விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மம்சாபுரம் என்ற ஊரைச் சேர்ந்த ராமர் பிள்ளை என்பவர் 1996-ம் ஆண்டு மூலிகையில் இருந்து பெட்ரோல் எடுக்கும் முறையைக் கண்டுபிடித்ததாகக் கூறி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அவர் அப்போதைய முதலமைச்சர்கள் சந்திரபாபு நாயுடு, கலைஞர் முன்னிலையில் அதைச் செய்து காட்டி அனைவரையும் வியக்கவும் வைத்தார். ஆனால் IIT-யில் விஞ்ஞானிகள் முன்பு அவர் மூலிகையில் இருந்து பெட்ரோல் எடுத்துக் காண்பித்தபோது விஞ்ஞானிகள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். அதற்கு பல விஞ்ஞானக் காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால் மீடியாக்களின் தயவால், ஒரு பட்டிக்காட்டு விஞ்ஞானியின் கண்டுபிடிப்பைப் படித்த விஞ்ஞானிகள் புறக்கணிக்கிறார்கள் என்று மக்களும் அரசாங்கமும் நம்ப வைக்கப்பட்டார்கள். இதன் பின்பு மாநில அரசுகளிடமும் மக்களிடமும் கிடைத்த ஆதரவை வைத்து ராமர் பிள்ளை மூலிகைப் பெட்ரோல் தயாரித்து விற்று வந்தார். 2000-ம் ஆண்டில் இரசயானங்களை மூலிகைப் பெட்ரோல் என்று சொல்லி விற்பதாக ராமர் பிள்ளையைக் கைது செய்தது CBI. இது கதைச் சுருக்கம்.
இப்போது கொஞ்சம் விரிவாக நடந்தது என்ன என்று பார்ப்போமா?
ஆரம்பத்தில் அங்கே இங்கே என்று அலைந்து கொண்டிருந்த ராமர் பிள்ளைக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் ஆதரவளித்தது. அது சென்னை IIT- க்கு ராமர் பிள்ளைக்கு ஆய்வுக்கூடத்தில் விஞ்ஞானிகள் முன்பு மூலிகைப் பெட்ரோல் செய்துகாட்ட உதவுமாறு அறிவுறுத்தியது. ராம்ர் பிள்ளையின் மூலிகைப் பெட்ரோல் சென்னை IIT-யின் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் துறையில் பரிசோதனை செய்ய்ப்பட்டது. அது 2-ஸ்ட்ரோக், மற்றும் 4-ஸ்ட்ரோக் எஞ்சின்களை ஓட்டுமா, அதன் திறன் என்ன என்று ஆராயப்பட்டது. (இங்கே கவனிக்க வேண்டியது, இந்தச் சோதனையில் மூலிகைப்பெட்ரோலின் தன்மை குறித்தோ, அதில் கலந்திருப்பது என்னவென்றொ, அது எப்படி உருவாகின்றது என்றோ ஆராயப்படவில்லை, அது எஞ்சின்களை இயக்குமா என்று மட்டுமே சோதிக்கப்பட்டது). அச்சோதனையில் வெற்றியும் பெற்றது. இதுவே மூலிகைப் பெட்ரோலுக்கு ஒரு அங்கீகாரத்தை அளித்தது.
பின்னர் ராமர்பிள்ளை சென்னை IIT யில் மூலிகையை வைத்துத் தண்ணீரைப் பெட்ரோலாக மாற்றும் பரிசோதனையை விஞ்ஞானிகளுக்கு முன்பு செய்துகாட்டினார். அங்குதான் பிரச்சனை தொடங்கியது. பரிசோதனைக்குத் தேவையான பாத்திரங்கள் IIT ஆய்வகத்தில் இருந்து கொடுக்கப்பட்டன. அனைத்து பொருட்களும் எடை போடப்பட்டது. கலக்குவதற்காக கிளாஸ் குச்சி (ஆய்வகங்களில் வழமையாகப் பயன்படுத்தப்படுவது) கொடுப்பட்டது. ராமர் பிள்ளையும் 45 நிமிடங்கள் வரை கலக்கியும் பெட்ரோல் உருவாகவில்லை. பின்னர், தான் கொண்டுவந்திருந்த உலோகத்திலான குச்சியைக் கொண்டு கலக்கினார் ராமர் பிள்ளை. 5 நிமிடங்களில் அந்தக் குச்சியிலிருந்து கெரோசின் வாடையுடன் ஏதோ திரவம் வரத்தொடங்கியது. அந்தக் குச்சியை மீண்டும் எடை போட்டுப் பார்த்த போது அது 28.68 gm குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே விஞ்ஞானிகள் மூலிகை பெட்ரோல் அந்தக் குச்சியில் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று முடிவு கட்டினார்கள்.
இதற்கு ராமர் பிள்ளையால் விளக்கம் சொல்ல முடியவில்லை. மறுபடியும் செய்துகாட்டசொல்லி விஞ்ஞானிகள் கேட்டபோது, போதுமான அளவு மூலிகைகள் கொண்டுவரவில்லை என்று கூறிவிட்டார் ராமர் பிள்ளை. இவ்வாறு ராமர் பிள்ளையின் மூலிகைப் பெட்ரோல் சோதனை தோல்வியில் முடிந்தது. பின்னர் IIT மறுபடியும் ராமர்பிள்ளையை அழைத்தபோது தனக்கும் குடும்பத்தினருக்கும் தகுந்த பாதுகாப்பு அளித்தால் மட்டுமே மீண்டும் செய்துகாட்ட முடியும் என்று கூறிவிட்டார்.
ஆனால் விஞ்ஞானிகள் வேண்டுமென்றே ராமர் பிள்ளையை நிராகரிப்பதாகவே மீடியாக்களும் பொதுமக்களும் கருதினார்கள். விளைவு? ராமர் பிள்ளை வெற்றிகரமாக (?) மூலிகைப் பெட்ரோல் உற்பத்தியைத் துவக்கினார் (அதன் பின்புலங்களையும் பினாமிகளையும் இங்கு பார்க்கலாம்). மூலிகைப் பெட்ரோல் விற்பனை சில வருடங்கள் சத்தமில்லாமல் நடந்தது. ராமர் பிள்ளை சென்னை IIT யில் நடந்ததை மறந்து விட்டார், ஆனால் CBI மறக்கவில்லை. அவர்கள் எல்லாவற்றையும் ரகசியமாகக் கண்காணித்துக் கொண்டுதான் இருந்தார்கள். தகுந்த ஆதாரங்கள் கிடைத்தவுடன் கைது செய்துவிட்டார்கள்.
