Thursday, September 16, 2010

அடப்பாவிகளா தேனுக்கும் பிரச்சனையா?

தேன் என்றாலே சுத்தமானது, இயற்கையாகக் கிடைக்கக் கூடியது என்று நம்புகிறோம். அதனாலேயே குழந்தைகளுக்கும் நோயாளிகளுக்கும் தரப்படுகிறது. சித்த, ஆயுர்வேதமருத்துவங்களில் தேனே ஒரு மருந்தாகவும் உள்ளது. வீடுகளில் இருக்கும் பாட்டிவைத்தியத்திலும் தேனே முதன்மை வகிக்கிறது. இப்படி நம் அன்றாட வாழ்க்கையில் தேனுக்கு எப்போதும் இடம் உண்டு. இப்போது அந்தத் தேனுக்கும் பிரச்சனை வந்து விட்டது. அது என்னவென்றால் மார்க்கெட்டுகளில் கிடைக்கும் தேனில் ஆறு வகையான ஆன்டிபயாடிக் எனப்படும் மருந்துகள் அதிக அளவில் கலந்திருந்தது என்று சென்டர் பார் சைன்ஸ் அன்ட் என்விரான்மென்ட் Centre for Science and Environment(குளிர்பானங்களில் அதிக அளவில் பூச்சிமருந்துகள் கலந்திருப்பதைக் கண்டறிந்தவர்கள் இவர்களே) அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
தேனில் ஏன் ஆன்டிபயாடிக் கலந்திருக்கிறது? அதனால் வரும் பிரச்சனைகள் என்னென்ன? கொஞ்சம் விலாவாரியாக பார்ப்போமா?
பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள் தேனையும் நவீன பேக்கிங்கில் விற்கிறார்கள். இவர்கள் யாரும் காட்டில் இயற்கையாகக் கிடைக்கும் தேனை எடுத்து விற்பதில்லை. அது சாத்தியமும் இல்லையென்பதால், தேனீக்களை பெரிய அளவில் வளர்த்துத் தேனை அறுவடை செய்பவர்களிடம் இருந்து வாங்குகிறார்கள். அல்லது தாங்களே அப்படி ஒரு பண்ணை வைத்துக்கொள்கிறார்கள். இவ்வாறு தேனீக்கள் செயற்கையான் சூழல்களில் வளர்க்கப்படும் போது அவற்றுக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. (கோழிப்பண்ணைகளிலும் இதே போல் ஆன்டிபயாடிக் ஊசிகள் போடப்படுகின்றன). இதுதான் தேனில் ஆன்டிபயாடிக் மருந்துகள் கலந்திருப்பதற்குக் காரணம்.

எந்த அளவு வரை அதிகபட்சமாக ஒவ்வொரு ஆன்டிபயாடிக் மருந்தும் தேனில் இருக்கலாம் என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வரையரை வைத்துள்ளன. அந்த அளவுக்கு மேல் ஆன்டிபயாடிக் இருந்தால் அது தேனை சாப்பிடுபவர்களுக்குப் பாதுகாப்பானதல்ல. அத்தகைய தேனை அந்த நாடுகளும் அனுமதிப்பதில்லை. இந்தியாவில் தேன் தயாரிக்கும் கம்பெனிகள் இந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொழுது இந்தக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டே தேன் தயாரிக்கின்றார்கள். ஆனால் பிரச்சனையே அவர்கள் இந்தியச் சந்தைக்கு வரும்போதுதான். இந்தியச் சந்தை என்று வரும்போது வழக்கம்போல எல்லாக் கம்பெனிகளும் செய்வது போல அவர்கள் தரம் குறைந்த மற்றும் ஆன்டிபயாடிக் அளவு அதிகம் உள்ள தேனையே விற்கிறார்கள். இத்தேனை அவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பியிருப்பார்களேயானால் அது நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பபட்டு விடும். ஆனால் இந்தியாவில் தேனிற்கென்று எந்தவிதமான பாதுகாப்பு வரைமுறைகளும் சட்டங்களோ இல்லாததால் கம்பெனிகள் வேறு நாடுகளில் விற்க முடியாததை நம்தலையில் கட்டுகின்றார்கள்.
சமீபத்திய பரிசோதனை முடிவு இந்தியாவின் எல்லாப் பெரிய கம்பெனிகளின் தேனிலும் ஆன்டிபயாடிக் மருந்துகள் மிக அதிக அளவு உள்ளதாகத் தெரிவிக்கிறது. இதில் இரண்டு வெளிநாட்டுக்கம்பெனிகளும் அடக்கம் (உள்ளூர்க்காரனுக்கே நம்மளப் பத்தி அக்கரையில்லைன்னா அப்புறம் வெளிநாட்டுக்காரன் சும்மாவா இருப்பான்?). அந்த வெளிநாட்டுக்கம்பெனிகளின் தேன் முதலில் அவர்கள் நாட்டு விதிமுறைகளின்படியே பயன்படுத்தக்கூடாத ஒன்றாக இருக்கிறது. அவர்கள் அதைத் தம்நாடுகளில் விற்கவே முடியாது. அதனால் இதுக்கென்றே இருக்கும் நம் நாட்டுச் சந்தைகளுக்குத் தள்ளிவிடுகிறார்கள்.
இப்படி அதிக அளவு ஆன்டிபயாடிக் கலந்த தேனை நாள்பட சாப்பிடுவதால் இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், சிறுநீரகம், ஈரல் பிரச்சனைகளும் ஏற்படலாம். மேலும், நம் உடம்பிலேயே அந்த ஆன்ட்டிபயாடிக்குகள் இருந்து கொண்டிருப்பதால், தேவையான சமயத்தில் கொடுக்கபடும் போது அவை செயற்படாது போகலாம். (சூப்பர் பக் கிருமிகள் இந்தியாவில் அதிக அளவில் காணப்படுவதற்கு இதுபோன்ற காரணங்கள் இருக்கக்கூடும்).

