Thursday, September 9, 2010

யாராவது அஞ்சு பேரு போயித்தொலைங்கய்யா!

நேத்து டாஸ்மாக்குல கடைதொறக்குறதுக்காக எப்பவும்போல காலைலேயே போயி கடைவாசல்ல நின்னுக்கிட்டு இருந்தேன். ஆளுங்கவந்து ஷட்டர ஓப்பன் பண்ணிக்கிட்டு இருந்தானுங்க. சரி இன்னிக்கும் நாமதான் பர்ஸ்ட்டுன்னு பெருமையா திரும்பிப் பாத்தா அதுக்குள்ள ஒரு ஆளு திமுதிமுன்னு வந்து என்னை முட்டித்தள்ளிக்கிட்டு முன்னாடி போயி எனக்கு முன்னாடி ஒரு புல்லும் வாங்கிட்டான். நானும் முறைச்சிக்கிட்டே நம்ம ஐட்டத்த வாங்கிட்டு வேகமா அவன பாலோ பண்ணேன். ஒருவழியா மூத்திர சந்துக்குள்ள வெச்சி ஆளயும் புடிச்சிட்டேன். தக்காளி யாருடா நீய்யி? எங்க ஏரியாவுல வந்து எங்களுக்கு முன்னாடி புல்லு வாங்குரேன்னு கழுத்துச்சட்டையப் புடிச்சி ஒருவாங்கு வாங்குனா...... எங்க தலைவருக்காக வாங்குறேன்னான். ஓஹோ அப்ப நீயி அல்லக்கைய்யா? யாருடா உங்க பாஸு, ங்கொய்யா வாடா ரெண்டுல ஒண்ணு பாத்துடலாம்னு நம்ம சிரிப்பு போலீசு இருக்கிர தெகிரியத்துல கெளம்பிட்டேன்.
போயிப் பாத்தா எங்கேயோ பாத்த மாதிரியே இருக்கு. அவன்கிட்டேயே கேட்டேன். யோவ் நீ சுனாசாமி மாதிரியே இருக்கியே? அதுக்கு அந்தாளு, ஆமாப்பா நான் சுனாசாமிதான் சும்மா விடுப்பான்னு சொல்றாப்ல! யோவ் நீயெல்லாம் ஸ்டாரு ஹோட்டல்ல அடிக்கிற ஆளாச்சே என்யா இங்க வந்தேன்னு கேட்டா, எலக்சன் வரப்போகுதுல எங்க கட்சி சார்பா நிக்கிறதுக்கு அஞ்சு பேரும் வேணும், அதுக்கு ஆள் புடிக்கிறதுக்குத்தான் இப்பிடி மாறுவேஷத்துல அலையிறேங்கோன்னாரு, எனக்கு தூக்கிவாரிப்போட்டிருச்சி,

என்னது மாறுவேஷமா, அப்பிடி ஒண்ணுமே தெரியலையே?

உடனே கன்னத்துல இருந்து ஒரு மச்சத்த எடுத்துட்டு,
இது என்னன்னு தெரியலைய்யா?

(ங்கொக்காமக்கா...இந்த நியாயத்த எங்க போயிச் சொல்ல? )

சரி அது என்ன அஞ்சு சீட்டு கொடுத்தா கூட்டணி?

ஆமா இல்லேன்னா அப்புறம் 234 தொகுதிலேயும் நிக்க வேண்டி வந்திடும், அத்தினிபேருக்கு நான் எங்க போவேன்? அஞ்சு பேருக்கே ஊரு ஊரா மாறுவேசத்துல அலைஞ்சிக்கிட்டு இருக்கேன்!

அது சரி, இப்போ 5 பேரு புடிச்சிட்டீங்களா?

ஒருத்தனும் சிக்க பாட்டேங்கிரானுங்கய்யா, இவ்வளவு கேக்கிரியே, நீ ஒரு சீட்ட எடுத்துக்கோயேன்.