அப்படி என்னதான் செய்தார் ராமர் பிள்ளை? இரசாயனத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தபடும் ஹைட்ரோகார்பன் எனப்படும் பென்சீன், டொலுவீன், (இன்டஸ்ட்ரியல் சால்வன்ட்ஸ் industrial solvents, அதாவது கரைப்பான்கள்) என்ற இரசாயனங்களைப் பல்வேறு பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகளில் இருந்து நண்பர்கள் உதவியுடன் குறைந்த விலைக்கு கொண்டுவந்து இருக்கிறார். அதை மிக்ஸ் பண்ணி மூலிகைப் பெட்ரோல் என்று விற்றிருக்கிறார். (இங்கே கவனிக்க: இந்த பென்சீன் மற்றும் டொலுவீன் எனும் இரசாயனங்கள் பயங்கரமாகப் பற்றி எரியும் தன்மை உடையவை. பெட்ரோலை விட அதிகம் எரியும் சக்தி கொண்டவை. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கருகே சுங்குவார் சத்திரம் என்னும் ஊரில் ஒரு டேங்கரும், டிராக்டரும் மோதி பற்றி எரிந்து கிட்டத்தட்ட 100 பேர் பலியானார்கள் எனபது நினைவிருக்கலாம். அந்த டேங்கர் லாரி ஏற்றி வந்தது பென்சீன் என்னும் திரவமே). CBI ஆட்கள், ராமர் பிள்ளையின் மூலிகைப் பெட்ரோலை சாதாரண மனிதர்கள் போல வந்து வாங்கிச் சென்று லேபுகளில் சோதனை செய்த போது இந்த இரசாயனங்கள் இருப்பது தெரிய வந்தது (லேபில், GC-MS எனப்படும் கருவியில் இது பரிசோதிக்கப்பட்டது). பின்பு அவருடைய நடமாட்டங்கள், தகவல் தொடர்புகளை கிளறிய CBI இந்த ரசாயனங்கள் எங்கிருந்து ராமர்பிள்ளைக்கு கிடைக்கின்றன, யார் யார் உதவுகிறார்கள் என்று கண்டுபிடித்தது. ராமர்பிள்ளையின் மூலிகைப் பெட்ரோலும் முடிவுக்கு வந்தது.
இப்படி ஒரு சின்ன உலோகக் குச்சியில் இரசாயனங்களை ஒளித்து வைத்துக் கொண்டு விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், மீடியாக்கள், பொதுமக்கள் என்று சகட்டுமேனிக்கு எல்லோரையும் ஏமாற்றியிருக்கிறார் ராமர் பிள்ளை! அவருடைய அப்பாவி கிராமத்தான் தோற்றம் வேறு அதற்கு மிக உதவியாக இருந்தது. இவரை இன்னும் நம்புபவர்கள் வேறு இருக்கிறார்கள்! இதுபோன்ற விஷயங்களில் மீடியாக்கள் பொறுப்புடன் நடந்து கொள்வது நல்லது.
இப்போது மறுபடியும் ராமர் பிள்ளை கிளம்பி வந்திருக்கிறார். அக்டோபர் 2-ம் தேதி மெரினா கடற்கரையில் ஒரு லட்சம் லிட்டர் கடல் நீரைப் பெட்ரோலாக்குவேன்னு சவால் விட்டிருக்கிறார், என்ன நடக்குதுன்னுதான் பார்ப்போமே?
98 comments:
மீண்டும் செமையா தகவல் தந்திருக்கீங்க! நன்றி! வாழ்த்துக்கள்!
நன்றி எஸ்.கே!
தலைப்பே சூப்பர் அப்பு இருங்க படிச்சுட்டு வரேன்
தமிழ்நாட்லயும் இந்தியாவுலயும் தான் இப்படி கேணத்தனமா மீடியா எல்லாரையும் பிரபலம் ஆக்குதுய்யா....
//இம்சைஅரசன் பாபு.. said...
தலைப்பே சூப்பர் அப்பு இருங்க படிச்சுட்டு வரேன்//
வாப்பு!
//அருண் பிரசாத் said...
தமிழ்நாட்லயும் இந்தியாவுலயும் தான் இப்படி கேணத்தனமா மீடியா எல்லாரையும் பிரபலம் ஆக்குதுய்யா....//
என்ன பண்றது? மக்களுக்கு விழிப்புணர்வு வரனும்!
:) சில நேரங்களில் உண்மை எது போய் எது என மக்கள் அறிந்து கொள்ள தெரிந்து கொள்ள மறுத்து விடுகிறார்கள். ஆதாரங்களும் செய்திகளும் விழிப்புணர்வை ஏற்படுத்தட்டும். ராமர் பிள்ளை நல்லாவே பிறருக்கு ராமம்/நாமம் போட பழகி இருக்கிறார். என் நெற்றியை மறைத்து கொள்கிறேன். ;)
விரிவான தகவல்கள் சொல்லியிருக்கீங்க!CBI ல இருக்கவேண்டிய ஆளு ப்ளாக்குறீங்க:)
அந்த பேட்டியை நானும் பார்தேன். திடமாகவே பேசுகிறார். நம்பிக்கையுடன் சவாலும் விடுகிறார்.
தன் உயிருக்கு ,ஆராய்ச்சிக்கு ஆபத்து என்ற மிரட்டல் வேறு.
ஐரோப்பிய நாட்டில் பேடன்ட் வாங்கியுள்ளதாக வேறு சொல்கிறார்.
விளக்கமும் இல்லை. ஒன்றும் புரியவில்லை. பாப்போம்.
மீடியாக்கள் சமூகப் பொறுப்புணர்வை இழந்து வெகுகாலமாகின்றது. அவர்களுக்குத் தேவை எதை விற்றால் பரபரப்பாகப் போகும் என்பதே!
//"சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கருகே சுங்குவார் சத்திரம் என்னும் ஊரில் ஒரு டேங்கரும், டிராக்டரும் மோதி பற்றி எரிந்து கிட்டத்தட்ட 100 பேர் பலியானார்கள் //
அது ஒரு திருமண வீட்டைச் சேர்ந்தவர்கள் கும்பலாக இறந்துபோன விபத்துதானே?
பண்ணி அருமையிலும் அருமை .அழ்ந்த சிந்தனை ......அற்புதமான விளக்கம்....... நானும் பார்த்தேன் ஹையோ .பழைய படியும் இந்த ஆள் கடல் நீரில் இருந்து பெட்ரோல் எடுக்கிறேன் என்கிறானே .
இதை வேற சன் தொலைகாட்சி .enthiren trailer கண்பிச்சது மாதிரி டிக்கெட் போட்டு விற்றாலும் விற்பான்.ஜாக்கிரதை பன்னி
//V.Radhakrishnan said...
