தமிழ்ப் பதிவுலகில் முதல் முறையாக ஒரு ஆன்லைன் புதிர்போட்டி நடத்த இருக்கிறோம். இது டெரர் கும்மி என்ற எங்கள் நண்பர்கள் குழுவினால் நடத்தபடுகிறது. தெரியாதவர்களுக்காகவும், புதியவர்களுக்காகவும் எங்கள் நண்பர்கள் குழு பத்தி கொஞ்சம் சொல்லிக் கொள்கிறேன். கிட்டத்தட்ட 2010-ன் மத்திய பகுதியில் பட்டாபட்டி, வெளியூர்காரன், மங்குனி அமைச்சர், சிரிப்பு போலீஸ் இவர்கள் பதிவுகளில் கமெண்ட்டுகளில் மட்டும் நட்பு பாராட்டி கும்மியடித்துக் கொண்டிருந்த எங்களை டெரர் பாண்டியன் ஒரு கூகிள் போரம் மூலமாக ஒன்றிணைத்தார். அந்த போரத்திற்கு டெரர் கும்மி என்று பெயர் வைக்கப்பட்டு பின்னர் மேலும் சில நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு வளர்ர்சியடைந்தது. பின்னர் அதற்கென்று ஒரு தனி ப்ளாக்கும் தொடங்கப்பட்டது. ப்ளாக்கிற்குச் சென்றால் எங்கள் குழுவில் இருக்கும் நண்பர்கள் அனைவரையும் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
இப்படி போய்க் கொண்டிருக்கும் போது ஒருநாள் IIM, Indore நடத்திய க்ளூலெஸ் (KLUELESS) என்னும் புதிர்போட்டி பற்றிய ஒரு விவாதத்தின் போது அது போல ஒரு போட்டியை நாமும் நடத்தினால் என்ன என்று எண்ணம் வந்தது. உடனடியாக அதற்கு அனைத்து நண்பர்களின் ஏகோபித்த ஆதரவும் கிடைக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு இப்போது உங்கள் முன் ஹண்ட் ஃபாட் ஹிண்ட் (Hunt for Hint) என்ற புதிர் போட்டியாக பிரம்மாண்டமாக நிற்கிறது. இந்தக் கனவை நனவாக்க ராப்பகலாய் கோடிங் எழுதிய நண்பர்களின் கடின உழைப்பினை என்ன சொல்லி பாராட்டினாலும் தகும். இந்தப்போட்டியில் விளையாடும் போது நீங்களும் அதை புரிந்து கொள்வீர்கள்.
இந்த புதிர் போட்டியைப் பத்தி பலர் ஏற்கனவே எங்கள் நண்பர்கள் பதிவுகள்/பஸ்கள் மூலமா கேள்விப்பட்டிருப்பீங்க. ஒரு வெப் பக்கத்துல இருந்து அதில் இருக்கும் க்ளூவைக் கண்டு பிடித்து அடுத்த பக்கத்திற்கு போகனும். இந்த க்ளூக்கள் எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம், ஒரு படத்திற்குள்ளே ஒளித்து வைக்கப்பட்டிருக்கலாம். அல்லது பேஜ் சோர்ஸ், பேஜ் டைடில், URL நேம், இமேஜ் நேம் இப்படி எதிலாவது அந்தக் க்ளூ இருக்கும். அதைக் கண்டுபிடித்து கிளிக் செய்யவோ, அல்லது அதற்கான பாக்சிலோ அல்லது URL நேமை மாற்றவோ செய்தால் அது அடுத்த பக்கத்திற்குச் செல்லும், இப்படியே 25 லெவல்கள் வரை கொடுத்திருக்கிறோம்.
25-வது லெவலை அடையும் முதல் 5 நபர்களுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன.
இன்னிக்கு இந்த போட்டி ஆரம்பிச்சாச்சு. உடனே போய் உங்க பேரை பதிவு பண்ணி போட்டியில் கலந்துக்குங்க, கமான்.... சீக்கிரம்.... முதலில் போட்டியை முடிப்பவர்களுக்கே பரிசுகள்...! போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு இங்கே பாருங்க. போட்டியில் கலந்து கொள்ள இங்க போங்க.
ரெடி.. ஸ்டார்ட்...... கோ...................
All the Best from Terror Kummi Friends to All Participants....!
!