(தக்காளி கடைசில எனக்கே ஆப்பா! )

யோவ் இவ்வளவு நேரம் உங்கூட பேசிக்கிட்டு இருந்ததுக்கு இப்பிடி பண்ணுறியே?

ஆமாய்யா எல்லாரும் இப்பிடியே சொன்னா, நான் என்னதான் பண்றது? ஒண்ணு செய்யேன், நீதான் பிரபலப் பதிவ்ராச்சே, அதுவும் பலபேரு வந்து போற எடம்னு வேற போட்டிருக்கே, நீயே அஞ்சு பேரு வேணும்னு ஒரு வெளம்பரம் கொடுத்துடேன்!

சரி சென்டிமென்ட்டா (!) கேக்குறதுனால கருமத்தப் போட்டுத் தொலைக்கிறேன். யாராவது அஞ்சு பேரு போயித்தொலைங்கய்யா!

ஆட்கள் தேவை!
வரும் தமிழக சட்டசபை தேர்தலில் சனதா கட்சியின் சார்பாக நிற்க ஐந்து வேட்பாளர்கள் தேவை. தேர்தல் முடியும் வரை உணவு தங்குமிடம் இலவசம்.
கண்டிசன்கள்:
1. வரும்போது டெபாஸிட் தொகையும் கொண்டுவரவேண்டும்.
2. கட்சித்தொண்டர்கள் என்ற பெயரில் ஆளுக்குக் குறைந்தது 50 பேராவது திரட்டி வரவேண்டும்.
3. அழுகிய தக்காளி, முட்டை வீசிய, வாங்கிய அனுபவம் கண்டிப்பாக இருக்கவேண்டும்.
4. மாதாமாதம் கேஸ் போடுவதற்கு மேட்டர் கொண்டுவரவேண்டும் (நல்ல பரபரப்பான மேட்டருக்கு ரூ.50 கொடுக்கப்படும்)
5. கட்சியில் குறைந்தது 2 ஆண்டுகளுக்கு உறுப்பினராக சம்மதம் தெரிவிக்கவேண்டும்.
6. அவ்வவப்போது கட்சிப் பணியில் ஈடுபட்டு கட்சியை பலப்படுத்த வேண்டும்.
7. வேறு மாநிலங்களில் நம் கட்சி போட்டியிடும்போது கட்சிப் பணிகளுக்காக அங்கே செல்ல வேண்டும்.

கண்டிசன்களுக்கு உடன்படுபவர்கள் உடனே புறப்பட்டுவரவும்.

முகவ்ரி:
சுனாசாமி
தலைவர், செயலாளர், பொருளாளர், உதவித் தலைவர், உதவி செயலாளர் மற்றும் உதவிப்பொருளாளர்,
சனதா கட்சி,
தலைமை அலுவலகம்,
சென்னை.

எச்சரிக்கை: இது அரசியல் பதிவல்ல!

37 comments:

கொல்லான் said...

ராம்சாமி,
//தலைவர், செயலாளர், பொருளாளர், உதவித் தலைவர், உதவி செயலாளர் மற்றும் உதவிப்பொருளாளர்,//

ஒரே ஒரு உறுப்பினர் அப்படிங்கறத விட்டுட்டீங்களே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கொல்லான் said...
ராம்சாமி,
//தலைவர், செயலாளர், பொருளாளர், உதவித் தலைவர், உதவி செயலாளர் மற்றும் உதவிப்பொருளாளர்,//

ஒரே ஒரு உறுப்பினர் அப்படிங்கறத விட்டுட்டீங்களே?//


உறுப்பினருங்கறது பதவி இல்ல. அதனாலதான் போடல!

கொல்லான் said...

ராம்சாமி,
//. வரும்போது டெபாஸிட் தொகையும் கொண்டுவரவேண்டும்.//

நான் போக ரெடி. டெபாசிட் தொகையை நீங்க குடுத்துருங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அது இருந்தா நான் ஏன்யா இப்பிடி கூவிக்கிட்டு இருக்கேன்?

கொல்லான் said...

