Friday, December 17, 2010

சிக்கன் 65? ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்.....!

என்ன நேத்து முட்டை, இன்னிக்குச் சிக்கனான்னு கேக்காதீங்க, அது காமெடி, இது சீரியஸ், படுசீரியஸ் மேட்டர். பெரியவர் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்ணும் சிக்கன் 65க்கும் இப்போது பிரச்சனை. நேற்று எனக்கு வந்த மெயிலை அப்படியே தந்திருக்கிறேன்.



ராகவனுக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. அவருக்கு கேன்சர் என்று மருத்துவர்கள் சொன்னதும், ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து போனது. காரணம் ராகவனிடம் மது, புகை என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லை. பிறகு எப்படி கேன்சர்? தலையைப் பிய்த்துக்கொண்ட மருத்துவர்கள் கடைசியாக அவரது உணவுப் பழக்கத்தை ஆராய்ந்தபோதுதான் உண்மை தெரியவந்தது. அசைவப்பிரியரான ராகவன் தினமும் சாப்பாட்டில் சிக்கன் 65 இல்லாமல் சாப்பிடவே மாட்டாராம். அதுவும் செக்கச் சிவந்த நிலையில் மொறு மொறுவென்று இருக்கும் சிக்கன் 65ஐத்தான் விரும்பிச் சாப்பிடுவாராம். அதுதான் அவரது கேன்சருக்குக் காரணமாம். எப்படி? பளிச்சென்று தூக்கலாகத் தெரிவதற்காக சிக்கனுடன் சேர்க்கப்படும் அந்த சிவப்பு நிற கெமிக்கல் பவுடர்தான் அந்த கேன்சருக்கு முழுக்காரணம்.


இந்த கெமிக்கல் கலந்த சிக்கன் 65 சாப்பிடுவதால் வயிற்றில் கேன்சர், சிறுநீரகக் கோளாறு. மரபணுக்களில் பாதிப்பு போன்ற நோய்கள் உண்டாவதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.உணவுப் பொருட்களில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள் பற்றியும், பயன்படுத்தக்கூடாத நிறங்கள் பற்றியும் நெல்லை மாநகராட்சியின் உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் பேசும்போது.



உணவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள், பயன்படுத்தக்கூடாத செயற்கை நிறங்கள் என உண்டு. இந்தியாவில் 8 வகையான செயற்கை நிறங்களை மட்டுமே உணவுப் பொருட்களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறங்களும் குறிப்பிட்ட அளவு. அதாவது 10 கிலோ உணவுப் பொருளுக்கு 1 கிராம் மட்டுமே சேர்க்க அனுமதி. ஆனால் இதை யாரும் கடைப்பிடிப்பதில்லை. அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் செயற்கை நிறங்களைச் சேர்த்தால் உடலுக்குக் கேடுதான். எடுத்துக்காட்டாக, உணவில் சிவப்பு நிறம் கொடுக்க பயன்படுத்தப்படும் எரித்ரோசின் அளவு கூடினால் கழுத்துக் கழலை நோய் (goItre) வரும். இந்த செயற்கை நிறங்களும் இனிப்பு வகைகளில் மட்டுமே சேர்க்க அனுமதி. கார வகையான உணவுகளில் சேர்க்க அனுமதி கிடையாது.


பொன்சியூ4.ஆர்., எரித்ரோசின் பயன்படுத்தினால் சிவப்பு நிறம் கிடைக்கும். பிரில்லியண்ட் புளூ, இண்டிகோ கார்மைன் பயன்படுத்தினால் ஊதா கலர் கிடைக்கும். இந்த மாதிரியாக கிடைக்கக் கூடிய எட்டு வகையான கலர்களை ஐஸ்கிரீம் ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கட், இனிப்பு வகைகள், டின்களில் அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ ஜூஸ் வகைகள், குளிர்பானங்கள் என ஏழு வகையான உணவுகளில் மட்டுமே சேர்க்க அனுமதி.


கார வகையான உணவுப் பொருட்களில் செயற்கை வண்ணங்களை கண்டிப்பாகச் சேர்க்கக்கூடாது. ஆனால் நமது மக்களின் மனதில் உணவைவிட உணவின் கலர்தான் பளிச்சென்று பதிந்து இருக்கிறது. சிக்கன் 65 என்றால் சிவப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது சிக்கன் 65 என்ற முடிவில் மக்கள் இருக்கிறார்கள். மக்களின் மனதிற்கேற்ப வியாபாரிகளும் சிக்கன் 65 நிறத்தைக் கூட்டி, ஆபத்தை அறியாமலேயே வியாபாரம் செய்கின்றனர்.


