Thursday, September 29, 2011

எனது முதல் காப்பி பேஸ்ட் பதிவு...

முன்னாடி எல்லாம் பிரபல பதிவர்கள்தான் பெரிய பெரிய பத்திரிக்கைல இருந்து காப்பி பேஸ்ட் பண்ணுவாங்க. இப்போத்தான் எல்லாம் மாறிப்போச்சே. நேற்று வந்த பதிவரில் இருந்து பழம் தின்று கொட்டை போட்ட பதிவர்கள் வரை காப்பி பேஸ்ட் போடுகிறார்கள். பெரிய பத்திரிக்கைல இருந்து காப்பி பண்ணதெல்லாம் போயி எங்கே என்ன கிடைக்குதோ சத்தமில்லாம அள்ளிட்டு வந்து போட்டுடுறாங்க. அதுக்கு வர்ர கமெண்ட்டுகள பார்க்கனுமே, அதுக்கே தனிக்கட்டுரை எழுதனும். ஆஹா அருமையான பகிர்வு, நல்ல பகிர்வு, உபயோகமான பகிர்வு நண்பா, சூப்பர் பகிர்வு பாஸ்... கேட்கவே அருமையா இருக்கில்ல? (அடிக்க வராதீங்கண்ணே, நானும் கூட அந்த மாதிரி அப்பாவியா கமெண்ட் போட்டிருக்கேன்....)

சரி அபடியே இந்த ட்ரெண்டை பிக்கப் பண்ணி நாமலும் எதையாவது காப்பி பேஸ்ட் பண்ணலாம்னா எதுவுமே சிக்க மாட்டேங்கிது. ஏது ஏது இப்படியே போனா அப்புறம் காப்பி பேஸ்ட் பண்ணலைன்னு திரட்டிகள்ல இருந்து கூட ஒதுக்கி வெச்சிடுவாங்களோன்னு எல்லாரும் பயமுறுத்துறாங்க. அதுனால விடிய விடிய நின்னுக்கிட்டே யோசிச்சு யோசிச்சு ஒருவழியா முடிவு பண்ணிட்டேன். மனசை திடப்படுத்திக்குங்க. இனி நானும் காப்பி பேஸ்ட் பதிவு போடப்போறேன். எப்படியும் ஒரு காப்பி பேஸ்ட் பதிவு போட்டே ஆகறதுன்னு களத்துல இறங்கி உங்களுக்காக ஒரு அருமையான காப்பி பேஸ்ட்டை இங்கே போட்டிருக்கேன்.

பாருங்க, புடிக்கலேன்னா சொல்லுங்க, நாளைக்கு வேற காப்பி பேஸ்ட் போடுறேன்.....
.
.
.

.
.
..



காப்பி





பேஸ்ட்



என்ன சார் இந்த காப்பி, பேஸ்ட் ஓகேதானே? இத வெச்சிக்கிட்டு எப்படியாவது எனக்கும் ஒரு ரேங் வாங்கிக் கொடுத்துடுங்க சார். அத வெச்சி அண்ணா நகர்ல இல்லேன்னாலும் அமிஞ்சிக்கரைலயாவது ஒரு ஃப்ளாட் வாங்கிடனும்.

நன்றி:  காப்பி பேஸ்ட் பதிவர்கள், கூகிள் இமேஜஸ்...

!

236 comments:

«Oldest   ‹Older   201 – 236 of 236
பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// M.R said...
எனக்கு ஒரு டவுட் நண்பரே பேஸ்ட் யூஸ் பண்ணிட்டு காப்பி குடிக்கணுமா இல்ல காப்பி குடிச்சுட்டு பேஸ்ட் யூஸ் பண்ணனுமா///////

முடிஞ்சா ரெண்டையும் மிக்ஸ் பண்ணி அடிங்கப்பு.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// M.R said...
ஹிட் குடுத்துட்டேன் வீடு வாங்கிக்குங்க//////

உங்களுக்கும் பாத்து பண்றேன்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// M.R said...
நான் பிளாட் பாரத்துல இருந்தாலும் பரவாயில்லைன்னு ஹிட் எதிர் பார்க்காம உங்க அன்பை மட்டும் எதிர் பார்த்து பதிவிடுகிறேன் நண்பரே ,உங்க அன்பு கிடைக்கும் இல்லையா////////

என்னங்க இது செண்டிமெண்டை போட்டு புழிஞ்சு எடுத்துட்டீங்க.... அன்புக்கு என்ன பஞ்சம், அது எப்போது உண்டு..... இந்த ஹிட்டெல்லாம் சும்மா கலாய்க்கறதுதான்.....

