Saturday, September 25, 2010

கேப்டனின் ரகஸ்ய டெக்னிக்!நம்ம விசியக்காந்தண்ணே இருக்காரே அவரு கட்சிதான் அடுத்து ஆட்சிய பிடிச்சிடும்னு நம்புற மாதிரி வளர்ந்தாரு மனுசன். இப்ப யாரு கண்ணு பட்டுச்சோ ஒண்ணும் வேகமாட்டேங்கிது! வேகவேகமா வளர்ந்த கட்சி அப்பிடியே வளராம ஏன் இப்பிடி அடிவாங்கத் தொடங்குதுன்னு அப்பிடியே விட்டத்தப் பாத்தபடி படுத்துக்கிட்டே நல்லா யோசிச்சுப் பாத்தோம். ஒண்ணும் வெளங்கல. சரி போனாப் போகுதுன்னு ரெண்டு கட்டிங் விட்டுட்டு வந்து உக்காந்தா கடகடன்னு எல்லாம் தெள்ளத்தெளிவா புரியுது. தக்காளி விசியகாந்து அடுத்து மொதல்வராக என்னென்ன செய்யனும்னு கண்டு புடிச்சிட்டேன்யா! அத எப்பிடி அவருக்கு சொல்றதுன்னே தெரியல. சரி யாராவது தேமுதிக அல்லக்கைங்க நம்ம ப்ளாக்கப் படிப்பாங்கல்ல (ம்ம்.. நம்ம யாரு, பிரபல பதிவராச்சே, இவிங்க கூட படிக்கலைன்னா எப்படி?), அதுனால ப்ளாக்குல போட்டுட்டா அதப்பாத்துப் படிச்சி, வெளங்கி, அதன்படி நடந்து விசியக்காந்து ஆச்சிய புடிச்சி கழகங்கள்ட்ட இருந்து தமிழ்நாட்டக் காப்பாத்தட்டும்னு ஒரு நல்லெண்ணத்துல இந்தப் பதிவப் போடுறேன் (இதப் படிச்சிட்டு வேற யாராவது போயி ஆச்சியப் புடிக்க டிரைப் பண்ணீங்க, பிச்சிபுடுவேன் பிச்சி!)

கட்சி ஆரம்பிச்ச புதுசுல கேப்டன் என்ன சொன்னாரு? லஞ்சம் ஊழலே இல்லாத ஆட்சியக் கொடுப்பேன்னாரு! அது எப்புடின்னு கேட்டா, அது ரகசியம், இப்பவே சொல்லிட்டா எல்லாரும் அதக் காப்பியடிச்சிடுவாங்கன்னுட்டாரு! சரி, ங்கொக்காமக்கா இவன் ஏதோ மேட்டர் வெச்சிருக்காண்டான்னு ஒரு குருட்டு நம்பிக்கையில கொஞ்சம் பேரு போயி ஓட்டுப் போட்டாங்ய. அதுக்கப்புறமாவது அது என்னா டெக்கினிக்கின்னு சொல்லியிருக்க வேணாம்? மனுசன் அநியாயத்துக்கு பொறுமையச் சோதிச்சாரு! மக்களும் வெறுத்துப்போயி நம்பிக்கையிழந்துட்டாங்க. இப்போ குட்டிச்சுவரு தேடுற கழுத மாதிரி தலைவரு கூட்டணி தேடுறாரு!
பாத்தீங்கள்ல? உங்களூக்கே தெளிவாப் புரியுதுல்ல என்ன ப்ராப்ளம்னு? இதச் சரிபண்ணிட்டம்னா விசியக்காந்து ஆச்சியப் புடிச்சிடுவாருல்ல?
அதுனால, ஆட்சிக்கு வந்தா நம்மாளு எப்புடி லஞ்சம், ஊழல ஒழிக்கப்போறாருன்னு, இத்தனை நாளா காப்பாத்தி வந்த ரகசியத்த இப்போ உங்களுக்காக ஓப்பன் பண்றோம் மக்கா! பாத்துப் படிச்சி வெளங்கி நடந்துக்குங்க!