வெளிநாட்டுக்கம்பெனிகளை இந்தியாவில் அனுமதிக்கத் தொடங்கியபிறகு, இந்தியக் கம்பெனிகளும் சரி, வெளிநாட்டுக்கம்பெனிகளும் சரி, இரட்டைத் தரக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாகவே தெரிகிறது (நம்ம இரட்டை குவளை சிஸ்டம் ஞாபகம் வந்தா அதுக்கு நான் பொறுப்பு கிடையாதுங்கோ). அதாவது, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு ஒரு தரம், உள்நாட்டுச் சந்தைக்கு ஒருதரம் என்று கம்பெனிகள் நேரடியாகவே நம்மை ஏளனம் செய்கின்றன. இதில் சில கம்பெனிகள் எக்ஸ்போர்ட் குவாலிட்டி என்று விளம்பரம் செய்து விற்பது கேவலத்தின் உச்ச கட்டம்! எக்ஸ்போர்ட் குவாலிட்டிக்கு இந்தியர்கள் தகுதியில்லை என்று ஒருமனதாக எல்லோரும் முடிவு செய்துவிட்டார்கள். இதில் பெரும்பாலும் அனைத்து இந்தியக் கம்பெனிகளும் அடக்கம் என்பதுதான் நம் தேசப்பற்றின் நிஜமான முகம்!. இங்கே பணம் கிடைக்கிறது என்றால் எதுவுமே தவறில்லை! உணவில் கலப்படம், பாலில் கலப்படம், சிமென்ட்டிலும் கலப்படம், ....எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம்! வாழ்க ஜனநாயகம்! வளர்க பணநாயகம்! ஓங்குக வாரிசுரிமை!


பின்குறிப்பு:
தேனில கலந்திருப்பதாகக் கண்டறியப்பட்ட ஆன்டிபயாடிக்குகள்:

ஆக்ஸி டெட்ராசைக்கிளின், ஆம்ப்பிசிலின், எரித்ரோமைசின், குளோரம்பினிகால், சிப்ரோப்ளாக்சசின், என்ரோப்ளாக்சசின்

பரிசோதனையில் அதிக அளவு ஆன்டிபயாடிக் கலந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ள தேன் கம்பெனிகள்:
டாபர், ஹிமாலயா, பதஞ்சலி ஆயுர்வேதா, பைத்தியநாத், காதி (சமீபத்தில் டாபர் கம்பெனி தரம்குறைந்த தேனை விற்பதாக நேபாளத்தில் பிரச்சனை எழுந்த பொழுது, அது இந்தியக் கம்பெனிகளைக் குறிவைத்துச் செய்யப்படும் அவதூறுப் பிரச்சாரம் என்று டாபர் கம்பெனி சமாளித்தது நினைவில் இருக்கலாம்)

மேற்கொண்டு விபரங்களுக்கு கீழே உள்ள சம்பந்தப்பட்ட வெப்சைட்டிற்குச் சென்று பார்க்கலாம்.
http://www.cseindia.org/content/press-release-cse-busts-myth-about-%E2%80%98natural-and-pure%E2%80%99-honey

67 comments:

மங்குனி அமைசர் said...

மொதோ வெட்டு

மங்குனி அமைசர் said...

நண்பா இரு வர்றேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னிக்கு வட ஸ்டாக் இல்லீங்கோ, தேன் தான் எடுத்து குடிங்க!

பனங்காட்டு நரி said...

