Saturday, September 4, 2010

அதிரடி வீட்டுக்குறிப்புகள்: கைகளால் பேப்பர் கிழிப்பது எப்படி?

ஒருவழியா பிரபலப் பதிவர் ஆயாச்சு, பலபேரு ஆர்வமா(!) பாலோ பண்ணத் தொடங்கிட்டாங்க, ஒரு பதிவு போட்டா ஓடி வந்து கும்முவதற்கு ஒரு படையே தயாரா இருக்கு, இவ்வளவு இருந்தும் ஏதோ மிஸ்ஸாகுற மாதிரியே ஒரு பீலீங். சரி எதுக்கும் இருக்கட்டும்னு நம்ம கேரளா ஜோசியர் குஞ்சுன்னிய போயி பாத்து என்ன செய்யலாம் கேட்டோம். அவரு நீங்க எல்லாத்துக்கும் உபயோகப்படுற மாதிரி ஒரு பதிவப் போடுங்க, உங்க மனபாரம் குறைஞ்சாலும் குறையும்னு சொல்லிப்புட்டாரு.

என்னடா இது இப்பிடி ஒரு குண்டத் தூக்கிப் போட்டுபுட்டாரு நமக்குத்தான் சுட்டுப்போட்டாலும் உருப்படியா எழுத வராதே, என்ன பதிவு போடலாம்னு விடிய விடிய ரெண்டு புல்ல காலி பண்ணி யோசிச்சதுல வந்த ஐடியாதான் இது. அது என்னன்னா கைய வெச்சி பேப்பர் கிழிப்பது எப்பிடின்னு எல்லாத்துக்கும் சொல்லிக்கொடுப்பது. நிச்சயமா உபயோகமான குறிப்பா இருக்கும் ஏன்னா யாருமே வாழ்க்கைல பேப்பர் கிழிக்காம இருக்க மாட்டாங்கல்ல, அதுனால் எப்பிடியும் நம்ம பதிவு யூஸ் ஆகிடும் இல்லியா?

சரி, இப்போ பேப்பர கிழிப்பது எப்படின்னு பார்ப்போமா?

மொதல்ல நீங்க கிழிக்கவேண்டிய பேப்பர கையில எடுத்து வெச்சிக்கிடுங்க.
அப்புறம் அத ரெண்டா கவனமாக பாருங்க, ரெண்டா மடிங்க. எங்க கிழிக்க்கனுமோ அந்த எடத்துல மடிப்பு வர்ர மாதிரி மடிக்கனும். அது ரொம்ப முக்கியம். ஆமா.பேப்பர மடிசிட்டீங்களா? மடிப்புல கை விரல வெச்சி நல்லாத் தேச்சி விடனும். அப்புறம் பேப்பர விரிக்கனும். ஏதாவது மேசைல பேப்பர வெச்சிட்டு ஒரு பக்கத்த ஒரு கையால அழுத்தி பிடிச்சிக்கிட்டு இன்னொரு பக்கத்த பிடிச்சி டர்ருனு கிழிக்கனும். மடிப்புல ஒரு ஸ்கேல வெச்சிக்கிட்டுக் கூட டர்ருனு இழுத்துக் கிழிக்கலாம். அது உங்க சவுகர்யத்த பொறுத்தது.இப்பிடி டர்ருனு கிழிக்க விரும்பாதவங்களுக்கு இன்னொரு டெக்னிக் வெச்சிருக்கேன். பேப்பர மடிச்சீங்கள்ல, அத விரிக்காம, மடிப்புக்குள்ள ஒரு ப்ளேட விட்டு சர்ருனு இழுத்துட்டீங்கன்னா அப்பிடியே கிழிஞ்சுரும் ஆமா.

இப்பிடி நீங்க வரிசையா பேப்பர கிழிச்சுக்கிட்டே போகலாம். பேப்பரத்தான் கிழிக்கனும்னு இல்ல, உங்க வசதியப் பொறுத்து, ரூவா நோட்டு, நியூஸ் பேப்பரு, புக்கு, இப்பிடி எத வேணூம்னாலும் கிழிக்கலாம், அதுக்கு நம்ம டெக்னிக் கண்டிப்பா கை கொடுக்கும். மனசத் தளரவிடாம கிழிச்சிக்கிட்டே போங்க! ஆல் தி பெஸ்ட்!
ஓக்கே மக்கா...இன்னிக்கு கையால பேப்பர் கிழிப்பது எப்படின்னு பாத்தோம், இதுக்கு கெடைக்கிற வரவேற்பப் பொறுத்து அடுத்து காலால பேப்பரக் கிழிப்பது எப்படின்னு பார்ப்போம், அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது உங்கள் ப.ரா.!

