Wednesday, December 22, 2010

சிம்ரனோமேனியா............




அவ்வளவு சுலபத்துல மறந்துட முடியாத நடிகைங்கள்ல சிம்ரனும் ஒருவர். தமிழ் சினிமாவுல நீண்டநாள் ஆதிக்கம் செய்து, கொஞ்சம் நடிக்கவும் செய்த நாயகி. ஸ்லிம்மாக இருந்தாலும் பரவசமூட்டும் கட்டழகு, சிக்கென்ற இடையழகு என்று பல்வேறு தனிச்சிறப்புகள் கொண்டவர். வீடியோ பாடல் கலக்சன் CD/DVDகளில், எப்போதும் ஆண் நடிகர்கள் பாடல்கள் தான் வெளியிடுவார்கள் (ரஜினி ஹிட்ஸ், கமல் ஹிட்ஸ் என்று), அதை மாற்றி முதல் முதலாக ஒரு நடிகை பெயரில் பாடல் கலக்சன்கள் வெளியிடப்பட்டது இவருக்குத்தான் என்று நினைக்கிறேன். சமீபத்தில் இவரது பாடல் காட்சி ஒன்றைக் காண நேர்ந்தது. அப்போதுதான் உணர்ந்தேன், நாம் சிம்ரனை எவ்வளவு மிஸ் பண்ணுகிறோம் என்று...!  சும்மா சொல்லக்கூடாதுங்க, இன்னும் அவருக்கு மாற்றாக யாருமே வரலைன்னுதான் சொல்லனும். அவரது சில பல பாடல்களை இங்கே பட்டியலிடுகிறேன்.




மனம் விரும்புதே (நேருக்கு நேர்):
இந்தப் பாடல்தான் சிம்ரனை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது என்று கூறலாம். சிம்ரனின் தனிச்சிறப்பான இடுப்பை வெட்டி ஆடும் நடனத்திற்கு அடிமையாகாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இந்தப்பாடலில் மிக அற்புதமாக வெளிப்பட்டிருக்கும். இன்றைக்கும் சிம்ரன் ரசிகர்கள் குறிப்பிட்டுச் சொல்லும் பாடல் இது. இந்தப் பாடலுக்காக படம் பார்த்தவர்கள் எத்தனையோ......


தொட்டுத் தொட்டுப் பேசும் சுல்த்தானா......!
எதிரும் புதிரும் படத்தில் இந்த ஒரு பாடலுக்கு மட்டும் சிம்ரன் ஆடியிருந்தார். டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரத்துடன் ஆடியிருப்பார், (அப்போது அவர்களூக்குள் ஏற்பட்ட நட்பு சில காலம் தொடர்ந்ததை அறிவீர்கள்). இப்பாடலில் சிம்ரன் படுஃப்ரஷ்ஷாக இருப்பார்.


எங்கெங்கெ எங்கெங்கெ... (நேருக்கு நேர்)
சிம்ரன் ஓடிக்கொண்டே இருக்கும்படியாக எடுக்கப்பட்ட பாடல் இது. பாடலின் துள்ளல் இசையும், சிம்ரனின் துள்ளும் அழகும் போட்டி போட்டுக்கொண்டு பார்ப்பவர் மனதை அள்ளும் ரம்மியமான பாடல்!


அடிக்கிற கை அணைக்குமா.... (நட்புக்காக)
ஒரு பெரிய ஹீரோ இருக்கும்போது கூட சிம்ரனுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட பாடல். நளின நடன அசைவுகள் நிறைந்த இந்தப்பாடலை சிம்ரனுக்காகவே எத்தனை முறை வேண்டுமென்றாலும் பார்க்கலாம்.


தின்னாதே.... (பார்த்தேன் ரசித்தேன்)
இந்தப் படமே முழுக்க முழுக்க சிம்ரனின் ஆளுமைதான். அதுவும் இந்தப் பாடலில், சிம்ரன் வந்து ஒரு வெட்டு வெட்டியவுடன் தான் பாடலுக்கே உயிர் பிறக்கும். ரசனையான பாடல்...!