லஞ்சம், ஊழலை ஒழிக்கும் ரகஸ்ய வழிமுறைகள்:
1. அரசு கெஜட்டில் இருந்து லஞ்சம், ஊழல் போன்ற வார்த்தைகள் எடுக்கப்படும் (தக்காளி இனி லஞ்சம் ஊழல்னு யாரும் வெளையாட்டுக்கூட சொல்ல முடியாதுல்ல?)
2. தமிழ்மொழியில் இருந்தும் லஞ்சம், ஊழல் போன்ற வார்த்தைகள் அடியோடு நீக்கப்படும் (இனி மீடியாக்காரன் கூட அதப் பத்தி எழுதமுடியாது ஆமா..!)
3. தமிழ்நாட்டில் உள்ள 6,345,679 அரசு அலுவலகங்களிலும் எந்த ஒரு வேலையையும் முடிக்க அதிகாரிகளுக்கு அன்பளிப்பு அளிப்பது கட்டாயம்னு ஒரு சட்டம் போடப்படும் (அப்புறம் எவன் லஞ்சம் வாங்குவான்? எல்லாம் அன்பளிப்புத்தான்!)
4. எந்தக் கன்ட்ராக்டும், டென்டரும், பீஸ் தொகையுடன் சேர்த்து 10.3567% அன்பளிப்பு கொடுத்தால் மட்டுமே அரசால் ஏற்றுக்கொள்ளப்படும்.
5. அரசு அதிகாரிகள் தாங்கள் பெறும் அன்பளிப்பில் 10 சதவீதத்தை மேலதிகாரிகளுக்குக் கொடுத்துவிட வேண்டும். 25 சதவீதத்தை கட்சிக்காரர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும்.
6. காவல்துறையிலும் முற்றிலுமாக லஞ்சம் ஒழிக்கப்படும். காவல்துறை இனி அன்பளிப்பு அளித்தால் மட்டுமே வந்து பாதுகாப்புக் கொடுக்கும். ஒவ்வொரு வழக்கும் பதிவு செய்ய எவ்வளவு அன்பளிப்பு வழங்கவேண்டும் என்று தெளிவாக அரசாணை வெளியிடப்படும்.
7. தனியார் துறையில் அன்பளிப்புகள் கொடுக்கல் வாங்கல் குறித்து தனியாக சட்டம் இயற்றப்படும். அரசியல்வாதிகள் வாங்கும் அன்பளிப்பிற்கு இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
8. எல்லா அன்பளிப்புகளுக்கும் வருமான வரி, சேவை வரி, மற்றும் பிற வரிகளில் இருந்தும் விலக்கு அளிக்கப்படும்.
9. மதுரையில் வாழும் 15,745,342 பேருக்கும் அன்பளிப்பில் இருந்து 5.6531 % விலக்கு அளிக்கப்படுகிறது.
10. இதையும் மீறி லஞ்சம் வாங்குபவர்கள் கைது செய்யப்பட்டு விருதகிரி படம் ஓடும் 67 தியேட்டர்களிலும் மாறி மாறி சிறை வைக்கப்படுவார்கள் (ங்கொய்யால, இனி எவனாவது லஞ்சத்தப் பத்தி கனவுல கூட நெனப்பான்?)

இதுதாங்க நம்ம கேப்டன் லஞ்சத்த ஒழிக்கிறதுக்காக பாதுகாத்து வெச்சிருக்க ரகசியம்! இப்பிடி ஒரு அரும்பெரும்கொள்கைகளோட தமிழ்நாட்டையும், தமிழர்களையும் காப்பாத்தத் துடிச்சிக்கிட்டு இருக்கும் புரட்சிக்கலைஞரை இன்னமும் நீங்கள்லாம் கண்டுக்காம இருந்தா, என்ன அர்த்தம்? போங்கய்யா போயி அடுத்த மொதல்வரப் பாத்து மன்னிப்பு கேட்டுட்டு கட்சில சேர்ர வழியப் பாருங்க!

55 comments:

கும்மி said...

