Saturday, September 18, 2010

எந்திரன் போஸ்டர் வெளியீட்டு விழா!

எந்திரன் படத்தோட ஆடியோ வெளியீடு மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாக்கள் எல்லாரையும் ஒரு மிரட்டு மிரட்டி கதிகலக்கிடுச்சி. இதுவே இப்பிடின்னா படம் எப்படியிருக்குமோன்னு ஊரே காத்துக்கெடக்கு! எந்திரன் டீமோ இப்பவே இப்படி பண்ணியாச்சே இனி அடுத்தடுத்து இதைவிட பிரமாண்டமா எப்படி விழா நடத்துறதுன்னு திகைச்சுப் போயி நிக்கிது! தமிழனுக்கு ஒலகம் பூரா பெருமைதேடித்தரப்போற படத்துக்கு நாமலும் ஏதாவது செஞ்சு சரித்துரல நம்ம பேர பச்சக்னு பதிய வெச்சுடனும்னு இப்பிடி எந்திரன் போஸ்டர் வெளியீட்டு விழாவ நடத்தியிருக்கோம். எல்லாரும் வந்து கலந்துக்குங்க!

வழக்கம்போல விவேக்குதான் மைக்கப் புடிச்சி எல்லாத்தையும் டேமேஜ் பண்ணுறாரு... சே.. மேனேஜ் பண்ணுறாரு...!

எந்திரன் படம் ஒரு மொக்கைன்னு நான் சொல்லமாட்டேன், ஏன்னா அந்த உரிமை உங்களுக்குத்தான் இருக்கு. நீங்க மொக்கைன்னு சொன்னா நான் ஒத்துக்க மாட்டேன், ஏன்னா கலாநிதி மாறன் சாருக்கு அது பிடிக்காது. மொத்தத்துல இந்திரன்...இது.... எந்திரன்.... ஒரு தலைசிறந்த உலகப்படமா அமையும்னு சொல்லி, வைரமுத்து சார மேடைக்கு அழைக்கிறேன்.

தமிழனுக்கோர் பெருமை என்றால் அது இந்தியாவுக்கே பெருமை, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கோரு பெருமை என்றால் அது தமிழனுக்கே பெருமை, டைரக்டர் ஷங்கருக்குப் பெருமை என்றால் எங்கள் சினிமாக் குடும்பத்திற்கே பெருமை, ஆனால் கலாநிதி மாறனுக்குப் பெருமை என்றால் அது அகில உலகத்திற்கே பெருமை....! (ஸ்பீக்கரில் ரிக்கார்ட் செய்யப்பட்ட கைதட்டல் ஒலிக்கிறது, அதைக்கேட்டு ஆடியன்சும் கைத்தட்டுகிறார்கள்)

கண்ணுக்கு மையழகு, கவிதைக்குப் பொய்யழகு, ரஜினிக்கு நடையழகு, எங்கள் சினிமாவிற்குக் கலாநிதி அழகு (மறுபடியும் கைதட்டல்), நன்றி!

நன்றி வைரமுத்து சார், நம்ம சினிமாவிற்கு எது அழகுன்னு விளக்கமா சொல்லிட்டீங்க. அழகு அழகுங்கும் போதுதான் எனக்கு ஒரு கதை ஞாபகம் வருது. ஒரு ஊர்ல ஒரு பாட்டி ஜீன்ஸ் பேன்ட் போட்டுக்கிட்டு வடை சுட்டுக்கிட்டு இருந்துச்சாம். மொத்தம் 5000 வடை. எல்லாத்தையும் ஒரே நேரத்துல ஒரு பெரிய சட்டில போட்டு சுட்டுக்கிட்டு இருந்துச்சி. அவ்வளவு வடையவும் சட்டில இருந்து ஒண்ணா ஒரு பெரிய முள்ளுக்கரண்டிய கிரேன்ல மாட்டி வெளிய எடுத்து வெச்சா அப்போ பாத்து ஆயிரம் காக்கா வரிசையா பறந்து வந்து ஆளுக்கொரு வடைய எடுத்துக்கிட்டு போயிடிச்சி. எல்லா காக்காயும் ஒரு போயி பெரிய மரத்துல உக்காந்துச்சி. மரத்துக்கு 2000 கிளைகள். பாட்டி வடையத் தேடி மரத்துக்கு வந்திடிச்சி. அவ்வளவு பெரிய மரத்தப் பாத்தும் பயப்படாம ஒரு பெரிய கல்ல எடுத்து மேலே வீசிச்சி. கல்லப் பாத்ததும் எல்லாக் காக்காயும் பயந்து போயி வடையக் கீழே போட்டு பறந்து போயிடிச்சி. இதுல வர்ர பாட்டியோட துணிச்சல்தான் எனக்கு அழகு....!..... கைதட்டுங்க எல்லாரும்...ம்ம்ம்..(*&^%$*&@#$...)

ரஜினி, ஷங்கர், கலாநிதி மாறன் எல்லாரும் தலையில் கைவைத்து உக்கார்ந்திருக்கின்றனர்.