56 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

koyyaala varen

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நேர்ல வந்து விளக்கம் கொடுக்க முடியுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்படியே பன்னி தலைல உள்ள களிமண்ணை நீக்குவது எப்படின்னு சொல்லுங்க....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நேர்ல வந்து விளக்கம் கொடுக்க முடியுமா?//

சாரி அப்பாயின்ட்மென்ட் இல்லாம யாருக்கும் கன்சல்டேசன் பண்றதில்ல!

Jey said...

பன்னி நீயும் படம் போட்டு நல்லா வ்ளக்கி சொன்னாமாறிதான் தெரியுது..ஆனாலும் படிச்சதுக்கப்புறம் நெறய டவுட்டு வருது..., நேர்ல வந்து விளக்கினா...கொஞ்சம் தெளிவா புடியும்..வேணும்னா... அப்&டவுன் பிளைட் டிக்கெட், இங்க 5ஸ்டார் கோட்டல் ரும் எல்லா அரேஞ்மெண்ட்டும் பண்ணிகுடுக்கிறேன்..., வர்றயா ராசா...

Jey said...

இத தனியா ட்ரைனிங் செண்டர் ஓபன் பண்ணி, டிப்ளமோ இன் பேப்பர் கிழிப்பு(கட்டிங்) அப்படின்னு கோர்ஸ் நடத்துனா நல்லா கல்லா கட்டலாம் பன்னி...இப்படி ஊருக்கு ஓசில கூவிட்டியே..., பொழைக்கத் தெரியாத சாம்பார்யா நீ.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சாரி அப்பாயின்ட்மென்ட் இல்லாம யாருக்கும் கன்சல்டேசன் பண்றதில்ல!//

எங்க அப்பாவோட ஆயின்மென்ட் உனக்கு எதுக்கு தல...

க.பாலாசி said...

இப்டியொரு சூப்பர் ஐடியா கொடுத்ததுக்கு உங்களுக்கு ஏதாவது தரணுமே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Jey said...
இத தனியா ட்ரைனிங் செண்டர் ஓபன் பண்ணி, டிப்ளமோ இன் பேப்பர் கிழிப்பு(கட்டிங்) அப்படின்னு கோர்ஸ் நடத்துனா நல்லா கல்லா கட்டலாம் பன்னி...இப்படி ஊருக்கு ஓசில கூவிட்டியே..., பொழைக்கத் தெரியாத சாம்பார்யா நீ.///

அப்பிடிங்க்றே..அப்போ காலால கிழிக்கறது மத்த மேட்டர்லாம் அப்பிடியே சீக்ரெட்டா வெச்சுடுவோம், சீக்கிரமே ஒரு கோச்சிங் சென்டர் ஆரம்பிச்சிட வேன்டியதுதான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//சாரி அப்பாயின்ட்மென்ட் இல்லாம யாருக்கும் கன்சல்டேசன் பண்றதில்ல!//

எங்க அப்பாவோட ஆயின்மென்ட் உனக்கு எதுக்கு தல...//


ம்ம்ம்ம் ஆயின்மென்ட்டாவது ஆப்பாயிலாவது.....கன்ட்=சல்டேசன் பீஸ்...பீஸ் அதான் ரொம்ப முக்கியம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//க.பாலாசி said...
இப்டியொரு சூப்பர் ஐடியா கொடுத்ததுக்கு உங்களுக்கு ஏதாவது தரணுமே...///

பாத்து தனியா இருக்கும்போது வந்து கொடுங்க, இங்க நம்ம பங்காளி பசங்க சுத்திக்கிட்டு இருக்கானுங்க, அப்புறம் பங்கு வேணும்பானுங்க!

TERROR-PANDIYAN(VAS) said...

மவனே என் கொலைவெறிக்கு நீதான் பலி... இருடி ஒரு 10 நிமிஷம்....

இம்சைஅரசன் பாபு.. said...

//இப்பிடி நீங்க வரிசையா பேப்பர கிழிச்சுக்கிட்டே போகலாம். பேப்பரத்தான் கிழிக்கனும்னு இல்ல, உங்க வசதியப் பொறுத்து, ரூவா நோட்டு, நியூஸ் பேப்பரு, புக்கு, இப்பிடி எத வேணூம்னாலும் கிழிக்கலாம், அதுக்கு நம்ம டெக்னிக் கண்டிப்பா கை கொடுக்கும். மனசத் தளரவிடாம கிழிச்சிக்கிட்டே போங்க!//

இன்னொன்றை விட்டுடீங்களே
அடுத்தவங்க trousera எப்படி கிளிகன்னும்னு சொல்லல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

// TERROR-PANDIYAN(VAS) said...
மவனே என் கொலைவெறிக்கு நீதான் பலி... இருடி ஒரு 10 நிமிஷம்....//

ஆஹா ஓவரா மொக்க போட்டதுல டாத இடதுல பட்டிருச்சோ!