சிக்கன் 65-ல் செயற்கை வண்ணங்களைச் சேர்ப்பதே தவறு. அதிலும் அனுமதிக்கப்படாத செயற்கை வண்ணங்களை அளவுக்கு அதிகமாக சேர்க்கின்றனர். எடுத்துக்காட்டாக சூடான் டை, மெட்டானில் எல்லோ கெமிக்கல்களைச் சேர்த்து துணிகளுக்கு சாயம் ஏற்றுவார்கள். இன்று இதனை சிக்கன் 65யுடன் சேர்த்து விடுகின்றனர். இப்படி சேர்ப்பதால் சிக்கன் 65 ரெட் கலரில் பளிச்சென்று தூக்கலாகத் தெரியும். இதைச் சாப்பிடுவதால் குடல்கேன்சர், சிறுநீரகக் கோளாறு, மரபணுக்களில் கோளாறு என கொடிய நோய்களை உண்டாக்கி விடுகிறது.


கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் சூடான் டையை உணவில் பயன்படுத்தத் தடை விதித்துள்ளனர். செயற்கை நிறம் கொடுக்கக் கூடிய சூடான் டை கலந்த உணவை எலிகளுக்குக் கொடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் எலிகளின் சிறுநீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகியதாம்.இப்படி உணவுப் பொருளில் கலப்படம் செய்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் உணவு தடைச்சட்டத்தின் பிடியிலிருந்தும் ஈஸியாகத் தப்பி விடுகின்றனர்.


உணவுக் கலப்பட வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர் காந்திமதிநாதன் கூறும்போது: ஃபுட்கலர்ஸ் விற்பவர்கள் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அந்த ஃபுட்கலர்ஸ் உணவுப் பொருட்களில் கலந்து உணவுப் பொருட்களுக்கு நிறத்தைக் கொடுத்த பின்புதான் அது குற்றமாகிறது. கலப்பட உணவுப் பொருட்களின் மீது வழக்குத் தொடரவேண்டுமானால் முதலில் தயாரித்து வைத்த உணவுப் பொருட்களை மூன்று பாகங்களாக சாம்பிள் எடுக்க வேண்டும். முதல் பாகத்தை உடனடியாக கெமிக்கல் லேபுக்கு அனுப்பி கலப்படத்தை உறுதி செய்து, ரிப்போர்ட் வாங்கி அந்த அடிப்படையில் வியாபாரியின் மீது வழக்குத் தொடரவேண்டும். மீதமுள்ள இரண்டு பாகமும் சுகாதார அதிகாரியின் கட்டுப்பாட்டில் வைத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது சுகாதார அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ள உணவுப் பொருளின் இரண்டு பாகங்களை நீதிமன்றம் மூலம் மத்திய பகுப்பாய்வுக் கூடத்திடம் ரிசல்ட் கேட்கவேண்டும். அந்தச் சூழ்நிலையில் கண்டிப்பாக உணவுப் பொருள் கெட்டுப்போய்த்தான் இருக்கும். மத்திய பகுப்பாய்வுக் கூடத்தால் சரியான ரிசல்ட்டை கொடுக்க முடியாது. இதனால் வழக்கு நிற்காமல் அடிபட்டு விடும்.

 
எடுத்துக்காட்டாக சூடான்டையால் நிறம் ஊட்டப்பட்ட சிக்கன் 65ஐ சாம்பிள் எடுத்து கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் என்ற கெமிக்கலை சிக்கன்-65 மீது ஊற்றி வைப்பார்கள். அந்த கெமிக்கல் சிக்கன் 65யின் முழுப்பகுதியையும் அடைய வாய்ப்புக் குறைவு. அப்படி கெமிக்கல் படாத இடம் முதலில் கெட்டுப்போய் மொத்த சிக்கன் 65ஐயும் கெட்டுப்போகச் செய்து விடுகிறது. அதனால் அதிலிருந்து சரியான ரிசல்ட் எடுக்க முடியாமல் போய் விடுகிறது.உணவுக் கலப்பட சட்டத்தைப் பொறுத்தமட்டில் வியாபாரிகளுக்கும், சில பங்களிப்பு இருப்பதால் வியாபாரிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர்'' என்கிறார். அதனால் தேவையற்ற கெமிக்கல் கலர் பொடிகள் சேர்த்த சிக்கன்களைத் தவிர்ப்பது ஒன்றே இதற்குத் தீர்வு?


