்ணி, வெளிநாட்டுல இருந்து கூடைகளை கடத்திட்டு வர்ராங்கன்னு கண்டுபுடிக்கிறார். இருந்தாலும் அவருக்கு சந்தேகம், உள்நாட்டுலயே கூடை கிடைக்கும் போது வெளிநாட்டுல இருந்து ஏன் கடத்திட்டு வரனும்னு. இதை கண்டுபிடிச்சே ஆகனும்னு வில்லன்களை புடிச்சி ரகசியமா ட்ரைனேஜ் பைப் லைன்களுக்குள் அடைச்சு வைக்கிறார். அங்கேயே பெட்ரோமேக்ஸ் லைட்டோட இரவு பகலா காவலுக்கும் இருக்கார். அப்போ வில்லன் ஆள் ஒருத்தன் டாகுடரோட டெடிக்கேசனை பாத்துட்டு கண்கலங்குறான். ஏண்ணே கூடை மேல உங்களுக்கு இவ்ளோ கோவம்னு கேக்குறான்,

அதைப் பாத்து டாகுடரும் கண்கலங்குறார். உடனே ப்ளாஷ்பேக் தொடங்குது. டவுசர் போட்டபடி சமந்தா ஆடிக்கொண்டிருக்கிறார். கூடவே டாகுடரும், டூயட் சாங்காம். டாகுடர் இதிலும் ஹீரோயின் டவுசரில் கையை வைக்கும் மேனரிசத்தை தொடர்வது அல்டிமேட். ரசிகர்களுக்கு நல்ல தீனி. லவ் சீன்ஸ் இப்படியே நல்லா போய்ட்டு இருக்கு, அப்போ ஒருநாள் ஹீரோயினோட செல்ல நாயைக் காணலைன்னு பெட்ரோமேக்ஸ் லைட்ட எடுத்துட்டு ஊர் பூரா தேடுறார் டாகுடர். எங்கே தேடியும் கிடைக்கல. ஹீரோயின் ஒரே அழுகையா அழுகுது. இந்த காட்சில தியேட்டரே ஒப்பாரி வைக்க போவது உறுதி. அழகான பொண்ணுங்க அழுதா யார்தான் தாங்குவா? காலைல பாத்தா அந்த நாய் ஒரு கூடைக்குள்ள செத்துக் கெடக்குது, டாகுடர் பதறி போறார். அந்த கூடையை நாய் உள்ளெ இருக்குன்னு தெரியாம கவுத்தி போட்டதே அவர்தான். குற்ற உணர்ச்சில துடிக்கிறார். அப்பவே சபதம் செய்றார் இனி கூடை வெச்சிருக்கவங்களுக்கு பெட்ரோமேக்ஸ் லைட் கொடுக்கவே மாட்டேன்னு.... டக்னு ஃப்ளாஷ்பேக் முடியுது, எல்லா வில்லனுங்க கண்ணுலயும் கண்ணீர்...  டாகுடரும் கண்ண தொடச்சிக்கிட்டே பெட்ரோமேக்ஸ் லைட்ட தொடைக்கிறார்.

வில்லன்களைத் தேடி வெளிநாட்டு கூடை வியாபாரி (தொழிலதிபர்) வர்ரார். இதை கேள்விப்படும் டாகுடர் தலைய லைட்டா புளிச் பண்ணி மீசைய பெருசா வெச்சிக்கிட்டு இன்னொரு கெட்டப் போட்டு ரகசியமா அந்த ட்ரைனேஜ் பைப்ப விட்டு வெளில வர்ரார்.  வில்லன் கூட பயங்கர சண்டை நடக்கிறது. தொழிலதிபர் அடிதாங்க முடியாமல் உண்மைகளை சொல்லிவிடுகிறார். வெளிநாட்டுக் கூடைகளை கடத்திக் கொண்டுவந்து உள்நாட்டுக் கூடை தொழிலை நசுக்கி இந்திய பொருளாதாரத்தை ஆட்டம் காணச் செய்ய வேண்டும் என்று சீன உளவுத்துறை சதித் திட்டம் தீட்டி இயங்குவதை கண்டுபிடிக்கிறார். பின்னணியில் இருக்கும் சீன சதிகாரர்களை சுற்றி வளைத்து சதித்திட்டத்தை முறியடித்து இந்திய பொருளாதாரத்தை டாகுடர் எப்படி காக்கிறார் என்பதே மீதிக்கதை...!  எந்த கெட்டப்பில் போய் இதை சாதிக்கிறார் என்பதை படு சஸ்பென்சாக வைத்திருக்கிறார்களாம். அதனால் நாமும் அதை சொல்லப் போவதில்லை.

டாகுடருக்கு இந்த கதைக்களம் மிகவும் புதுசு. இருந்தாலும் ஜமாய்த்திருக்கிறார். இதுவரை உள்ளூர் ரவுடிகள், வெளியூர் தீவிரவாதிகள்னு பட்டைய கெளப்பிட்டு இருந்த டாகுடரை இந்த முறை வெளிநாட்டுல இருந்து வர்ர டான்களை இரண்டு கெட்டப்புகளில் அடித்து துவைக்கும் கடினமான பணியை ஒப்படைத்திருக்கிறார் முருகதாஸ். ஒரே மாதிரி கதையில் நடிக்கிறார் என்று இனி யாருமே சொல்லமுடியாத அளவுக்கு அவரை இரண்டு கெட்டப்பில் நடிக்க வைத்து சாதித்திருக்கிறார் முருகதாஸ். பெரிய முன்னேற்றம்தான். அது போல டிரைனேஜ் பைப்புக்குள் துணிச்சலாக நடித்திருக்கும் டாகுடரின் தைரியத்தை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும். பாதிக்கும் மேல் படம் அதற்குள்தான் வருகிறது என்பதால் மிகப்பிரம்மாண்டமாக ட்ரைனேஜ் செட் போட்டிருக்கிறார்கள். படம் வந்ததும் உங்கள் ஊரில் நல்ல தியேட்டரில் சென்று டிக்கட் எடுத்து பாருங்கள்!

Thursday, September 18, 2014

ஐ (ai): திரை விமர்சனம்...!


தமிழ் சினிமா உலகில் மட்டுமல்ல, இந்திய சினிமாவில் ஏன் உலக சினிமாவில் கூட இப்படி ஒரு கதையுடன் இதுவரை எந்தப்படமும் வந்திருக்காது. அப்படிப்பட்ட கதை, திரைக்கதையுடன் பிரம்மாண்டமாக வந்திருக்கிறது ஐ படம். கதைக்காகவே பல்வேறு தேசிய சர்வதேச விருதுகளை அள்ளிக் குவிக்க இருக்கிறது இப்படம்.

விக்ரம் கிராமத்தில் மாட்டுவண்டி வைத்து பிழைத்துக் கொண்டிருக்கிறார். அங்கே ஹீரோயின் எமி ஜாக்சன் சுற்றுலாவிற்காக வந்தவர் மாட்டுவண்டியில் சவாரி செய்கிறார். அவரைப்பார்த்த விக்ரம் காதல்வயப்பட்டு அங்கேயே காதலைச் சொல்கிறார். கோபமடைந்த எமி அர்னால்டின் போட்டோவை காட்டி இந்த மாதிரி ஒருத்தனைத்தான் லவ் பண்ணுவேன் என்று கூறிவிட்டு சென்று விடுகிறார். இதைக்கேட்டு ஆவேசமடைகிறார் விக்ரம். அர்னால்டின் போட்டோவை வாங்கி வைத்துக் கொண்டு பயங்கரமாக எக்சர்சைஸ் செய்கிறார், ஒன்றும் முன்னேற்றமில்லை. ஏதாவது லேகியம் சாப்பிட்டு பார் என்று நண்பர்கள் அறிவுரை சொல்கிறார்கள். அவர்களை நம்பி சேலத்துக்கு செல்கிறார் விக்ரம். அங்கே வைத்தியரிடம் கிலோக் கணக்கில் லேகியம் வாங்கி வந்து உடல் முழுதும் பூசிக் கொண்டு படுக்கிறார். காலையில் பார்த்தால் அவரையே அவருக்கு அடையாளம் தெரியவில்லை. பனிக்கரடி போன்ற தோற்றத்தில் பயங்கரமாக உருவம் மாறி இருக்கிறது.  காட்சியைப் பார்க்கும் நமக்கு இது என்ன சினிமாதானா என்ற பிரமிப்பு எழுகிறது. அவரைப் பார்த்த எல்லாரும் பயந்து ஓடுகிறார்கள். அருகில் இருந்த காட்டுக்குள் ஓடி ஒளிகிறார். லேகீயத்தில் தான் ஏதோ கோளாறு என்று வைத்தியரை பார்க்கச் செல்கிறார். வைத்தியரை கட்டி வைத்து அடித்து மிரட்டியதில் அவர் வில்லன்கள் வந்து மிரட்டி லேகீயத்தை மாற்றி கொடுக்க சொன்னதை சொல்லி விடுகிறார்.