:) சில நேரங்களில் உண்மை எது போய் எது என மக்கள் அறிந்து கொள்ள தெரிந்து கொள்ள மறுத்து விடுகிறார்கள். ஆதாரங்களும் செய்திகளும் விழிப்புணர்வை ஏற்படுத்தட்டும். ராமர் பிள்ளை நல்லாவே பிறருக்கு ராமம்/நாமம் போட பழகி இருக்கிறார். என் நெற்றியை மறைத்து கொள்கிறேன். ;)//
வாங்க சார், ஆதாரங்களுக்கும், செய்திகளுக்கும் மீடியாக்கள் உரிய முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே நிலைமை மாறும். இல்லையென்றால் இன்னும் பலர் இதுபோல் கிளம்பி வந்துகொண்டுதான் இருப்பார்கள்!நன்றி!
//ராஜ நடராஜன் said...
விரிவான தகவல்கள் சொல்லியிருக்கீங்க!CBI ல இருக்கவேண்டிய ஆளு ப்ளாக்குறீங்க:)//
வாங்க சார், இதுக்கே CBI நம்மளப் புடிக்காம இருந்தாச் சரி!
//கக்கு - மாணிக்கம் said...
அந்த பேட்டியை நானும் பார்தேன். திடமாகவே பேசுகிறார். நம்பிக்கையுடன் சவாலும் விடுகிறார்.
தன் உயிருக்கு ,ஆராய்ச்சிக்கு ஆபத்து என்ற மிரட்டல் வேறு.
ஐரோப்பிய நாட்டில் பேடன்ட் வாங்கியுள்ளதாக வேறு சொல்கிறார்.
விளக்கமும் இல்லை. ஒன்றும் புரியவில்லை. பாப்போம்.//
பார்க்கத்தானே போகிறோம்!
hi
endiran story super. Anga padam release ayiducha?
//விந்தைமனிதன் said...
மீடியாக்கள் சமூகப் பொறுப்புணர்வை இழந்து வெகுகாலமாகின்றது. அவர்களுக்குத் தேவை எதை விற்றால் பரபரப்பாகப் போகும் என்பதே!
//"சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கருகே சுங்குவார் சத்திரம் என்னும் ஊரில் ஒரு டேங்கரும், டிராக்டரும் மோதி பற்றி எரிந்து கிட்டத்தட்ட 100 பேர் பலியானார்கள் //
அது ஒரு திருமண வீட்டைச் சேர்ந்தவர்கள் கும்பலாக இறந்துபோன விபத்துதானே?//
அதேதான் சார், அப்போது பத்திரிக்கைகள் அமிலம் ஏற்றி வந்த லாரி என்று எழுதின. அது முற்றிலும் தவறு. அது அமிலமல்ல, பென்சீன் தான். அமிலங்கள் தீப்பற்றி எரியாது (ஆனால் அமிலம் என்று எழுதினால் தானே பரபரப்பு!)
இன்னும் போற போக்க பார்த்த மாட்டு மூத்திரத்தில் இருந்து பெட்ரோல் எடுக்கிறேன் .கக்கா எச்சத்தில் இருந்து ஜாம் எடுக்கிறேன் .சொல்லிக்கிட்டு எவனாவது வருவான் அவனையும் இந்த மீடியாக்கள் close up shot போட்டு கண்பிக்கத்தான் போறாங்க
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
hi
endiran story super. Anga padam release ayiducha?//
அதுக்குள்ளேயா? (ஆமா ஸ்டோரி எப்பிடி லீக் ஆச்சு?)
நல்ல பதிவு /
ஏமாற்றி விட்டீர்கள். நீங்களும் சமுகத்தை பார்த்து சிந்திக்க ஆரம்பித்தால் எங்கே போவது? தலைப்பை பார்த்தவுடன் எப்போதும் போல நிச்சயம் வயிறு குலுக்க சிரிக்க வைத்து விடுவீர்கள் என்று உள்ளே வந்தேன். சிபிஜ ரிப்போர்ட் போலவே தெளிவாகவே நல்லாவே எழு தீ ட்டீங்க.
// VELU.G said...
நல்ல பதிவு ///
நன்றி சார்!
//ஜோதிஜி said...
ஏமாற்றி விட்டீர்கள். நீங்களும் சமுகத்தை பார்த்து சிந்திக்க ஆரம்பித்தால் எங்கே போவது? தலைப்பை பார்த்தவுடன் எப்போதும் போல நிச்சயம் வயிறு குலுக்க சிரிக்க வைத்து விடுவீர்கள் என்று உள்ளே வந்தேன். சிபிஜ ரிப்போர்ட் போலவே தெளிவாகவே நல்லாவே எழு தீ ட்டீங்க.//
வாங்க சார், இடைஇடையே இப்பிடிக் கொஞ்சம் போட்டுக்குறதுதான்! அடுத்த பதிவுல பிச்சிடலாம்!நன்றி சார்!
///இம்சைஅரசன் பாபு.. said...
இன்னும் போற போக்க பார்த்த மாட்டு மூத்திரத்தில் இருந்து பெட்ரோல் எடுக்கிறேன் .கக்கா எச்சத்தில் இருந்து ஜாம் எடுக்கிறேன் .சொல்லிக்கிட்டு எவனாவது வருவான் அவனையும் இந்த மீடியாக்கள் close up shot போட்டு கண்பிக்கத்தான் போறாங்க///
யோவ் நீயே எடுத்துக் கொடுப்பே போல?
விளக்கமாக புரியும்படி தகவல்களை சொல்லி இருக்கீங்க பாஸ்.
பகிர்வுக்கு நன்றி!
//என்னது நானு யாரா? said...
விளக்கமாக புரியும்படி தகவல்களை சொல்லி இருக்கீங்க பாஸ்.
பகிர்வுக்கு நன்றி!//
நன்றி பாஸ்!
அய்யா சாமி தலைவலிக்குது , இந்த உலகத்தில் யார் நல்லவர், கெட்டவர் என்றே தெரியவில்லை, இராமர் பிள்ளை யை நல்லவன் என்று நினைத்து கொண்டு இருந்தேன்.
பன்னி குட்டி சார் நீங்களாவது நல்லவரா, இல்ல கெட்டவரா
//சரவணக்குமார் said...
அய்யா சாமி தலைவலிக்குது , இந்த உலகத்தில் யார் நல்லவர், கெட்டவர் என்றே தெரியவில்லை, இராமர் பிள்ளை யை நல்லவன் என்று நினைத்து கொண்டு இருந்தேன்.
பன்னி குட்டி சார் நீங்களாவது நல்லவரா, இல்ல கெட்டவரா//
இந்தப் பன்னிக்குட்டி நல்லவனுக்கும் கெட்டவன், கெட்டவனுக்கும் கெட்டவன்!