அடங்கொக்கமக்கா! கடைசி 8 வழிமுறைகளும் ஏற்கனவே நடைமுறைலதானையா இருக்கு! அப்புறம் எப்படி அது ரகசியமாகும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

// கும்மி said...
அடங்கொக்கமக்கா! கடைசி 8 வழிமுறைகளும் ஏற்கனவே நடைமுறைலதானையா இருக்கு! அப்புறம் எப்படி அது ரகசியமாகும்?//

யோவ் அதுலாம் லஞ்சம்கற பேருல திருட்டுத்தனமா நடந்துட்டு இருக்கு, கேப்டன் அன்பளிப்புன்னு சட்டமே கொண்டுவரப்போறாரு! (அது கேப்டனுக்குத்தான் ரகசியம் நமக்கு இல்ல!)

கும்மி said...

//திருட்டுத்தனமா நடந்துட்டு இருக்கு//

திருட்டுத்தனமாவா? நீங்க ஏதோ 30 வருஷத்துக்கு முன்னாடி உள்ள நிலைமையை சொல்லுற மாதிரி இருக்கு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கும்மி said...
//திருட்டுத்தனமா நடந்துட்டு இருக்கு//

திருட்டுத்தனமாவா? நீங்க ஏதோ 30 வருஷத்துக்கு முன்னாடி உள்ள நிலைமையை சொல்லுற மாதிரி இருக்கு.//

அப்பப்போ விஜிலன்ஸ் புடிச்சிக்கிட்டுத்தானப்பு இருக்கு!

கும்மி said...

//விஜிலன்ஸ் புடிச்சிக்கிட்டுத்தானப்பு இருக்கு//

அவங்களுக்கு சேரவேண்டிய பங்கு சேரலன்னு ஏதாவது செஞ்சிருப்பாங்க.

விசயகாந்த் ஏன் எல்லா போட்டோவுலையும் பல்ல கடிச்சிக்கிட்டே இருக்காரு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

// கும்மி said...
//விஜிலன்ஸ் புடிச்சிக்கிட்டுத்தானப்பு இருக்கு//

அவங்களுக்கு சேரவேண்டிய பங்கு சேரலன்னு ஏதாவது செஞ்சிருப்பாங்க.

விசயகாந்த் ஏன் எல்லா போட்டோவுலையும் பல்ல கடிச்சிக்கிட்டே இருக்காரு?//

அவரு பல்லத்தானே?

இம்சைஅரசன் பாபு.. said...

//விசயகாந்த் ஏன் எல்லா போட்டோவுலையும் பல்ல கடிச்சிக்கிட்டே இருக்காரு//

வாய தொறந்த பல்லு கீழ விளுந்துரும்னு தான்

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே,ராமசாமி அண்ணே,கும்மின்னா இப்படித்தாண்ணே இருக்கனும்.பின்னிட்டீங்க

சி.பி.செந்தில்குமார் said...

ஸ்டில்லுல கூட கேப்டனை நக்கல் அடிச்சிருக்கீங்களே

இம்சைஅரசன் பாபு.. said...

எல்லா அன்பளிப்புகளுக்கும் வருமான வரி, சேவை வரி, மற்றும் பிற வரிகளில் இருந்தும் விலக்கு அளிக்கப்படும்//

இன்னொரு வரி இருக்கு பன்னிகுட்டி சார் .
அதாவது மக்களுக்கு நெத்தியில் மூன்று வரிகள் மேல் நோக்கி போடா படும் (நாமம் )

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//இம்சைஅரசன் பாபு.. said...
//விசயகாந்த் ஏன் எல்லா போட்டோவுலையும் பல்ல கடிச்சிக்கிட்டே இருக்காரு//

வாய தொறந்த பல்லு கீழ விளுந்துரும்னு தான்//

வசனம் பேசிப் பேசிய ஒட்டுன வாயி அது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//சி.பி.செந்தில்குமார் said...
ஸ்டில்லுல கூட கேப்டனை நக்கல் அடிச்சிருக்கீங்களே//

வாங்க செந்தில், இப்பவாவது கேப்டனோட அருமை வெளங்குச்சா?

TERROR-PANDIYAN(VAS) said...

