Saturday, October 29, 2011

உளவுத்துறை... (சவால் சிறுகதை-2011)


சவால் சிறுகதைப் போட்டி 2011-க்கான சிறுகதை இது, எனவே கவனமாக படிக்கவும். 

போலீஸ் இன்ஃபார்மர் விஷ்ணு எஸ்.பி. கோகுலுக்கு அனுப்பிய மெசேஜும், இன்னொருவருக்கு அனுப்பிய மெசேஜும் டேபிளில் இருந்தது. ஐஜி ரத்னவேல் இரண்டு தகவல்களையும் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது செல்லில் விஷ்ணுவிடம் இருந்து அழைப்பு வந்தது, யோசித்துவிட்டு அழைப்பை நிராகரித்தார். சிறிது காலமாகவே விஷ்ணுவின் நடவடிக்கைகள் மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டு வந்தது. அவனுடைய செல்பேசியை ட்ராக் செய்ய ஏற்பாடு செய்திருந்தார். அதில் இருந்து கிடைத்தவைதான் இந்தத் தகவல்கள். எஸ்பி கோகுலும் விஷ்ணுவும் தூரத்து சொந்தம். அதன் அடிப்படையிலேயே விஷ்ணுவை போலீஸ் இன்ஃபார்மராக வைத்திருந்தார்கள். கோகுலிடம் தவறான குறியீட்டை கொடுத்திருக்கிறேன் என்று விஷ்ணு கூறிய ஆள் யார் என்றுதான் தெரியவில்லை. அந்த செல் நம்பர் தவறான அட்ரஸ் கொடுத்து வாங்கப்பட்டிருந்தது.

இப்போது அந்த செல் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக வேறு கூறி இருக்கிறார்கள். எனவே ஏதோ தவறு நடந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்தது. இனி வேறு வழியில்லை. விஷ்ணுவைத்தான் விசாரிக்க வேண்டும். அந்த நினைப்பே ரத்னவேலுவிற்கு மிகுந்த பதட்டமாக இருந்தது. ஏனென்றால் விஷ்ணுவை வைத்து ஏராளமான ரகசியத் திட்டங்கள் நடத்தி இருந்தார்கள், மேலும் ஒரு முக்கியமான மேலிடத்தின் நேரடி ஆணையில் வந்த ஒரு உளவு வேலையையும் விஷ்ணுதான் செய்துகொண்டிருந்தான். இப்படி ஒரு சூழ்நிலையில் விஷ்ணுவிடம் ஏதோ தவறு இருப்பதாக தோன்றியது அவருக்கு கவலை அளிப்பதாக இருந்து. சாமர்த்தியமாக கையாண்டு பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

சிபிசிஐடியில் எஸ்பியாக இருக்கும் கனகராஜ் ரத்னவேலுவிற்கு மிக நெருக்கமானவர். அவரை அழைத்து முழுவிபரத்தையும் சொல்லி ரகசியமாக விசாரிக்கச் சொன்னார். முக்கியமாக இது எஸ்.பி. கோகுலுக்கு தெரியக் கூடாது என்றும் சொல்லிவிட்டார். பின்னர் அதற்கடுத்த வாரம் விஷ்ணுவை அவர் வழக்கமாகச் சந்திக்கும் சவேரா ஹோட்டலின் தனி அறைக்கு வரச் சொல்லி சந்தித்துப் பேச முடிவு செய்தார். அங்குதான் அவர்கள் மிக முக்கியமான சந்திப்புகளுக்குச் செல்வார்கள். ஐஜி மறக்காமல் தன்  பிஸ்டலை எடுத்து வைத்துக் கொண்டார். 

தனக்கு மிகவும் நம்பகமான சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்கள் இருவரை அந்த ஹோட்டலுக்கு முன்பே அனுப்பிவைத்தார். முக்கியமான ரகசிய சந்திப்புகளின் போது பாதுகாப்புக்காக அவர்கள் இவ்வாறு செல்வது வழக்கம். அவர்கள் அங்கே ஹோட்டலின் லாபியிலும் ரெஸ்ட்டாரண்ட்டிலுமாக இருந்து நோட்டமிட்டுக் கொண்டிருப்பார்கள். காவல்துறைக்கு விசுவாசமாக இருந்து தடம் புரண்டவர்களை ரகசியமாக சந்திப்பது ஆபத்தானது என்று ஐஜி நன்கு அறிவார். அதனாலேயே இது போன்ற முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டார்.