TERROR-PANDIYAN(VAS) said...

யோ ராம்ஸ்!! வெளிய வாயா!! மொதல்ல உன்னை எப்படி கிழிக்கிறது சொல்லு....

TERROR-PANDIYAN(VAS) said...

//இவ்வளவு இருந்தும் ஏதோ மிஸ்ஸாகுற மாதிரியே ஒரு பீலீங்//

மும்பை போகத சொன்ன கேக்கனு இப்பொ எவன் ஆப்ரேஷன் பண்ணான் தெரியல... மிஸ்டர்ல இருந்து மிஸ் ஆகர பீலீங்.... கவலைபடாத நானும், ஜெய் சேர்ந்து உன்ன லவ் பண்றேம்....

TERROR-PANDIYAN(VAS) said...

//அவரு நீங்க எல்லாத்துக்கும் உபயோகப்படுற மாதிரி ஒரு பதிவப் போடுங்க, உங்க மனபாரம் குறைஞ்சாலும் குறையும்னு சொல்லிப்புட்டாரு.//

உன் மனசு மேல எவன் பரங்கிமலை தூக்கி வச்சான்?? உன்ன ஓரே போட போட்டா எல்லாம் சரி ஆகிடும்....

TERROR-PANDIYAN(VAS) said...

//உங்க வசதியப் பொறுத்து, ரூவா நோட்டு, நியூஸ் பேப்பரு, புக்கு, இப்பிடி எத வேணூம்னாலும் கிழிக்கலாம், அதுக்கு நம்ம டெக்னிக் கண்டிப்பா கை கொடுக்கும். மனசத் தளரவிடாம கிழிச்சிக்கிட்டே போங்க!//

இந்த மனுஷன எப்படி கிழிச்சா ஒரே கிழில கொடல் வெளிய வரும்???

TERROR-PANDIYAN(VAS) said...

//அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது உங்கள் ப.ரா.//

மவனே அப்படியே ஓடி போய்டு... திரும்பி இந்த் பக்கம் வந்த... நல்ல கொழுத்த பன்னிகறி வேனும் இரண்டு மூனு ஹோட்டல்ல கேட்டு இருக்காங்க....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

powercut dears, typing from mobile. I'll b back after power comes.

TERROR-PANDIYAN(VAS) said...

//powercut dears, typing from mobile. I'll b back after power comes.//


ஐயோ! அம்மா! நீ வரவே வேண்டாம் ராசா... வந்து காலால எப்படி பேப்பர் கிழிக்கரது சொல்லவா??

(இந்த டாகல்டி வேலை எல்லாம் இங்க வேனாம்... வந்தா அறுத்துடுவேன் சொல்லி இங்லிபிஸ்ல போட்டு எஸ்ஸ்ஸ்ஸ் ஆகர....)

ganesh said...

அப்பா...ரெம்ப நாளா இருந்த ஒரு பெரிய சந்தேகம் இப்பத்தான்..தீர்ந்துச்சு...

Tirupurvalu said...

very useful for global peoples .All best world awards for you .All peoples globally don't know how to cut the paper now Mr.Obama trying to contact you directly to congrats

கக்கு - மாணிக்கம் said...

டியர் பன்னிகுட்டி ராம்சாமி , இது ரொம்ப ஓவரா இல்ல?
அடுத்த பதிவு "சட்டைய கிழித்துக்கொள்வது எப்படி"
வேனாம்யா பாவம் உட்டுடு ராஜா !

வழிப்போக்கன் - யோகேஷ் said...

யாராவது பதிவெழுதி என்னத்த கிழிச்சன்னு யாரும் கேட்டா இந்த பதிவ படிச்சி பேப்பர் கிழிச்சத சொல்லலாம்...

மதுரை சரவணன் said...

இவ்வளவு நாள என்னத்தை கத்து கிழிச்சன்னு யாரும் கேட்டா.. சொல்லுகிற மாதிரி ஒரு பதிவு போட்டதுக்கு நன்றி... வாழ்த்துக்கள்.

JDina said...