என்னது தேனிலவில் பிரச்சினையா ? இரு இரு படிச்சிட்டு வரேன்

Jey said...

5 vathu vettu

அகல்விளக்கு said...

தேனுல கூடவா....

அட ஆண்டவா....

பனங்காட்டு நரி said...

அட தேன்னா ..,நம்ப கண்ணுக்கு எல்லாமே விவகாரமவே தெரியுது பன்னி....,முதல டாக்டரை (நம்ம விஜய் ,ஷங்கர் )யாரானா ஒருத்தர பார்க்கணும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பனங்காட்டு நரி said...
அட தேன்னா ..,நம்ப கண்ணுக்கு எல்லாமே விவகாரமவே தெரியுது பன்னி....,முதல டாக்டரை (நம்ம விஜய் ,ஷங்கர் )யாரானா ஒருத்தர பார்க்கணும்//

அவிங்களப் பாத்ததுனாலதேன் பிரச்சனையே

பனங்காட்டு நரி said...

//// ஆக்ஸி டெட்ராசைக்கிளின், ஆம்ப்பிசிலின், எரித்ரோமைசின், குளோரம்பினிகால், சிப்ரோப்ளாக்சசின், என்ரோப்ளாக்சசின் ////

ஐயோ ஐயோ ...,நாசமா போவானுங்க ...பன்னி என்னக்கு தெரிஞ்சு (கல்லூரியில படிக்கும் போது மெடிக்கல் ஷாப்ல இரண்டு வருஷம் பகுதி நேரமா வேலை பார்த்தேன் ) இதெல்லாம் heavy antibiotic ...,ஓவர் டோஸ் ஆச்சுன உடனே சைடு effect இருக்குமே பன்னி ....,எவ்ளோ கலகுறாங்க நாசமா போன வ@#&^$$&$ பொறந்தவுங்க..எனி details

Jey said...

நம்ம நாட்ல விக்கிர எல்லா உணவுப் பொருள்களும்(packed), இப்படி ஏதாவது வில்லங்கத்தோடதான் பன்னி விக்கிராங்க..., இதுக்கு சரியான சட்டங்கள் போட்டு( அத கண்காணிக்கிற நாதாரிக இதவச்சி பணம் பண்ண ஆரம்பிச்சுவாங்களோ!!!) சரியான படி கட்டுப் படுத்த எந்த அரசியல் கட்சிகளும் ரெடியில்ல...ஏன்னா இந்த கம்பனிககிட்டதான், தேர்தல் நிதி வாங்குரானுக...பன்னாடைக...

பனங்காட்டு நரி said...

யோவ்
போடுங்கையா இந்த பதிவுக்கு வோட்டு ....இல்ல அவ்ளோதான் (எல்லாம் நம்ம நல்லதுக்குதான் )

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

tho varen

Jey said...

//ஆன்டிபயாடிக் //

இந்த ஆண்ட்டி யாருன்னௌ சொல்லவே இல்ல பாத்தியா???. இரு முத்துகிட்ட கம்ப்ளைண்ட் பன்றேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பனங்காட்டு நரி said...
//// ஆக்ஸி டெட்ராசைக்கிளின், ஆம்ப்பிசிலின், எரித்ரோமைசின், குளோரம்பினிகால், சிப்ரோப்ளாக்சசின், என்ரோப்ளாக்சசின் ////

ஐயோ ஐயோ ...,நாசமா போவானுங்க ...பன்னி என்னக்கு தெரிஞ்சு (கல்லூரியில படிக்கும் போது மெடிக்கல் ஷாப்ல இரண்டு வருஷம் பகுதி நேரமா வேலை பார்த்தேன் ) இதெல்லாம் heavy antibiotic ...,ஓவர் டோஸ் ஆச்சுன உடனே சைடு effect இருக்குமே பன்னி ....,எவ்ளோ கலகுறாங்க நாசமா போன வ@#&^$$&$ பொறந்தவுங்க..எனி details///

ஆன்டிபயாடிக் கலந்திருக்கும் அளவுகள் அந்த வெப்சைட்டில் இருக்கு நரி (நீ மருந்துக்கட காரனா? எத்தன பேரலே கொன்னே இதுவரைக்கும்?)

Jey said...

//இப்படி அதிக அளவு ஆன்டிபயாடிக் கலந்த தேனை நாள்பட சாப்பிடுவதால் இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், சிறுநீரகம், ஈரல் பிரச்சனைகளும் ஏற்படலாம்.///

பன்னி இதிலிருந்து நாம தெரிஞ்சிக்க வேண்டியது என்னன்னா..., இங்க வெட்டுர ஆடுக... தேன் சாப்பிட்ட ஆடானு தெரிஞ்சி வெட்டனும், இல்லைனா அதோட ஈரல்,கிட்டி வறுத்து சாப்பிடுர நமக்கு ஏதும் பிரச்சினை ஆயிடக்கூடாது பாரு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மக்கா அப்டின்னா என்னோட தேனிலவை cancel பண்ணிடவா? avvvvvvvvvvvvvvvvv...

