Showing posts with label புதிர்கள். Show all posts
Showing posts with label புதிர்கள். Show all posts

Monday, October 24, 2011

சைடுவாங்கிய சிந்தனை உண்டா உங்களிடம்...?


  
  பெரும்பாலான புதிர்கேள்விகள் நேரடியாக அல்லது மறைமுகமாக விடைகளைக் கொண்டிருக்கும். ஆனால் சிலவகையான புதிர்களுக்கு லேட்டரல் திங்கிங் எனப்படும் சைடுவாங்கிய சிந்தனை தேவைப்படுகிறது. இத்தகைய புதிர்களுக்கு இதுதான் விடை என்று கிடையாது. சரியாக எது பொருந்தினாலும் அது விடையே. எனக்கு மெயிலில் வந்த அதுபோன்ற சில புதிர்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். அவரவருக்குத் தோன்றும் விடைகளை முயற்சி செய்யலாம். 



  1. ஒருவர் உயரமான கட்டிடம் ஒன்றில் வசிக்கிறார். தினமும் லிஃப்டில் கீழே சென்று வேலைக்கு செல்வார். திரும்ப வரும் போது பாதி வரை லிஃப்டில் வந்து பின்னர் படியேறிச் செல்வார். ஆனால் மழைக்காலங்களில் மட்டும் லிஃப்டிலேயே மேலே செல்வார். ஏன்


2. தந்தையும் மகனும் வண்டியில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு விடுகிறது. இருவரையும் ஆம்புலன்சில் எடுத்துச் சென்று மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அப்போது மகனுக்கு ஆப்பரேசன் செய்ய வந்த டாக்டர் பார்த்துவிட்டு அய்யோ இது என் மகன் என்னால் ஆப்பரேசன் செய்யமுடியாது என்கிறார், இது எப்படி சாத்தியம்


 3. சாலைகளில் இருக்கும் பாதாளச் சாக்கடைகளுக்கான மூடிகள் (manholes) வட்டமாகவே வைக்கப்படுகின்றன. ஏன்


4. ஒரு விருந்தில் கலந்து கொண்டவர் சீக்கிரம் திரும்ப வேண்டும் என்று உடனேயே விருந்தும் மதுவும் அருந்திவிட்டு சென்றுவிடுகிறார். மற்றவர்கள் விருந்துண்ட பின்னர் தாமதமாக மது அருந்துகிறார்கள், ஆனால் தாமதமாக மது அருந்தியவர்கள் அனைவரும் கடுமையான விஷம் ஏறி உடல்நிலை பாதிக்கப்படுகிறார்கள். அனைவரும் அதே உணவு/மது அருந்தியும் முதலில் குடித்துவிட்டுச் சென்றவனுக்கு மட்டும் எந்த பாதிப்புமில்லை, ஏன்


5. ஒரு பெண்ணின் இருமகன்கள்  ஒரே நாளில், அதே மாதம், அதே வருடம் பிறந்தவர்கள் ஆனால் அவர்கள் இரட்டையர்கள் இல்லை, எப்படி?  


6. ஒருவர் ஹோட்டலுக்குள் சென்று தண்ணீர் கேட்கிறார். அங்கே சர்வர் கத்தியைக் காட்டி மிரட்டுகிறார். அதைப்பார்த்த அவர் திகைத்துவிட்டு பின்னர் நன்றி சொல்லிவிட்டுச் செல்கிறார். இது எப்படி நடக்க முடியும்?




விடைகள் பின்னர் இதே பதிவில் பப்ளிஷ் செய்யப்படும். (ஒருவேளை எல்லாக் கேள்விகளுக்கும் சரியாக சொல்லிவிட்டால் கமெண்ட்டில் சரி என்று சொல்லப்படும்)


ஜஸ்ட் ரிலாக்ஸ்:
புதிர்களை எல்லாம் அப்புறம் உக்காந்து யோசிக்கலாம், மொதல்ல கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிக்குங்க...... ஹி...ஹி....


இன்னொரு ரீமிக்ஸ்





இவரப் போயி நோகடிக்கிறீங்களே அதுவும் கரண்ட்டு பற்றாக்குறை இருக்கும் போது, இது நியாயமா?





இன்னும் கொஞ்சம் பவர்ஃபுல் சீனு.... (இது ஏற்கனவே போட்டதுதான்)








ன்றி: யுடியூப் மற்றும் வீடியோ ரீமிக்ஸ் அண்ட் அப்லோட் செய்த நண்பர்கள், 365greetings.com


!