விக்ரம் ஆவேசத்துடன் வில்லன்களை தேட தொடங்குகிறார். ஆனால் பிடிக்கவே முடியவில்லை. ஒவ்வொரு முறை வில்லனை நெருங்கும் போதும் அரசியல்வாதிகள் வந்து லஞ்சம் கேட்டுக்  குறுக்கிடுகிறார்கள். லஞ்சம் கேட்பவர்களை எல்லாம் கடித்து வைக்கிறார் விக்ரம். லஞ்சம் ஒழிந்து ஊரே செழிக்கிறது, அனைவரும் பாராட்டுகிறார்கள். இப்படியே போய் கொண்டிருக்கையில் ஒருநாள் டீவில் எமியின் பேட்டியை பார்த்துவிட்டு கண்கலங்குகிறார். பனிக்கரடி உருவத்துடன் விக்ரம் காதல் சோகத்தில் கண்கலங்குவது அருமை. அப்படியே கனவில் பாடல் காட்சி வருவது மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. 2000 பனிக்கரடிகள் சூழ விக்ரம் எமியுடன் ஆடிப்பாடுகிறார். அண்டார்டிக்காவில் போய் ஐஸ் மலை செட் போட்டு எடுத்தார்களாம். ஒவ்வொரு ஐஸ்கட்டியும் ஒரு கலரில் மின்னுகிறது, எப்படி பெயிண்ட் அடித்தார்களோ தெரியவில்லை. டிக்கட்டிற்கு கொடுத்த காசு இதற்கே போதும். பாடல் முடிந்ததும் வில்லன்களை தேடிக் கண்டுபிடிக்கிறார் விக்ரம். சண்டைக்காட்சிகள் வழக்கம் போல பதற வைத்தாலும் ஹீரோவே ஜெயிப்பது வெகு யதார்த்தம்!

சண்டையில் மற்றவர்கள் தப்ப, ஒரே ஒரு வில்லன் மாட்டிக் கொள்கிறான். அவனும் வைத்தியர் கொடுத்தது லேகியம் இல்லை, பனிக்கரடி ஆயி என்று சொல்லிவிட்டு செத்துப்போகிறான். அதிர்ச்சியடைந்த விக்ரம், அதை சரி செய்வது எப்படி என்று குழம்புகிறார். துரத்திச் சென்று அடுத்த வில்லனை பிடிக்கிறார். அவன் இன்னொரு முறை பனிக்கரடி ஆயியை தடவினால் சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டு செத்து விடுகிறான்.  பனிக்கரடி ஆயி வாங்க ஸ்காட்லாந்திற்கு கடலில் நீந்தியபடியே செல்கிறார் விக்ரம். பிரம்மாண்ட கப்பல்களை அவர் நீந்தியபடி கடந்துசெல்வது இதுவரை சினிமாவில் பார்த்தே இராத சீன். எப்படி செட் போட்டார்கள் என்றே தெரியவில்லை. அங்கு சென்று ஆய் வாங்கி தடவி, காலையில் பார்த்தால் முகமெல்லாம் கட்டிவந்த மனிதனாகி இருக்கிறார்.

இதனால் குழம்பிப் போன விக்ரம், வில்லன் தன்னை ஏமாற்றி இருக்கிறான் என்று புரிந்து கொள்கிறார். எமி அந்த ஊரில் இருப்பதை தெரிந்து கொண்டு அதே தோற்றத்தோடு பார்க்கச் செல்கிறார். அங்கே எமியை வில்லன்கள் கட்டிவைத்து இருக்கிறார்கள். சண்டையிட்டு மீட்கிறார் விக்ரம். அவரைப் பார்த்து எமி யார் நீ என்று கேட்கிறார், அதைக் கண்டு மனசுடைந்த விக்ரம், தப்பி ஓடிய வில்லன்களை துரத்தி பிடித்து அடித்து உதைத்து தனக்கு மாற்றுமருந்து என்ன என்று கேட்கிறார். அப்போது அந்த வில்லன் நான் சொன்னால் நீ கேட்கமாட்டியே என்று திரும்ப திரும்ப மறுப்பது பரபரப்பைக் கூட்டுகிறது. கடைசியில் நல்ல அழகான வாலிபனின் ஆயியை எடுத்து பூசிக் கொண்டால் பழைய உருவத்தை பெறலாம் என்று சொல்லிவிட்டு அவனும் செத்துப் போகிறான். அடுத்து விக்ரம் என்ன செய்ய போகிறார் என்று ஆடியன்ஸ் சீட்டின் நுனிக்கே வந்துவிடுகிறார்கள்.

ஊருக்கு வந்த விக்ரம் வில்லன் சொன்னபடி செய்கிறார். எதுவும் ஆகவில்லை. அதிர்ந்து போய் மறுபடியும் மறுபடியும் செய்து பார்க்கிறார் ஒன்றும் ஆகவில்லை. நமக்கோ பரபரப்பு உச்ச கட்டத்தை அடைகிறது. வில்லன் கும்பலின் தலைவன் அந்த ஊர் சந்தைக்கு வந்திருப்பதை பார்த்து அவனை வளைத்துப் பிடித்துக் கொண்டு வந்து அடிக்கிறார் விக்ரம். இவ்வளவு நாளும் விக்ரமுக்கு  ஏற்பட்டது நிஜமான மாற்றம் அல்ல. அது வெறும் மேக்கப்தான் என்றும், இரவு நேரத்தில் தூங்கியவுடன் வந்து வில்லன் ஆட்கள் ரகசியமாக விக்ரமுக்கு அவருக்கே தெரியாமல் மேக்கப் போட்டு விட்டு போய்விடுவார்கள் என்றும் உண்மையை சொல்லி விட்டு செத்துப் போகிறான் அந்த வில்லன் கும்பல் தலைவன். சஸ்பென்ஸ் உடைந்ததும் தியேட்டரே ஆடிப்போகிறது. அடுத்த காட்சியில் விக்ரம் குளியறைக்குள் சென்று மேக்கப்பை களைத்து விட்டு ஸ்மார்ட்டாக கம்பீரமாக வெளியே வருவதை பார்த்து தியேட்டர் முழுதும் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள்..... எமி வெளியே விக்ரமுக்காக காத்திருக்க படம் முடிகிறது. தியேட்டரை விட்டு வெளியே வந்தும் படபடப்பு குறையவே இல்லை, பலநூறு படங்களை ஒரே நேரத்தில் பார்த்த எஃபக்ட்.......

ஸ்பெசல் எஃபக்ட்ஸ், சஸ்பென்ஸ் கதை, விக்ரம் நடிப்பு, ரஹ்மான் இசை, எமியின் அழகு..... இப்படி எல்லாத்துக்கும் ஒவ்வொரு வாட்டி படம் பார்க்கலாம்......!

ஆய்னு டைட்டில் வெச்சா கண்டுபுடிச்சிடுவாங்கன்னு ஐன்னு டைட்டில் வெச்சிருக்காங்க.... நாங்க சும்மா விடுவமா..... இங்கிலீஸ் டைட்டில் என்னான்னு செக் பண்ணி உண்மைய கண்டுபிடிச்சிட்டோம்ல....... ங்கொய்யால நாங்கள்லாம் யாரு.............!

Saturday, September 13, 2014

ஐ படத்தின் இசை வெளியீட்டு விழா...!

ஐ படத்தோட பட்ஜெட் பத்தி தாறுமாறா செய்திகள் வந்து எல்லாரையும் கதிகலங்க வெச்சிட்டு இருக்கு! தமிழனுக்கு ஒலகம் பூரா பெருமைதேடித்தரப்போற படத்துக்கு நாமலும் ஏதாவது செஞ்சு சரித்துரல நம்ம பேர பச்சக்னு பதிய வெச்சுடனும்னு இப்பிடி இசை வெளியீட்டு விழாவ அட்வான்சா நடத்தியிருக்கோம். எல்லாரும் வந்து கலந்துக்குங்க!


வழக்கம்போல விவேக்குதான் மைக்கப் புடிச்சி எல்லாத்தையும் டேமேஜ் பண்ணுறாரு... சே.. மேனேஜ் பண்ணுறாரு...!

ஐ படம் ஒரு மொக்கைன்னு நான் சொல்லமாட்டேன், ஏன்னா அந்த உரிமை உங்களுக்குத்தான் இருக்கு. நீங்க மொக்கைன்னு சொன்னா நான் ஒத்துக்க மாட்டேன், ஏன்னா ஷங்கர் சாருக்கு அது பிடிக்காது. மொத்தத்துல ஐ.... ஒரு தலைசிறந்த உலகப்படமா அமையும்னு சொல்லி, மொதல்ல வைரமுத்து சார மேடைக்கு அழைக்கிறேன்.

தமிழனுக்கோர் பெருமை என்றால் அது இந்தியாவுக்கே பெருமை, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கோரு பெருமை என்றால் அது தமிழனுக்கே பெருமை, டைரக்டர் ஷங்கருக்குப் பெருமை என்றால் எங்கள் சினிமாக் குடும்பத்திற்கே பெருமை, ஆனால் ஒரு தமிழ்ப்படத்திற்கு பெருமை என்றால் அது அகில உலகத்திற்கே பெருமை....!(ஸ்பீக்கரில் ரிக்கார்ட் செய்யப்பட்ட கைதட்டல் ஒலிக்கிறது, அதைக்கேட்டு ஆடியன்சும் கைத்தட்டுகிறார்கள்)

கண்ணுக்கு மையழகு, கவிதைக்குப் பொய்யழகு, ரஜினிக்கு நடையழகு, எங்கள் சினிமாவிற்கு ஷங்கர் அழகு (மறுபடியும் கைதட்டல்), நன்றி!