பனங்காட்டு நரி said...

ஜனங்களே ,
இந்த மருந்து கம்பெனிகாரங்களும் ,கடை முதலாளிகளும் அடிக்கும் கொள்ளை சொல்லிமாளது ...,என்னக்கு தெரிஞ்சு நான் ஒரு நீண்ட பின்னூட்டம் போடுறேன் ....,கொஞ்ச நாழி வைடிஸ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//Jey said...

//ஆன்டிபயாடிக் //

இந்த ஆண்ட்டி யாருன்னௌ சொல்லவே இல்ல பாத்தியா???. இரு முத்துகிட்ட கம்ப்ளைண்ட் பன்றேன்.///


வயசான காலத்துல இந்த கீரிப்புல்லைக்கு ஆசையைப் பாரு. லொள்ள பாரு. எகத்தாளத்த பாரு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// Jey said...
//இப்படி அதிக அளவு ஆன்டிபயாடிக் கலந்த தேனை நாள்பட சாப்பிடுவதால் இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், சிறுநீரகம், ஈரல் பிரச்சனைகளும் ஏற்படலாம்.///

பன்னி இதிலிருந்து நாம தெரிஞ்சிக்க வேண்டியது என்னன்னா..., இங்க வெட்டுர ஆடுக... தேன் சாப்பிட்ட ஆடானு தெரிஞ்சி வெட்டனும், இல்லைனா அதோட ஈரல்,கிட்டி வறுத்து சாப்பிடுர நமக்கு ஏதும் பிரச்சினை ஆயிடக்கூடாது பாரு...///

யோவ் டய்பாய்டு வந்து ரெண்டுவாரம்கோட முடியல அதுக்குல்ல ஆடு ஈரல்னு கெளம்பிட்டே...பிச்சிபுடுவேன் பிச்சி

Jey said...

//பனங்காட்டு நரி said...
யோவ்
போடுங்கையா இந்த பதிவுக்கு வோட்டு ....இல்ல அவ்ளோதான் (எல்லாம் நம்ம நல்லதுக்குதான் )//

பன்னி நரிக்கு எக்ஸ்போர்ட் குவாலிட்டி தேன் பாட்டில் ஒன்னு ஓசில குடுய்யா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தேன் மாதிரி இனிக்க இனிக்க பேசுராளுகளே அவளுகளை நம்பலாமா தல?

பனங்காட்டு நரி said...

///இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், சிறுநீரகம், ஈரல் பிரச்சனைகளும் ஏற்படலாம்///

முதல் பொலி ஈரல் தாண்டி ...,ரத்தம்,சிறுநீரகம் எல்லாம் பின்னாடி தாம்

Jey said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மக்கா அப்டின்னா என்னோட தேனிலவை cancel பண்ணிடவா? avvvvvvvvvvvvvvvvv...//

அத்தைக்கி முதல்ல மீசை மொளைக்கட்டும்...அப்புறம் செரைக்கலாம்...:)

பனங்காட்டு நரி said...

யோவ் ரமேஷு ,

உன்னை பத்தி நல்லா ஒரு பதிவு போடிருகேன் ..,வந்து படிச்சியா இல்லையா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//Jey said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மக்கா அப்டின்னா என்னோட தேனிலவை cancel பண்ணிடவா? avvvvvvvvvvvvvvvvv...//

அத்தைக்கி முதல்ல மீசை மொளைக்கட்டும்...அப்புறம் செரைக்கலாம்...:)//

அத்தைக்கு என்ன மயிருக்கு மீசை முளைக்குது?

Jey said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
தேன் மாதிரி இனிக்க இனிக்க பேசுராளுகளே அவளுகளை நம்பலாமா தல?//

கேள்வி கேக்கலாமா?.. பின்னாடியே போ மக்கா...செமத்தியா கவனிச்சி அனுப்புவாங்க..., அப்படியே வந்து அத நம்ம பன்னிகிட்ட சேத்துரு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பனங்காட்டு நரி said...