ஓக்கே..ஓக்கே.. இப்பிடி எந்திரன் படத்தோட வெற்றிக்கு(!) முழுமுதல் காரணமாக இருக்கும் கலாநிதி மாறன் சாருக்கு எங்கள் சல்யூட்! (மற்படியும் கைதட்டல்!)

அடுத்ததாக டைரக்டர் ஷங்கர் அவர்களை மேடைக்கு அழக்கிறேன்!

எல்லோருக்கும் வணக்கம். போஸ்டர் வெளியீட்டு விழா நடத்தனும்னு முடிவு பண்ண உடனே நாங்க செஞ்ச முதல் காரியம் விவேக்கக் கூப்பிட்டதுதான் (!). போஸ்டர் டிசைன் பண்றதுக்காக ஜப்பானுக்கு அருகிலுள்ள கும்மாங்கோன்னு ஒரு தீவுக்குப் போயிருந்தோம். அங்கே தண்ணிக்கடியில சுமார் 6000 அடி ஆழத்துல இருந்துக்கிட்டே விடிய விடிய போஸ்டர் டிசைன் பண்ணோம். அப்புறம் அதை பிரிண்ட் பண்றதுக்காக உருகுவே நாட்டுக்குப் போனோம். அங்க உள்ள ஒரு எரிமலை உச்சியில் இருக்கும் ஒரு டிஜிட்டல் அச்சகத்துல கிட்டத்தட்ட ரெண்டு மாசம் தங்கியிருந்து போஸ்டர் பிரிண்ட் பண்ணோம். அங்கே வந்து ஒத்துழைப்புக் கொடுத்த அனைவரும் எனது நன்றிய தெரிவிச்சுக்கிறேன். அடுத்ததா ஒரு முக்கியமான விஷயம். போஸ்டர் ஒட்டுரதுக்காக மொராக்கோவுல இருந்து ஒரு மெசின வரவழைச்சிருக்கோம். அத வெச்சு முதல் போஸ்டர் ஒட்டும் விழா அடுத்து பனாமா நாட்டில் நடைபெறும். இந்த சந்தர்ப்பத்த பயன்படுத்தி உங்க எல்லாரையும் அதற்கு அழைக்கிறேன். இதேற்கெல்லாம் தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் கலாநிதி மாறன் சாருக்கு நன்றி!

நன்றி ஷங்கர் சார். உங்க முதல் போஸ்டர் ஒட்டும் விழாவுக்கு என்னையும் அழைச்சிருக்கீங்க. அதையும் ஒரு வெற்றி விழாவா ஆக்குவது என் கடமை. உங்க பிரம்மாண்டதிற்கு நான் அடிமை. கலாநிதி மாறன் சாருக்கு அது என்றும் பெருமை! அடுத்ததா நாம் எல்லோரும் ஆவலுடம் எதிர்பார்க்கும் சூப்பர் ஸ்டார் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன் (கைதட்டல்...விசில்!)

எல்லாருக்கும் வணக்கம்...(கைதட்டல்..!)..நான் எப்பவும் எதை செஞ்சாலும்...எந்தப் படம் பண்ணாலும் அது தமிழனுக்கு பெருமை தருவதாகத்தான் இருக்கும் (கைதட்டல்...!) இப்படி ஒரு வாய்ப்புக்கொடுத்த கலாநிதி மாறன் அவர்களுக்கு நான் என்றென்றும் கடன் பட்டிருக்கிறேன். நன்றி!தமிழனின் பெருமை!

92 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vanthutten. vadai please

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வடைய புடிங்க, சுடச் சுட, பாத்து சுட்டுடப் போகுது!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இப்பவே கண்ணை கட்டுதே. அடுத்து எந்திரன் பட திரையரங்கு சைக்கிள் டோகேன் வெளியீட்டு விழா வேற இருக்குதே...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நம்ம ஏரியா க்கு வாங்க பாஸ்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எந்திரன் படம் ரிலீஸ் அன்னிக்கு அரசினர் விடுமுறையாமே? அப்படியா பன்னி சார்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நம்ம ஏரியா க்கு வாங்க பாஸ்..//

வந்துட்டேன், வந்துட்டேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எந்திரன் படம் ரிலீஸ் அன்னிக்கு அரசினர் விடுமுறையாமே? அப்படியா பன்னி சார்?//

லீவு மட்டுமில்ல, அன்னிக்கு பவர் கட் ஆகாதாம்,

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//லீவு மட்டுமில்ல, அன்னிக்கு பவர் கட் ஆகாதாம்,//

அரசினர் விடுமுறைன்னா ஆற்காடு வீரசாமிக்கும் லீவ்தான பாஸ்..

கே.ஆர்.பி.செந்தில் said...