Present sirrrrrr :))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//TERROR-PANDIYAN(VAS) said...
Present sirrrrrr :))))//
வாடி மாப்பு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னி சார் பன்னி சார், விருத்தகிரி dvd உங்க வீட்டுக்கு அனுப்பிட்டேன் பன்னி சார். கொய்யால சாவுடி...

முரசொலி மாறன்.V said...

//வேகவேகமா வளர்ந்த கட்சி அப்பிடியே வளராம ஏன் இப்பிடி அடிவாங்கத் தொடங்குதுன்னு//
இதை காங்கிரசார் நம்பமாட்டார்கள்-முக்கியமா எலங்கோவன்.’மின்சாரம்’ பற்றி செய்த பகடிய பத்தியும் பகடி பண்ணியிருக்கலாம்.
ஆமா,நம்ம விசியக்காந்தண்ணே lepor ஆ நடிச்சி ஒரு படம் நல்லா ஓடி இருந்தா, லெப்பர் விசகாந்துன்னா கூப்பிடுவேள்? ஏழைகளுக்கெல்லாம் நம்ம ‘லெப்பர்’ அண்ணே எலவசமா மெடிக்கல் சீட்டு தராராமே! பாண்டி போனா யாராவது கேட்டு பாருங்க! விருத்தாசலத்துல 'லெப்பர்'அண்ணன் என்னாத்த பண்ணினாரு? சாதி கட்சி, குடும்ப அரசியல்னு சொல்லிட்டு,அல்லாத்தையும் எப்படி சைடு வாங்கினாரு?உங்களுக்கு இன்னும் நிறைய வேலை இருக்கிறது!

மதுரை சரவணன் said...

உங்களுக்கு விசய காந்து மேல எத்தனைப்பிரியம் அதுவும் மதுரைக்கு இவ்வளவு சலுமையா எங்க அண்ணன் பார்த்த கோபிக்கப்போகிறார். பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Sukumar Swaminathan said...

:)

பாஸ்... உங்க மின்னஞ்சல் முகவரி வேண்டும்... என் முகவரி.. evergreenrose@gmail.com

அலைகள் பாலா said...

காமெடி தாங்க முடியல. அப்படியே கார்த்திக் (நாமக்க), சரத்குமார் (சாமக்க)இவங்களுக்கும் ஐடியா குடுத்தா நல்லா இருக்கும். நீங்க ஐடியா குடோன், ஐடியா பேக்டரி.

பனங்காட்டு நரி said...

யோவ் ,என்னா மனுஷன்யா நீ ?அந்த PHOTO பார்த்ததும் அடிச்ச போதை சுத்தமா இறங்கிடுச்சு ...,சரி சரி காலைல கமெண்ட் போடுறேன்

DrPKandaswamyPhD said...

ரொம்ப ரொம்ப நல்லா இருக்குங்க.

DrPKandaswamyPhD said...

ஏனுங்க ஒருத்தரு ஒரு பதிவுல இத்தனை கமென்ட்தான் பொடலாம்னு ஏதாச்சும் சட்டம் இருக்குங்களா?

DrPKandaswamyPhD said...

இன்னைக்கு பூரா இந்த வேலைதானுங்க. என்ன வேலைன்னு கேக்கிறீங்களா? இருங்க வர்றேன்.

DrPKandaswamyPhD said...

என்ன வேலைங்கறீங்களா? ப.ரா. பதிவுல பின்னூட்டம் போடறதுதான்.

Jayadeva said...