யோவ் ரமேஷு ,

உன்னை பத்தி நல்லா ஒரு பதிவு போடிருகேன் ..,வந்து படிச்சியா இல்லையா//

coming

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பனங்காட்டு நரி said...
ஜனங்களே ,
இந்த மருந்து கம்பெனிகாரங்களும் ,கடை முதலாளிகளும் அடிக்கும் கொள்ளை சொல்லிமாளது ...,என்னக்கு தெரிஞ்சு நான் ஒரு நீண்ட பின்னூட்டம் போடுறேன் ....,கொஞ்ச நாழி வைடிஸ்///

நீயும் ஒரு பங்க வாங்கி ஒரு கம்பேனி ஆரம்பிச்சி இருக்கலாம்ல (ஒருவேள கெடைக்கலியோ!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
தேன் மாதிரி இனிக்க இனிக்க பேசுராளுகளே அவளுகளை நம்பலாமா தல?//

கேள்வி கேக்கலாமா?.. பின்னாடியே போ மக்கா...செமத்தியா கவனிச்சி அனுப்புவாங்க..., அப்படியே வந்து அத நம்ம பன்னிகிட்ட சேத்துரு.//

ஜெய்யி உனக்கு ரொம்ப நல்ல மனசுய்யா, இப்பிடி பிகருங்கள என் பக்கமா அனுப்பச் சொல்லுரியே!

Jey said...

// பனங்காட்டு நரி said...
யோவ் ரமேஷு ,

உன்னை பத்தி நல்லா ஒரு பதிவு போடிருகேன் ..,வந்து படிச்சியா இல்லையா//
நரி இது எப்பய்யா நடந்ததது???. சொல்லவே இல்ல.

Jey said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//Jey said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மக்கா அப்டின்னா என்னோட தேனிலவை cancel பண்ணிடவா? avvvvvvvvvvvvvvvvv...//

அத்தைக்கி முதல்ல மீசை மொளைக்கட்டும்...அப்புறம் செரைக்கலாம்...:)//

அத்தைக்கு என்ன மயிருக்கு மீசை முளைக்குது?//

அப்ப கண்டு பிடிச்சிட்டியா...இப்ப தெளிவா கேட்டுக்கோ மக்கா, எப்படி அத்தைக்கி மீசை முளைக்கதோ, முளைக்காத மீசைய செரைக்க முடியாதோ...அது மாதிரி, ஊர் உலகமே பொண்ணு குடுக்கமாட்டேனு முடிவெடுத்து, கலயாணமே பன்னாம சித்தப்பா ஆன... சிப்பு எதுக்கு தேனிலவு கேன்சல் பண்ணனும்....:).

எப்பூடீ...:)

Jey said...

வறேனு சொல்லிட்டு போன இந்த மங்குப்பயபுள்ளய எங்க காணோம்???.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அப்ப கண்டு பிடிச்சிட்டியா...இப்ப தெளிவா கேட்டுக்கோ மக்கா, எப்படி அத்தைக்கி மீசை முளைக்கதோ, முளைக்காத மீசைய செரைக்க முடியாதோ...அது மாதிரி, ஊர் உலகமே பொண்ணு குடுக்கமாட்டேனு முடிவெடுத்து, கலயாணமே பன்னாம சித்தப்பா ஆன... சிப்பு எதுக்கு தேனிலவு கேன்சல் பண்ணனும்....:).

எப்பூடீ...:)///

என்னோட கல்யாணம் முடிஞ்சதும் உங்களை எல்லாம் கவனிச்சுக்கிறேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said...
வறேனு சொல்லிட்டு போன இந்த மங்குப்பயபுள்ளய எங்க காணோம்???.//

மங்கு, யாரோ சேலம் டாக்குடர்ரு சொன்னாருன்னு மூனு வேளையும் தேனுதான் குடிச்சிக்கிட்டு இருந்தாப்புல, அதான் இந்தப் பதிவப் படிச்சதும் லைட்டா அட்டாக் வந்திருக்கும், இப்ப வந்துடுவாரு!

Jey said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//அப்ப கண்டு பிடிச்சிட்டியா...இப்ப தெளிவா கேட்டுக்கோ மக்கா, எப்படி அத்தைக்கி மீசை முளைக்கதோ, முளைக்காத மீசைய செரைக்க முடியாதோ...அது மாதிரி, ஊர் உலகமே பொண்ணு குடுக்கமாட்டேனு முடிவெடுத்து, கலயாணமே பன்னாம சித்தப்பா ஆன... சிப்பு எதுக்கு தேனிலவு கேன்சல் பண்ணனும்....:).

எப்பூடீ...:)///

என்னோட கல்யாணம் முடிஞ்சதும் உங்களை எல்லாம் கவனிச்சுக்கிறேன்...//

பன்னி,சிப்பு அவன் கல்யானத்துக்கு ஒரு வாரத்துக்கு சரக்குப் பார்ட்டினு சொல்லிட்டான், ரெடியாயிரு மக்கா...கொண்டாடிருவோம். (ம்ஹூம்... அது எப்ப நடந்து, நாம எப்ப சரக்கடிக்க....)