தல அடுத்ததா படம் வெளியானதும் தியேட்டரில் ரஜினிய விட்டு பாப்கார்ன் விக்க சொன்னாலும் சொல்வாங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
தல அடுத்ததா படம் வெளியானதும் தியேட்டரில் ரஜினிய விட்டு பாப்கார்ன் விக்க சொன்னாலும் சொல்வாங்க...//

உண்மையிலேயே நடந்துடப் போகுது பாஸ்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//கே.ஆர்.பி.செந்தில் said... 9 தல அடுத்ததா படம் வெளியானதும் தியேட்டரில் ரஜினிய விட்டு பாப்கார்ன் விக்க சொன்னாலும் சொல்வாங்க...//

இது சூப்பர் ஐடியா..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் போலீசு, என்னய்யா உன் ப்ளாக் சைடு வாங்கின மாதிரி தெரியுது? நேத்து நைட்டுல இருந்து அப்பிடித்தான் தெரியுது, என்னத்தையா நோண்டி வெச்சே?

பட்டாபட்டி.. said...

படம் ரிலீஸ் அன்று.. பாத்ரூம்ல எண்ணெய் தேய்த்து விடுவார்காளா?...

யாராவது பதில் சொல்லுங்கப்பா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பட்டாபட்டி.. said...
படம் ரிலீஸ் அன்று.. பாத்ரூம்ல எண்ணெய் தேய்த்து விடுவார்காளா?...//

யாராவது பதில் சொல்லுங்கப்பா...
பாத்ரூம்ல மட்டும் இல்ல, தியேட்டர்லேயே தேச்சி விடுவாங்ய..!

பட்டாபட்டி.. said...

பாத்ரூம்ல மட்டும் இல்ல, தியேட்டர்லேயே தேச்சி விடுவாங்ய..!
//

BAD பாய்ஸ்..
இரு.. இரு.. எங்க தாத்தாகிட்ட சொல்றேன்

கானா பிரபா said...

அவ்வ் வட போச்சே அப்படின்னு காக்கா சொல்லிச்சாம் ;)

பன்னிக்குட்டி ராம்சாமி பின்றேள் ;))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பட்டாபட்டி.. said...
பாத்ரூம்ல மட்டும் இல்ல, தியேட்டர்லேயே தேச்சி விடுவாங்ய..!
//

BAD பாய்ஸ்..
இரு.. இரு.. எங்க தாத்தாகிட்ட சொல்றேன்//


என்னது தாத்தா கிட்ட சொல்லப் போறீயா? எண்ணை தேச்சிவிடுறத துவக்கி வெக்கப் போறதே அவருதான்!

Suresh S said...

சூப்பர் ஆபிசர். இந்த போஸ்டர் வெளியீட்டு விழாலத்தான் ஒரு கசமுசா ஆயி ஒரு டர்னிங் பாயிண்டே வரபோருது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கானா பிரபா said...
அவ்வ் வட போச்சே அப்படின்னு காக்கா சொல்லிச்சாம் ;)

பன்னிக்குட்டி ராம்சாமி பின்றேள் ;))//

வாங்க பாஸ்... நன்றி!

ப.செல்வக்குமார் said...

//(ஸ்பீக்கரில் ரிக்கார்ட் செய்யப்பட்ட கைதட்டல் ஒலிக்கிறது, அ//
எல்லாமே பிளானிங் தானா ..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Suresh S said...
சூப்பர் ஆபிசர். இந்த போஸ்டர் வெளியீட்டு விழாலத்தான் ஒரு கசமுசா ஆயி ஒரு டர்னிங் பாயிண்டே வரபோருது.//

ஏதோ ரகசிய திட்டம் எதுவும் வெச்சிருக்கீங்களா?

ப.செல்வக்குமார் said...

//அங்கே தண்ணிக்கடியில சுமார் 6000 அடி ஆழத்துல இருந்துக்கிட்டே விடிய விடிய போஸ்டர் டிசைன் பண்ணோம்.//

ஏன் தண்ணிக்கு மேல இருந்து டிசைன் பண்ணினா காக்க தூக்கிட்டுப் போய்டுமா ..?

ப.செல்வக்குமார் said...

//எல்லாருக்கும் வணக்கம்...(கைதட்டல்..!)..நான் எப்பவும் எதை செஞ்சாலும்...எந்தப் படம் பண்ணாலும் அது தமிழனுக்கு பெருமை தருவதாகத்தான் இருக்கும் (கைதட்டல்...!) இப்படி ஒரு வாய்ப்புக்கொடுத்த கலாநிதி மாறன் அவர்களுக்கு நான் என்றென்றும் கடன் பட்டிருக்கிறேன். நன்றி!///

இவ்ளோ கம்மியாவா பேசினாரு ..?!?

TERROR-PANDIYAN(VAS) said...