நீச்சல்காரன் said...

ONE Rank

ஒரு ரேங்க் கேட்டேங்களே அதன் கஷ்டப்பட்டு வாங்கிக் கொடுத்திருக்கேன்.

பத்தரமா பாத்துக்கோங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// நீச்சல்காரன் said...
ONE Rank

ஒரு ரேங்க் கேட்டேங்களே அதன் கஷ்டப்பட்டு வாங்கிக் கொடுத்திருக்கேன்.

பத்தரமா பாத்துக்கோங்க//////

நல்ல ரேங்கு அதுவும் ஃபர்ஸ்ட் ரேங்கா வாங்கி கொடுத்திடீங்களே....

Yoga.s.FR said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடடா இது தெரிஞ்சிருந்தா "பெருசா" கேட்டிருக்கலாமோ?///அது வந்து...................க.கா.......இல்லியே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Yoga.s.FR said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடடா இது தெரிஞ்சிருந்தா "பெருசா" கேட்டிருக்கலாமோ?///அது வந்து...................க.கா.......இல்லியே?//////

அதக் கேட்டா செங்கோவி கோச்சுக்குவாரே....?

Anonymous said...

Control C ...Control V... க்கு 20 times backspace அடிங்க ...-:)

இதுவும் காப்பி பேஸ்ட் தான்...

மாய உலகம் said...

//////கரிச்சட்டி மண்டையன் said...
பல்லு விளக்கறது அவ்ளோ கஷ்டமாண்ணே ?///////

டேய்ய் மண்டையா அதெல்லாம் நல்ல பல்லு வெச்சிருக்கவங்க பண்றது.... படுவா உனக்கு ஏண்டா அந்த மாதிரி கஷ்டமான வேலையெல்லாம்?

///// கரிச்சட்டி மண்டையன் said...
அண்ணே ஒரு சந்தேகம் !!///////

வெஸ்டர்ட் டாய்லெட்ல எப்படி ஒண்ணுக்கு போகனும்னா?
////கரிச்சட்டி மண்டையன் said...
//// சிபியூ சிபியூ ///

நான் ஏண்ணே சி பி ..,கம்ப்யூட்டர் ல போடணும் ,காசு கொடுத்து வாங்கினது நானு .//////

மண்டையா சிபிங்கறவர் ஒரு பதிவர்... போய் பாத்தேன்னா டீ வாங்கி கொடுப்பார். இது சிபியூ.... எங்க மறுக்கா சொல்லு சீ.... பீ...யூ......

//////தமிழ்வாசி - Prakash said...
பேஷ்... பேஷ்... காப்பி ரொம்ப நன்னாயிருக்கே...///////

அண்ணே நீங்க சாப்புட்டது பேஸ்ட்டு.... காப்பி இங்க இருக்கு.......

/////கரிச்சட்டி மண்டையன் said...
இதுக்குதானே..,உங்கள மாதிரி ஒரு அறிவாளி நம்மூர்ல இருக்கனும்றது ..,( இத அப்படியே பக்கத்துக்கு வீட்டு இருளாயி கிட்ட சொல்லிடுறேன்)////////

அட பன்னாட... நீ இந்த வேல வேற பாக்கிறியா?


ஒங்களக் கொல்ல எங்கண்ணே வெச மருந்து கெடக்கியும்?.///

பன்னிகுட்டிய கொள்ளுரதுக்கா? அதுக்கு எதுக்கு விஷம் எல்லாம்? பன்னிகுட்டிய புடிச்சு பல்லு விளக்கி விட்ட போச்சு, உடனே உசுர விட்டுடும் பன்னிகுட்டி செல்லம் ஹி ஹி ஹி ஹி////////










ஹா ஹா ஹா... தல பதிவ காப்பி பேஸ்ட் பண்ணா...நாங்க கருத்துக்களை காப்பி பேஸ்ட் பண்ணுவோம்ல... ஹா ஹா ஹா

Anonymous said...