ஒரு ஊருக்கு புதுசா ஒருத்தன் வந்தான். அந்த ஊர்ல ஒரு பெரிய மலை இருந்துச்சு. அவன் ஊர் சனத்தப் பாத்து சொன்னான், "எனக்கு ஆறு மாசம் சோறு போட்டீங்கன்னா, இந்த மலைய என் தலை மேல் சுமந்து காட்டுறேன்". ஊர் சனமும் நம்பி ஆறு மாசம் சோறு போட்டுச்சு. மலையை தூக்கும் நாள் வந்துச்சு. நெறைய சனம் கூடிப் போச்சு, எப்படி தூக்குவான்னு பாக்குறதுக்கு. அவன் சொன்னான், "இவ்வளவு பெரிய சுமையாச்சே, நீங்கள்லெல்லாம் சேந்து ஒரு கை பிடுச்சு என் தலை மேல தூக்கி வைங்க, நான் தூக்கி காட்டுறேன்னானாம். அடடா எமாந்துட்டமேன்னு சனம் அப்போதான் உணர்ந்துச்சு. அதுக்கப்புறம் இன்னொருத்தன் வந்தான். "ஐயா, முன்பு வந்தவன் மோசடிப் பேர்வழி, நான் ரொம்ப யோக்கியன், எனக்கும் ஆறு மாசம் சோறு போடுங்க, அதுக்கப்புறம் இந்த மலை ஏன் தலை மேல இல்லன்னா, என்னை உங்க காலில போட்டிருக்கறதால அடிங்க" என்றானாம். சனம் அவனுக்கும் ஆறு மாசம் சோறு போட்டுச்சு. மலையைத் தூக்கும் நாள் வந்தது. "நீங்கள் யாரும் எனக்குத் தூக்கி வைக்க வேண்டியதில்லை, நானே பார்த்துக் கொள்கிறேன்" அப்படின்னு சொல்லிட்டு, மலை உச்சிக்கும் போயி தலை கீழா நின்னு, "பாத்தீங்களா மலையை தூக்கிட்டேன்" என்று கேட்டானாம். நாமும் யாராவது மலையைத் தூக்குவார்கள் என்று தான் பார்க்கிறோம், "கலகங்கள்" ஆட்சிக்கு வந்ததுக்கப்புறம், மேற்ச்சொன்ன கதையில் வந்த ஆட்கள் மாதிரிதான் வராங்களே தவிர நமக்கு நல்லது பண்ற மாதிரி ஒருத்தரும் வரலே. கேப்டன் இப்பவே அவரது மனைவி, மைத்துனரின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கட்சியைக் கொடுத்து விட்டார். ஒரு வேலை ஆட்சிக்கு வந்தா [அத்தைக்கு மீசை முளைச்சா!] இன்னும் என்ன ஆகும்? அவரோட முகத்த பாத்தா, அவர் ஒரு சிறந்த "குடி"மகன் என்பது தெரியும். நல்லாட்சியா? இவராலா? நினைக்கும் போதே கண்ணை கட்டுதே.

Jayadeva said...

//அரசு கெஜட்டில் இருந்து லஞ்சம், ஊழல் போன்ற வார்த்தைகள் எடுக்கப்படும்// பெங்களூரில் எல்லா பள்ளிகளிலும் நன்கொடை [Donation] கட்டாயமாக வசூலிக்கப் பட்டு வந்தது. மக்கள் கொந்தளித்தனர். நீதி மன்றம் சென்றனர். நன்கொடை வசூலிப்பது தவறு என்று நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போதைய முதல்வரும் உடனடியாக அதை அமல் படுத்தி நன்கொடை இனிமேல் வசூலிக்கக் கூடாது என்று தடை விதித்தார். அப்படியே பள்ளி நிர்வாகிகளை அழைத்துப் பேசினார். நன்கொடை [Donation] வாங்குவதுதானே தவறு, அதே தொகையை பள்ளி மேம்பாட்டுக்கான மனமுவந்த பங்களிப்பு [Voluntary Contribution] என்ற பெயரில் வசூல் செய்து கொள்ளுங்களேன் என்று யோசனையையும் கொடுத்து விட்டார். அந்த வருடத்தில் இருந்து Voluntary Contribution என்ற பெயரில் அவர்கள் பணம் பிடுங்க ஆரம்பித்தனர். அதாவது Voluntary Contribution தான் ஆனால் Compulsory-யாக வசூலிக்கப் படும்! இது எப்படி இருக்கு! யாரும் நீதிமன்றமும் செல்ல முடியாது, "நீங்கள் Voluntary-யாக கொடுத்தது தானே" என்று வழக்கு தள்ளுபடியாகிவிடும். பெயரை மட்டும் மாற்றி விட்டு பிடுங்க வேண்டியதை தவறாமல் பிடுங்கி கொண்டிருக்கிறார்கள். அந்த மாதிரியே லஞ்சம் என்ற பெயர் தானே தப்பு, அதையே அன்பளிப்புன்னு மாத்திட்டு வசூல் பண்ணலாம். நம்ம கேப்டன் இதைச் செஞ்சாலும் செய்வாரு நல்ல யோசனை, ஏற்கனவே பெங்களூரில் வெற்றிகரமாக நிறைவேற்றப் பட்டதும் கூட. முயற்சி பண்ணலாம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 15
பன்னி சார் பன்னி சார், விருத்தகிரி dvd உங்க வீட்டுக்கு அனுப்பிட்டேன் பன்னி சார். கொய்யால சாவுடி... //