ராம்சாமி,
இந்நேரத்துக்கு கடையை தொறந்து வச்சா இப்படித்தேன்.
பாருய்யா கூட்டமே காணோம்.

பனங்காட்டு நரி said...

இதுக்கு பதில் தீக்குளிப்பது நலம் என ப மு க செயற்குழு முடிவெடுத்துள்ளது என PTI செய்தி குறிப்பு சொல்கிறது .தீக்குளிபதற்கு முன்வருவோர் பட்டியல் வரவேற்க படுகிறது

பனங்காட்டு நரி said...

முதலில் தீக்குளிக்க முன்வந்தோர் பட்டியல் ...,

01 .டெர்ரர் பாண்டி
02 .ஜெய்
03 .மங்குனி அமைச்சர்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கொல்லான் said...
ராம்சாமி,
இந்நேரத்துக்கு கடையை தொறந்து வச்சா இப்படித்தேன்.
பாருய்யா கூட்டமே காணோம்.//

காலைல கடைய தொறந்தா எவனும் வரமாட்டேங்கிரானுங்கன்னுதான் இப்போ தொறந்தோம், ம்ஹூம் இது சரிப்பட்டு வராது, இனி நாமலும் 18+ போட்ர வேண்டியதுதான்!

கொல்லான் said...

தீக்குளிக்க உள்ளோர்களை மந்திரிகளாக்க முடிவெடுத்துள்ளதாக
ஏஜன்சி செய்திகள் சொல்கின்றன.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பனங்காட்டு நரி said...
முதலில் தீக்குளிக்க முன்வந்தோர் பட்டியல் ...,

01 .டெர்ரர் பாண்டி
02 .ஜெய்
03 .மங்குனி அமைச்சர்//

என்னக்கின்னு சொல்லியனுப்பு நான் வந்து பத்த வெக்கிறேன்!

கொல்லான் said...

ராம்சாமி ,
//இனி நாமலும் 18+ போட்ர வேண்டியதுதான்!//

நான் தீக்குளிக்கரதுல உனக்கு அப்படி என்ன ஒரு பேராசை?

பனங்காட்டு நரி said...

தீக்குளிப்பு தேதி கட்சியின் உயர்மட்ட குழு முடிவு எடுக்கும் ..,தேதி அறிவிக்கபட்டவுடன் யார் கொளுத்துவார்கள் என்று முடிவு அறிவிக்க படும்

பனங்காட்டு நரி said...

அதற்கடுத்து தீக்குளிக்க முன்வந்தோர் பட்டியல் ...,

04 .அருண் பிரசாத்
05 . சிரிப்பு போலீஸ்

பனங்காட்டு நரி said...

//// தீக்குளிக்க உள்ளோர்களை மந்திரிகளாக்க முடிவெடுத்துள்ளதாக
ஏஜன்சி செய்திகள் சொல்கின்றன.///

முதலில் நிற்கோணும் ,அப்புறம் வோட்டுக்கு காசு குடுகோணும் ,அப்புறம் ஜெய்கோணும் ,அப்புறம் தான் மந்திரி எல்லாம் ,,
,
பொது செயலாளர்
ப மு க

பனங்காட்டு நரி said...

///// சரி இன்னிக்கும் நாமதான் பர்ஸ்ட்டுன்னு பெருமையா திரும்பிப் பாத்தா அதுக்குள்ள ஒரு ஆளு திமுதிமுன்னு வந்து என்னை முட்டித்தள்ளிக்கிட்டு முன்னாடி போயி எனக்கு முன்னாடி ஒரு புல்லும் வாங்கிட்டான்.////////

இன்னா தல நீ உங்க ஏரியால உன்னக்கு பவர் இல்ல போல ...,நானா இருந்த ஒரு அடிதடியே நடந்திருக்கும் .....,ஆமா நீ என்ன பிராண்டு அடிபே..,நானெல்லாம் MANSION HOUSE இல்லேனா ..கடை எதிரில் தர்ணா பண்ற அளவுக்கு போய்டுவேன் ...,

சேட்டைக்காரன் said...