நன்றி வைரமுத்து சார், நம்ம சினிமாவிற்கு எது அழகுன்னு விளக்கமா சொல்லிட்டீங்க. அழகு அழகுங்கும் போதுதான் எனக்கு ஒரு கதை ஞாபகம் வருது. ஒரு ஊர்ல ஒரு பாட்டி ஜீன்ஸ் பேன்ட் போட்டுக்கிட்டு வடை சுட்டுக்கிட்டு இருந்துச்சாம். மொத்தம் 5000 வடை. எல்லாத்தையும் ஒரே நேரத்துல ஒரு பெரிய சட்டில போட்டு சுட்டுக்கிட்டு இருந்துச்சி. அவ்வளவு வடையவும் சட்டில இருந்து ஒண்ணா ஒரு பெரிய முள்ளுக்கரண்டிய கிரேன்ல மாட்டி வெளிய எடுத்து வெச்சா அப்போ பாத்து ஆயிரம் காக்கா வரிசையா பறந்து வந்து ஆளுக்கொரு வடைய எடுத்துக்கிட்டு போயிடிச்சி. எல்லா காக்காயும் ஒரு போயி பெரிய மரத்துல உக்காந்துச்சி. மரத்துக்கு 2000 கிளைகள். பாட்டி வடையத் தேடி மரத்துக்கு வந்திடிச்சி. அவ்வளவு பெரிய மரத்தப் பாத்தும் பயப்படாம ஒரு பெரிய கல்ல எடுத்து மேலே வீசிச்சி. கல்லப் பாத்ததும் எல்லாக் காக்காயும் பயந்து போயி வடையக் கீழே போட்டு பறந்து போயிடிச்சி. இதுல வர்ர பாட்டியோட துணிச்சல்தான் எனக்கு அழகு....!..... கைதட்டுங்க எல்லாரும்...ம்ம்ம்..(*&^%$*&@#$...)

ரஜினி, ஷங்கர், வைரமுத்து எல்லாரும் தலையில் கைவைத்தபடி உக்கார்ந்திருக்கின்றனர். அர்னால்டு மலங்க மலங்க முழித்தபடி இருக்கிறார்.

ஓக்கே..ஓக்கே.. இப்பிடி ஐ படத்தோட வெற்றிக்கு(!) முழுமுதல் காரணமாக இருக்கும் ஷங்கர் சாருக்கு எங்கள் சல்யூட்! (மற்படியும் கைதட்டல்!)

அடுத்ததாக டைரக்டர் ஷங்கர் அவர்களை மேடைக்கு அழக்கிறேன்!

எல்லோருக்கும் வணக்கம். இசை வெளியீட்டு விழா நடத்தனும்னு முடிவு பண்ண உடனே நாங்க செஞ்ச முதல் காரியம் விவேக்கக் கூப்பிட்டதுதான் (!). அழைப்பிதழ் டிசைன் பண்றதுக்காக ஜப்பானுக்கு அருகிலுள்ள கும்மாங்கோன்னு ஒரு தீவுக்குப் போயிருந்தோம். அங்கே தண்ணிக்கடியில சுமார் 6000 அடி ஆழத்துல இருந்துக்கிட்டே விடிய விடிய டிசைன் பண்ணோம். அப்புறம் அதை பிரிண்ட் பண்றதுக்காக உருகுவே நாட்டுக்குப் போனோம். அங்க உள்ள ஒரு எரிமலை உச்சியில் இருக்கும் ஒரு டிஜிட்டல் அச்சகத்துல கிட்டத்தட்ட ரெண்டு மாசம் தங்கியிருந்து போஸ்டர் பிரிண்ட் பண்ணோம். அங்கே வந்து ஒத்துழைப்புக் கொடுத்த அனைவரும் எனது நன்றிய தெரிவிச்சுக்கிறேன். அடுத்ததா ஒரு முக்கியமான விஷயம். இந்த விழாவுக்கு போஸ்டர் ஒட்டுரதுக்காக மொராக்கோவுல இருந்து ஒரு மெசின வரவழைச்சிருக்கோம். அத வெச்சு முதல் போஸ்டர் ஒட்டும் விழா அடுத்து பனாமா நாட்டில் நடைபெறும். இந்த சந்தர்ப்பத்த பயன்படுத்தி உங்க எல்லாரையும் அதற்கு அழைக்கிறேன். இதேற்கெல்லாம் தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் ரசிகர்களுக்கு நன்றி!
நன்றி ஷங்கர் சார். உங்க முதல் போஸ்டர் ஒட்டும் விழாவுக்கு என்னையும் அழைச்சிருக்கீங்க. அதையும் ஒரு வெற்றி விழாவா ஆக்குவது என் கடமை. உங்க பிரம்மாண்டதிற்கு நான் அடிமை. தமிழனுக்கு அது என்றும் பெருமை! அடுத்ததா நாம் எல்லோரும் ஆவலுடம் எதிர்பார்க்கும் சூப்பர் ஸ்டார் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன் (கைதட்டல்...விசில்!)

எல்லாருக்கும் வணக்கம்...(கைதட்டல்..!)..நான் எப்பவும் எதை செஞ்சாலும்...எந்தப் படம் பண்ணாலும் அது தமிழனுக்கு பெருமை தருவதாகத்தான் இருக்கும் (கைதட்டல்...!) இப்படி ஒரு வாய்ப்புக்கொடுத்த ஷங்கர் அவர்களுக்கு நான் என்றென்றும் கடன் பட்டிருக்கிறேன். ஐ படத்தில் முதலில் என்னைத்தான் நடிக்க சொன்னார்கள், ஆனால் கோச்சடையான் படத்திற்கு பிறகு தொழில்நுட்ப படம் வேணாம் என்று நினைத்ததால் நான் நடிக்கவில்லை.அர்னால்டு நல்ல மனிதர், அழைத்ததும் வந்துவிட்டார். விக்ரம் நல்ல நடிகர், ஷங்கர் நல்ல இயக்குனர், அம்மா நல்ல முதலமைச்சர். நான் அரசியலுக்கு வருவதாக இருந்தால் வருவேன், இல்லையென்றால் வரமட்டேன். லிங்கா இன்னும் சிறிது நாளில் தயாராகிவிடும். எனவே அனைவருக்கும்  நன்றி!

டிஸ்கி: எந்திரன் படத்தை பற்றி முன்பு எழுதிய பதிவை டிங்கரிங் செய்து போடப்பட்ட பதிவு இது....!

Wednesday, January 9, 2013

பவர்ஸ்டார் படத்தின் கதை வெளியானது?




பார் புகழும் பவர்ஸ்டார் நடித்து ரிலீஸ் ஆக தயாராக இருக்கும் படம் ”கண்ணா லட்டு தின்னா ஆசையா?” இந்தப் படத்தில் பவர்ஸ்டார் காமெடி ஹீரோ வேடத்தில் கலக்கி வருகிறார். படப்பிடிப்பு பற்றிய செய்திகள், படங்கள் அவ்வப்போது வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருப்பதும், நகைச்சுவைக்காக உலகளவில் பேசப்படும் படங்களில் ஒன்றாக இது அமையும் என்ற பலத்த எதிர்பார்ப்பும் நிலவி வருவது அனைவரும் அறிந்ததே. 



இப்படத்தின் கதையை யாரும் அறிந்துவிடாதவாறு படுரகசியமாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், படத்தின் கதை வெளியானது படக்குழுவுனரை மட்டுமல்லாது பவர்ஸ்டார் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கதையை யார் வெளியிட்டது என்பதை உயர்மட்டக் குழு ஒன்று விசாரிக்க வேண்டும் என்று பவர்ஸ்டார் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




நம் பவர்ஸ்டார் படத்தின் கதை ’இன்று போய் நாளை வா’ என்ற படத்தில் 1981-ம் ஆண்டு வெளியாகி இருப்பதாக சினிமா செய்திகள் தெரிவிக்கின்றன. பவர்ஸ்டார் நடிக்கும் க.ல.தி. ஆ வை எடுத்துக் கொண்டிருக்கும் போதே, அதன் கதையை திருடி இன்னொரு படத்தை எடுத்ததும் இல்லாமல் அதனை 1981-லேயே ரிலீசும் செய்திருப்பது கோடம்பாக்கத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் தொடர்வது தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியம் அல்ல என்று சினிமா வல்லுனர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 



இந்தப் பரபரப்பினால் க.ல.தி.ஆ. படத்திற்கான எதிர்பார்ப்பு படுபயங்கரமாக அதிகரித்துள்ள நிலையில்  கமல் துணிச்சலாக விஸ்வரூபம் படத்தை பவர்ஸ்டார் படத்துடன் ரிலீஸ் செய்ய நினைத்து தற்போது பின்வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


நன்றி: கூகிள் இமேஜஸ்...!

Tuesday, August 14, 2012

ஏழாம் அறிவு: ஒரு ஏழரை விமர்சனம்....



படம் வந்து ஒரு வருசம் ஆச்சே, என்ன இவ்ளோ லேட்டா விமர்சனம்னு பார்க்கிறீங்களா? என்ன பண்றது நான் இப்பத்தானே அந்த படத்த பார்த்தேன்...! (இது அந்த பிரபல பதிவருக்கு உள்குத்து அல்ல...!)

சமீபத்துல  7-ம் அறிவு படத்த கட்டாயமா பார்க்க வேண்டிய சூழ்நிலை. படம் வந்த புதுசுல டமிளர், பெருமை அது இதுன்னு சத்தம் அதிகமா இருந்துச்சேன்னு உள்ளுக்குள்ள கொஞ்சம் ஆர்வம் வேற... சரி கழுதைய பாத்து தொலைப்போமேன்னு பார்த்துட்டேன்....  பிரபல பதிவர்கள்லாம் படம் பார்த்தா உடனே தாறுமாறா வெமர்சனம் எழுதனுமாமே, அதான் இப்போ இப்படி ஒரு பதிவு. விமர்சனம்னு நினைக்காம சும்மா படிங்க.