கேன்சர் ஆபத்து!
இது குறித்து சென்னையைச் சேர்ந்த பிரபல குடல்நோய் நிபுணர் டாக்டர் சதீஷிடம் கேட்டபோது: ``சிக்கன் 65ல் சேர்க்கப்படும் நிறத்தால் உடனடி பாதிப்பாக நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை அதிகரிப்பால் இரைப்பை அழற்சி ஏற்படும். நீண்ட நாட்கள் அதைச் சாப்பிட்டு வந்தால் பெருங்குடலில் கேன்சர், சிறுநீரகப் பாதிப்பு உண்டாகும். தொடர்ந்து சிறுநீரகத்திலிருந்து ரசாயன நச்சுப் பொருட்கள் ரத்தத்தோடு கலந்து சிறுநீர்ப் பைக்கும் செல்லும். அங்கே ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப் பையில் புற்றுநோய் வரும் ஆபத்து உண்டு. கழுத்தில் கழலை, மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது' என்று எச்சரிக்கிறார்.


பி.கு.:
என்ன நண்பர்களே....அதிர்ச்சியாக உள்ளதா? இந்த மேட்டர், ஏதோ பத்திரிக்கையிலோ, பதிவிலோ வந்தது போலத் தெரிகிறது. எதுவாக இருந்தாலும், எழுதியவர்களுக்கும் பகிர்ந்தவர்களுக்கும் நன்றி. இதையும் நீங்கள் உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இந்தியாவில் உணவுக்கான வண்ணங்கள் அளவு மீறிப் பயன்படுத்தப்படுவதும், தடை செய்யப் பட்ட வண்ணங்கள் பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. இது சரியான முறையில் கண்காணிக்கப்படுகிறதா என்று தெரியவில்லை. சிறு நகரங்களில் இது இன்னும் கேள்விக்குரியது.

இந்நிலையில் நாம்தான் எச்சரிக்கையோடு பளிச்சென்று வண்ணங்கள் நிறைந்த உணவுப்பொருட்களைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். கோபி மன்சூரியன், பஜ்ஜி, சில்லி சிக்கன் போன்றவை மீதும் எனக்கு சந்தேகம் உண்டு.

மேலதிக தகவல்களுக்கு, விக்கியிலோ, கூகிளிலோ சென்று பார்க்கலாம். பிபிசி மற்றும் இங்கிலாந்தின் ஃபூட் சேஃப்டி ஏஜென்சியின் செய்தி அறிக்கைகளையும் பாருங்கள்.



86 comments:

test said...

vadai!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னைக்கு சிக்கன் உங்களுக்கே ஜீ....!

Arun Prasath said...

chicken ellam vaenam... vadai...

செல்வா said...

POCHU..!!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

ONLINE போட்டா அடிப்பீங்களா ..

test said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
இன்னைக்கு சிக்கன் உங்களுக்கே ஜீ....!//

ஹா ஹா நன்றி! :-)

எஸ்.கே said...

உண்மை சார் நான் இதை கேள்விப்பட்டிருக்கேன். கலருக்காக சேர்க்கிறது எவ்வளவு கெடுதல் தருது! ஆனா ருசிக்காக அதை கவனிக்க மாட்டோறோம்!

Arun Prasath said...

அண்ணே இது 2 3 மாசம் முன்னாடி விகடன்லையோ, குமுதம்லையோ படிச்ச ஞாபகம்

ஜெயந்த் கிருஷ்ணா said...

பதிவு ரொம்ப பெருசா இருக்கு.. அதனால படிக்க முடியாது..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
ONLINE போட்டா அடிப்பீங்களா ../////

இல்ல ஒரு பிளெட் 65 கொடுப்போம்....!

பொன் மாலை பொழுது said...

ஐயோ ஐயோ ... இதுக்குத்தான் பதிவுகள ஒழுங்கா படிக்கணும் கறது.
நேத்திக்கே இது ஒரு பதிவா வந்துடிச்சி பன்னி.

