Friday, July 4, 2014

பத்து கேள்விகளும், பத்து பதில்களும்.....!

என்னமோ தொடர்பதிவாம்.... பத்து கேள்வி கேப்பாங்களாம் பதில் சொல்லனுமாம்..... என்னடா இது பதிவர்களுக்கு வந்த சோதனை.... சரி நம்ம வேலைய காட்டிட வேண்டியதுதான்னு நானும் களத்துல குதிச்சிட்டேன்...




1. உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக்
    கொண்டாட விரும்புகிறீர்கள்?
   

99-வது பிறந்த நாள எப்படி கொண்டாடுவேனோ அப்படித்தான்..... ங்கொய்யால கேள்விய பாரு, அந்த வயசுல நீங்க நினைக்கிறத எல்லாம் பண்ற மாதிரியா இருக்கும்......?


2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

தெரியாததை..... பின்ன தெரிஞ்சதையா கத்துக்க முடியும்........?


3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?


சிப்பு வந்த சிரிச்சிட வேண்டியதுதானே, எப்போ எதுக்குன்னு டைரில எழுதி வெச்சிட்டுதான் சிரிப்பாங்களாக்கும்........ போங்கய்யா.....

4.  24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன? 

25-வது மணி நேரத்துக்கு வெயிட் பண்ண வேண்டியதுதான்........  வேற என்ன செய்றது, கரண்ட்டு இல்லேன்றதுக்காக கரண்ட்டு கம்பத்துலயா போய் தொங்க முடியும்?

5.  உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன? 

எல்லாத்தையும் அதுக்கு முன்னாடியே சொல்லி முடிச்சிடுவேனுங்க, அன்னிக்கு இதுக்கெல்லாம் எங்க டைம் இருக்க போவுது........?


6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும்
என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

பிரச்சனையத்தான்...... பிரச்சனைன்னு வந்துட்டாலே பிரச்சனைதானுங்களே.... அப்புறம் அதைத்தானே தீர்க்கனும்.....?

7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

எல்லார்கிடேயும் தான்..... பின்ன என்னங்க, எவனை பாத்தாலும் வாய தொறந்தாலே அட்வைஸ்தான் பண்றானுங்க... அதுக்காக காதை பொத்திக்கிட்டா பேச முடியும்..... சொல்ற வரைக்கும் சொல்லுங்கடான்னு சைலண்ட்டா கேட்டுக்க வேண்டியதுதான்....


8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால்என்ன செய்வீர்கள்?

அதெல்லாம் கரெக்டுதாங்கன்னு சொல்லிட்டு கம்முன்னு இருந்துட வேண்டியதுதான்..... இப்ப என்ன இவனுங்க கிட்ட நல்ல பேரு வாங்கி ஐநா சபை லீடராக போறோமா.... போய் அடுத்த வேலைய பாருங்கய்யா.......


9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

உங்க மனைவி இறந்துட்டாங்கன்னு சொல்ல வேண்டியதுதான்..... வேற வழி..? சொல்லித்தானே ஆகனும்....?


10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

கக்கூஸ் கழுவுவேன்........ ங்கொய்யால வீட்டுல சும்மா உக்காந்துக்கிட்டு அப்புறம் கப்பல் யாவாரமா செய்ய முடியும்?


இதுக்கு மேலயும் யாராவது இத தொடர்வீங்க...........?




நன்றி: கூகிள் இமேஜஸ்.....!

33 comments:

ஒன்னும் தெரியாதவன் said...

யாரு யாருயா அது இந்தாள சொறிஞ்சி விட்டது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நானேதான் சொறிஞ்சிக்கிட்டேன்.... நாங்கள்லாம் யாரு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////FOOD NELLAI said...
முற்றுப்புள்ளி வச்சிட்டீங்க. ஹா ஹா/////

பின்ன அது நம்ம கடமையில்லையா....?

நாய் நக்ஸ் said...

கக்கூஸ் கழுவுவேன்........ ங்கொய்யால வீட்டுல சும்மா உக்காந்துக்கிட்டு அப்புறம் கப்பல் யாவாரமா செய்ய முடியும்?//////////////


எங்கடா காணோமே வழக்கமான உங்களுக்கு பிடிச்ச வரத்தைன்னு பதறிக்கிட்டே படிச்சேன்,,,,கடைசில பால வார்த்துட்டீங்க.....!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// நாய் நக்ஸ் said...
கக்கூஸ் கழுவுவேன்........ ங்கொய்யால வீட்டுல சும்மா உக்காந்துக்கிட்டு அப்புறம் கப்பல் யாவாரமா செய்ய முடியும்?//////////////


எங்கடா காணோமே வழக்கமான உங்களுக்கு பிடிச்ச வரத்தைன்னு பதறிக்கிட்டே படிச்சேன்,,,,கடைசில பால வார்த்துட்டீங்க.....!!!/////

பதிவுன்னு எழுத உக்காந்தாவே அதுதான் வருது..... அப்புறம் எப்படி மிஸ்ஸாகும்.......?

நாய் நக்ஸ் said...

அந்த வயசுல நீங்க நினைக்கிறத எல்லாம் பண்ற மாதிரியா இருக்கும்......?//////////

சாரு புக் படிச்சா கூடவா ...???

நாய் நக்ஸ் said...