அவர் ஹோட்டலைச் சென்றடைந்த போது இரவு 8 மணிக்கு மேல் ஆகிவிட்டிருந்தது. இன்னும் விஷ்ணு வந்திருக்கவில்லை. சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்களுக்கு சமிக்ஞைகள் கொடுத்துவிட்டு தனி அறைக்கு வந்து சேர்ந்தார். அவருக்குப் பிடித்தமான பாகார்டி வித் செவன் அப் வந்தது. விஷ்ணுவிற்கும் அதுவே பிடித்தமானது என்பதால் இருவருக்குமாக சேர்த்தே ஆர்டர் செய்திருந்தார். அப்போது லாபியில் இருந்த சிபிசிஐடி இன்ஸ்பெக்டர், விஷ்ணு உள்ளே வந்து கொண்டிருப்பதாகவும் கூடவே எஸ்.பி கோகுலும் இருப்பதாக தெரிவித்தார். 

ஐஜி ரத்னவேலுவிற்கு சட்டென கோபம் வந்தது. ரகசிய சந்திப்பு என்று விஷ்ணுவிடம் சொல்லி இருக்க அவன் எதுக்கு எஸ்.பியை கூட்டி வருகிறான். என்னதான் சொந்தக்காரன் என்றாலும் இப்படியா? அவன் தான் அப்படி என்றால் எஸ்.பிக்கு யோசனை வேண்டாம்? உயரதிகாரி ஒரு ரகசிய சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருக்கும் போது இப்படியா செய்வது என்று எண்ணியவராக கையில் இருந்த கிளாசை காலி செய்தார். கதவு தட்டும் சத்தம் கேட்டது. பார்த்தால் விஷ்ணு மட்டும் நின்று கொண்டிருந்தான்.

உள்ளே வரச்சொல்லிவிட்டு கோகுல் எங்கே என்று கேட்டார் ரத்னவேல். விஷ்ணுவின் கண்களில் நேனோ நொடியில் அதிர்ச்சி மின்னிச் சென்றதைக் கவனித்து விட்டார் ஐஜி. என்னிடம் நீங்கள் கோகுலை வரச்சொல்லவில்லையே என்றான் விஷ்ணு. ஐஜி குரலை உயர்த்தினார். இப்போ கோகுல் உன்கூட ஹோட்டலுக்கு வந்தாரே எங்கே போனார் என்றார் அதிகாரமாக. இதைக் கேட்டதும் தாம் வேவு பார்க்கப்படுகிறோம் என்று விஷ்ணுவிற்கு விளங்கியது. போலீஸ் இன்ஃபார்மர்களுக்கு இது புதிதில்லை என்றாலும், சாதாரண நேரங்களில் இப்படிச் செய்யமாட்டார்கள். எனவே ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று புரிந்து கொண்டான்.

கோகுலும் நானும் இங்கே பாருக்கு அடிக்கடி வருவோம். அவர் இப்பொ பார்லதான் இருக்கார். இந்த மீட்டிங் முடிந்தவுடன் நானும் போய் சேர்ந்து கொள்வேன், நான் ஏதோ ஒரு ரகசிய மீட்டிங்கிற்கு வர்ரேன்னு அவருக்குத் தெரியும், ஆனா உங்களை மீட் பண்றேன்னு அவருக்கு தெரியாது சார் என்றான் விஷ்ணு.

