Monday, December 20, 2010

சின்ன டாக்டர்.... பெரிய டாக்டர்....




பரபரப்பான அரசியல் சூழல்ல நம்ம சின்ன டாகுடரும் பெரிய டாகுடரும் எதிர்பாராத விதமா சந்திச்சுக்கிட்டாங்க. எங்கே, எதுக்கு, எப்படி எல்லாம் படு சீக்ரட்டாக்கும்.

பெரிய டாக்டர்: வாங்க தம்பி, நம்ம வறுத்தகரி படம் எப்படி ஓடுதுன்னு பாத்தீங்கள்ல? அடுத்து நம்மோட சேந்து ஒரு படம் பண்றது?

சின்ன டாக்டர்: இல்லீங்ணா அடுத்து மூணு வருசத்துக்கு டேட்ஸ் இல்ல, அதுவும் இல்லாம டைரக்டருங்க எனக்குன்னு கதை (?) எழுதறாங்க, இப்போ போய் உங்க கூட நடிச்சா சரியா வருமா, அதை என் ரசிகர்கள் ஏத்துபாங்களான்னு (!) தெரியல.

பெரிய டாக்டர்: அத விடுங்க தம்பி, தேர்தல் வரப் போகுது, என்ன பண்ண போறீங்க?

சின்ன டாக்டர்: என்னங்ணா.... தேர்தல் கமிசனர் மாதிரியே கேக்குறீங்க.... அதுக்கு என்ன பண்றதுன்னு இன்னும் நைனா சொல்லலீங்களேங்ணா...

பெரிய டாக்டர்: அட என்னப்பா நீய்யி, இன்னும் நைனா மைனான்னுக்கிட்டு, சட்டு புட்டு ஒரு முடிவெடுக்க வேணாமா? என் கூட வந்துடு தம்பி, தளபதி எப்படி துணை முதல்வரா இருக்காரோ, அதே மாதிரி இந்த இளையதளபதி நான் துணைமுதல்வரா ஆக்கிக் காட்டுறேன்.

சின்ன டாக்டர்: இந்த சீன உங்க அடுத்த படத்துல எனக்கு வெச்சிருங்ணா.... நல்லாருக்கும்ணா, அப்பிடியே அஞ்சு பஞ்ச் டயலாக்கும் வெச்சுட்டீங்கன்னா, அடுத்த மாசமே தேதி குடுக்குறேங்ணா.....!

பெரிய டாக்டர்: (ஹூம்.... இந்தப் பன்னாட, சீரியசாத்தான் சொல்றானா, இல்ல நக்கல் பண்றானா?).... அட இன்னும் சின்ன வயசுன்னே நெனப்பு தம்பிக்கு, நான் சொல்றத கொஞ்சம் கேளூங்க..எங்க கட்சில சேர இஷ்டமா இல்லியா?

சின்ன டாக்டர்: இல்லீங்ணா...நைனா இப்போத்தான் மேடத்த பாத்துட்டு வந்திருக்காரு, அது என்னனு இன்னும் முடிவாகவே இல்ல, அதுக்குல்ல?

பெரிய டாக்டர்:: நாங்களும் தான் ஒரு வருசத்துக்கு மேல மேடத்த பாத்துக்கிட்டு இருக்கோம். அத ஒரு ஓரமா வைங்க தம்பி... இப்போ நம்ம கட்சிக்கு வந்துட்டீங்கன்னு வைங்க, நாமலும் எப்படியும் மேடம் கூடத்தான் கூட்டணி வெக்கப் போறோம், அதுனால, உங்களுக்கு ஒரு பிரச்சனையும் வராது.

சின்ன டாக்டர்: ங்ணா மேடத்த நைனா போய் பாத்ததுக்கே... காவலன் படம் ரிலீசு எப்போன்னு எனக்கே தெரியாத அளவுக்குத் தள்ளிப் போயிடுச்சு, இதுல உங்க கட்சில வேற சேந்துட்டேன்னு வைங்க, அடுத்த படத்துக்கு பூஜை போடக்கூட இடம் கிடைக்காம பண்ணிடுவாய்ங்க....என்ன விட்ருங்ணா....

பெரிய டாக்டர்: உங்கள மாதிரி இப்படியே தமிழ்நாட்டுல 4 கோடியே 40 லட்சத்து 68 ஆயிரத்து 350 பேரும்  பயந்துக்கிட்டே இருந்தீங்கன்னா, அப்புறம் நான் எப்படி மாற்றத்தக் கொண்டு வர்ரது?

சின்ன டாக்டர்: இது என்னங்ணா கணக்கு? தமிழ்னாட்டுல 6 கோடிபேருல இருக்கோம்?

பெரிய டாக்டர்: ஆமா, இது மட்டும் வக்கனையா கேளுங்க, அது தமிழ்நாட்டுல உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கைப்பா....

சின்ன டாக்டர்: என்னங்ணா இது, அப்போ இதுவரைக்கும் யாருமே உங்களுக்கு ஓட்டு போடலியா? இல்ல ஓட்டுப்போட்டவங்க தமிழ்நாட்டுல இல்லியா?