படம் துவக்கத்துல போதி தர்மர் பத்தி சீன்ஸ் கொஞ்ச நேரம் வருது, படத்தை அப்படியே முடிச்சிருக்கலாம். டமிலனின் மிச்சம் மீதி இருக்கும் பெருமையாவது மிஞ்சி இருக்கும். படத்த கண்டினியூ பண்ணி மானம், மருவாதின்னு எதையும் மிச்சம் வெக்காம உருவி விட்டுட்டானுங்க.

ஸ்ருதி ஜெனிடிக் எஞ்சினியரிங் ஸ்டூடண்ட்டாம். ஆராய்ச்சி பண்றாங்களாம். நேரா சூர்யா கிட்ட போய் மேட்டரை எடுத்து சொல்லி கூட்டிட்டு போக வேண்டியதுதானே? அத விட்டுட்டு ஆயிரத்தெட்டு லோலாய் பண்ணிக்கிட்டு இருக்குது. ஆக்சுவலா ஹீரோயின் அண்ட் கோ எல்லாரும் சூர்யாவை வெச்சு ஆராய்ச்சி பண்ற நோக்கத்துல இருக்காங்க. ஆனா சூர்யா தீம்பார்க்ல அவங்களை பார்த்து ஃபாலோ பண்றார்னு கோவப்படுற மாதிரி சீன் வருது. டைரக்டர் சார் என்னதான் சொல்ல வர்ரீங்க?

இதெல்லாம் தேவையா...?

ஒருவழியா சூர்யா லவ் பண்ணி ஃபெய்லியர் ஆகி (க்க்ர்ர்ர் த்தூ......!) எல்லாரும் மேட்டருக்கு வந்து சேர்ராங்க. வில்லன் சீனாவாம். அதுனால நல்லவேள பஞ்ச் டயலாக் இல்ல. அது ஒண்ணுதான்யா படத்துல ஆறுதல். அப்புறம் அது என்னய்யா நோக்கு வர்மம்? ஏதோ மெஸ்மெரிசம், ஹிப்னாடிசம் மாதிரி சமாச்சாரம் போல தெரியுது. அத வெச்சி அடுத்தவனை கண்ட்ரோல் பண்றது கூட ஓகே, பட் அவங்களும் எப்படி வில்லன் மாதிரியே பறந்து பறந்து  சண்ட போடுறாங்க? மனசு சரி, உடம்பு ஒத்துழைக்க வேணாமாய்யா? அவ்ளோ பலம், வலிமை சும்மா எப்படிய்யா வரும்? இதையெல்லாம் காசு கொடுத்து பார்ப்போம்னு டைரக்டருக்கு எவ்வளவு தன்னம்பிக்கை?

ஹீரோயின் ஜெனிடிக் ஆராய்ச்சிய பத்தி சொல்ல ஆரம்பிக்கிறாங்க பாருங்க, முடிலடா சாமி. போதி தர்மருக்கும் சூர்யாவுக்கு  83% ஜீன் மேட்ச் ஆகுதாம். மனுசனுக்கும் சிம்பன்சி குரங்குக்கும் உள்ள ஜீன் ஒற்றுமை 96%, ஒரு மனுசனுக்கும் இன்னொரு மனுசனுக்கும் இடையே உள்ள ஜீன் ஒற்றுமை 99%. முருகதாஸ் இது என்னமோ புளி, மொளகா கணக்கு மாதிரி குத்துமதிப்பா 83% மேட்சிங்னு அடிச்சி விட்டுட்டார் போல. இத வெச்சிக்கிட்டு ஜீன் ஸ்டிமுலேசன் வேற பண்றாங்களாம் அதுவும் 12 நாள்ல...!

போதிதர்மர் எழுதுன பொஸ்தகத்துல உள்ளத படிச்சிட்டு அதை நேரடியா மனுசன் கிட்ட ஆராய்ச்சி பண்ண ப்ளான் பண்றார் ஸ்ருதி. இதையாவது ஒரு பேச்சுக்கு ஒத்துக்கலாம். பட் ஜீன் ஸ்டிமுலேசன்னு சொல்லி பீலா விடுறாரு பாருங்க. சைன்ஸ் ஃபிக்சனாம். அண்ணே முருகதாசண்ணே உங்களுக்கு மனசாட்சியே இல்லியா? ஜீனை தூண்டுறது இருக்கட்டும், ஆனா ஒருத்தர் தன் வாழ்நாள்ல கத்துக்கிற விஷயங்கள்லாம் ஜீனுக்குள்ள எப்படிண்ணே போகும்? கற்பனைக்கும் ஒரு அளவு வேணாம்? அதுவும் இப்படி ஒரு டுபாக்கூர் கற்பனைய போதி தர்மர் மேல தாறுமாறா ஏத்தி விடுறீங்களே இது நியாயமாண்ணே?

அதுக்கப்புறம், டி.என்.ஏ வ அப்படியே மைக்ராஸ்கோப்ல பார்க்கிற மாதிரி காட்டுறாங்களே....  எப்படித்தான் செட்டு போட்டு எடுத்தாங்களோ? அனேகமா படத்தோட 80 கோடி பட்ஜெட்ல பாதி இந்த சீனுக்கே போயிருக்கும். இந்த மாதிரி சைன்ஸ் சமாச்சாரங்கள் பத்தி படம் பண்ணும் போது கொஞ்சம் ஹோம் ஒர்க் பண்ணனும்ணே. டமிலன், பெருமை, வெங்காயம்னு பேசனும்னா இப்படி இஸ்கோல் பசங்க கணக்கா எடுக்கப்படாதுண்ணே....

சீனாக்காரன் ஸ்ருதிய கொல்றதுக்காக வந்தானாம்.வந்த உடனே போய் சத்தமில்லாம அத பண்றத விட்டுப்புட்டு படத்தோட 80 கோடி பட்ஜெட்டுக்கும், வாங்குன காசுக்கும் பாக்குற ஆளுகளைலாம் பறக்க வைக்கிறான், போட்டுத்தள்றான்.

யாருக்குமே தெரியாத லேப்னு சென்னை ஐஐடிக்குள்ள இருக்கற லேபை சொல்றாங்கப்பா.....! சிரிக்க கூட முடியல சார். ஒருவழியா எல்லாம் முடிஞ்சு...... ஹீரோவும் வில்லனும்  நேரடி சண்டைய தொடங்குறாங்க. (தக்காளி என்னத்த கிழிச்சி படம் எடுத்தாலும், கிளைமாக்ஸ்ல ஹீரோவும் வில்லனும் நேருக்கு நேரா கைச்சண்டை போடனும்கற இந்த கருமாந்திரம் புடிச்ச செண்டிமெண்ட்ட மட்டும் விடமாட்டேங்கிறானுங்களே....?).

வில்லன்  துப்பாக்கி, பைப்பு ஊசின்னு என்னென்னமோ ஆயுதங்கள் வெச்சிருந்தான். பட் ஹீரோ கூட கிளைமாக்ஸ் சண்ட போடுறப்போ (வழக்கம் போல) எதையும் காணோம். வில்லன் நோக்கம் என்ன, ஹீரோவ கொல்லுறது, அப்படியே கழுத்த நெரிச்சி கொல்லுவானா.... அதவிட்டுட்டு தொம்மு தொம்முன்னு அடிச்சி தூக்கி போட்டுட்டு வேடிக்கை பார்க்கிறான், பறந்து பறந்து குதிக்கிறான் (பின்ன ஸ்டண்ட் மாஸ்டர்கிட்ட காசு கொடுத்த அளவுக்கு வேலை வாங்க வேணாமா?). எப்படியும் ஹீரோதான் ஜெயிக்க போறாங்கிறதால ஒரு அளவுக்கு மேல சண்டைய பார்த்து ரசிக்க முடியல. சூர்யாவுக்குள்ள திரும்ப போதிதர்மா வர்ரதெல்லாம் என்னது அப்பளம் நமுத்துப்போச்சான்னு கேட்கற மாதிரித்தான் இருக்கு...!

அப்புறம் குறிப்பிட்டே ஆகவேண்டிய ஒரு விஷயம் மியூசிக். யப்பா சாமி ஹாரிசு.... ஆள விடுரா சாமி... எல்கேஜி பசங்க படிக்கிற ரைம்ஸ கூட விட்டு வைக்காம...... ஏன்யா இப்படி? போதிதர்மா சீன் பூரா பேக்ரவுண்டுல ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் பாட்ட கொஞ்சம் டெம்போ குறைச்சு ஸ்லோவா ஹம்மிங் பண்றாங்க...... அண்ணன் காப்பி அடிக்கிறதெல்லாம் அடிச்சி முடிச்சி எல்கேஜி லெவலுக்கு வந்துட்டாரே, இதுவும் முடிஞ்சிட்டா இனி என்ன பண்ணுவாரோ?

போதிதர்மர் நமக்கு பெருமையான விஷயமா இருக்கலாம். ஆனா இந்தப் படம் சத்தியமா இருக்காதுங்க. வேற எதுவும் சொல்றதுக்கில்லீங்கோ.


ங்கொய்யால இனி வில்லு, சுறா மாதிரி மசாலா படங்களை பாத்தாலும் பார்ப்பேனே தவிர இந்த மாதிரி ஒலகப்படங்களை பார்க்க மாட்டேன்யா........!