அடப்பாவி அவனா நீய்யி...?

பெரியோர்களே, தாய்மார்களே எல்லாரும் பாருங்க, நம்ம போலீஸ்கார், கேப்டனோட எவ்வளவு பெரிய விசுவாசின்னு (யோவ் அல்லக்கைங்கறத கொஞ்சம் டீசன்ட்டா சொன்னேன்யா!), நம்ம டேமேஜரு தேமுதிகவுல சீக்ரெட்டா பெரிய போஸ்ட்ல இருப்பாருபோல, எதுக்கும் பாத்து சூதானமா இருங்கப்பா!

siva said...

:)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//@முரசொலி மாறன்.V said...//

விடுங்க பாஸ், எங்கே போயிடப் போகுது, ஒவ்வொண்ணா பின்னிடுவோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மதுரை சரவணன் said...
உங்களுக்கு விசய காந்து மேல எத்தனைப்பிரியம் அதுவும் மதுரைக்கு இவ்வளவு சலுமையா எங்க அண்ணன் பார்த்த கோபிக்கப்போகிறார். பகிர்வுக்கு வாழ்த்துக்கள்//

முன்னாடியெல்லாம் மதுரைன்னாலே அது நம்ம கேப்டன் தான், அத அஞ்சாநெஞ்சன் தட்டிப் பறிச்சிட்டாரு, இப்போ திரும்பப் புடிக்கவேணாமா? அதுக்குத்தான் சலுகை!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Sukumar Swaminathan said...
:)

பாஸ்... உங்க மின்னஞ்சல் முகவரி வேண்டும்... என் முகவரி.. evergreenrose@gmail.com//

பாஸ் நீங்க கேப்டனோட ஆளா? ஏதோ தெரியாம கேப்டனப் பத்தி எழுதிட்டேன், மன்னிச்சி விட்ருங்க சார்! நாளைக்கே கேப்டன் நல்லவரு, வல்லவரு, நாலும் தெரிஞ்சவரு அப்பிடி இப்பிடின்னு ஒரு பதிவப் போட்டுர்ரேன் சார்! அதுக்காக இப்பிடி ஈமெயில வெச்சி ஏதாவது ஏடாகூடமா எதுவும் பண்ணிடாதீங்க சார்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//அலைகள் பாலா said...
காமெடி தாங்க முடியல. அப்படியே கார்த்திக் (நாமக்க), சரத்குமார் (சாமக்க)இவங்களுக்கும் ஐடியா குடுத்தா நல்லா இருக்கும். நீங்க ஐடியா குடோன், ஐடியா பேக்டரி.//

வாங்க பாலா, என்னது கார்த்திக்கு சரத்குமாரா? இவங்கள்லாம் யாரு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பனங்காட்டு நரி said... 20
யோவ் ,என்னா மனுஷன்யா நீ ?அந்த PHOTO பார்த்ததும் அடிச்ச போதை சுத்தமா இறங்கிடுச்சு ...,சரி சரி காலைல கமெண்ட் போடுறேன் //

உனக்கே இப்பிடின்னா அந்தப் படத்த எடுத்தவன கொஞ்சம் நெனச்சிப்பாரு நரி! குழந்தைகளும் வீக்கா உள்ளவங்களூம் பாக்காதீங்கன்னு ஒரு எச்சரிக்கை போடலாம்னுதான் நெனச்சேன், மறந்துட்டேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//DrPKandaswamyPhD said...
ரொம்ப ரொம்ப நல்லா இருக்குங்க.//