ஐஜி ரத்னவேல் அவன் கண்களையே பார்த்தவண்ணம் இருந்தார். விஷ்ணு சொல்வதை நம்புகிறாரா இல்லையா என்று கணிக்க முடியாதபடி இருந்தார். விஷ்ணுவிடம் நேரடியாக S W H2 6F என்றால் என்ன, அதை ஏன் கோகுலுக்கு அனுப்பினாய் என்று கேட்டார். அதைக் கேட்டதும் விஷ்ணு திடுக்கிட்டான். இவருக்கு எப்படித் தெரிந்தது, அது அவனுக்கும் கோகுலுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியமல்லவா? இதைப் போய் கேட்கிறாரே என்று விஷ்ணு வார்த்தை வராமல் விக்கித்துப் போய் ஐஜியையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ரத்னவேல் எழுந்தார் திடீரென துப்பாக்கியை எடுத்து விஷ்ணுவின் நெற்றியில் வைத்தார். ஒழுங்காக உண்மையைச் சொல்லிவிடு… சங்கேத வார்த்தையை வைத்து நீயும் கோகுலும் என்ன என்ன செய்து கொண்டிருக்கிறீகள் என்று மிரட்டினார். அதற்கிடையில் கதைவை யாரோ பலமாகத் தட்டும் சத்தம் கேட்டது. ஐஜி துப்பாக்கியை உள்ளே வைத்துவிட்டு விஷ்ணுவை கதைவைத் திறக்கச் சொன்னார். அங்கே எஸ்.பி. கோகுல் நின்று கொண்டிருந்தார். இந்த நேரத்தில் ஏன் இங்கே வந்தீர்கள் என்று கோகுலை ஐஜி அதட்டினார். அதற்கு கோகுல், ஐஜி தங்களை ரகசியமாக கண்காணிப்பது தெரியுமென்றும், இந்தச் சந்திப்பில் விஷ்ணுவிற்கு ஆபத்து எதுவும் வந்துவிடக் கூடாது என்று வெளியே காத்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார். உடனே ஐஜி ரத்னவேல் பாய்ந்து விஷ்ணுவின் சட்டைக்குள் இருந்த பட்டன் மைக்கை அகற்றினார். அந்நேரம் பார்த்து ஐஜியின் செல்போன் அடித்தது, யாரென்று பார்த்தவர் விஷ்ணுவையும், எஸ்பி கோகுலையும் உடனே அறையைவிட்டு வெளியேறச் சொன்னார். செல்போனில் அழைத்தவர் சிஐடி எஸ்பி கனகராஜ்.

கனகராஜ் அதற்குள் விஷ்ணு, கோகுல் சம்பந்தமான அனைத்து உண்மைகளையும் கண்டுபிடித்து விட்டிருந்தார். எல்லாவற்றையும் கேட்ட ஐஜி திகைத்துப் போனார், மீதம் இருந்த பாகார்டியை அப்படியே ராவாக வாய்க்குள் சரித்துவிட்டு கீழே மயங்கிச் சாய்ந்தார்.

அது என்ன உண்மை என்று கேட்கிறீர்களா? எஸ்பி கோகுல் ஒரு கம்ப்யூட்டர் கேம் பிரியர். கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வம் அதிகமாகி வெறியராகி விட்டிருந்தார், வேலைக்கும் ஒழுங்காகச் செல்வதில்லை, குடும்பத்தையும் கவனிக்காமல் கம்ப்யூட்டர் கேமே கதி என்று மணிக்கணக்கில் கிடந்தார். புதிய கேம் டிவிடி ஒன்றை விஷ்ணுவிடம் ரொம்ப நாள் நச்சரித்து வாங்கி இருந்தார். கோகுலின் தந்தை இதைக் கேள்விப்பட்டு விஷ்ணுவை அழைத்து கடிந்தார். அதன்பின் கோகுல் கேம் இன்ஸ்டாலேசன் செய்ய ரிஜிஸ்ட்ரேசன் கோடு கேட்டவுடன் தவறான கோடை (S W H2 6F) அனுப்பிவிட்டு அதை கோகுலின் தந்தைக்கும் சொல்லி இருந்தார். அந்த இரு மெசேஜ்களையும் தான் ஐஜி ரத்னவேல் ட்ராக் செய்து விசாரித்துக் கொண்டிருந்திருக்கிறார். இப்போது சொல்லுங்கள் அவருக்கு மயக்கம் வருமா வராதா?
எப்பூடி..... நாங்களும் கதை விடுவோம்ல.....?


!

74 comments:

செங்கோவி said...

அண்ணே, சீரியசாத் தானே எழுதியிருக்கீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////செங்கோவி said...
அண்ணே, சீரியசாத் தானே எழுதியிருக்கீங்க?/////

கதைதான் சீரியஸ், நான் ஜாலியாத்தான் எழுதுனேன்....

muthu said...

பாஸ் நீங்க இங்க இருக்க வேண் டிய ஆளே இல்லை ....

செங்கோவி said...

போட்டிக்கு அனுப்புறதுக்குத் தானே எழுதுனீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// muthu said...
பாஸ் நீங்க இங்க இருக்க வேண் டிய ஆளே இல்லை ....//////

எப்படித்தான் கண்டுபுடிக்கிறாங்களோ, இப்பத்தான் கக்கூஸ் போயிட்டு வந்தேன்......

