பதிவுலகின் மாமாமேதை (நான் மாமேதைன்னா என்ன விட பெரியாளு மாமாமேதைதானே?) சிரிப்பு போலீஸ் ரமேஷ் அவர்களை புகழ்ந்து ஒரு வாழ்த்துப்பா பாடியவாறு தொடங்குகிறேன்.
பதிவுலகம் கண்ட மாமாமேதையே...
உன்னைச் சீண்டுபவர்களுக்கு நீ ஒரு தீப்பொறி திருமுகம்...
உன்னைத்தூண்டுபவர்களுக்கு நீ ஒரு கைப்புள்ள...
ஆணவக்காரர்களுக்கு நீ ஒரு அல்லக்கை...
அநியாயக்காரர்களுக்கு நீ கிரிகாலன்...
பிகர்களுக்கு நீ ஒரு சிரிப்பு காவலன்...
பதிவர்களுக்கு நீ ஒரு டெலக்ஸ் பாண்டியன்...
பாமரனுக்கு நீ ஒரு சூனா பானா...
நண்பர்களுக்கோ நீ செட்டப் செல்லப்பா...
இனி உன் கெட்டப்தான் என்னப்பா....?
****************
டெரர்பாண்டியன்: மச்சி இன்னிக்கு நைட்டு கரண்ட் போயிடுமாமே, என்ன பண்ணலாம்?
ரமேஷ்: அதுனால என்ன, மெழுகுவர்த்திய ஏத்தி வெச்சிட்டு டீவி பார்க்கலாம்.....
****************
ரமேஷ்: மச்சி லேப்டாப் வாங்கிட்டு அடுத்து துணிக்கடைக்கு போகனும், ஞாபகப்படுத்து....
டெரர்பாண்டியன்: ஏன்டா நேத்துதானே ட்ரெஸ் எடுத்த மறுபடியுமா?
ரமேஷ்: இல்லடா, லேப்டாப்ல விண்டோஸ்லாம் இருக்குமாமே, அதுக்கு கையோட நல்லதா ஒரு ஸ்க்ரீன் வாங்கி தெச்சி வெச்சிடலாம்னுதான்........
****************
வைகை: என்னடா ரொம்ப சோகமா இருக்கே?
ரமேஷ்: பாஸ் அவருக்கு ஒரு ஃபேக்ஸ் அனுப்ப சொன்னாரு, அனுப்புனேன், உடனே என் அப்ரைசலை கேன்சல் பண்ணிட்டாருடா...
வைகை: ஒருவேளை அந்த ஃபேக்ஸ் சரியாக போகலியோ என்னவோ?
ரமேஷ்: அப்படியெல்லாம் ஆக கூடாதுன்னுதான் அதுல ஒண்ணுக்கு ரெண்டா ஸ்டாம்பு வேற ஒட்டி அனுப்பிச்சேன்... அப்புறமும் என்ன பிரச்சனைன்னே புரியல.....
ரமேஷ்: பாஸ் அவருக்கு ஒரு ஃபேக்ஸ் அனுப்ப சொன்னாரு, அனுப்புனேன், உடனே என் அப்ரைசலை கேன்சல் பண்ணிட்டாருடா...
வைகை: ஒருவேளை அந்த ஃபேக்ஸ் சரியாக போகலியோ என்னவோ?
ரமேஷ்: அப்படியெல்லாம் ஆக கூடாதுன்னுதான் அதுல ஒண்ணுக்கு ரெண்டா ஸ்டாம்பு வேற ஒட்டி அனுப்பிச்சேன்... அப்புறமும் என்ன பிரச்சனைன்னே புரியல.....
****************
எலேய்ய்.. அப்படியெல்லாம் குறுகுறுன்னு பாக்கப்படாது...
ரமேஷ்: டேய் என்னடா எல்லாரும் என்னமோ சொல்லிக்கிறாங்க?
இம்சை அரசன் பாபு: இன்னிக்கு ரக்ஷாபந்தனாம்யா.... அதான்......ரமேஷ்: அப்படின்னா....?
இம்சை அரசன் பாபு: கைல ராக்கி கட்டுவாங்க....
ரமேஷ்: ராக்கி சாவந்த எதுக்கு போயி கைல கட்றாங்க?
****************
டெரர்பாண்டியன் : ஹேப்பி ஃப்ரண்ட்ஸ் டே மச்சி...
ரமேஷ் : ஹேப்பி சுறா டே மச்சி...... (எப்பூடி நாங்கள்லாம் யூத்துல?)
டெரர்பாண்டியன்: %^%^*^#*(*@(&$#$.... ..!?!?!
ரமேஷ்: (ஓ... சுறா ப்ளாப் படம்ல, அதான் திட்டுறாம்போல, இப்ப பாரு..) ஹேப்பி காவலன் டே மச்சி...
டெரர்பாண்டியன்: &^%&*^&*^*(&*(%$%^## #$#%^%^$%#.....!?!?
ரமேஷ்: சரியாத்தானே சொன்னேன், மறுக்கா எதுக்கு திட்டுறான்...........?
****************
டெரர் பாண்டியன்: டேய் டேய் ஏன்டா.. பில்லோவுக்கு கீழ சக்கரைய அள்ளி போடுற?
ரமேஷ்: என் கேர்ள்பிரண்டு இன்னிக்கு ஸ்வீட் ட்ரீம்ஸ்னு விஷ் பண்ணாடா, அதுக்குத்தான்.........
****************
ஒருவேள நம்மள வெச்சி காமெடி கீமெடி பண்ணி இருக்காய்ங்களோ?
சிஐடி வேலைக்கு இண்டர்வியூவுக்கு போனாரு சிரிப்பு போலீசு, அங்க
ஆபீசர்: காந்திய கொன்னது யாரு?
சிரிப்பு போலீசு: (ரொம்ப நேரமா யோசிச்சு பாத்துட்டு) சார், எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க
ஆபீசர்: ஓகே, ஆனா ஒரு நாள்தான் டைம்....
உடனே சிரிப்பு போலீஸ் வெளிய வந்தார், அங்க டெரர் பாண்டியன் வெயிட் பண்ணிட்டு இருந்தார்.
டெரர்பாண்டியன்: என்னடா மச்சி இண்டர்வியூ என்னாச்சு?
சிரிப்பு போலீஸ்: கெடச்ச மாதிரிதான்டா, இப்பவே எனக்கு ஒரு கேஸ் கொடுத்துட்டாங்க மச்சி, காந்திய கொன்னது யாருன்னு கண்டுபுடிக்க சொல்லிட்டாங்க........
****************
சிரிப்பு போலீஸ் கார் டிரைவிங் கத்துக்கிட்டு இருந்தாரு, அப்போ ட்ரைனர் அவர்கிட்ட ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்கன்னார்.
அதுக்கு போலீசு,
முன்னால போறதுக்கு நாலு கியர் இருக்கு, ரிவர்சுக்கு மட்டும் ஒரே ஒரு கியர் இருக்கே, அப்போ எங்க போனாலும் திரும்ப வர்ரதுக்கு மட்டும் ரொம்ப டைமாகுமே என்ன பண்றது?
****************
சிரிப்பு போலீசுக்கு ஒரு பார்ட்டிக்கு இன்விட்டேசன் வந்தது, அதுல கருப்பு டை அணிந்து வரவேண்டும்னு போட்டிருந்தது.
எப்பூடி.... நாங்கள்லாம் தண்ணிலயே தயிரு எடுப்போம்ல....
நன்றி: கூகிள் இமேஜஸ், சில ஜோக்ஸ் மெயிலில் வந்தவையே
!