பதிவுன்னு எழுத உக்காந்தாவே அதுதான் வருது..... அப்புறம் எப்படி மிஸ்ஸாகும்.......?//////////


அங்கன உக்காந்துதான் எழுதறதா????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாய் நக்ஸ் said...
அந்த வயசுல நீங்க நினைக்கிறத எல்லாம் பண்ற மாதிரியா இருக்கும்......?//////////

சாரு புக் படிச்சா கூடவா ...???////

அப்போ அத படிக்கிறதுக்கே தள்ளாட வேண்டி இருக்கும்.... அதுக்கப்புறம் என்னத்த பண்றது....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாய் நக்ஸ் said...
பதிவுன்னு எழுத உக்காந்தாவே அதுதான் வருது..... அப்புறம் எப்படி மிஸ்ஸாகும்.......?//////////


அங்கன உக்காந்துதான் எழுதறதா????/////

அங்கன உக்காந்தாதான் எழுத முடியும்........

திண்டுக்கல் தனபாலன் said...

மதுரை பதிவர் திருவிழாவிற்கு வாங்க...

அங்கேயே பேசி தீர்த்துக்குவோம்....! ஹிஹி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////திண்டுக்கல் தனபாலன் said...
மதுரை பதிவர் திருவிழாவிற்கு வாங்க...

அங்கேயே பேசி தீர்த்துக்குவோம்....! ஹிஹி...////

வருவோம் வருவோம்.... ஆனா யாருன்னு கண்டுபுடிக்க முடியாத மாதிரி வருவேனே..... அப்புறம் எப்படி.....?

செங்கோவி said...

ஒரு மொக்கை தொடர்பதிவைக்கூட கலக்கலா ஆக்கிட்டீரே..பிரமாதம்.

Manimaran said...

அது என்ன பத்து கேள்வி... பதினொன்னாவது கேள்வி கேட்டா பதில் சொல்ல மாட்டோமா... இப்படி ஏதாவது சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன்.. :-)

Manimaran said...

இனி தொடர் பதிவை போட்டுவிட்டு எப்படி முடிக்கிறதுனு தெரியாம முழிக்கிரவங்க கடைசியா அண்ணன்கிட்ட கோத்துவிட்டா போதும்...அடுத்து ஒருத்தரும் தொடரமாட்டாங்க .

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

goodness hahahaha

aavee said...

ஹஹஹா.. செம்ம..

aavee said...

ஹஹஹா.. செம்ம..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// செங்கோவி said...
ஒரு மொக்கை தொடர்பதிவைக்கூட கலக்கலா ஆக்கிட்டீரே..பிரமாதம்.////

ஹி...ஹி... தொடர்பதிவுன்னு வந்தாலே டென்சனாகிடுறேன்... அதான் அப்படி....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Manimaran said...
அது என்ன பத்து கேள்வி... பதினொன்னாவது கேள்வி கேட்டா பதில் சொல்ல மாட்டோமா... இப்படி ஏதாவது சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன்.. :-)//////

இந்த டெக்னிக்க ஏற்கனவே பண்ணிடோம்ல.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Manimaran said...
இனி தொடர் பதிவை போட்டுவிட்டு எப்படி முடிக்கிறதுனு தெரியாம முழிக்கிரவங்க கடைசியா அண்ணன்கிட்ட கோத்துவிட்டா போதும்...அடுத்து ஒருத்தரும் தொடரமாட்டாங்க /////


ஆமா இந்த மாதிரி வைரசையெல்லாம் கண்ட்ரோல் பண்ணிடனும்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...
goodness hahahaha////

மேடம் இங்கிலீஷ்ல சிரிச்சிருக்காங்கோ......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கோவை ஆவி said...
ஹஹஹா.. செம்ம../////

வாருமய்யா......

ஜெயந்த் கிருஷ்ணா said...

maams asusual kalakkal

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஜெயந்த் கிருஷ்ணா said...
maams asusual kalakkal////

அப்படிங்கிறே.....

”தளிர் சுரேஷ்” said...

இனிமே யாராவது உங்கள் கிட்ட கேள்வி கேட்பாங்க? கக்கூஸ் கழுவுவேன்! நல்ல காமெடியான பதில்!

ஜோதிஜி said...

அப்போ அத படிக்கிறதுக்கே தள்ளாட வேண்டி இருக்கும்.... அதுக்கப்புறம் என்னத்த பண்றது....?


பப்ளிக்....பப்ளிக்

MANO நாஞ்சில் மனோ said...

கக்கூஸ் கழுவுவேன்.......//

யோவ் இது நல்ல ரோசனையா இருக்கேய்யா அவ்வ்வ்வ்...

எருமை said...

நீரும் தொடர் பதிவ தொடர்ந்திட்டீரே இதல யாரு யாருக்கு ஆப்பு வச்சாங்கன்னு எனக்கு தெரிஞ்சாகனும்டு

செல்வா said...

தங்களைப் போன்ற இலக்கிய ஆளுமைகளும் சாதாரணப் பதிவர்கள் போல ரயில் விளையாட்டுக்களில் ஈடுபடுவதைக் காணும் போது தாங்கள் வர்க்க பேதங்களுக்கு அப்பாற்பட்டவராகக் கருதிக்கொள்ள ஏதுவாகிறது. நன்றி.

Madhavan Srinivasagopalan said...

// வீட்டுல சும்மா உக்காந்துக்கிட்டு அப்புறம் கப்பல் யாவாரமா செய்ய முடியும்? //

பிளிப்கார்டு, அமேசான் இதுபோல ஆன் லயனல பொருள் வாங்கலாமே..! குவிக்கர்.காம்ல விக்கலாமே..

Ramesh said...

ஹ ஹ்ஹா ... செம நக்கல்...

Unknown said...

யோவ் யார்யஆ நீ

நாய் நக்ஸ் said...

Guna Sekaran said...
யோவ் யார்யஆ நீ////////////////////////



அண்ணே & அண்ணி----- வயசுக்கு வந்துட்டாங்களாம்(2பாலர்)???????????????