நன்றி: கூகிள் இமேஜஸ்

Saturday, April 21, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி: என்ன படம் இது, ஒரு எழவும் புரியலை....!

இந்த ப்ளாக்க ஆரம்பிக்கும் போதே நெனச்சேன், இப்படி ஒரு நெலம வந்தா என்ன பண்றதுன்னு, அதாங்க எழுதுறதுக்கு ஒண்ணுமே வரலேன்னா என்ன பண்றதுன்னு! முன்னால எல்லாம் அடிக்கடி இப்படி ஆகி கமுக்கமா இருந்துடுவேன். இப்பவும் அப்படித்தான், என்ன எழுதுறதுன்னே தெரியாம நியூ போஸ்ட்ட ஓப்பன் பண்ணிட்டு உக்காந்திருக்கேன். ஆனா இந்தவாட்டி சும்மா விடுறதில்லன்னு களத்துல இறங்கிட்டேன்.

பிரபல பதிவர்கள்லாம் சினிமா பதிவுகளை வெச்சே ஓட்டிடுறாங்க, நாமலும் பிரபல பதிவர் (?) தானே, சரி இந்தக் கருமத்தையும் எதுக்கு விட்டு வைக்கனும்னு, சினிமாவை ட்ரை பண்ணி பார்க்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். (அப்போ இதுவரை டாகுடரை பத்தி எழுதுனதெல்லாம் என்னன்னு கேட்கப்படாது.....!)

இப்போ ட்ரெண்டு ஒரு கல் ஒரு கண்ணாடிக்கு விமர்சனம் எழுதுறதுதானாம். அதையும் ஒரு பிரபல பதிவர்தான் சொன்னார். விமர்சனம் எழுத முன்னாடி அந்தப் படத்த வேற பார்க்கனுமாமே? சரி கருமமேன்னு கூகிள் சேர்ச்ல தேடி பாடுபட்டு கண்டுபுடிச்சி பார்த்துத் தொலச்சேன். எல்லாம் உங்களுக்காக.


நம்மளையும் நம்பி இந்த நாலு ஜீவன் இருக்கறத நெனச்சா சந்தோசமாத்தான் இருக்கு, ஆனா இவனுங்க எடுக்குற படத்த நெனச்சாத்தான் பயமா இருக்கு...!


மொதல்ல படத்தோட பேரை பத்தி விரிவா பாத்துடலாம் (நமக்குன்னு ஒரு பாணிய டெவலப் பண்ண வேணாமா? அதுக்குத்தானுங்...........) ஒரு கல் ஒரு கண்ணாடி. பேரே ரொம்ப நல்லாருக்கு இல்லியா...? ஆனா இந்த கல்லுக்கும் கண்ணாடிக்கும் என்ன சம்பந்தம்? கண்ணாடில கல்ல போட்டா கண்ணாடி உடஞ்சிடும். கல்லுல கண்ணாடிய போட்டாலும் கண்ணாடிதான் உடையும். இது மூலமா என்ன சொல்ல வர்ராங்கன்னு தெரில, பட் இந்த மேட்டர் நல்லாருக்கு.

கண்ணாடின்னு சொல்றது பசங்களையா இருக்கும்னு நினைக்கிறேன். ஏன்னா நாமளா தேடிப் போய் லவ் பண்ணாலும் இல்ல நம்மளை ஒருத்தி லவ் பண்ணாலும் டேமேஜாக போறது பசங்கதானே? (எல்லாரும் ஆணாதிக்க வாதின்னு திட்ட போறீங்க, திட்டுங்க ஆனா என்னைய இல்ல, இந்தப் படத்தோட டைரக்டர......... எனக்கென்ன வந்துச்சி?)

நல்லவேள ஒருகால் ஒரு கண்ணாடின்னு பேர் வெக்கல. வெச்சிருந்தா அப்புறம் காலுக்கும் கண்ணாடிக்கும் என்ன எழவு சம்பந்தம்னு எப்படி கண்டுபுடிக்கிறது? ஆனா கல்லுனு பொத்தாம் பொதுவா சொல்லிட்டாங்களே தவிர அது என்ன கல்லுன்னு சொல்லவே இல்லை. பட் படத்தோட பட்ஜெட்ட வெச்சி, அது கருங்கல்லாத்தான் இருக்கும்னு நானே புரிஞ்சிக்கிட்டேன். கல்லு ஓகே, கண்ணாடி? முகம் பார்க்கிற கண்ணாடியா இல்ல வெறும் கண்ணாடியா இல்ல மூக்குக் கண்ணாடியா? எதுவும் புரியலேன்னாலும் ஒரு பிரபல பதிவர் அப்படிங்கற ஸ்தானத்துல (!) இருந்து யோசிச்சு அது முகம் பார்க்கும் கண்ணாடியாத்தான் இருக்கனும்னு நானே முடிவு பண்ணிட்டேன்.

கல், கண்ணாடி மேட்டர் ஓகே, ஆனா அது என்ன ஒரு கல் ஒரு கண்ணாடி? படத்துல ஒரு ஹீரோ, ஒரு ஹீரோயின்தான் வேற ஹீரோ, ஹீரோயின் கிடையாதுன்னு டைரக்டர் பின்நவீனத்துவ பாணில சொல்ல முயற்சி பண்ணி இருக்காரு போல...! அடடடா... என்ன ஒரு கற்பனை, என்ன ஒரு சிந்தனை. இப்படியே டைட்டிலை பத்தி ரொம்ப நேரம் தாறுமாறா யோசிச்சுக்கிட்டு இருந்துட்டு, சரி போனா போகுதுன்னு படத்த போட்டு விடிய விடிய உக்காந்து  நல்லா உத்து உத்து பார்த்தேன்... ஒரு எழவும் தோனல........ விடிஞ்சப்புறம் மறுக்கா ஒருவாட்டி பார்த்தேன், அப்பக்கூட எதுவும் தோனலை. 

நீங்களாவது அந்த படத்த பார்த்துப்புட்டு ஏதாவது தோனுச்சின்னா சொல்லுங்க சார்.... ஒரு நல்ல விமர்சனத்த தேத்திப்புடலாம்.... வேற என்ன பண்றது?


இதுதான் சார் நான் கூகிள்ல தேடி நைட்டு பூரா கண்ணு முழிச்சி உக்காந்து பார்த்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம்.... இத பார்த்ததும் உங்களுக்கு விமர்சனம் அருவியா கொட்டுமே?

நன்றி வணக்கம்!


Saturday, October 29, 2011

இது விமர்சனம் அல்ல....





ஒரு கிராமத்துல வெட்டியா ஒரு ஹீரோ இருப்பாரு, அவருக்கு ஒரு தங்கச்சி  இவங்க ரெண்டு பேரும் இஷ்டத்துக்கு லூட்டி அடிப்பாங்க. ஹீரோ சோத்துக்கு என்ன பண்றார்னு ஆரும் கேட்கப்படாது, அது தமிழ் சினிமா ஹீரோக்களுக்குன்னே உள்ள தனிச்சிறப்பு. அப்புறம் தங்கச்சிக்கு கல்யாணம் நிச்சயமான உடனே சென்னைக்கு வருவாரு(?)... அப்புறம் என்ன அநியாயத்தக் கண்டு பொங்க வேண்டியதுதான்......! என்ன இது எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கா? இது நம்ம டாகுடர் கடந்த 10 வருசமா நடிச்சிட்டு இருக்கற பெரும்பாலான படங்களோட ஒன்லைன் ஸ்டோரி. டாகுடர் மட்டுமில்ல ஒட்டு மொத்த தமிழ் சினிமாத்துறையும் நம்பி(?) இறங்கும் கதைக் களம் (!). 

அந்த மாதிரி ஒரு ஒன்லைன் வெச்சுக்கிட்டு, ஒரு ஓப்பனிங் சாங், ரெண்டு குத்துப்பாட்டு, ரெண்டு டூயட் சாங், கொஞ்சம் காமெடி, கொஞ்சம் கிளாமர் (அதுவும் பாட்டுல மட்டும்தேன்...), 4-5 ஃபைட்டு....  அவ்வளவுதாங்க படம்...  இதுல பெரிய காமெடி இந்த எழவெடுத்த கதைய ரீமேக் ரைட்ஸ் வேற வாங்கி படம் எடுக்குறாங்க. ஏன் சார் இந்தக் கதையத்தானே இவ்ளோ வருசமா இங்க பலபேரு எடுத்துட்டு இருக்கீங்க, அப்புறம் எதுக்கு சார் தெலுங்கு ரீமேக்னு சொல்லி அவிங்களுக்கு வேற சும்மா காசு கொடுக்கறீங்க?


இதுல ஒவ்வொரு வாட்டியும் இதுவரைக்கும் யாருமே எடுக்காத கதை, நடிக்காத கதைன்னு பில்டப்பு வேற... என்ன பண்றது இதையும் நம்பி ஏமாற நாட்ல நிறையப் பேரு இருக்காங்களே...?  இவங்களுக்குள்ள போட்டி வேற, தறுதல மாசா தளபதி மாசான்னு..... நமக்கு எல்லாமே மாசுதான்.. (நன்றி: நா. மணிவண்ணன்) அவரு அவர் ரசிகர்களுக்காக படம் எடுப்பாரு, இவரு இவர் ரசிகர்களுக்காக படம் எடுப்பாரு.....  ங்கொய்யால அப்புறம் எதுக்குய்யா தியேட்டர்ல படத்த ரிலீஸ் பண்றீங்க? மொத்தமா உங்க எல்லா ரசிகர்களையும் கூட்டிட்டு போயி அவங்களுக்கு மட்டும் படத்த போட்டுக்காட்ட வேண்டியதுதானே? சமீபத்துல தல நடிகர் ரசிகர் மன்றங்களையெல்லாம் கலைச்சி ஒரு நல்ல முன்மாதிரியை தொடங்கி வெச்சார். ஆனா எவனும் கண்டுக்கல, வழக்கம் போல கட்டவுட்டுக்கு பால் ஊத்தி தமிழனின் பெருமைய நிலைநாட்டிட்டாங்க. என்ன கொடும சார் இது?