இருந்தாலும் படிக்காதவுக படிப்பாக இல்ல?

பொன் மாலை பொழுது said...
This comment has been removed by the author.
பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Arun Prasath said...
அண்ணே இது 2 3 மாசம் முன்னாடி விகடன்லையோ, குமுதம்லையோ படிச்ச ஞாபகம்/////

இருக்கலாம், அதத்தான் கீழ பொட்டிருக்கேன்...!

எஸ்.கே said...

பெரும்பாலான ஃபாஸ்ட்புட் அய்ட்டங்களில் நிறத்திற்காகவும் சுவைக்காகவும் சேர்க்கப்படும் பொருட்களால் கெடுதலே ஏற்படுகிறது!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கக்கு - மாணிக்கம் said...
ஐயோ ஐயோ ... இதுக்குத்தான் பதிவுகள ஒழுங்கா படிக்கணும் கறது.
நேத்திக்கே இது ஒரு பதிவா வந்துடிச்சி பன்னி.

இருந்தாலும் படிக்காதவுக படிப்பாக இல்ல?////

ஆமாண்ணே.. இது எனக்கு ஈமெயில்ல வந்துச்சு, ஆனா மேட்டர் ஆனந்தவிகடன்ல வந்ததாம்...எப்படியோ எல்லோரும் தெரிஞ்சுக்கிட்டா சரி!

சௌந்தர் said...

அதானே பார்த்தேன் பன்னிக்குட்டிக்கு தான் அறிவு இல்லையே என்னடா கிழே பார்த்தல் தான் தெரியுது....ம்ம்ம்

ஜெயந்த் கிருஷ்ணா said...

இந்த விஷயம் தெரியாம சிக்கன் 65 , 650 6500 ல்லாம் சாப்பிடிருக்கனே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
ONLINE போட்டா அடிப்பீங்களா ../////

இல்ல ஒரு பிளெட் 65 கொடுப்போம்....!

//

offline

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
பதிவு ரொம்ப பெருசா இருக்கு.. அதனால படிக்க முடியாது..////


சிறுசா இருந்தாமட்டும் இவரு படிச்சு முடிச்சுட்டுத்தான் மறுவேல பாப்பாரு...!

செல்வா said...

//இந்த கெமிக்கல் கலந்த சிக்கன் 65 சாப்பிடுவதால் வயிற்றில் கேன்சர், சிறுநீரகக் கோளாறு. மரபணுக்களில் பாதிப்பு போன்ற நோய்கள் உண்டாவதைக் கண்டறிந்திருக்கிறார்கள்//

நல்ல வேளை நான் சிக்கன் 65 சாப்பிடுவதே இல்லை .!!

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 19
////வெறும்பய said...
பதிவு ரொம்ப பெருசா இருக்கு.. அதனால படிக்க முடியாது..////


சிறுசா இருந்தாமட்டும் இவரு படிச்சு முடிச்சுட்டுத்தான் மறுவேல பாப்பாரு...////

ஒரு வரி இருந்தாலும் நாங்க படிக்க மாட்டோம் இதான் எங்கள் கொள்கை

சௌந்தர் said...

கோமாளி செல்வா said... 20
//இந்த கெமிக்கல் கலந்த சிக்கன் 65 சாப்பிடுவதால் வயிற்றில் கேன்சர், சிறுநீரகக் கோளாறு. மரபணுக்களில் பாதிப்பு போன்ற நோய்கள் உண்டாவதைக் கண்டறிந்திருக்கிறார்கள்//

நல்ல வேளை நான் சிக்கன் 65 சாப்பிடுவதே இல்லை .///

ஏன் சிக்கன் 75 சாப்பிடுவியா

செல்வா said...

//எடுத்துக்காட்டாக சூடான் டை, மெட்டானில் எல்லோ கெமிக்கல்களைச் சேர்த்து துணிகளுக்கு சாயம் ஏற்றுவார்கள்.//

துணிக்கு போடுற பவுடர சாப்பாட்டுக்குள்ள போடுறாங்களா ..?

செல்வா said...

25

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
பதிவு ரொம்ப பெருசா இருக்கு.. அதனால படிக்க முடியாது..////


சிறுசா இருந்தாமட்டும் இவரு படிச்சு முடிச்சுட்டுத்தான் மறுவேல பாப்பாரு...!