பனங்காட்டு நரி said...

//// நீ மருந்துக்கட காரனா? எத்தன பேரலே கொன்னே இதுவரைக்கும்? ////

அது ஜஸ்ட் மிஸ் தல ,போன புதுசுல ஒரு பொண்ணுகிட்டே மாட்டிகிட்டேன் !! அது போதை கேசு போல !! ஒரு மாத்திரை N !^#%#%#&! பேரு காச குடுத்து இருபது மாத்திரை கேட்டா ஆர்வ கோளறு குடுதிடேன் ..அப்புறம் அது கெஞ்சி கூத்தாடி வாங்கிட்டேன் ...,இல்லேன போய் சேர்ந்திருக்கும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

// பனங்காட்டு நரி said...
//// நீ மருந்துக்கட காரனா? எத்தன பேரலே கொன்னே இதுவரைக்கும்? ////

அது ஜஸ்ட் மிஸ் தல ,போன புதுசுல ஒரு பொண்ணுகிட்டே மாட்டிகிட்டேன் !! அது போதை கேசு போல !! ஒரு மாத்திரை N !^#%#%#&! பேரு காச குடுத்து இருபது மாத்திரை கேட்டா ஆர்வ கோளறு குடுதிடேன் ..அப்புறம் அது கெஞ்சி கூத்தாடி வாங்கிட்டேன் ...,இல்லேன போய் சேர்ந்திருக்கும்//

அப்புறம் அதெ வெச்சே அந்த பொண்ண ப்ளாக்மெய்ல் பண்ணி என்னமோ பண்ணினியாமே அதப்பத்தி தனியா ஒரு பதிவு போட்ரு நரி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Jey said...
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//அப்ப கண்டு பிடிச்சிட்டியா...இப்ப தெளிவா கேட்டுக்கோ மக்கா, எப்படி அத்தைக்கி மீசை முளைக்கதோ, முளைக்காத மீசைய செரைக்க முடியாதோ...அது மாதிரி, ஊர் உலகமே பொண்ணு குடுக்கமாட்டேனு முடிவெடுத்து, கலயாணமே பன்னாம சித்தப்பா ஆன... சிப்பு எதுக்கு தேனிலவு கேன்சல் பண்ணனும்....:).

எப்பூடீ...:)///

என்னோட கல்யாணம் முடிஞ்சதும் உங்களை எல்லாம் கவனிச்சுக்கிறேன்...//

பன்னி,சிப்பு அவன் கல்யானத்துக்கு ஒரு வாரத்துக்கு சரக்குப் பார்ட்டினு சொல்லிட்டான், ரெடியாயிரு மக்கா...கொண்டாடிருவோம். (ம்ஹூம்... அது எப்ப நடந்து, நாம எப்ப சரக்கடிக்க....)////
என்னது ஒரு வாரமா? ஆஹா...ஒலகத்துல எந்த மூலைல இருந்தாலும் ஓடி வந்துரமாட்டேன்?

சி.பி.செந்தில்குமார் said...

ANNAE FROM TODAY U WILL CALLED A DR RAMASAMY

Jayadeva said...

சாப்பிடுற அரிசி, காய்கறிகள் எல்லாத்துக்கும் ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகளால் விஷமாகின்றன. பழங்கள் உண்பது உடலுக்கு மிகவும் நல்லது, ஆனால் மா, வாழை, பப்பாளி, சப்போட்டா என பழங்கள் எல்லாம் கார்பைடு கற்களால் பழுக்க வைக்கப் படுகின்றன. இது கொடியது. மாட்டுக்கு ஊசி போட்டு பால் கரப்பதால் அந்தப் பாலைக் குடிப்பவர்களுக்கு கேன்சர் வருமாம். அதே போல ரிபைன்ட் எண்ணெய்களில் உபயோகிக்கப் படும் ரசாயனகளும் கொடியவை. இந்தியாவில் கிடைக்கும் நிலத்தடி நீரில் 70 % குடிப்பதற்கு உகந்ததல்ல, கிட்னியில் கற்கள் ஏற்படுத்தக் கூடியவையாம். வெறும் காற்றை மட்டுமே சுவாசிச்சிட்டு உயிர் வாழ்ந்திடலாமா? அதிலும் வாகனங்களில் இருந்தும் தொழிற்சாலைகளில் இருந்தும் வெளிவிடப் படும் நச்சு வாயுக்கள். எங்கே ஓடி ஒளிவது? ஆசை படலாம், அது பெராசையாகும் போதுதான் இத்தனை பிரச்சினைகளும். இயைர்க்கை முறை விப்வசாயத்திர்க்குத் திரும்புவோம், வாழ்வோம், வாழ விடுவோம் என்று எல்லோரும் முடிவெடுத்தால் நாம் காப்பாற்றப் படுவோம்.
Otherwise one shot all go to sudukadu.