சரி அத விடுங்க, இவங்க பண்ற அலம்பலை பார்த்து நேத்து வந்த நடிகர்லாம் ஓப்பனிங் சாங், பஞ்ச் டயலாக்கு, கேமராவ பார்த்து தத்துவம் பேசுறதுன்னு கொல்றானுங்களே அதுக்காகவாவது இதை ஒரு முடிவுக்கு கொண்டு வரனும்யா...! கையில கொஞ்சம் காசு (அதுவும் அப்பன் சம்பாரிச்சதா இருக்கும்) இருந்தா உடனே ஹீரோ. அப்புறம் அவருக்கும் ஒரு ஓப்பனிங் சாங், பஞ்ச் டயலாக்கு, வெளிநாட்ல டூயட் சாங் வைக்கனும். படம் ஓடுதோ இல்லியோ 50 நாள், 100 நாள்னு அவனுங்களே போஸ்டர் ஒட்டி ஊரை நாறடிப்பானுங்க... இதையெல்லாம் சகிச்சுட்டு வாழறதுக்கே ஒரு தனி விருது கொடுக்கனும்யா...!

உள்ளூர்ல சகிச்சுக்கிறதாவது பரவால்ல, வெளியூர்கள்ல இவனுகளால நம்மாளுக எப்படியெல்லாம் கேவலப்பட வேண்டியதா இருக்கு தெரியுமா? கட்டவுட்டுக்குப் பால் ஊத்துற பக்கிகளால ஒவ்வொருத்தனுக்கும் பதில் சொல்லி மாளலை. இங்க ஒருத்தன் சொல்றான், உங்க ஊர்ல வரவர ஹீரோக்கள் பவர் கூடிட்டே போகுதுப்பான்னு, ஏன்னு கேட்டா, உங்க ஹீரோக்கள் அடிச்சா வில்லன்கள் போய் விழுகுற தூரம் அதிகமாகிட்டே போவுதே அத வெச்சி சொன்னேன்கிறான்.... என்னத்த சொல்ல?

சினிமாவுல அர்ஜூன், விஜயகாந்த், சரத்குமார் வளர்த்து வந்த தேசபக்தி வியாபாரம் கொஞ்சம் தணிஞ்சு, இப்போ தமிழுணர்வு வியாபாரம் தொடங்கிடுச்சு. இப்ப கொஞ்ச காலமா எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழுணர்வு பொங்கி வழியுது. நமக்குக் கிடைத்த சினிமாக்காரர்கள்தான் திறமைசாலிகளாச்சே, விடுவாங்களா.... அதையும் காசாக்கிடுவாங்கள்ல.... இதோ முதல் போனி ஆரம்பிச்சிட்டாங்க, இன்னும் இத வெச்சி எத்தனை வரப்போகுதோ?  

அப்புறம் நம்ம பதிவர்கள் மேட்டருக்கு வருவோம், இன்னிக்கு ஒரு ப்ளாக் வெச்சிக்கிட்டு சினிமா விமர்சனம் போடலேன்னா சங்கத்துல இருந்து தள்ளி வெச்சிடுவாங்க போல. இதுல யாரு முதல்ல விமர்சனம் போடுறதுன்னு போட்டி வேற கன்னாபின்னான்னு எகிறிப் போச்சு. கடந்த 4-5 நாளா வெறும் சினிமா விமர்சனமா படிச்சிட்டு இருக்கேன்.  ஆனா வந்த படங்கள்ல எது உண்மையிலேயே நல்லாருக்குன்னு புரியல. ஒருத்தர் படம் சூப்பர்னு சொல்றார், ஒருத்தர் படம் படுமொக்கைன்னு சொல்றார். ஒண்ணும் புரியலீங்கோ. 

இந்தக் கொழப்படி போதாதுன்னு படம் பார்க்காமயே குத்துமதிப்பா விமர்சனம் எழுதுறாங்களோன்னு டவுட்டை கெளப்பிவிட்டுட்டார் ஒரு நண்பர்.  இனி விமர்சனம் எழுதுறவங்க படம் பார்த்த டிக்கட்டை ஸ்கேன் பண்ணி ப்ளாக்ல போடனும்னு ரூல்ஸ் கொண்டு வந்துடலாம். அதுவும் சொந்தக் காசுல டிக்கட் வாங்கி இருக்கனும். (ஓசில பர்த்தா விமர்சனம் எழுதத் தகுதி கிடையாதுன்னு ரூல்ஸ் இருக்காமே.... எங்கேயோ படிச்சேன்...)

சரி எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ வந்துடுச்சு. இதுக்கு மேல எழுதுனா அப்புறம் கெடா வெட்டி பொங்க வெச்சுடுவாங்க.... அதுனால நான்அப்படியே  அப்பீட் ஆகிக்கிறேன்...! 




படங்களுக்கு நன்றி கூகிள் இமேஜஸ்!

!

Tuesday, March 22, 2011

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று தெரியுமா...?

அடுத்த முதல்வர் யார் என்று பதிவுலகம் முழுதும் தேர்தல் ஜன்னி கண்டு இழுத்துக் கொண்டிருக்கும் நிலையில், நாம் அடுத்த சூப்பர் ஸ்டார்  யார் என்ற முக்கியமான தேடுதல் வேட்டையில் இறங்கினோம். தேர்தல் நேரத்தில் இது அவசியமா என்று எதிரிகள் சிலர் கேட்கலாம். நமது சூப்பர் ஸ்டார்களுக்கே முதல்வர்களாகும் தகுதி இருப்பதனாலும், நாம் காலம் காலமாய் எதிர்பார்த்துக் காத்திருந்த சூப்பர் ஸ்டார் ஒருவர் தமிழ்த்திரை வானில் இப்போது அவதரித்து இருப்பதாலும், தேர்தல் பரபரப்பில் அவர் யார் என்று நம் பதிவர்களுக்குத் தெரியாமலே போய் விடக் கூடிய அபாயம் இருப்பதாலும்தான் அவசர அவசரமாக இப்படி ஒரு பதிவு. 

தமிழ்நாட்டில் எப்போதும் ஒரு சூப்பர் ஸ்டார் இருந்து கொண்டே இருப்பார். தியாகராஜ பாகவதர், எம்ஜிஆர், ரஜினி என்று ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு சூப்பர் ஸ்டார் இருப்பது தமிழகத்தின் எழுதப்படாத விதிகளில் ஒன்று. அடுத்த தலைமுறை நடிகர்கள் தமிழ்சினிமாவில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கி பல வருடங்கள் ஆகியும் இன்னும் அவர்களில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று தீர்மானிக்க முடியாத நிலை தொடர்வது சினிமா ரசிகர்களுக்கு தீராத கவலையாக இருந்து வருகிறது. 

இன்னிலை தொடர்வது சினிமாவுக்கும் நல்லதல்ல, ரசிகர்களுக்கும் நல்லதல்ல. மேலும் சிபி போன்ற சினிமா விமர்சகர்களுக்கும் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று அடையாளம் காட்டுவது நமது தார்மீகக் கடமை என எண்ணுகிறோம். கடமை என்று வந்துவிட்டால் நாம் புலியாக மாறி விடுவோம்  என்பதும் உங்களுக்கு தெரியுமல்லவா...?

சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை அடைய இன்றும் போராடிக் கொண்டிருக்கும் அண்ணன் டீ...ராஜேந்தர் அவர்களுக்கு ஒரு சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொண்டவனாக அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என உங்களுக்கு அடையாளம் காட்டும் எனது நீண்ட நெடிய பயணத்தை தொடங்குகிறேன். 

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற உடன், நடிகர்கள் அஜீத்-விஜய் ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்க முடியாது. ஆனால் இருவரும், விடாது தொடரும் தொடர்தோல்விகளால் பொறிகலங்கி இருப்பது சற்றே யோசிக்க வைகிறது. சிம்பு, தனுஷ், சூர்யா, விக்ரம், ஜீவா, பரத்  அனைவரும் அஜீத்-விஜய்க்கு கிழேதான் என்பதால் அவர்கள் அனைவரும் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டியலில் இடம் பெறும் தகுதியை இழக்கிறார்கள். அப்படியானால் யார்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்? தமிழ்நாட்டு மானத்தை காப்பாற்ற யாருமே இல்லையா?

இப்படி அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று தெரியாமலே போய் விடுமோ என்று ரசிகர்கள் எல்லாம் அல்லும் பகலும் துயரத்தில் தோய்ந்து, தோய்ந்து வருந்திக் கொண்டிருந்த காலத்தில்தான் வானில் விடிவெள்ளி உதிப்பது போல தென்னிந்திய மைக்கேல் ஜாக்சன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சாம் ஆண்டர்சன் அவர்கள் தமிழ்த் திரைவானில் உதயமாகி அனைவரையும் சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட வைத்தார். தமிழகத்திற்கு நோபல், ஆஸ்கார் என்று பரிசுகளை அள்ளித்தரக் கூடிய அனைத்து தகுதிகளும் இவருக்கு உண்டு என்றாலும் அவர் அதை விரும்புவதில்லை என்பதால் இன்னும் கொடுக்கப்படவில்லை என்று விபரம் அறிந்தவர்கள் பலரும் அறிவார்கள்.