வணக்கம், இதை பார்த்து டென்ஷன் ஆகா வேண்டாம்.....

http://www.indianloversparty.com/

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நன்றி!
@ ganesh
@ Tirupurvalu
@வழிப்போக்கன் - யோகேஷ்
@ மதுரை சரவணன்
@ JDina

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கக்கு - மாணிக்கம் said...
டியர் பன்னிகுட்டி ராம்சாமி , இது ரொம்ப ஓவரா இல்ல?
அடுத்த பதிவு "சட்டைய கிழித்துக்கொள்வது எப்படி"
வேனாம்யா பாவம் உட்டுடு ராஜா !//


வாங்க மாணிக்கம்ணே உங்க விருப்பப்படியே அடுத்து சட்டை கிழிப்பது எப்பிடினு ஒரு பதிவப் போட்ருலாம்ணே, ஆனா ஒரு சின்ன விண்ணப்பம், ஒரு முன் ஜாமீன் மட்டும் வாங்கிக் கொடுத்துடுங்க போதும்!

DrPKandaswamyPhD said...

ப.ரா,
இந்தப்பதிவுக்கும் சென்சரி அடிச்சரலாமா?

DrPKandaswamyPhD said...

ப.ரா,
இந்தப்பதிவுக்கும் சென்சரி அடிச்சரலாமா?

DrPKandaswamyPhD said...

ப.ரா,
இந்தப்பதிவுக்கும் சென்சரி அடிச்சரலாமா?

DrPKandaswamyPhD said...

ப.ரா,
இந்தப்பதிவுக்கும் சென்சரி அடிச்சரலாமா?

முத்து said...

உள்ளேன் அய்யா

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

powercut dears, typing from mobile. I'll b back after power comes.//////////////

அங்கயும் ஆற்காட்டார் தான் மந்திரியோ.இல்ல நீ ஊரில் தான் குந்த வைச்சு உட்கார்ந்து இருக்கியா

அன்பரசன் said...

useful tips..

மங்குனி அமைசர் said...

எப்ப பாரு லேட்டா வர்றதே நமக்கு வேலையா போச்சு ?
ஏம்பா பண்ணி , பேப்பர் கிழிக்கிறது இவ்வளவு கஷ்டமான வேலையா , அதுக்கு லேட்டஸ்ட் மூட்டபூச்சி கொல்ற மெசின் ஈசியா இருக்கும் போல

vinu said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் நம்ம கடைப்பக்கம் வாய்யா வாழ்க்கைக்கு ரொம்ப அவசியமான ஒண்ணப் பத்தி ஒரு பதிவு போட்ருக்கேன்!ithuthaan athuvaaaaa

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//vinu said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் நம்ம கடைப்பக்கம் வாய்யா வாழ்க்கைக்கு ரொம்ப அவசியமான ஒண்ணப் பத்தி ஒரு பதிவு போட்ருக்கேன்!ithuthaan athuvaaaaa//

இல்ல அதுதான் இது!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாங்க அமைச்சரே, எப்பவும் போல எல்லாம் முடிஞ்சப்புறம் வந்திருக்கீரு!

மங்குனி அமைசர் said...

DrPKandaswamyPhD said...

ப.ரா,
இந்தப்பதிவுக்கும் சென்சரி அடிச்சரலாமா?///

எத்துண செஞ்சுரி அடிக்கலாம் சார்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

// DrPKandaswamyPhD said...
ப.ரா,
இந்தப்பதிவுக்கும் சென்சரி அடிச்சரலாமா?//

வாங்க தலைவரே, ம்ம்ம் கு.முக வோட கௌரவ தலைவர்ங்க்றத நிருபிச்சிட்டீங்க! வெரி குட் கீப் இட் அப்! (ரைட்டு அப்ப அடுத்து காலால் எப்பிடி பேப்பர் கிழிக்கறதுன்னு ஒரு பதிவப் போட்ர வேண்டியதுதான்!)

vinu said...