வெள்ளி மலரே.... (ஜோடி)
சிம்ரன் இப்பாடலில் வெகு அருமையான காஸ்ட்யூம்களில் வருவார். காணக் காணக் கண்கள் குளிரும். அருகில் நிற்கும் நடிகர் யார் என்று சட்டையே செய்யத் தோன்றாது. இந்தப்பாடல் முழுதும் (எப்போதும் தான்..!)அப்படி ஒரு வசீகரம் வழியும் சிம்ரனிடம்.


நிலவைக் கொண்டுவா.... (வாலி)
சிம்ரனுடைய  நளினமும், மெல்லிய வெட்கமும் கலந்த காதல் முகபாவனைகள் இப்பாடலில் நிறைந்திருக்கும். இரண்டாவது சரணத்தில் சிம்ரன்..."அது தான் தேடி உண்ணாமல் பேரின்பம் வாராதுடா...." என்று பாடும் போது காட்டும் முகபாவனை இருக்கிறதே....... என்றென்றும் மறக்க முடியாக் காட்சி....!





 காதல் காதல்... (பூச்சூடவா)
இதுதான் சிம்ரனின் முதல் படம் என்று சொல்லப்படுகிறது (விஐபி அல்ல). சிம்ரன் இளமை பொங்க போடும் ஆட்டம், நம்மைத் திக்குமுக்காட வைக்கும். மழையில் நனையும் சிம்ரன், பார்ப்பவர் மனதைக் கரையோ கரி என்று கரைத்துவிடுவார் இப்பாடலில்.

வானில் காயுதே....... (வாலி)
காதல்/காம உணர்வுகளை ஆக்ரோஷமாக வெளிப்படுத்துவது போல் அமைந்திருக்கும் இப்பாடலில் சிம்ரன், உண்மையில் ஒரு அழகுப்புலியாக சீறியிருப்பார். அதற்கேற்றார்போல வைக்கபட்டிருக்கும் நடன அசைவுகளும் சிம்ரனுக்கு வெகு ஜோராக இருக்கும்.

ஆல்தோட்டபூபதி நானடா....(யூத்)
டாகுடரு கெஞ்சி கூப்புட்டு நம்ம தங்கத்தலைவிய ஒரு பாட்டுக்கு மட்டும் ஆட வெச்சாரு. தலைவி ஆடுன ஆட்டத்துல டாகுடரு இருக்குற எடமே தெரியாமப் போச்சு (பாட்டுலதான்). இந்தப் பாட்டப் பார்க்கிறவங்க சிம்ரன மட்டும் தான் பார்ப்பாங்க, டாகுடரு பக்கத்துல நிக்கிறது கண்ணுக்கே தெரியாது.


உன்னோடுதான்....(கொண்டாட்டம்)
துள்ளும் ரிதத்துடன் மிக அருமையான முறையில் படமாக்கபட்டிருக்கும் பாடல். ஓரிரு முறைதான் இது வரை பார்க்க முடிந்தது. சிம்ரனுக்காககவே பார்க்க வேண்டிய பாடல்களில் இதுவும் ஒன்று. யூ டியூபில் கிடைக்குதா என்று தெரியவில்ல. நல்ல தரமான வீடியோ லிங் வைத்திருப்பவர்கள் தொடர்புகொள்ளவும்.
 
அயராத பணிச்சுமை மற்றும் நேரக்குறைவு காரணமாக மற்ற பாடல்களைப் பற்றி விளக்கமாக (?)  எழுதமுடியவில்லை. எனவே கீழ்க்கண்ட பாடல்கள் பார்ட்-2 வில் தொடரப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
  • அஞ்சாதே ஜீவா....(கண்ணெதிரே தோன்றினாள்)
  • உன்னோடுதான்....(கொண்டாட்டம்)
  • என்னவோ என்னவோ என் வசம்....(ப்ரியமானவளே)
  • கண்ணுக்குள்ளே காதலா (தமிழ்) 

  

 எச்சரிக்கை 1: இது ஒரு தொடர்பதிவல்ல. எனவே யாரும் இதைத் தொடர முயற்சிக்க வேண்டாம்.. ஜாக்கிரதை...... ! பின் விளைவுகளுக்குக்  கண்டிப்பாக  நிர்வாகம் பொறுப்பேற்காது!