டாஸ்மாக்கில் இந்த வருடம் வருமானம் பலமடங்கு அதிகரித்திருப்பதற்கு சாம் ஆன்டர்சனின் சூறாவளி நடனமே காரணம் என்று புள்ளி விபரங்களைப் பார்த்தவ்ர்களுக்குத் தெரிந்திருக்கலாம். மேலும் இந்த வருட கலைமாமணி லிஸ்ட்டில் ஆன்டர்சனின் பெயர் இருந்ததாகவும், ஆனால் அவர் அதை ஏற்றுக் கொள்வாரோ மாட்டோரோ என்ற அச்சத்தில் கடைசி நேரத்தில் அவர் பெயர் அந்த லிஸ்ட்டில் இருந்து எடுக்கப்பட்டதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறன.

தமிழக மக்கள் அனைவரும் எப்பேர்ப்பட்ட நடிகர் நமக்கு கிடைத்திருக்கிறார், இனி அவர்தான் நம் சூப்பர் ஸ்டார் என இறுமாந்திருந்த நேரத்தில் புயலென கிளம்பி தமிழகத்தின் அத்தனை தியேட்டர்களையும் துவம்சம் செய்து அதிரடியாய் நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லாமல் சொல்லி பலரின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறார் ஒரு நடிகர்...

அவரும் ஒரு டாகுடர் என்பதுதான் பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தி தூக்கத்தைக் கெடுத்திருக்கிறதாம்.

அவரது மயிர்க்கூச்செறியும் புகைப்படங்கள் சிலவற்றை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.....
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

தென்னகத்தின் அடுத்த ஸ்டைல் மன்னன்..
பவர் ஸ்டார் (எ) யூத் ஸ்டார், டாகுடர். சீனிவாசன்....!


தமிழகத்தின் சல்மான்கான் ஒரு பாடல்காட்சியில்...


தமிழகத்தின் அடுத்த சூப்பர் ஸ்டார் அவர்களின் எழுச்சியை வெள்ளித்திரையில் கண்டு மகிழ்க...!


பிரபலபதிவர் சிபி இந்தப் படத்தை ஏற்கனவே பார்த்துவிட்டார் என்று தகவல்கள் வருகின்றன. ஆனால் அவர் ஏன் இன்னும் மௌனம் சாதிக்கிறார் என்றுதான் தெரியவில்லை!

ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன், வெறும் கைகளைக் கொண்டு ஆதவனை மறைத்துவிட முடியாது...!

Thursday, December 23, 2010

எனது ரசனையில்: பெண்குரல் பாடல்கள்........




இதை ஒரு தொடர்பதிவாக பலரும் எழுதிவருவது தெரிந்ததே. என்னையும் இந்தத் தொடர்பதிவிற்கு நண்பர்கள் பலரும் அழைத்திருந்தனர். பிடித்த பாடல்களை வெறும் பத்தில் அடக்கிவிட முடியும் என்று தோன்றவில்லை. மேலும் வெவ்வேறு காலகட்டங்களில் வந்த பாடல்களை ஒன்றாக வகைப்படுத்துவதிலும் எனக்குச் சம்மதமில்லை. அதனால் பாடல்களை என்பது, தொண்ணூறு மற்றும் இரண்டாயிரம் ஆண்டுகளில் வந்தவை எனப் பிரித்திருக்கிறேன். பாடல்களைத் தரவரிசைப் படுத்தவில்லை. ரேண்டமாகவே கொடுத்திருக்கிறேன். ஒவ்வொரு பாடலுக்கும் சிறு குறிப்பு எழுத ஆசைதான் ஆனால், ஒரே பதிவிற்குள் அது சாத்திய்மில்லை என்பதால் விட்டுவிட்டேன்.


(இடமிருந்து வலமாக: எஸ்.ஜானகி, சுனந்தா, ஜென்ஸி)




(இடமிருந்து வலமாக:  உமாரமணன், எஸ்.பி.ஷைலஜா, சித்ரா)


80s:


1. புத்தம் புதுக் காலை…பொன்னிற வேளை…. எஸ். ஜானகி (அலைகள் ஓய்வதில்லை)

2. கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்… எஸ். ஜானகி (ரெட்டைவால் குருவி)

3. அழகிய கண்ணே…………எஸ். ஜானகி (உதிரிப் பூக்கள்)

4. ராசாவே உன்ன நம்பி…. எஸ்.ஜானகி (முதல் மரியாதை)

5. ஊரு சனம்… தூங்கிடுச்சு…. எஸ். ஜானகி (மெல்லத் திறந்தது கதவு)

6. ஒரு இனிய மனது…….. ஜென்ஸி (ஜானி)

7. காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள்…எஸ். ஜானகி (மங்கை ஒரு கங்கை)

8. சின்னச் சின்ன வண்ணக்குயில்…….. எஸ். ஜானகி (மௌனராகம்)

9. குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும்… சித்ரா (மெல்லத் திறந்தது கதவு)

10. தெய்வீக ராகம்…. ஜென்ஸி (உல்லாசப் பறவைகள்)

11. ஆசைய காத்துல தூது விட்டு……..எஸ்.பி.ஷைலஜா (ஜானி)

12. ஆனந்த ராகம்……….உமாரமணன் (பன்னீர் புஷ்பங்கள்)

13. பன்னீரில் நனைந்த பூக்கள்………….. எஸ்.ஜானகி (உயிரே உனக்காக)

14. மந்திரப் புன்னகையோ மஞ்சள் நிலவோ…… எஸ்.ஜானகி (மந்திரப் புன்னகை)

15. என் வானிலே ஒரே வெண்ணிலா……..ஜென்ஸி (ஜானி)

16. சின்னப்பூ சின்னப்பூ கண்ணெல்லாம் வண்ணப்பூ…… எஸ்.ஜானகி (ஜப்பானில் கல்யாணராமன்)

17. அழகு மலராட……………..எஸ். ஜானகி (வைதேகி காத்திருந்தாள்)

18. செண்பகமே செண்பகமே…. சுனந்தா (எங்க ஊரு பாட்டுக்காரன்)

19. ரோஜாப்பூ ஆடிவந்தது….. ஜானகி, கோரஸ் (அக்னி நட்சத்திரம்)



90s:

1. மாலையில் யாரோ மனதோடு பேச…. சுவர்ணலதா (சத்ரியன்)

2. கற்பூர பொம்மை ஒன்று….. பி. சுசீலா (கேளடி கண்மணி)

3. வந்ததே ஓ…ஓ..குங்குமம்…. சித்ரா (கிழக்கு வாசல்)

4. மன்னவா மன்னவா…..சுனந்தா (வால்டர் வெற்றிவேல்)

5. கொஞ்சம் நிலவு…… அனுபமா (திருடா திருடா)

6. ஊரடங்கும் சாமத்திலே…. சுஜாதா, உமா ரமணன் (புதுப்பட்டி பொன்னுத்தாயி)

7. ராசாவே உன்னை விட மாட்டேன்….. எஸ். ஜானகி (அரண்மனைக்கிளி)

8. வான்மதியே… வான்மதியே…. எஸ். ஜானகி (அரண்மனைக்கிளி)

9. நீதானே நாள்தோறும்… சுவர்ணலதா (பாட்டு வாத்தியார்)

10. அதிகாலைக் காற்றே நில்லு… எஸ். ஜானகி (தலைவாசல்)

11. கண்ணி ரெண்டில் ஏற்றி வைத்த நெய்விளக்கே…. பெண்குரல் கோரஸ் (அவதாரம்)

12. நிலா காய்கிறது……ஹரிணி (இந்திரா)

13. மார்கழிப் பூவே…….ஷோபா (மே மாதம்)

14. என்னுள்ளே என்னுள்ளே…….. ஸ்வர்ணலதா (வள்ளி)

15. அன்பென்ற மழையிலே….. அனுராதா ஸ்ரீராம் (மின்சாரக் கனவு)

 16. குயில்பாட்டு............ஸ்வர்ணலதா (என் ராசாவின் மனசிலே)


2000s

1. மயில் போல பொண்ணு ஒண்ணு… பவதாரிணி (பாரதி)

2. அடித் தோழி அடித்தோழியே…. கல்யாணி (தென்றல்)

3. ஒன்றா ரெண்டா ஆசைகள்…… பாம்பே ஜெயஸ்ரீ (காக்க காக்க)

4. இதுதானா……சித்ரா (சாமி)

5. திருமணமலர்கள்……… ஸ்வர்ணலதா….. (பூவெல்லாம் உன் வாசம்)

6. நினைத்து நினைத்து……. ஷ்ரெயாகோசல் (7G ரெயின்போ காலனி)

7. விடிகின்ற பொழுது…… மதுமிதா (ராம்)

8. அனல்மேலே பனித்துளி……. சுதா ரகுநாதன் (வாரணம் ஆயிரம்)

9. மருதாணி…….சாதனா சர்கம் (சக்கரக்கட்டி)


சமீப காலங்களில் அதிகமாக பாடல்கள் கேட்க முடியவில்லை, எனவேதான் அவை சற்றுக் குறைவாகவே உள்ளன.  மேலே உள்ள பாடல்கள் எதுவும் வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளலாம். ஈமெயிலில் அனுப்பித்தருகிறேன்.