சேட்டைக்காரன் said...

சரிதான், அதுலேயும் வில்லங்கமா? :-(

என்னது நானு யாரா? said...

@@Jayadeva said.:

//இயற்கை முறை விவசாயத்திற்குத் திரும்புவோம், வாழ்வோம், வாழ விடுவோம் என்று எல்லோரும் முடிவெடுத்தால் நாம் காப்பாற்றப் படுவோம்.
Otherwise one shot all go to sudukadu.//

அவர் கருத்து தான் என்னுடையதும். இயற்கை விவசாய பொருட்களை நாம் வாங்கி ஆதரிப்போமென்றால் தான் நோய் இல்லாமல் வாழ முடியும்.

நல்ல ஒரு சமூக சிந்தனை கருத்தை சொல்லி இருக்கீங்க பன்னிகுட்டி சாரே!

மங்குனி அமைசர் said...

அப்படின்னா டைரக்க்டா தேனில் பூச்சி மருந்து கலப்பதில்லை , தேனிக்களுக்கு கொடுக்கப்படும் அண்டிபயாடிக் மருந்தோட எபெக்டு தான் தேன் வருதா? நான் கூட தென்லையே கலக்குரானுகலோன்னுநினைச்சேன்

Anonymous said...

அது நல்ல ஒரு மருந்துனு நம்ம்ம்பி வாங்கினேனே..

இப்ப தேன சாப்டலாமா வேணாமா???

பட்டாபட்டி.. said...

இந்திரா said... 44

அது நல்ல ஒரு மருந்துனு நம்ம்ம்பி வாங்கினேனே..

இப்ப தேன சாப்டலாமா வேணாமா???
//

நல்ல கேள்வி..

சாப்பிடலாம்.. ஆனா.. பன்னி சாருக்கு கொஞ்சம் கொடுத்து... டெஸ்ட் பண்ணிக்கச்சொல்லி... மங்குனி சொல்லியிருக்காரு..

( ஒரு கல்..மூணு மாங்கா...)

ப.செல்வக்குமார் said...

//இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், சிறுநீரகம், ஈரல் பிரச்சனைகளும் ஏற்படலாம். மேலும், நம் உடம்பிலேயே அந்த ஆன்ட்டிபயாடிக்குகள் இருந்து கொண்டிருப்பதால், தேவையான சமயத்தில் கொடுக்கபடும் போது அவை செயற்படாது போகலாம். (சூப்பர் பக் கிருமிகள் இந்தியாவில் அதிக அளவில் காணப்படுவதற்கு இதுபோன்ற காரணங்கள் இருக்கக்கூடும்).//

அட கொடுமையே ..?! தேன் நல்லது அப்படின்னு வாங்கி சாப்பிட்டா இப்படி எல்லாமா நடக்குது ..?!?

பார்வையாளன் said...

தேன் மேட்டர் , தேள் கொட்டுவது போல் உள்ளது

DrPKandaswamyPhD said...

ஆஜர் சார்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//சி.பி.செந்தில்குமார் said...
ANNAE FROM TODAY U WILL CALLED A DR RAMASAMY//

வாங்க செந்தில், அப்பிடியே நைசா என்னை உங்க டாக்குடர்ரு விஜயோட கோர்த்து விடுறீங்களே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நன்றி ஜெயதேவா, பின்னூட்டத்துல பின்னிட்டீங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//சேட்டைக்காரன் said...
சரிதான், அதுலேயும் வில்லங்கமா? :-(//

ஆமா சேட்டை, இனிமே பேக்கிங்ல வர்ர எதையுமே யூஸ் பண்ண முன்னாடி நாலுதடவ யோசிக்கனும்போல!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//என்னது நானு யாரா? said...
@@Jayadeva said.:

//இயற்கை முறை விவசாயத்திற்குத் திரும்புவோம், வாழ்வோம், வாழ விடுவோம் என்று எல்லோரும் முடிவெடுத்தால் நாம் காப்பாற்றப் படுவோம்.
Otherwise one shot all go to sudukadu.//

அவர் கருத்து தான் என்னுடையதும். இயற்கை விவசாய பொருட்களை நாம் வாங்கி ஆதரிப்போமென்றால் தான் நோய் இல்லாமல் வாழ முடியும்.

நல்ல ஒரு சமூக சிந்தனை கருத்தை சொல்லி இருக்கீங்க பன்னிகுட்டி சாரே!//

நன்றி! நன்றி! நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//இந்திரா said...
அது நல்ல ஒரு மருந்துனு நம்ம்ம்பி வாங்கினேனே..