உங்க காப்பி பேஸ்ட் பதிவுக்கு

என்னோட

"COMMENT"

iniyavan said...

நண்பா, இதே ஸ்டைலில் ரஹிம் ஹஸாலி ஏற்கனவே எழுதியிருக்கிறார். அப்படியே இல்லை. இருந்தாலும் இதை படிங்க: http://ragariz.blogspot.com/2011/08/coffee-paste.html

iniyavan said...

நண்பா, இதே ஸ்டைலில் ரஹிம் ஹஸாலி ஏற்கனவே எழுதியிருக்கிறார். அப்படியே இல்லை. இருந்தாலும் இதை படிங்க: http://ragariz.blogspot.com/2011/08/coffee-paste.html

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// FOOD said...
அய்யய்யோ, நான் நேத்து போட்ட கமெண்ட்டை யாரோ கட் அண்ட் பேஸ்ட் பண்ணீட்டாங்களா?///////

வாங்க ஆபீசர், உங்க கமெண்ட் அப்படியே இருக்கே, அது 200-க்கு மேல போயிட்டா அடுத்த பக்கத்துக்கு போயிடும், அதான்.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரெவெரி said...
Control C ...Control V... க்கு 20 times backspace அடிங்க ...-:)

இதுவும் காப்பி பேஸ்ட் தான்...////////

என்னா டெக்குனிக்கு........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// மாய உலகம் said...
ஹா ஹா ஹா... தல பதிவ காப்பி பேஸ்ட் பண்ணா...நாங்க கருத்துக்களை காப்பி பேஸ்ட் பண்ணுவோம்ல... ஹா ஹா ஹா/////

நல்லாத்தான்யா யோசிக்கிறாய்ங்க.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////FOOD said...
பார்த்தேன்,படித்தேன்,ரசித்தேன்,வாய் விட்டு சிரித்தேன். நன்றி.//////

நன்றி ஆபீசர்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// FOOD said...
இருந்தாலும் இப்படி பிரபல பதிவர்களைச் சாடி இருக்கக்கூடாது.//////

அப்படியா.... எங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஷீ-நிசி said...
உங்க காப்பி பேஸ்ட் பதிவுக்கு

என்னோட

"COMMENT"///////

நல்ல கமெண்ட்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////என். உலகநாதன் said...
நண்பா, இதே ஸ்டைலில் ரஹிம் ஹஸாலி ஏற்கனவே எழுதியிருக்கிறார். அப்படியே இல்லை. இருந்தாலும் இதை படிங்க: http://ragariz.blogspot.com/2011/08/coffee-paste.html/////

நான் தான் டைட்டில்லயே சொல்லிட்டேனே இது காப்பி பேஸ்ட் பதிவுன்னு.......

ADMIN said...

அய்யய்யோ.. எல்லாம் போச்சு.. காப்பியும் போச்சு. பேஸ்ட்டும் போச்சு..இந்த பதிவுல இருக்கிற காப்பியும், பேஸ்ட்ம் என்னோடது..!!

ADMIN said...

என்றா பன்னிக்குட்டி.. நான் அப்பவே சொன்னேன்.. என் காப்பி,பேஸ்ட் நீ எடுக்காதேன்னு.. !! இப்ப பாத்தியா எரநூறு கமெண்ட் உனக்கே விழுந்துடுச்சு..!! சரி இத வெச்சு நீ பொளச்சிப் போ..!!

பாடிசோடா said...
This comment has been removed by the author.
பாடிசோடா said...

அண்ணே ஒரு சந்தேகம் ...ராமசாமி உங்க பேரு ..பன்னிகுட்டி ..நீங்க படிச்சு வாங்கின பட்டமா ! பட்டமா ! பட்டமா!

பாடிசோடா said...