பன்னிகுட்டி ராம்சாமி ஒழிக!!! உன் பேச்சி கா... நீ என் தலைவரை நக்கல், நாக்கல், நாநாக்கல் எல்லம் பண்ணிட்ட....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ப.செல்வக்குமார் said...
//(ஸ்பீக்கரில் ரிக்கார்ட் செய்யப்பட்ட கைதட்டல் ஒலிக்கிறது, அ//
எல்லாமே பிளானிங் தானா ..?//

பின்னே...அங்க உக்கார்ந்திருக்க ஆடியன்சே நம்ம வெக்கிர ஆளுகதானே (இவிங்களுக்கு அஞ்சு, பத்துன்னு டிக்கட் குடுத்து எப்போ காசு பாக்குறது? இப்பல்லாம் டீவி ரைட்ஸ்ல தான் வருமானமே கொட்டுது!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ப.செல்வக்குமார் said...
//அங்கே தண்ணிக்கடியில சுமார் 6000 அடி ஆழத்துல இருந்துக்கிட்டே விடிய விடிய போஸ்டர் டிசைன் பண்ணோம்.//

ஏன் தண்ணிக்கு மேல இருந்து டிசைன் பண்ணினா காக்க தூக்கிட்டுப் போய்டுமா ..?//

யோவ் 200 கோடிக்குக் கம்மியா செலவு பண்ணக்கூடாதுன்னு கலாநிதியண்ணே சொல்லியிருக்காரு, படத்துக்கு இதுவரைக்கும் 195 கோடிதான் ஆயிருக்கு,மீதிய எப்பிடி செலவு பண்றது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ப.செல்வக்குமார் said...
//எல்லாருக்கும் வணக்கம்...(கைதட்டல்..!)..நான் எப்பவும் எதை செஞ்சாலும்...எந்தப் படம் பண்ணாலும் அது தமிழனுக்கு பெருமை தருவதாகத்தான் இருக்கும் (கைதட்டல்...!) இப்படி ஒரு வாய்ப்புக்கொடுத்த கலாநிதி மாறன் அவர்களுக்கு நான் என்றென்றும் கடன் பட்டிருக்கிறேன். நன்றி!///

இவ்ளோ கம்மியாவா பேசினாரு ..?!?//

இன்னும் நெறைய பேசினாரு, நம்ம ப்ளாக்கூக்கு வர்ரவங்களுக்கு எதுவும் விபரீதமா ஆயிடக்கூடதுன்னு பாதுகாப்புக் கருதி சென்சார் பண்ணிட்டேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//TERROR-PANDIYAN(VAS) said...
பன்னிகுட்டி ராம்சாமி ஒழிக!!! உன் பேச்சி கா... நீ என் தலைவரை நக்கல், நாக்கல், நாநாக்கல் எல்லம் பண்ணிட்ட....//

என்ன பாண்டி இப்பிடி அபான்டமா பழி சுமத்துறே? உங்க தலைவர நான் எங்கய்யா கிண்டல் பண்ணியிருக்கேன்?

அருண் பிரசாத் said...

தலைவரை தப்பா பேசிய பன்ணிக்குட்டி சாரை கண்டித்து அவருக்கு வேட்டைக்காரன் டிவிடி பார்சல்

பனங்காட்டு நரி said...

ஆஹா ! ஆரம்பிடாணுவ ....,

பனங்காட்டு நரி said...

//// பாட்டி வடையத் தேடி மரத்துக்கு வந்திடிச்சி. அவ்வளவு பெரிய மரத்தப் பாத்தும் பயப்படாம ஒரு பெரிய கல்ல எடுத்து மேலே வீசிச்சி. கல்லப் பாத்ததும் எல்லாக் காக்காயும் பயந்து போயி வடையக் கீழே போட்டு பறந்து போயிடிச்சி. இதுல வர்ர பாட்டியோட துணிச்சல்தான் எனக்கு அழகு....!..... ////

ஜீன்ஸ் போட்ட நரி வடையத் தேடி மரத்துக்கு வந்திடிச்சி. அவ்வளவு பெரிய மரத்தப் பாத்தும் பயப்படாம ஒரு பெரிய கல்ல எடுத்து மேலே வீசிச்சி. கல்லப் பாத்ததும் எல்லாக் காக்காயும் பயந்து போயி வடையக் கீழே போட்டு பறந்து போயிடிச்சி. இதுல வர்ர நரியோட துணிச்சல்தான் எனக்கு அழகு....!.....

இப்படி இருக்கனும் ..என்னவோ போ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பனங்காட்டு நரி said...
//// பாட்டி வடையத் தேடி மரத்துக்கு வந்திடிச்சி. அவ்வளவு பெரிய மரத்தப் பாத்தும் பயப்படாம ஒரு பெரிய கல்ல எடுத்து மேலே வீசிச்சி. கல்லப் பாத்ததும் எல்லாக் காக்காயும் பயந்து போயி வடையக் கீழே போட்டு பறந்து போயிடிச்சி. இதுல வர்ர பாட்டியோட துணிச்சல்தான் எனக்கு அழகு....!..... ////

ஜீன்ஸ் போட்ட நரி வடையத் தேடி மரத்துக்கு வந்திடிச்சி. அவ்வளவு பெரிய மரத்தப் பாத்தும் பயப்படாம ஒரு பெரிய கல்ல எடுத்து மேலே வீசிச்சி. கல்லப் பாத்ததும் எல்லாக் காக்காயும் பயந்து போயி வடையக் கீழே போட்டு பறந்து போயிடிச்சி. இதுல வர்ர நரியோட துணிச்சல்தான் எனக்கு அழகு....!.....