செங்கோவி said...

சீரியசாத் தான் எழுதுறீங்கன்னா அந்த பின்குறிப்பு வேண்டாம்ணே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////செங்கோவி said...
போட்டிக்கு அனுப்புறதுக்குத் தானே எழுதுனீங்க?//////

இல்ல பேரீச்சம்பழம் வாங்கறதுக்கு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// செங்கோவி said...
சீரியசாத் தான் எழுதுறீங்கன்னா அந்த பின்குறிப்பு வேண்டாம்ணே...////

ஏண்ணே பரிசு தரமாட்டாங்களா.....? (கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டமோ.....?)

செங்கோவி said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////செங்கோவி said...
போட்டிக்கு அனுப்புறதுக்குத் தானே எழுதுனீங்க?//////

இல்ல பேரீச்சம்பழம் வாங்கறதுக்கு....//

கதையை ஒழுங்கா எழுதிட்டு, இதெல்லாம் கதையான்னு நீங்களே கமெண்ட் அடிச்சா எப்படி? அதான் கேட்டேன்..

தேர்வுக்குழுவும் அதைப் படிக்கும்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////செங்கோவி said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////செங்கோவி said...
போட்டிக்கு அனுப்புறதுக்குத் தானே எழுதுனீங்க?//////

இல்ல பேரீச்சம்பழம் வாங்கறதுக்கு....//

கதையை ஒழுங்கா எழுதிட்டு, இதெல்லாம் கதையான்னு நீங்களே கமெண்ட் அடிச்சா எப்படி? அதான் கேட்டேன்..

தேர்வுக்குழுவும் அதைப் படிக்கும்ல?///////

படிச்சிட்டு பேர் கொடுக்கட்டும்..... ஹி..ஹி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆனா தேர்வுக்குழுவுக்குத்தான் தனி ஈமெயில்ல அனுப்பிடுவோம்ல? இங்க போடுறது நாம பதிவர்தான்னு கன்பர்ம் பண்றதுக்குத்தானே?

செங்கோவி said...

அண்ணே, இதுக்கு நான் கள்ளஓட்டுப் போட்டா சம்திங் கொடுப்பீங்களா?

செங்கோவி said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆனா தேர்வுக்குழுவுக்குத்தான் தனி ஈமெயில்ல அனுப்பிடுவோம்ல? இங்க போடுறது நாம பதிவர்தான்னு கன்பர்ம் பண்றதுக்குத்தானே?//

அப்பீடியா..எனக்கு அது தெரியாதுண்ணே..அப்போச் சரி..

ஆமா, இங்க போடலைன்னா நீங்க பதிவர் இல்லியா? உங்க மணம் ஊரெல்லாம் பரவிக் கிடக்கே..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////செங்கோவி said...
அண்ணே, இதுக்கு நான் கள்ளஓட்டுப் போட்டா சம்திங் கொடுப்பீங்களா?////

நல்ல ஓட்டுக்கே கொடுப்போம், கள்ள ஓட்டுக்கு கொடுக்கலேன்னா எப்படி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// செங்கோவி said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆனா தேர்வுக்குழுவுக்குத்தான் தனி ஈமெயில்ல அனுப்பிடுவோம்ல? இங்க போடுறது நாம பதிவர்தான்னு கன்பர்ம் பண்றதுக்குத்தானே?//

அப்பீடியா..எனக்கு அது தெரியாதுண்ணே..அப்போச் சரி..

ஆமா, இங்க போடலைன்னா நீங்க பதிவர் இல்லியா? உங்க மணம் ஊரெல்லாம் பரவிக் கிடக்கே..//////

ரூல்ஸ் ரூல்ஸ்.......

Anonymous said...

அடப்பாவி அண்ணா.. நீங்க செய்றது நியாயமா? ஹாபிக்கு பதிவு போட்டுக்கிட்டு இருந்து இப்போ தீபாவளிக்கு பிறகு அடிக்கடி போடுறீங்களே? என்னாச்சு அண்ணே உங்களுக்கு!! இருங்க கதைய படிச்சிட்டு வறேன்...