//

இதுக்கு மேல நான் படிச்சேன்னு சொன்னாலும் நம்பவா போறீங்க..

Unknown said...

அண்ணே அண்ணே

செல்வா said...

//அப்படி கெமிக்கல் படாத இடம் முதலில் கெட்டுப்போய் மொத்த சிக்கன் 65ஐயும் கெட்டுப்போகச் செய்து விடுகிறது. அதனால் அதிலிருந்து சரியான ரிசல்ட் எடுக்க முடியாமல் போய் விடுகிறது.உணவுக் கலப்பட சட்டத்தைப் பொறுத்தமட்டில் வியாபாரிகளுக்கும், சில பங்களிப்பு இருப்பதால் வியாபாரிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர்''//

அட பாவமே .. எப்படியோ அவுங்க தப்பிச்சுக்குவாங்க ..!!

செல்வா said...

//இதையும் நீங்கள் உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.//

அப்படியே யாரையாவது தொடர் பதிவுக்கு கூப்டிருக்கலாம் .. ஹி ஹி ஹி ..

Unknown said...

அண்ணே அண்ணே பன்னிகுட்டி அண்ணே நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப ரெம்ப கெட்டு போச்சுனே

வினோ said...

அட எப்படி எல்லாம் வியாதி வருது.. :(
அதிர்ச்சியா இருக்கு தல...

எஸ்.கே said...

//கோமாளி செல்வா said... 28

//இதையும் நீங்கள் உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.//

அப்படியே யாரையாவது தொடர் பதிவுக்கு கூப்டிருக்கலாம் .. ஹி ஹி ஹி .. //

எப்படி செல்வா எப்படி இதெல்லாம்?

karthikkumar said...

இது போன்ற பாஸ்ட் food சாப்டர பார்ட்டிகளெல்லாம் பாஸ்டா போய் சேர்ந்துருவாங்களோ. டவுட்டு நெம்பர் 26542 விளக்கவும்

அருண் பிரசாத் said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்....


சிக்கன் 65 ல எத்தன சிக்கன் இருக்கும்?

மங்குனி அமைச்சர் said...

சொன்னா உடனே கேட்ருவாங்கைன்னா நினைக்கிரே பண்ணி ........... ஹி.ஹி.ஹி........... அப்புறம் அவனுக கவுரவம் என்னாகிறது ...... சரி விடு எனக்கு ஒரு பிளேட் 65 நல்ல கலரா குடு

Anonymous said...

அருமையா சொல்லி இருக்கீங்க !!!
இந்த coloring agent பத்தி எங்க மேடம் ஒரு வாரம் கிளாஸ் எடுத்தாங்க ஒன்னும் புரியல
ஆனா தல நீங்க ஒரே பதிவுல கலக்கிடிங்க !!!!

சிவசங்கர். said...

உனக்கு என்ன ஆச்சுயா?

அன்பரசன் said...

///கல்பனா said... 35

அருமையா சொல்லி இருக்கீங்க !!!
இந்த coloring agent பத்தி எங்க மேடம் ஒரு வாரம் கிளாஸ் எடுத்தாங்க ஒன்னும் புரியல
ஆனா தல நீங்க ஒரே பதிவுல கலக்கிடிங்க !!!! ///

ஏத்தி விடுறாங்களே!!!

மொக்கராசா said...

பன்னி படத்தை பார்த்த உடன் சரக்க அடிக்க ஆசை வந்துச்சு,ஆனா பதிவை படிச்சவுடன் வந்த ஆசை எல்லாம் போச்சு

ஆமா பன்னி என்ன திடீரென பொது நல அக்கறை

சர்பத் said...

என்ன கொடுமை சார் இது. காய்கறி, பழ வகைகள் மருந்து தெளித்து வளர வைப்பதாலும் பழுக்க வைப்பதாலும் பக்க விளைவுகள் வருவதாக சமீபத்தில் படித்தேன். இப்போது சிக்கெனிலும்... பேசாமல் எதாவது சித்தரிடம் ட்ரைனிங் எடுத்து உணவு உண்ணாமல் வாழும் முறையை கற்க வேண்டும்!

மொக்கராசா said...