அனேகமாக அனைவரும் இந்தத் தொடர்பதிவை எழுதிவிட்டனர்.  இருந்தாலும் இரு பிரபல பதிவர்கள் இதை இன்னும் சட்டை செய்யாமலே இருக்கின்றனர். எனவே உங்கள் அனைவர் சார்பாகவும் அவர்கள் இருவரையும் இத்தொடர்பதிவிற்கு  அழைக்கிறேன்.


 !

Wednesday, December 22, 2010

சிம்ரனோமேனியா............




அவ்வளவு சுலபத்துல மறந்துட முடியாத நடிகைங்கள்ல சிம்ரனும் ஒருவர். தமிழ் சினிமாவுல நீண்டநாள் ஆதிக்கம் செய்து, கொஞ்சம் நடிக்கவும் செய்த நாயகி. ஸ்லிம்மாக இருந்தாலும் பரவசமூட்டும் கட்டழகு, சிக்கென்ற இடையழகு என்று பல்வேறு தனிச்சிறப்புகள் கொண்டவர். வீடியோ பாடல் கலக்சன் CD/DVDகளில், எப்போதும் ஆண் நடிகர்கள் பாடல்கள் தான் வெளியிடுவார்கள் (ரஜினி ஹிட்ஸ், கமல் ஹிட்ஸ் என்று), அதை மாற்றி முதல் முதலாக ஒரு நடிகை பெயரில் பாடல் கலக்சன்கள் வெளியிடப்பட்டது இவருக்குத்தான் என்று நினைக்கிறேன். சமீபத்தில் இவரது பாடல் காட்சி ஒன்றைக் காண நேர்ந்தது. அப்போதுதான் உணர்ந்தேன், நாம் சிம்ரனை எவ்வளவு மிஸ் பண்ணுகிறோம் என்று...!  சும்மா சொல்லக்கூடாதுங்க, இன்னும் அவருக்கு மாற்றாக யாருமே வரலைன்னுதான் சொல்லனும். அவரது சில பல பாடல்களை இங்கே பட்டியலிடுகிறேன்.




மனம் விரும்புதே (நேருக்கு நேர்):
இந்தப் பாடல்தான் சிம்ரனை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது என்று கூறலாம். சிம்ரனின் தனிச்சிறப்பான இடுப்பை வெட்டி ஆடும் நடனத்திற்கு அடிமையாகாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இந்தப்பாடலில் மிக அற்புதமாக வெளிப்பட்டிருக்கும். இன்றைக்கும் சிம்ரன் ரசிகர்கள் குறிப்பிட்டுச் சொல்லும் பாடல் இது. இந்தப் பாடலுக்காக படம் பார்த்தவர்கள் எத்தனையோ......


தொட்டுத் தொட்டுப் பேசும் சுல்த்தானா......!
எதிரும் புதிரும் படத்தில் இந்த ஒரு பாடலுக்கு மட்டும் சிம்ரன் ஆடியிருந்தார். டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரத்துடன் ஆடியிருப்பார், (அப்போது அவர்களூக்குள் ஏற்பட்ட நட்பு சில காலம் தொடர்ந்ததை அறிவீர்கள்). இப்பாடலில் சிம்ரன் படுஃப்ரஷ்ஷாக இருப்பார்.


எங்கெங்கெ எங்கெங்கெ... (நேருக்கு நேர்)
சிம்ரன் ஓடிக்கொண்டே இருக்கும்படியாக எடுக்கப்பட்ட பாடல் இது. பாடலின் துள்ளல் இசையும், சிம்ரனின் துள்ளும் அழகும் போட்டி போட்டுக்கொண்டு பார்ப்பவர் மனதை அள்ளும் ரம்மியமான பாடல்!


அடிக்கிற கை அணைக்குமா.... (நட்புக்காக)
ஒரு பெரிய ஹீரோ இருக்கும்போது கூட சிம்ரனுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட பாடல். நளின நடன அசைவுகள் நிறைந்த இந்தப்பாடலை சிம்ரனுக்காகவே எத்தனை முறை வேண்டுமென்றாலும் பார்க்கலாம்.


தின்னாதே.... (பார்த்தேன் ரசித்தேன்)
இந்தப் படமே முழுக்க முழுக்க சிம்ரனின் ஆளுமைதான். அதுவும் இந்தப் பாடலில், சிம்ரன் வந்து ஒரு வெட்டு வெட்டியவுடன் தான் பாடலுக்கே உயிர் பிறக்கும். ரசனையான பாடல்...!


வெள்ளி மலரே.... (ஜோடி)
சிம்ரன் இப்பாடலில் வெகு அருமையான காஸ்ட்யூம்களில் வருவார். காணக் காணக் கண்கள் குளிரும். அருகில் நிற்கும் நடிகர் யார் என்று சட்டையே செய்யத் தோன்றாது. இந்தப்பாடல் முழுதும் (எப்போதும் தான்..!)அப்படி ஒரு வசீகரம் வழியும் சிம்ரனிடம்.


நிலவைக் கொண்டுவா.... (வாலி)
சிம்ரனுடைய  நளினமும், மெல்லிய வெட்கமும் கலந்த காதல் முகபாவனைகள் இப்பாடலில் நிறைந்திருக்கும். இரண்டாவது சரணத்தில் சிம்ரன்..."அது தான் தேடி உண்ணாமல் பேரின்பம் வாராதுடா...." என்று பாடும் போது காட்டும் முகபாவனை இருக்கிறதே....... என்றென்றும் மறக்க முடியாக் காட்சி....!





 காதல் காதல்... (பூச்சூடவா)
இதுதான் சிம்ரனின் முதல் படம் என்று சொல்லப்படுகிறது (விஐபி அல்ல). சிம்ரன் இளமை பொங்க போடும் ஆட்டம், நம்மைத் திக்குமுக்காட வைக்கும். மழையில் நனையும் சிம்ரன், பார்ப்பவர் மனதைக் கரையோ கரி என்று கரைத்துவிடுவார் இப்பாடலில்.

வானில் காயுதே....... (வாலி)
காதல்/காம உணர்வுகளை ஆக்ரோஷமாக வெளிப்படுத்துவது போல் அமைந்திருக்கும் இப்பாடலில் சிம்ரன், உண்மையில் ஒரு அழகுப்புலியாக சீறியிருப்பார். அதற்கேற்றார்போல வைக்கபட்டிருக்கும் நடன அசைவுகளும் சிம்ரனுக்கு வெகு ஜோராக இருக்கும்.

ஆல்தோட்டபூபதி நானடா....(யூத்)
டாகுடரு கெஞ்சி கூப்புட்டு நம்ம தங்கத்தலைவிய ஒரு பாட்டுக்கு மட்டும் ஆட வெச்சாரு. தலைவி ஆடுன ஆட்டத்துல டாகுடரு இருக்குற எடமே தெரியாமப் போச்சு (பாட்டுலதான்). இந்தப் பாட்டப் பார்க்கிறவங்க சிம்ரன மட்டும் தான் பார்ப்பாங்க, டாகுடரு பக்கத்துல நிக்கிறது கண்ணுக்கே தெரியாது.


உன்னோடுதான்....(கொண்டாட்டம்)
துள்ளும் ரிதத்துடன் மிக அருமையான முறையில் படமாக்கபட்டிருக்கும் பாடல். ஓரிரு முறைதான் இது வரை பார்க்க முடிந்தது. சிம்ரனுக்காககவே பார்க்க வேண்டிய பாடல்களில் இதுவும் ஒன்று. யூ டியூபில் கிடைக்குதா என்று தெரியவில்ல. நல்ல தரமான வீடியோ லிங் வைத்திருப்பவர்கள் தொடர்புகொள்ளவும்.
 
அயராத பணிச்சுமை மற்றும் நேரக்குறைவு காரணமாக மற்ற பாடல்களைப் பற்றி விளக்கமாக (?)  எழுதமுடியவில்லை. எனவே கீழ்க்கண்ட பாடல்கள் பார்ட்-2 வில் தொடரப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
  • அஞ்சாதே ஜீவா....(கண்ணெதிரே தோன்றினாள்)
  • உன்னோடுதான்....(கொண்டாட்டம்)
  • என்னவோ என்னவோ என் வசம்....(ப்ரியமானவளே)
  • கண்ணுக்குள்ளே காதலா (தமிழ்) 

  

 எச்சரிக்கை 1: இது ஒரு தொடர்பதிவல்ல. எனவே யாரும் இதைத் தொடர முயற்சிக்க வேண்டாம்.. ஜாக்கிரதை...... ! பின் விளைவுகளுக்குக்  கண்டிப்பாக  நிர்வாகம் பொறுப்பேற்காது!

எச்சரிக்கை 2: இதுல ஏன் 11 பாட்டுகளைப் பத்தி எழுதியிருக்கீங்கன்னு ஆரும் கேக்கப்படாது, ஏன்னா அது என் இஷ்டம்...! (அது ஏன்யா எல்லாரும் பத்துப் பத்துப் பாட்டா எழுதுறீங்க, 11 எழுதுனா நிக்காம கீழ விழுந்துடுமா?)

எச்சரிக்கை 3: கமென்ட் போடுபவர்கள் அனைவரும் தங்கத்தலைவி சிம்ரன் ரசிகர் மன்றத்தில் இலவசமாகச் சேர்க்கப்படுவார்கள்!

எச்சரிக்கை 4:  இனி யாராவது என்னை தொடர்பதிவு எழுதச் சொல்லுவீங்க?

!