செங்கோவி said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////செங்கோவி said...
அண்ணே, இதுக்கு நான் கள்ளஓட்டுப் போட்டா சம்திங் கொடுப்பீங்களா?////

நல்ல ஓட்டுக்கே கொடுப்போம், கள்ள ஓட்டுக்கு கொடுக்கலேன்னா எப்படி?//

அப்போ எனக்கு காய்ச்சல் போற மாதிரி ஒரு ஸ்டில்லு போடுங்கண்ணே...

NaSo said...

இதால என்னாகும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மொக்கராசு மாமா said...
அடப்பாவி அண்ணா.. நீங்க செய்றது நியாயமா? ஹாபிக்கு பதிவு போட்டுக்கிட்டு இருந்து இப்போ தீபாவளிக்கு பிறகு அடிக்கடி போடுறீங்களே? என்னாச்சு அண்ணே உங்களுக்கு!! இருங்க கதைய படிச்சிட்டு வறேன்.../////

யோவ் இது போட்டிக்கதை.... யாரும் படிக்காத நேரமா போடலாம்னு டைம் பாத்து போட்டிருக்கேன், இப்போ வந்துட்டு பேச்ச பாரு......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////செங்கோவி said...
அண்ணே, இதுக்கு நான் கள்ளஓட்டுப் போட்டா சம்திங் கொடுப்பீங்களா?////

நல்ல ஓட்டுக்கே கொடுப்போம், கள்ள ஓட்டுக்கு கொடுக்கலேன்னா எப்படி?//

அப்போ எனக்கு காய்ச்சல் போற மாதிரி ஒரு ஸ்டில்லு போடுங்கண்ணே...///////

அந்த ஸ்டில்லுக்கு வேற காய்ச்சல் வந்துடுமே....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாகராஜசோழன் MA said...
இதால என்னாகும்?//////

பரிசு கிரிசு கொடுத்துட்டாங்கன்னா நீங்கள்லாம் தொலைஞ்சீங்க.....

NaSo said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////நாகராஜசோழன் MA said...
இதால என்னாகும்?//////

பரிசு கிரிசு கொடுத்துட்டாங்கன்னா நீங்கள்லாம் தொலைஞ்சீங்க.....//

அதெல்லாம் நடந்தா பார்க்கலாம்..

pichaikaaran said...

"கதைய படிச்சிட்டு ரூம் போட்டு அழனும்னு விரும்புறவங்க வரிசையா வந்து பேர் கொடுக்கலாம்."

என் பேரை சேர்த்துக்கோங்க

Anonymous said...

/// இதால என்னாகும்?

October 29, 2011 11:58 PM
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மொக்கராசு மாமா said...
அடப்பாவி அண்ணா.. நீங்க செய்றது நியாயமா? ஹாபிக்கு பதிவு போட்டுக்கிட்டு இருந்து இப்போ தீபாவளிக்கு பிறகு அடிக்கடி போடுறீங்களே? என்னாச்சு அண்ணே உங்களுக்கு!! இருங்க கதைய படிச்சிட்டு வறேன்.../////

யோவ் இது போட்டிக்கதை.... யாரும் படிக்காத நேரமா போடலாம்னு டைம் பாத்து போட்டிருக்கேன், இப்போ வந்துட்டு பேச்ச பாரு....///


நானா வரல, எனக்கு ஒரு இன்போர்மேர் மெசேஜ் கொடுத்தார்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பார்வையாளன் said...
"கதைய படிச்சிட்டு ரூம் போட்டு அழனும்னு விரும்புறவங்க வரிசையா வந்து பேர் கொடுக்கலாம்."

என் பேரை சேர்த்துக்கோங்க///////

சாருக்கு ஒரு சிங்கிள் ரூம் பார்சல்ல்ல்ல்............!

Anonymous said...

///
ரத்னவேல் எழுந்தார் திடீரென துப்பாக்கியை எடுத்து விஷ்ணுவின் நெற்றியில் வைத்தார். ஒழுங்காக உண்மையைச் சொல்லிவிடு… சங்கேத வார்த்தையை வைத்து நீயும் கோகுலும் என்ன என்ன செய்து கொண்டிருக்கிறீகள் என்று மிரட்டினார். ////

இந்த எடத்துக்கு பெறகு இந்த கதை எப்புடியும் மொக்கையா தான் முடியும்னு தெரிஞ்சிடுச்சு அண்ணே...எத்தன தமிழ்படம் பார்த்துருபோம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசு மாமா said...
/// இதால என்னாகும்?