உங்களுக்கு இந்த மாதிரி நல்ல மெயில் அனுப்புறாங்க

என்னக்கும் வருது பாருங்க மெயில்

காகிதத்தால் செய்த ஆய்யுதத்தால் என்னை கொல்ல பார்த்தான் -என் நண்பன்
அவன் கையில் 'காவலன்' டிக்கெட்....


பன்னைடை பசங்க் எப்படிதான் எனக்கு அனுப்புறாங்க்

Anonymous said...

///கல்பனா said... 35

அருமையா சொல்லி இருக்கீங்க !!!
இந்த coloring agent பத்தி எங்க மேடம் ஒரு வாரம் கிளாஸ் எடுத்தாங்க ஒன்னும் புரியல
ஆனா தல நீங்க ஒரே பதிவுல கலக்கிடிங்க !!!! ///

ஏத்தி விடுறாங்களே!!!///

மார்கழி மாசத்துல non veg யா இப்பிடியாவது பாத்துகலாம்-ல
மனிஷன் நாளை காடை கௌதாரி பத்தி எழுத போறாரு ...
இன்னைக்கு கமெண்ட் போடுறவங்களுக்கு பார்சல் அனுப்ப போறாராம்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சிரிக்க வைக்க மட்டுமல்ல.
பதிவர்களின் நலத்தின்மேலேயும்
அக்கறையுண்ண்டு
-என்கின்ற தங்களின் சமூக நலன்
நாடும் மனதிற்கு இந்த இடுகை
சான்றாகும்.
பன்னி சார், வாழ்க!
42

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

மிக நல்ல பதிவு .
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள் .

வைகை said...

online

வைகை said...

ஏலே மக்கா யாரும் சிக்கென் சாப்புடாதியலே!! அதுல எதோ இது இருக்காம்! நம்ம இவரே சொல்லிட்டாரு! புரியுதா!! முக்கியமா என்னை விட்டுபுட்டு சாப்புடாதிக!

Madhavan Srinivasagopalan said...

லேட்டா வந்தாலும்.. கமெண்டு போட்டுட்டுத்தான் பதிவப் படிக்கணும்.. அப்புறம் வரேன்..

ஜெய்லானி said...

அப்போ இனிமே சிக்கன் 66ஐ சாப்பிட வேண்டியதுதான்

வைகை said...

48

வைகை said...

50

ஜெய்லானி said...

இனிமே சாப்பிடும் போது எனக்கு பாதி குடுத்துடுங்க ..நோயே வராது

வைகை said...

தூங்க போகைல ஒரு வட!

தினேஷ்குமார் said...

தகவலுக்கு நன்றி கவுண்டரே பங்காளிகளா சரக்குக்கு சைடிஷ்ஷ மாத்துங்க

Madhavan Srinivasagopalan said...

பின் குறிப்புல சொன்ன மொத ரெண்டு பத்தியும் ரொம்ப சரி..

இதுக்குத்தான், எங்கப்பா வெளியில எதையுமே சாப்டாம இருப்பது நல்லதுன்னு சொல்லுவாரு.. அப்படி செய்தும் வருபவர்.

பின்குருப்பு : நான் ஓர் 'சுத்த சைவப் பிரியர்'

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சிக்கன் 65 பிரச்சனைனா ஒரு துண்டை விட்டுட்டு சிக்கன் 64 சாப்பிட வேண்டித்தான?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

non veg? Bad boys

NaSo said...

அஜின மோட்டோனு ஒன்னு வருது அதைப் பற்றியும் எழுதுங்க மாம்ஸ்.

NaSo said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சிக்கன் 65 பிரச்சனைனா ஒரு துண்டை விட்டுட்டு சிக்கன் 64 சாப்பிட வேண்டித்தான?//

கண்ணு தெரியலையா?

அன்பரசு said...

This came in kumudam last year. I stopped eating chicken 65 or kabab from that day.

அந்நியன் 2 said...

என்னது ...சிக்கன் 65 வில் கேன்சரா.....சரி சரி ..டி ராஜேந்தர் ரொம்ப கோபமா இருக்கார் அவர்கிட்டே இதை சொல்லிட்ராதியே அப்புறம் கேமராவை போட்டு காண்பித்து,கூட்டத்தை எமோசன் பண்ணி காண்பிக்கப் போகிறார்.நேத்து மதுரையில் நடந்த கூட்டத்தில் ராஜேந்தர் ரசிகர்கள் லட்ச்ச கணக்கில் இந்த 65 த்தான் தின்றார்கள் அப்போ அவர்களின் கதி ?