இப்படி இருக்கனும் ..என்னவோ போ///


நீ இப்பிடி சலம்புவேன்னுதாம்ல அந்தக்கதையில இருந்து நரியக் கட் பண்ணியிருக்கேன்!

பனங்காட்டு நரி said...

அடுத்தாக நூறு followers தொட்ட நம்ம பன்னிகுட்டி ராமசாமிக்கு பதிவுலகம் சார்பில் ,மங்குனி அமைச்சர் தலைமையில் ,மிக பெரிய பாராட்டு விழா சென்னை தீவு திடலில் நடைபெறும் என்று கட்சியின் தலைமை செயற்குழு முடிவு செய்துள்ளது .நிகழ்ச்சிநிரல் ...,

தலைமை : மங்குனி அமைச்சர் ( முதல்வர் )
முன்னுரை : டெர்ரர் பாண்டி ( கொ.பா .செ )
பொருளுரை : ஜெய் ( விலங்கு வாழ் துறை அமைச்சர் )
முடிவுரை : பட்டபட்டி ( உள் துறை அமைச்சர் )

மேலும் விழாவில் சிறப்பு பட்டி மன்றம் நடைபெறும் ...,
தலைப்பு ...,இந்த வெற்றிக்கு காரணம் பன்னிகுட்டி ராமசாமி என்ற பெயரா அல்லது ஷில்பா குமார் என்ற பெயரா ?

அனைவரும் வாங்கிவிட்டீர்களா !! ச்சே.., ச்சே...அனைவரும் அலைகடலென வாருங்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் நரி, பாராட்டு விழாவுலாம் இருக்கட்டும் என்ன கொடுப்பீங்கன்னு கேட்டுச் சொல்லுய்யா!

பனங்காட்டு நரி said...

ரெண்டு பெக் MANSION HOUSE அப்புறம் மானடா மயிலாட முழு தொகுப்பு DVD ஒன்னு ,chemistry புக் ஒன்னு ,உள்துறை அமைச்சர் பட்டாபட்டி திருகரங்களால் வழங்கப்படும்

பனங்காட்டு நரி said...

நேத்து நைட் ஒரு மெயில் அனுபிச்சேன் படிச்சியா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பனங்காட்டு நரி said...
நேத்து நைட் ஒரு மெயில் அனுபிச்சேன் படிச்சியா ?//

பீரு.... தக்காளி பீரு அடிக்கிறதுக்காக என்னென்ன வியாக்கியானம் சொல்லுது? படுவா இவனுங்கள எல்லாம் இன்னும் விட்டு வெச்சிக்கிட்டு இருக்கானுகளே? இன்னுமாடா பணம் அனுப்புறாய்ங்க?

பனங்காட்டு நரி said...

அநேகமா ஒரு சில பதிவர்கள் காசுவார்கள் நினைகிறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பனங்காட்டு நரி said...
அநேகமா ஒரு சில பதிவர்கள் காசுவார்கள் நினைகிறேன்//

ஆமா இதப் போயி காய்ச்சி என்ன சாராயமா எடுக்கப் போறாய்ங்க? இது பூட்ட கேசுமா!

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பனங்காட்டு நரி said...
ரெண்டு பெக் MANSION HOUSE அப்புறம் மானடா மயிலாட முழு தொகுப்பு DVD ஒன்னு ,chemistry புக் ஒன்னு ,உள்துறை அமைச்சர் பட்டாபட்டி திருகரங்களால் வழங்கப்படும்///

யோவ் என்னய்யா சின்னப்புள்ளத்தனமா இன்னும் கெமிஸ்ட்ரி புக்கு, DVDன்னுக்கிட்டு! ஏதாவது 'பெருசா' குடுப்பீங்கன்னு பாத்தா....!

நாஞ்சில் பிரதாப் said...

hahaha டோட்டல் டேமேஜ்... :))

பனங்காட்டு நரி said...

//// யோவ் என்னய்யா சின்னப்புள்ளத்தனமா இன்னும் கெமிஸ்ட்ரி புக்கு ////

யோவ் என்னய்யா சின்னப்புள்ளத்தனமா இது ...,கெமிஸ்ட்ரியா ,கெமிஸ்ட்ரி !!!! இந்த கெமிஸ்ட்ரில தான் பாதி பேரு உழுந்துட்டாங்க ...,நீ இன்னும் வெவரம் தெரியாம இருக்கே !!!!! என்னவோ போ

என்னது நானு யாரா? said...

பன்னிக்குட்டி சாரே! அந்த டீம், நீங்க எழுதினதை படிச்சா பன்னிக்குட்டி வேற, ராமசாவி வேறன்னு பிரிச்சி மேஞ்சிடுவாங்க! ஜாக்கிரதையா இருந்துக்கோங்கோ!