//அய்யய்யோ.. எல்லாம் போச்சு.. காப்பியும் போச்சு. பேஸ்ட்டும் போச்சு..இந்த பதிவுல இருக்கிற காப்பியும், பேஸ்ட்ம் என்னோடது..!!//

அப்ப brush ம் குடுத்திட்டு போப்பா ...நல்ல கேக்குறாங்கய்ய டீடைலு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தங்கம்பழனி said...
அய்யய்யோ.. எல்லாம் போச்சு.. காப்பியும் போச்சு. பேஸ்ட்டும் போச்சு..இந்த பதிவுல இருக்கிற காப்பியும், பேஸ்ட்ம் என்னோடது..!!///////

அண்ணே ஒரிஜினல் உங்களோடதா இருக்கலாம், இது காப்பி பேஸ்ட்ணே....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// தங்கம்பழனி said...
என்றா பன்னிக்குட்டி.. நான் அப்பவே சொன்னேன்.. என் காப்பி,பேஸ்ட் நீ எடுக்காதேன்னு.. !! இப்ப பாத்தியா எரநூறு கமெண்ட் உனக்கே விழுந்துடுச்சு..!! சரி இத வெச்சு நீ பொளச்சிப் போ..!!//////

நல்ல பொழப்புய்யா......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பாடிசோடா said...
அண்ணே ஒரு சந்தேகம் ...ராமசாமி உங்க பேரு ..பன்னிகுட்டி ..நீங்க படிச்சு வாங்கின பட்டமா ! பட்டமா ! பட்டமா!///////

கடிச்சி வாங்குன பட்டம்ணே..... ஆமா பாடிசோடான்னு பேர் வெச்சிருக்கீங்களே, உங்க பாடியவும் கொஞ்சம் கவனிங்கண்ணே.....

துரைராஜ் said...

சூப்பருங்கன்னோவ்....

குமாரபுரம் யசோதரன் said...

கொலைவெரியின் உச்சம்....

Segar said...

இத நிறைய இடத்தில பாத்த மாதிரி இருக்கு :P
(ஒரு வேளை அவங்க copy paste பண்ணியிருப்பாங்களோ)

IlayaDhasan said...

என் வலைப்பூவை தொடர்வதற்கு நன்றி , நீங்கள் என் சிறு கதையை படித்து இன்னும் ஓட்டு போடவில்லை எனில்,
உடன் செய்க. ஏற்கனவே போட்டிருந்தால் ,என் நன்றிகள் பல. தொந்தரவிற்கு மன்னிக்கவும்.

நெல்லி. மூர்த்தி said...

பேஷ்.. பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு! காபின்னா பன்னிக்குடி ராம்சாமி காபி தான்!!

எஸ் சக்திவேல் said...

ஆஹா அருமையான பகிர்வு, நல்ல பகிர்வு, உபயோகமான பகிர்வு நண்பா, சூப்பர் பகிர்வு பாஸ்... கேட்கவே அருமையா இருக்கில்ல?

(மேலேயுள்ளதை ,ஒவ்வொன்றாக ,அடுத்தடுத்த உங்கள் பதிவுகளிற்கு ,என் சார்பாக நீங்களே copy/paste செய்யவும்)

சோடா ப்ளீஸ்.

ம.தி.சுதா said...

அண்ணாச்சி நான் பேஸ்ட்டுக்கு அப்புறம் தான் காப்பி பண்ணுவேன்..

ப.கந்தசாமி said...

நெஸ்கபெ காப்பி எனக்குப் புடிக்கிறதில்லீங்கோ. நான் புரூ காப்பிதான் சாப்புடறது. அப்புறம் கால்கேட் சென்சிடிவ் பேஸ்ட்தான் உபயோகிக்கிறேன். அதனால அந்த மாதிரி ஒரு காப்பி பேஸ்ட் பதிவு போடுங்களேன்?

Anonymous said...

வணக்கம்

இன்றுவலைச்சரத்தில் தங்களின்வலைப்பூஅறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/03/blog-post_13.html?showComment=1394694256178#c7769498290747928189
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

«Oldest ‹Older   201 – 236 of 236   Newer› Newest»