எச்சரிக்கை 2: இதுல ஏன் 11 பாட்டுகளைப் பத்தி எழுதியிருக்கீங்கன்னு ஆரும் கேக்கப்படாது, ஏன்னா அது என் இஷ்டம்...! (அது ஏன்யா எல்லாரும் பத்துப் பத்துப் பாட்டா எழுதுறீங்க, 11 எழுதுனா நிக்காம கீழ விழுந்துடுமா?)

எச்சரிக்கை 3: கமென்ட் போடுபவர்கள் அனைவரும் தங்கத்தலைவி சிம்ரன் ரசிகர் மன்றத்தில் இலவசமாகச் சேர்க்கப்படுவார்கள்!

எச்சரிக்கை 4:  இனி யாராவது என்னை தொடர்பதிவு எழுதச் சொல்லுவீங்க?

!

224 comments:

«Oldest   ‹Older   201 – 224 of 224
செல்வா said...

///எச்சரிக்கை 4: இனி யாராவது என்னை தொடர்பதிவு எழுதச் சொல்லுவீங்க?
//

நான் சொல்லுவேன் ..!!

Anonymous said...

அதென்ன பதினொன்னு???
பன்னெண்டு எழுத கூடாதா?

Anonymous said...

ஒருத்தரோட ப்ளாக்குக்கு ரெண்டு தடவைக்கு மேல வரக் கூடாதுன்னு முடிவு பண்ணிருக்கீங்களா???

பெரிய்ய்ய்ய பிரபல பதிவராய்ட்டீங்களா என்ன???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// இந்திரா said...
ஒருத்தரோட ப்ளாக்குக்கு ரெண்டு தடவைக்கு மேல வரக் கூடாதுன்னு முடிவு பண்ணிருக்கீங்களா???

பெரிய்ய்ய்ய பிரபல பதிவராய்ட்டீங்களா என்ன???//////

ஆத்தீ....... மன்னிச்சுக்குங்கோவ், இதோ கெளம்பிட்டேங்கோவ்......!

மங்குனி அமைச்சர் said...

சிக்கென்ற இடையழகு என்று பல்வேறு தனிச்சிறப்புகள் கொண்டவர்.///

ஹி.ஹி.ஹி............நீ ரொம்ப நல்லவன்டா பண்ணி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மங்குனி அமைச்சர் said...
சிக்கென்ற இடையழகு என்று பல்வேறு தனிச்சிறப்புகள் கொண்டவர்.///

ஹி.ஹி.ஹி............நீ ரொம்ப நல்லவன்டா பண்ணி/////

ஹி...ஹி....ஹி....!!!

Anonymous said...

இப்ப கடைக்கு யாருங்க ஓனர்....??

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///philosophy prabhakaran said...
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.... மறக்கக்கூடிய பாடலா அது.../////


அதானே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////philosophy prabhakaran said...
வானில் காயுதே வெண்ணிலா பாடல் எங்கே போச்சு.../////

படத்த பார்த்தது போதும் தம்பி, கொஞ்சம் பதிவையும் படிங்க......! (நல்ல வேள நல்ல படமா போடல)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சேட்டைக்காரன் said...
ஹும், மறக்கணுமுன்னு முயற்சி பண்ணினாலும், ஞாபகப்படுத்திட்டீங்களே! சிம்ரன் இல்லாத ஊருலே எதையெதையோ சர்க்கரைன்னும் நினைச்சுக்க வேண்டியிருக்கே பானா ராவன்னா?/////

வாங்க சேட்டை.....அப்படித்தான் ஆயிப்போச்சு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Arun Prasath said...
சாரி தல கொஞ்சம் லேட் ஆய்டுச்சு

December 22, 2010 8:45 PM/////

அதுனால என்ன, நாங்க என்ன பரிட்சைக்கா போறோம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அருண் பிரசாத் said...
//இந்தப் பாடலுக்காக படம் பார்த்தவர்கள் எத்தனையோ......//
நானும் நானும்

//இப்பாடலில் சிம்ரன் படுஃப்ரஷ்ஷாக இருப்பார். //
எப்பிடி ரோஜா மாதிரியா... ஒரு வேளை ராஜி சுந்தரம் கூட இருந்ததாலோ?