கொஞ்சம் இந்த ரியல் காமடியை பாருங்களேன், டி ராஜேந்தர் அடிக்கும் கூத்தை,கோடி ரூபாயை தொலைத்து அழுகும் மனுஷன் பார்த்தாக் கூட சிரிச்சு விடுவான். http://naattamain.blogspot.com/2010/12/blog-post_14.html

Ramesh said...

இதை நான் ஒரு வருடத்திற்கு முன்னர் குங்குமத்தில் படித்தேன்.. ஆனால் நீங்கள் இதைத் தெளிவாக எதோ வார இதழில் படித்த நியாபகம்னு போட்டுட்டீங்க... எனினும் உபயோகமான தகவல் நண்பரே..

அணில் said...

அவசியமான பதிவு. இனிமேல கடைகளில் பஜ்ஜி சாப்பிடறதை குறைச்சிக்க போறேன். உங்க பேரே ஒரு டெரர்ரா இருக்கே!

பாலா said...

நான் உன்ன என்ன வாங்கிட்டு வரச்சொன்னேன்?
சிக்கன் 65 வாங்கிட்டு வரச்சொன்னீங்க..

Chitra said...

Use of unapproved food colors is definitely injurious to health.
Very informative post.

settaikkaran said...

ஆத்தத்தோ! நான் இப்ப தானே சிக்கன் 65 ஒண்ணுக்கு ரெண்டு பிளேட் முழுங்கிட்டு வர்றேன். எனக்கு சங்கா...? அவ்வ்வ்வ்!!

Angel said...

first thanks for sharing this with every one.
we need to be aware of these adulterated colours used in food.

கருடன் said...

சரி மச்சி!! அப்பொ இனி உன் 65 எல்லாம் நான் திங்கரேன்... உனக்காக இது கூடவா செய்ய மாட்டேன்.... :))

ஆமினா said...

ஆமாம் ஆமாம். புத்தகத்தில் வந்தது தான். கிட்டதட்ட 1 வருஷத்துக்கு மேலவே இருக்கும். மங்கையர் மலரோ விகடனிலோ வந்தது.

அதை தொடர்ந்து விஜய் டீவியில் நடந்தது என்ன நிகழ்ச்சியில் விரிவாக விளக்கியிருந்தார்கள். முதல் நாள் பிரியாணியை சுட வைத்து அடுத்த நாள் பல்ளிக்கு போகும் போது கொடுக்க அதை சாப்பிட்ட 2 சிறுவர்கள் பள்ளியில் மரணித்தார்கள்.

கொடுமையான விஷயம் தான்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சிக்கன் 65 என்றால் சிவப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது சிக்கன் 65 என்ற முடிவில் மக்கள் இருக்கிறார்கள். //

ஆம்..
ஆம்..ஆம்..
ஆம்..ஆம்..ஆம்..
ஆம்..ஆம்..
ஆம்..

..”அம்மா பாரு.. எப்படி தங்க கலர்ல ஜொலிக்கராங்க”னு, சொல்லிக்கிட்டு,

கிழிஞ்ச வேட்டைய, தூக்கி புடிச்சுக்கிட்டு, ஓட்டு போட க்யூல நிக்கிறான் பாரு...அது படிப்பறிவில்லாதவன் நிலை..

நீ மேல சொன்னது..படிச்சவனுகளின் நிலை..

என்னமோ பண்ணட்டும்..நீ வா மச்சி..ஒரு தம் அடிச்சுட்டு வரலாம்....ஹி..ஹி

சி.பி.செந்தில்குமார் said...

மிஸ்டர் ராம்சாமி நீங்களும் சமூக விழிப்புண்ர்வுக்கட்டுரை எழுத ஆரம்பிச்சுட்டா எங்களை சிரிக்க வைக்கறது யாரு?

சி.பி.செந்தில்குமார் said...

குமுதம் ஹெல்த் ஸ்பெஷ்லில் வந்த கட்டுரை இது ,உங்கள் மூலம் வலை உலகிற்கு கிடைத்தது

சி.பி.செந்தில்குமார் said...

நீங்களும் கமல் பாணில இறங்கிட்டீங்களே? ஒரு காமெடி ஒரு சீரியஸ்னு

சி.பி.செந்தில்குமார் said...