எப்படி எல்லாம் நடக்குதுப்பா...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

பதிவோட உங்க பக்கத்துல இருக்கற பல மேட்டர்ங்க செம சிரிப்புங்க.:))

கலக்கல்!

சி.பி.செந்தில்குமார் said...

MR RAMASAMY,WONDERFULL HUMOUR U HAVE

ப்ரியமுடன் வசந்த் said...

யோவ் மாமா இப்பிடி சிரிக்க வைக்கறதை மொத்தமா குத்தகைக்கு எடுத்துருக்க போல..

இன்னும்
டிக்கட் ரிலீஸ்
படப்பொட்டி ரிலீஸ்
முதல் ரீல் ரிலீஸ்

நிறைய இருக்கும் போல!

velji said...

செம கலக்கல்!

suresh said...

enntha pall abishegam rommba over rasigargale....

அலைகள் பாலா said...

அடுத்த விழா எந்திரன் போஸ்டர் வெளியீட்டு விழா உருவான விதம், மூணு மணி நேரம் பரிமே ஸ்லாட் ல புரோகிராம் ரெடி. முதல் போஸ்டர எச்ச துப்பி ஒட்டி வைக்க யாரையாவது கூப்டுங்க ப.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//எல்லோருக்கும் வணக்கம். போஸ்டர் வெளியீட்டு விழா நடத்தனும்னு முடிவு பண்ண உடனே நாங்க செஞ்ச முதல் காரியம் விவேக்கக் கூப்பிட்டதுதான் (!). போஸ்டர் டிசைன் பண்றதுக்காக ஜப்பானுக்கு அருகிலுள்ள கும்மாங்கோன்னு ஒரு தீவுக்குப் போயிருந்தோம். அங்கே தண்ணிக்கடியில சுமார் 6000 அடி ஆழத்துல இருந்துக்கிட்டே விடிய விடிய போஸ்டர் டிசைன் பண்ணோம். அப்புறம் அதை பிரிண்ட் பண்றதுக்காக உருகுவே நாட்டுக்குப் போனோம். அங்க உள்ள ஒரு எரிமலை உச்சியில் இருக்கும் ஒரு டிஜிட்டல் அச்சகத்துல கிட்டத்தட்ட ரெண்டு மாசம் தங்கியிருந்து போஸ்டர் பிரிண்ட் பண்ணோம். அங்கே வந்து ஒத்துழைப்புக் கொடுத்த அனைவரும் எனது நன்றிய தெரிவிச்சுக்கிறேன். அடுத்ததா ஒரு முக்கியமான விஷயம். போஸ்டர் ஒட்டுரதுக்காக மொராக்கோவுல இருந்து ஒரு மெசின வரவழைச்சிருக்கோம். அத வெச்சு முதல் போஸ்டர் ஒட்டும் விழா அடுத்து பனாமா நாட்டில் நடைபெறும். இந்த சந்தர்ப்பத்த பயன்படுத்தி உங்க எல்லாரையும் அதற்கு அழைக்கிறேன். இதேற்கெல்லாம் தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் கலாநிதி மாறன் சாருக்கு நன்றி!//

கலக்கல் தல... பின்றீங்க போங்க.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//T.V.ராதாகிருஷ்ணன் said...
:)))//

நன்றி சார்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//நாஞ்சில் பிரதாப் said...
hahaha டோட்டல் டேமேஜ்... :))//

நன்றி சார்! படம் வந்து நம்மள டேமேஜ் பண்ணாம இருந்தா சரி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பனங்காட்டு நரி said...
//// யோவ் என்னய்யா சின்னப்புள்ளத்தனமா இன்னும் கெமிஸ்ட்ரி புக்கு ////

யோவ் என்னய்யா சின்னப்புள்ளத்தனமா இது ...,கெமிஸ்ட்ரியா ,கெமிஸ்ட்ரி !!!! இந்த கெமிஸ்ட்ரில தான் பாதி பேரு உழுந்துட்டாங்க ...,நீ இன்னும் வெவரம் தெரியாம இருக்கே !!!!! என்னவோ போ//

யோவ் நரி, வெறும் புக்குக்கே வுழுந்துட்டாங்களா? ம்ம்ஹூம்...சம்திங் ராங்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//என்னது நானு யாரா? said...
பன்னிக்குட்டி சாரே! அந்த டீம், நீங்க எழுதினதை படிச்சா பன்னிக்குட்டி வேற, ராமசாவி வேறன்னு பிரிச்சி மேஞ்சிடுவாங்க! ஜாக்கிரதையா இருந்துக்கோங்கோ!

எப்படி எல்லாம் நடக்குதுப்பா...//


அவனுங்க அடுத்து என்ன விழா, எங்கே நடத்தனும்னு பிசியா இருப்பானுங்க பாஸ்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
பதிவோட உங்க பக்கத்துல இருக்கற பல மேட்டர்ங்க செம சிரிப்புங்க.:))

கலக்கல்!//

வாங்க ஷங்கர், நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//சி.பி.செந்தில்குமார் said...
MR RAMASAMY,WONDERFULL HUMOUR U HAVE//

நன்றி செந்தில்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ப்ரியமுடன் வசந்த் said...
யோவ் மாமா இப்பிடி சிரிக்க வைக்கறதை மொத்தமா குத்தகைக்கு எடுத்துருக்க போல..