நல்ல பதிவு ராம்சாமி. உங்கள் துறை சார்ந்த பதிவு என்பதால் கலக்கலான தகவல்களால் நிறைத்துவிட்டீர்கள்.
ஊடகங்கள் சமூகப் பொறுப்பைத் துறந்து லாபத்தை மட்டுமே அடிப்படை நோக்கமாக கொண்டு செயல்படத் தொடங்கியதுமே, அனைத்துப் பித்தலாட்டங்களும் உச்சாணிக் கொம்பில் ஏறி உட்கார்ந்து விட்டன.
வழக்கமான நக்கல், நையாண்டி, குத்தல், கலாய்ப்பு, நகைச்சுவைன்னு எதிர்பார்த்து வந்தா, பல தகவல்களை அருமையாகத் தொகுத்து வழங்கியிருக்கீங்க பானா ராவன்னா! பாராட்டுக்கள்!
உப்பு கலந்த பெட்ரோலில் வண்டி ஓடுமா? ஏன்னாக்க அங்க கடல் தண்ணிதான் இருக்கு ...
//கும்மி said...
நல்ல பதிவு ராம்சாமி. உங்கள் துறை சார்ந்த பதிவு என்பதால் கலக்கலான தகவல்களால் நிறைத்துவிட்டீர்கள்.
ஊடகங்கள் சமூகப் பொறுப்பைத் துறந்து லாபத்தை மட்டுமே அடிப்படை நோக்கமாக கொண்டு செயல்படத் தொடங்கியதுமே, அனைத்துப் பித்தலாட்டங்களும் உச்சாணிக் கொம்பில் ஏறி உட்கார்ந்து விட்டன.//
வாங்க கும்மி, நிறையப் பித்தலாட்டங்களில் மீடியாக்களுமே நேரடியா ஈடுபட்டுள்ளன. எல்லாமே காசுக்குத்தான்!
//சேட்டைக்காரன் said...
வழக்கமான நக்கல், நையாண்டி, குத்தல், கலாய்ப்பு, நகைச்சுவைன்னு எதிர்பார்த்து வந்தா, பல தகவல்களை அருமையாகத் தொகுத்து வழங்கியிருக்கீங்க பானா ராவன்னா! பாராட்டுக்கள்!//
வாங்க சேட்டை! அடுத்த பதிவுல நம்ம மேட்டரைப் பின்னிடுவோம்! நன்றி!
ஒவ்வொரு பதிவின் தன்மையையும் அதில் உங்களின் பொறுப்பையும் உணர்ந்து எழுதுகிறீர்கள்.உங்க பாணியில சொல்லனுன்னா சும்மா எகிறுதுங்கோவ்...
"பொய்யைப் பொருந்தச் சொன்னா நெஜம் திருதிருன்னு முளிக்கும்" அப்படீன்னு எங்க அப்பத்தா அடிக்கடி சொல்லும். நாட்டில இருக்கிற அத்தனை விஞ்ஞானிகளையும் முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறான். அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது ஒரு வெட்கக்கேடு.
// கே.ஆர்.பி.செந்தில் said...
உப்பு கலந்த பெட்ரோலில் வண்டி ஓடுமா? ஏன்னாக்க அங்க கடல் தண்ணிதான் இருக்கு ...//
நம்மாளுங்க இப்பிடி இருக்க வரைக்கும் இதுக்கும் மேலேயே மொளகா அரைப்பானுங்க சார்!
//Chef.Palani Murugan, LiBa's Restaurant said...
ஒவ்வொரு பதிவின் தன்மையையும் அதில் உங்களின் பொறுப்பையும் உணர்ந்து எழுதுகிறீர்கள்.உங்க பாணியில சொல்லனுன்னா சும்மா எகிறுதுங்கோவ்...//
நன்றி பாஸ்!
//DrPKandaswamyPhD said...
"பொய்யைப் பொருந்தச் சொன்னா நெஜம் திருதிருன்னு முளிக்கும்" அப்படீன்னு எங்க அப்பத்தா அடிக்கடி சொல்லும். நாட்டில இருக்கிற அத்தனை விஞ்ஞானிகளையும் முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறான். அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது ஒரு வெட்கக்கேடு.//
என்ன சார் பண்றது? எல்லாம் அரசியல் பெருச்சாளிங்களால வந்த வினை!
அடப்பாவிங்களா....
இவ்ளோ இருக்கா இதில??
கவுண்டர் படத்தப் பாத்ததும் காமடி பண்ணுவீங்கன்னு வந்தா, நல்லாவே எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்!
//// அது 2-ஸ்ட்ரோக், மற்றும் 4-ஸ்ட்ரோக் எஞ்சின்களை ஓட்டுமா, அதன் திறன் என்ன என்று ஆராயப்பட்டது. (இங்கே கவனிக்க வேண்டியது, இந்தச் சோதனையில் மூலிகைப்பெட்ரோலின் தன்மை குறித்தோ, அதில் கலந்திருப்பது என்னவென்றொ, அது எப்படி உருவாகின்றது என்றோ ஆராயப்படவில்லை, அது எஞ்சின்களை இயக்குமா என்று மட்டுமே சோதிக்கப்பட்டது). அச்சோதனையில் வெற்றியும் பெற்றது. இதுவே மூலிகைப் பெட்ரோலுக்கு ஒரு அங்கீகாரத்தை அளித்தது.///
ராமசாமி நல்ல பதிவு .
ஒரு டவுட் : IIT ல செக் பண்ணாத சொல்றாங்களே ..,அங்க நிச்சயம் VOLUMETRIC EFFICIENCY ,CR ,IGNITION TEMPARATURE ,செக் பண்ணியிருபாங்கலே .., இதையெல்லாம் மீறி ஏமாற்ரியிருக்கனா அந்த ஆளு...,சூப்பரு
தக்காளி இந்த ஆளா முன்னாடியே தெரிஞ்சிருந்தா ...,எங்க ப்ரோஜெக்ட்க்கு use பண்ணியிருபோமே ..., ச்சே கேசரி போச்சே ...,
தமிழனுக்கு துரோகம், மலையாளிகள் சதி, அரசியல் வியாதிகளின் சதி, NDTV இன் சதி என்றெல்லாம் பின்னுட்டம் வரும் என்று எதிர் பார்த்திருந்தேன்... நல்ல வேலை அப்படி யாரும் சொல்லவில்லை... ஒரு வேலை தமிழ் bloggers எல்லோரும் ஒரே நேரத்தில் திருந்திவிட்டார்களா...