எனது லேட்டஸ்ட் பதிவில் பதிவில் உள்ள காமெடியை விட உங்கள் கமெண்ட்டில் தான் காமெடி செம என பலர் தெரிவித்தார்கள்.தொடரட்டும் உங்கள் கலக்கல் நகைச்சுவை

Anonymous said...

74

Anonymous said...

75

சாமக்கோடங்கி said...

சிக்கன் 65 ல கலர் கலந்ததை சாம்பிள் எடுத்து கேஸ் போடப் போனா அது ஒரு இருநூறு நாள் இழுத்தடிக்கப் படும்.. அப்புறம் பாத்தா அங்க சிக்கன் 265 தான் இருக்கும்.. நீதிபதி இது சிக்கன் 65 இல்ல, இது சிக்கன் 265 ன்னு தீர்ப்பு சொல்லிடுவார்..
இது தான் பிரச்சினை..

Sivakumar said...

அசைவப்பிரியர்களுக்கு அபாய மணி அடித்து இருக்கிறீர்கள், ராமசாமி!

தேவன் மாயம் said...

அந்த ஃபுட்கலர்ஸ் உணவுப் பொருட்களில் கலந்து உணவுப் பொருட்களுக்கு நிறத்தைக் கொடுத்த பின்புதான் அது குற்றமாகிறது.//

ஆமாம்! நண்பரே! நல்ல அலசல்!

King Style said...

அதை தானே நண்பா நம்ம மக்கள் விரும்பி சாப்பிடுறங்க...........

King Style said...

அதை தானே நண்பா நம்ம மக்கள் விரும்பி சாப்பிடுறங்க...........

ப.கந்தசாமி said...

தெரிஞ்சே செய்யும் தவறுகளில் இது முதல் இடம் பிடிக்கிறது.

Geetha6 said...

அருமை!

Unknown said...

இயற்கைக்கு முரணான செயற்கை விசயங்கள் எல்லாமே எப்போதும் மனிதனுக்கு கேடு தானே.

சீரிசான பதிவுக்கு நன்றிகள்.

Unknown said...

வாரத்திற்கு ஒரு முறையாவது சீரிசா மாறுங்கோ...
அட .. சீரிஸ் பதிவு எழுதுங்கோ..
அதிகமான வாசிப்பாளர்களை உங்கள் பதிவு சென்றடைவதால்...

கொஞ்சம் யோசிங்க சகோ...

Anonymous said...

கலர் போட்டிருந்தா கழுவிட்டு சாப்பிடக் மாட்டானுகளா , இவனுங்க எல்லாம் என்னா பெரிய கலெக்ட்ருங்களா ?

சிவப்பா இருந்தா சாயம்னு சவுண்டு உட்றது கலரா இல்லைன்னா என்னாடா உளுத்து போனாதான்னு கேட்கிறது,அப்புறம் எப்பா தாண்ட நாங்க சாயம் போட்டு பார்கிறது ?????

டேய் என்னாலா உங்க ஒவ்வொருத்தனுக்கும் பதில் சொல்ல முடியலடா...

டேய்! டெட்டடே! டாடா டி..டிடீ..
இந்த கருமம் புடிச்ச சிக்கனை நீங்க திங்கலேன்னு எவன்டா அழுதது மைதா மாவு தலையனுகளா....உங்க பானிபூரி வாயை சாத்துங்கடே

Prabu Krishna said...

இனிமேல் ஆதிவாசியாதான் ஆகணும் போல.

தங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்து உள்ளேன்(கமெண்ட் பாக்ஸ் இல் உள்ளது).நேரம் இருந்தால் எழுதவும்.
http://balepandiya.blogspot.com/2010/12/blog-post_19.html

ராஜகோபால் said...

இந்த தொடர் பதிவு தொல்ல தாங்கலப்பா., நின்னா குத்தம் நடந்தா குத்தம் இப்ப எழுதனாலும் குத்தம் பன்னி எழுதுங்க அப்புடியே உங்களோட குழந்தை பருவ அனுபவங்களையும் சொன்னா உங்களுக்கு பின்னால வர சந்ததிகள் அத பாத்து படிச்சு தெளிவா நடந்துக்குவாங்க., ரெடி ஸ்டார்ட் மியூசிக்.