October 29, 2011 11:58 PM
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மொக்கராசு மாமா said...
அடப்பாவி அண்ணா.. நீங்க செய்றது நியாயமா? ஹாபிக்கு பதிவு போட்டுக்கிட்டு இருந்து இப்போ தீபாவளிக்கு பிறகு அடிக்கடி போடுறீங்களே? என்னாச்சு அண்ணே உங்களுக்கு!! இருங்க கதைய படிச்சிட்டு வறேன்.../////

யோவ் இது போட்டிக்கதை.... யாரும் படிக்காத நேரமா போடலாம்னு டைம் பாத்து போட்டிருக்கேன், இப்போ வந்துட்டு பேச்ச பாரு....///


நானா வரல, எனக்கு ஒரு இன்போர்மேர் மெசேஜ் கொடுத்தார்...///////

பார்த்தேன் பார்த்தேன், நான் அங்கேதான் இருக்கேன்.....

NaSo said...

//பார்த்தேன் பார்த்தேன், நான் அங்கேதான் இருக்கேன்.....//

இது எங்கே?

Anonymous said...

////பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசு மாமா said...


நானா வரல, எனக்கு ஒரு இன்போர்மேர் மெசேஜ் கொடுத்தார்...///////

பார்த்தேன் பார்த்தேன், நான் அங்கேதான் இருக்கேன்....///
நீங்க ஐஜி ரத்னவேலுவைவிட பெரிய ஆளுண்ணே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாகராஜசோழன் MA said...
//பார்த்தேன் பார்த்தேன், நான் அங்கேதான் இருக்கேன்.....//

இது எங்கே?//////

இங்கே
http://sengovi.blogspot.com/2011/10/blog-post_29.html

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசு மாமா said...
////பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசு மாமா said...


நானா வரல, எனக்கு ஒரு இன்போர்மேர் மெசேஜ் கொடுத்தார்...///////

பார்த்தேன் பார்த்தேன், நான் அங்கேதான் இருக்கேன்....///
நீங்க ஐஜி ரத்னவேலுவைவிட பெரிய ஆளுண்ணே/////////

ரத்னவேலு யாரு, நம்ம பயதானே.....

Anonymous said...

//செங்கோவி said...

அண்ணே, இதுக்கு நான் கள்ளஓட்டுப் போட்டா சம்திங் கொடுப்பீங்களா?
//

எங்க எப்புடி நல்ல ஓட்டு கள்ள ஓட்டு ரெண்டும் போடுறதுன்னு சொல்லுங்க.. ஏன்னா இந்த சிறுகதை போட்டிய பத்தி எனக்கு அவ்வளவு தெரியாது..நானும் ஓட்டு [போட்டு பங்குதாரர் ஆகிக்கிறேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// மொக்கராசு மாமா said...
//செங்கோவி said...

அண்ணே, இதுக்கு நான் கள்ளஓட்டுப் போட்டா சம்திங் கொடுப்பீங்களா?
//

எங்க எப்புடி நல்ல ஓட்டு கள்ள ஓட்டு ரெண்டும் போடுறதுன்னு சொல்லுங்க.. ஏன்னா இந்த சிறுகதை போட்டிய பத்தி எனக்கு அவ்வளவு தெரியாது..நானும் ஓட்டு [போட்டு பங்குதாரர் ஆகிக்கிறேன்..////////

கிழிஞ்சது.... அவங்களே பரிசு கொடுக்குறேன்னு சொன்னாலும் விடமாட்டீங்க போல இருக்கே?

வெளங்காதவன்™ said...

:-)

வெளங்காதவன்™ said...

அண்ணே! உன் கதையைப் பார்த்து எனக்கும் கை அறிக்குது....

ஒரு போட்டியாளனை உருவாக்கி விட்டுட்டியே அண்ணே.........

NaSo said...

//வெளங்காதவன் said...
அண்ணே! உன் கதையைப் பார்த்து எனக்கும் கை அறிக்குது....

ஒரு போட்டியாளனை உருவாக்கி விட்டுட்டியே அண்ணே.........//

அடுத்து தக்காளி சட்னியா மச்சி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெளங்காதவன் said...
அண்ணே! உன் கதையைப் பார்த்து எனக்கும் கை அறிக்குது....///////

என்னது கை அறிக்குதா? போய் உடனே தாம்பரம் தொழுநோய் ஆஸ்பத்திரில இடத்த புடிக்கிற வழிய பாரு....