1996-ம் ஆண்டு மூலிகையில் இருந்து பெட்ரோல் எடுக்கும் முறையைக் கண்டுபிடித்ததாகக் கூறி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.//
மறக்க முடியுமா அந்த் அப்பாவியை-;))
நானும் நம்பிகினு இருந்த அப்பாவிகளில் ஒருவன்.புது விசயம் சொல்லிருக்கீங்க பார்க்கலாம் அக்டோபர் 2 ந்தேதி காந்தி நாள் வேற,காந்தி கணக்கு காட்டுவாரோ என்னவோ
மாப்ள அவ(ர்)ன் எங்க ஊருக்காரன், அதனால கொஞ்சம் அடக்கி வாசி...
மெரீனா பீச்சில இருக்குடி அவ(ரு)னுக்கு ரிவிட்டு. பயபுள்ள என்னா சீன் போட்டுச்சு.? இருந்தாலும் அவ(ரோ)னோட அறிவை நாம பாராட்டணும், அவ(ர்)ன் கிட்ட கத்துக்க வேண்டியது நிறையா இருக்கு.
//தஞ்சாவூரான் said...
அடப்பாவிங்களா....
இவ்ளோ இருக்கா இதில??
கவுண்டர் படத்தப் பாத்ததும் காமடி பண்ணுவீங்கன்னு வந்தா, நல்லாவே எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்!//
வாங்க சார், நம்ம பழைய சரக்கையும் கொஞ்சம் புரட்டிப் பார்க்கலாமே? நன்றி!
ஒரு டவுட் : IIT ல செக் பண்ணாத சொல்றாங்களே ..,அங்க நிச்சயம் VOLUMETRIC EFFICIENCY ,CR ,IGNITION TEMPARATURE ,செக் பண்ணியிருபாங்கலே .., இதையெல்லாம் மீறி ஏமாற்ரியிருக்கனா அந்த ஆளு...,சூப்பரு
/////////////////////////
மாப்ள பனங்காட்டு நரி நீ நம்மாளா??? (Majestic Mechanical)???
நரி, அந்தாளு ஜெகஜ்ஜாலக்கில்லாடி! இம்புட்டுப் பேரையும் மொட்டையடிச்சிருக்கான்னா என்னத்த சொல்றது?
Anonymous said...
தமிழனுக்கு துரோகம், மலையாளிகள் சதி, அரசியல் வியாதிகளின் சதி, NDTV இன் சதி என்றெல்லாம் பின்னுட்டம் வரும் என்று எதிர் பார்த்திருந்தேன்... நல்ல வேலை அப்படி யாரும் சொல்லவில்லை... ஒரு வேலை தமிழ் bloggers எல்லோரும் ஒரே நேரத்தில் திருந்திவிட்டார்களா...
September 28, 2010 5:40 AM
////////////////////
இத நீ உன் பேர் போட்டே சொல்லிருக்கலாம். இருந்தாலும் நம்ம ஏரியாவில் “இல்லை என்று வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாத மனம்” உண்டு...அதனால உங்க ஆசைக்கு
தமிழனுக்கு துரோகம் செய்த பன்னிக்குட்டி, மலையாளிகள் தோழன் பன்னிக்குட்டி, அரசியல் வியாதிகளின் நண்பன் பன்னிக்குட்டி, NDTV இன் சதிக்கு காரணமான பன்னிக்குட்டி ஒழிக
//Anonymous said...
தமிழனுக்கு துரோகம், மலையாளிகள் சதி, அரசியல் வியாதிகளின் சதி, NDTV இன் சதி என்றெல்லாம் பின்னுட்டம் வரும் என்று எதிர் பார்த்திருந்தேன்... நல்ல வேலை அப்படி யாரும் சொல்லவில்லை... ஒரு வேலை தமிழ் bloggers எல்லோரும் ஒரே நேரத்தில் திருந்திவிட்டார்களா...//
யோவ் அனானி, சும்மா இருக்கவங்களையும் நீ விட மாட்டே போல? படுவா தொலச்சிப்புடுவேன் தொலச்சி!
//Anonymous said...
தமிழனுக்கு துரோகம், மலையாளிகள் சதி, அரசியல் வியாதிகளின் சதி, NDTV இன் சதி என்றெல்லாம் பின்னுட்டம் வரும் என்று எதிர் பார்த்திருந்தேன்... நல்ல வேலை அப்படி யாரும் சொல்லவில்லை... ஒரு வேலை தமிழ் bloggers எல்லோரும் ஒரே நேரத்தில் திருந்திவிட்டார்களா...
September 28, 2010 5:40 AM
////////////////////
இத நீ உன் பேர் போட்டே சொல்லிருக்கலாம். இருந்தாலும் நம்ம ஏரியாவில் “இல்லை என்று வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாத மனம்” உண்டு...அதனால உங்க ஆசைக்கு
தமிழனுக்கு துரோகம் செய்த பன்னிக்குட்டி, மலையாளிகள் தோழன் பன்னிக்குட்டி, அரசியல் வியாதிகளின் நண்பன் பன்னிக்குட்டி, NDTV இன் சதிக்கு காரணமான பன்னிக்குட்டி ஒழிக//
பருப்பு, பாத்தியா, உங்க ஊருக்காரன்ன உடனே எப்பிடி ரூட்ட மாத்துறே? கூட்டுக் களவாணி!
///ஆர்.கே.சதீஷ்குமார் said...
நானும் நம்பிகினு இருந்த அப்பாவிகளில் ஒருவன்.புது விசயம் சொல்லிருக்கீங்க பார்க்கலாம் அக்டோபர் 2 ந்தேதி காந்தி நாள் வேற,காந்தி கணக்கு காட்டுவாரோ என்னவோ//
இப்பிடிப் பச்சப் புள்ளையா இருக்கீங்களே பாஸ்!
இன்னிக்கு கொஞ்சம் நல்ல டீட்டெய்லா தெரிஞ்சுகிட்டேன் ராம்சாமி....! அக்டோபர் 2ல என்ன நடக்குதுன்னு பார்ப்போமே...!
//பன்னிக்குட்டி ராம்சாமி said... 18 //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
hi
endiran story super. Anga padam release ayiducha?//
அதுக்குள்ளேயா? (ஆமா ஸ்டோரி எப்பிடி லீக் ஆச்சு?)//
யோவ் அப்பா நீ மேல சொன்னது எந்திரன் விமர்சனம் இல்லியா?
//dheva said... 51 இன்னிக்கு கொஞ்சம் நல்ல டீட்டெய்லா தெரிஞ்சுகிட்டேன் ராம்சாமி....! அக்டோபர் 2ல என்ன நடக்குதுன்னு பார்ப்போமே...!//
எது நடந்தாலும் நடக்காட்டாலும் திருட்டுத்தனமா டாஸ்மாக் நடக்கும். போய் கட்டிங் வுட்டுட்டு தூங்குங்க...