பானா கூவன்னா, ஒரு சீட்டு எனக்குத்தானாம். இன்னொருத்தரைக் கூட்டிட்டு வான்னு சாமி சொல்லுறாரு, வர்றீகளா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பனங்காட்டு நரி said... 13 அதற்கடுத்து தீக்குளிக்க முன்வந்தோர் பட்டியல் ...,

04 .அருண் பிரசாத்
05 . சிரிப்பு போலீஸ்//

ங் கொய்யால

தலை சீவுவது ஒரு பாவச் செயல்
பல் விளக்குவது ஒரு பெருங்குற்றம்
குளிப்பது ஒரு தீண்டத்தகாத செயல்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மறுபடியும் ஆற்காட்டார்!...ஹி...ஹி....! (கக்கூசுக்கு வரலைன்னாக்கூட ஆற்காட்டாருதான் காரணம்னு சொல்வோம்ல!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பனங்காட்டு நரி said...
///// சரி இன்னிக்கும் நாமதான் பர்ஸ்ட்டுன்னு பெருமையா திரும்பிப் பாத்தா அதுக்குள்ள ஒரு ஆளு திமுதிமுன்னு வந்து என்னை முட்டித்தள்ளிக்கிட்டு முன்னாடி போயி எனக்கு முன்னாடி ஒரு புல்லும் வாங்கிட்டான்.////////

இன்னா தல நீ உங்க ஏரியால உன்னக்கு பவர் இல்ல போல ...,நானா இருந்த ஒரு அடிதடியே நடந்திருக்கும் .....,ஆமா நீ என்ன பிராண்டு அடிபே..,நானெல்லாம் MANSION HOUSE இல்லேனா ..கடை எதிரில் தர்ணா பண்ற அளவுக்கு போய்டுவேன் ...,//

எங்க ஏரியாவுல என்னைக்கிய்யா பவர் இருந்திச்சி? எல்லாத்தையும் நம்ம ஆற்காட்டாரு என்னைக்கோ புடிங்கிட்டாரே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பனங்காட்டு நரி said...
//// தீக்குளிக்க உள்ளோர்களை மந்திரிகளாக்க முடிவெடுத்துள்ளதாக
ஏஜன்சி செய்திகள் சொல்கின்றன.///

முதலில் நிற்கோணும் ,அப்புறம் வோட்டுக்கு காசு குடுகோணும் ,அப்புறம் ஜெய்கோணும் ,அப்புறம் தான் மந்திரி எல்லாம் ,,
,
பொது செயலாளர்
ப மு க//

நில்லுங்க நில்லுங்க, எங்க சுனாசாமி எல்லாத்தையும் ஒரே ஒரு கேஸ் போட்டு கிய்யாமிய்யான் பண்ணிப்புடுவாரு, ஆமா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//சேட்டைக்காரன் said...
பானா கூவன்னா, ஒரு சீட்டு எனக்குத்தானாம். இன்னொருத்தரைக் கூட்டிட்டு வான்னு சாமி சொல்லுறாரு, வர்றீகளா?//

பாத்தீங்களாய்யா, அண்ணே எம்புட்டு நேக்கா நம்மள கோர்த்து வுடுறாரு! (அது சரி, அண்ணே சீட்டுக்கு எம்புட்டு கொடுத்திய?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//பனங்காட்டு நரி said... 13 அதற்கடுத்து தீக்குளிக்க முன்வந்தோர் பட்டியல் ...,

04 .அருண் பிரசாத்
05 . சிரிப்பு போலீஸ்//

ங் கொய்யால

தலை சீவுவது ஒரு பாவச் செயல்
பல் விளக்குவது ஒரு பெருங்குற்றம்
குளிப்பது ஒரு தீண்டத்தகாத செயல்..//

இன்னைக்கித்தாம்ல நீ ரொம்ப நல்லவன்னு நிருபிச்சி இருக்க, உன்ன மாதிரி ஆளுகளத்தான்யா நம்ம சுனாசாமி தேடிக்கிட்டு இருக்காப்ல!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரைட் ஆனா குளிக்க சொல்லி கட்டாயப் படுத்த கூடாது..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ரைட் ஆனா குளிக்க சொல்லி கட்டாயப் படுத்த கூடாது..//

அதுக்காகத்தான்யா சுனாசாமி கூப்புடுறாரு!