நன்றி சார், என்ன சார் இன்னிக்கிப் பூரா நம்ம கடைல கமென்ட் போடுவதுதான் வேலைன்னுட்டு 4 கமென்ட்டோட நிறுத்திட்டீங்களே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jayadeva said...//

வாங்க ஜெயதேவா, வழக்கம்போல குமுறி எடுத்துட்டீங்க! (ஏன் பாஸ் இன்னும் ஏன் யோசிக்கிறீங்க, சீக்கிரம் ப்ளாக் ஆரம்பிங்க நாங்கள்லாம் இருக்கோம்!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

// siva said...
:)//

நன்றி சிவா!

TERROR-PANDIYAN(VAS) said...

@நரி
//யோவ் ,என்னா மனுஷன்யா நீ ?அந்த PHOTO பார்த்ததும் அடிச்ச போதை சுத்தமா இறங்கிடுச்சு ...,சரி சரி காலைல கமெண்ட் போடுறேன்//

மச்சி உனக்கு போதை தெளிஞ்சி போச்சி எனக்கு அந்தா போட்டோ பாத்தா யாராயாவது போட்டு தள்ளனும் போல வெறி வருது....

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னி
//வாங்க ஜெயதேவா, வழக்கம்போல குமுறி எடுத்துட்டீங்க! (ஏன் பாஸ் இன்னும் ஏன் யோசிக்கிறீங்க, சீக்கிரம் ப்ளாக் ஆரம்பிங்க நாங்கள்லாம் இருக்கோம்!)//

அடுத்த ஆடு ரெடி பண்ற.... கே.டி பயல்யா நீ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னி
//வாங்க ஜெயதேவா, வழக்கம்போல குமுறி எடுத்துட்டீங்க! (ஏன் பாஸ் இன்னும் ஏன் யோசிக்கிறீங்க, சீக்கிரம் ப்ளாக் ஆரம்பிங்க நாங்கள்லாம் இருக்கோம்!)//

அடுத்த ஆடு ரெடி பண்ற.... கே.டி பயல்யா நீ..//

ஆமா பாண்டி, புது ஆடு வந்தே 10 நாளைக்கு மேல ஆகுது, சரி ரெடி பண்ணி வெச்சம்னா போயி கும்மிட்டு வரலாம்னு பாத்தேன், வுடமாட்டியே? சரி சரி, ஈரல நீ எடுத்துக்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//TERROR-PANDIYAN(VAS) said...
@நரி
//யோவ் ,என்னா மனுஷன்யா நீ ?அந்த PHOTO பார்த்ததும் அடிச்ச போதை சுத்தமா இறங்கிடுச்சு ...,சரி சரி காலைல கமெண்ட் போடுறேன்//

மச்சி உனக்கு போதை தெளிஞ்சி போச்சி எனக்கு அந்தா போட்டோ பாத்தா யாராயாவது போட்டு தள்ளனும் போல வெறி வருது....//

விடாதே...போட்ரு!

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி
//விடாதே...போட்ரு!//

எவனும் சிக்க மாட்டரான் மக்கா... தேவா ஒரு பதிவு போட்டாரு.. அங்க போய் ரத்தம் பாக்கலாம் பாத்தேன்.. யாரும் சிக்கல..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி
//விடாதே...போட்ரு!//

எவனும் சிக்க மாட்டரான் மக்கா... தேவா ஒரு பதிவு போட்டாரு.. அங்க போய் ரத்தம் பாக்கலாம் பாத்தேன்.. யாரும் சிக்கல..//

அதுக்குத்தான் புது ஆட்ட ரெடி பண்ணிக்கிட்டு இருந்தேன், நீ கெடுத்திட்டியே?

TERROR-PANDIYAN(VAS) said...