நல்ல பதிவுங்க.
இதுல இவ்வளவு மேட்டர் இருக்கா?
நல்ல தகவல் தான். எனக்கு ஒரு சந்தேகம் ஒரு சாதாரண மனிதரால் விலை குறைந்த ஒரு எரிபொருளை தரமுடியும் பொது ஏன் மற்ற நிறுவனங்கள் அந்த தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தவில்லை? இந்த எரிபொருளின் மூலப் பொருள்கள் கள்ள சந்தையிலிருந்து பெற்றவையா? கொஞ்சம் விளக்கம் தேவை..
//நீச்சல்காரன் said...
நல்ல தகவல் தான். எனக்கு ஒரு சந்தேகம் ஒரு சாதாரண மனிதரால் விலை குறைந்த ஒரு எரிபொருளை தரமுடியும் பொது ஏன் மற்ற நிறுவனங்கள் அந்த தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தவில்லை? இந்த எரிபொருளின் மூலப் பொருள்கள் கள்ள சந்தையிலிருந்து பெற்றவையா? கொஞ்சம் விளக்கம் தேவை..//
ஆமா சார் அந்த மூலப்பொருட்கள் கள்ளத்தனமாகப் பெறப்பட்டவையே!
//dheva said...
இன்னிக்கு கொஞ்சம் நல்ல டீட்டெய்லா தெரிஞ்சுகிட்டேன் ராம்சாமி....! அக்டோபர் 2ல என்ன நடக்குதுன்னு பார்ப்போமே...!//
அப்போ 2ம் தேதி நேரடி ஒளிபரப்புப் போட்டா ரேட்டிங் எகிறிடும்போல?
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said... 18 //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
hi
endiran story super. Anga padam release ayiducha?//
அதுக்குள்ளேயா? (ஆமா ஸ்டோரி எப்பிடி லீக் ஆச்சு?)//
யோவ் அப்பா நீ மேல சொன்னது எந்திரன் விமர்சனம் இல்லியா?//
போலீஸ்கார் எப்பவுமே இப்பிடி இருந்தா எப்பிடி? கொஞ்சம் நிதானத்துக்கு வாங்க! (இன்னிக்கு என்ன மாமூல தண்ணியா கறந்தாச்சா?)
விஞ்ஞானப் பூர்வமாக ஒரு விஷயத்தை அறிவியலாளர்கள் ஏற்றுக் கொள்வதற்கென சில விதிமுறைகள் இருக்கும் போல. அதில் முக்கியமான ஒன்று பொருண்மை அழிவின்மை விதி. [நமக்கு வேதியல் சுத்தமா வராதுங்கண்ணோவ்!]. ஒரு வேதி வினையில் பயன்படுத்தப் படும் பொருட்களின் எடை வினைக்கு முன்பும் பின்னரும் சமமாகவே இருக்கும். [எதாச்சும் ஆவியா போச்சுன்னு கொஞ்சம் குறையலாம், ஆனால் அதிகரிக்க முடியாது]. ராமர் பிள்ளைகிட்ட கொடுக்கப் பட்ட பொருட்களின் எடையை குறித்துக் கொண்டனர், [அப்புறம் தான் குச்சி விட்டு கலக்கின கதையெல்லாம் நடந்தது]. பெட்ரோல் தயாரிச்சு முடிச்சதுக்கபுரம் எல்லா பொருட்களின் எடையும் மீண்டும் போட்டு பாத்தாங்க. [குச்சியை அல்ல!] பயன்படுத்தப் பட்ட பொருட்களின் எடையை விட எடை அதிகமாக இருந்தது. எவ்வளவு அதிகம் என்பது முக்கியமல்ல, ராமர் பிள்ளை வெறும் கையை காற்றில் சுழற்றி தங்க மோதிரம், வாட்ச் போன்றவற்றை எடுத்து பக்த கோடிகளுக்குக் கொடுக்கும் கள்ளச் சாமியார் வேலையை பண்ணி விட்டார் என்பது மட்டும் ஐயத்துக்கு இடமின்றி ஊர்ஜிதமானது.
//அன்பரசன் said...
நல்ல பதிவுங்க.
இதுல இவ்வளவு மேட்டர் இருக்கா?//
அதுனாலதான் தலைவரு ஈசியா எல்லாத்தையும் தூக்கி பாக்கெட்டுல வெச்சிட்டாரு!
ஆமாம் ஜெயதேவா, பரிசோதனைக்குப் பின்பு பொருட்களின் எடை அதிகரித்து இருந்தது, இது இதுவரை அறியப்பட்டுள்ள இயற்பியல், வேதியியல் கோட்பாடுகள் அனைத்திற்கும் எதிரான ஒன்று. ராமர் பிள்ளை செய்தது சரி என்றால், அனைத்து அறிவியல் கோட்பாடுகளும் தவறு என்றாகிவிடும்.
வேண்டாதவன் வெளக்கெண்ணையத் தேப்பானாம்.
அதுபோல இந்தப் பதிவு.
போயி பன்னிகுட்டிங்கள மேயுங்கள்.
இதில் இத்தனை விஷயங்கள் இருக்கிறது என்பது இப்பொழுது தான் தெரிகிறது .விரிவாக தேவையான தகவல்கள் உள்ள நல்ல பதிவு .
பாரேன் இந்த பன்னிக்கு எவ்வளோ மூளை...
thanks a lot for your explanation because just i could know about this story.
//Anonymous said...
வேண்டாதவன் வெளக்கெண்ணையத் தேப்பானாம்.
அதுபோல இந்தப் பதிவு.
போயி பன்னிகுட்டிங்கள மேயுங்கள்.//
வாங்க அனானி சார், அப்பிடியே பன்னி வாங்கிக் கொடுத்துட்டுப் போங்க, மேய்க்கிறேன்!
//dr suneel krishnan said...
இதில் இத்தனை விஷயங்கள் இருக்கிறது என்பது இப்பொழுது தான் தெரிகிறது .விரிவாக தேவையான தகவல்கள் உள்ள நல்ல பதிவு .//
நன்றி டாக்டர் சார்!
//TERROR-PANDIYAN(VAS) said...
பாரேன் இந்த பன்னிக்கு எவ்வளோ மூளை...//
பார்ரா.....!
இன்னிக்கு அடிச்சது பாரின் ஐட்டம் அதான், வேற ஒண்ணுமில்ல!
//asfar said...
thanks a lot for your explanation because just i could know about this story.//
தேங்க்ஸ் பாஸ்!
எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க அப்புறமா அது பெட்ரோல் இல்ல உப்பு எடுக்கதான் வந்தேன்னு எதுனா பிலிம் காட்ட போகுது
//ஜெய்லானி said...
எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க அப்புறமா அது பெட்ரோல் இல்ல உப்பு எடுக்கதான் வந்தேன்னு எதுனா பிலிம் காட்ட போகுது//
வாப்பு, உப்பு எடுத்துட்டு அது உப்புதான்னு சொன்னா சரி!
//இப்போது மறுபடியும் ராமர் பிள்ளை கிளம்பி வந்திருக்கிறார். அக்டோபர் 2-ம் தேதி மெரினா கடற்கரையில் ஒரு லட்சம் லிட்டர் கடல் நீரைப் பெட்ரோலாக்குவேன்னு சவால் விட்டிருக்கிறார், என்ன நடக்குதுன்னுதான் பார்ப்போமே?//
பீச்சில்யே மணலியிலிருந்து மண்ணுக்குளேயே ஏதாச்சும் பைப் வெச்சுருக்கப் போறார்.
ராமர் பிள்ளை செய்த ஆராய்ச்சி (ஆராச்சியா அது???) ஒண்ணுக்கும் ஆகாது என்றாலும் அவர் விதைத்தது மிக முக்கியம். ஆம் இன்றைக்கு மாற்று எரிபொருள் மிக அவசியம். நாம் இறக்குமதியில் பெரும்பகுதி அதற்கு செலவிடப்படுகிறது. மாற்று எரிபொருள் மட்டும் வந்துவிட்டால் அது உலகப்பொருளாதாரத்தையே புரட்டிப்போடும்
கூட வரும் அசிஸ்டண்ட் யாருப்பா அது ..?
ஏனுங்ணா,
கடல் நீர் முழுசுமே பெட்ரோல் ஆயிடுச்சின்னா ஒலகத்துல பிரச்சனையே வராதேங்ணா...பாருங்க வார் இருக்காது, பசி பட்டினி இருக்காது, என்ன சூப்பரா இருக்கும்?
ஒருத்தர் நல்லது செய்ய வந்தாலும் யாரும் அவர் கேரக்டரையே புரிஞ்சுக்கா மாட்டேன்றாங்களே.
:)))))
ஆனாலும் ஒரு டவுட்டு!!
பேரெல்லாம் கவுண்டரண்ணன் மாதிரி வச்சுகிட்டு பதிவெல்லாம் செந்திலண்ணன் மாதிரி போடறீங்களே...எப்படி?
அண்ணா இதுல இவ்வளவு உண்மை இருக்கா...இப்பதான் தெரிஞ்சிகிட்டேன்..நன்றி...
இவன் இன்னும் திருந்தலைய. இவன ஜெயில்லையே வச்சுருக்கணும். வெளிய விட்டதுதான் தப்பா போச்சு.
பகிர்வுக்கு நன்றி
//கடல் நீர் முழுசுமே பெட்ரோல் ஆயிடுச்சின்னா ஒலகத்துல பிரச்சனையே //
எவனாச்சும் கொளுத்திப் போடட்டும்,. முழுசா எரிஞ்சு போகட்டும்,..
அப்புறம் நமக்கு பட்டினி இருக்காது,.. ஏன்னா நாம இருக்க மாட்டோமில்ல??
அட ஆமா.. ராமர் பிள்ளைனு ஒருத்தர் இருந்தாரு இல்ல.. மறந்தே போய்டுச்சு..
ஞாபகப்படுத்துற பதிவுங்கோ..
ஆனா உங்க வழக்கமான கவுண்ட்டரு வர வர கம்மியாகிட்டே போகுதே.. ஏன்?
yannathaan irunthaalum padichcha pullanguratha kaattitta paaththiyaa ?
padichchavan padichchavanthaanyaa ......
81....sir aajar...
மிகவும் விரிவான சரியான விளக்கம் நண்பரே வாழ்த்துக்கள்....
@அருண் பிரசாத்
//தமிழ்நாட்லயும் இந்தியாவுலயும் தான் இப்படி கேணத்தனமா மீடியா எல்லாரையும் பிரபலம் ஆக்குதுய்யா....
அப்படி நம்ம நாமே மட்டமா நினைக்க வேண்டிய அவசியம் இல்லீங்க அருண்...நீங்க உலக மீடியாவ கொஞ்சம் கவனிச்சு பாத்தீங்கன்னா காரித்துப்புவீங்க...ஒன்னுக்கு போனது ஆய் போனது எல்லாம் கூட பிரபலப்படுத்துற மீடியா உலக நாடுகள்ல இருக்கு.....
இந்த தக்காளி மூலிகை பெட்ரோல் எஜென்சி தரேன்னு சொல்லி .
நிறைய பேரு கிட்ட பணம் புடிங்கிருகான் .
பார்ரா பா.ரா.ப்லோக்கா இது.யாரோ சூனியம் வைச்சுட்டாங்க
மூலிகை பெட்ரோலை விடு,இது மாதிரி இசியா டாஸ்மாக் அயிட்டங்களை செயுறது எப்படி.அதான் ஏற்கனவே காய்ச்சுராங்கன்னு பதில் சொன்ன உன்ன அந்த மூலிகை பெட்ரோலை கொண்டே எரிச்சுடுவேன்.எனக்கு தேவை சிம்பிள் பார்முலா
ஜெய்லானி said...
கூட வரும் அசிஸ்டண்ட் யாருப்பா அது ..?///////////////
வேண்ணும்னா நீ போ கூட அப்போ தான் கவர்ன்மென்ட் களி சாப்பிட வசிதியா இருக்கும்
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said... 18 //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
hi
endiran story super. Anga padam release ayiducha?//
அதுக்குள்ளேயா? (ஆமா ஸ்டோரி எப்பிடி லீக் ஆச்சு?)//
யோவ் அப்பா நீ மேல சொன்னது எந்திரன் விமர்சனம் இல்லியா?//////
எந்திரன் பட கிளைமாக்ஸ் கடலில் தானா
Anonymous said...
வேண்டாதவன் வெளக்கெண்ணையத் தேப்பானாம்.
அதுபோல இந்தப் பதிவு.
போயி பன்னிகுட்டிங்கள மேயுங்கள்./////
அதானே நாங்களும் செய்யுறோம்,உன்னை வைச்சு மேய்க்கல அத சொல்லுறேன்.பேரை போட கூட திராணி இல்ல கேள்வி கேட்க்க வந்துடுச்சி தூ...தேறி
சாரி ஃபார் லேட் எண்ட்ரீ தல!!! கிளீன் பதிவுங்க இது!!!!
ஏன் தல?கலிங்கரு கர்னானிதி விசிகாந்த் குடுத்த தங்கப் பேனாவ ராமர் பிள்ளைக்கு கொடுத்ததாக நியாபகம்.