பேப்பர மடிசிட்டீங்களா? மடிப்புல கை விரல வெச்சி நல்லாத் தேச்சி விடனும்


excuse me நானும் ஒரு யோசனை சொல்லலாமா

ரெண்டா மடிச்ச பக்கத்தை வாயில் வச்சு அப்பிடிக்கா எச்சில் படுத்திட்டா இன்னும் கொஞ்சம் சுளுவா கிழிக்கலாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//முத்து said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

powercut dears, typing from mobile. I'll b back after power comes.//////////////

அங்கயும் ஆற்காட்டார் தான் மந்திரியோ.இல்ல நீ ஊரில் தான் குந்த வைச்சு உட்கார்ந்து இருக்கியா//

வாப்பு, இன்னும் ஊர்லதாம்லே இருக்கேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//vinu said...
பேப்பர மடிசிட்டீங்களா? மடிப்புல கை விரல வெச்சி நல்லாத் தேச்சி விடனும்


excuse me நானும் ஒரு யோசனை சொல்லலாமா

ரெண்டா மடிச்ச பக்கத்தை வாயில் வச்சு அப்பிடிக்கா எச்சில் படுத்திட்டா இன்னும் கொஞ்சம் சுளுவா கிழிக்கலாம்//

ங்கொய்யாலே வுட்டா இன்னும் வெவகாரமா என்னென்னமோ ஐடியாவுலாம் வரும்போல?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//இதுக்கு கெடைக்கிற வரவேற்பப் பொறுத்து அடுத்து காலால பேப்பரக் கிழிப்பது எப்படின்னு பார்ப்போம், அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது உங்கள் ப.ரா.//

கிழிஞ்சுது............!

vinu said...

உங்கள் கருத்தில் பிழை உள்ளது,
"பேப்பர மடிசிட்டீங்களா?" பேப்பர கிழிப்பது மட்டும்
நோக்கமாக இருப்பின் அதனை மடித்துக் கிழிக்கவே
தேவை இல்லை. நாம் கிழிப்பது நேராக வர வேண்டும்
என்ற எண்ணம் இருப்பின் மட்டும் நாம் அதனை மடித்துக்
கிழிக்க வேண்டும் என்பதை ஆண்டோர்களும், சாண்டோர்களும்


நிரம்பிய இவ்- அவையில் திரிவித்துக்'கொல்லு'கிரேன்

வெறும்பய said...

அடடா இன்னைக்கும் நான் லேட்டா...

வெறும்பய said...

நிரம்பிய இவ்- அவையில் திரிவித்துக்'கொல்லு'கிரேன்

//


ஆஹா என்ன விளக்கம்.. என்ன விளக்கம்...

வெளங்கிரும்...

vinu said...

nandri thiru verumpayan avargaleaaaa

Madhavan said...

எனக்கு வேணும்... வேணும்.. நல்ல இன்னுங்கூட வேணும்..
'ஆழம் தெரியாம கால விடக் கூடாது' - நல்ல உதாரணம் எனக்கு.. மொதோ மோதலா இங்கிட்டு வந்தெம் பாரு.. அதுக்கு (Read from 1st line again )

vinu said...

Madhavan said...
எனக்கு வேணும்... வேணும்.. நல்ல இன்னுங்கூட வேணும்..
'ஆழம் தெரியாம கால விடக் கூடாது' - நல்ல உதாரணம் எனக்கு.. மொதோ மோதலா இங்கிட்டு வந்தெம் பாரு.. அதுக்கு (Read from 1st line again )


ippudi solliputtu odippoitta eppudi vaanga gummalam

cheena (சீனா) said...

அருமையான ஆலோசனை - இன்று பெரும் முயற்சிக்குப் பிறகு அழகாக - பிசிறில்லாமல் - கிழித்தேன். நன்றி - ஆமா முனைவர் கந்தசாமி கூட கும்மி அடிக்க ஆரம்பிச்சிட்டாரா - பழக்க தோஷம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////cheena (சீனா) said...
அருமையான ஆலோசனை - இன்று பெரும் முயற்சிக்குப் பிறகு அழகாக - பிசிறில்லாமல் - கிழித்தேன். நன்றி - ஆமா முனைவர் கந்தசாமி கூட கும்மி அடிக்க ஆரம்பிச்சிட்டாரா - பழக்க தோஷம்////

ஆஹா... வாங்க சார் நீங்களும் வந்து எங்க ஜோதில ஐக்கியமாயிடுங்க....ஹி..ஹி...!

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//ஆஹா... வாங்க சார் நீங்களும் வந்து எங்க ஜோதில ஐக்கியமாயிடுங்க....ஹி..ஹி...!//

உன்னை யார் வலைச்சரம்விட்டு வெளிய வர சொன்னது? ராஸ்கல்... போ அங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

//ஆஹா... வாங்க சார் நீங்களும் வந்து எங்க ஜோதில ஐக்கியமாயிடுங்க....ஹி..ஹி...!//

உன்னை யார் வலைச்சரம்விட்டு வெளிய வர சொன்னது? ராஸ்கல்... போ அங்க...///

அங்கேயும் இருக்கேன், ஹி..ஹி.. டபுள் டூட்டி!