வெளங்காதவன்™ said...

//நாகராஜசோழன் MA said...

//வெளங்காதவன் said...
அண்ணே! உன் கதையைப் பார்த்து எனக்கும் கை அறிக்குது....

ஒரு போட்டியாளனை உருவாக்கி விட்டுட்டியே அண்ணே.........//

அடுத்து தக்காளி சட்னியா மச்சி?///

நோ நோ! எப்பவுமே தேங்கா சட்னிதான்...

#தக்காளி, ஒரே மாதிரி தாக்குறானே? மச்சி, நீயும் நானும் கூட்டணி வச்சுக்கிட்டா என்ன?

வெளங்காதவன்™ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெளங்காதவன் said...
அண்ணே! உன் கதையைப் பார்த்து எனக்கும் கை அறிக்குது....///////

என்னது கை அறிக்குதா? போய் உடனே தாம்பரம் தொழுநோய் ஆஸ்பத்திரில இடத்த புடிக்கிற வழிய பாரு....///

தக்காளி சட்னி போல்தான் தெர்து...
அவ்வ்வ்வ்வ்வ்....

NaSo said...

//வெளங்காதவன் said...

நோ நோ! எப்பவுமே தேங்கா சட்னிதான்...

#தக்காளி, ஒரே மாதிரி தாக்குறானே? மச்சி, நீயும் நானும் கூட்டணி வச்சுக்கிட்டா என்ன?//

நான் இல்லை.. இல்லவே இல்லை..

வெளங்காதவன்™ said...

@நாகா-
/
நான் இல்லை.. இல்லவே இல்லை..//

ஏய்! என் பதர்ற? என் பதர்ற?

தாக்கு தாக்குனு தாக்கிப்புட்டு, ஆட்டைக்கு வரல்லைனா எப்படி மச்சி....
;)

எஸ்.கே said...

..ல்க ..மிழ்! ..ழ்க ..ரதம்!

Madhavan Srinivasagopalan said...

//சவால் சிறுகதைப் போட்டி 2011-க்கான சிறுகதை இது, எனவே கவனமாக படிக்கவும். //

ஏன், நாங்க கவனமா படிச்சாத்தான் உங்களுக்கு பரிசு கெடைக்குமோ..?
இருந்தாலும், பொறுங்க, கவனமா படிச்சிட்டு வர்றேன்

Madhavan Srinivasagopalan said...

ஹா.. ஹா. ஹா..
ஒரு சப்ப மேட்டர சந்தேகப் பட்டு ஐ.ஜி தன்னோட டயத்த வேஸ்ட் பண்ணிட்டாரே.. பாவந்தான்.....

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள், ராம்ஸ்.

செவிலியன் said...

//அந்த இரு மெசேஜ்களையும் தான் ஐஜி ரத்னவேல் ட்ராக் செய்து விசாரித்துக் கொண்டிருந்திருக்கிறார். இப்போது சொல்லுங்கள் அவருக்கு மயக்கம் வருமா வராதா?//
அவருக்கு மயக்கம் வருதோ இல்லையோ...எனக்கு தலைசுத்தல், வாந்தி, மயக்கமெல்லாம் வந்துருச்சி....பகார்டியும் செவன் அப் கொண்டு வாங்கைய்யா....

நாய் நக்ஸ் said...

இனிமே நீ வருவியா ...வருவியா ...???? (என்ன சொன்னேன்)

நாய் நக்ஸ் said...

தலைவா..இனி தேர்வு குழு
இருக்கும்????

பாவம் ...தான் ..

அடுத்த போட்டி வைப்பாங்களா ???

KUTTI said...

the climax twist is superb... i enjoyed very much....

nice story...

all the best,

mano

SURYAJEEVA said...

http://kathaikkiren.blogspot.com/2011/10/2011_28.html

தலைவா இந்த கதையும் படிச்சு பாருங்க... சோடி போட்டுகிடுவோம் சோடி...

SURYAJEEVA said...

http://jaghamani.blogspot.com/2011/10/2011.html

தலைவரே இப்ப தான் இந்த கதைய படிச்சேன்... படிச்சுட்டு வாங்க நம்ம ரெண்டு பெரும் ரூம் போட்டு அழுவோம்...

நம்பிக்கைபாண்டியன் said...