//அவ(ர்)ன் கிட்ட கத்துக்க வேண்டியது நிறையா இருக்கு.//
எப்படி டுபாக்கூர் உடுறதுன்னா?
The experiment starts with water, If he mixed any solvents how Ignites with water
http://www.padrak.com/ine/NEN_6_6_11.html
RAMAR PILLAI HERBAL FUEL
By Wesley Bruce
From: NEN, Vol. 6, No. 6, November 1998, pp. 16-18.
New Energy News (NEN) copyright 1998 by Fusion Information Center, Inc.
COPYING NOT ALLOWED without written permission.
ALL RIGHTS RESERVED.
RAMAR PILLAI HERBAL FUEL
By Wesley Bruce
The work on Herbal Petrol, now called "Herbal fuel" is coming to fruition. The inventor Ramar Pillai is getting an international patent and is establishing a small plant in his home village. The claims of fraud seem to have had little effect on the regional government that has seen many demonstrations. Only one demonstration had failed in Deli, hundreds of miles away from the area where the plant grows. This implies that the active ingredients of the plant extract has a shelf life of only a few days or it is temperature sensitive.
A news group has been running on the subject for several years since New Energy News last covered the subject. I have been active on the news group with several postings. The web address is: http://ppp.india.com/bb/
I believe that Ramar has discovered a plant that makes a hydrocarbon to repel insects and grazers. This is not unusual, as many plants are hydrocarbon rich for this reason. What is interesting is that this plant seems to make the hydrocarbon using a heat driven enzyme path-way similar to photosynthesis, with atmospheric CO2 as the carbon source and the water as the hydrogen source. Mr Ramar Pillai appears to have partly isolated the enxyme path-way and made it work in a simple chemical process. While his equipment is not much more than a cooking pot, most people forget that a beaker is just a glass cooking pot.
Some have argued that there is a mass deficit because the measured mass of the water and hydrocarbon produced reportedly exceeds the mass of ingredients. The process should release more grams of oxygen than grams of carbon it takes in. One oxygen from the water and two from the CO2 it absorbs from the atmosphere per -CH2- unit of the hydrocarbon chain. Since the the oxygen lost from the water is heavier than the carbon gained, the mass of the total mixture should be decreased not increased.
This may not be true if the process works like normal cellular processes. Little energy is required to strip a hydrogen off H2O leaving a hydroxide, OH-. It takes a lot of energy to strip the second hydrogen off a OH- to produce a free oxygen. Many cells simply discard the hydroxide and start out with another H2O. If free to react with each other, two OH- will react to produce oxygen and water, but since free oxygen would oxidize the hydrocarbon, the plant needs to segregate the OH- and the hydrocarbon. The plant dumps the OH- into the water beyond the cell or bind it to another ion to produce a long lasting chemical trap for it.
If Ramar Pillai is able to chemically trap the OH- with an additive, he can get the hydrocarbon production to maximize without producing the oxygen from the water. Later additions of chemicals to the mix after the oxygen is extracted could liberate the ox
வாங்க மிஸ்டர் அனானி, நீங்க கொடுத்திருக்கும் reference, 1998-ல் வந்தது, அதுவும் யூகத்தின் அடிப்படியில் எழுதப்பட்டது (நான் முன்பே படித்திருக்கிறேன்). ஆனால் 2000-ம் ஆண்டில்தான் CBI ராமர் பிள்ளை செய்வது என்ன என்று கண்டுபிடித்தது. அதற்கு முன்பு வரை எல்லோரும் ராமர் பிள்ளை உண்மையிலேயே மூலிகைப் பெட்ரோலைக் கண்டுபிடித்துவிட்டதாவே எல்லோரும் நம்பினோம்!
உங்கள் முதல் கமென்ட்டிற்கு:
நீரில் எந்த எண்ணையும் கலக்காது (ஒருவேளை மூலிகையில் இருந்து பெட்ரோல் வந்திருந்தாலும் அது தண்ணிரில் கலந்திருக்காது), எனவே தண்ணீரை வைத்து மூலிகையில் இருந்து பெட்ரோல் எடுக்கிறேன் என்று சொல்வதே ஒரு மோசடிதான். இதிலிருந்தே தெரியவில்லையா? மூலிகை பெட்ரோலில் இருந்து வண்டியை வேறு ஓட்டிக் காட்டினார். அதனாலேயே யாருக்கும் சந்தேகம் வரவில்லை. ஆனால் அவர் தயாரித்த பெட்ரோலில் கலந்திருப்பது பென்சீன் மற்றும் டொலுவீன் என்று கண்டுபிடிக்கப்பட்ட உடன் அது என்ன மந்திரம் என்று தெரிந்து விட்டது!
தாங்கள் கேட்ட சந்தேகங்கள் மிக நியாயமானவை. ஆனால் அனானியாக வந்ததேனோ?
நன்றி!
அண்ணே,வேணாம்,இப்படி சமூகக்கட்டுரை எல்லாம் எழுதுனா சீரியஸ் ஆகிடுவீங்க,காமெடிதான் உங்க பிளஸானா செமயான தகவல்கள்
அண்ணே,கமெண்ட்ஸ் ஆவரேஜ்ஜா 100 வந்துடுது,இந்த ரேஞ்ஜுக்கு விசிட்டர்ஸ் டுடே குறையுதே,ஏதாவது டெக்னிக் ஃபால்ட்டான்னு கண்டுபிடிங்க.
Oct 2 --?? Which Year???
//நீரில் எந்த எண்ணையும் கலக்காது (ஒருவேளை மூலிகையில் இருந்து பெட்ரோல் வந்திருந்தாலும் அது தண்ணிரில் கலந்திருக்காது), எனவே தண்ணீரை வைத்து மூலிகையில் இருந்து பெட்ரோல் எடுக்கிறேன் என்று சொல்வதே ஒரு மோசடிதான். இதிலிருந்தே தெரியவில்லையா? மூலிகை பெட்ரோலில் இருந்து வண்டியை வேறு ஓட்டிக் காட்டினார்.//
Ethanol என்னும் எரிபொருள் தண்ணீரில் கலக்கும். இப்போது 6% எத்தனாலை பெட்ரோலில் கலக்குகிறார்கள். ஆச்சரியம்!! தண்ணியும் பெட்ரொலும் கலக்காது, ஆனா தண்ணீல கலக்குற எத்தனால் பெட்ரோல்லயும் கலக்குது!!
அப்றம் ரெண்டாவது விஷயம் தண்ணியோட தரம் மாறி, எரிபொருளா மாறுறதுதானங்க முக்கியம், கொஞ்சம் எடை கூடுனா தப்புங்களா!!
கோழி குருடான என்ன குழ்ம்பு ருசிதானுங்க முக்கியம்...
Post a Comment