//அதுக்குத்தான் புது ஆட்ட ரெடி பண்ணிக்கிட்டு இருந்தேன், நீ கெடுத்திட்டியே? //

பாத்தா படிச்ச புள்ள மாதிரி இருக்கு மக்கா.... எதோ பிஸிக்ஸ் புக்க கொவட்டர்ல வாட்டர் கலக்காம கரைச்சி குடிச்சி இருக்கும் போல..... :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//TERROR-PANDIYAN(VAS) said...
//அதுக்குத்தான் புது ஆட்ட ரெடி பண்ணிக்கிட்டு இருந்தேன், நீ கெடுத்திட்டியே? //

பாத்தா படிச்ச புள்ள மாதிரி இருக்கு மக்கா.... எதோ பிஸிக்ஸ் புக்க கொவட்டர்ல வாட்டர் கலக்காம கரைச்சி குடிச்சி இருக்கும் போல..... :))//

என்னது பிசிக்ஸா? அப்படின்னா நம்ம கெமிஸ்ட்ரிக்கு சரிப்பட்டு வராதே?

TERROR-PANDIYAN(VAS) said...

//என்னது பிசிக்ஸா? அப்படின்னா நம்ம கெமிஸ்ட்ரிக்கு சரிப்பட்டு வராதே? //

நம்ம ஏரியா பக்கம் வந்தாச்சி இல்ல இனி கெடுத்து குட்டி சுவர் ஆக்கிடலாம்... நம்ம கூட்டத்டுல ஒருத்தன் புத்திசாலியா இருக்கலாம...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//TERROR-PANDIYAN(VAS) said...
//என்னது பிசிக்ஸா? அப்படின்னா நம்ம கெமிஸ்ட்ரிக்கு சரிப்பட்டு வராதே? //

நம்ம ஏரியா பக்கம் வந்தாச்சி இல்ல இனி கெடுத்து குட்டி சுவர் ஆக்கிடலாம்... நம்ம கூட்டத்டுல ஒருத்தன் புத்திசாலியா இருக்கலாம...//

அப்படீங்கறே? சரி சரி, புது ஆடுக வேற ஒண்ணுமில்ல, போனாப் போகுது சேத்துக்குவோம்!

Jayadeva said...

அடங்கொக்க மக்கா, இதுவா மேட்டரு ஆடு எஸ்கேப்.

சரவணக்குமார் said...

எங்கள் வருங்கால தமிழக முதல்வரை கிண்டல் செய்ததால் இந்த பதிவிலிருந்து வெளி நடப்பு செய்து
வாந்தி வரும் வரை குவார்ட்ட்ர் உடன் சிக்கன் பிரியாணி சாப்பிடும் போராட்டத்தை ஆரம்பிக்கிறேன்

விரைந்து வாருங்க்ள் விசியக்காந்த ரசிகர்களே, ஒன்று கூடுவோம், வாந்தி எடுப்போம்.

குத்தாலத்தான் said...

தாறு மாறு தல!

Anonymous said...

//அரசியல்வாதிகள் வாங்கும் அன்பளிப்பிற்கு இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது//

:::)))

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
அன்பரசன் said...

கும்மாங்குத்து போங்க.

ப.செல்வக்குமார் said...

//. எந்தக் கன்ட்ராக்டும், டென்டரும், பீஸ் தொகையுடன் சேர்த்து 10.3567% அன்பளிப்பு கொடுத்தால் மட்டுமே அரசால் ஏற்றுக்கொள்ளப்படும்//

எல்லாமே கணக்குதான் .!!

ப.செல்வக்குமார் said...

///அரசு கெஜட்டில் இருந்து லஞ்சம், ஊழல் போன்ற வார்த்தைகள் எடுக்கப்படும் (தக்காளி இனி லஞ்சம் ஊழல்னு யாரும் வெளையாட்டுக்கூட சொல்ல முடியாதுல்ல?)//

செம டெக்னிக்..!!

Tirupurvalu said...

Goundarai visayakanthai kindal pannidu erukinga paaruga 1 naal achiya pooduchu 1st arrest panrathu neega than.Enga Captain police dress poodudu vanthu ungalai arrest pannuvaru ennga sanga thalai suthesh special commando paadiyooda vaaruvaru .Enga Anni latha ladies police padayooda vaanthu ungalai arrest pannuvoom.ungalugu mun jamin kidaiyathu goudarai ungaluku