இன்னும்
டிக்கட் ரிலீஸ்
படப்பொட்டி ரிலீஸ்
முதல் ரீல் ரிலீஸ்

நிறைய இருக்கும் போல!//

வாங்க மாப்புள, அவிங்களுக்கு இப்பிடி ஐடியா கொடுக்குறது நீங்கதானா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//velji said...
செம கலக்கல்!//

நன்றி சார்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//suresh said...
enntha pall abishegam rommba over rasigargale....//

ஆமா சார், இவ்வளவு நாளும் பால் ஊத்துனானுங்க, இப்போ எந்திரனுக்கு ஸ்பெசலா எஞ்சின் ஆயில் ஊத்துவானுங்கன்னு நெனைக்கிறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//அலைகள் பாலா said...
அடுத்த விழா எந்திரன் போஸ்டர் வெளியீட்டு விழா உருவான விதம், மூணு மணி நேரம் பரிமே ஸ்லாட் ல புரோகிராம் ரெடி. முதல் போஸ்டர எச்ச துப்பி ஒட்டி வைக்க யாரையாவது கூப்டுங்க ப.//

என்னது எந்திரன் படத்துக்கு எச்ச துப்பி போஸ்டர் ஒட்டுரதா? பட்ஜெட்டுல இன்னும் 4 கோடி மிச்சம் இருக்குள்ள, அது எதுக்கு? ஏற்கனவே மெக்சிகோவுல இருந்து டிஜிட்டல் பிசின் வாங்கியாச்சு, அடுத்த விழாவுல ஒட்ட தொடங்கிட வேண்டியதுதான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
கலக்கல் தல... பின்றீங்க போங்க..... //

வாங்க பாஸ், ரொம்ப நன்றி!

அலைகள் பாலா said...

எந்திரன் போஸ்டர் வெளியீட்டு விழா உருவான விதம் எனும் புரோகிராம் உருவான விதம் நெக்ஸ்ட் சண்டே.

ஸ்ஸ்ஸ்ஸ் அப்பப்பா முடியல

முத்து said...

என்ன பா.ரா. புல் பார்மில் இருக்குற போலிருக்கு

முத்து said...

நீ தலைவரையே கலாய்கிரியா,இரு உன்னை குஷ் அக்கா கிட்ட சொல்லி பொம்பளை கேசில் உள்ள போட சொல்லுறேன்

கலக்கல் கலந்தசாமி said...

எப்படி இப்படிலாம் தோணுது ஆறுமை போங்க

கலக்கல் கலந்தசாமி said...

ஹஹாஹா நல்ல கற்பனை..சூப்பர்

Jayadeva said...

பாட்டி வடை சுட்ட கதை படிச்சதும் ஒரு ஷங்கர் படத்த பாத்த திருப்தி[!]. தண்ணிக்கடியில சுமார் 6000 அடி ஆழத்துல இருந்துக்கிட்டே விடிய விடிய போஸ்டர் டிசைன் செய்த கதையும் அற்புதம்.

R.Gopi said...

யப்பா....

தல

இது ஒனக்கே நியாயமா.... நம்ம தலைவர போட்டு கலாய்ச்சிட்டியேபா...

பிரியமுடன் பிரபு said...

கலக்கல்!

பிரியமுடன் பிரபு said...

கலக்கல்!

Anonymous said...

கலாய்க்கிறதுல பன்னிக்கு நிகர் பன்னி தான்..

தலைவரோட ரசிகர்கள் உங்க விலாசம் விசாரிச்சுகிட்டு இருக்காங்களாமே.. உண்மையா??

மங்குனி அமைசர் said...

எலேய் பன்னி பதிவு போட்டா இன்மேல் ஒரு மெயில் அனுப்பு

புலிகுட்டி said...

அண்ணே,எனக்கு ஒரு சந்தேகம்.இப்பிடி எல்லாத்துக்கும் விழா எடுத்தா சன் டிவியில் “உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக எந்திரன்”போட லேட் ஆகாதா?.சொல்லுங்க அண்ணே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//அலைகள் பாலா said...
எந்திரன் போஸ்டர் வெளியீட்டு விழா உருவான விதம் எனும் புரோகிராம் உருவான விதம் நெக்ஸ்ட் சண்டே.