//சிம்ரனின் துள்ளும் அழகும் போட்டி போட்டுக்கொண்டு பார்ப்பவர் //
எலேய்...நீ எதை சொல்லுறேனு தெரியுதுடீ



எல்லாத்துக்கு மேல... விஜபி படத்துல வர பிரபுதேவா பாட்டுல (பாட்டு மற்ந்து போச்சுப்பா) அடிக்கிற கிஸ்... சான்ஸே இல்ல//////

அது, மின்னல் ஒரு கோடி சாங்க்......!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////விக்கி உலகம் said...
என்ன நடக்குது இங்கே!?////

வாங்க, வாங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கி உலகம் said...
என்னப்பா 50 வது பதிவுக்கு கடைப்பக்கம் யாரையுமே காணோமே!?

http://vikkiulagam.blogspot.com////

வந்தாச்சுங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///sakthi said...
சிலிம் ரன்/////

ஹி...ஹி...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கோமாளி செல்வா said...
//எச்சரிக்கை 1: இது ஒரு தொடர்பதிவல்ல. எனவே யாரும் இதைத் தொடர முயற்சிக்க வேண்டாம்.. ஜாக்கிரதை...... ! பின் விளைவுகளுக்குக் கண்டிப்பாக நிர்வாகம் பொறுப்பேற்காது!
//

நான் கூட ரொம்ப பயந்துட்டே தான் படிச்சேன் ..!!////

அதுக்குத்தானே போட்டிருக்கோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கோமாளி செல்வா said...
//இஷ்டம்...! (அது ஏன்யா எல்லாரும் பத்துப் பத்துப் பாட்டா எழுதுறீங்க, 11 எழுதுனா நிக்காம கீழ விழுந்துடுமா?)
//

ஹி ஹி ஹி//////


ஹி...ஹி...ஹி....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கோமாளி செல்வா said...
///எச்சரிக்கை 4: இனி யாராவது என்னை தொடர்பதிவு எழுதச் சொல்லுவீங்க?
//

நான் சொல்லுவேன் ..!!/////

சொல்லிப்பாரு, அப்பூறம் இருக்கு ஆப்பு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இந்திரா said...
அதென்ன பதினொன்னு???
பன்னெண்டு எழுத கூடாதா?/////

எழுதுங்க, ஏன் 13, 14, 15னு உங்க இஷ்டம் போல எழுதுங்க, எனக்கென்ன?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// Anonymous said...
இப்ப கடைக்கு யாருங்க ஓனர்....??/////


ஏனுங் அனானி மாமா, ஓனர் யாருன்னு தெரிஞ்சா கமென்ட் போட்டதுக்கு வாடகை கொடுக்கப் போறீங்களா?

DRACULA said...

இப்ப தான் முதல் வாட்டி உங்க பதிவ படிக்கேரன் சூப்பர் அப்பு

மொக்கராசா said...

சிம்ரனை தூக்கி விட்ட எங்கண்ணா விஜய் பத்தி ஒரு பாரா கூட சொல்லாத பன்னியை வனியா கண்டிக்கிறோம்

மொக்கராசா said...

அண்ணே அடுத்து நமீதா பிறந்த நாளா ...ஆகா ஜாலி ஜாலி

மொக்கராசா said...

சிம்ரனை ஏன் உங்களுக்கு ரெம்ப பிடிக்கும் என்பற்கு வலுவான காரணம் சொல்லவில்லை ஏன் பன்னி

«Oldest ‹Older   201 – 224 of 224   Newer› Newest»