கும்மி said...

//யாராவது அஞ்சு பேரு போயித்தொலைங்கய்யா//

இல்லைன்னா அவரு தேர்தலைப் புறக்கணிச்சிரப் போறாரு. அப்புறம் ஜனநாயகத்துக்கு இழுக்கு

கும்மி said...

//எச்சரிக்கை: இது அரசியல் பதிவல்ல!//

இப்படிப் போட்டே எல்லா பதிவுலையும் அரசியல் பண்ணுறீங்களே!

கும்மி said...

// இனி நாமலும் 18+ போட்ர வேண்டியதுதான்!//

டெக்னிக்கை பப்ளிக்காகிய மங்குனி வாழ்க!

DrPKandaswamyPhD said...

நான் ரெடி.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கும்மி said...
//யாராவது அஞ்சு பேரு போயித்தொலைங்கய்யா//

இல்லைன்னா அவரு தேர்தலைப் புறக்கணிச்சிரப் போறாரு. அப்புறம் ஜனநாயகத்துக்கு இழுக்கு//

அதுக்குத்தா இப்பிடி தம் கட்டி ஆளுகள கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன், ஒரு பய போற மாதிரி தெரியல! எங்கே ஜனநாயகத்தின் தூணே சரிஞ்சிடுமோன்னு கவலையா இருக்கு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கும்மி said...
//எச்சரிக்கை: இது அரசியல் பதிவல்ல!//

இப்படிப் போட்டே எல்லா பதிவுலையும் அரசியல் பண்ணுறீங்களே!//

அரசியல்ன்னு போட்டா சின்ன பசங்க பயந்துடுரானுங்க, அதான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//DrPKandaswamyPhD said...
நான் ரெடி.//

அப்போ அந்த 7 கண்டிசனும் ஓக்கேதானே? மொதவேலையா டிபாசிட் பணத்த DD எடுத்து அனுப்புங்க!

ப.செல்வக்குமார் said...

அட சாமி போஸ்டர் கூட அடிச்சா ..?

ப.செல்வக்குமார் said...

//யோவ் இவ்வளவு நேரம் உங்கூட பேசிக்கிட்டு இருந்ததுக்கு இப்பிடி பண்ணுறியே?///
உங்க நண்பர்தானே போய்த்தான் பாருங்களேன் ..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ப.செல்வக்குமார் said...
//யோவ் இவ்வளவு நேரம் உங்கூட பேசிக்கிட்டு இருந்ததுக்கு இப்பிடி பண்ணுறியே?///
உங்க நண்பர்தானே போய்த்தான் பாருங்களேன் ..!!////

என்னா கொலவெறி...! நானே தப்பிச்சோம் பொழச்சோம்னு ஓடியாந்திருக்கேன்!

Murali.R said...

விநாயக சதூர்த்தி வாழ்த்துக்கள்!! என் ப்ளாக் வந்து குறை, நிறை சொல்லுங்க

http://idhunammaviidu.blogspot.com/2010/09/blog-post.html

என்னது நானு யாரா? said...

பன்னிகுட்டி சாரே! கலக்கல் போங்கோ!
அவரு காதில விழுந்தா உங்க மேல கேஸ் ஏதாவது போட போறாரு! உஷாரா இருங்க பங்காளி!

எப்படி மிஸ் பண்ணிட்டேன் உங்களை. இப்பத்தான் உங்க Follower ஆனேன். தொடர்ந்து வருவோம் இல்ல இனி!!

Tirupurvalu said...

Nee than poochandiya bloglla nalla pasangalai ellam pudichudu pooruviya