ஸ்ஸ்ஸ்ஸ் அப்பப்பா முடியல//

இதுக்கே இப்பிடின்னா இனி படம் ரிலீசு இருக்கு, பர்ஸ்ட்டு ஷோ இருக்கு, பர்ஸ்ட்டு டே, பர்ஸ்ட்டு வீக்கு, பர்ஸ்ட்டு மந்த்து, பத்து நாளு, இருவது நாளு, ......அம்பது நாளு, நூறு நாளு.........?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//முத்து said...
நீ தலைவரையே கலாய்கிரியா,இரு உன்னை குஷ் அக்கா கிட்ட சொல்லி பொம்பளை கேசில் உள்ள போட சொல்லுறேன்//

இரு இரு, கலாக்கா கிட்ட சொல்லி உன் ட்ரெய்னிங்க கேன்சல் பண்ணச் சொல்றேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கலக்கல் கலந்தசாமி said...
எப்படி இப்படிலாம் தோணுது ஆறுமை போங்க

September 19, 2010 8:02 AM


கலக்கல் கலந்தசாமி said...
ஹஹாஹா நல்ல கற்பனை..சூப்பர்//

அப்பிடிப்போடு அருவாள, தேங்சுங்கோவ்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jayadeva said...
பாட்டி வடை சுட்ட கதை படிச்சதும் ஒரு ஷங்கர் படத்த பாத்த திருப்தி[!]. தண்ணிக்கடியில சுமார் 6000 அடி ஆழத்துல இருந்துக்கிட்டே விடிய விடிய போஸ்டர் டிசைன் செய்த கதையும் அற்புதம்.//

தேங்க்ஸ் பாஸ்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//R.Gopi said...
யப்பா....

தல

இது ஒனக்கே நியாயமா.... நம்ம தலைவர போட்டு கலாய்ச்சிட்டியேபா...//

பொறியில சிக்கிட்டா அப்புறம் தலையாவது வாலாவது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

// பிரியமுடன் பிரபு said...
கலக்கல்!//

நன்றி சார்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//இந்திரா said...
கலாய்க்கிறதுல பன்னிக்கு நிகர் பன்னி தான்..

தலைவரோட ரசிகர்கள் உங்க விலாசம் விசாரிச்சுகிட்டு இருக்காங்களாமே.. உண்மையா??//

நான் தான் கன்னத்துல ஒன்னுக்கு ரெண்டா ரெண்டு மரு ஒட்டி வெச்சிருக்கேனே, எப்பிடி கண்டுபிடிப்பாங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மங்குனி அமைசர் said...
எலேய் பன்னி பதிவு போட்டா இன்மேல் ஒரு மெயில் அனுப்பு//

யோவ் மெயில் செக் பண்ணத் தெரிலேன்னா சொல்ல வேண்டியதுதானே, ஆளுகள வெச்சி ட்ரெய்னிங் கொடுப்போம்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//புலிகுட்டி said...
அண்ணே,எனக்கு ஒரு சந்தேகம்.இப்பிடி எல்லாத்துக்கும் விழா எடுத்தா சன் டிவியில் “உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக எந்திரன்”போட லேட் ஆகாதா?.சொல்லுங்க அண்ணே!//

என்னண்ணே இது நம்ம சன்டிவி கான்செப்ட்டையே டுமீல் ஆக்கீட்டீங்க?

siva said...

hekey,heykey ethelama pannikutti blogla sagjammappa..

anna romba supera erukkuna..

appdiey gaunder pesrapiley erukkuna..

valga tamilnadu gavandar raisgarmandra thalaivar.p.ramasami..

siva said...

நான் தான் கன்னத்துல ஒன்னுக்கு ரெண்டா ரெண்டு மரு ஒட்டி வெச்சிருக்கேனே, எப்பிடி கண்டுபிடிப்பாங்க? ---MOSA PIDIKIRA ......MONCHA PATHA THERIATHTU?????SORRYINGA OOFICER UNGALA CHOLLA.

தியாவின் பேனா said...

அடப்பாவமே....

காலம்!!!???

ஜெய்லானி said...

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_25.html

PANDAARA VAAYAN said...

kokka makka....enna koduma sir ethu..padam varuvatharku munnadiyea evvalavu vilambaram. padam vealiya vanthuchu'na yevvalavu vilambaram varum.. thaanga mudiyala sami.. by PANDAARA VAAYAN.

cheena (சீனா) said...

ம்ம்ம்ம்ம்ம் கை வசம் தொழில் இருக்கு - நகைச்சுவையின் உசம் - இவ்விடுகை - பலே பலே ப.ரா - நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

மறுமொழி 100க்கு கீழே இருந்தா அவமானம் - யூ டோண்ட் ஹாவ் கண்ட்ரோல் ஓவர் யுவர் மெம்பர்ஸ்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////cheena (சீனா) said...
ம்ம்ம்ம்ம்ம் கை வசம் தொழில் இருக்கு - நகைச்சுவையின் உசம் - இவ்விடுகை - பலே பலே ப.ரா - நல்வாழ்த்துகள்////

நன்றி சார்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////cheena (சீனா) said...
மறுமொழி 100க்கு கீழே இருந்தா அவமானம் - யூ டோண்ட் ஹாவ் கண்ட்ரோல் ஓவர் யுவர் மெம்பர்ஸ்////

அப்பிடிப் போடுங்க, இனி நடக்கப் போறதப் பாருங்க..!