இப்ப தேன சாப்டலாமா வேணாமா???//

இயற்கையா எடுத்த தேனா இருந்தா தைரியமா சாப்புடுங்க, கம்பெனித் தேனா இருந்தா எதுக்கும் ஒரு தடவ யோசிச்சுக்குங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மங்குனி அமைசர் said...
அப்படின்னா டைரக்க்டா தேனில் பூச்சி மருந்து கலப்பதில்லை , தேனிக்களுக்கு கொடுக்கப்படும் அண்டிபயாடிக் மருந்தோட எபெக்டு தான் தேன் வருதா? நான் கூட தென்லையே கலக்குரானுகலோன்னுநினைச்சேன்//

அமைச்சரே தேனுல அவங்க நேரடியா கலக்குறதில்ல ஆனா, கலந்திருக்குன்னு தெரிஞ்சே விக்கிரானுங்க (எக்ஸ்போர்ட் செய்யப்படும் தேன் ஆன்டிபயாடிக் கலந்திருக்கான்னு பரிசோதனை செய்யப்பட்ட பின்பே அனுப்ப்படுகிறது, ஆனால் உள்ளூருக்கு அனுப்பப்படும் தேனுக்கு?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

// பட்டாபட்டி.. said...
இந்திரா said... 44

அது நல்ல ஒரு மருந்துனு நம்ம்ம்பி வாங்கினேனே..

இப்ப தேன சாப்டலாமா வேணாமா???
//

நல்ல கேள்வி..

சாப்பிடலாம்.. ஆனா.. பன்னி சாருக்கு கொஞ்சம் கொடுத்து... டெஸ்ட் பண்ணிக்கச்சொல்லி... மங்குனி சொல்லியிருக்காரு..

( ஒரு கல்..மூணு மாங்கா...)//

மூனா நாலா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ப.செல்வக்குமார் said...
//இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், சிறுநீரகம், ஈரல் பிரச்சனைகளும் ஏற்படலாம். மேலும், நம் உடம்பிலேயே அந்த ஆன்ட்டிபயாடிக்குகள் இருந்து கொண்டிருப்பதால், தேவையான சமயத்தில் கொடுக்கபடும் போது அவை செயற்படாது போகலாம். (சூப்பர் பக் கிருமிகள் இந்தியாவில் அதிக அளவில் காணப்படுவதற்கு இதுபோன்ற காரணங்கள் இருக்கக்கூடும்).//

அட கொடுமையே ..?! தேன் நல்லது அப்படின்னு வாங்கி சாப்பிட்டா இப்படி எல்லாமா நடக்குது ..?!?//

வாங்க செல்வக்குமார், இதெல்லாம் வணிகமயமாக்கலின் விளைவு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பார்வையாளன் said...
தேன் மேட்டர் , தேள் கொட்டுவது போல் உள்ளது//

உண்மைதான் பார்வையாளன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//DrPKandaswamyPhD said...
ஆஜர் சார்.//

யாரங்கே....! தலைவருக்கு ஒரு கோப்பை தேனை எடுத்துப் புகட்டுங்கள்!

ganesh said...

கொஞ்சம் எச்சரிக்கையாகத்தான் இருக்கனும் போல )))))))

Chitra said...

தேனில் கூட விஷம் இருக்கும் போல. :-(

Chitra said...

100 + followers!!! Congratulations!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ganesh said...
கொஞ்சம் எச்சரிக்கையாகத்தான் இருக்கனும் போல )))))))//

ஆமா கனேஷ், கொஞ்சம் இல்ல ரொம்பவே எச்சரிக்கையா இருக்கனும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Chitra said...
தேனில் கூட விஷம் இருக்கும் போல. :-(//

ஆமா, அதையும் தெரிஞ்சேதான் விக்கிரானுங்க படுபாவிங்க! நன்றி!

Anonymous said...

//எக்ஸ்போர்ட் குவாலிட்டிக்கு இந்தியர்கள் தகுதியில்லை என்று ஒருமனதாக எல்லோரும் முடிவு செய்துவிட்டார்கள்//

நிதர்ஸனம்!!

தகவலுக்கு நன்றி.. :(

அப்பாவி தங்கமணி said...

adapaavame... honeyla koodaavaa money kollai

எஸ்.கே said...

சுத்தமான தேன் எதுன்னு கண்டுபிடிச்சு வாங்கறதே கஷ்டமா இருக்கு. ஒரு தடவை தேன் பாட்டி ஒன்ணு வாங்கிட்டு வந்து வீட்டில் சாப்பிட்டு பாத்தா சக்கரை பாகு! என்ன பண்ணுறது?

Madhavan said...

oh ! my GOD..