பெரிய டாக்டர்: தம்பி, நீங்களும் டாக்டர், நானும் டாக்டர், பாத்துப் பேசுங்க,  எங்களுக்கும் ஒரு காலம் வரும் ஞாபகம் வெச்சுகுங்க....!

சின்ன டாக்டர்: ங்ணா எனக்கும் ஒரு டைம் வரும்ணா....

பெரிய டாக்டர்: சரி முடிவா கேக்குறேன், என் கட்சிக்கு வரமுடியலேன்னா, வெளிய இருந்தாவது சப்போர்ட் பண்ணலாமே, என்ன சொல்றீங்க?

சின்ன டாக்டர்: (ஒரு முடிவோட தான் வந்திருக்காரு போல? இன்னிக்கு இவருகிட்ட இருந்து எப்படியாவது தப்பிச்சி ஆகனுமே...)
ங்ணா..... உங்களுக்கு கொடுத்த டாக்டர் பட்டம் டுபாக்கூராமே?

பெரிய டாக்டர்: ????*****$%^%&*&*)!!!!!!!??????!!!!!!!

சின்ன டாக்டர்:  நல்ல வேள ஐடியா ஒர்க் அவுட் ஆயிடுச்சு, தப்பிச்சேன்.  உடனே போயி நைனா கூட இதப்பத்தி டிஸ்கஸ் பண்ணனும்.  அய்யய்யோ கவுண்டரு......இவரு எப்படி இங்க வந்தாரு.....?

கவுண்டர்: என்ன டாகுடரு தம்பி,  தனியா இங்க நின்னு பொலம்பிக்கிட்டு இருக்கே, என்ன சங்கவி தவிக்க விட்டுட்டு போயிடுச்சா.....?

சின்ன டாக்டர்: ஹி....ஹி....ஹி.... இன்னும் உங்களுக்கு அந்தக் குறும்பு குறையவே இல்லீங்ணா....

கவுண்டர்: ஆமா என்னமோ அரசியலு கட்சின்னு பேசிக்கிறாய்ங்களே உண்மையா?

சின்ன டாக்டர்: ஆமாங்ணா.... அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்யனும்னு இன்ட்ரஸ்ட் இருக்குங்ணா....

கவுண்டர்: சேவைன்னா என்ன பொம்பளங்க வீட்ல பண்ற சேமியா பாயசம்னு நெனச்சுட்டியா......? ஏன் அந்த கருமத்த இப்பவே பண்ணித் தொலைய  வேண்டியதுதானே, நானா வேணாங்கிறேன்?

சின்ன டாக்டர்: இல்லீங்ணா...இப்போ நாங்களே இலவச வேட்டி, சேலை, புத்தகம், கம்ப்யூட்டர்னு கொடுக்குறோம். அது 100-200 பேருக்குத்தான் கொடுக்க முடியுது. ஆச்சிய புடிச்சிட்டா நாட்ல எல்லாத்துக்கும் கொடுக்கலாம்ல?

கவுண்டர்: .... அதத்தானடா இப்போ கெவருமென்ட்டு பண்ணிக்கிட்டு இருக்கு?  ங்கொக்கமக்கா கெவர்மென்ட்டு காசை நீங்க பாட்டுக்கு இஷ்டத்துக்கு இலவசம்னு அள்ளி விடுவீங்க, அது உங்களுக்கு  சேவையா? .... இதெல்லாம் ஒரு கொள்கைனு ஒரு கட்சியும் வேற ஆரம்பிக்க போறியா? படுவா...அப்படியே திரும்பிப் பார்க்காம ஓடிப்போயிரு... பாருங்க சார், ஒரு நல்ல கதைய செலக்ட் பண்ணி ஒழுங்கா ஒரு படம் பண்ணத் தெரியல..... இது என்னமா சவுண்டு கொடுக்குதுன்னு?

பாத்தீங்களா மகாஜனங்களே...இந்தப்பாவத்துக்கு கண்டிப்பா நான் ஆளாக மாட்டேன்....நீங்களாச்சு உங்க டாகுடராச்சு....ஆள விடுங்கப்பா...சாமி........!



பி.கு.:
காவலன்  ரிலீஸ் காலவரையின்றி தள்ளிப் போயுள்ளதால் கலங்கிப் போயுள்ள டாகுடர் ரசிகர்களுக்கு ஆறுதலாகவே இந்தப் பதிவு!

புகைப்பட உதவிக்கு, நன்றி Indiaglitz மற்றும் கூகிள்!

!

201 comments:

«Oldest   ‹Older   201 – 201 of 201
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// ராஜகோபால் said...
யோ பன்னி நானும் ஒரு ரயில் வுட்டுருகேன் நீயும் அதுல ஒரு பொட்டிய ஜாயின் பண்ணு

http://enpakkangal-rajagopal.blogspot.com/2010/12/10.html//////

இந்தத் தொடர்பதிவு தொல்ல தாங்க முடியலடா சாமி..... ஒரு நா எல்லாப்பயலுக்கும் இருக்குடா....!

«Oldest ‹Older   201 – 201 of 201   Newer› Newest»