இந்த அளவுக்கு கதை எழுதுறீங்களே அதுவே பெரிய விஷயமில்லையா! வாழ்த்துக்கள்.

RAMA RAVI (RAMVI) said...

கதை நன்றாக இருக்கு.இதுக்குபோய் ஏன் அழனும்?
வெற்றி பெற வாழ்த்துக்கள்.

SURYAJEEVA said...

அம்பது ஓட்டு என்ன, ஐநூறு ஓட்டு கூட போடலாம், ஆனா கள்ள ஓட்டு போடறத கேவலமா திட்டி பதிவு எழுதிட்டு, நாமே அதை செய்றதான்னு ஒரு உணர்ச்சி வருதுங்கன்னா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// suryajeeva said...
அம்பது ஓட்டு என்ன, ஐநூறு ஓட்டு கூட போடலாம், ஆனா கள்ள ஓட்டு போடறத கேவலமா திட்டி பதிவு எழுதிட்டு, நாமே அதை செய்றதான்னு ஒரு உணர்ச்சி வருதுங்கன்னா...////

ஹி....ஹி....

Unknown said...

சூப்பர்! எபுடியும் குடுத்துடுவாங்கன்னுதான் தோணுது!

அய்யய்யோ நாமளும் எழுதி இருக்கலாமோ? கை பரபரக்குது மாம்ஸ்!

சக்தி கல்வி மையம் said...

வாழ்த்துக்கள்.,

Mohamed Faaique said...

பாவம் “உடான்ஸ்” குழு. முதல் முதலா சிறுகதை போட்டி ஆரம்பிச்சாங்க... இதையே கடைசி முறையும் ஆக்கிடுவீங்க போல...

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே, கடைசி பாரா விழுந்து விழுந்து சிரித்தேன்.... செம ட்விஸ்ட்...

'பரிவை' சே.குமார் said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

ஓட்டும் போட்டாச்சு...

muthu said...

இல்லை பாஸ் நீங்க எமன் கிட்ட இருக்க வேண்டிய ஆளுன்னு சொல்ல வந்தேன் ....

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா சூப்பரா வந்துருக்குய்யா வாழ்த்துக்கள்...!!

MANO நாஞ்சில் மனோ said...

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க....

MANO நாஞ்சில் மனோ said...

ஒரு ராஜேஷ்குமார் உருவாகிறான், கமான் ஸ்டார்ட் மியூசிக்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// MANO நாஞ்சில் மனோ said...
ஒரு ராஜேஷ்குமார் உருவாகிறான், கமான் ஸ்டார்ட் மியூசிக்.../////

அடங்கொன்னியா... இதுக்கே இப்படின்னா இன்னொரு கதையும் இருக்கே..... அதுக்கென்னாக போவுதோ?

சென்னை பித்தன் said...

இப்படி ஒரு கதையை எதிர்பார்த் திருக்கவே மாட்டாங்க!

ஜோசப் இஸ்ரேல் said...

எத்தினி பரிசு உங்களுக்கே கொடுக்கமுடியும் . கொஞ்சம் உணர்சிவச்ப்படாதீங்க தலைவரே

நிரூபன் said...

அண்ணே, இந்தக் கதையும் விறு விறுப்பாக நகர்ந்து, இறுதியில் கிளைமேக்ஸில் கொஞ்சம் யதார்த்தம் நிரம்பிய முடிவினைத் தந்திருக்கு.
வாழ்த்துக்கள் அண்ணா.

Anonymous said...

கடைசியிலே தொபுகடீர்னு விழுந்த feeling...சிரிச்சுட்டே

சி.பி.செந்தில்குமார் said...

>>பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////செங்கோவி said...
அண்ணே, சீரியசாத் தானே எழுதியிருக்கீங்க?/////

கதைதான் சீரியஸ், நான் ஜாலியாத்தான் எழுதுனேன்....


haa haa ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

நீங்க போஸ்ட் போட்டதே தெரியல.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

சாரி ஃபார் லேட்

கதை க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் ஓக்கே..

Unknown said...

கதையைப் படித்ததும் நானும் மயங்கி விழுந்தேன்.
நல்லா கலாய்சிருக்கீங்க...
நம்ம கலாய்ப்பையும் கொஞ்சம் பாருங்க...
http://venpuravi.blogspot.com/2011/10/blog-post_30.html

middleclassmadhavi said...

Good comedy story!

vinu said...

74

vinu said...

75